மான் விழியின் பெற்றோர்கள் எந்த குறைபாடும் இல்லாமல் சரியான பின் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து உடல் நலம் சரியாகும் வரை இங்கேயே இருக்க வேண்டும் என்று சுசிலா அன்பு கட்டளை இட அவர்களும் தங்கி விட்டனர்.
இவளும் இரண்டொரு நாட்கள் அவர்களை வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க சுசிலா அவர்களை தான் பார்த்துக் கொள்வதாகவும் மருத்துவமனைக்கு செல் என அனுப்பி வைத்து விட்டார் ஒரு வாரம் கழிந்தது.
அந்த ஒரு வாரமும் செந்தூரனுக்கும் மான் விழிக்கும் எந்த சண்டையும் இல்லாமல் அமைதியாக சென்று கொண்டிருந்தது ஆனால் இவள் மட்டும் அவனை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அன்று இரவு வேலையெல்லாம் முடித்துவிட்டு வந்து பால்கனியில் அமர்ந்திருக்க அவன் அருகினில் வந்து, "இங்க என்ன பண்ணிட்டு இருக்க," என்றான்.
திடீரென அவனின் குரல் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்து, "ஒன்னும் இல்ல சும்மாதான் உட்கார்ந்துகிட்டு இருக்கேன்" என்றாள்.
" சரி நேரமாச்சு பாரு வந்து படு என்றான்.
அவன் முன்னே செல்ல இவளும் பின்னே சென்றாள்.
அப்போது கால் தடுக்கி அம்மா என்று கத்தவும் உடனே திரும்பி, "என்ன ஆச்சு " என்று பதறினான்.
"ஒன்னும் இல்ல சும்மா கால் தான் ஸ்லிப் ஆயிடுச்சி" என்றுக் கூறி அவனை குறு குறுவென்று பார்த்தாள்.
அந்த பார்வையை அவனால் ஏற்க முடியாமல், "ஏய் முட்டைக் கண்ணி எதுக்குடி இப்படி பாக்குற " என்றான்.
"ஒன்னும் இல்லை, என்னை முட்டை கண்ணின்னு எல்லாம் கூப்பிடுற வேலை வச்சுக்காதீங்க" என்று சொல்லிவிட்டு வந்து படுத்து விட்டாள்.
"உண்மைய சொன்னா அப்படித்தான் கோவம் வரும்" என்று முணுமுணுத்துக் கொண்டு அவனும் வந்து படுத்து விட்டான்.
அவன் படுத்த வேகத்தில் தூங்கி விட இவளுக்கு தூக்கம் எட்டா கனியாகிவிட்டது.
அவனை திரும்பி பார்க்க காற்றில் அவனுடைய சிகை அசைந்தது அதை முதல்முறையாக தொட்டு, " எனக்கு எப்போ ஆபத்து வந்தாலும் காப்பாத்திடுவியா டா என்னை உனக்கு பிடிக்குமா? இல்லை பிடிக்காதா? என்றுக் கேட்டு விட்டு
ஆனால் இப்போ எல்லாம் எனக்கு உன்னை ரொம்ப புடிக்குது எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டு போக மாட்டா இல்லை ஆனால் உனக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு " என்று சொல்லும் போதே அவள் கண்களில் நீர் வந்தது. ஆனால் எனக்கு அது பத்தி எல்லாம் கவலை இல்லை... நீ என்னை திட்டிடே இருந்தாலும் என்னை சுத்தி தான் இருக்க... அது எனக்கு புரிது "
ஒரு நிமிடம் அவள் கண் முன் பழைய நினைவுகள் வர உடல் எல்லாம் நடங்கியது ஒரு அவன் கையைப் பிடித்துக் கொள்ள அவளுக்கு புது தைரியமும் தெம்பும் வந்தது.
அவள் கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்து விட்டு, " நான் அழ மாட்டேன் இனிமேல் நீயே என்னை போனு சொன்னாலும் உன்னை விட்டு நான் போக மாட்டேன்" என்று அவன் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள்.
நல்ல உறக்கத்தில் இருந்தவனுக்கு அந்த முத்தம் வானத்தை அண்ணாந்து பார்க்கும் போது வானிலிருந்து ஒரு ஒற்றைத் துளி நீர் நெற்றியில் பட்டு சில்லென்று வர அதை மெல்ல தன் கை கொண்டு துடைத்தான்.
