அத்தியாயம் - 5
“ப்ரெண்ட்ஸ்… இங்க கவனமா இருங்க. இன்ஸ்டிரக்ஷன்ஸ் ஃபாலோ பண்ணுங்க. கடலுக்கு போகக் கூடாதுன்னு சொன்னா போகாதீங்க. நீச்சலடிக்க அனுமதி இல்லைனா போகாதீங்க. இது ரொம்ப ஆக்ரோஷமான கடல். கிளிஃப்ல நடக்கும் போது பாதுகாப்பு பலகை இருந்தா கவனமா தள்ளி போங்க. இது கிளிஃப், மண் சரிவு நடக்க வாய்ப்பிருக்கு.
இங்க நிறைய கடைங்க, கஃபேஸ், ரெட்ரோ கிளப் எல்லாம் இருக்கு. பாதுகாப்பான படி வழியா கீழ போன கடல்ல விளையாடலாம். நீங்க எப்படி ஹோட்டல்லுக்கு திரும்ப போறீங்கன்னு மெசேஜ் பண்ணிடுங்க. வேன் பத்து மணிக்கு கிளம்பிடும். சோ என்ஜாய் காய்ஸ்.” என்றாள் அனன்யா.
ராஜேஷ், ஜெய் குடும்பம் தனி தனியாக சென்றுவிட.
“பியூட்டி… நீ எங்களோடு ஜாயின் பண்ணி.” என்றான் ஹரிஷ்.
“நீ போய் என்ஜாய் பண்ணு ஹரிஷ். எனக்கு தனியா இருக்க தான் பிடிக்கும்.”
“நீ எப்போ வேணும்னாலும் தனியா இருக்கலாம். நான் இந்த ட்ரிப் வரைக்கும் தான் உன்னோடு இருக்க முடியும். சோ பிளீஸ் ஜாயின் வித் மீ.” என்றான்.
அவன் அருகில் சென்று, மெல்லிய குரலில், “உன் ஆள் முறைக்கிற முறைப்பில், நான் இங்கே பஸ்பமாகிடுவேன் போல்.” என்றாள்.
“அது ஒன்னும் பிரச்சினை இல்லை. நீ வாம்மா.” என்றான்.
ரோஷிணி அஸ்வினிடம் சென்று, “நீங்களும் எங்களோடு ஜாயின் பண்ணிக்கோங்க.” என்று கேட்டாள்.
“கண்டிப்பா…’’ என்றான் அஸ்வின்.
'நான் சொல்லல' என்பது போல் ஹரிஷ் பார்த்தான்.
“சரி வாங்க போயிட்டே இருக்கலாம்” என்ற ஈஸ்வர் நடக்கும் பாதையில் முன்னே சென்றான்.
கடைகளை பார்த்ததும் பெண்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ஷாப்பிங் என்றதும் பெண்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை வந்துவிடும். சுவாதி, ரோஷிணி, அனன்யா ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினர்.
“சுவாதி… இந்த இரண்டு தோடுல எந்த தோடு அழகா இருக்கு” என்று கேட்டாள் அனன்யா.
“இரண்டுமே அழகா இருக்கு.”
“எனக்கு ஒன்னு போதும்” என்ற அனன்யா திரும்பி, குழப்பமாக ஹரிஷ்ஷை பார்த்து, “இதுல எது நல்லா இருக்கு?” என்று கேட்க.
ஹரிஷ் பதில் சொல்லும் முன் அஸ்வின், “ரைட் சைடு தோடு அழகா இருக்கு” என்றான்.
மறுபடியும் அந்த தோடை மட்டும் காது அருகில் வைத்து பார்த்தாள் அனன்யா. அவளுக்கும் அந்த தோடு பிடித்து போக அதையே வாங்கினாள்.
ஹரிஷ் அஸ்வினை முறைத்தான்.
“இவங்களோட ஷாப்பிங் இன்னைக்கு முடியாது, வாங்க அங்க போய் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்.” என்றான் தீபக்.
அங்கு விதம்விதமான உணவுகளை ருசித்தனர். பணம் தான் தண்ணீராக செலவானது. அனன்யா ஏதோ வாங்கிக் கொண்டிருக்க, அவளுக்கான ஸ்நாக்ஸை அஸ்வின் வாங்கி வைத்திருந்தான்.
ஐந்து நிமிடம் கழித்து அவர்களோடு இணைந்த அனன்யா, டேபிள் மேல் இருந்த பிளேட்டை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே, “சரியான பசி எப்படி ஹரிஷ் எனக்கு பிடித்ததை சரியா வாங்கி இருக்க?” என்றாள்.
