"சரிங்க... இப்போ கோர்ட்டுல என்ன சொல்லி இருக்காங்க? அடுத்து என்ன பண்றதா இருக்கீங்க?"என்று ரேகா கேட்டாள்.
சசி தோளைக் குலுக்கினான்.
"இதுல நாங்க பண்றதுக்கு என்னடி இருக்கு? சதீஷ் பார்த்துக்கிட்டுதான் இருக்கான்.
மேல என்ன பண்ணணும்னு அவன் சொல்றானோ, அதுக்கேத்த மாதிரி தான் நம்ம நடக்க முடியும்.
அவனுக்குத்தானே கோர்ட்டு, கேஸ், புரொசீஜர் எல்லாம் சரியா தெரியும்."
"ஓ..."என்று தலையசைத்தவள் திடீரென,
"அப்போ வினிக்குத் இந்த விஷயம் தெரியுமா?"என்று கேட்டாள்.
அமைதியாக அவளைப் பார்த்தவன்,"கொன்றுடுவேன் உன்னை..." என்றவன்,.
"அண்ணன் லவ் பண்றார்னு தெரிஞ்சா மட்டும் பரவாயில்லை.
ஆனா அவர் விரும்புற பொண்ணுக்குப் பின்னாடி இவ்வளவு பிரச்சனை இருக்கு என்று தெரிஞ்சா, இன்னும் ரொம்ப உடைஞ்சு போய்டுவா. அவன் மேல அவளுக்கு எவ்வளவு பாசம் இருக்குன்னு உனக்கே தெரியும்.
இப்போதைக்கு அவளுக்குத் தெரிய வேண்டாம்.நான் சொல்றது புரியுதுன்னு நினைக்கிறேன்." என்றான்.
ரேகாவும் புரிந்தபடி தலையசைத்தாள்.
"சரி... இன்னும் எவ்வளவு நாள் ஆகும்?"
"கொஞ்சம் வெயிட் பண்ணணும்.
இன்னும் ஒரு ரெண்டு ஹியரிங்க்ல முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்."என்றான் சசி.
சிறிது நேரம் அமைதியாக இருந்த ரேகா,"அந்தப் பொண்ணுகிட்ட அண்ணன் இன்னும் லவ் சொல்லலன்னு சொல்றீங்க...
ஒருவேளை சொல்லிட்டு, அந்தப் பொண்ணு ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டா?"என்று கேட்டாள்.
உடனே அவள் தலையில் மெதுவாகக் கொட்டியவன்,
"அதுக்குள்ள எங்கெங்கயோ போயிடாதடி."என்றான்.
"ஏன்? நான் ஆசைப்படக் கூடாதா?"
என்று உதட்டைச் சுழித்தாள்.
"ஆசைப்படலாம்.ஆனா இப்போ அது கொஞ்சம் அதிகமா இருக்குன்னு தோணுது.
பொண்ணைப் பார்த்த உடனே போய் சம்மதம் வாங்கிட முடியாது.
இப்போதைக்கு உன் அண்ணன் மனசுல இருக்குறது, அந்தப் பொண்ணை இந்தப் பிரச்சனையிலிருந்து வெளியே கொண்டு வரணும் என்பதுதான்.
அதுக்கு அப்புறம் காதல், கல்யாணம் எல்லாத்தையும் பார்க்கலாம்.முதல்ல அவள் நிம்மதியா இருக்கணும்." என்றான்.
ரேகா யோசனையாகத் தலையசைத்தாள்.
"உண்மையைச் சொல்லணும்னா..."என்று சசி மீண்டும் பேச ஆரம்பித்தான்.
"இப்போதைக்கு உன் அண்ணன் அந்தப் பொண்ணுகிட்ட காதலைச் சொல்லுவானான்னே எனக்கே டவுட்டாதான் இருக்கு.
அங்க நடக்குறதைப் பார்த்தா, அவனோட காதலை விட அவளோட நிம்மதிதான் அவனுக்கு முக்கியமா தெரியுது."என்று பெருமூச்சு விட்டபடி கூறினான்.