அவன் கை நெற்றியில் பட்டதும் 'அய்யய்யோ எழுந்துட்டாரு போலையே ' என்று சற்று விலகி அமர்ந்து கொண்டாள். அவன் மீண்டும் தூங்க ஆரம்பித்ததும் மீண்டும் அவனருகில் வந்து அவன் முக வடிவை பார்த்தாள்.
கூர் நாசி கண்களை மூடியிருக்கும் இமை, அடர்த்தியான புருவம் தடித்த மீசை, எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் சிவந்த இதழ்கள் அந்த சிவந்த இதழ்களை பார்த்தவுடன், 'இது என்ன இவ்வளவு பிங்க் கலர்ல இருக்கு,' என்று யோசித்து அந்த இதழிலும் மெல்ல முத்தம் இட்டாள்.
சில நாட்களுக்கு முன் பெண் பார்த்து திருமணம் முடிந்து சாதாரணமாக குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்ன ஆண்மகனை விரட்டி அடித்தவளா இவள் என்பது அவளுக்கே ஆச்சரியமானது.
அவனை கண் கொட்டாமல் ரசித்துக் கொண்டே நீண்ட நாட்கள் கழித்து, தன் அலை பேசியில் ஒரு பாடலை போட்டாள்.
"வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே..
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உடலோடு உயிரை போலே உறைந்து போனதுதான் உறவே
மறக்காது உன் ராகம், மறுக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன்.. வா என் வாழ்வே வா..
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..
விண்ணோடும் நீ தான்....
அந்த வரிகளை பாடிக் கொண்டே அவன் முகத்தில் கோலமிட அப்போது அவன் அலை பேசி அலற மீண்டும் வந்து அதே இடத்தில் படுத்துக்கொண்டாள்.
இம்முறை அவன் எழுந்து அவளை எழுப்பினான். அவள் தூங்குவது போல் நடித்துக் கொண்டு, 'அச்சச்சோ நம்ப பண்ணதெல்லாம் அவருக்கு தெரிஞ்சிடுச்சோ' என்று பயந்து கொண்டு, " எழுந்து சொல்லுங்க" என்றாள்.
"என் கூட வா" என்று அழைத்தான்.
"எங்க கூட்டிட்டு போறீங்க " என்று பேசினாலும் அவன் கையை பிடித்துக் கொண்டாள்.
அவன் மெல்ல சமையலறைக்கு சென்று தான் வாங்கி வந்த கேக்கை எடுத்துக் கொண்டு, அவளின் பெற்றோரை அழைத்துக் கொண்டு, தன் அன்னையின் அறைக்கு அவரை எழுப்பினான்.
அவர் எழுந்து அமர்ந்ததும் அவரிடம் கேக்கை நீட்டி, " ஹாப்பி பர்த்டே மா திஸ் இஸ் ஃபார் யூ " என்று சொன்னான்.
ஒரு வருடா வருடம் நடக்கும் ஒன்றுதான், ஆனால் இந்த வருடம் அவர் ஆனந்தமாக இருந்தார். காரணம் அவனின் திருமணம், அவர் கண்களில் ஆனந்த கண்ணீருடன் கேக்கை வெட்டி தன் மகன், மருமகள் எல்லோருக்கும் ஊட்டிவிட்டார்.
அப்போதுதான் சுசிலாவின் என்பது பிறந்தநாள் தெரியும் என்பதால் "பார்த்தீர்களா அம்மா நீங்க கூட என்கிட்ட சொல்லவே இல்லை," என்று பொய் கோவம் கொண்டாள்.
"இல்லடா நானே அந்த நாள மறந்துட்டேன் இல்லனா உனக்கு சொல்லி இருப்பேன் "என்றார்.
"சரி இப்போ என்னால கிப்ட் வாங்கி தர முடியாது நாளைக்கு காலைல பத்து மணிக்கு எல்லாரும் கிளம்பி ஒரு இடத்துக்கு போலாம் அதுதான் நான் உங்களுக்கு இந்த பிறந்தநாள் பரிசு டன் " என்றாள்.
அனைவரும் ஒத்துக் கொண்டு தலையை ஆட்டி விட்டு அவரவர் அறைகளுக்கு சென்றனர்.
