காத்திருந்து காத்திருந்து, பல போராட்டங்களுக்கு பிறகு தொழில் பெற்றவர்களுக்கும் 'திங்கள்' எனும் தினம் சில வாரங்களில் கசந்து விடும். உத்தியோக சுவாரஸ்யம் குறைந்து விடும். 'நாளைக்கு திங்கக் கிழமையா?' என்ற அயர்ச்சி ஞாயிறு இரவே உண்டாகி விடும்.
இதில் வரோதயன் ஒருவன் விதி விலக்கு எனலாம். ஒவ்வொரு திங்கள் கிழமையையும் அவன் ஆர்வமாக காத்திருந்து வரவேற்கிறான்.
அரச நியமனம் கிடைத்தும், சொந்த பைக் இருந்தும், முதல் நாள் கல்வித் திணைக்களத்திற்கு பஸ்ஸில் வருவதற்கு நிர்பந்திக்கப்பட்டவன், அந்த கூட்ட நெரிசல் பஸ்ஸில் கண்ட பிரார்த்தனாவால் இனம் புரியாத இதமும், ஒஃபிஸ் என்றால் பிடித்தமும் அவனுள்.
முதற் பார்வையில் உண்டான காதலா அது?
ஈர்ப்பா?
அந்தப் பெண்ணிடம் பேச வேண்டும் பழக வேண்டும் அவளை அறிய வேண்டும் என்று ஆர்வம் வளர்ந்தது.
அவள் தெருவில் திக்கின்றி நடந்த போது வழிப்போக்கனாக அவனால் கடந்து போக முடியவில்லை. அவள் தவிப்பு அவனை தவிர்க்க இயலாதவன் ஆக்கியது.
அந்த கணம் முதல் நேசம், பாசம், அன்பு, அக்கறை எப்படியும் சொல்லலாம் அவள் பாற் கொண்ட உணர்வை.
அவள் 'நான் கல்யாணம் ஆனவள்' என்ற போதும் அது குறையவில்லை.
'எப்போது? எப்படி? கணவன் எங்கே?' கேட்க நினைந்தான் தான்.
வெள்ளிக்கிழமை ஆனதால் திங்கள் வரை காத்திராமல் ரமணிக்கு அழைத்தான்.
'தனாவோட கதைச்சன் வரோதயன். உண்மை தான். பாவம் அது. குடும்பத்தால வாழ்க்கை துலச்சிட்டு நிக்கிது..' என்றார் ரமணி அவளிடம் கதைத்து விட்டு.
பார்த்தீபனை பற்றி தனாவாக கூறாமல் அவர் வாய் திறப்பது சரியல்ல என்று விட்டுவிட்டார்.
அந்த வாரம் திங்கள் பிரார்த்தனாவின் வாழ்வில் தனக்கு ஒரு வாய்ப்பை பெறும் நோக்கில் வரவில்லை அவன்.
ஒஃபிஸ் பென்ட்ரைவை தவற விட்டவன் அதை எடுக்க போனதும், அவனது பைக்கை செக்கியூரிட்டி கூண்டருகில் கண்டு அவனுக்கான அவளது கண்ணில் கண்ட தேடல், ஸ்டாப் பஸ்ஸில் தாவி ஏற வைத்தது.
'நாம கதைப்பம் வரோதயன், நாளைக்கு..' என்றவள் தனது கடந்த காலத்தை பகிர்ந்ததும் 'இந்தப் பெண்ணுக்கு ஏதாவது செய்!' என்ற எண்ணமே தீவிரம் பெற்றது.
அவள் கண்ணில் அவ்வப்போது தனக்காக மின்னும் ஆர்வம் பொய் என்று மனம் நம்ம முறுத்ததோடு, அவள் சொல்லுவதை போல் அது நட்பாக இருக்கலாம் எனும் சமாதானம் எடுபடவில்லை.
நாலைந்து வாரம் ஓடியது. முன்னால் NSB உதவி முகாமையாளரைப் பற்றி தேடலுக்கு நாள் எடுத்தது. வீட்டில் கல்யாணப் பேச்செடுத்து நச்சரித்த தாய்க்கு தலை அசைத்தும் விட்டான்.
விரும்பி இடமாற்றம் எடுத்து போன பார்த்தீபன் எங்கிருக்கிறான் என்று புது உத்தியோகத்தர்களுக்கு தெரியவில்லை. பழைய ஆட்களை பிடித்து விசாரித்தால் எங்கோ பாணந்துறை கிளையில் வேலை பார்ப்பதாக அறியக் கிடைத்தது.
