மேற்கு வானில் சரிகிறான் பருதி. மாலை நடைப்பயிற்சிக்கு கூட்டம் வர ஆரம்பிக்கிறது கடற்கரையில்.
"இப்ப எங்க அவங்க?" வரோதயன் கேட்டான்.
"யாரு?" அவனைப் பார்த்தாள் பிரார்த்தனா.
"வசந்தா?"
"இருக்காங்க.. ரிட்டயர்ட் ஆகி பென்ஷன் அனுபவிச்சுட்டு அல்லுத் தொல்லு இல்லாம சந்தோஷமா இருக்காங்க.. ஏன்?"
"கேட்டன். வீடு தரமாட்டன் எண்டாங்க.. பிறகு என்ன நடந்திச்சு??"
"அவ்வளவு சுவாரஸ்யமாவா இருக்கா என்ர கதை?" புன்னகையுடனே கேட்டாள்.
வரோதயன் அமைதியாக நிற்க,
"வசந்தா சித்தியில உங்களுக்கு கோபம் வருதா வரோதயன்? ஆனா எனக்கு அண்டைக்கு கோபமே வரல்ல. அதிர்ச்சியா இருந்தது. என்ன இப்புடி கதைக்கிறாங்க.. தீபன் அத்தான்ர வீட்ல தெரிஞ்சா என்ன சொல்லப் போறாங்க.. இவங்க என்ன மட்டும் ஏமாத்தல்ல.. இன்னொரு குடும்பத்த இழுத்து விட்டு இப்புடி மாத்தி கதைக்கிறாங்களே எண்டு கலவையா இருந்தது"
பிரார்த்தனா தான் ஏமாந்து நின்றாளே தவிர்த்து, ராஜேஸ்வரி ஆடித் தீர்த்தார் அன்று. ஏன் சபையில் வைத்து வாய் விட்டாய்? வாக்கு தந்தாய்? இன்று மாற்றி பேசுகிறாயே.. என் பெண் வாழ்க்கையை அழிக்க பார்க்கிறாயா? குடுமி பிடித்து உருளாத துறையாக சண்டைக்கு பிடித்தார்.
'நான் யாருக்கும் வாக்கு கொடுக்க இல்ல. நான் பெத்த பிள்ளையா நான் சீதனம் குடுக்க.. இரவு பகல் பாராம வேலை பார்த்து காச தண்ணியா இறைச்சி என்ர ஆசைக்கு நான் வீடு கட்டி வச்சிருக்கிறன். யாரோ முன் பின் தெரியாத ஒருவனுக்கு நான் ஏன் எழுதித் தரணும்? என்ன நம்பிக்கையில வீட்ட எழுதிக் குடுக்கிற? ஆள் இல்லாத அநாதை தானே நான். நாளைக்கு என்னை வெளியே போக சொன்னா யார் வந்து கேட்பாங்க எனக்காக?'
'நீ உன்ர வீட்டக் குடு. உன்னோட வச்சிரு. இல்லையா, வாடகைக்கு இருக்க சொல்லு. பேங் மெனேஜர் தானே, நல்ல சம்பளம் வரும். நான் எப்பவும் தரமாட்டன் எண்டு சொல்ல இல்ல. என்ர காலத்திற்கு பிறகு எனக்கும் ஏலாம போகும் போது என்ன இவங்கள் அக்கறையா கவனிச்சால் எழுதி வச்சிட்டு போறன்' என,
'உன்ர வீடும் வேணாம் வாசலும் வேணாம் உன்ர கால் படக் கூடாது என்ர வீட்டு பக்கம். வெளிய போ நீ. சொல் சுத்தம் இல்லாத உன்ர மனம் போல தான் உன்ர வாழ்க்கை அமைஞ்சிருக்கு' என வருணன் பதிலுக்கு சத்தம் போட, தெருவே வேடிக்கை பார்த்தது பிரார்த்தனாவின் சீதனக் குழப்பத்தை.
"நாங்க தகவல் அனுப்பாமலே அத்தான்ர வீட்டுக்குக்கு தெரிஞ்சிட்டுது. அவர்ட அப்பா நெருப்பு மாதிரி நிண்டார். உடன் பிறந்த தங்கை, ஒண்டுக்குள்ள ஒண்டு எண்டு நம்பினம். முழங்கையை நீட்டிடாங்கள். வீட்ட எழுதி வாங்கிட்டு ரெஜிஸ்டர் வச்சிருக்கணும். நீ அவசரப்பட்டதால தான் இவ்வளவு குழப்பம் எண்டு அத்தான ஏசினாங்கள்"
"ஒரு நாள் கூட வாழ இல்ல. உன்ர படிப்புக்கும் உத்தியோகத்திற்கும் தராதரத்திற்கும் எப்பேற்பட்ட பொண் கிடைப்பா. வைச்ச திருமணப் பதிவை அழிச்சி விடுவம் எண்டும் சொன்னாங்க.."