அவன் அவள் தோளை பிடித்து நிறுத்தி, " எங்க கூட்டிட்டு போக போற" என்று கேட்டான்.
"அது சர்ப்ரைஸ் அது எல்லாம் சொல்ல முடியாது " என்று சொல்லிவிட்டு வந்து படுத்துக் கொண்டாள்.
"ரொம்ப தாண்டி பண்ற " என்று சொல்லி அவனும் படுத்து இருவரும் உறங்கிப் போக காலை பொழுது அழகாக விடிந்தது.
அவன் எழுந்து பார்க்கும் போது அவளில்லை என்றதும் 'என்ன ஒரு அதிசயம் எனக்கு சீக்கிரமா எழுநது இருக்கா 'என்று யோசித்துக் கொண்டே வேலைகளை முடித்துவிட்டு கீழே வர அவள் ஊதா நிற வண்ணத்தில் புடவையைக் கட்டிக் கொண்டு, தலை நிறைய பூ வைத்திருந்தாள்.
அவனுக்கு அது மான்வழி தானா என்று சந்தேகம் வர தன் கண்களை நன்கு கசக்கிக் கொண்டு பார்த்தான். அப்போது அவளும் திரும்ப அவள் கண்கள் அவனை கட்டி போட்டது.
மனதில்,,
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே..
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே..
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே..
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே..
உள்ளதெல்லாம் அள்ளித்தரவா வாவா
வஞ்சி என்றும் வள்ளல் அல்லவா
காதல் மல்லிகை வண்டாட்டம் தான்
போடு நீ கொண்டாட்டம் தான்
என்று மனம் வேறு குத்தாட்டம் போட அதற்கு ஏற்றாற்போல் அவள் அவனை நோக்கி நடந்து வர அவன் பஞ்சு மிட்டாயில் மொய்க்கும் ஈஈயை போல் பார்த்தான். அதுவும் அவள் கண்ணாடியின் மேல் புறம் விழுந்து அசைந்தாடும் அந்த ஒற்றை முடியின் மேலிருந்து கண்கள் விலகவே இல்லை....
அவளும் கருநீல சட்டையும் அதற்கேற்ற போல் கால் சட்டை அணிந்து கொண்டு வந்த அவனை வைத்து கண் வாங்காமல் தான் பார்த்துக் கொண்டு வந்து, " வந்துட்டீங்களா உங்களுக்காக தான் வெயிட்டிங் வாங்க போகலாம்" என்றாள்.
அவனும் பொம்மலாட்டத்தில் ஆடும் பொம்மையைப் போல அவள் பின்னே சென்றான்.
அனைவரும் அந்த ஊரில் அமைந்திருந்த அன்னை காப்பதிற்கு சென்றனர்.
அங்கு அவள் காலையில் எழுந்தவுடன் அழைத்து பணத்தைக் கட்டிவிட அவர்கள் தங்களுக்குத் தெரிந்த இடத்திலிருந்து உணவை வரவழைத்திருந்தனர்.
அவர்கள் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கொடுக்க அவர்கள் மனநிறையுடன் வாழ்த்தி சென்றனர் இவன் அங்கு இருப்பவர்களின் படிப்பு செலவிற்கும் பணத்தைக் கொடுக்க அங்குள்ள குழந்தைகள் அவனை கட்டி அணைத்து முத்தமிட்டனர்.
முதல் முறையாக எந்தவிதமான காமமும், இல்லாமல் காதலும் இல்லாமல், எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பின் வெளிப்பாடாக இருக்கும் அந்த மழலைகளின் முத்தத்தை அனுபவித்தான்.
அந்த முத்தம் அவனை கரைத்து கண்களில் கண்ணீர் வர ஒரு பச்சிளம் குழந்தை அவன் கண்களை துடைத்து விட்டு நெற்றியில் ஒரு முத்தம் கொடுக்க அதை விலக்கவும் முடியாமல் அனுபவிக்கவும் முடியாமல் தவித்து
அந்த அன்பின் அடை மழையில் நனைந்தான். இதுவரை அன்னையின் அன்பை மட்டுமே கண்டு இருக்கிறான் அதுவும் ஒரு இப்படி முத்தம் எல்லாம் இல்லை, எல்லாம் வார்த்தை அன்பு மட்டுமே ஒரு நிலைக்கு மேல் தனிமையை விரும்பி அதில் சென்று விட்ட பின் இந்த முத்தம் அவனுக்கு புதியது. மூச்சு முட்டி கண்கள் கலங்க மெல்ல அங்கிருந்து விலகி வெளியே சென்று விட்டான்.
