செந்தூரனின் காயங்களை கேட்ட பின் அவளோ சுசிலாவை இறுக்கமாக கட்டிக்கொண்டு, "இந்த மாதிரி சூழ்நிலையை எல்லாம் எப்படி மா கடந்து வந்தீங்க " என்று கேட்டாள்.
"எனக்கே தெரியலம்மா எப்படி கடந்து வந்தேன்னு ஆனா கடந்து வந்துட்டேன் ஆனால் நான் கூட பரவாயில்லை என் பையன் எப்படி வந்து கடந்து வந்தான் தெரியல அதனாலயே அவனோட மனசு இரும்பா மாறி போச்சு ஆனா நீ தான் தெளிந்து கூட்டிட்டு வரணும் விழி மா" என்றார்.
"அவர் அதுல பாதிக்கப்பட்டிருந்து நான் நல்லா இருந்திருந்தால் நான் அவருக்கு தீர்வா இருப்பேன் ஆனா நானும் அதே மாதிரி ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டிருக்கேன் அம்மா என்னால அது முடியுமான்னு தெரியலையே அதிலிருந்து வெளியே வரத்துக்கே எனக்கு இத்தனை வருஷம் ஆயிடுச்சு அந்த விஷயம் யாருக்குமே தெரியாது மா " என்றாள்.
"உங்க அப்பாவும் அம்மாவும் அன்னைக்கு உன்னை பொண்ணு கேட்டு வீட்டுக்கு வரும்போது சொன்னாங்க மா " என்றார்.
"இல்லம்மா அது பொய் அவங்களு
க்கு என் பிரண்டுக்கு அப்படி நடந்ததுன்னு உங்ககிட்ட சொன்னாங்க ஆனால் அந்த இடத்தில் இருந்தது நான் தான் அம்மா
ஆனால் நான் உங்க பையன் மாதிரி ரொம்ப பாதிக்கப்படல அதிலிருந்து வெளியே வந்துட்டேன் திரும்பவும் அந்த மாதிரி ஏதாவது ஒரு சூழ்நிலைகள் நடந்தால் மட்டும் தான் எனக்கு அந்த ஞாபகம் வந்து விலகி போற மாதிரி இருக்கு, " என்றாள்.
"அப்படி என்னம்மா நடந்துச்சு சொல்லு" என்று கேட்டார்.
அவள் அதற்கு அமைதியாகவே இருந்தாள்.
"விழி மா என்கிட்ட எதுவும் சொல்லக்கூடாத விஷயமாடா" என்று கேட்டார்.
"சொல்லக்கூடாதுன்னு இல்லை மா அதை சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலையே இதே மாதிரி அன்போடு என்கிட்ட இருப்பீங்களா!" என்று கண்களில் கண்ணீருடன் கேட்டாள்.
"எது நடந்திருந்தாலும் அது முடிஞ்சு போனது, அதை கண்டிப்பா மாற்ற முடியாது ஆனால் ஏத்துக்க முடியும் இல்ல சொல்லுமா" என்றார்.
இங்கு செந்தூரன் அவளை அடித்து விட்டு வந்து விட்டானே தவிர, காரில் பயணிக்கும் போது கூட 'அவ எவ்வளவு ஆசையா வந்து முத்தம் கொடுத்தால் விலக்கி விட்டு இருக்கலாம் அதை தாண்டி ஏன்டா அடிச்ச ' என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்டது.
'அவள் எனக்கு பிடிக்காததை செஞ்சா நான் அடிச்சேன்' என்று பதில் சொன்னான்.
'உனக்கு நடந்த விஷயங்களும் அது உனக்கு பிடிக்காதுன்னு அவளுக்கு தெரியுமா? பாவம் இல்ல பார்க்க தான் வளர்ந்து இருக்கா மத்தபடி அது குழந்தை மாதிரி' என்று அவன் மனசாட்சி சொல்ல, 'இப்ப என்ன சொல்ல வர ' என்று அவனிடம் அவனே கேள்வி கேட்டுக் கொண்டு வண்டியை வீட்டிற்கு விட்டு அவர்கள் அறைக்கு வரவும் அவனின் அன்னையின் குரல் கேட்க வாசலிலே நின்று விட்டான்.