வரோதயன் அதிர்ந்து "என்ன ஈசியா கதைக்கிறாங்க.." என்றான். காதல் சொல்லி சுற்றி வந்த அந்த அத்தானின் கதை அவ்வளவு தானா?? என்று மட்டமாக நினைத்தான்.
ஆனால் பார்த்தீபன் அப்படி விட்டுவில்லை அவளை. பிரார்த்தனாவைத் தேடி வந்தான்.
ஒரு மாலைப் பொழுது அது. கேட்டில் நின்றனர் இருவரும். அதே வாசல் படியில் எத்தனையோ மாதங்கள் இனிதாக கரைந்திருக்கிறது நேரம் அவர்களுக்கு.
அன்று விரல் பின்னி தலை குனிந்து நின்றவளை வெறுமனே பார்த்தவன் 'என்ன முடிவு எடுத்து இருக்கிறீங்க?' என்று கேட்டான்.
அனைத்து முடிவையும் அவளுக்கும் சேர்த்து எடுத்தவன் தான் அன்று அப்படிக் கேட்டதும்.
கல்யாணம் என்ற புள்ளியில் சேர்ந்ததும் காதலர்களின் மயக்கம் கலைந்து விடுகிறது.
பெண்ணின் கண்ணில் விழுந்து கிடக்கும் ஆண் அவளைக் கைப்பற்றியதும் தெளிந்து விடுகிறான். அவளைத் தவிர அவளைச் சுற்றியுள்ளதையும் பார்க்க ஆரம்பிக்கிறான்.
'சித்தி இப்போதைக்கு வீடு தரமாட்டாங்க'
'அதான் தெரிஞ்ச கதையே.. வேற என்ன முடிவுல இருக்கிறீங்க உங்கட வீட்டாட்கள்?'
வெட்டுவது போலான அவனது கேள்வி அவளை கவலை கொள்ளச் செய்தது.
'நீங்க இங்க எங்களோட இருக்க மாட்டீங்களா?' கேட்டாள்.
தீபன் அவளுடைய பழைய ஓட்டு வீட்டில், சுகாதாரம் இல்லாது தாயாராகும் ரோட்டுக் கடை தின்பண்டம் போல் ஒரு பார்வை வீசினான்.
பணத்துடன் பணி புரியும் அவனுக்கு நகத்தில் அழுக்கு படாத அவனுடைய வாழ்க்கை தரத்திற்கு ஒரு சதவிகுதம் கூட ஒட்டாத வீடு அது. முதல் நாள் இரவை ஏதோ மயக்கத்தில் சமாளித்து அதுவும் கெட்டுப் போன விரக்தியில் வெளியேறி இருந்தவன், தளிர் போன்ற தன் காதல் பெண்ணின் முகத்திற்காக இறங்கி வந்தான்.
சித்தியின் புதிய வீட்டில் அவனுடன் செய்யப் போகும் குடித்தனம் பற்றி பிரார்த்தனாவுக்கும் கற்பனை இருந்தது . தீபனின் தாராளமான வருமானத்தில் பக்கத்தில் இருந்து அம்மா தங்கை தம்பியையும் கவனித்து கொள்ளலாம், நிலானிக்கு வித விதமான காலை பலகாரம் செய்து தரலாம் என்பது வரை யோசித்து வைத்து இருந்தாள்.
தங்கள் வீட்டில் குடித்தனம் பண்ணுவது உணவு விஷயத்தில் சவுகரியம் என்றாலும் பலதரப்பட்ட இடைஞ்சல்கள் வரும். அவை பார்த்தீபன் போன்ற மாப்பிள்ளைகளுக்கு நிச்சயம் ஒவ்வாது.
அடிக்கடி மூளும் வருணன் ராஜேஸ்வரியின் வாக்கு வாதம் மிகப் பெரும் சவால். இடவசதி பிரச்சினை உண்டு. ஒற்றைப் படுக்கையறையை அவர்கள் பயன்படுத்தினால் மொத்த பேரும் மண்டபத்தில் புழங்க வேண்டி வரும்.