'ரமணி மிஸ் நீங்க பிரார்த்தனாவ கூட்டிக் கொண்டு போய் பாக்குறிங்களா.. அவட மிஸ்டர் கொழும்பு பாணந்துறைல இருக்கிறார்..'
'அப்புடியா!'
ரமணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் அதே வேகத்தில் வெறுத்துப் பேசினார். 'அந்தப் பிள்ள மாட்டன் என்றா வரோதயன்.. அவ நம்புறா இல்ல அவர் எங்கயோ நல்லா இருக்கட்டும் நான் வேணும் எண்டால் தேடி வந்திருப்பார் என்று விசர் கதை கதைக்கிறா..' என்றார்.
அவன் முயற்சியை விடவில்லை. பாணந்துறை வங்கி தொலைபேசி இலக்கம் தேடிப் பேசினான். அப்போது தான் தெரிந்தது அந்த வங்கி முகாமையாளர் கந்தளாய் வந்திருப்பதை.
அன்று இரவு வரோதயன் உறக்கம் கொள்ளவில்லை. பிரார்த்தனாவை அவள் கணவன் முன்பு நிறுத்தும் இலட்சியம் நிறைவேற போகிறது என்பது பதட்டமாகவும் பயமாகவும் அவனுள் ஆடியது.
'ரமணி மிஸ், மீட் பண்ணிட்டாங்கள். ஆனா பிரார்த்தனா சரி இல்ல. உள்ளுக்க என்ன நடந்த எண்டு என்னிட்ட சொல்றா இல்ல. நீங்க கதையுங்க' என்றான் ரமணியிடம், ஃபோனில்.
அன்றிரவு அழைத்த ரமணி பார்த்தீபனைத் திட்டினார். சபித்தார். பிரார்த்தனா போல பல பெண்கள் இன்னும் ஏமாளிகளாக இருக்கின்றனர் என்று ஒட்டு மொத்த பெண் குலத்திற்காகவும் வருத்தினார். தனா ஒருத்தியை தனிப்பட்ட முறையில் சாடினார். கடைசியில் பூவால் ஒரு பூகம்பம்பத்தை அவனுள் நிகழ்த்தினார்.
'நான் ஒரு விஷயம் சொல்லணும் வரோதயன், பிரார்த்தனா உங்கள விரும்புறா. அத வெளிபடையா ஒத்து கொள்ள மனசில்ல பிள்ளைக்கு..'
'அதெப்புடி புருஷன் இருக்கும் போதே இன்னொருத்தன விரும்பினா எண்டு மற்றவங்கள மாதிரி நீங்களும் கேட்கக் கூடாது. நான் கதைச்ச வரையில அந்தப் பிள்ளட மனசுல நீங்க இருக்கீங்க..' என்று பூங் கணையால் அவனைத் தாக்கினார்.
'இத இப்ப சொல்லலாமா இல்லையா எண்டு நேரம் காலம் பார்த்து தள்ளிப் போட மாட்டன். ஏற்கனவே அதுட வாழ்க்கைல எல்லாம் ரெண்டும் கெட்டானாவே நடந்து முடிஞ்சிருக்கு'
'நீங்க அவக்கு ஒரு நல்ல துணையா இருப்பீங்க. ரெண்டு பேரும் உங்கள உங்கள சுத்தி நீங்களாவே போட்டுக் கொண்டுள்ள வட்டங்கள தாண்டி வந்தா கை புடிக்கலாம்'
'யோசிச்சு முடிவெடுங்க. என்ன சிக்கல் வந்தாலும் உங்களுக்காக பாலு நிப்பார். தனாவுக்கு நான் இருக்கிறன்....' என்று வைத்தார்.
வரோதயன் அன்றில் இருந்து அழைக்கிறான் அந்தப் பெண்ணுக்கு. எடுக்கிறாள் இல்லை.
அவன் அவள் கண்ணில் காண்பது நிஜம் தானே..
ரமணி கூறுகிறார்..
ரமணிக்கு ஏதோ வழியில் புரிந்திருக்கிறது.
பெண் மனசை பெண் அறிவார்.
அவன் அவளை பார்க்கவே தவறாமல் அலுவலகம் செல்கிறான். அவள் அவனைத் தவிர்க்கவே விடுமுறையை நீட்டிக்கிறாள்.