"சொல்றேம்மா எனக்கும் யார்கிட்டயாவது சொன்னா இருக்க கொஞ்சம் நெஞ்சம் பாரமும் தீர்ந்து போய்விடும் அதனால கண்டிப்பா சொல்றேன்" என்று தொடங்கினாள்.
அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டில் மூளை சம்பந்தப்பட்ட படிப்பை படித்துக் கொண்டு இருந்தால் அப்போது கல்லூரியில் ஒரு வினாடி வினா நிகழ்ச்சி நடக்க அதில் இவள் கலந்து கொண்டாள்.
அதே கல்லூரியில் படிக்கும் இதய சம்பந்தப்பட்ட மருத்துவர் கார்த்தியும் அந்த வினாடி வினாடியில் பங்கு பெற்றான் இருவரும் ஒரே அணியில் வர வேண்டிய சூழ்நிலை வர ஒருவருக்கொருவர் சலிக்காமல் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து அந்த வினாடி வினாடிவில் இருவரும் வெற்றி பெற்றனர்.
இவளின் சின்ன சின்ன குறும்புத்தனமும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் அழகும் அவனுக்கு பிடித்து விட ஒரு வாரத்திலேயே அவளிடம் பேச ஒரு மரத்தடியில் காத்திருந்தாள். இவள் தன் வகுப்பை முடித்துக் கொண்டு வர, அவள் முன் வந்து "ஹாய்" என்றான்
இவளுக்கு முதலில் எங்கோ பார்த்த உணர்வு வர
" நம்ப ரெண்டு பேரும் குயிஸ் காம்படிஷன்ல வின் பண்ணுமே அந்த கார்த்தி" என்று கையை நீட்டினான். இவளும் "மான் விழி " என்று சொல்லி கையை நீட்டி பரஸ்பர அறிமுகம் செய்து கொண்டனர்.
இவளை பார்ப்பதற்காகவே அவன் அந்த கல்லூரி வளாகத்திற்கு வந்து மெல்ல பேசி நல்ல நண்பர்களாகினர்.
அதிகமாக படிப்பு சம்பந்தப்பட்ட பிரிவையே பேசிக் கொண்டிருந்தார்கள் அப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது, " ஐ மீன் லவ் வித் யூ " என்றான்.
"ஏய் சும்மா ஜோக் பண்ணாத" என்றாள்.
"நான் சீரியஸாவே உன்னை லவ் பண்றேன் உன்னோட முடிவை டூ டேஸ்ல சொல்லு" என்று சொல்லி சென்று விட்டான் .
இரண்டு நாள் கழித்து அவள் முன்னே வந்து நின்று " என்னை யோசிச்சியா" என்றான்.
" எனக்கு அந்த மாதிரி எந்த ஃபீலிங் வரல கார்த்தி நம்ம எப்பவுமே பிரண்ட்ஸ் ஆக இருப்பமே" என்றாள்.
அவன் சாதாரணமாக தோளை குலுக்க விட்டு, "சரி உன்னோட விருப்பம் " என்று சென்று விட்டான்.
அதன் பின் அவன் பெரிதாக தொந்தரவு செய்யவில்லை... ஆனால் இவளிடம் எப்போதும் போல பேசவும் இல்லை ஒரு நாள் கேட்டதற்கு, "நான் உன்னை லவ் பண்றேன் அது பேசிட்டு இருக்கும் போது அந்த எதிர்பார்ப்பு எனக்கு இருந்துகிட்டே இருக்கும் அது தான் கொஞ்சம் விலகி இருக்கலாம்ன்னு " என்றான்.
அவளுக்கும் அது சரி என பட, " தட்ஸ் பைன் கார்த்தி " என்றாள்.
"விழி" என்றான்
" சொல்லு கார்த்தி" என்றதும் அமைதியாக ஆகிவிட்டான்.
"கார்த்தி என்னவோ சொல்ல வந்துட்டு சொல்ல மாட்டேங்குற என்னன்னு சொல்லு" என்று
கேட்டாள்.
"மகாபலிபுரம் டூருக்கு நீயும் வரியா" என்று கேட்டான்.
"இல்ல கார்த்தி வருவேன்னு தெரியல பாப்போம்" என்றாள்.
"இல்ல நீ கண்டிப்பா வரணும் "
"மகாபலிபுரம் நிறைய முறை பாத்துட்டேன் போர் அடிக்குமே" என்றார்.
