புதிய மருத்துவமனைக்கு சென்று தன் பணிகளை முடித்து விட்டு கிளம்பும் நேரம் அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது அதை இரண்டு முறை தவிர்த்து விட்டு கிளம்ப மூன்றாவது முறையும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வர வேறு வழியில்லாமல் அதை எடுத்து காதில் வைத்து, " சொல்லுங்க" என்றாள்.
மறுமுனையில் பேசியவரோ "எத்தனை முறை உனக்கு போன் பண்றது போன் பண்ணா ஒரு எமர்ஜென்சிக்கு எடுக்க மாட்டியா மீனாட்சி, சுந்தரம் அவங்க ரெண்டு பேரும் உன்னோட அப்பா, அம்மா வா அவங்களுக்கு இங்க காஞ்சிபுரம் இருந்து சென்னைக்கு வர வழியில் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு, திருவள்ளூர் ஜி.எச்.ல சேர்த்து இருக்கேன் லொகேஷன் அனுப்புறேன் சீக்கிரமா வா மா " என்று சொல்லிவிட்டு வைத்து விட்டார்.
இவளுக்கு அதை நம்புவதா இல்லை வேண்டாமா என்று இருந்தது. ஆனால், தன் 'பெற்றோர் பெயர் சரியாக தானே சொன்னாங்க அதை எப்படி நம்பாமல் இருக்க முடியும் அதனால், இன்னொரு முறை அந்த நம்பருக்கு போன் பண்ணி கேட்கலாமா' என்று யோசித்தவள் உடனே அழைத்து தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு, "சார் நீங்க எங்க இருக்கீங்க இப்ப எங்க அம்மா எங்க அப்பா எப்படி இருக்காங்க " என்று கேட்டாள்.
"நான் திருவள்ளூர் கான்சிடபிள் தான் பேசுறேன் கொஞ்சம் சீரியஸா தான் இருக்காங்க சீக்கிரமா வாங்க" என்று சொல்லிவிட்டு ஒரு நிமிடம் அமைதி காத்து, "எப்போ வேணாலும் இந்த நம்பருக்கு கூப்பிடுங்க நான் உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் பண்றேன்" என்று சொல்லி வைத்து விட்டார்.
அதன் பிறகு அவளுக்கு யாருக்கு சொல்வது கூட தெரியவில்லை, இதுவரை யாரிடமும் உதவி என்று கேட்டு நின்றதில்லை கல்லூரியில் படிக்கும் போது கூட யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல் தன்னால் முடிந்தவரை தன்னை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.
அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு துணை அவளுடைய தாய் தந்தை மட்டுமே, இன்று அவர்களுக்கே ஒன்று என்றவுடன் அவளால் எதுவும் செய்ய முடியாமல் மூளை கூட செயலிழந்து விட அங்கிருக்கும் நாற்காயில் தொப்பென அமர்ந்து விட்டாள்.
அவள் கண்களை தாண்டி கண்ணீர் வந்து கொண்டிருக்க தன் கண் கண்ணாடியை கழட்டி விட்டு அதை துடைத்துக் கொண்டு,
" நம்மளை நாம தான் பார்த்துக்கணும்" என்று யோசித்து தைரியம் வரவழைத்து எழுந்து நின்ற போதும் அவள் கால்கள் பின்னிக்கொண்டு நடக்க கூட முடியாமல் இருந்தாள்.
அப்போது சுசிலா அவளுக்கு அழைத்து, "கிளம்பிட்டியாமா" என்று கேட்டவுடன் தன் மனக்குமரலை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருக்கும் போது கிடைத்த வடிகால் போல நினைத்து "அம்மா " என்று அழைத்து விட்டாள். ஆனால் அடுத்து வார்த்தை பேச முடியாமல் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
எப்போதும் உற்சாகமாக வரும் வார்த்தை என்று கமரும் குரலில் வரவும், "என்னாச்சும்மா ஏதாவது பிரச்சனையா " என்று கேட்டார்.
"அம்மா, அப்பா " என்று மீண்டும் திக்கித் திணறினாள்.
"அப்பா அம்மாக்கு என்ன ஆச்சுமா போன் எதுவும் பண்ணி இருந்தாங்களா!" என்று அவர் பதறிக் கொண்டு கேட்டார்.
அவள் ஒரு நொடி என் தன்னை தானே நிதானப்படுத்திக் கொண்டு "அப்பா அம்மாக்கு சின்ன ஆக்சிடென்ட் ஆயிடுச்சாமா கா கா காஞ்சிபுரம் தாண்டித் திருவள்ளூரில் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்களாம், அங்க இருக்க டிராபிக் கான்ஸ்டபிள் போன் பண்ணி இருந்தாரு எனக்கு யார்கிட்ட எப்படி போய் சொல்றதுன்னு தெரியலமா" என்று குழந்தைத்தனமாக சொன்னாள்.