அதைக் கேட்ட ரேகாவும் அமைதியாகிப் போனாள்.
"இதுக்கப்புறம் எதுவா இருந்தாலும் அவன் முடிவு பண்ணட்டும். அது அவனோட வாழ்க்கை."என்று பேச்சை முடித்துக் கொண்ட சசி, அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
இங்கே பரத் எப்போதும் போலவே தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றான்.
வெளியில் பார்த்தால் எதுவும் நடக்காதது போலவே இருந்தான். ஆனால் உள்ளுக்குள் ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டுதான் இருந்தான்.
வேலையில் ஏதாவது பிரச்சனை இருக்கும் என்று நினைத்த பானுமதி, தனது மகனிடம் அதிகமாகக் கேட்டு குடையவில்லை.
தினமும் வீட்டிற்கு வரும் அவனின் முகத்தைப் பார்த்துவிட்டு அமைதியாகி விடுவார்.
அதேபோல் தெய்வானையும்,
"ரொம்ப வேலை போல அண்ணி... இப்போ எல்லாம் சசி வீட்டுக்கு லேட்டா தான் வரான்.."என்று பானுமதியிடம் கூறி வந்தார்.
சசியும் பரத்தும் வீட்டிற்கு தாமதமாக வருவதால், இரு பெற்றோர்களும்,"வேலை சம்பந்தமான விஷயம்தான்."
என்று நினைத்துக் கொண்டனர்.
அதனால் பானுமதியுமே மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
ஆனால் வினிதா மட்டும் அப்படி இல்லை.ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது.
ஆனால் தன்னிடம் மட்டும் கூறவில்லை என்ற எண்ணம் அவளை உறுத்திக் கொண்டே இருந்தது.
அதை ரேகாவிடம் மட்டுமே புலம்பித் தீர்ப்பாள்.தாயிடம் கூறி அவரையும் பதட்டப்படுத்த விரும்பவில்லை.
அதே நேரத்தில் தனது அண்ணனையும் போட்டு குடையவில்லை.
அதற்கு முக்கியக் காரணம் சசிதான்.
சசியிடம் போனில் பேசும்போதோ, நேரில் சந்திக்கும்போதோ கேள்வி கேட்டால், "உன் அண்ணனை போட்டு குடையாம மட்டும் இரு.
விஷயம் நமக்கு சாதகமா முடியுற வரைக்கும் கொஞ்சம் அவனுக்கு ஸ்பேஸ் கொடு.
அதே சமயம், உன்கிட்ட சொல்லாம விடமாட்டோம்." என்று கூறியிருந்தான்.
அவர்கள் இருவர் மீதும் இருந்த நம்பிக்கையில் அமைதியாக இருந்தாள் வினிதா.
ஆனாலும் தனது அண்ணனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.
இப்படியாக நாட்கள் நகர்ந்தன.
அங்கே பிரியாவின் வாழ்க்கையிலும் மாற்றமில்லை.
அவளது தாய் தந்தை இருவரும், அவளுக்கு திருமணம் செய்து வைப்பது பற்றிப் பேசுவதில் மட்டும் முனைப்பாக இருந்தனர்.
கோர்ட்டிலிருந்து வீடு திரும்பிய பிறகும் விநாயகம் அதைப் பற்றித்தான் பேசினார்.
"எங்களுக்கும் வயசாகிட்டே போகுது பிரியா.எங்களுக்குப் பிறகு நீயும் தருணும் பாதுகாப்பான ஒரு இடத்தில் இருக்கணும்.. உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது எங்க பொறுப்பு இல்லையா?"என்றார்.
அவரைப் பார்த்த பிரியா,
"ஏன்பா? இப்போ இருக்குற என்னோட வாழ்க்கைக்கு என்ன குறை?"என்று கேட்டாள்.
விநாயகம் பெருமூச்சு விட்டார்.
"குறை இல்லடா..."