"நிறைய முறை போய் இருந்தாலும் அதெல்லாம் ஃபேமிலியோட அப்பா அம்மாவோட போயிருப்ப இல்ல உன்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸோட போயிருப்ப இப்ப நம்ம காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து போகும்போது நல்லா இருக்கும் ப்ளீஸ் வா" என்றான்.
அவன் இவ்வளவு கேட்கவும், " சரி கார்த்தி வரேன்" என்றாள்.
அந்த வரேன் என்ற ஒற்றை வார்த்தை அவனை மிகவும் ஆனந்தம் அடைய செய்ய அவளுக்கு கையை கொடுத்து விட்டு மெல்லிய ஒரு அழைப்பை தந்து விட்டு, "தேங்க்ஸ் பா" என்றான்.
"இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் சொல்ற ஜாலியா மகாபலிபுரத்தில் மீட் பண்ணலாம்" என்று சொல்லி சென்று விட்டாள் அதேபோல் அன்றைய தினம் மகாபலிபுரத்திற்கு செல்ல வேண்டிய நாளும் வர அழகாக மஞ்சள் நிற வண்ணத்தில் ஆடை அணிந்து வந்தாள்.
" இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு " என்றான்.
"தேங்க்ஸ் கார்த்தி போகலாமா" என்று சொல்லி அனைவரும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டனர் மகாபலிபுரம் எப்போதும் போர் அடிக்கும் என்று சொன்னவள் மகாபலிபுரத்தின் கடற்கரையை பார்த்தவுடன் சிறு பிள்ளையாக மாறி எல்லோரும் கடற்கரையில் கால் நனைத்து விட்டு வரலாம் என்று செல்ல அங்கேயே ஒரு ஆட்டம் போட்டு விட்டனர்.
அப்போது அவள் ஆடை நனைந்து விட அவளுக்கு குளிர் எடுக்கவும் கார்த்தி தனது சட்டையை கழட்டி அவளுக்கு கொடுக்க "தேங்க்ஸ்" என்றாள்.
"மான் விழி இங்கேயே நின்னுட்டு இருந்தா ரொம்ப குளிர் எடுக்கும் வா அந்த ரிசார்ட்டுக்கு போகலாம்" என்றான்.
"இல்ல கார்த்தி நான் வரல நான் இங்கேயே இருக்கிறேன்" என்றாள்.
"இல்லை நீ இங்கே இருந்தால் நாளைக்கு ஃபீவர் வரும் அங்க ஒரு ரூம் இருக்கு ஜஸ்ட் அங்கிருக்கும் பேன்ல நில்லு டிரஸ் காஞ்ச உடனே திரும்பவும் இங்க வந்துடலாம் வா" என்று அவளை மெல்ல தோள் மேல் கை போட்டு அழைத்து அந்த அறைக்கு வந்தவுடன் கதவை தாளிட்டான்.
அதில் பயந்தவள் " ஏன் கார்த்தி இப்போ கதவு லாக் பண்ற" என்றாள்.
"எப்பா உன்னைய கூட்டிட்டு வர்றதுக்கே நான் பெரிய பாடுபட்டேன் இதுல கதவு திறந்து வைத்து நீ எங்கேயாவது வெளியே போயிட்டா என்ன பண்றது " என்றான்.
"கார்த்தி நீ என்ன சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல" என்றாள்.
"ஏண்டி நீ டாக்டர் ஸ்டூடண்ட் தானே பயாலஜிக்கல் ரியாக்சன் எல்லாம் உனக்கு தெரியாது இப்ப நம்ம அதைத்தான் பண்ண போறோம் பிராக்டிகலா" என்றான் ..
அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க உடல் வேறு குளிரில் நடுங்கியது.
அவன் மெல்ல அவளை நெருங்கி சுவற்றில் தள்ளி அவள் இடையைப் பிடித்தான்.
அது பிடிக்காமல் போக அவனை தள்ளிவிட்டாள் அவளால் அவனை ஒரு இன்ச் கூட தள்ள முடியவில்லை. தன்னை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று எண்ணி "ப்ளீஸ் கார்த்தி ப்ளீஸ் கார்த்தி" என்று எவ்வளவோ கெஞ்சினாள்.
