• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நின் மத்தம் : 8

STN - 57

New member
சாந்தி முகூர்த்த அறையை ஆட்களை வைத்து அலங்காரம் செய்துவிட்டு சுசிலா கீழே வர மீனாட்சி அவரை தடுத்து அண்ணி, "அவங்க ரெண்டு பேருக்கும் இந்த கல்யாணத்துல விருப்பமில்லை இப்படி பண்ணா அது சரியா வருமா என் பொண்ணு இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியவில்லை அண்ணி அவளை பத்தி உனக்கு தெரியுமே " என்று சங்கடமாக கேட்டார்.

"அவ எப்படி எடுத்துப்பான்னு யோசிச்சிட்டே இருந்தா அவ அங்கேயே தான் இருப்பா நீங்க போய் தூங்கி ரெஸ்ட் எடுங்க " என்று சொல்லி பஞ்சை நீட்டினார்,

அவர் புரியாமல், "இது எதுக்கு அண்ணி " என்று கேட்டார் மீனாட்சி.

"மீனாட்சி நாம ஒரு குரங்கு குட்டிக்கும், கொரில்லா குட்டிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம் அதுங்க நம்ம முன்னாடி பவ்யமாக எதுவும் பண்ணாதுங்க ஆனால், ரெண்டும் தனியா இருக்கும்போது பண்ற சேட்டைகளை நம்மளால தாங்க முடியாது" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

"அண்ணி என் பொண்ணை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க " என்றார்.

"உங்க பொண்ண மட்டும் இல்ல என் பையனையும் சேர்த்து தான் சொல்றேன் மீனாட்சி, எப்படியோ சண்டை போட்டு என்னவோ பண்ணி அவங்க வாழ்க்கையை தொடங்கட்டும் நாம வழி நடத்துவோம் " என்று கூறினார்.

" நீங்க சொல்றது கேட்கும்போது பயமா இருந்தாலும் பின்னாடி நல்லா இருப்பாங்கன்னு தோணுது, " என்று உணர்ச்சிபூர்வமாக சொன்னார்.

சுசிலா அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் ஒரு அழகான புன்னகையை சிந்தி விட்டு மீனாட்சியின் தோள் மேல் சாதாரணமாக கைப்போட்டு அறைக்கு அழைத்துச் சென்றார்.

இங்கு மேலே செந்தூரனின் அறை மண மணக்கும் மல்லிகை பூக்களாலும் சிவந்த ரோஜா மலர்களாலும், நிறையவே வாசனை திரவியம் இல்லாமல் தங்களின் இயற்கையால் மணத்தைக் கூட்டிக் கொண்டிருந்தன.

ஆனால் அவன் அதை எதையும் ரசிக்காமல், பால்கனியின் கம்பியை இறுகப் பற்றியபடி நின்றிருந்தான்.


அறையில் இருந்த அலங்காரங்களும், மல்லிகைப்பூ வாசனையும் அவனுக்கு எரிச்சலாகவே இருந்தது.

அவனின் எரிச்சலில் பூக்கள் தான் வாடி இருந்தன.

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டும் கூட திரும்பிப் பார்க்கவில்லை.

இந்த நேரத்தில் யார் வந்து விடப் போகிறார்கள் என்று அலட்சியம்

அங்கு கையில் பால் சொம்புடன் மெல்லிய நன்னடை இல்லாமல் சேலை எப்பொழுது நகர்ந்து விடுமோ என்று இடுப்பில் ஒரு கையும், இந்த பால் சொம்பை எப்போது கொண்டு போய் எங்கேயாவது தள்ளி விட வேண்டும் என்ற பரபரப்புடன்
உள்ளே வந்தவளை வெறும் காலியறை தான் வரவேற்றது.

அதை பார்த்தவள், 'எங்க போயிட்டுச்சி இந்த கொரில்லா' என்று யோசித்துக் கொண்டு வந்தவளின் கண்களுக்கு அங்கே காற்றில் அசைந்தாடும் அவன் சட்டை கை தெரிய, 'இங்கதான் நின்னுட்டு இருக்கா' என்று யோசித்துக் கொண்டே வந்து மேஜையின் மேல் பால் சொம்பை நொட்டு என்று வைத்து மெதுவாக பெருமூச்சு விட்டாள்.

இந்த கல்யாணம் அவனுக்கு விருப்பமில்லை என்பது எனக்கு தெரியும்.

ஆனால் எனக்கும் விருப்பமில்லை என்பது மட்டும் அவனுக்குத் தெரியாதே, அதை எப்படியாவது சொல்லி விட வேண்டும் என்று
பால் சொம்பை மேசையில் அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு நகர்த்தி மீண்டும் சத்தமாக வைத்துவிட்டு அமைதியாக நின்று

அவனிடம் "எவ்வளவு நேரம் அங்கேயே நிக்கப் போறீங்க?"

அவள் கேட்டதும் அவன் மெதுவாகத் திரும்பினான். அந்த பார்வையில் இருந்த திமிர் அவளுக்கே சங்கடமாக இருந்தது.