உத்தியோகம் எடுக்கும் வரை சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்தவன் வரோதயன். நிலக்கடலை, உழுந்து விதைத்திருக்கும் போதே பட்டதாரி நியமனம் கிடைத்தது. அண்ணனுடன் சேர்ந்து ராசு, பஞ்சுவும் அவனுடைய நிலத்தை கவனிக்க, சனி ஞாயிறிலும் அவன் மண் வெட்டி பிடிக்காமல் போனால் எப்படி?
காசு பணம் தேவைக்கு அதிகமாகவே உள்ளது. பிரார்த்தனாவை பார்க்க ஓவர் டைம் செய்ய ஓடி வர முடியாது.
அதையும் மீறி அந்த வெள்ளி பூரணை விடுமுறையில் 'காளி கோவிலில் நேரத்திக்கடன் கிடக்கு வா தம்பி' என்று அழைத்த தாயை சமாளித்து வேலைக்குப் போனால் அன்றும் அவள் வரவில்லை.
வீட்டு கேட்டில் போய் இறங்கி கதவைத் தட்ட முடியாமல் இல்லை.
வரட்டும்! அவளாக வரும் போது வரட்டும் என்று காத்திருந்தவன் அந்த திங்கள் கிழமையை ஆர்வமாக எதிர்பார்த்தான்.
பைக்கை நிறுத்தி விட்டு படி ஏறினான். ஆஹா! வந்திருந்தாள் பிரார்த்தனா.
சாம்பல் நிறத்தில் சேலை. கபில நிறத்தில் ஜாக்கெட். என்றும் போல் நிர்மலமான முகம்.
நேராக அவளிடம் சென்றான். ஏதோ ஒரு ஃபைல் திறந்து பார்த்துக் கொண்டிருந்தவள் நிமிர்ந்தாள்.
எதிர்பார்த்தேன் என்பதாக ஒரு பாவனை. செயற்கையாக ஒட்டிக் கொண்ட புன்னகை.
"குட் மோர்னிங்"
"குட் மோர்னிங்!"
அடுத்து என்ன?
அவனுக்கு பிறகு வந்தவர்கள் கைவிரல் அடையாளம் வைத்த நீக் நீக் சத்தம் கேட்டது.
"சைன் வைக்கல்லயா?"
அவன் நேராக அவளிடம் வந்ததை அவள் கவனித்து தான் இருக்கிறாள்.
"வைக்கணும்.. லீவ் எடுத்தது போதுமா?" குரலில் ஸ்நேகம் நிரப்பிக் கேட்டான்.
புன்னகைத்தாள். அதில் உயிரில்லை.
நீக் நீக் - அவனுக்கு பிறகு வந்தவர்கள் முந்துகின்றனர்.
"சைன் வச்சிட்டு வாங்க"
"ம்ம்"
பிங்கர் வைத்து வரவுப்பதிவேட்டில் ஒப்பம் வைத்து வந்தான். தனது கட்டுப்பாட்டில் உள்ள ஆவண அலுமாரியில் கோப்புகள் எடுத்துக் கொண்டிருந்தாள் பிரார்த்தனா. ஏற்கனவே பொதி மாட்டு வண்டி போல அவள் மேசையில் பாரம்.
அவள் இனி பிசி!
வரோதயன் தனது மேசைக்கு போனான்.
திங்கள் கிழமை பொதுமக்களுக்கான நாள். தங்கள் பிரச்சினைகளை நேரில் வந்து தீர்த்துப் போகலாம். பிரார்த்தனா மாத்திரம் அல்ல நிர்வாக பிரிவிலேயே பரபரப்பு தொற்றிக் கொண்டது. மதிய உணவு இடைவேளை கூட மிச்சம் இல்லை.
சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாட்டுக்கு சென்ற முன்னாள் அதிபர் ஒருவர் பிரார்த்தனாவை பிடித்துக் கொண்டார். பென்ஷன் வரவில்லையாம் அவருக்கு. பெரியவருடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த பிரார்த்தனாவுக்காக காத்திருந்து ரமணிக்கும் கண் இருட்டியது பசியில்.
"அவர லஞ்ச் எடுத்துட்டு வரச் சொல்லுங்க நாங்க சாப்பிட்டு வந்திருலாம்.."
