"அண்ணனும், அண்ணியும் இறந்த இரண்டாவது நாள் அண்ணியோட அப்பா அம்மா அவங்க கூட விக்ரம் மூணு பேருமே எங்க வீடு தேடி வந்திருந்தாங்க.. வந்தவங்க முதல்ல என் மடியில இருந்த தம்பியைத்தான் கொஞ்ச ஆரம்பிச்சாங்க.
எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியல.அவன் பொறந்ததிலிருந்து வந்து பார்த்தது கிடையாது. அண்ணி இறப்புக்கு வந்தப்போ கூட அவன் அழுதுட்டு இருந்தான், ஒரு தடவை கூட தூக்கி வச்சு கொஞ்சல.ஆனா அன்னைக்கு மட்டும் அவனைத் தூக்கி வச்சு கொஞ்சுறாங்க. என்னால அவங்க கிட்ட இருந்து தம்பியை பிடுங்கவும் முடியல.
எப்படியும் அவனுக்கு அவங்க ரத்த சொந்தம் தானே... அண்ணியோட அப்பா அம்மா தானே...
அதனால அமைதியா நின்னு பார்த்துட்டு இருந்தேன்."என
தருணின் தலையை வருடியவள் ஒரு கசப்பான சிரிப்பை சிந்தினாள்.
"கொஞ்ச நேரம் அவனோட விளையாடினவங்க, திடீர்னு அவனை என் கையில கொடுத்துட்டு... இது எங்க பேரன். எங்களோட பொறுப்பு.. அது எங்களுக்கு தெரியும்ன்னு சொன்னாங்க.
அதுவரைக்கும் கூட அவங்க ஏதோ மனசு மாறி வந்திருக்காங்கன்னு நான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அடுத்த நிமிஷமே..."
அவளது குரல் இறுகியது.
"'உங்க பொண்ண எங்க பையனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க பையனுக்கு கட்டி வையுங்கன்னு கேட்டாங்க.
சத்தியமா சொல்றேன்... அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால வெளிய வரவே முடியல. அப்பாவும் அம்மாவும் கூட அதிர்ச்சியில எழுந்து நின்னுட்டாங்க."அந்த சம்பவம் இன்னும் கண்முன்னே நடப்பது போல வெறித்துப் பார்த்தாள்.
"ஆனா நாங்க எதுவும் பேசுறதுக்கு முன்னாடியே அக்கம் பக்கத்துல இருந்தவங்க பேச ஆரம்பிச்சுட்டாங்க. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க?இவ்வளவு நாளா
உங்க பொண்ண வேணாம்னு சொன்னது நீங்க தானே? அந்தப் பொண்ணு ஸ்வேதா இங்க சந்தோஷமா வாழ்ந்துச்சு.அவ உங்களை நினைச்சு வருத்தப்பட்ட நேரமெல்லாம் உண்டே தவிர, உங்களை வெறுத்து ஒரு வார்த்தை பேசல. ஆன உங்களுக்கு இப்ப என்ன திடீர்னு பாசம் பொங்குது?என்று கேட்க ஆரம்பிச்சாங்க.
அதுல ஒருத்தர்...நீங்க பேரனை பார்க்க வந்த மாதிரி தெரியல.
வேற ஏதோ காரியத்துக்காகத்தான் வந்திருக்கீங்கன்னு நேராவே கேட்டார்."என கண்களை மூடி ஒரு பெருமூச்சை விட்டாள்.
"அன்னைக்கு இறப்பு வீட்டுல உங்க பையன் நின்னு பேசுனது நாங்க எல்லாரும் பார்த்தோம், கேட்ட தான் செய்தோம்.. எனக்கு அவளை பிடிச்சிருக்கு, கட்டி வைங்கன்னு ஒரு பொருளை கேக்குற மாதிரி கேட்டான். இப்ப நீங்களும் அதே மாதிரி வந்து பொண்ணு கேட்டு நிக்கிறீங்க.
பிரியா உங்க கண்ணுக்கு என்ன? மனசும் உணர்வும் இருக்குற ஒரு பொண்ணா? இல்ல நீங்க ஆசைப்பட்டா வாங்கிக்கிற பொருளா?என்று கேட்டாங்க.
அதோட நிறுத்தல... இந்த குடும்பம் இன்னும் பாலாவையும் ஸ்வேதாவையும் இழந்த துக்கத்திலிருந்து கூட வெளியே வரல.அதுக்குள்ள இப்படி வந்து நிற்கிறீங்களே, உங்களுக்கு வெட்கமா இல்ல?
நீங்க பத்து மாசம் சுமந்து பெத்த மகள் தானே ஸ்வேதா ? அவளோட இறப்பிலிருந்து உங்களால அதுக்குள்ள மீண்டு வர முடிஞ்சுதா? அதுக்குள்ள அவளோட நாத்தனாரைப் பொண்ணு கேட்டு வந்து நிக்கிறீங்களே?என அங்கிருந்தவர்கள் வெளிப்படையாகவே பேசினார்கள்.
அப்போ, அவங்க கேட்கிற ஒவ்வொரு வார்த்தையும் தான் என் மனசுலையும் கேள்வியா ஓடுச்சு..
அக்கம் பக்கத்துல இருக்கவங்க கேள்வி மேல் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க, விக்ரமோட அப்பா எரிச்சலுடன் அவர்களைப் பார்த்தாரு.
நாங்க உங்களை வந்து கருத்து கேட்கல சரிங்களா? நீங்க இதுல தலையிட வேண்டாம். இறப்புக்கு வந்தீங்களா... பார்த்தீங்களா... போனீங்களான்னு இருங்க.
எங்க வீட்டு விஷயத்துல மூக்கை நுழைக்க வேண்டாம்னு அவங்க முகத்துல அடிச்ச மாதிரி பேசினாரு.."அனைத்தும் இன்று நடந்தது போல பிரியாவுக்கு கசப்பாகச் சிரிக்கத் தோன்றியது
அண்ணி இருந்த வரைக்கும் அவங்கள தன்னோட மகளாக ஏற்றுக் கொள்ளாதவர்கள்... அண்ணன் உயிரோடு இருந்தபோது அவரை மருமகன் என்று கூட அழைக்காதவர்கள்... இன்னைக்கு அவங்க தேவைக்காக மட்டும் உறவுகளைத் தூக்கிப் பிடிக்கிறாங்க.
ஏற்கனவே இந்த வீட்டுல என் பொண்ணைக் கொடுத்திருக்கேன். இப்போ என் மருமகனும் இல்லை... அவரோட அப்பா அம்மாவும் வயசானவங்க.
இனிமேல் இந்தப் பொண்ணை யார் பார்த்துக்கப் போறாங்க?
என் பேரனை யார் பார்த்துக்கப் போறாங்க? கனு கேட்டாங்க..
என் மகள் இல்லன்னு தெரிஞ்ச பிறகும், என் பேரனை நான் பார்த்துக்குறேன்னு சொல்றேன்.
அதோட இவளையும் என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றேன்.
முக்கியமா என் பையனுக்கு இவளை ரொம்ப பிடிச்சிருக்கு.
அதனாலதான் பொண்ணு கேட்டு வந்திருக்கேன்.இல்லன்னா நான் ஏன் இந்த மாதிரி நேரத்துல இங்க வந்து நிக்கப் போறேன்? அதுவும் இந்த வீட்ல வந்து நிக்க போறேன்? ன்னு சொன்னாங்க.. அவங்க வார்த்தையில பாசமோ, அக்கறையோ இல்லை.
ஏதோ ஒரு கணக்கு போட்டு முடிவு எடுத்தவங்க போலத்தான் பேசினாங்க.." அவர்களை பார்த்துக் கொண்டிருந்த பிரியாவுக்கு அப்போதுதான் ஒன்று தெளிவாகப் புரிந்தது.
அவர்கள் தங்கள் உண்மையான முகத்தை மறைக்கவே முயற்சிக்கவில்லை.இப்படித்தான் நாங்கள்...என்று நேராகக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.அதை நினைக்க நினைக்க அவளுக்கு அருவருப்பாக இருந்தது.
"அந்த நேரத்தில் அண்ணனோட ஃப்ரெண்ட் தான் எங்களுக்கு ஆதரவாக நின்றார். உங்களை யாரும் கூப்பிட்டு எங்க வீட்டு பொண்ணை கட்டிக்கிட்டு போங்கன்னு சொல்லல. அதே மாதிரி பாலா புள்ளையை எப்படி வளர்க்கணும்னு எங்களுக்கும் தெரியும்னு சொன்னார்..
அந்த அண்ணா முழுசா பேசி முடிக்கிறதுக்குள்ள, அப்பா (விநாயகம் )பேச ஆரம்பிச்சாரு.
கையை உயர்த்தி அவரை அமைதியாக இருக்கச் சொல்லிட்டு, ஏற்கனவே உடைந்து போயிருந்த மனதை மேலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை போல." என விரக்தியாக சிரித்தாள்..
"மெதுவாக எழுந்து நின்னவர், விக்ரமின் அப்பா அம்மாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.
அந்தக் காட்சியை நினைத்தாலே இன்னும் என் மனசு வலிக்கும்.
ஏற்கனவே ஒரே நேரத்துல மகனையும் மருமகளையும் இழந்து நிக்கிறேன்.என்றுவர் முழுவதுமாக உடைந்து விட்டார்..அவரது குரல் தழுதழுத்தது.
இருக்கிறதிலேயே பெரிய சோகம் புத்திர சோகம் என்பாங்க.
அதை நான் அனுபவிச்சுட்டு இருக்கேன். என் மகனோட சேர்த்து, மகள் மாதிரி பார்த்த மருமகளையும் இழந்து நிக்கிறேன்" என ஒரு நொடி கண்களை மூடி தன்னை சமாளித்துக் கொண்டார்.
"போதும்...இனிமே எங்களை இப்படியே விட்டுருங்க. உங்க பொண்ணை நீங்க ஏத்துக்கல கடைசி வரை..அது உங்க விருப்பம். ஆனா என் பேரனை இப்ப நீங்க உரிமை கொண்டாடவும் தேவையில்லை. அவனை வளர்க்கவும் தேவையில்லை." என்று உறுதியாகச் சொன்னார்.
அவரது குரலில் கோபம் இல்லை.
ஆனால் அதைவிட வலிமையான உறுதி இருந்தது.
"என் பேரனை பார்த்துக்க நானும், என் பொண்டாட்டியும், என் மகளும் இருக்கோம்.ஏற்கனவே பேரனை அதிகமா பார்த்துக்கிட்டது என் மகள்தான்.என் மருமகள் உயிரோட இருந்தப்போ கூட, எங்களை விட என் மகளை நம்பித்தான் அவன் பொறுப்பை விட்டுட்டு போயிருக்கா.
எங்களுக்கு எங்க பேரனை எப்படி வளர்க்கணும்னு தெரியும்.என் பிள்ளைகளை வளர்த்த எனக்கு, என் பேரனை வளர்க்கத் தெரியாதா?"என்று கேட்டார்.
அந்த நேரத்தில் அங்கிருந்த பலரின் கண்களும் கலங்கியிருந்தது.
"உடம்புல தெம்பும் இருக்கு.மனசுல வைராக்கியமும் இருக்கு.
தேவைப்பட்டா கூலி வேலைக்கு போயாவது என் பேரனை நான் வளர்ப்பேன்.உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.என் பேரனையும் என் மகளையும் நான் பார்த்துக்கிறேன். இப்போதைக்கு என் மகளுக்கு கல்யாணம் பண்ற மனநிலையில் நாங்க கிடையாது."
என்று கூறியவர் சிறிது நேரம் அமைதியாக நின்றார்.
பின் மெதுவாக,"என் மகள் கல்யாணமே பண்ணாம எங்களோட இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.ஆனா..."என்று நிறுத்தினார்.
விக்ரமையும் அவனது பெற்றோரையும் பார்த்தார்.
அவர்களைப் பற்றி சொல்ல வார்த்தைகளே அவருக்கு கிடைக்கவில்லை.
"இப்படிப்பட்ட ஒரு குடும்பத்துக்கு...
என் மகளை கொடுக்க எனக்கு ஒரு சதவீதம் கூட விருப்பம் இல்லை.தயவுசெய்து கிளம்பிடுங்க."என்று மீண்டும் கையெடுத்து கும்பிட்டார்.
அவருக்கு சண்டை போடத் தோன்றவில்லை.கோபப்படவும் முடியவில்லை.
ஏனென்றால் அந்த நேரத்தில் அவரை ஆட்டிப்படைத்தது கோபம் அல்ல...புத்திர சோகம்.
தனக்கு கொள்ளி போட வேண்டிய மகனுக்கே, தானே கொள்ளி வைத்துவிட்டு வந்து நின்றிருக்கிறோம் என்ற எண்ணமே அவரை முழுவதுமாக உடைத்துப் போட்டிருந்தது.
"இவங்ககிட்ட எல்லாம் இப்படி அசிங்கப்பட்டு நிற்கணும்னு என் தலையெழுத்தா?" என்று வெடித்தார் ஸ்வேதாவின் தந்தை.
"ஏற்கனவே உன் அக்கா எங்களை ஊருக்கே தலைகுனிய வச்சது பத்தாதுன்னு, இப்போ நீ வேற இந்த வீட்டுக்குப் பின்னாடி அலைஞ்சிட்டு இருக்கியா? இதுக்கு மேல இதைப் பத்தி ஒரு வார்த்தை பேசினாலும் நான் மனுஷனா இருக்க மாட்டேன் விக்ரம்."
அவனின் அம்மா எரிச்சலுடன்,
"உனக்கு ஊர் உலகத்துல வேற பொண்ணே கிடைக்கலையா? வெளிநாட்டுக்கு போறவன் நீ. நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல குடும்பம்..என்ன குறை உனக்கு? அதையெல்லாம் விட்டுட்டு இந்தப் பொண்ணுதான் வேணும்னு ஒத்தக் கால்ல நிக்கிற?"என்று பிரியாவை ஒரு பார்வை பார்த்தவர் முகத்தைச் சுளித்தார்.
விக்ரமோ எதையும் காதில் வாங்காதவன் போல, "எனக்கு அவதான் வேணும்..."என்று மீண்டும் அதே வார்த்தையைத் திருப்பிக் கூறினான்.
அவ்வளவுதான்.அடுத்த நொடியே அவனது அப்பா கொதித்தெழுந்தார்.
"தெளிவா சொல்லுறேன் விக்ரம். இந்த விஷயத்தை இத்தோட விட்டுடு. இல்லன்னா நான் சம்பாதிச்ச சொத்து முழுக்க உன் சித்தப்பா பசங்களுக்கு எழுதி வச்சுட்டு போயிடுவேன். அப்புறம் எதுவும் இல்லாம நீ நடுதெருவுல தான் நிக்கணும்.. நிதானமா யோசிச்சுக்கோ.
இந்தக் குடும்பத்துல இருந்து எனக்கு மருமகளை கொண்டு வரணும்னு நான் கனவுல கூட நினைக்கலை. அதை மட்டும் மனசுல வச்சுக்கோ." என்று கடுமையாக எச்சரித்தவர், அங்கிருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக வெளியேறினார்.
அவரது மனைவியும் மகனை வெறுப்புடன் பார்த்தபடி பின்தொடர்ந்தார்.
அவர்கள் சென்ற பிறகும் விக்ரம் மட்டும் அசையாமல் நின்றிருந்தான்.
அவனது பார்வை முழுவதும் பிரியாவின் மீதே நிலைத்திருந்தது.
அந்தப் பார்வை பிரியாவிற்கு அருவருப்பையும், விளங்காத அச்சத்தையும் ஒருசேரக் கொடுத்தது.
விக்ரம் பிரியாவையே பார்த்தபடி நின்றிருந்தான்.
ஆனால் அவனுக்கு அவளைப் பிடித்துப் போய் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
ஏனோ அவளைப் பார்த்த அந்த நொடியிலேயே, அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவனுக்குள் வேரூன்றி விட்டது.
இளமையும், கட்டுப்பாடற்ற மனமும் சேர்ந்து அவனைத் தூண்டியது என்பதே உண்மை.
இப்போதும் கூட அவளை வாழ்க்கைத் துணையாக நினைக்கவில்லை.
எப்படியாவது அவளைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனுக்குள் இருந்தது.
அவள் மீது காதலும் இல்லை.
உண்மையான ஈர்ப்பும் இல்லை. முழுக்க முழுக்க தனது ஆசை நிறைவேற வேண்டும் என்ற சுயநலமே அவனை ஆட்டிப் படைத்தது.
சில நொடிகள் அமைதியாக நின்றவன்,"நீ என்னை இப்போ வேண்டாம்னு சொல்லலாம். ஆனா என்னைக்காவது ஒரு நாள் நீ எனக்குத்தான்.இன்னைக்கு உன்னை விட்டுட்டுப் போறேன். அதுக்கும் காரணம் இருக்கு.
ஒன்னு, என் அப்பா அம்மாவே என்னைத் திட்டிட்டு போறாங்க. இந்தச் சொத்தை என் சித்தப்பா பசங்களுக்கு எழுதி வச்சிடுவேன்னு மிரட்டுறாங்க.
இன்னொன்னு, எனக்கு இப்போதான் ஃபாரின் ஆஃபர் கிடைச்சிருக்கு. அதுக்காகத்தான் இத்தனை வருஷம் காத்திருந்தேன். அதை இப்போ விடவும் முடியாது.
"அதுவும் இல்லாம, நீ இன்னும் படிச்சிட்டு இருக்க.உங்க அப்பாவும் இப்போ சொன்னாரு. இந்த நேரத்துல உனக்கு கல்யாணத்தைப் பத்தி பேச மாட்டாங்கன்னு.அதனால இப்போ போறேன்.ஆனா திரும்பி வருவேன்.வெயிட் அண்ட் சீ..."
என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
அப்போது அவனுக்கு வெளிநாடு செல்வதே முக்கியமாக இருந்தது.
அதனால் இரண்டு நாட்களுக்குப் பிறகே வெளிநாட்டிற்குப் புறப்பட்டு சென்றுவிட்டான்.
கிளம்புவதற்கு முன் கூட தன் தாய் தந்தையிடம்,
"எனக்கு பிரியாதான் வேணும்..."
என்று பிடிவாதமாகக் கூறிவிட்டுத்தான் சென்றான்.
மகனின் மனதில் என்ன இருக்கிறது என்பது பெற்றோருக்குப் புரியாமல் இல்லை.
அவன் பிரியாவை நேசிக்கவில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
அவளை வாழ்க்கைத் துணையாக மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விட, அவளை அடைந்து விட வேண்டும் என்ற பிடிவாதம்தான் அவனிடம் அதிகமாக இருந்தது.
அதனால்தான் அவனது போக்கு சரியில்லை என்று நினைத்தும், அந்த நேரத்தில் மேலும் எதுவும் பேசவில்லை."போயிட்டு வா... "
'அங்க போன பிறகு மனசு மாறிடும்...'என்று நினைத்தவர்கள் அவனை அனுப்பி வைத்தனர்.
வெளிநாடு சென்ற பிறகு இதையெல்லாம் மறந்துவிடுவான் என்ற நம்பிக்கையும் அவர்களுக்குள் இருந்தது.