“அவனுக்கு சாப்பாடப் பார்த்தா உலகமே மறந்து போயிடும். இதில் எங்கிருந்து உங்களுக்காக வாங்க போறான்? இதை உங்களுக்காக வாங்கியது அஸ்வின் அண்ணா தான்.” என்றான் ஈஸ்வர்.
அனன்யா அவனை அதிர்ச்சியாக பார்க்க, ஹரிஷ் அவனை சந்தேகமாக பார்த்தான்.
“உங்களுக்கு அனன்யாவை முன்னாடியே தெரியுமா?” என்றுக் கேட்டான் ஹரிஷ்.
அஸ்வின் பதில் சொல்லும் முன் அனன்யா, “இல்லை ஹரிஷ். நான் இவரை ஜடாயு எர்த் சென்டர்ல தான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன்” என்றாள்.
அஸ்வின் பதில் சொல்லவில்லை. ஹரிஷ் அவனை உன்னிப்பாக கவனித்தான்.
“பீச்க்கு போய் விளையாடலாம் வாங்க” என்றாள் சுவாதி.
படி வழியாக இறங்கி வர்கலா பீச் சென்றனர். காலைல போலவே மாலையிலும் சூரியன் மறையும் ரம்மியமான காட்சியை ரசித்தனர்.
பின் கடல் அலைகளில் விளையாட நண்பர்கள் சென்றனர்.
ஹரிஷ் எவ்வளவு அழைத்தும் அனன்யா, “கண்டிப்பா நான் இப்போ விளையாட வர மாட்டேன். காலையிலே வரேன்.” என்று சொல்லிவிட்டாள்.
மணலில் அனன்யா உட்கார்ந்தாள், அவள் அருகில் இடைவெளி விட்டு உட்கார்ந்தான் அஸ்வின்.
“நீங்க போய் கிளிப்பை (cliff) எக்ஸ்ப்ளோர் பண்ணுங்க.” என்றாள் அனன்யா.
“ஏன் என்னோடு இப்படி தனியா இருக்க உனக்கு கஷ்டமா இருக்க.” அஸ்வின்.
“அப்படி எல்லாம் இல்லை.” அனன்யா.
அவளின் ஃபோன் இசைத்தது, “ஹலோ கவின்… எப்படி இருக்கீங்க?”
“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? ரொம்ப பிசியா?”
“நல்லா இருக்கேன் கவின். கொஞ்சம் பிசி தான்.”
“ட்ரிப்க்கு வந்து இருக்கவங்க எல்லாம் நல்ல டைப் தானே?”
“ஆமா கவின். ஆனா ராஜேஷ் வந்திருக்கான். எனக்கு அவனும் வருவான்னு முன்னாடியே தெரியாது. அவனை என் வாழ்கைகையில திரும்ப சந்திப்பேன் நினைச்சுக்கூட பார்க்கல” என்றாள்.
“இதுவும் நல்லதுக்கு தான் அனன்யா. அவன் உன்னோட எண்ணத்தில் கூட இனி இருக்க கூடாது. நீ அந்த காதல்ல இருந்து முழுசா வெளிவரணும்னா நீ அவன பார்த்ததும் நல்லதுக்கு தான்.” என்றான்.
“அவனை பார்க்க கூடாதுன்னு வேலையை விட்டுட்டு இங்க வந்தும் மறக்க முடியாம தான் இருந்தேன். ஆனா, இப்போ அவனை பார்த்ததும் ரொம்ப பெட்டரா ஃபீல் பண்றேன். இனி அவனை நினைத்து நான் ஒரு நாள் கூட கவலை பட மாட்டேன்.”
“நல்லது.”
“கவின் அம்மா எனக்காக பார்த்த பையன் வீட்டுக்கு வந்தாங்களா”
“இல்லை. கண்டிப்பா வந்தா சொல்றேன்.”
“ஓகே பாய் கவின்” என்றாள்.
“அப்போ நீ உங்க அம்மா பார்த்த பையனை தான் கல்யாணம் செய்துக்க போறீயா?” என்று ஈர உடையோடு வந்து நின்ற ஹரிஷ் கேட்டான்.
‘இவன் எப்போது வந்தான்' என்பது போல் பார்த்தவள், “ஆமா…” என்றாள்.
அஸ்வினை பார்த்துக் கொண்டே, “அவரு எப்படி இருந்தாலும் உனக்கு பிரச்சனை இல்லையா?”