ஒற்றைப் படுக்கையறை, சமையல் கட்டு, சிறிய மண்டபம், அவசியத்திற்கு அதிகமாகவே அகன்ற பூஜை அறை, வராண்டா.
பல்லாண்டு பழமையான சீதன வீட்டை இடித்து புது வடிவத்தில் கட்டும் எண்ணம் இருந்தும் வருணன் தனது செல்வத்தை குடியில் அழித்து வங்குரோத்து அடைந்தது தான் மிச்சம்.
நஷ்டம் அடைந்த கடையில் விற்றது போக எஞ்சிய தட்டு முட்டு சாமான்கள் வரை அடைத்து வைக்கப்பட்டடிருந்த அந்த அடைசல் வீட்டை சகிக்க முடியவில்லை பார்த்தீபனால். கைக்குள் காலுக்குள் நிலானி விமல் ஒரு புறம், ஈ என இழித்தபடி மாமனாரும் உர்ர் என விறைத்தபடி மாமியாரும் ஒரு புறமுமாக மூச்சு முட்டியது அவனுக்கு அங்கே.
பின்னல் அறுந்த மரநாற்காலியில் உட்காரவும், பழைய மெத்தை கட்டிலில் அமரவுமே அருவருத்தவன் தனக்கு வேண்டியதை மாற்றி அமைத்தான் வீட்டில்.
தங்களை மீறிப் போய் விட்டான் என்று பெற்றவர்கள் கொதிக்க, மாப்பிள்ளையை கைக்குள் போட்டதாக எண்ணி மகளின் கெட்டிதனத்தை நினைத்து ராஜேஸ்வரிக்கு கர்வம் ஏறியது.
சூழல் ஒவ்வாமையால் பார்த்தீபனின் சிடுசிடுப்பும், எரிச்சலும், பழக்க வழக்கங்களும் புரிந்து கொள்ளவே நான் எடுத்தது. பல சமயங்களில் திணறினாள் பிரார்த்தனா.
சோறும் சம்பலும் தின்று கடனில் வண்டி ஓட்டியவர்களுக்கு மருமகனின் பேங் வருமானத்தில் வயிற்றுப்பாட்டுக்கு மாத்திரம் குறை வரவில்லை.
அழுக்கு சுவர் வீட்டில் பல்லைக் கடித்துக் கொண்டிருந்த பார்த்தீபன், வங்கிக் கடன் எடுத்து வீட்டை புதுப்பிக்கும் ஏற்பாடுகளை செய்ய, அங்குதான் பிரச்சினை உருக்கொண்டது.
பெண் தேடிப் போன மகனை அப்படியே விட்டுவிடவில்லை பிறந்த வீடு. அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் கவனித்து கொண்டு இருந்தது. சுற்றியுள்ள சொந்தம் பந்தங்களால் அது அனுகூலமாக, கட்டுமான பணிக்கு கல் மண் வந்து பறிந்த அன்று காலையில் வந்திறங்கிய மாமனார் மாமியாரை பிரார்த்தனா பயபக்தியுடனே வரவேற்றாள்.
மகன் அன்று விடுமுறை போட்டிருக்க, "எத்தின நல்ல இடங்கள் அமைஞ்சி வந்தும் உன்ர தலை எழுத்து இப்புடி எண்டால் யார் என்ன செய்ய ஏலும். என்னவோ செய். ஆனால் உரித்து இல்லாமல் வீட்டுல கை வைக்காத. வீட்ட அவன்ர பேர்ல மாத்துங்க.." என,
"ஏன் மாத்தணும்?" கேட்டார் ராஜேஸ்வரி.
"உள்ளத அவர்ட பேர்ல மாத்திட்டு நாளைக்கு நானும் என்ர ரெண்டு பிள்ளைகளும் நடு ரோட்ல நிக்கவா" என்றார்.
வந்தவர்கள் திகைத்தனர்.
"ஏன்மா, உனக்கே இது நியாயமா இருக்கா? தாரன் எண்ட வீடும் தர இல்ல. இந்த ஓட்ட வீட்ட எழுதி வைக்கவும் நோகுதோ உங்களுக்கு? நீ எழுதிக் குடுக்காமல் உன்ர வீட்டுக்கு என்ர புள்ள ஏன்மா செலவழிக்கணும்??"