"சொல்லிட்டன். கேக்குறார் இல்லக்கா PDய சந்திச்சிட்டு தான் போவாராம்.. Sir ர போனா என்னக் கூப்பிடுவார் சேர், ஹிஸ்ரி கேட்க.. நீங்க சாப்பிடுங்க உங்களுக்கு டைமுக்கு லஞ்ச் எடுக்காட்டி கேஸ் அடைக்கும்.."
என்று அவருடைய நலனுக்கு அனுப்பியவள் தன்னை பற்றி சிந்திக்கவில்லை.
அதிபர் அம்பாரை இருந்து வந்துள்ளாராம். தனது காரியம் முடியாமல் அசைய மாட்டேன் என்று உட்கார்ந்து மூன்று மணிக்கு திணைக்கள தலைவரை சந்தித்து அவர் இன்னும் ஒரு வாரத்தில் பதில் வரும் என்று உறுதி கூறிய பிறகே அசைந்தார்.
PD மாற்றி AO மாற்றி பிரார்த்தனாவை மணி அடித்து அழைத்து கொண்டிருந்தனர். அவளுடை அம்பாரை மாவட்ட அதிபர் சப்ஜெக்டில் தான் அதிகம் கேள்வி வந்தது. பெண்டிங் வேலைகளில் எதற்கு எது என்று ஃபைலை கிண்டிக் கிளறி எடுத்து ஓடிக் கொண்டிருந்தாள்.
ஐந்து மணி வரை உட்கார நேரம் இல்லை. மூடிக் கட்டி விட்டு பஸ் பிடிக்க விரைந்தவள் தன்னை தொடரும் இரு விழிகளை அறிந்தே இருந்தும் அதை எதிர்கொள்ளாமல் தவிர்த்தாள்.
மறுநாள் காலை உணவு மேசையில் அவளும் ரமணியும். ரமணி பாண் ரோஸ்ட்டை எடுத்து வைத்தார். இவள் ரொட்டியும் கிழங்கு கறியும்.
"மதியம் சமைச்சிங்களா?"
"ஓம்.."
"இண்டைக்கு என்ன நாள் எண்டு நினைவிருக்கு தானே.."
"மறப்பனா அக்கா? ரிமைன்டர் வச்சிருக்கன்"
"நினைவிருந்தா சரி! ஷாலுவுக்கும் பாலுவுக்கும் நான் பதில் சொல்ல ஏலாது.."
"அக்கா, பாலாண்ணாக்கு தெரியுமா??"
"என்ன?"
சொல்லாமல் இருக்க மாட்டார் கணவரிடம் எதையும் மறைத்ததில்லை என்று தெரிந்தும் என் முன் கதை என்று கேட்க எடுத்தவள் வாய் வராமல் வாய் அடைத்தாள்.
வரோதயன் உட்பிரவேசித்திருந்தான். ரமணி இவளுடைய பாவனை பார்த்து திரும்பினார்.
"வாங்க வரா.."
பிரார்த்தனாவைப் பார்த்துக் கொண்டே ரமணி அருகில் அமர்ந்தான்.
"சாப்பிடுங்களன்.." பாக்சை அவனுக்கும் சேர்த்து நகர்த்தினார்.
"தனா ரொட்டி எடுத்து வந்திருக்கா. நல்லா இருக்கு சாப்பிட்டு பாருங்க"
"நீங்க சொல்றிங்க.. சம்பந்தபட்டவங்க கதைக்கிறாங்க இல்லையே"
இமை படபடத்தவள் தனது பொதியை அவனுக்காக தள்ளினாள்.
"இல்ல பரவால்ல. நான் சாப்பிட்டன். நீங்க சாப்பிடுங்க.."
"அக்கா நான் முடிச்சிட்டன். சாப்பிட்டு வாங்க நீங்க" ரமணி புறம் தள்ளி வைத்து எழுந்தவள் கை கழுவ, வரோதயன் முகம் சுண்டிப் போனது. இப்படி பாதியில் எழுவாள் என்பதை ரமணியும் எதிர்பார்க்கவில்லை.
"பிரார்த்தனா.. நீங்க இருந்து சாப்பிடுங்க. நான் போறன்.." என எழுந்தவன் கிளம்பி விட்டான்.