"என் வீடு எங்க வேண்டுமானாலும் நிப்பேன் " என்று அவனின் பார்வையில் இருந்த திமிரை வார்த்தையில் சற்றும் குறையாமல் சொன்னான்.

"நீங்க எங்க வேணா நின்னுக்கோங்க இந்த மாதிரியான டெக்கரேஷன் எல்லாம் எதுக்கு அக்சப்ட் பண்ணீங்க" என்று கேட்டாள்.

"எதுவும் தெரியாம பேசாத" என்றான்.

"நீங்க சொன்னா எல்லாமே நடக்கும் இல்ல அப்ப இது நீங்க அக்செப்ட் பண்ணிக்கிட்டு தான் வெளிவேஷம் போடுறீங்களா கல்யாணமே பிடிக்கலன்னு" என்றுக் கேட்டாள்.

"ஏய் அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை நீ மட்டும் என்ன பணத்துக்காக தானே கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்க" என்று கேட்டான்.

"ஹலோ உங்களுக்கு யார் சொன்னது நான் உங்களை பணத்துக்காக கட்டிக்கிட்டேன்னு" என்று இவளும் தீர்க்கமாக கேட்டாள்.

"எல்லாம் தெரியாத மாதிரி நடிக்காத ஒரு ஆள் வந்து எனக்கு சொல்லனுமா உன்னைய பார்த்தாலே தெரியாது" என்று நான் நிச்சயமாக பதில் சொன்னான்.


அவள் புரியாமல் பார்த்து இப்போ "என்ன சொல்ல வர்றீங்க?" என்றாள்.


அவன் கசப்பாகச் சிரித்தான்.
"இவ்வளவு சொத்து, பணம், வசதி... இதெல்லாம் கிடைக்கும்னு தெரிஞ்சதுக்குப் பிறகும் இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லியிருப்பியா? என்ன " என்று நக்கலாக கேட்டான்.


அவளின் முகம் சட்டென மாறியது.
அவன் சொன்ன வார்த்தைகள் நேராக அவள் மனதை காயப்படுத்தின "அப்படி தான் நினைக்கிறீங்களா என்னைப் பற்றி?" என்றாள்.

"வேற என்ன நினைக்கணும்?" என்றுக் கூறி எகத்தாளமாக சிரித்தான்.

இன்னும் எத்தனையோ பேர் தன்னை காயப்படுத்தினாலும் அப்போதெல்லாம் வராத கண்ணீர் இவன் காயப்படுத்தும் போது வலித்தது வேறு எது சொல்லிருந்தாலும் அவளுக்கு கவலை பட்டிருக்க மாட்டாளோ என்னவோ பணத்திற்காக வந்தேன் என்று சொன்னது தான் அவளுக்கு வலித்தது அந்த வார்த்தையில் காதில் கையை வைத்து, "சிரிக்காதீங்க பணத்துக்காக நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கல பண்ணிக்கல " என்று கத்தினாள்.

"இப்படி கத்தி இல்லன்னு சொன்னா நான் உன்னை நம்பிடுவேனா " என்றான்.

அடுத்த நொடி அவள் சிரித்தாள்.
ஆனால் அந்த சிரிப்பில் வலி மட்டும்தான் இருந்தது.
"சில நேரம் அதிகமா பணம் இருக்குறவங்களுக்கு, எல்லாரும் அந்த பணத்தை பார்த்துதான் வர்றாங்கன்னு தோணும்ல?" என்று கண்களில் கண்ணீருடன் கேட்டாள்.

அந்த வார்த்தையில் அவனுடைய முகம் இறுகி, "வார்த்தையை அளந்து பேசு" என்று கை நீட்டி எச்சரித்தான்.

"நீங்கதான் ஆரம்பிச்சீங்க"
என்று அவள் அழுத்தமாகச் சொல்லி
"என் அப்பா ஒரு வார்த்தை கேட்டதுக்காகத்தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். இல்லன்னா..." என்று சொல்லிவிட்டு நிறுத்தினாள்.

"இல்லன்னா?" என்று புருவங்களை உயர்த்தி கேட்டான்.

"இல்லன்னா இந்த கல்யாணமே நடந்திருக்காது, அதுவுமில்லாம உங்க அம்மா தான் என்னைய உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ரொம்ப விருப்பப்பட்டாங்க அவங்களுக்காகவும் தான் இந்த கல்யாணம் நடந்தது. "என்று அவள் சுட்டு விரலை அவன் நெஞ்சில் மேலே தட்டி, "யு கீப் ட் இன் யுவர் மைண்ட் " என்றாள்.

அதில் அறை முழுவதும் அமைதி சூழ்ந்தது அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை மறைக்கத் தலையைத் திருப்பிக் கொண்டு

" உங்களுக்கு எப்படி என்னை பிடிக்கவில்லையோ எனக்கும் தான் உங்களை பிடிக்கல இதை சொல்ல எனக்கு எந்த வருத்தமும் இல்லை
ஆனால், என் அப்பா, அம்மா கற்றுக் கொடுத்த மரியாதையையும், என் சுயமரியாதையையும் பணத்தோட சேர்த்து அளக்காதீங்க."
என்று சொல்லிவிட்டு வேகமாக ஜன்னல் பக்கம் திரும்பினாள்.

அவள் குரலில் இருந்த உண்மை ஒரு நொடி அவனை யோசிக்க வைத்தது.
ஆனால் பல வருடங்களாக மனதில் பதிந்திருந்த பணம் படைத்த குணம் அவனை அமைதியாக இருக்க விடவில்லை அதே சமயம் அவளை சும்மா விடவும் மனமில்லை அதனால் பின்னிருந்து தோளைப் பிடித்து இழுத்தான்.

அவன் திருப்பிய வேகத்தில் அவளுக்கு வலி எடுக்க அவன் கையை வேகமாக தட்டி விட்டு, "என்ன பண்ணுறீங்க நீங்க எனக்கு தாலி கட்டினதுனால் என்கிட்ட அட்வான்டேஜ் எடுக்க பாக்காதீங்க " என்று கத்தினாள்.

அவன் அந்த எண்ணத்தில் அவளை திருப்பவில்லை அவள் சொன்னதற்கு ஏதாவது பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டும்தான் திருப்பினான் அவள் தவறாக புரிந்து கொண்டு இப்படி நடந்தது அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட "சாரி" என்றான்.

அவன் மன்னிப்பு கேட்டதால் அவளும் அமைதியாகி, " நீங்க எதுவும் எனக்கு சொல்லத் தேவையில்லை நீங்க முதல்ல வெளியே நான் டிரஸ் சேஞ்ச் பண்ணனும்" என்றாள்.

அவன் இதுவரை எத்தனையோ பெண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறான். ஆனால் ஒரு நாளும் அவர்கள் அனுமதியின்றி தொட்டதில்லை... தான் வேண்டாம் என்று சொல்லும் போது கூட தன்னை நாடிவரும் பெண்களை தான் அவன் இதுவரை கண்டுள்ளான் தான் சாதாரணமாக தொட்டதுக்கு இவள் இப்படி உதாசீனப்படுத்தியது அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட, எதுவும் பேசாமல் அங்கிருக்கும் பால்கனியில் சென்று நின்றுக் கொண்டான்.

அவளும் அமைதியாக தன் உடையை மாற்றிக் கொண்டாள்.
ஒரே அறையில் ஒரே உறவில்
ஆனால் இரண்டு பேருக்கும் நடுவில் ஒரு பெரிய தவறான புரிதல் சுவராக நின்றுகொண்டிருந்தது.
அந்த சுவரை உடையுமா என்பது தான் சந்தேகம், சுவரை உடைக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை என்பது தான் நிதர்சனம்,

அவள் உடை மாற்றிக் கொண்டு வந்து அவனை அழைத்தாள் அவன் சற்று நேரம் விட்டு வருகிறேன் என்று சொன்னதும் அவள் பெரியதாக அலட்டிக் கொள்ளாமல் அவள் முன்னே சென்று கட்டிலில் அமர்ந்து நாளை மருத்துவமனையில் பிஜி படிக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டியிருந்தது அதனால் தன் தொலைபேசியில் அதை ஒரு முறை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் அங்கே பால்கனியை இறுக்கி பிடித்து அந்த நிலவை கண்களில் நிறப்பி பார்த்தவனுக்கு மனம் லேசாக மாறவில்லை அவன் கண்களை தென்றலும் தீண்ட அதில் கண்ணீர் துளி விழுந்தது.

அதனால் அங்கு நிற்க பிடிக்காமல் உள்ளே வர மேஜை மேல் பால் ஓரமாக வைத்திருந்ததால் இவன் கைப்பட்டு அது தவறிவிட்டது அதில் கோவம் வர அவளிடம் திரும்பி, " இதை ஓரமா வைக்கிறது கூட உனக்கு தெரியாதா" என்று கேட்பான்.

அவள் "தெரியாது, ஏன் உங்களுக்கு பார்த்து வர தெரியாதா " என்று சொல்லி விட்டு, கைபேசியை பார்த்துக் கொண்டிருக்க அவன் வேகமாக வந்து அந்த கைபேசியை பிடுங்கினான்.

இவளும் அந்த போனை வாங்க அவன் உயர்த்திற்கு எட்ட அவன் காலை மிதித்து விட்டாள். அவன் அப்போதும் தராமல் விளையாட்டு காட்ட இவள் மீண்டும் எட்டினாள். அப்போது கட்டிலில் கால் இடித்து அவன் விழ அவன் மேலே இவளும் விழுந்தாள்.


அப்போது அம்மா என்ற சத்தம் இடியென கேட்டது, இவளா? இல்லை அவனா? இல்லை வேறு யாரோவா பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்
 
Top Bottom