• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நின் மத்தம் : 13

STN - 57

New member
அவளை வீட்டிற்கு அழைத்து வந்து அவளின் அன்னை திட்டுவதை கூட பார்க்க முடியாமல், அவரிடமிருந்து காப்பாற்றி அவளை அறைக்கு அனுப்பி வைக்க அவளும் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.
அவனும் வந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு பால்கனியில் சென்று நின்று விட்டு
சிறிது நேரம் கழித்து உள்ளே வந்து அவளை பார்த்து, "என்கிட்ட உன் ப்ரோப்ளம் சொல்ல கூட மாட்டியா " என்று தூங்கி கொண்டிருக்கும் அவளிடம் கேட்டான்.
ஆனால், அதை நல்ல முறையில் கேட்க தவறிவிட்டோமோ என்று ஒரு நிமிடம் கூட அவன் யோசித்துப் பார்க்கவில்லை...
அவளிடம் கேட்டு சோபாவில் படுக்காமல் கட்டிலின் அந்த புறம் வந்து படுத்துக்கொண்டான்.
காலை பொழுது அழகாக விடிய அவன் எப்போதும் போல விடியற்காலையிலேயே எழுந்து தன் வேலைகளையும் முடித்துவிட்டு கீழே வர பெரியவர்கள் எல்லோரும் அமர்ந்திருந்தனர் அவர்கள் முன்பு வந்து ஒரு பத்திரத்தை எடுத்து கீழே வைத்து தன் அம்மாவிடம், "அம்மா அவளுக்கு வேலை போயிடுச்சு," என்றான்.
அதில் மூவரும் அதிர்ச்சியாகி "என்னப்பா" சொல்ற என்று கேட்டனர்.
"அது ஏதோ சின்ன பிராப்ளம் போல வேலை போயிடுச்சு அவ என்கிட்ட சொல்லல அவளோட பிரண்டு தான் என்கிட்ட சொன்னாங்க... அதுதான் இனிமே யார்கிட்டயும் போய் வேலை பார்க்க வேணாம்னு சொல்லி, அவ பேருல ஒரு கிளினிக் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்
இது அவளுக்கு தெரியாது எல்லா வேலையும் முடிச்சுட்டு நான் சொல்றேன் அப்ப சொல்லிக்கலாம்" என்றான்.
அவர்களும் அவன் சொன்னது போலவே செய்ய முடிவு செய்தனர்.
தான் வந்த வேலை முடிந்து விட்டது என அவன் அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான்.
அவன் சொன்ன இந்த மகிழ்ச்சியான செய்தி மீனாட்சிக்கும் சுந்தரத்திற்கு ஆனந்தத்தைத் தவிர அந்த ஆனந்தம் கண்களில் கண்ணீராய் வந்தது.
"ஏன் அண்ணா இப்படி" என்றார் சுசீலா!!
"இல்லம்மா அவ கல்யாணமே பண்ணிக்க மாட்டானு நினைச்சேன் அவ வாழ்க்கை எப்படி இருக்கணும்னு ரொம்ப கவலையா இருந்தது ஆனா இப்படி ஒரு நல்ல குடும்பத்தில் கல்யாணம் பண்ணி நல்லா இருக்குன்னு நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்குமா,
நாங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா, திருநள்ளாறு கோவில் வருவதா வேண்டுதல் இருந்தது இப்ப இன்னும் நல்ல செய்தி கிடைத்து இருக்க அதனால் தள்ளி போடாமல் இன்னும் ரெண்டு ஒரு நாளில் அந்த கோவிலுக்கு போயிட்டு வரலாம் என்று இருக்கிறோம் மா, நீயும் வாயேன் என்று அழைத்தார்.
"இல்லை அண்ணா இப்ப நீங்க நல்லபடியா போயிட்டு வாங்க, அவங்க வாழ்க்கை இன்னும் சிறப்பானதா அமைந்து பேரன் பேத்தி வந்த உடனே எல்லாருமா போகலாம்" என்று சொல்லவும் அதுவும் அவர்களுக்கு சரி என பட இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் இருவரும் திருநள்ளாறுக்கு சென்றனர்.
அவன் அவளுக்காக சிறிய மருத்துவமனைக் கட்டிக் கொண்டிருக்க அது தெரியாமல் அவள் வேறு மருத்துவமனைகளில் வேலை தேடி அலைந்து கொண்டிருக்க ஒரு புறம் இன்பராஜ் அவளுக்கு எங்கும் வேலை கிடைக்காமல் செய்து கொண்டிருந்தான்.
அவன் செய்யும் சதி தெரியாமல் இவளும் மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தாள்.