கவலையாக இருந்தது. "நீங்க சாப்பிட்டு வாங்கக்கா" என்று நகர்ந்தவளை பிடித்து அமர்த்திய ரமணி "என்ன நினைச்சிட்டு இருக்கிறிங்க பிள்ள நீங்க? நல்லவன் ஒருத்தன் வலிய வலிய வந்தா பிடிக்காதென உங்களுக்கு?" என்று ஆவேசப்பட்டார்.
"அக்கா!"
"ஏன் இப்ப அந்தப் பெடியன ஏய்க்கிறிங்க?"
"ஏய்க்கிறனா.. நானா?"
"நீங்க தான். ரெண்டு நாளா பாத்துட்டு தான் இருக்கிறன் இங்க.. அது உங்களோட கதைக்க ஒரு சந்தர்ப்பம் அமையாதா எண்டு முகத்த முகத்த பார்த்துக் கொண்டு சுத்திச் சுத்தி வருது. நீங்க வேணும் எண்டு அலைய விடுறிங்க"
"அக்கா!!" பிரார்த்தனா விக்கித்தாள்.
"ஓம்! சரியா தான் கதைக்கிறன் நான். இப்ப ஏன் அவர் இங்க வந்தார் எண்டு உங்களுக்கு தெரியுமா தெரியாதா? உங்களோட கதைக்க தானே வந்தார்.. படக் எண்டு எழும்பி கை கழுவுறிங்க?"
"ரமணி நான்.."
"ஏன், அது என்ன சொல்ல வருது எண்டு ஒரு நிமிஷம் கதைக்க வாய்ப்பு குடுத்தா என்ன? அப்புடி என்ன பிடிவாதம் உங்களுக்கு? அவர் செய்த உதவி எல்லாம் மறந்துட்டிங்களா?"
பிரார்த்தனா முகத்தில் அறைய வாங்கியது போல விழித்தாள்.
"உங்களுக்கு வடிவா தெரியும், அது என்ன கதைக்க போகுது எண்டு. மரியாதைக்காவது காது குடுத்தா என்ன தனா.. ஏன்? பிடிக்கல்லயா? பொறுமையா, சொஃப்டா, சிரிச்ச முகமாக, அப்பாவியா வந்தா பெடியங்கள பிடிக்காது என உங்களுக்கு? படிக்கிற பிள்ளைய ரோட்ல மறிக்கிறவன், அடாவடி பைக்ல ஏத்திட்டு ஊர் சுத்துறவன், சரி எது பிழை எது எண்டு யோசிக்கவும் காலம் தராமல் தன்ர இச்சைக்கு கல்யாணம் செய்றவன், போற போக்குல கண்ண மூடி கண்ண திறக்கிறதுக்குள்ள வாழ்க்கைய முடிச்சிட்டு போறவன தானே உங்களுக்கு பிடிக்கும் என?"
விக்கித்து உட்கார்ந்து இருந்தாள் பிரார்த்தனா.
"அக்கா, நீங்களா கதைக்கிறிங்க? அப்டியா நினைச்சிட்டு இருக்குறிங்க என்னப் பற்றி.."
"நான் கேக்குறதுல என்ன பிழை? வரோதயன்ல அந்தளவுக்கு மரியாதை இருக்கு எனக்கு. எனக்கே அந்த பெடியன்ர முகம் பார்க்க பாவமா இருக்கு. எவ்வளவு நாளா பேக் காட்டுறிங்கள்.."
"அக்கா, உங்களுக்கு தெரியாது.. அவருக்கு வீட்டுல கல்யாணம் பார்த்துட்டாங்கள்.."
"என்ன சொல்றிங்க?" ரமணி அலட்சியமாகவே வினவ,
கோயிலில் வரோதயனின் தாய் காமாட்சி அம்மையாரை சந்தித்ததை சொன்னவள் "நாங்க ரெண்டு பேரும் கதைக்க என்ன இருக்கு அக்கா? விலகிப் போறன் நான்"
"இதெல்லாம் நம்புற மாதிரி இல்ல. நீங்க வரோதயனுட்ட கேளுங்க.."