“வெளி தோற்றம் எப்பவுமே எனக்கு பிரச்சினை இல்லை. கேரக்டர் தான் முக்கியம்.”
“அவன் ஒருவேளை வெளியே நல்லவனா நடிச்சிட்டு உள்ள கெட்டவனா, சைக்கோ மாதிரி இருந்தா?”
“எங்க அம்மா எனக்காக எடுத்த முடிவு என்னைக்கு தப்பா இருக்காது.”
“ஹப்பாடா” என்ற ஹரிஷ் நக்கலாக அஸ்வினை பார்த்தான்.
அஸ்வினின் உதட்டோரம் நக்கல் சிரிப்பு வந்து போனது.
“ஒருவேளை உங்க அம்மா பார்த்த பையன் என்ன மாதிரி ஸ்மார்ட்டா, குட் லுகிங் கய்யா இருந்தா உனக்கு ஓகே தானே?” என்றான் அஸ்வின்.
குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் புரை ஏறியது அனன்யாவிற்கு.
“ஹே! பார்த்து அனன்யா…” என்று இருவரும் ஒரே நேரத்தில் அவளின் தலையை தட்டினர்.
இருவரும் நேருக்கு நேர் பார்த்து முறைத்துக் கொண்டு நிற்க. அனன்யா தான், “வாங்க லைவ் மியூசிக் என்ஜாய் பண்ண போகலாம்.” என்றாள்.
“டேய்… உனக்கு தான் ரோஷிணி இருக்கால, அப்புறம் ஏன் டா அனன்யாவை என்னமோ லவ் பண்ற மாதிரி, அஸ்வின் அண்ணாவோடு மோதிட்டு இருக்க.” என்றான் ஈஸ்வர்.
“எனக்கு அவரை பார்த்தாலே கோபமா வருது. அனன்யா என்னோட ப்ரெண்ட். அவளுக்கு நல்ல லைஃப் பார்ட்னர் கிடைக்கணும்ல.” ஹரிஷ்.
“அஸ்வின் அண்ணா நல்ல டைப்பா தான் இருக்கார்” தீபக்.
“உங்களுக்கு விஷயம் தெரியாது, விடுங்கடா.” என்றான் ஹரிஷ்.
படி ஏறி வந்தவர்களை டிஜே மியூசிக் வரவேற்றது. பல ரெஸ்டாரண்ட்களில் ஒரு பக்கம் பஃபே உணவு வகைகளும் , மறு பக்கம் டிஜே டான்ஸ் பார்ட்டியும் விடிய விடிய நடந்துக் கொண்டிருந்தது.
இவர்களும் ஒரு கஃபே உள் சென்றனர். தங்களுக்கு வேண்டியதை ஆடர் செய்துக் கொண்டு அங்கு ஆடிக் கொண்டிருந்தவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
நண்பர்கள் குழு முதல் ஆளாக போய் ஆட்டம் போட்டனர். கொஞ்சம் நேரம் கழித்து அனன்யாவையும் இழுத்துக் கொண்டு சென்றான் ஹரிஷ்.
முதலில் தயங்கினாலும் பின், பாடலின் இசைக்கு தன்னை மீறி ஆட ஆரம்பித்தாள் அனன்யா.
ஜெய், ராஜேஷ் குடும்பமும் இவர்களோடு வந்து சேர்ந்துக் கொண்டனர்.
டிஜே பாட்டை நிறுத்திவிட்டு, “நெக்ஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் கப்ள்ஸ் வைப். பேர் வித் த கைஸ் நெக்ஸ்ட் டு யூ.”
அப்போது பார்த்து ஹரிஷ் ஃபோன் பேச வெளியே சென்றிருக்க, ரோஜாவையும் காணும். அனன்யா அருகில் நின்றிருந்த ராஜேஷ் அவளை பார்த்து சிரிக்க. அனன்யாவால் வெளியேவும் செல்ல முடியவில்லை.
தும் ஹி ஹூ (Tum hi ho) என்ற ஹிந்தி பாடல் ஒலிக்க. எங்கிருந்து வந்தான் என்றே தெரியவில்லை, அஸ்வினின் கைகளுக்குள் நின்றிருந்தாள் அனன்யா.
அவனை பார்த்துக் கொண்டே ஆடினாள். இருவரின் கண்களும் பேசிக் கொண்டது.
'நீ யாரு? எதுக்காக வந்து இருக்க? நமக்குள் என்ன நடக்குது?’ என்று பல கேள்விகள் அவளின் மனதில்.
