• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நின் மத்தம் : 5

STN - 57

New member
மான் விழி அந்த மாப்பிளையிடம், "உன் வாழ் வாழ்க்கையே நீ பார்த்துக்குங்க என் வாழ்க்கையை நான் பாத்துப்பேன்" என்று சொன்னதை கேட்டு அந்த மாப்பிள்ளை பையன் தனக்கு இந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு அவள் முகத்தைக் கூட திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டான்.

அவர்களின் பெற்றோருக்கும் இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் அவரவர்கள் அறையில் சென்று முடங்கிக் கொள்ள, அவளோ மாலை ஆனந்தமாக தூங்கி எழுந்து குளித்து முடித்து, மருத்துவமனைக்கு தயாராகி வந்தாள்.

மீனாட்சி அவளை எதுவும் கண்டு கொள்ளாமல் உணவை மட்டும் எடுத்து வைக்க,

"அம்மா ஏன் இப்படி இருக்க," என்றாள்.

"நான் எப்படி இருந்தா உனக்கு என்ன உனக்கு உன் சந்தோசம் தான் முக்கியம்" என்று தன் முந்தானையை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டே மூக்கு உறிஞ்சினார்.

"இப்போ எதுக்கு மா மூக்கு உறுஞ்சிற," என்றுக் கடுப்புடன் கேட்டாலும் மனம் கேட்காமல் "இங்க பாரு மா அழுகுதா மா," என்று ஆற்றாமையுடன் கூறினாள்.

"நான் அழக் கூடாதுனா நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ," என்றார்.

"நீ அழக் கூடாதுன்னு எல்லாம் என்னால அந்த கமிட்மெண்ட்ல போற அளவுக்கு எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல என்னை விடு மா ப்ளீஸ் " என்றாள்.

அவளுக்கு அவர் அழவும் கூடாது, அதற்காக தன்னால் அவர் கேட்பதையும் செய்ய முடியாது இரு தலை கொல்லி எறும்பாய் எரிந்தாள்.

அவரையே வைத்தக் கண் வாங்கமல் பார்க்க அவர் மெல்ல வந்து அவள் கன்னங்களை கையில் ஏந்தி, "குட்டிமா என்ன இப்படி எல்லாம் பேசுற, எங்களுக்கும் பேரன், பேத்தி எல்லாம் பார்க்கணும் ஆசை இருக்காதா," என்று பொறுமையாக சொல்லி அவர் உடனே புரிய வைக்க பார்த்தார்.

ஆனால் அவள் அதை எல்லாம் காதில் வாங்காமல், "ப்ளீஸ் மா," என்று கண்களால் இறைஞ்சினாள்.

அவர் அதற்கு மேல் எதுவும் பேசாமல் "உன் இஷ்டம், " என்றதோடு தன் துக்கங்களை மறைத்துக் கொண்டு அமைதியாகி விட்டார்.

அதன் பிறகு அவளும் எதுவும் பேசாமல் அமைதியாக உணவு உண்டு விட்டு மருத்துவமனைக்கு சென்றாள்.

இங்கு சுசீலா தன் மகனுடன் கோவித்துக் கொண்டு, காரின் முன் சீட்டில் உம்மென்று அமர்ந்திருந்தார்.

அதைப் பார்த்தவன், "நீங்க எந்த மாதிரி முகத்தை வைத்திருந்தாலும் என்னோட முடிவுல மாற்றம் இல்லை " என்றான்.

"உனக்கே மனசாட்சி இருக்கா நீ சொல்ற கண்டிஷனுக்கு எந்த பொண்ணு ஒத்து வரும்னு நீ நினைக்கிற அந்த மாதிரி எல்லாம் இந்த காலத்தில் இருக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி பண்ற" என்றார்.

"எந்த பொண்ணு அப்படி ஒத்துக்கிதோ அந்த பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க இல்லையா கல்யாணம் வேண்டாம், நீங்க கேட்டீங்க நான் சொல்லிட்டேன்... " என்று சாதாரணமாக சொல்லிவிட்டு தன் தோளை குலுக்கினான்.

"இங்க பாரு செந்தூரா நீ என்னோட வாழ்க்கையை நினைத்து உன் வாழ்க்கைய கெடுத்துக்கிற," என்றுக் கூறி அவன் முகத்தைக் கண்டார் அதில் எந்த வித சலனமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல இருந்தது இது தான் சரியான நேரம் என்று மேற்கொண்டு அவர் பேசத் தொடங்கி

"உங்க அப்பா," என்று சொல்லி வாய் மூடும் முன்னே, " அம்மா " என்று கத்திக் கொண்டே வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்.