"யாரும் சொல்ல இல்லயே, அவர செலவழிக்க சொல்லி. அவர்ட விருப்பப்படி செய்றார். நாங்க எப்டி தடுக்கிற. அதுக்காக வீட்ட எழுதி வாங்குற எண்ணம் இருந்தால் அதை அழிச்சிருங்கோ. இது என்ர தாய் தகப்பன் எனக்கு தந்தது. உள்ளத குடுத்துப்போட்டு மிச்சம் உள்ள பிள்ளைகளோட தெருவுக்கு போக நான் ரெடி இல்ல. நான் என்ர புருஷனுட்டயே பாடம் படிச்சிட்டன். யாரையும் நம்ப தயாரில்ல. என்ர பேர்ல இருக்கிற இது ஒண்டு தான் எனக்கு பாதுகாப்பு மிச்சம் உள்ள காலத்துக்கு" கணவனிடம் வாங்கிய அடியில் ஒவ்வொன்றாக இழந்து காயப்பட்டு வைரம் பாய்ந்திருந்த ராஜேஸ்வரி நறுக் நறுக்கென்று கதைத்தார்.
பெண் தரப்பில் வீடு சீதனமாக கொடுத்தும் பெற்றும் பழகிய தமிழ் சமுகத்தின் ஒரு அங்கத்தவர்களான பார்த்தீபனை பெற்றவர்கள் வானுக்கும் பூமிக்கும் குதிக்காத குறைதான்.
பிரார்த்தனாவை பார்த்தான் அவர்கள் மகன். அதில் கோபம் நெருப்பாக கனன்றது. அந்த வீட்டை எழுதி வாங்கும் எண்ணம் அவனிடம் அதுவரை எழவில்லை. தனது இருப்பிடத்தை செப்பனிடவே முடிவெடுத்து இருந்தான்.
படுக்கை அறை, குளியலறை வசதி போதாமல் மூச்சு முட்டுகிறது என்று, இங்கு வந்த தினம் துவக்கம் கடுகடுக்கிறான். வசதியாக இருந்து பழகியவன் என்று அவளுக்கு அவன் சிரமங்கள் புரிந்திருந்தும், அவனுக்காக அவள் வாயில் இருந்து ஒரு வார்த்தை வரவில்லை.
இப்படி வாய் பேசும் மாமியாரை எப்படி சும்மா விடுவது??
"எனக்கு எழுதி தந்தா நான் உங்கள வீட்ட விட்டு துரத்தி போடுவன்.. அப்டி என்றிங்க?" அடக்கப்பட்ட ஆத்திரத்துடனே கேட்டான்.
"காசு பணம் சொத்து விஷயத்தில நான் யாரையும் நம்பத் தயார் இல்ல தம்பி. என்ர புருஷனே என்ன ஏமாத்திட்டான்.."
"நான் தான் வெளி ஆள். இந்தா நிக்கிறா நீங்க பெத்த மகள். இவளையும் நம்ம மாட்டிங்க?"
"கல்யாணம் பண்ணிக் குடுத்தா புருஷன்ர பக்கம் நிப்பாங்க பொம்பிளப்பிள்ளைகள். நான் யாரையும் நம்ப மாட்டன். எனக்கும் ரெண்டு பிள்ளைகளுக்கும் ஆதாரம் வேணும்"
"அப்ப இவள் உங்கட பிள்ளை இல்லையா?
"அவளுக்கு வாழ்க்கை அமைஞ்சிட்டு. உலகம் அறியாத ரெண்டு இருக்கு. அதுளுக்கள ஆளாக்கி அவங்களுக்கும் ஒரு நல்லது நடந்த பிறகு மூணு பிள்ளைகளுக்கும் சம பங்கா தான் எழுதி குடுப்பன். அதுவும் என்ர காலத்துக்கு பிறகு.. அதுவரைக்கும் நான் யாரையும் நம்ப மாட்டன்.."
"ஓஹோ! அப்ப நான் மட்டும் ஏன் நம்பணும் உங்கள. நான் போடுற சாப்பாட்ட சாப்பிட்டு, என்ர உப்ப திண்டுட்டு இருக்கிற உங்களுக்கே விசுவாசம் இல்ல எண்டால் நான் மட்டும் உங்கள எப்டி நம்புற? எந்த நேரத்திலயும் என்னைய வீட்ட விட்டு துரத்துவீங்க எண்டு நான் சந்தேகப்படலாம் தானே.. அம்பது லட்சம் செலவழிச்சி குப்ப மேடா கிடக்கிற வீட்ட நான் ரினொவேட் பண்ணின பிறகு வெளில போடா எண்டு துரத்த மாட்டீங்கள் எண்டு எப்புடி நம்புற?"