அதைக்கேட்டு அவருக்கே ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து இப்போது நாமும் பதட்டப்பட்டால் அவள் மேலும் பதற்றப்படுவாள் என்பதால், " அவங்களுக்கு ஒன்னும் ஆகி இருக்காது மா நீ பயப்படாத நான் செந்தூரன் கிட்ட சொல்றேன் அவன் பார்த்துப்பான் அவனுக்கு திருவள்ளூரில் தான் மீட்டிங் நீ இப்போ
அந்த நம்பர் மட்டும் எனக்கு மெசேஜ் பண்ணிவிடு நான் செந்தூரனுக்கு சொல்லிடுவேன் பயப்படாம நீ உன் வண்டிய ஹாஸ்பிடல் விட்டுட்டு கேப் புக் பண்ணி வீட்டுக்கு வந்துவிடு" என்றார்.
"அம்மா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலம்மா" என்றாள்.
"சரி நீ அங்கேயே இரு நான் உடனே நம்ம கார் எடுத்துட்டு ஹாஸ்பிடல் வந்து உன்னை கூட்டிட்டு அப்படியே போகலாம் " என்று சொன்னார்.
அவருடைய எண் வந்ததும் தன் மகனுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல அவன் அந்த எண்ணுக்கு அழைத்து உடனடியாக தன்னுடைய அலுவலகப் பணியை ஒதுக்கி வைத்து விட்டு, கிளம்பி வந்து அவர்களை அரசு மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்து திருவள்ளூரில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் சேர்த்தான்.
சுசீலா சொன்னது போலவே காரைக் கொண்டு வந்து அவளை மருத்துவமனையிலிருந்து அழைத்துக் கொண்டு, திருவள்ளூரில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவுடன் செந்தூரனுக்கு அழைத்து, " நாங்க வந்துட்டோம் பா நீ எங்க இருக்க " என்று கேட்டார்.
"அம்மா நான் அவங்களை ஹாஸ்பிடல்ல சேர்த்திட்டேன் எமர்ஜென்சியில ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு என்னோட ஷர்ட் எல்லாம் ரத்தமா இருக்குமா அவ பார்த்தால் இன்னும் பயப்படுவா நீங்க அவளை கூட்டிட்டு செகண்ட் ஃப்ளோர் காரிடோரில் வெயிட் பண்ணுங்க நான் வந்துடறேன் அப்படியே கொஞ்சம் பார்மாலிட்டிஸ் எல்லாம் இருக்கு முடிச்சுட்டு வந்துடறேன் மா," என்று சொன்னான்.
அவன் சொன்னது போலவே அவள் பயந்து இருந்தாள் கண்கள் கூட தெரியாத அளவிற்கு கண்கள் குளம் போல் கலங்கியிருந்தது அவளிடம் எதுவும் சொல்லாமல் அவள் கையை இறுக்கமாக பற்றி கொண்டு அவன் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அவள் அங்கிருக்கும் மருத்துவரிடம் சென்று கேட்டபோது கொஞ்சம் "சீரியஸ் கண்டிஷன் தான் வெயிட் பண்ணுங்க " என்று சொன்னதும் அவளுக்கு சிலை போலவே நின்று விட்டாள்.
அவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக அவளை அழைத்துக் கொண்டு நாற்காலியில் அமர வைத்தார்.
அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் யோசித்தார்.
அவனுக்கும் இந்த மாதிரி நேரத்துல எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியாதே என்ன பண்ணுவாங்கன்னு புரியலையே என்று அமைதியாக இருக்க செந்தூரன் வந்தான்.
அவனை கண்டதும் சுசிலா வேகமாக சென்று, " சீரியஸ் கண்டிசன் என்று சொல்றாங்க அப்பா அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுனே தெரியல ஒரு வார்த்தை கூட பேசல பா "என்று சொன்னார்.
"சரி இருங்கம்மா நான் பாத்துக்குறேன் " என்று சொல்லிவிட்டு அவளிடம் சென்று அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்து, "மனோ" என்று அழைத்தவுடன் தாயை தேடி செல்லும் சேயை போல அவனை இடையோடு கட்டிக் கொண்டு, சிறுபிள்ளை போல் அவர்களை அனுமதித்திருக்கும் அறையைக் காட்டி, " அம்மா, அப்பா " என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதாள்.
அவள் நன்றாக அழட்டும் என்று அவள் முதுகை மெல்ல வருடி கொடுக்க அழுகை விசும்பலாக மாறி அவள் அணிந்திருந்த கண்ணாடி கீழே விழுந்தது.
அதைப் பொருட்படுத்தாமல் அவளை நிமிர்த்தி அவள் கண்களை துடைத்து விடும் போது அவன் கண்களும் கலங்கி விட்டது.
அவனுக்கும் தன் அம்மாவை மிகவும் பிடிக்குமே தன் அம்மாவுக்கு ஒன்று என்றால் தனக்கு எப்படி துடிக்குமோ அப்படி தானே அவளுக்கும் இருக்கும் என்று உணர்ந்தனால்
அவன் கலங்கியது ஆனால் கண்ணாடி அணியாததால் அவளுக்கு எதுவுமே தெரியவில்லை அவன் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு, " இங்க பாரு அப்பா அம்மா எங்கேயும் போயிடல இங்கதான் இருக்காங்க என்ன நடந்தாலும் நான் இருக்கேன் கூட அழக்கூடாது மானு" என்றான்.
அவளுக்குத்தான் அவன் அழுவது தெரியாது ஆனால் சுசிலாவிற்கு நன்றாக தெரியுமே தன் மகனுக்கு இப்படி கூட ஒருவரிடம் அன்பும் அரவணைப்பும் காட்ட தெரியுமா? என்று அவருக்கு அதிசயமாக இருந்தது யார் மீது அதிக காதல் இருக்கிறதோ அங்கு தானே அன்பும் அரவணைப்பும் வரும்
பழகிய நாட்கள் குறைவு பார்த்த நாட்கள் குறைவாக இருக்கலாம் இப்போதுதான் காதல் வரவேண்டும் என்பது இல்லை அந்த காதலை உணர தானே நேரம் ஆகும் காதல் வர நேர நொடி பொழுது போதுமே!!
இருவரும் எப்போது அதை உணர்வார்களோ அது அவர்களுக்கே வெளிச்சம்....
அதே போல் காதல் என்பது ஒருவர் துயரத்தில் இருக்கும்போது இன்னொருவர் அணைத்து ஆறுதல் சொல்வது தானே!! அதே போல் தான் அழும் போதும் சிரிக்கும் போதும் யாரின் அருகாமை தேவைப்படுகிறதோ அது தானே காதல் அது இவர்களிடம் இருக்கிறது. ஆனால் அதை உணரத்தான் மறுக்கிறார்கள் பார்க்கலாம் உணர்வார்களா என்று
அவன் நான் இருக்கிறேன் என்று சொன்ன அந்த வார்த்தை அவளை ஆறுதல் படுத்தியதோ என்னவோ அவனை விட்டு விலகாமல் அவனை அணைத்துக் கொண்டு அமைதியாகவே இருந்தாள்.
அவள் அழுகையை நிறுத்தியவுடன் அவளை நிமிர்த்தி, "ஏதாவது சாப்டியா " என்று கேட்டான்.
வார்த்தைகள் இன்றி இல்லை என்பது போல் தலையை ஆட்டினாள்.
"சரி வா காபி குடிச்சிட்டு வரலாம் கொஞ்சம் தெம்பா இருக்கும்" என்றான்.
அவள் உதடுகளை பிதுக்கி, " எனக்கு வேண்டாம் எனக்கு அப்பா, அம்மா தான் வேணும் " என்றாள்.
இப்படி சொல்பவளை என்ன சொல்லி அழைத்து செல்வது என்று தெரியாமல், " இங்க பாரு அவங்க எங்கும் போக மாட்டாங்க நான் தான் சொல்றேன் இல்ல நான் சொன்னா கேட்பியா மாட்டியா? " என்று மாணவியை கண்டிக்கும் ஆசிரியர் போல் கேட்டான்.
அவளும் தன் முட்டக் கண்ணை விரித்து, "கேட்பேன் " என்றாள்.
"அப்போ எழுந்து வா போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வருவோம் நீ அழகுறதுக்காவது தெம்பு வேணும்ல அப்புறம் நீ மயங்கி விழுந்துட்டா டாக்டரை இன்னொரு டாக்டர் பாக்குற மாதிரி ஆயிடும்" என்றான்.
அதில் தெளிந்தவள் எழுந்து நின்று தடுமாறினாள்.
"என்ன ஆச்சு " என்றான்.
"கண்ணாடி " என்று கேட்கவும் தேடிப் பார்க்க அது அங்கு கீழே கண்ணாடி விழுந்திருந்தது அதை எடுத்து தன் சட்டையில் துடைத்து அவளுக்கு மாட்டி விட்டான்.
சுசிலாவிற்கு இந்த பத்து நாட்களாகத்தான் தன் மகனின் வாழ்வு சிறக்கும் என்று ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டிருந்தது இப்போது தெளிவாகவே புரிந்து விட்டது தன் மகன் தன் மனம் முழுவதையும் மான் விழியிடம் ஒப்படைத்து விட்டான்.
இனி அவன் வாழ்வு எப்பொழுதும் சிறப்பாகவே இருக்கும்.
அவளை மெல்ல அழைத்துச் சென்று கேன்டீனில் இருக்கும் உணவை வாங்கி கொடுத்து சாப்பிடும்போது கூட "அப்பா, அம்மாக்கு ஒன்னும் ஆகாது இல்லை" என்றுக் கேட்டாள்.
"ஒன்றும் ஆகாது சாப்பிடு" என்று சாப்பிட வைத்தான் அவர்கள் இருவரும் பிழைப்பார்களா பார்க்கலாம் என்று அத்தியாயத்தில்....