எந்த சலனுமும் இல்லாமல் தெளிந்த நீரோட போலிருந்த அவனுடைய முகம் இப்போது அவன் பெயருக்கு ஏற்றார் போல் செம்மை அப்பி நெருப்பு பிழம்பாய் தகித்து கோவத்தில் பெருமூச்சுகளாக விட்டு அங்கு காரின் ஸ்ட்ரிங்கை குத்திக் கொண்டே இருந்தான்.

அதைக் கண்டவருக்கு உள்ளுக்குள் பயம் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் ஒரு பெரு மூச்சு வீட்டு "செந்தூரா " என்று அழைத்து அவன் கையை மெதுவாக பிடுத்து, "இங்க பாரு செந்தூரா இப்ப எதுக்கு இவ்ளோ கோவம் " என்று மெதுவாகக் கேட்டார்.

"ஏன் மா உங்களுக்கு தெரியாதா அந்த ஆள் பத்தி என்கிட்ட பேசாதீங்க அவன் என் அப்பாவே இல்லை," என்றுக் கத்தினான்.

தீப்பிழம்பாய் இருந்த அவன் முகத்தை கண்டதும் அவருக்கு மேலும் அச்சம் ஏற்பட்டு விட்டது. ஆனால் அந்த அச்சத்தை வைத்துக் கொண்டால் அவனுடைய வாழ்க்கை சிறக்காதே, அதனால் தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டு, "நீ வேணான்னு சொன்னாலும் அவரு தான் உன்னோட அப்பா அதை எப்பவும் மாற்ற முடியாது கண்ணா!" என்றார்.

"நான் அதை மாத்த சொல்லல என்கிட்ட அந்த ஆள் பத்தி திரும்பவும் சொல்லாதீங்கன்னு தான் சொல்றேன்," என்று அழுத்தம் திருத்தமாக கூறினான்.

தன் அன்னையிடம் அப்படி எல்லாம் இன்னொரு முறை இப்படி எல்லாம் நடந்து கொள்ள கூடாது என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு,

"இங்க பாருங்க அம்மா மறுபடியும் உங்ககிட்ட ஒன்னு சொல்றேன் என்னோட அன்பையும், அரவணைப்பையும் என்கிட்ட இருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எந்த பொண்ணு இருக்கோ அந்த பொண்ண பாருங்க அந்த பொண்ண நான் கட்டிக்கிறேன்," என்று மீண்டும் ஒரு முறை அவருக்கு நியாபகப் படுத்தி விட்டு,

அவருடைய பதிலுக்கு காத்திராமல் வண்டியை வேகமாக எடுத்துக்கொண்டு வந்து மருத்துவமனையில் நிறுத்தவும், மான் விழி உள்ளே வரவும் சரியாக இருக்க அவள் மேலே மோதுவதுப் போல் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினான்.

அவள் அந்தக் கார் தன்னை மோதுவது போல் வந்து நிற்கவும் கோவம் வர கையை நீட்டி ஏதோ பேச வர அதற்குள் சுசிலா கீழே இறங்கி வந்தார்.

அவரைக் கண்டதும் தன் கோபத்தை ஒதுக்கி வைத்து விட்டு, "வாங்கமா இப்போ உடம்பு எப்படி இருக்கு," என்று தன் கவலைகளை மறைத்துக் கொண்டு சிரித்த முகமாகக் கேட்டாள்.

"நல்லா இருக்கு மா," என்றார்.

"அப்புறம் என்னமா இந்த பக்கம் வந்து இருக்கீங்க," என்று கேட்டாள்.

"ஒன்னும் இல்லம்மா ஒரு மாத்திரை மட்டும் இல்ல அது ஈவ்னிங் தான் வரும் சொன்னாங்க அதனாலதான் இப்போ ஈவினிங் வந்து வாங்குறேன் அது மட்டும் காரணம் இல்ல உன்னை பாக்கணும் போல இருந்தது அதனால தான் வந்தேன்," என்று சொன்னார்.

"என்னை என்ன மா பார்க்கணும், வேற ஏதாவது டவுட் இருக்கா மாத்திரை பற்றி சரியா எக்ஸ்ப்ளைன் பண்ணலையா?" என்று ஒரு மருத்துவராக பதறிக் கொண்டு கேட்டாள்.

" ஐயோ! மறுபடியும் ஏன்மா மாத்திரை மருந்துன்னு அதையே ஞாபகப்படுத்துற ஒன்னும் இல்ல சும்மா ஏன் உன்னை பார்க்க கூடாதா? " என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னார்.