"ஆனா உலகம் கெட்டுப் போய் இருக்கேடா? தனி மனுஷியா ஒரு பொண்ணு இந்த உலகத்துல நிம்மதியா வாழ முடியுதா சொல்லு? கூட பிறந்தவங்க, பெத்தவங்க, கட்டிக்கிட்ட புருஷன் இருக்கும் போதே இங்க பொண்ணுங்களுக்கு நிறைய விபரீதமும் கெட்டதும் நடக்குதே! பெத்தவங்களா எங்க காலத்துக்கு அப்புறம் உனக்கு ஒரு துணை வேண்டும் என்று நினைக்கிறது தப்பா?
கையில பச்சைப் புள்ளையோட ஒரு பொண்ணை தனியா விட்டுட்டு, பெத்தவங்களா எங்களால நிம்மதியா இருக்க முடியுமா?நீயே சொல்லு.
நாளைக்கு எங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆனா?உனக்குன்னு ஒரு துணை வேணாமா?
எங்க காலத்துக்கு அப்புறம் உன்னையும் தருணையும் நினைச்சு பயப்படாம நிம்மதியா கண் மூட வேண்டாமா?"என்று கேட்டார்.
விநாயகத்தின் குரலில் இருந்த தவிப்பும் அக்கறையும் பிரியாவிற்கு புரியாமல் இல்லை.
ஆனால் அந்தப் பேச்சு மட்டும் அவளுக்குள் மீண்டும் ஒரு சோர்வை ஏற்படுத்தியது.
"ஏன்பா? இப்போ இருக்குற என்னோட வாழ்க்கைக்கு என்ன குறை?" என்று மீண்டும் கேட்டாள் பிரியா.
விநாயகம் உடனே பதில் சொல்லவில்லை.
சில நொடிகள் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
பிறகு மெதுவாக,
"குறை இல்லடா...ஆனா நிம்மதியும் இல்லயே!."என்றார்.
பிரியா புரியாமல் அவரைப் பார்த்தாள்.
"நீ தைரியமான பொண்ணுதான்.
இத்தனை பிரச்சனை வந்தும் உடைஞ்சு போகாம நின்னுட்டு இருக்க.அதை நினைச்சா பெருமையா இருக்கு.ஆனா..."
என்று நிறுத்தியவர் பெருமூச்சு விட்டார்.
"பெத்தவனா எனக்கு பயமா இருக்கு டா."அவரது குரல் கரகரத்தது.
"ஏற்கனவே பெத்த மகனை பறிகொடுத்து நிற்கிறோம் நானும் உங்க அம்மாவும்.. இப்போ உனக்குன்னு ஒரு எதிர்காலம் இல்லாம நீ இப்படியே இருக்கிறது பார்க்கும்போது, அது உன்னை அந்த விக்ரம் கிட்ட இருந்து காப்பாத்த முடியலன்னு மனசுக்குள்ள ஒரு குற்ற உணர்வு."
"இப்போ தினமும் அவனைப் பார்த்தா அதே பயம் திரும்பத் திரும்ப வருது.இன்னைக்கு கோர்ட்டு...நாளைக்கு வேற ஏதாவது பிரச்சனை...அதுக்கு அடுத்த நாள் இன்னொரு பிரச்சனை...இப்படி ஒவ்வொரு நாளும் பயந்துகிட்டே இருக்க வேண்டியதா இருக்கு."என்றார்..
பிரியா அமைதியாகத் தந்தையைப் பார்த்தாள்.
"நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுமா?"என்று மெதுவாகக் கேட்டாள்.
விநாயகம் சிரித்தார்.
அந்தச் சிரிப்பில் வேதனைதான் அதிகமாக இருந்தது.
"அப்படின்னு நான் சொல்லலடா.
கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை சொர்க்கம்னும் சொல்லல.ஆனா உனக்குன்னு ஒரு துணை இருக்கும்.
நீ உடைஞ்சு போறப்போ தாங்கிப் பிடிக்க ஒரு கை இருக்கும். தருணுக்கு அப்பான்னு கூப்பிட ஒரு மனுஷன் இருப்பார்
எங்களைத் தாண்டியும் உங்களைப் பாத்துக்க யாராவது இருப்பாங்கன்னு நாங்க நிம்மதியா இருப்போம்."என்றார் வேதனையாக,
செல்வியும் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
"நீ சந்தோஷமா இருக்கணும்னு தான்டி நாங்க நினைக்கிறோம்.
