• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நின் மத்தம் : 4

STN - 57

New member
நின் மத்தம் : 4


தன் அறைக்கு வந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கையில் அமர்ந்தவளுக்கு எப்படி அந்த மாப்பிள்ளையை அவன் வாயாலேயே தன்னை வேண்டாம் என்று சொல்ல வைப்பது என யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை அப்படியே தன்னுடைய நோயாளிகளை எல்லாம் பார்த்துவிட்டு காலை 8 மணிக்கு எல்லாம் வண்டியில் கிளம்பியவள் 8.30 க்கு வீட்டுற்கு வந்து "ஏன் மா நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்க, ஏதோ உங்க அப்பா வீட்டு ஹாஸ்பிடல் மாதிரி நினைச்ச டைமுக்கு வர சொல்ற, " என்று நடு ஹாலில் நின்றுக் கத்தினாள்.

அவள் பேச்சைக் கேட்டவர் அடுக்களையில் இருந்து சாவகாசமாக வந்து, "இப்போ எதுக்கு டி இங்க நின்னு கத்திக்கிட்டு இருக்க போய் ரெடியாகு அவங்க எல்லாம் வந்துட்டே இருக்காங்களாம்," என்றார்.

அதையெல்லாம் காதில் வாங்காமல், "நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் நீ என்ன சொல்லிட்டு இருக்க நேத்து நான் கிளம்பும்போதே உனக்கு கண்டிப்பா தெரியும் அவங்க எப்போ வருவாங்கன்னு அப்பவே சொன்னா நான் எதாவது சொல்லுவேன் சொல்லி நான் கத்தாம அமைதியா இருக்க நேரம் பார்த்து பேசி எனக்கு செக்கு வச்சிட்டு இப்ப சாவகாசமா வந்து பேசுறியா," என்று கேட்டாள்.

"ஆமா தெரியும் இப்ப அதுக்கு என்ன பண்ண சொல்ற என்ன பண்ண முடியும் உன்னால உங்க அப்பா வந்துருவாரு போய் ரெடி ஆகு," என்று திமிராக கூறிவிட்டு அவர் பாட்டுக்கு அடுக்களைக்கு சென்று விட்டார் இவளோ தன் காலை பூமியில் உதைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அவர் அடுக்களையில் இருந்து எட்டி பார்த்து, " அப்பாடா பட்டாசு பொரிஞ்சிட்டு போய்டுச்சு " என்று பெரு மூச்சு விட்டுக் கொண்டு தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினார்.

அவள் அம்மாவிடம் பேசிட்டு வந்தவளோ தன் அறையின் உள்ளே வந்து ஒரு மர்ம புன்னகை செய்து கதவை தாளிட்டு விட்டு " நான் ரெடியா ஆனாதானே நீங்க என்னை கண்காட்சி மாதிரி நிக்க வைப்பீங்க நான் போய் சைலன்ட்டா படுத்து தூங்க போறேன் இப்போ என்ன பண்ணுவீங்க வந்தவங்க பொண்ணு வரலைன்னு சொல்லி உங்களை மேலும் கீழும் பார்த்துட்டு போவாங்க ஹா ஹா ஹா," என்று வில்லத்தனமாக சிரித்து விட்டு கட்டிலில் தொப்பென படுத்தாள்.

அவள் தயாராகிக் கொண்டு தான் இருக்கிறாள் என்று தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார் நேரம் நெருங்கும் போது என்ன செய்யலாம் இப்போ நாம போய் கூப்பிட்டா அவளோ தான் அந்த மனுஷனை அனுப்பலாம்னா ஆளையே காணோம் என்று யோசித்த வேளையில் " மீனாட்சி எல்லாம் ஆச்சா குட்டிமா ரெடி ஆயிட்டாளா" என்று பலகாரத்துடன் கேட்டுக் கொண்டே வந்தார் சுந்தரம்!!