ஆனால் செந்தூரனுக்கு எப்போதும் இன்பராஜ் மீது ஒரு கண் இருக்க அவனை ஒரு முறை ரகசியமான இடத்திற்கு பெண் போல் பேசி வரவழைத்து அடித்து கை கால்களை உடைத்து அவன் மருத்துவமனையில் சேர்த்து விட்டு, "இனி என் மானுக்கு ஏதாவது தொந்தரவு தந்த அவ்வளவு தான்" என்று தன்னை மீறி அவளை என் மானு என்றுக் கூறி அவனை மிரட்ட
"அவனும் இனி அவள் பக்கம் திரும்ப மாட்டேன்" என்று செந்தூரிடம் சொல்லிவிட அந்த பிரச்சனை அதோடு முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
அப்போது அவள் வேலை தேடி கிடைக்காததால் அந்த வேதனையில் வந்துக் கொண்டியிருக்க அப்போது அவளின் கல்லூரி நண்பன் வர வண்டியை நிறுத்தி விட்டு அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவன் இன்பராஜை மிரட்டி விட்டு வெளியே வரும் போது இதை பார்த்தவனுக்கு 'நாம இவளுக்காக பார்த்து செஞ்சா இவ பாரு யாரு கூடவோ நின்னு பேசிட்டு இருக்கா' என்று சம்மந்தமே இல்லாமல் கோவம் வந்தது.
அவனுக்கு யாரு மீதும் சந்தேகப்படும் குணம் இல்லை ஆனால், இவளிடம் மட்டும் ஏன் இந்த உணர்வு என்று அவனுக்கே தெரியாமல் தவித்தான்.
'என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதே இந்த மாதிரியான சலுகைகள் கிடைக்க தானே அப்பறம் ஏன் எல்லார் கூடவும் இப்படி நடந்துக்கிறா? இறுதியாக அவள் பணத்துக்காக தான் எல்லாம் செய்கிறாள் ' என்று அவனே ஒரு முடிவு செய்துக் கொண்டு எப்போதும் போல திட்டிக் கொண்டே காரில் ஏறி சென்று விட்டான்.
அவன் அலுவலகத்திற்குச் சென்று ஒருவேளை ஆகாததால் வீட்டிற்கு வர அவள் வண்டி அங்கே இருந்தது. வேகவேகமாக தன்னறைக்கு வந்து தன் அவன் உடையை மாற்றிக் கொண்டு அவளை தேட வேலை கிடைக்காத விரக்தியில் பால்கனியில் இருக்கும் நாற்காலியில் அமர அவள் முன் வந்து ஒரு பத்திரத்தை போட்டான்.
அவள் எதுவும் பேசாமல் என்ன என்பது போல் பார்த்தாள்.
"இது உன் பேர்ல நான் கிளீனிக் கட்டுற பத்திரம் " என்று சொன்னான்.
"இது எதுக்கு" என்று கேட்டாள்.
"நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது பணத்துக்காகவும் இந்த மாதிரி ஏதாவது பெனிபிட் அடையவும் தானே அப்பறம் ஏன் வெளிய போய் கண்ட கண்ட பசங்க கூட எல்லாம் திரிந்து வேலை தேடற மாதிரி நடிக்கிற அதனால் இதை எடுத்துட்டு என் ஹாஸ்பிடல் ஓனருன்னு சொல்லிக்கோ" என்றான்.
அவள் எதுவும் பேசாமல் உள்ளே நுழைய அவள் கை பிடித்து இழுத்து "நான் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு போயிட்டு இருந்தா என்ன அர்த்தம்" என்று கேட்டான்.
"எனக்கு இதுல விருப்பம் இல்லை என்று அர்த்தம்" என்று சொன்னாள்.
"நீ ஒரு நல்ல ஆப்பர்சூனிட்டியா மிஸ் பண்ற கூச்சப் படாமல் எடுத்துக்கோங்க இது தானே உன்னோட பிளான்" என்றான்.
"உங்களை எனக்கு ஒரு இந்த நாலு தெரியுமா அதுக்கு முன்னாடி நீங்க யாரோ நான் யாரோ, அதுக்கு முன்னாடியும் நான் வேலைக்கு போய்ட்டு தான் இருந்தேன் இப்பவும் எனக்கு ஒரு வேலை தேடிக்க தெரியாதா இந்த வேலை அதனால் எனக்கு இது எதுமே வேண்டாம்" என்றாள் .
அவன் அமைதியாக, "அப்போ வேற இப்போ வேற இதை எடுத்துக்கோங்க" என்று கூறி நக்கலாக சிரித்தான்.
அவளுக்கு தெரியாமலும் ஏன் அவனுக்கே ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் நன்மைகள் செய்பவன் அவளிடம் மட்டும் ஏன்? இப்படி வார்த்தைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறான் என்பது அவனுக்கே தெரியவில்லை....
அந்த சிரிப்பில் கடுப்பானவள் அந்த பத்திரத்தை எடுத்து கிழித்து எரிந்து விட்டு, " எனக்கு உங்க சொத்தும் வேண்டாம், உங்க பணமும் வேண்டாம் எனக்கு வேலை பார்த்துக்க தெரியும்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று படுத்துக் கொண்டாள்.