"இல்லக்கா.. கேட்க வேணாம். அதுக்கு அவசியம் இல்ல.. கல்யாணத்துல நான் பட்ட சூடு ஆயுளுக்கும் போதும். புது பிள்ளைக்கே கல்யாணம் செய்ய குணம் குடும்பம் சீதனம் எண்டு ஆயிரம் சிக்கல் இருக்கு. எனக்கு என்ர குடும்பம் இருக்குற நிலவரத்துல இன்னொரு கல்யாணமா.. இன்னொரு அடியத் தாங்குற சக்தி இல்லக்கா. என்ன விடுங்க நிம்மதியா இருக்க விடுங்க ஜோடி சேர்க்கிறன் எண்டு நீங்களும் உங்கட பங்குக்கு வேதனை படுத்தாதிங்க ரமணி"
உணர்ச்சி வசப்பட்ட பெண்ணை அதற்கு மேல் வற்புறுத்துவதற்கு தகுந்த இடம் அதுவல்ல என்று விட்டு விட்டார் ரமணி.
ஆளுக்கு ஒரு விதத்தில் மனம் கனத்தது.
'அது என்ன சொல்ல வருது எண்டு ஒரு நிமிஷம் கதைக்க வாய்ப்பு குடுத்தால் என்ன? அப்புடி என்ன பிடிவாதம், அவர் செய்த உதவி எல்லாம் மறந்துட்டிங்களா?' என்று ரமணி கேட்டது ஒலித்துக் கொண்டே இருந்தது.
நன்றி உணர்ச்சியுடன், குற்றவுணர்வும் மேலோங்க, இன்னும் என்னென்னவோ பிரார்த்தனாவின் மனதை அழுத்தியது.
ஓஃபிஸ் விட்டு போனதும் உடை மாற்றி வெளிக்கிட்டாள். மூன்று வருடங்களாக அழைப்பு இல்லாமல் அவள் ஆஜர் ஆகும் ஒரே ஒரு விசேஷ தினம் ரமணியின் மகள் ஷாலினியின் பிறந்த நாள். அது இன்று தான்.
ஷாலினி ஒரு செல்லக் குமர் பிள்ளை அது. பதினெட்டாவது பிறந்த நாளையும் வழக்கம் போல கேக் வெட்டி கொண்டாடுவாள். அவள் நண்பர்களுடன் ரமணியின் நெருங்கிய நட்பு வட்டமும் அழையாமல் கூடி விடும். அம்மா பிள்ளை இருவரும் பழகும் விதம் அப்படி.
நிலானி வாங்கித் தந்த அதே சுடிதாரை அணிந்து தயாரானாள் ராஜேஸ்வரியிடம் சொல்லி விட்டு கிளம்பினாள்.
வாசலிலேயே "தனாக்கா!" என செல்லச் சிணுங்கலுடன் வரவேற்றாள் ஷாலு.
கை குலுக்கி அணைத்து "மெனி மோர் ஹெப்பி ரிட்டர்ன்ஸ் ஓஃப் த டே.." வாழ்த்தினாள்.
"தாங்க் யூ அக்கா. வடிவா இருக்கீங்க இந்த ட்ரெஸ்ல"
"அப்ப ட்ரெஸ் தான் வடிவா?"
"இல்லக்கா, நீங்க வடிவாருக்கிங்க. அதால ட்ரெஸ் வடிவாருக்கு"
அந்தப் பிள்ளையுடன் மாத்திரம் கலகலப்பாக பேச்சு வந்து விழும் பிரார்த்தனாவுக்கு. தன் சோகம் துக்கம் எல்லாம் வெளிப்படாமல் வயது குறைந்து இனிதாக பழகுவாள்.
"இது புடிக்குமோ தெரியல்ல ஷாலு"
அவளுக்கென வாங்கி வந்த பரிசுப் பொருளை கொடுக்க, அங்கேயே பிரித்தாள் ஷாலு.
"ம்ம் புடிச்சிருக்கு"
"உண்மையா?"
"ஓம் அக்கா! எனக்கு டெடி மட்டும் எத்தின தந்தாலும் புடிக்கும். உள்ள வாங்க நீங்க" இடை உயர கரடி பொம்மையை அணைத்துக் கொண்டு பிரார்த்தனாவை அழைத்துச் சென்றாள்.
ஹாலில் பாலசுப்பிரமணியத்துடன் வரோதயன் அமர்ந்திருந்தான் கதை பேசியபடி.
கால்கள் பின்ன ஸ்தம்பித்தவள் பொத்தம் பொதுவாக சம்பிரதாயமாக புன்னகைத்தாள்.
"வாங்க தனா.." உற்சாக வரவேற்பு அளித்தார் பாலு. "எப்பிடி பிறகு?" என்று வளவளத்தார்.