நீ எங்க பொண்ணு.உன்னைப் பற்றிப் பயப்படாம நாங்க எப்படி இருப்போம்?"என்றார்.
பிரியா கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்தாள்.
அவர்களின் அக்கறை புரிந்தது.
அவர்களின் பயமும் புரிந்தது.
ஆனால்...'என்னால முடியலம்மா...'என்ற வார்த்தை மட்டும் அவளது உள்ளத்தில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
வீட்டில் பிரியாவிற்கு திருமணத்தைப் பற்றிய பேச்சும், கோர்ட் வழக்கின் அழுத்தமும் சேர்ந்து மூச்சு விட நேரமில்லாமல் நாட்கள் நகர்ந்தன.
ஒருபுறம் விக்ரம் தொடர்பான பிரச்சனை...மறுபுறம் தருணின் எதிர்காலம்...
இன்னொரு புறம் தாய் தந்தையின் கவலை...
இப்படி ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சிந்தனை அவளைத் துரத்திக் கொண்டே இருந்தது.
பெற்றோர் கூறுவதில் தவறு இல்லை என்பது அவளுக்குப் புரிந்தது.அவர்களது பயமும் நியாயமானதுதான்.
தங்களுக்குப் பிறகு மகளும் பேரனும் என்ன செய்வார்கள் என்ற கவலை அவர்களுக்கு இருக்கத்தானே செய்யும்.
ஆனால்...தன்னால் இன்னொரு திருமணத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
அதை நினைக்கும் போதே மனம் சோர்ந்து போனது.
தருணைத் தவிர வேறு எதையும் தனது வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று அவளது மனம் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தது.
இப்படியாக ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டத்துடனே நகர்ந்தது.
அப்படியே நாட்கள் நகர,
மூன்றாவது ஹியரிங்கிற்கான நாளும் வந்தது.
மூன்றாவது விசாரணை நாள்...
நீதிபதி,"கடந்த விசாரணையில் குழந்தையுடன் நீதிமன்றம் நேரடியாகப் பேசியது. குழந்தையின் தற்போதைய உணர்வுப்பூர்வமான பிணைப்பு குறித்து நீதிமன்றம் ஒரு தெளிவான கருத்தை உருவாக்கியுள்ளது.இப்போது இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன்வைக்கலாம்."என்றார்.
சதீஷ்,"மாண்புமிகு நீதிபதி அவர்களே, குழந்தை பிறந்தது முதல் இன்று வரை என் கட்சிக்காரரின் பராமரிப்பில்தான் வளர்ந்து வருகிறது.
குழந்தையின் கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, அன்றாட வாழ்க்கை என அனைத்திலும் என் கட்சிக்காரர்தான் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த விசாரணையில் குழந்தை நீதிமன்றத்திலேயே தனது இயல்பான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தியுள்ளது.எனவே குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போதைய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உரிமை என் கட்சிக்காரரிடமே தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."
விக்ரம் தரப்பு வழக்கறிஞர் பிரபு,
"மாண்புமிகு நீதிபதி அவர்களே, குழந்தை தற்போது மனுதாரருடன் நெருக்கமாக இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை.ஆனால் குழந்தையின் தாய்வழி குடும்பத்திற்கும் குழந்தையுடன் உறவு வைத்திருக்க உரிமை உள்ளது.
என் கட்சிக்காரர் இனிமேல் குழந்தையின் வாழ்க்கையில் பொறுப்புடன் பங்கேற்க விரும்புகிறார்.எனவே குறைந்தபட்சம் சந்திப்பு உரிமையாவது வழங்கப்பட வேண்டும்."என்றார்..
