முதல் ஹியரிங் முடிந்து நாட்களும் நகர்ந்தன.
அடுத்த ஹியரிங் வருவதற்கான இடைப்பட்ட காலத்தில், பிரியாவை நேரில் சந்தித்து பேசலாம் என்று விக்ரம் எண்ணியிருந்தான். ஆனால் அவனது எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது அவனது வக்கீலான பிரபுதான்.
"இந்த நேரத்துல நீங்க அவங்களை நேரடியா போய்ப் பார்க்கிறதோ, பேசுறதோ வேண்டாம் சார்.
கோபத்துல ஏதாவது ஒரு வார்த்தையை விட்டுட்டீங்கன்னா, அதையே திருப்பி உங்களுக்கு எதிரா பயன்படுத்திக்கலாம்.
இப்போ வழக்கு கோர்ட்டுல இருக்கு. ஆகையால முடிஞ்ச அளவுக்கு பொறுமையா இருங்க.
தேவையில்லாம அவங்க முன்னாடி போய் நின்னு பேசாதீங்க. உங்க கிட்ட இருந்து ஏதாவது ஒரு வார்த்தையை வாங்கி, அதை தனக்கு சாதகமா மாத்திக்கிறதுக்கு எதிர் தரப்பு காத்துட்டு இருக்கும்."
பிரபு கூறியதிலிருந்த நியாயத்தை உணர்ந்த விக்ரம், அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
வேறு வழியும் அவனுக்கு இல்லை.
ஏற்கனவே முதல் ஹியரிங்கிலேயே சில விஷயங்கள் தனக்கு எதிராகத் திரும்ப ஆரம்பித்திருந்ததை அவன் உணர்ந்திருந்தான்.
எனவே, அவசரப்பட்டு ஏதாவது செய்து தன் கையிலிருந்த வாய்ப்பையும் இழக்க அவன் விரும்பவில்லை.
'இன்னும் கொஞ்ச நாள் தான்...'
என்று மனதிற்குள் கூறிக்கொண்டவன், தனது கோபத்தையும் அவசரத்தையும் அடக்கிக் கொண்டான்.
பிரியா முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.
பரத்தும் பெரிதாகப் பிரியாவிற்கு போன் செய்து அவளது மனநிலையைக் கலைக்க விரும்பவில்லை.
அவளாக அழைத்தால் இயல்பாகப் பேசிக் கொள்வான். ஆனால் தானாகவே போன் செய்து, "எப்படி இருக்க?", "என்ன நடந்தது?", "எதாவது பிரச்சனையா?" என்று கேட்டு அவளைத் தொந்தரவு செய்ய முயற்சிக்கவில்லை.
அதே சமயம், முற்றிலுமாக ஒதுங்கி நிற்பதாகவும் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.
அதனால் கோர்ட் தொடர்பான விஷயங்களை மட்டும் சதிஷிடம் அவ்வப்போது போன் செய்து கேட்டுத் தெரிந்து கொண்டான். சில நேரங்களில் நேரிலேயே சென்று விசாரித்தும் நிலைமையை அறிந்து கொண்டான்.
பிரியாவிற்கு தேவையான இடைவெளியைக் கொடுத்தபடியே, அவளுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் உடனே அருகில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டான்.
இப்படியாக நாட்கள் நகர, இரண்டாவது ஹியரிங்கிற்கான நாளும் வந்தது.
இரண்டாவது விசாரணை நாள்...
நீதிபதி தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை சில நிமிடங்கள் பார்த்துவிட்டு தலையை உயர்த்தினார்.
"குழந்தை தற்போது யாருடன் அதிக உணர்வுப்பூர்வமான பிணைப்பில் இருக்கிறது என்பதை நீதிமன்றம் நேரடியாக அறிந்து கொள்ள விரும்புகிறது."
என்றவர்,"குழந்தையை உள்ளே அழைத்து வாருங்கள்."என்றார்.
அந்த வார்த்தையில் பிரியாவின் இதயம் வேகமாகத் துடித்தது.
சில நொடிகளில் தருணை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள் பிரியா.