'அப்படா பலியாடு வந்துட்டாரு நாம தப்பிச்சோம் ' என்று மனதில் நினைத்துக் கொண்டு, "எனக்கு என்னவோ அவ ரெடியாகற மாதிரி தெரியலங்க ஏமாத்துறான்னு நினைக்கிறேன் நீங்க போய் தட்டி கூப்பிட்டீங்கன்னா வருவா," என்றார்.

"எப்படியோ என்னை கோத்து விட பாக்குற," என்று புலம்பிக் கொண்டு அவர் மான் விழியின் அறைக்கதவை தட்ட அவர் தட்டிய சத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்தவள் தலைவிரிக் கோலத்துடன் எழுந்து வந்து கதவை திறந்தாள் அதை பார்த்தவர் அதிர்ச்சியாகி, "என்னமா இது இப்படி வந்து நிற்கிறாய், " என்று கேட்டார்.

"ஒன்னும் இல்லப்பா நைட் டூட்டி பார்த்துட்டு வந்தேன் இல்லை அதனால் தூக்கம் வந்திருச்சு தூங்கிட்டேன்," என்றாள்.

அவளின் கலைந்த கேசத்தை மெல்ல தடவி விட்டு, "சீக்கிரமாக போய் ரெடியாகி வா டா மா " என்றார்.

"அப்பா எனக்கு இந்த கல்யாணத்துல" என்று ராகமாக இழுத்தவளை, " அப்பா உனக்கு எது செஞ்சாலும் நல்லது தானே செய்வேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கு இல்ல அந்த மாப்பிள்ளை வரட்டும் பேசி பாரு உனக்கு செட் ஆச்சுனா கல்யாணம் பண்ணலாம் இல்லன்னா பண்ண வேண்டாம், " என்று கூறியவுடன்

தான் எப்படியும் மாப்பிள்ளையுடன் தனியாக பேச வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் குளித்து முடித்து மஞ்சள் நிற புடவையை அணிந்து கொண்டு கட்டிலில் அமரவும் வெளியே, " வாங்க வாங்க, " என்று மீனாட்சி பரபரப்பான குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

"ஐயோ வந்துட்டாங்களா," என்று புலம்பினாலும், கட்டிலில் நன்றாக ஏறி அமர்ந்து அதன் தலை பகுதியில் சாய்ந்து தன்னுடைய போனை எடுத்து கேண்டி க்ரஷ் கேமை விளையாடிக் கொண்டிருந்தபோது வெளியில் இருந்து, " பொண்ண கூட்டிட்டு வாங்க பார்த்துட்டு அடுத்தது பேசலாம், " என்று சொன்னதும்

"கூட்டிட்டு வரேங்க," என்று மீனாட்சி பரபரப்பாக உள்ளே வந்து அவள் கையில் உள்ள போனை வாங்கி கட்டிலில் போட்டு விட்டு,, "அம்மு அங்க வந்த உடனே, " என்று அவர் ஆரம்பிக்கும் போது, " என்ன அவங்களை பார்த்து கையெடுத்துக் கும்பிடனும், நீ எல்லாருக்கும் காபி கொடுத்துட்டு இருப்ப நான் மாப்பிள்ளைக்கு மட்டும் கொடுக்கணும் அது தானே நான் எத்தனை மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் வா மா பாத்துக்கலாம், " என்று அவள் தன் தோள்களை குலிக்கி விட்டு வெளியே சென்றவளை, " அடியே கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா வாடி, " என்று சொல்லவும் சாதாரணமாக நடந்து வந்தாள்.

அவர் அன்னை சொன்னது போலவே செய்ய மாப்பிள்ளை அவளை ஏதோ முழுங்குவதை போல் பார்த்தான் அது எல்லாம் கண்டு கொள்ளாமல் அவனிடம் காப்பி தட்டை வேண்டா வெறுப்பாக நீட்டிவிட்டு அவனை நிமிர்ந்துக் கூட பார்க்காமல் தன் தந்தையின் அருகில் வந்து நின்று கொண்டாள்.