அவள் அந்த பத்திரத்தை கிழித்து எரிந்தது அவனுக்கு கோவம் வர தூங்கிக் கொண்டிருந்தவளை அப்படியே அவள் திமிர திமிர அள்ளித் தூக்கி வந்து பால்கனியில் விட்டு, "இந்த பேப்பர் எல்லாம் ஒன்னு விடாமல் கிளீன் ஒட்டி எடுத்துட்டு வந்து சைன் போடுற " என்றான்.
"என்னால் அதை எடுக்கவும் முடியாது, சைன் பண்ணவும் முடியாது உங்க பணம் எதுவும் எனக்கு தேவையில்லை என்று அங்கேயே நின்றிருக்க அப்ப நீ இங்கேயே நில்லு" என்று சொல்லிவிட்டு வந்து பால்கனியின் கதவை சாற்றி விட்டான்.
"என்னை ஏன் இப்படி படுத்தி எடுக்குறீங்க" என்று கேட்டாள்.
" ஏன் உனக்கு தெரியவில்லையா? " என்றான். ஆனால் அவனுக்கே அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் தான் வேறு ஏதோ செய்து கொண்டிருக்கிறான் பித்தன் போல்,,
அவள் பிடிவாதமாக நிற்க உள்ளே வந்த அடுத்த நொடியே மீண்டும் வெளியே சென்று அவளை எப்படி தூக்கி வந்தானோ அப்படியே தூக்கிக் கொண்டு கட்டிலில் போட்டுவிட்டு அவன் அந்த பக்கம் படுத்தான்.
அவனை அவள் விசித்திரமாக பார்த்தாள். அதை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் அவளுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டான்.
இன்று முழுவதும் வேலைக்காக அலைந்தது அவளுக்கும் உடல் சோர்வு எடுக்க அவளும் அவனுக்கு முதுகு காட்டி படுத்து உறங்கி விட்டாள்.
எல்லா நாளும் போல இந்த நாளும் சூரியன் யாருக்காவும் காத்திராமல் காலைப்பொழுது விடிய அவனும் அவன் வேலையை பார்த்து சென்று விட்டான்.இவளும் நீ ஒரு புதிய மருத்துவமனைக்கு சென்றாள்.
அந்த மருத்துவமனை இன்பராஜ் எந்த சாதியும் செய்யாததால் அவளுக்கு உடனடியாக வேலை கிடைத்து விட்டது.
முதல் முதலில் சென்று வேலை கிடைத்தை விட இந்த வேலை அவனுக்கு மிகவும் பிடித்தது எதையோ சாதித்த உணர்வு அவளுக்குள் வந்தது.
அதனால் வரும்போது இனிப்பை வாங்கிக் கொண்டு வந்து சுசிலாவிற்கும் செந்தூருக்கும் கொடுத்தாள்.
சுசிலாவும் அவளுக்கு எடுத்து ஊட்டி விட்டு இப்போ போல எப்பவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொன்னார்.
அப்படியே கோவிலுக்கு சென்ற தன் தாய் தந்தைக்கும் அழைத்து சொல்லிவிட அவர்களும் மகிழ்ச்சியாக இன்னும் இரண்டு கோவிலை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி அழைப்பை துண்டித்து விட்டனர்.
அப்போது அலுவலகத்திலிருந்து செந்தூரன் வர அவனுக்கும் இனிப்பை கொடுத்தால் ஆனால் அவனிடம் கொடுக்கும் போது மட்டும் கம்பீரமாக அந்த இனிப்பு கொடுத்தாள்.
அது நிச்சயம் திமிர் அல்ல தன் சுயமரியாதையை காப்பாற்றிக் கொண்ட ஒரு திருப்தி.
அவனும் இனிப்பை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.
இன்று புதிய மருத்துவமனைக்கு பணிக்கு செல்வதால் விறுவிறுப்பாக கிளம்பி சுசீலாவிடம் சொல்லி விட்டு சென்று அந்த மருத்துவமனை நடைமுறைகளை கேட்டு தெரிந்து கொண்டு தன் பணிகளை முடித்துவிட்டு கிளம்பும் நேரம்,
அவளுக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது இரண்டு முறை தவிர்த்து விட்டாள்.
மூன்றாவது முறை வேறு வழியில்லாமல் எடுத்தவளின் முகம் ரத்தம் நாளங்கள் எல்லாம் வற்றி வெளிறியது, அப்படி யார் அழைத்திருப்பார்கள் பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்...
கதையின் போட்டு எப்படி இருக்குன்னு, உங்கள் விமர்சனங்களையும் மதிப்பீட்டுகளையும் கொடுத்துவிட்டு செல்லுங்கள்...
 
Top Bottom