சரிங்க மா இனி அதை பத்தி கேக்கல ஆனால், நீங்க எதுக்கு என்னைய பார்க்கணும் சொல்லவே இல்லையே என்றாள்.

அதுவா மா என்று அவர் சொல்ல வருவதற்குள் செந்தூரன் காரை அதன் இடத்தில் விட்டுவிட்டு வந்து, " செந்தூரன் ஆமா இவ பெரிய மைசூர் மகாராணி இவரை பார்க்க நீங்கள வேற இறங்கி பேசிட்டு இருக்கீங்க வாங்கமா போய் நம்மளோட வேலையை பார்த்துட்டு கிளம்பலாம், " என்று அவளை மட்டம் தட்டி பேசினான்.

அதில் அவளுக்கு மூக்கின் மேல் கோவம் வந்து, " உங்கள பாக்குறதுக்கு யாரும் இங்க காத்துட்டு இல்லை, " என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

அவள் சூறாவளி போல் வேகமாக தன் முகத்தில் அடித்தார் போல் பேசிவிட்டு மின்னலை போல் உள்ளே செல்லவும் அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட , " பார்த்தீங்களாமா அவளோட கொழுப்பை, " என்றான்.

தன் மகனுக்கு ஈடு கொடுத்து பேசும் அவளை நினைத்து ஒரு நிமிடம் பெருமைக் கொண்டு "நீ பேசுனதும் தப்பு தானடா வாடா," என்று இருவரும் உள்ளே சென்று மாத்திரைகளை வாங்க அவன் சென்றதும் அவர் கண்கள் தானாக அவளை தேட தொடங்கியது.

அவள் அப்போது வேறொரு நோயாளியை பார்த்துவிட்டு வர அவள் பெயர் தெரியாதாதல் கை அசைக்க அதை பார்த்தவள் வரேன் இருங்க என்று அவளும் சைகையில் சொன்னாள்.

பின் சிறிது நேரம் கழித்து அங்கிருக்கும் செவிலியரிடம் வேலையை கொடுத்துவிட்டு வந்து "சொல்லுங்கம்மா, " என்று கேட்டாள்.

அவருக்கு அவளின் திருமண விஷயம் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வது அத்தனை ஆர்வம் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், " என்னம்மா சொன்னாங்க, " என்று மொட்டையாக கேட்டார்.

அவளுக்கு நல்ல நாளிலே மருத்துவமனைக்கு வந்தால் அதே உலகமாகி போய்விடும் இப்போது ஒருத்தனை துரத்திவிட்டு சந்தோச மகிழ்ச்சி வந்திருப்பவளுக்கு இவர் என்ன கேட்கிறார் என்றே புரியாமல் தன் முத்து பல் தெரிய ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு, "நீங்க என்ன கேட்கிறீங்கனே புரியல மா, " என்றாள்.

"இல்லை மா இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வந்தாங்களே என்ன ஆச்சு" என்றுக் கேட்டார்.

"அதுவா மா," என்று வீட்டிற்கு சென்றதில் இருந்து அந்த மாப்பிள்ளை அவன் பெற்றோர்களை அழைத்து சென்றது வரை எல்லாவற்றையும் சொல்லி கல கலவென சிரித்துக் கொண்டே, "நான் எத்தனையோ முறை சொல்லிட்டேன் மா இது எல்லாம் எனக்கு ஒத்து வராதுன்னு எங்க அப்பா, அம்மா கேக்குறாங்க அது தான் வரவனை எல்லாம் அவனுங்க பேசுறதை வைச்சே ஏதாவது சொல்லி அனுப்புவேன்... இன்னைக்கு உண்மையா என் மனசில் இருந்ததை சொல்லிட்டேன்." என்று சொன்னாள்.

தன் மகன் சொன்ன அத்தனை கருத்துக்களையும் சுடிதார் போட்ட இவள் சொல்வது போல் தோன்றியது.

அவருக்கு இவள் தான் தன் மகனுக்கு சரியான பெண்ணாக இருப்பாள் என்று தோன்ற, அதை அவளிடமே கேட்டும் விட்டார் அவர் சொன்னதில் அவள் சிரிப்பு அப்படியே சுவிட்ச் போட்டது போல் நின்று விட்டது.

அதை உணரந்தவர், "நீ யோசித்து சொல்லுமா நான் வரேன் " என்றுக் கூறி எழவும் அவன் வரவும் சரியாக இருந்தது.

அவள் என்ன பதில் சொல்வாள்.
பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்.....
கதையின் போக்கு எப்படி இருக்கு உங்களின் மதிப்பு டைம் கொடுத்து விட்டு செல்லுங்கள்...
 
Last edited by a moderator:
Top Bottom