அவனின் அருகாமையும், பெர்ஃப்யூம் வாசனையும் அவளை ஏதோ செய்தது. கை தட்டும் சத்தத்தில் நினைவிற்கு வந்தவள், அமைதியாக வந்து உட்கார்ந்துக் கொண்டாள்.
“நீ எப்படி வேறு பொண்ணோடு ஆடலாம்?” என்று சண்டையிட ஆரம்பித்தாள் ரோஜா.
“டிஜே தான் அப்படி சொன்னாரு. நீயும் என் பக்கத்தில் இல்லை.” என்றான் ராஜேஷ்.
‘யாரோ ஒரு பெண்ணோடு ஆடியதற்கே இந்த கோபம் என்றால். என்னோடு இவன் ஆடி இருந்தால்? இவன் அந்த யோசனையில தானே இருந்தான். நல்ல வேளை அஸ்வின் வந்தார். இல்லை என்றால் என்பாடு தான் கஷ்டமாகி இருக்கும்.’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
அதன் பின் அனன்யா டான்ஸ் ஆட செல்லவில்லை. ஒரு மணி நேரம் சென்றிருந்தது. மணியும் பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
வேனை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். ராஜேஷ் இன்னும் ரோஜாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தான்.
அதை பார்த்த அனன்யாவிற்கு சிரிப்பு தான் வந்தது, முன்பு இவனை காதலித்த போது,
'அனன்யா” என்றான் ராஜேஷ்.
அவனது அழைப்பிலே தான் ஏதோ தவறு செய்துவிட்டோம், ராஜேஷ் தன் மேல் கோபமாக இருக்கிறான் என்பதை உணர்ந்த அனன்யா, அவனை திரும்பி பார்த்தாள்.
“நேற்று இரவு நீ யார் கூட இன்ஸடால சாட் பண்ணிட்டிருந்த?” ராஜேஷ்.
“அது என்னோட ஆன்லைன் ப்ரெண்ட்.”
“ இப்படிதான் எப்பவுமே முன்ன பின்ன தெரியாதவங்களோடு சாட் பண்ணுவியா?”
“அவங்க நான் சோஷியல் மீடியா யூஸ் பண்ண ஆரம்பித்த டைம்ல இருந்தே ப்ரெண்ட்ஸ் தான். ரொம்ப நல்ல டைப். நான் அவங்களோடு சாட் பண்ணது உனக்கு எப்படி தெரியும்?”
“நான் உன்னோட ஐடியை பார்த்தேன்.” என்றான்.
“ அப்ப நீ சும்மா என்னோட பாஸ்வேர்டு கேட்கலையா? ரொம்ப நாளா நீ என்னோட ஐடியை பார்த்துட்டிருக்க. நீ என்னை சந்தேகப்படுறீயா ராஜேஷ்?” என்றாள்.
“நான் உன்னோட பாதுகாப்பிற்காக தான் பார்க்கிறேன். ஆனா, நீ எப்படி என்னை தப்பா நினைக்கலாம்” என்ற ராஜேஷ் தன் இடத்திற்கு கோபமாக சென்றுவிட்டான்.
அதன் பின் ஒரு வாரம் அனன்யாவின் அழைப்புகளை அவன் எடுக்கவில்லை, அவளின் மெசேஜிற்கு பதில் வராது. ஆனால் அவன் பார்ப்பான். அதனால் “சாரி” என்று ஒரு நாளைக்கு பல ஆயிரம் முறை அனுப்பினாள் அனன்யா.
ஆஃபீஸில் கிடைக்கும் நேரம் எல்லாம் அவன் முன்பு தான் போய் நிற்பாள் அனன்யா.
ஒரு வாரம் கழித்து தான் மனம் இறங்கி பேசுவான் ராஜேஷ். அந்த ஒரு வாரம் அனன்யா பட்ட கஷ்டம், அவனுக்கு புரியாது.
அதுவும் இனி யாரோடும் சாட் செய்ய மாட்டேன் என்று அவள் சொன்ன பிறகு தான் அவன் பேசினான்.’
‘அப்போது அது காதலாக தெரிந்தது. இப்போது அடிமை தனமாக தெரிந்தது. என்னிடம் இருந்த பேசும் உரிமையை கூட பிடிங்கி இருக்கிறான். அதைக் கூட புரிந்துக் கொள்ளாமல் காதல் நோய்ல வாழ்ந்திருக்கேன்.’ என்று நினைத்தவள், தலையில் லேசாக அடித்துக் கொண்டாள்.
அனைவரும் வேனில் ஏற, வேன் ஹோட்டலை நோக்கி சென்றது.