அவன் காதில் விழுந்ந்த பாடில்லை அவளை அனைத்து முத்தமிடும் நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டது
கார்த்தி அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவளை அடைவதிலேயே குறியாக இருந்து அவள் முகம் எங்கும் முத்தத்தை வைத்து கழுத்து வளைவில் முத்தம் வைக்க அவள் அழுது கொண்டே இருந்தாள்.
"ஏய் அழாத காது வலிக்குது நீ வெளியே வேற எவன் வந்து கதவு தட்ற்றான் தெரியல அதுக்குள்ள உன்னைய எனக்குள் எடுத்துக்கணும்" என்றான்
அவள் கையெடுத்து கும்பிட்டு" ப்ளீஸ் கார்த்தி என்ன விட்டுடு" என்று கெஞ்ச...
"நான் உன்னை எவ்வளவு டீப்பா லவ் பண்ண தெரியுமா உன் கூட கல்யாணம் பண்ணிக்கணும் குழந்தை குட்டி எல்லாம் பெத்துக்கணும்னு நினைச்சேன் நீ என்னடானா ஒத்துக்கல அதனாலதான் இந்த மாதிரி பண்ற இப்பவும் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அப்ப நீ என்னை மறுக்க முடியாது இல்ல" என்றுக் கூறி அவள் இதழில் முத்தமிட வரும் போது கதவை உடைத்துக் கொண்டு அவளின் நண்பன் வந்து நின்றான்.
அவனைக் கண்டதும் அவன் அருகில் வந்து நின்று கொண்டாள்.
கார்த்தியோ கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் "டேய் நீயும் வேணா வாடா ஷேர் பண்ணிக்கலாம் அத விட்டுட்டு நல்லவன் வேஷம் போடாத" என்றான்
அவளின் நண்பன் விஷால் அவன் மூக்கின் மேலே ஒரு குத்து குத்தி விட்டு இவள் புறமும் திரும்பி கன்னத்தில் ஒரு அடியை கொடுத்துவிட்டு, " யார் எங்க கூப்பிட்டாலும் வந்துடுவியா லூசு" என்று திட்டி அவளிடமிருந்து அவன் சட்டையை எடுத்தவன் முகத்திலேயே வீசி எறிந்து விட்டு அவளை கூட்டி வந்து விட்டான்.
தோள் கொடுப்பான் தோழன் என்பது சரியாக போனது...
இதை சொல்லி முடித்துவிட்டு அது ஒரு சின்ன இன்சிடென்ட் தான் மா ஆனா யாராவது அந்த மாதிரி லவ் அந்த மாதிரி சொன்னாலே இப்பெல்லாம் எனக்கு பயமா இருக்கு கல்யாணம் குழந்தை அப்படின்னு சொன்னாலும் இதுதான் ஞாபகத்துக்கு வருது, அதனாலதான் கல்யாணம் குழந்தை எல்லாமே பேக் என்று நினைத்து அமைதியாக இருந்துட்டேன் அம்மா"
இதைக் கேட்ட அவனுக்கு மனது பாரமாகி போக அங்கிருந்து கிளம்பி விட்டான். ஆனால் இவர்கள் மீண்டும் தொடர்ந்தனர்.
"இது சின்ன விஷயம் தான் மா ஆனா அந்த இடத்துல இருக்கும்போது எனக்கு எவ்வளவு பெருசா இருக்கும்ன்னு எனக்கு மட்டும்தான் தெரியும் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியே வந்துட்டேன்
அம்மா என்கிட்ட யாராவது திருப்பி அந்த மாதிரி நடக்கும்போது தான் கஷ்டமா இருக்கு மத்தபடி ஐ அம் ஓகே தான் ஆனால் உங்க பையனுக்கு நடந்தது நெனச்சு பார்க்கும்போது எனக்கு எல்லாம் ஒன்னும் இல்லை மா அதனால் நான் என்னை தேத்திகிட்டு அவரையும் நான் இனிமேல் தேத்தனும் என்கிற முடிவுக்கு வந்திருக்கேன் நாளைல இருந்து பாருங்க இந்த மான் விழியோட ஆட்டத்தை என்று கூறி கண்ணடித்தாள்.
அப்படி என்ன ஆட்டமோ பார்க்கலாம்...