"அப்புடி கேளுடா மகனே! இப்பயாவது புத்தி வேலை செய்ததே உனக்கு. பொண்ண பெத்த தாய் கதைக்கிற கதையா இது, துளி அச்சம் இல்லையே மகள்ட வாழ்க்கைய பத்தி? நீ தேடி எடுத்த பொண் சிலை மாதிரி வாய மூடிட்டு நிக்குது. இதுவும் தாயோட சேர்ந்து ப்ளான் போடுதோ யாருக்கு தெரியும். நூல போல சேலை தாய போல பிள்ளையாம்"
எரித்து விடுவது போல தான் பார்த்தான் பார்த்தீபன் பிரார்த்தனாவை.
பெண்ணுக்கு வாயில் இருந்து ஒரு வார்த்தை வரவில்லை. விக்கித்து நின்றது.
சட்டையை எடுத்து மாட்டியவன் ஃபோன் எடுத்து, ஓடர்களை ரத்து செய்து, இறங்கி விட்டவைகளை திரும்பப் பெற உத்தரவுகளை பிறப்பித்தவன் தன்னுடைய உடைமைகளை திணித்து பெட்டியை இழுத்துக் கொண்டு தாய் தந்தையுடன் வெளியேறினான்.
புயல் சுழற்றி போட்டது போல தொய்ந்த பிரார்த்தனா கலங்கினாள்.
ராஜேஸ்வரியோ, கிஞ்சிற்றும் மதிக்கவில்லை அவர்களில் வெளிநடப்பை. கள்ளுண்ட வண்டு மலரை நாடும். புது புருஷன் மனைவியை தேடி வருவான்.
அலட்டிக் கொள்ளாமல் தப்பு கணக்கு போட்டார்.
"அவ்வளவு தான்.. அது தான் அவரும் நானும் சேர்ந்து இருந்த கடைசி நாள்.. ஒரு நாள் ரெண்டு நாள், கிழமை போய், மாசக் கணக்காச்சு. அவர்ட சைட்ல இருந்து ஒரு தொடர்பும் இல்ல."
இரத்தம் வடிந்து மூர்ச்சை உற்றிருந்த ராஜேஸ்வரியை அள்ளிச் சென்று ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த நாள் நினைவு வந்தது வரோதயனுக்கு. அந்த தளர்ந்த தாய்க்குள் இத்துணை வீரியமா? பெண் வாழ்க்கையை சிக்கல் ஆக்கி, சின்னாபின்னமாக்கும் துணிவிருந்ததா? என்று மலைப்பாக இருந்தது வரோதயனுக்கு.
"நீங்க தொடர்பு கொள்ள இல்லயா பிரார்த்தனா?"
"கொஞ்ச நாள் விட்டு அவர் கோபம் போன பிறகு கதைக்க இருந்தன். நான் எடுத்த நேரம் அவர்ட நம்பர் நம்பர் வேலை செய்யல்ல.."
வரோதயன் ஆதங்கத்துடன் பார்த்து நிற்க, "அவரே ஒரு நாள் எடுத்தார்.."
"ம்ம்?" ஆர்வமாக,
"நோர்மலா கதைச்சார்.. எப்டி இருக்கிறாய் எண்டு கேட்டார்.."
"ம்ம்?"
பார்த்தீபன் பிரிந்து சென்ற பிறகு பிரம்மை பிடித்தவள் போலவே இருந்தாள் பிரார்த்தனா. வாழ்க்கை அவளுக்கு சோதனைகளை மாத்திரமே வைத்திருந்தது அடுத்தடுத்து.
பள்ளிக் கூடம் விட்டு வந்த நிலானி விமலன் பசிக்கு உணவு வைக்க வேண்டும். புருஷன் இருக்கும் போது வாங்கி போட்ட மளிகை சாமான்கள் இரண்டு வாரங்களே தாக்கு பிடித்தன. உணவு பாட்டை யோசிக்கவே தலை விறைத்தது. வருணன் ஊரை சுற்றி வாங்கி வைத்திருந்த கடன்களின் வட்டித் தொந்தரவு அதிகரித்தது.