“நாளைக்கு எர்லி மார்னிங் சர்ஃபிங் (surfing), இன்னும் சில அக்டிவிடீஸ் பண்ண பாபநாசம் பீச் போகலாம் ரெடியா இருங்க கைய்ஸ்.” என்றாள் அனன்யா.
“ஓகே” என்றனர் மகிழ்ச்சியாக.
இன்னும் ரோஜா சமாதானமான பாடில்லை. கெஞ்சிக் கொண்டே வந்தான் ராஜேஷ்.
இதுபோல் அர்ப விஷயத்திற்கு தான் சந்தோஷப்படக் கூடாது என்று எவ்வளவு நினைத்தும், அனன்யாவின் மனம் ராஜேஷின் நிலை கண்டு குத்தாட்டம் போட்டது.
ஹோட்டல் வந்துவிட, சோர்வாக தங்கள் அறையை நோக்கி சென்றனர்.
ரோஜா கோபமாக சென்றுவிட, அவள் வாங்கிய பொருட்களை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தான் ராஜேஷ்.
அனன்யா அவனை ஏளனமாக பார்க்க, அவளை முறைத்துக் கொண்டே சென்றான் ராஜேஷ்.
“சாரி பியூட்டி... முக்கியமான கால் வந்தது, அதான் பேச போகிட்டேன். நீ அந்த அஸ்வினோடு ஆடிட்டு, அமைதியா போய் உட்கார்ந்து கஷ்டமா இருந்தது.” என்றான்.
“நீ ஏன் அஸ்வினோடு சண்டைக்கே நிற்குற? அவர் நல்ல டைப் ஹரிஷ். ராஜேஷ் தான் என்னோட எக்ஸ். அவன் என்னோடு அப்போ ஆட நினைத்தான். பட் அஸ்வின் என்னை காப்பாத்திட்டாரு. அஸ்வின் மட்டும் இல்லனா நான் அந்த ராஜேஷோடு டான்ஸ் ஆடி இருந்தா. ரோஜா என்னை திட்டிய கொன்று இருப்பாங்க.” என்றாள்.
“உனக்குனே பிரச்சனை எங்க தான் ரெடியாகி வருதோ? எக்ஸ் ஓட ஹனி மூன் ஆர்கனனஸ் பண்ற கொடுப்பினையெல்லாம் யாருக்கு கிடைக்கும் நீயே சொல்லு”
“டேய்.”
“ஜஸ்ட் கிட்டிங். ரொம்ப கஷ்டமா இருக்கா”
“ஆரம்பித்தில் ரொம்ப கஷ்டமா தான் இருந்தது. இப்போ இல்லை. இவன் தான்னு முன்னாடியே தெரிந்திருந்தால் வேற யாரையாவது சேர்த்திருப்பேன்.”
“சரி விடு பியூட்டி. பாஸ்ட் இஸ் பாஸ்ட். நான் உன்னை பார்த்துக்குறேன்.”
“ஓகே ஹரிஷ் ரொம்ப டயர்டா இருக்கு, மார்னிங் பார்க்கலாம். குட் நைட்.” என்றாள்.
சுத்தம் செய்து வந்து மெத்தையில் விழுந்தவள் தூங்க கண்களை மூட.
அஸ்வினின் உருவம் வந்து இம்சை செய்தது. ‘ஆடும் போது அவனை பார்க்காமல் இருந்திருக்கலாம். இது என்ன டீன்ஏஜ் பெண் போல் ஹார்மோன்ஸ் ஆட்டம் போடுது. இனி நான் யாரையும் காதலிக்க போவதில்லை. காதல் மேல் நம்பிக்கையும் இல்லை. இவனுக்கும் எனக்கும் இடையில் இருக்கும் உறவுக்கு பேர் என்ன? நீ ஏன் இந்த ட்ரிப்புக்கு வந்த அஸ்வின்? இப்போ ராஜேஷை விட நீ இந்த ட்ரிப்க்கு வந்ததை நினைத்து தான் கவலையா இருக்கு.’ என்று மனதில் யோசித்துக் கொண்டே அனன்யா தூங்கி போக. அவளின் அருகாமை தந்த தாக்கத்தில் தூக்கம் வராமல் தவிச்சு போனான் அஸ்வின்.
“ஏன் டி என்னை இப்படி கொல்லாமல் கொன்றுக் கொண்டிருக்கிறாய்.” என்று அஸ்வினால் புலம்பமட்டுமே முடிந்தது.
Author: Vishakini
Article Title: நயவனின் நயவள் இவளோ - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நயவனின் நயவள் இவளோ - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.