அவன் வெளியே செல்லவும் பெரியவர்களிடம், " நீங்க பார்த்துட்டு வாங்கமா நான் கிளம்புறேன், " என்று சொல்லி விட்டு அவன் பின்னே வந்து வண்டியின் முன் சீட்டில் ஏறிக் கொண்டாள்.
அவன் எதுவும் பேசாமல் வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து நிறுத்திவிட்டு அவன் அறைக்கு மடமடவென்று சென்று அமைதியாக பால்கனியில் நின்றுக் கொண்டான்.
அவள் பின்னிருந்து, "ஏங்க இங்க நின்னுட்டு இருக்கீங்க" என்றாள்.
அவன் தன் உணர்வுகளை வெளிக் காட்டாமல் அமைதியாக, "தேங்க்ஸ்" என்று மட்டும் சொன்னான்.
"எதுக்கு "
அவன் அமைதியாக தன் கைகளை மடக்கிக் கொண்டு இருந்தான். அவள் அவனை அணைத்து, "எல்லாம் சரியா போகும் " என்றாள்.
ம்ம்ம்ம்... என்றான்.
அவள் மெல்ல அவனை நிமிர்த்தி அவன் பின்னந்தலையில் விரல்களை கோர்த்தாள் அவள் கண்கள் தந்த மையலில் கண்களை மூடினான் அவன் சிவந்த இதழ்களில் தன் இதழ்களை ஒற்றி எடுக்க முயன்றவள் மெல்ல அவன் இதழ்களில் கரைந்து நீண்ட முத்தமாக கொடுத்தாள்.
அந்த முத்ததில் கண்கள் கலங்கி பழைய நினைவு வர அவளை தன்னிடமிருந்து விலக்கி ஓங்கி அறை விட்டான். அதில் கண் கண்ணாடி கீழே விழ அதை தேட அமரந்தவளிடம், "உன்கிட்ட எத்தனை முறை சொல்லி இருக்கேன் என்கிட்ட இப்படி பண்ணாதன்னு " என்று கத்தினாலும் அவன் கண்கள் அவனை மீறி கலங்கி அதற்கு மேல் வார்த்தை வாராமல்
அவன் வெளியே வரவும், இவர்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவன் கலங்கிய கண்களை கண்ட சுசீலா, 'என்னன்னு தெரியலயே 'என்று யோசித்துக் கொண்டே அவர்களை அவர்களின் அறைக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு மேலே சென்று பார்க்க அவள் கண் கண்ணாடியை துழாவி கொண்டிருந்தாள்.
அவள் கண் கண்ணாடியை எடுத்துக் கொடுத்துவிட்டு "என்னாச்சும்மா" என்று கேட்டார்.
அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் "உங்க பையன் என்ன அடிச்சுட்டாருமா" என்றாள்.
"ஏன் என்ன ஆச்சு மா" என்றார்.
அவள் ஒன்னும் இல்லை என்று மூன்று முறை சொல்லியும் கேட்காமல் காரணம் கேட்டுக் கொண்டே இருக்க வேறு வழி இன்றி சொன்னாள்.
அதை கேட்டவர் அவனுக்கு "முத்தம் கொடுத்தாலே பிடிக்காது மா " என்றார்.
"ஏன்? மா நீங்க கூட என்கிட்ட நிறைய விஷயம் மறைச்சீட்டீங்க இல்லை, உங்க பையனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி டிவோர்ஸ் ஆகியிருக்கு என்கிட்ட சொல்லவே இல்ல நீங்க "
"அவர் விழிமா அது வந்து" என்று இழுக்க
"மா நான் அவரை காதலிக்கிறேன் அவரு கூட வாழ ஆசை படறேன் அவருக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியணும் என்கிட்ட சொல்லுங்க... ப்ளீஸ் "என்றாள்.
அவரும் அவனின் காயங்களை பற்றிக் கூறத் தொடங்கினார்.