தலைக்கு மேல் அழுத்தும் கடன் பாரம், மருமகன் பற்றிய கணிப்பு பொய்த்து போன துக்கம், ராஜேஸ்வரிக்கு ஆரம்ப கட்டத்தில் இருந்த நீரிழிவு வியாதி தீவிரம் பெற்றது. கிளினிக், மருந்து, மாத்திரை என்று செலவை இழுத்து வைத்தார். பொருளாதார கஷ்டம் விரட்டி அடிக்க ஆரம்பித்தது. ஒரு புடவை கடையில் வேலைக்கு சேர்ந்தாள் பிரார்த்தனா.
கடையில் கஸ்டமரை கவனித்து கொண்டிருந்த ஒரு நாளில் தான் தீபனிடம் இருந்து அழைப்பு வந்தது.
"எப்டி இருக்கிறாய்? என்ன பத்தி நினைச்சி பாப்பியா?" கேட்டான்.
நெஞ்சு ஏறி இறங்க அலைபேசியுடன் கடையின் வெளிப்புறம் ஓடியவளின் அழுகை அவனை எட்டவில்லை. "நான் ஊர்ல இல்ல. ட்ரான்சர் எடுத்து வந்துட்டன்.."
"எங்க?"
"எங்க எண்டு தெரிஞ்சி என்ன செய்ய போறா.. உன்னால் மெச்சிமம் என்ன செய்ய ஏலும் எனக்காக?"
உதட்டை கடித்துக் கொண்டாள். அவள் வளர்த்திருந்த பிரியம் சத்தம் இன்றி அழுதது.
"பாரு, இப்பவும் நான் தான் எடுத்து இருக்கிறன்.. வாய் திறந்து கதைக்க கூட கஷ்டமா இருக்கு உனக்கு. வைக்கிறன்.."
"இல்ல, வைக்காதிங்க.. எப்டி இருக்குறிங்க நீங்க?"
அவன் பதில் சொல்லவில்லை. அந்தப் பக்கம் யாரோ வங்கி அலுவலர் குறுக்கீட்டுக்கு செவி சாய்த்தவன் "எங்க எண்டு கேட்டியே.. இடம் சொன்னா வருவியா.. நான் உன்னத் தேடி வரமாட்டான். நான் வந்த வரைக்கும், உனக்காக செய்த வரைக்கும் போதும்.."
"எங்க இருக்குறிங்க அத்தான்.. நான் வாரன்.."
"உண்மையா?"
"ஓம்.. உண்மையா தான். எனக்கு உங்கள பாக்கணும்"
"அட்ரஸ் அனுப்புறன் வா. நீ வந்த பிறகு நம்புறன்.."
முகவரியை அனுப்பியவன் ஒரு நிபந்தனையையும் சேர்த்து எழுதினான். உன் அம்மாவுக்கு மகள், அப்பாவுக்கு புத்திரி, தம்பி தங்கைக்கு அக்கா உறவை எல்லாம் தலை முழுகி விட்டு என் மனைவியாக மாத்திரம் வருவதானால் வா என்று.
வாடிக்கையாளரை கவனியாமல் காணாமல் போன பணிப் பெண்ணை தேடிய முதலாளி, அலைபேசித் திரை படித்து சமைந்து நின்றவளை கண்டு கோபம் கொண்டான். வேலையை விட்டு துரத்தி விடுவேன் என எச்சரித்தவன் அன்றைய சம்பள பாக்கியை மறுத்தான்.
வீடு வந்தவள் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தாள். ராத்திரி விடிந்து விடாமல் நீடித்து விடாதா என்று விழித்தாள்.
கெடு வைத்திருக்கிறான். அவனைப் போய் பார்ப்பது தான் முக்கியம். அவன் மீதான பிரியத்தை நிரூபிப்பது தான் அவசியம். நிபந்தனையை பற்றி பிறகு யோசிக்கலாம் என்று தீர்மானிக்க, காலையில் பள்ளிச் சீருடையில் வாந்தி எடுத்து மயங்கிய நிலானியை பதறிபடித்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனாள். பரிசோதித்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சல் என்று அட்மிட் செய்தனர்.
டெங்கு காய்ச்சல் திருகோணமலையில் தீவிரமாக பரவிய காலம் அது. இரு சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்க, பார்த்தீபன் சிறு புள்ளியாக கூட பிரார்த்தனாவின் கருத்தில் வரவில்லை. தங்கை பற்றிய அச்சமே அவளை வியாபித்திருக்க, தனது வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்திருந்த பெண் மொத்தமாக நழுவ விட்டது.

Last edited: