• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிழலென,நான் வர.. - 01

STN - 125

New member
நிழலென,நான் வர..

நிழல் - 01


"புனர் ஜென்மத்தில் யான் இழைத்த தவறுக்கு பிராய்ச்சித்தமாக,இப்பிறவியில் உமக்கென,என் உயிரை அர்ப்பணிக்கிறேன்,அன்பரே.உம் கரத்தால் என் சிதையை ஒரு தடவையேனும்,ஸ்பரிசித்து விடுங்கள்..அப்போதேனும்,என் ஆன்மா சற்றே,நிம்மதியடைட்டடும்.."

மண்டையோட்டுடன் எலும்புக் கூடுகளும்,இருக்க அதற்கு பக்கத்தில் இருந்த பொற்தகட்டில் எழுதியிருந்ததை,வாசித்தான்,சமரன்.

இவையனைத்தையும்,கற்பாறையாலான ஆறடி பெட்டியொன்றிலேயே,வீற்றிருந்தன.கல்லாலான மூடியும் அதற்கு காவலாய்.

அபயவனம் எனும் காட்டுப் பகுதியில் தொல் பொருட்கள் கிடைத்ததாக வந்திருந்தத,தகவலுக்கிணங்கனவே,அவன் உட்பட அவனின் குழுவினர் இவ்விடம் வந்திருந்தனர்.

அவர்களுக்கு தலைமை தாங்கும்,பாரிவேந்தவனுக்கு இப்போது,நாற்பது வயதைக் கடந்திருக்கும்.

"சார் என்ன சார் இது..?" அந்த எலும்புக்கூட்டை விட,அந்த பொற் தகட்டை படித்ததும் கொஞ்சம் பயம் வந்தது.

"இதுல படிஞ்சு இருக்குற மண்ணயும் இந்த எடத்தயும் நோட் பண்ணி பாத்தோம்னா ஃபர்ஸ்டு இந்த பெட்டி மண்ணுக்கு மேல தான் இருந்து இருக்கனும்..அப்றம் தான் ஏதாச்சும் நடந்து மண்ணுக்கு கீழ பொதஞ்சு போயிருக்கனும்.." அவரின் விழிகளில் கூர்மை.

"எஸ்..எஸ்..இந்த மண்ணு தான் மண் சரிவு ஏதாச்சும் வந்து சரிஞ்சு..இந்த எடத்த ஃபுல்லா மூடி இருக்கனும்.." என்றார்,அருகே பாதி உடைந்திருந்த மண்குன்றை காட்டி.

"சார்,நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க சார்.."

"நா இது பத்தி கேள்விப்பட்டு இருக்கேன்..இந்தக் காட்ட முன்ன தேவேந்திரவனம்னு தான் சொல்லுவாங்களாம்..இந்த பொண்ணு தன்னோட காதலனுக்காக உயிர் பிச்ச கேட்டு இந்தக் காட்டுல இருந்த காளி கோயில்ல போய் வேண்டு கேட்டு கிட்டதனால தான் அபயவனம்னே பேர் வந்துச்சாம்.."

"புரில சார்.." தலையை சொறிந்தான்,சமரன்.

"ஏதோ ஒரு கிறுக்குத்தனமான காதல் கத போல..எனக்கும் அவ்ளவா அதபத்தி தெரிஞ்சிக்கனும்னு தோணல.." அவர் கூறி முடிக்கும் முன்னமே,அவ்விடத்துக்கு பத்து பேர் வேக வேகமாய் வந்தனர்.

"யாரு சார் இவங்க..?" கேட்டவாறு சமரன்,அவருக்கு பக்கத்தில் வந்து நின்றான்.அவரின் குழுவினரும்,வந்தவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி நின்று கொண்டனர்.

"இது ஒன்னும் கவர்மன்டோட எடம் இல்லடா..சுத்தி இருக்குற மொத்த எடமும் மிஸ்டர்.பிரதாப்போட பேர்ல இருக்கு..இன்னுமே,இங்க எலும்புக் கூடு சிக்குன விஷயம் வெளில யாருக்கும் தெரிய வர்ல.."

"...................."

"பை சான்ஸ்ல எனக்கு கேள்வி பட்டுச்சு..அப்றமா கெஞ்சி கேட்டு பர்மிஷன் எடுத்து வந்துருக்கேன்..மிஸ்டர்.பிரதாப் கவர்மண்டோட இன்வால்மன்ட் அந்த மினிஸ்டரோட பவர யூஸ் பண்ணி ஸ்டாப் பண்ணி வச்சு இருக்காரு.."

"அது ஏன் சார்..?"

"இந்த எடத்துல பொதயல் இருக்குறதாவும் சொல்றாங்க..மேபி இந்த எடம் வெளில தெரிய வந்ததுன்னா எல்லாம் கவர்மண்ட் கைக்கு போயிரும்ங்குற பயமா இருக்கலாம்..அதுல்லாம,அவரு இந்த ஏரியா மேல மீடிய வெளிச்சம் பட்றத விரும்பலன்னு நெனக்கிறேன்.."

கூறும் போதே,அவர் விழிகள் வந்தவர்களை,ஆராய்ந்த வண்ணம் இருந்தன.

தமக்கும் இரகசியமாய் அவர்களை கதைத்துக் கொள்ள,அதை வந்திருந்த ஓரிருவர் சந்தேகமாய் கவனிக்கவே,செய்தனர்.

அங்கிருந்த இருவரின் கட்டளையில் பெயரில்,உதவிக்கு வந்தவர்கள் திறந்திருந்த அந்த பிரேதப் பெட்டியை,கல்லாலான மூடியைக் கொண்டு நகர்த்தி மூடிட,அந்த மூடியின் மேற்புறமாகவும் ஏதோ எழுதப்பட்டு இருந்தது.

சட்டென,அவர்களில் இருந்த ஒருவன் குனிந்து,மண்ணை நீக்கிட அதைத் தடவியவாறே படிக்க முயல,சமரனின் விழிகளிலும் பாரிவேந்தனின் விழிகளிலும்,அத்தனை ஆர்வம்.

மெல்லமாய் காற்றும் வீசத் துவங்கிட,ஓரமாய் ஓங்கி வளர்ந்திருந்த மரத்தின் பூக்கள் கொட்டித் தீர்க்க,அதை பொருட்படுத்தாமல்,படிக்க முயன்றான்,சமரன்.

●●●●●●●●●

பிரசவத்துக்காக மருத்துவமனை செல்ல தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்,அம்சவேணி.

இதழ்களோ,மணவாளனின் பெயரை உச்சரித்தாலும்,அவன் தந்த ஏமாற்றத்தின் வலியில் தன்னை இறுக்கிக் கொண்டவளுக்கு,கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.

இப்படி ஒருவனை காதலித்து தொலைத்து விட்டோமே என்று தன் மீதே கழிவிரக்கம் உண்டாகிட,முயன்று அழுகையை அடக்கி,புன்னகையை பூசியவாறு வெளியே வந்தாள்.

கணவனை விட்டுப் பிரிந்த வந்த நாளில் இருந்து தோழியொருத்தியுடன் அவள் தங்கியிருக்க,தோழி தான் அவளைக் கவனித்துக் கொண்டது.

இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பிச் செல்ல,இரவை நெருங்கும் போது அவளுக்கு வலியெடுக்கத் துவங்கிற்று.

அவளின் வலி மிகுந்த அலறல் அவ்விடமெங்கும் எதிரொலிக்க,செவிலியருக்குமே,அவள் நிலையைக் காண்கையில் பாவமாகிப் போயிற்று.

இங்கோ,
கோயில் வாசற் படியில் அமர்ந்தவாறு, அண்ணாந்து வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தார்,நம்பூதிரி.

புதர் போன்று வளர்ந்து முகத்தை மறைத்திருந்த தாடி,வெண்ணிறமாய் வயிறு வரை நீண்டிருந்தது.கந்தல் உடையுடன் சுருங்கிய தோலுமாய் இருப்பவரை,பிச்சைக்காரன் என்றே கருதுவார்கள்,ஊர் மக்கள்.

அவர் பக்கத்தில் படுத்திருந்தான்,ஒருவன்.குடித்து விட்டு கோயில் வாசலில் விழுந்திருந்தவனோ,மது போதையில் புலம்பவும் செய்தான்.

நிலவின்றிய வானத்தில்,ஆங்காங்கே விண்மீன்கள் மின்னிக் கொண்டிருக்க,திடுமென ஒரு நட்சத்திரம் உதிர்ந்து விழ,சுழல் காற்று சுழற்றி அடிக்கத் துவங்கிட,கனமழையின் வரவு.

மழையோ கொட்டித் தீர்த்திட,அவர் இதழ்களில் அர்த்தப் புன்னகை படரந்திற்று.நயனங்களில் ஆசுவாசம் நிறைந்த கோலம்.

"இப்பிறவியிலாவது இவர்களுக்கு ஜென்ம சாபல்யம் கிட்ட வேண்டும்" மெல்ல தனக்குள் கூறிக் கொண்டார்,அவர்.

"என்னாய்யா சிரிக்குற..?" அவரின் புன்னகை கண்டு பாதி விழி சொருகிய நிலையில் கேட்டான்,அவன்.அவர் இதழ்களில் மர்மப் புன்னகை.

●●●●●●●●●

"வய் எம் இன்டஸ்ட்ரீஸ்.." சூரிய வெளிச்சம் பட்டு, மின்னிய வெள்ளி நிறத்தலான எழுத்துக்களை கூர்ந்து பார்த்தவளின் விழிகள் கூசியது.

"ச்சே இன்னும் எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது.." இரு விரலால் நெற்றியை அழுந்தத் தேய்த்துக் கொண்டு அங்குமிங்கும் நடந்தவளுக்கு தம்மை உள்ளே நுழைய விடாத காவலாளியின் மீது அத்தனை எரிச்சல்.

யாரென்றே தெரியாத அவனின் மீது வார்த்தைகளை வீசி விட்டு வந்து விட்டிருந்தாள்,அவசரப்பட்டு.அது எத்தகைய பின் விளைவுகளை தந்து விடுமோ என்கின்ற பயத்தில் அவனிடம் நேரில் மன்னிப்புக் கேட்கலாம் என்று வந்திருக்க,அது நடக்காது போலவே தோன்றிற்று.

சுடிதார் துப்பட்டாவை விரல்களால் சுருட்டிக் கொண்டு,சற்றே மெலெழுந்து கலைந்த சிகையுடன் அவள் நின்றிருந்த கோலம் அவருக்கு சிரிப்பை வரவழைத்திட கடினப்பட்டு அடக்கிக் கொண்டு நின்றிருந்தார்,காவலாளி.

அவளுக்கோ அவர் புன்னகையை இதழ்களுக்குள் ஒளித்துக் கொள்வது கண்டு இன்னும் கோபமாய்த் தான் வந்தது.இருந்தும் அடக்கிக் கொண்டாக வேண்டிய கட்டாயம்.

வாயிலுக்கு முன்னே நின்று அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவளுக்கோ சுட்டெரிக்கும் வெயில் மீதும் அத்தனை எரிச்சல்.

"இன்னிக்கி தான் இப்டி வெயிலடிச்சு தொலயனுமா..?"கடுப்புடன் அவள் முணுமுணுப்பது காவலாளியின் காதுகளையும் உரசிட சிரிப்பை அடக்கிட முடியாது பக்கென்று சிரித்து விட்டிருந்தார்,அவர்.

அதுவும்,அவள் இருந்த கோலம்,அவ்வளவு சிரிப்பை தந்தது,மனிதருக்கு.

"சிரிக்கிறத பாரு..இவரு வயசுக்கு இந்த குசும்புக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.." அவரின் சிரிப்பு தந்த எரிச்சலில் வைது தீர்த்தவளின் முன்னே வந்து நின்றான்,சத்யா.

கொளுத்தும் அந்த வெயிலில் அதிக தூரம் நடந்திருப்பான் போலும்.
நெற்றியோரம் வியர்வை வழிந்து கொண்டிருக்க சட்டை முழுக்க தொப்பலாய் நனைந்து போயிருந்தது.

"என்னடா குளிச்சிட்டு வர்ரியா..? இப்டி நனஞ்சி போய் இருக்க..?"

"ஆமா இதுவும் கேப்ப..இன்னுமும் கேப்ப..பாவம் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்கன்னு வெயில்னு பாக்காம அலஞ்சு திரிஞ்சு தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்தேன்ல..எனக்கு செருப்பால அடிக்கனும்.."

அவளையும் அவளின் பின்னே சோர்ந்து போய் நின்றிருந்த தன் உடன் பிறப்பையும் பார்த்து சொல்ல, இருவரும் அவனின் ஆதங்கத்தை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை.

"ஆமா தங்கச்சிங்களுக்கு நீ தான் எல்லாம் பாத்து பாத்து பண்ணனும்..அது கடம..அத செஞ்சேன்னு இப்டி தம்பட்டம் அடிச்சிக்க கூடாது.."

நெற்றியில் இருந்த வியர்வையை புறங்கையால் ஒற்றி எடுத்துக் கொண்டே முன்னே நின்றிருந்தவனை அவள் வாரிட,பல்லைக் கடித்தவனோ சராமறியாய் திட்டித் தீர்த்தான்,இருவரையும்.

பெண்ணவளை விட சாவகாசமாய் அவனின் திட்டுக்களை ஏற்றுக் கொண்டு நின்றது என்னவோ அவனின் உடன் பிறப்பான சைந்தவி தான்.

"எவ்ளோ திட்றேன்..மனுஷன்னு கொஞ்சமாச்சும் கணக்கெடுக்குதுங்களா ரெண்டு பக்கியும்..மனசாட்சியே இல்ல இவளுங்களுக்கு.." அவன் கத்தியே திட்டிட மூவரையும் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார்,அந்த காவலாளி.

"இப்டி போய் பைத்தியங்க கிட்ட வந்து மாட்டி கிட்டேனே.." அவர் மனதுக்குள் ஆயாசமாய் நினைத்துக் கொண்டது மூவரின் செவியையும் அடைந்திட வாய்ப்பில்லை.

நுழைவாயில் கம்பிகளில் இரண்டை பற்றிக் கொண்டு, இடைவெளியில் நாடியை வைத்து முகத்தை அழுத்தி, நுழைவாயிலின் அடித்தளத்தில் பாதம் பதித்து ஏறி நின்றவளை, விசித்திரமாய்த் தான் பார்த்தார்,மனிதர்.

திட்டித் தீர்த்த சத்யாவோ,ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்று கொள்ள அதன் பின் அவ்விடமே அமைதியானது.

சைந்தவி ஒரு ஓரமாய் நின்று அலைபேசியில் மூழ்கிப் போக, பெண்ணவள் தான் குரங்கு வித்தைகள் செய்து கொண்டிருந்தாள்.

"இந்த பொண்ண பாத்தா நல்லா தான இருக்கு..எதுக்கு இப்டி கொரங்கு சேட்ட பண்ணிட்டு இருக்கோ தெரிலியே.." காவலாளி நினைக்கும் முன்னே வண்டி ஹாரன் சத்தம் கேட்டிட, ஏறி நின்றவளுக்கு இறங்கிடச் சொல்லி சைகை காட்டி விட்டு வாயிலை திறக்க கடந்து செல்லப் பார்த்த அந்த உயர் ரக காரின் முன்னே வந்து நின்று வழி மறித்தான்,சத்யா.

அவனுடன் நின்றிருந்தனர்,பெண்கள் இருவரும்.காவலாளியோ,மூவரை விலத்திட வர உள்ளே இருந்தவனின் கையசைவில் அப்படியே அவ்விடத்தில் தரித்து விட்டிருந்தார்.

"சார் ப்ளீஸ் சார் ஒரே ஒரு தடவ உங்க சேர்மன பாக்க பர்மிஷன் தாங்க சார்.." கார்க் கண்ணாடியை இறக்கி விட்டு அமர்த்தலாய் அமர்ந்திருந்தவனிடம் சத்யா கெஞ்சிட, அவனுக்கு அவர்களின் செயலில் கடுப்பு வந்தாலும் ஒரு புறம் பாவமாகவும் இருந்தது.

அவள் பேசிய பேச்சுக்கு முதலாளி மன்னிப்பது சாத்தியம் என்று அவனுக்குத் தோன்றவில்லை.அவன் குணம் தெரிந்தவனுக்கு,அப்படி நினைத்திட இயலாது இருந்தது.

முதலாளியைத் தாண்டி தன்னால் எதுவும் செய்திட இயலாது என்று தெளிவாகவே புரிந்திருப்பவனுக்கு, அவர்களிடம் என்ன சொல்லி தன்னிலையை விளக்கிட என்பது தான் தெரியவில்லை.

"இங்க பாருங்க..திரும்ப திரும்ப வந்து என்கிட்ட கெஞ்ச வேணா..சார மீறி என்னால எதுவும் பண்ண முடியாது..புரியுதா..? இதுக்கப்றம் அவர வந்து பாக்கனும்னு என் கிட்ட வந்து சொல்லிகிட்டு இருக்காதீங்க..இது தான் லாஸ்ட் வார்னிங்..இதுக்கப்றமும் நீங்க தொந்தரவு பண்ணுனீங்கன்னா லீகலா ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்.."