உள்ளிருந்து ரமணி வந்தார் "வாங்க தனா.. நீங்களும் கரடி தானா. இண்டைக்கு மட்டும் எத்தின கரடி. கரடி கண்காட்சி நடத்தலாம். வாய பார்த்து நிக்காம வாங்க பாலு. ஹெல்ப் பண்ணுங்க எனக்கு" பரிசாக வந்துள்ள கரடி பொம்மைகளை கிண்டல் அடித்தவர் பாலுவை கேக் வெட்டும் ஏற்பாட்டுக்கு அழைத்து போனார்.
இன்னும் யார் யாரோ வந்தனர். போயினர். அம்மா அப்பா மகள் பிறர் என கலகலப்பாக இருந்த ஹாலில், ஒரு கட்டத்தில் எல்லாரும் தலைமறைவானது போல், அவளும் வரோதயனும் மாத்திரம் தனித்து விடப்பட்டது போல் தோன்றியது பிரார்த்தனாவுக்கு.
"எப்டி போவிங்க இதுக்கு பிறகு?" வரோதயன் கேட்டான்.
'அது என்ன சொல்ல வருது எண்டு ஒரு நிமிஷம் கதைக்க வாய்ப்பு குடுத்தால் என்ன? அப்புடி என்ன பிடிவாதம், அவர் செய்த உதவி எல்லாம் மறந்துட்டிங்களா?'
கையில் உள்ள சிற்றுண்டி ட்ரேயை குறு மேசையில் வைத்தவள் "இங்க இருந்து வெளிக்கிடவே பத்து பத்தரை ஆகும். பாலாண்ணா தான் வழமையா ட்ராப் பண்றவர்.. "
"இண்டைக்கு நான் விட்டுட்டு போகவா?"
"இல்லப் பரவால்ல, உங்களுக்கு ஏன் கஷ்டம்?'
"எனக்கு கஷ்டம் இல்ல. விருப்பமா தான் கேக்குறன்.."
தடக் தடக் என இதயம் அடிக்க "வடிவான பிள்ளை உங்களுக்கு பேசி இருக்கிற பிள்ளை.. ஜோடி பொருத்தம் நல்லா இருக்கும்.." என்றாள் வரவழைத்த புன்னகையுடன்.
"விளங்கேல்ல! யாரப்பற்றி கதைக்கிறிங்க?"
"உங்களுக்கு கல்யாணம் பேசி இருக்கிற பிள்ளைய பார்த்தன். கோவில்ல உங்கட அம்மாவோட வந்திருந்தாங்க.."
"கோயில்.. காளி கோவில்லயா? அம்மாவோட வந்திருந்த யாரு, அச்சுவ சொல்றிங்களா?"
"அவ தானே நீங்க கட்டப் போற பிள்ள?"
வரோதயன் சிரித்தான். "அது ராசுவுக்கு பேசி இருக்கிற பிள்ளடாபா.. பஞ்சுட தங்கச்சி.."
பட படவென இமை தட்டியவள் "உங்களின்ர அம்மா அந்தப் பிள்ளைய மருமகள் எண்டு சொன்னாங்களே.."
"ஓம்! அம்மாட தம்பிட பிள்ளைகள் தான் பஞ்சலிங்கம் அர்ச்சனா ரெண்டு பேரும்"
பிரார்த்தனா அசடாக விழிக்க, விரோதயன் முறுவலித்தான்.
"உன்னோட வேலை செய்ற பிள்ளையும் கோயிலுக்கு வந்திருந்தா, அவங்கட அம்மாவோட எண்டு அம்மா சொன்னாங்க தான். அது நீங்களா இருப்பீங்க எண்டு நினைக்கல்ல நான்.." என்று ஜாலியாக சொன்னவன், "அம்மா உங்களோட என்ன கதைச்சாங்க எண்டு தெரியாது, நான் கல்யாணம் செய்ய ஓம் சொன்னது அவங்களுக்கு சந்தோஷம்.. அதுக்கு தான் கோயிலுக்கு வந்திருந்தாங்க. நான் கல்யாணத்துக்கு ஓம் சொன்னதும் உண்மை தான்.. அத உங்கள மனசுல வச்சி தான் சொன்னன் பிரார்த்தனா.."
பிரார்த்தனா வரோதயனின் கண்ணையே பார்த்தாள். அந்த விழி ஆழத்தில் ஆட்டம் கண்டாள்.