கோர்ட் அறையில் இருந்த கூட்டத்தைப் பார்த்த சிறுவன் முதலில் தயங்கினான்.
உடனே பிரியாவின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.
அதை நீதிபதி அமைதியாகக் கவனித்தார்.
"உன் பேர் என்ன கண்ணா?"என
மெதுவாகக் கேட்டார் நீதிபதி.
"தருண்..."என்று மழலையாகச் சொன்னான்.
"ஸ்கூலுக்குப் போறியா?"
"போறேன்..."
"எந்த கிளாஸ்?"
"எல்கேஜி..."என்று பெருமையாகச் சொன்னான்.
அவன் பதில் சொல்வதைப் பார்த்து நீதிபதிக்கும் சிரிப்பு வந்தது.
சில நிமிடங்கள் சாதாரணமாகப் பேசிய பிறகு,"உன்னை தினமும் ஸ்கூலுக்கு யார் கூட்டிட்டு போவாங்க?"என்று கேட்டார்.
"ப்ரியா அம்மா..."உடனே பதில் வந்தது அவனிடமிருந்து.
"சாப்பாடு யார் ஊட்டி விடுவாங்க?"
"அம்மா..."
"உனக்கு உடம்பு சரியில்லனா யார் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவாங்க?"
"அம்மா..."என்றான்.
ஒவ்வொரு பதிலுக்கும் பிரியாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நீதிபதியின் பார்வை ஒரு நொடி விக்ரமின் மீது விழுந்தது.
பிறகு மீண்டும் குழந்தையை நோக்கினார்."இவரை தெரியுமா கண்ணா?"என்று விக்ரமைக் காட்டிக் கேட்டார்.
தருண் சில விநாடிகள் விக்ரமைப் பார்த்தான்.
பிறகு மெதுவாகத் தலையசைத்தான்."தெரியாது..."
என்றான்.
அந்த ஒரு வார்த்தை நீதிமன்றத்தில் இருந்த பலரையும் அமைதியாக்கியது.
விக்ரமின் முகம் இறுகியது.
அவன் ஏதோ சொல்ல நினைத்தான்.ஆனால் வார்த்தைகள் வரவில்லை.
நீதிபதி குழந்தையை மேலும் சங்கடப்படுத்த விரும்பவில்லை.
"சரி கண்ணா... நீ போய் அம்மாக்கிட்ட உட்காரு."என்றார்.
அடுத்த நொடி தருண் ஓடி வந்து பிரியாவின் மடியில் ஏறிக் கொண்டான்.
அவளது கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொண்டான்.பிரியாவும் அவனை அணைத்துக் கொண்டாள்.
அந்தக் காட்சியை சில நொடிகள் பார்த்த நீதிபதி,"குழந்தை தற்போது யாருடன் உணர்வுப்பூர்வமாக இணைந்திருக்கிறது என்பது நீதிமன்றத்திற்குத் தெளிவாகத் தெரிகிறது."என்றார்.
"மாண்புமிகு நீதிபதி அவர்களே, கடந்த நான்கு ஆண்டுகளாக நான் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். வேலை மற்றும் சூழ்நிலை காரணமாக இங்கே தொடர்ந்து இருக்க முடியவில்லை. சமீபத்தில்தான் திரும்பி வந்தேன்.
திரும்பி வந்த உடனேயே என் அக்கா மகனைப் பார்க்க முயற்சி செய்தேன். ஆனால் அந்த வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லை," என்றான் விக்ரம்.
நீதிபதி சில நொடிகள் அவனைப் பார்த்தார்.
"நீங்கள் வெளிநாட்டில் இருந்தது சரி. உங்கள் பெற்றோர்கள் இங்கேதானே இருந்தார்கள்?"
"ஆமாம் சார்."
"அவர்கள் குழந்தையைப் பார்க்க முயற்சி செய்தார்களா?"
சில நொடிகள் அமைதியாக நின்றவன்,"முயற்சி செய்தார்கள் சார்."
"அப்படியானால் ஏன் குழந்தை அவர்களிடம் வளரவில்லை?"
விக்ரம் சற்று தடுமாறினான்.
"அது... அக்காவின் திருமணம் வீட்டின் விருப்பத்திற்கு எதிராக நடந்தது சார். அதனால் சில வருடங்கள் குடும்பத்தில் மனக்கசப்பு இருந்தது."
"ஆனால் அக்கா இறந்த பிறகு அந்த நிலை மாறிவிட்டது. அப்பாவும் அம்மாவும் குழந்தையைத் தங்களுடன் வளர்க்க விருப்பம் தெரிவித்தார்கள்."
அப்போது சதீஷ் எழுந்தான்.
"மாண்புமிகு நீதிபதி அவர்களே, ஒரு விளக்கம் கேட்க விரும்புகிறேன்."
நீதிபதி தலையசைத்தார்.
"மிஸ்டர் விக்ரம், உங்கள் அக்கா இறந்து எத்தனை வருடங்கள் ஆகிறது?"
"நான்கு வருடங்கள்."
"இந்த நான்கு வருடங்களில் உங்கள் பெற்றோர் அல்லது நீங்கள் குழந்தையின் பராமரிப்பிற்காக என்ன செய்தீர்கள்?"
விக்ரமின் முகம் சற்று மாறியது.
"என்ன சொல்றீங்க?"
"குழந்தையின் பள்ளிச் செலவு, மருத்துவச் செலவு, அன்றாட பராமரிப்பு செலவு... இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு நீங்கள் பொறுப்பேற்றிருக்கிறீர்களா?"
விக்ரம் பதில் சொல்லாமல் நின்றான்.
"கேள்வி புரியலையா?"
"இல்ல...புரியுது"
"அப்படியானால் பதில் சொல்லுங்கள்."
"நேரடியா அப்படி எதுவும் செய்ய முடியல."
"ஏன் முடியவில்லை?"
"சூழ்நிலை..."
"என்ன சூழ்நிலை?"
மீண்டும் அமைதி.
சதீஷ் தொடர்ந்தான்.
"சரி. பண உதவி செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம். குழந்தையின் பிறந்தநாளுக்கு சென்றிருக்கிறீர்களா?"
"இல்ல."
"பள்ளியில் சேர்க்கப்பட்டபோது இருந்தீர்களா?"
"இல்ல."
"உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவமனைக்கு சென்றிருக்கிறீர்களா?"
விக்ரமால் பதில் சொல்ல முடியவில்லை.
"இல்லை தானே?"
அவன் அமைதியாக நின்றான்.
"அப்படியானால் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் குழந்தையின் வாழ்க்கையில் நீங்கள் எந்த இடத்தில் இருந்தீர்கள் என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள விரும்புகிறது."
உடனே விக்ரம் தரப்பு வக்கீல் எழுந்தார்.
"எதிர்ப்பு, மாண்புமிகு நீதிபதி அவர்களே. என் கட்சிக்காரர் வெளிநாட்டில் இருந்ததை ஏற்கனவே விளக்கியிருக்கிறார்."
"அவர் குழந்தையை வேண்டாம் என்று எங்கும் சொல்லவில்லை."
சதீஷ் அமைதியாக திரும்பினான்.
"நானும் அதைத்தான் கேட்கிறேன்."
"குழந்தையை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் குழந்தைக்காக என்ன செய்தார்?"
நீதிமன்றம் சில நொடிகள் அமைதியாக இருந்தது.
அப்போது நீதிபதி நேராக விக்ரமைப் பார்த்தார்.
"மிஸ்டர் விக்ரம், இந்த நீதிமன்றம் உறவுகளை மட்டும் பார்க்காது. பொறுப்புகளையும் பார்க்கும்."
"இப்போது நீங்கள் குழந்தையின் நலனுக்காக வந்திருக்கிறீர்கள். அது நல்ல விஷயம்."
"ஆனால் கடந்த ஆண்டுகளில் குழந்தையின் வாழ்க்கையில் உங்கள் பங்களிப்பு என்ன என்பதையும் இந்த நீதிமன்றம் அறிய வேண்டும்."
விக்ரமால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.
அவன் அமைதியாகத் தலைகுனிந்து நின்றான்.
"குழந்தை தற்போது பிரியாவுடன் உணர்வுப்பூர்வமாக நெருக்கமாக இருப்பது நீதிமன்றத்திற்குத் தெளிவாகத் தெரிகிறது.
அதே நேரத்தில், குழந்தையின் எதிர்கால நலன், பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வமான அம்சங்களையும் நீதிமன்றம் கவனிக்க வேண்டியிருக்கிறது.
எனவே தற்போது எந்த இறுதி முடிவையும் எடுக்க நீதிமன்றம் விரும்பவில்லை.குழந்தையின் தற்போதைய சூழல், வளர்ப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பான கூடுதல் விவரங்கள் நீதிமன்றத்திற்குத் தேவைப்படுகிறது.
இரு தரப்பினரும் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யலாம்.அடுத்த விசாரணை நாளில் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்."என நீதிபதி எழுந்து செல்ல, விக்ரமின் முகம் இறுகியது.
தருண் மீண்டும் பிரியாவின் அருகே ஓடி வந்து அவளது கையைப் பற்றிக் கொண்டதைப் பார்த்தவன், எதுவும் பேசவில்லை.
அவன் பேச முயன்றவுடன் அவனது வக்கீல் மெதுவாக
"சார்... இப்போ எதுவும் பேசாதீங்க.கோர்ட்டு வளாகத்துல ஒரு வார்த்தை கூட பிரச்சினையா மாறலாம்.பொறுமையா இருங்க."
பற்களைக் கடித்தபடி நின்ற விக்ரம், ஒரு நொடி பிரியாவை ஆழமாகப் பார்த்தான்.
அந்தப் பார்வையில் தோல்வியும் இல்லை... ஒப்புக்கொள்ளுதலும் இல்லை...
ஏதோ ஒரு பிடிவாதம் மட்டும் தெரிந்தது.
அடுத்த நொடி எதுவும் பேசாமல் திரும்பி நடந்தான்.
விசாரணை முடிந்து அனைவரும் வெளியே வந்தனர்.
கோர்ட் வளாகத்தை விட்டு வெளியே வரும்போது, தருணைத் தூக்கிக் கொண்டு வந்திருந்தாள் பிரியா.
சசியும் பரத்தும் அருகில் வந்து சேர்ந்தனர்.
"என்ன தங்கச்சி மா, இப்போதாவது நிம்மதியா இருக்கியா?" என்று சசி கேட்டான்.
"கொஞ்சம்..." என்று சிரிக்க முயன்றாள் பிரியா.
அப்போது பிரியாவின் தோளில் இருந்த தருண் திடீரென சசியை நோக்கிக் கைகளை நீட்டினான்.
"சித்து..."என்று மழலைக் குரலில் அழைத்தான்.
ஒரு நொடி ஆச்சரியப்பட்ட சசி,
"என்னடா கண்ணா?" என்று சிரித்தபடி அவனை வாங்கிக் கொண்டான்.
அவன் கைக்கு வந்தவுடன் சசியின் கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொண்டான் தருண்.
"அடடா... இவன் இவ்வளவு சீக்கிரம் என்கிட்ட ஒட்டிகிட்டானே !"
என்று சசி சிரிக்க,
பிரியாவின் முகத்திலும் லேசான புன்னகை மலர்ந்தது.
"உங்களை ரெண்டும் டைம் பார்த்ததுல நல்லா ஒட்டிகிட்டான் ண்ணா.. அதும் இன்னைக்கு நான் பேசும் போது நீங்க அவனை வச்சு இருந்ததுல நல்லாவே உங்களை அடையாளம் கண்டுகிட்டான்.. அதான்.." என்றாள்.
"அவனுக்கே நல்லவங்க யாருன்னு தெரிஞ்சிருக்கு," என்று சசி பெருமையாகச் சொல்ல,
தருண் உடனே தலையசைத்து சிரித்தான் அவனுக்கு என்ன புரிந்ததோ?.
அதைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.
சிறிது இடைவெளி விட்டு நின்றிருந்த பரத், அந்தக் காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பிரியாவின் முகத்தில் பல நாட்களுக்குப் பிறகு தெரிந்த அந்தச் சிறிய புன்னகை அவனது மனதையும் லேசாக்கியது.
எதுவும் பேசவில்லை.
பேச வேண்டிய அவசியமும் அவனுக்குத் தோன்றவில்லை.
அந்த நிமிடத்தில் பிரியா, தருண், சசி மூவருக்கும் இடையில் உருவாகிக் கொண்டிருந்த பந்தத்தை அமைதியாக ரசித்தபடி மட்டும் நின்றிருந்தான்.
பிரியாவும் தனது பெற்றோருடன் கிளம்பிச் சென்ற பிறகும், பரத் அவர்கள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனருகே வந்த சசி, அவன் தோளைத் தட்டினான்.
"என்ன மச்சான்?"
"ஒண்ணும் இல்லடா...உன்கிட்ட பிரியாவும் சரி, தருணும் சரி நல்லா ஒட்டிக்கிட்டாங்க போல."
என்ற பரத்தின் இதழ்களில் லேசான புன்னகை மலர்ந்தது.
"பிரியாவைப் பத்தி நான் எதிர்பார்த்தேன் டா. ஆனா தருண் இந்த மட்டுக்கு என்கிட்ட ஒட்டிப்பான் என்று நான் எதிர்பார்க்கலடா."ல
ஆன,இதுதான் ஆரம்பம் மச்சான். இன்னும் பாரு," என்று சிரித்தான் சசி.
சில நிமிடங்கள் பேசிவிட்டு இருவரும் தத்தம் வீடுகளுக்குக் கிளம்பினர்.
வீட்டிற்கு வந்த பிறகும் சசியின் நினைவில் தருண்தான் இருந்தான்.
கோர்ட் வளாகத்தில் தன்னைப் பார்த்ததும் கைகளை நீட்டி வந்ததும், தன்னிடம் ஒட்டிக் கொண்டதும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து சென்றது.
"என்னங்க... ரொம்ப நேரமா எதையோ யோசிச்சிட்டு இருக்கீங்க?"என்றபடி குழந்தையுடன் வந்து அவனருகே அமர்ந்தாள் ரேகா.
"ஒண்ணும் இல்லடி."
"இல்ல. கொஞ்ச நாளாவே நீங்க சரியில்ல.ஏதோ விஷயம் இருக்குன்னு தெரியும். முன்னாடி கேட்டப்போ சொல்லலை. ஆனா இப்போ ரெண்டு மூணு நாளா ரொம்ப தீவிரமா யோசிக்கிற மாதிரி இருக்கீங்க.என்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு பெரிய விஷயமா?"
அவளைப் பார்த்துச் சிரித்தவன்,
"அப்படியெல்லாம் இல்லடி. இங்க வா..."என்று அவளைத் தன்னருகே அமர வைத்தான்.
அவனது தோளில் சாய்ந்தவள், மெதுவாக அவன் தலையை வருடினாள்."சொல்லுங்க..."
"இன்னைக்கு தருண் என்கிட்ட ரொம்ப ஒட்டிக்கிட்டான். உண்மையாவே அந்த அளவுக்கு ஒட்டிப்பான்னு நான் எதிர்பார்க்கல."
ரேகா புரியாமல் அவனைப் பார்த்தாள்."தருணா? அது யாருங்க?"என்று புருவம் சுருக்கிக் கேட்டாள்.
லேசாகச் சிரித்தவன்,
"சொல்றேன் ரேக்ஸ்... சொல்லாமலா இருப்பேன்?" என்றான்.
அவனது தோளில் இன்னும் சாய்ந்திருந்தவள் ஆர்வமாக அவனைப் பார்த்தாள்.
"நான் சொல்ற தருண், உன் அண்ணன் லவ் பண்ற பொண்ணோட அண்ணன் பையன்." என்று கூறியவுடன் ரேகாவின் கண்கள் அகல விரிந்தன.
"என்னங்க? அண்ணா லவ் பண்றாரா? நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல!
வினி கூட ஒரு முறை அண்ணா யாரையோ லவ் பண்ற மாதிரி இருக்குன்னு டவுட்டா கேட்டா. அப்ப கூட நான் இல்லடி, வேற ஏதாவது விஷயமா இருக்கும் என்று சொல்லிட்டேன்.அப்போ அவ கணிப்பு சரிதானா?"என்றவள் முறைத்தாள்.
"நீங்க என்கிட்ட மறைச்சிட்டீங்க!"
சிரித்துக் கொண்டே அவளைத் தன்னருகே இழுத்துக் கொண்டவன்,அவனே என்கிட்ட முழுசா சொல்லாததை நான் எப்படி உன்கிட்ட சொல்ல முடியும்?" என்றான்.
"புரியலையே...என்னதான் விஷயம்?"என்று ஆர்வமாகக் கேட்டாள்.
"கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல அந்தப் பொண்ணை விரும்புறான். ட்ரெயின்ல பார்த்துதான் பழக்கம். ஆனா இன்னைக்கு வரைக்கும் அந்தப் பொண்ணுகிட்ட தன்னோட விருப்பத்தை சொல்லவே இல்ல."
ரேகா அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்."புரியலங்க...அண்ணா அந்தப் பொண்ணுகிட்ட காதலை சொல்லவே இல்லன்னு சொல்றீங்க.அப்புறம் நீங்க எப்படி இன்னைக்கு அந்தப் பையனையும் அந்தப் பொண்ணையும் பார்த்தீங்க?"
சிறிது நேரம் அமைதியாக இருந்த சசி, பெருமூச்சு விட்டான்.
அதன்பிறகு சில விஷயங்களைத் தவிர்த்து, மேலோட்டமாக நடந்தவற்றைக் கூறினான்.
பிரியாவை எப்போது முதல் பரத் விரும்புகிறான் என்பதையும், இடைப்பட்ட காலத்தில் பிரியாவிற்கு ஏற்பட்ட பிரச்சனைகளையும், அந்தப் பிரச்சனைகளில் இருந்து அவளை வெளிக்கொண்டு வர பரத் அமைதியாக உதவி செய்து கொண்டிருப்பதையும் கூறினான்.
மேலும், இரண்டு முறை மட்டுமே சந்தித்திருந்த தருண் இன்று தன்னிடம் இவ்வளவு நெருக்கமாக ஒட்டிக்கொண்டது வரையிலான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டான்.
அனைத்தையும் கேட்ட ரேகா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
பிறகு,"அண்ணன் கிரேட்டுங்க..." என்றாள் மனமார.
சசி சிரித்தான்.
"எப்பவும் கிரேட் தான்டி. உன் அண்ணன்.."
"ஆனா உண்மையாவே ஆச்சரியமா இருக்கு.ஒரு வருஷமா விரும்புறாரு...அந்தப் பொண்ணுகிட்ட இதுவரைக்கும் சொல்லல...இவ்வளவு பிரச்சனையிலயும் அவளுக்கு துணையா நிக்கிறாரு...எப்படி இவ்வளவு நாள் அமைதியா இருக்காரு?"என்று வியப்புடன் கேட்டாள்.
அவளது தலைமுடியை வருடியபடி சசி மெதுவாகச் சிரித்தான்.
"உன் அண்ணன் என்னதான் அந்தப் பொண்ணை விரும்பினாலும், அவளோட மனசுக்கும் , விருப்பத்துக்கும் மதிப்பு கொடுக்குறான். அதைவிட முக்கியமா, இப்போ அவளுக்கு ஒரு துணை தேவைப்படுது..
அவளுக்கு யாராவது உறுதியா பின்னாடி நிக்கணும்.அதைத்தான் அவன் செய்றான்.இப்போ அவனுக்கு காதலை விட முக்கியம், அந்தப் பொண்ணு இந்தப் பிரச்சனையிலிருந்து வெளியே வரணும் என்பதுதான்.அதுதான் இப்போ அவனோட முதல் கவலை."
சசி கூறியதை கேட்ட ரேகாவின் முகத்தில் பரத்தின் மீது ஒரு புதிய மரியாதை தோன்றியது.
"அந்தப் பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவங்கங்க..." என்று மெதுவாக முணுமுணுத்தாள்.
சசி சிரித்துக் கொண்டான்.