கறாராய் மொழிந்தவனோ, சாரதிக்கு வண்டியைக் கிளப்பிடச் சொல்ல அதியுயர் வேகத்தில் வண்டியும் அவ்விடத்தை விட்டு அகன்று போனது.

பெண்ணவளுக்கோ ஏமாற்றம் ஒரு புறம் என்றால் இத்தனை நேரம் காத்துக் கிடந்தது வீணாகிப் போனதன் எரிச்சல் மறுபுறம்.

"வா சத்யா..நாம கெளம்பி போலாம்..இவனுங்களோட வெண்ண மொதலாளிய பாக்கவும் தேவல..பேசவும் தேவல..மண்டக்கனம் புடிச்ச மங்கி அவன்..அவன எதுக்கு நாம பாக்கனும்..? ஒன்னும் தேவல வா போலாம்.." கத்திக் கொண்டே கடந்து போக,தலையில் அடித்துக் கொண்டான்,சத்யா.

வண்டி நிறுத்தப்படும் முன்னமே,கமலேஷுக்கு அழைப்பு வர,திரையில் தெரிந்த முதலாளியின் எண்ணைக் கண்டதும் தூக்கி வாரிப் போட்டது,அவனுக்கு.

"சார்!" அழைப்பை ஏற்றவன் பவ்யமாய் விளிக்க,மறுமுனையில் நிலவிய அமைதியில் அவன் நெஞ்சில் நீர் வற்றிப் போனது.

"சார்ர்ர்ர்ர்ர்ர்.." அலைபேசி கைகளை விட்டு நழுவி விடும் போல இருந்தது.

"அந்த இடியட் இன்னிக்கி ஆஃபீஸ்கு வந்தாளா..?" உண்மையைச் சொல் எனும் கட்டளை அவன் வார்த்தைகளில் இருக்கையில் எப்படி பொய் சொல்வான் அவனும்..?

"ஆமா சார்" என்றது தான் தாமதம்,அடுத்த நொடி அழைப்பு துண்டிக்கப்பட,ஆயாசமாய் இருந்தது,அவனுக்கு.

யோசித்து பார்த்தவனோ,அழைப்பு விடுத்திருந்தான்,முதலாளியின் தோழனுக்கு.இவனுக்கு நேர் எதிர் குணம் என்பதால்,கமலேஷுக்கு அவனிடம் பயம் இல்லை.

"செழியன் சார்!" ஆரம்பித்தவனோ,நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவனிடம் ஒப்புவிக்க,நெற்றியை நீவிக் கொண்டான்,மறுமுனையில் இருந்த தோழன்.

"இவ்ளோ தானா நடந்தது..?"

"ஆமா சார்..அந்தப் பொண்ணு சின்னப் பொண்ணு வேற..அது ஏதோ தெரியாம பேசிருக்கு போல..அதுவும் சார் கிட்ட இல்ல..என்ன தான் சாருன்னு நெனச்சி பேசிச்சு..சார் கேட்டுட்டாரு..எவ்ளோ சொல்லியும் வீம்பா இருக்காரு.."

"அவனப் பத்தி உனக்கு தெரியும் தான..யாராச்சும் அவன இன்சல்ட் பண்ணினா அவங்கள மன்னிக்கிறதும் நம்புறதும் அவ்ளோ ஈசி இல்லன்னு உனக்கு தெரியும் தான.."

"................."

"அதுவும் இல்லாம அந்தப் பொண்ணு தான் ராகவ்வ ஏமாத்தின பொண்ணுன்னும் நெனச்சி கிட்டு இருக்கான்..அவன் எப்டி கோவப்படாம இருப்பான்னு நீயே சொல்லு.."

கமலேஷிடம் பதில் இல்லை.அவனுக்கும் முதலாளியின் எதிர்வினை,என்னவாக இருக்கும் என்று யோசிக்க முடியாமல் தான் இருந்தது.

"சரி நீ யோசிக்காத..அந்த பொண்ணு கேரியர்ல இவன் கை வக்க விடாம நா பாத்துக்குறேன்..நீ ஃப்ரீயா விடு.." கூறி விட்டு அலைபேசியை அணைத்தவனோ,தோழனை ஒரு முறை சந்திப்பதே உசிதம் எனத் தோன்றிட,உடனே கிளம்பியிருந்தான்.

நிழல் நீளும்.

2026.04.21
 
Top Bottom