அவள் வந்து நின்ற பிறகும் அவளை தலை முதல் கால் வரை பார்த்ததும், தன் அன்னையின் காதில் அவளிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறவும் அவரும் சுந்தரத்திடம் "மாப்பிள்ளை பையன் பொண்ணு கிட்ட தனியா பேசணும்னு விருப்பப்படுறான்" என்று மெதுவாக சொல்ல, "சரிங்க அந்த பக்கம் தோட்டம் இருக்கு அங்க போய் பேசிட்டு வரட்டும்" என்று அனுப்பி வைத்தனர்.

அவன் அங்கு வந்ததும் வராததுமாக, " நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, " என்று அவள் கைகளை நல்ல தொட்டான்.

அந்த தொடுகை அவளுக்கு பிடிக்காமல் போக சட்டென்று கைகளை இழுத்துக் கொண்டு "எனக்கு இந்த மாதிரி டச் பண்ணி பேசுறது எல்லாம் பிடிக்காது" முகத்தில் அடித்தார் போல் கூறினாள்.

"ஓ சாரிங்க எல்லாம் மேரேஜுக்கு அப்புறமா எனக்கும் புரியுது," என்று அசடு வழிந்து கொண்டு, "எனக்கு கல்யாணம் பண்ணி உன் கைய புடிச்சுகிட்டு இந்த உலகம் ஃபுல்லா சுத்தி வரவேண்டும் என்று ஆசையா இருக்குங்க நாம நிறைய குழந்தை பெத்துக்கணும், அதை நீங்க வளர்க்கணும் அப்பறம் நீங்க டாக்டர்ன்னு சொன்னாங்க, மேரேஜ்க்கு அப்புறம் ஒர்க்குக்கு போறதும் போகாதும் உங்களோட விருப்பம்," என்று படபடவென்று பேசிவிட்டு, " உங்களுக்கும் ஏதாவது விருப்பம் இருந்தா சொல்லுங்க" என்று கூறினான்.

அவன் பேசியதற்கு இவள் மூச்சு வாங்கிக்கொண்டு, " அப்பாடா என்னை பேசுறதுக்கு விட்டீங்களே அதுவரைக்கும் சந்தோசம் எங்க பேசா விடாம பண்ணி உங்க வாய் மேல ரெண்டு போட்டு நான் பேசணும்னு நினைச்சேன் நல்ல வேலை நீங்களே பேசுங்கன்னு சொல்லிட்டீங்க மரியாதை தெரிஞ்ச பையனா தான் இருக்கீங்க, " என்று சொன்னதும் அவன் திருத்திருவென்று முழித்தான்.

"ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க உங்களுக்கு என்னை பிடிக்கலையா?" என்று கேட்டேன்.

"உன்னைய மட்டும் இல்ல எனக்கு இந்த கல்யாணம் என்கிற வார்த்தையே பிடிக்கலன்னு சொல்றேன் இதுல கை கோர்த்துக்கிட்டு ஊரெல்லாம் சுத்தணும்னு எனக்கு அதில் எல்லாம் விருப்பமில்லை கல்யாணம் பண்ணிக்கலாம் நீ உன் லைப் பாரு நான் என் லைஃபை பார்க்கிறேன் எஸ்ஸ்பெஷலி இந்த குழந்தை பெத்துக்கணும்னு எனக்கு கம்பெல் பண்ண கூடாது, எனக்கு எப்போ தோணுதோ அப்போ தான் எல்லாம், அதுக்கு ஓகேனா நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லையா இப்பவே போயிடு உனக்கும் எனக்கும் செட் ஆகுது நீயே சொல்லிட்டு உங்க அப்பா அம்மா கூட்டிட்டு கிளம்பி போயிட்டே இரு," என்று சொல்லி அங்கிருக்கும் காம்பவுண்ட் சுவரில் சாய்ந்து கொண்டாள்.

"ஏய் என்ன நீ இப்படி எல்லாம் பேசுற" என்றான்.

"நான் எப்படி பேசுறேன் உன்னோட விருப்பத்தை நீ சொன்ன என்னோட விருப்பத்தை நான் சொன்னேன் என்ன ஓகேவா இல்லையா சீக்கிரம் சொல்லு," என்று தன் கை கடிகாரத்தை பார்த்து சொல்லவும் அவன் நீயும் வேண்டாம் உன் கல்யாணமும் வேண்டாம் போடி, " என்று வெளியே வந்து எல்லோரின் முன்பும், "எனக்கும் உங்க பொண்ணுக்கும் செட் ஆகாது, " என்றான்.

அதற்கு சுந்தரம் பதறி கொண்டு, "என் பொண்ணு ஏதாச்சு சொன்னாளாபா என்றார்.

"ஐயையோ அவங்க ஒன்னும் சொல்லல அவங்க விருப்பத்துக்கும் என்னோட விருப்பத்துக்கும் செட் ஆகல செட்டாகாமல் எப்படிங்க கல்யாணம் பண்ணிக்கிறது என்னை மன்னிச்சிடுங்க, " என்று தன் பெற்றோரிடம் கண்ணை காட்ட அவர்கள் எழுந்து நின்று கைகூப்பி
"வரேங்க" சொல்லிவிட்டு கிளம்பி விட்டனர்.

அதைக் கண்டவள் அங்கிருக்கும் சுவரில் சாய்ந்து தன் பெற்றோரை பார்த்து நக்கலாக சிரித்தாள்.

அவர்கள் கிளம்பியுடன் மீனாட்சி அவளிடம் வந்து, "ஏண்டி வர மாப்பிள்ளை எல்லாம் இப்படி படுத்துற," என்றார்.

"நான் என்னம்மா பண்ணனேன் அவங்களுக்கு பிடிக்கலைன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும் நான் ஏதாச்சும் புடிக்கலைன்னு சொன்னனா இப்ப கூட அந்த மாப்பிள்ளையை ஒகே சொல்ல சொல்லு நான் கட்டிக்கிறேன் என்னை சும்மா டிஸ்டர்ப் பண்ணாதீங்க, "என்று அங்கு நிற்காமல் தன் அறைக்கு வந்து கதவை சாற்றிக்கொண்டு படுத்து விட்டாள்.

இங்கு சுசிலா மருத்துவமனையில் மருந்துகளை வாங்க வர அங்கு ஒரு மருந்து மட்டும் இரவு வரும் என்பதால் இரவு வந்து வாங்கிக் கொள்ளலாம்... அதே நேரம் மான்வழிக்கு என்ன நடந்து இருக்கும் என்று ஆர்வம் வர மாலை மருந்து வாங்க வரும் சாக்கில் அவளை பார்த்துக் கேட்டு கொள்ளலாம் என்று எண்ணத்துடன் தன் மகனுடன் வீட்டிற்கு வந்து, "கண்ணா என்னை பாத்துக்குறதுக்காவது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கோடா," என்றார்.

"அம்மா இதை மட்டும் கேட்காதீங்க" என்று சொல்லவும், " உன்னை தினமும் இந்த கோலத்தில் பார்த்துட்டு நான் உயிரோடு இருக்கிறத விட செத்துப் போயிடுறேன் என்னை விடு" என்று சொன்னார்.

அதில் அவன் அதிர்ச்சியாகி தன் அன்னைக்காக திருமணத்திற்கு ஒத்துக் கொண்டு ஒரு நிபந்தனையை வைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டான் அதை கேட்டவர் எதற்கு இவன் கல்யாணம் பண்ணிக்காமலே இருக்கலாமே என்று யோசித்தார்.

அப்படி என்ன சொல்லியிருப்பான் பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்
 
Top Bottom