நீதிபதி,"மிஸ்டர் விக்ரம், நீங்கள் குழந்தையின் முழுப் பாதுகாப்பு உரிமையைத்தானா கோருகிறீர்கள், அல்லது குழந்தையுடன் தொடர்பு மற்றும் சந்திப்பு உரிமையையும் ஏற்கத் தயாராக இருக்கிறீர்களா?"என்று கேட்டார்..
விக்ரம்,"மாண்புமிகு நீதிபதி அவர்களே, நான் குழந்தையின் முழுப் பாதுகாப்பு உரிமையைத்தான் கோருகிறேன்."என்றான்..
நீதிமன்றம் அமைதியானது.
"கடந்த காலத்தில் சில காரணங்களால் குழந்தையின் வாழ்க்கையில் என்னால் இருக்க முடியவில்லை என்பதை நான் மறுக்கவில்லை.ஆனால் அதற்காக இனிமேலும் குழந்தையிடமிருந்து விலகி இருக்க விரும்பவில்லை.
அவன் என் அக்காவின் மகன். அவனை என் குடும்பத்துடன் வளர்க்க விரும்புகிறேன். எனவே வெறும் சந்திப்பு உரிமை மட்டும் எனக்குப் போதுமானதாக இல்லை."என்றான்..
அப்போது ,சதீஷ் உடனே எழுந்து,
"மாண்புமிகு நீதிபதி அவர்களே, குழந்தை தற்போது இருக்கும் சூழலை மாற்றுவது அதன் மனநிலையை பாதிக்கும்.
குழந்தையின் விருப்பமும் தற்போதைய பிணைப்பும் ஏற்கனவே நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளன."என்றான்..
நீதிபதி,"இரு தரப்பினரின் நிலைப்பாடுகளும் நீதிமன்றத்திற்குத் தெளிவாகியுள்ளன.
இந்த வழக்கில் குழந்தையின் நலனே முதன்மையான அம்சம் என்பதால், தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மற்றும் வாதங்களையும் பரிசீலித்த பிறகு நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும்.
வழக்கு இறுதி உத்தரவிற்காக அடுத்த விசாரணைக்கு ஒத்திவைக்கப்படுகிறது."என்றவர் எழுந்து சென்றுவிட்டார்..
அனைவரும் வெளியே வந்தனர்.
விக்ரம் சில நொடிகள் பிரியாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளிடம் ஏதாவது பேசவோ, வாதம் செய்யவோ நினைத்தாலும் அதனால் தனக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்பதை இப்போது அவன் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தான்.
எப்படியாவது தருணைத் தன் பக்கம் நெருக்கமாக்க வேண்டும் என்பதே இப்போது அவனது முதல் எண்ணமாக இருந்தது.
அதற்குக் காரணமும் பிரபுதான்.
"சார், குழந்தைக்கிட்ட பாசமா பேசிப் பாருங்க. சின்ன பிள்ளை தானே. கொஞ்சம் கொஞ்சமா பழக ஆரம்பிச்சா வேலை செய்ய வாய்ப்பு இருக்கு," என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
அந்த நினைவோடு தருணை நோக்கி நடந்தான் விக்ரம்.
அப்போது கோர்ட் வளாகத்தில், பிரியா தனது தாய் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தாள். தருண் அவள் அருகிலேயே நின்றிருந்தான்.
"தருண் குட்டி... மாமா கிட்ட வாங்கடா..." என்று மெதுவாக அழைத்தபடி அவனை நோக்கிக் கையை நீட்டினான் விக்ரம்.
விக்ரம் அருகில் வருவதைப் பார்த்த தருண், அடுத்த நொடியே பிரியாவின் கால்களைக் கட்டிக்கொண்டு அவள் பின்னால் ஒளிந்து கொண்டான்.
அந்தச் சிறிய முகத்தில் தெரிந்த பயத்தைப் பார்த்த விக்ரமுக்கு உள்ளுக்குள் எரிச்சல் எழுந்தது.
இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டான்.
"தருண்... மாமாடா நான்..." என்று மீண்டும் மென்மையாகப் பேச முயன்றான்.
ஆனால் தருண் பிரியாவின் கால்களை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.
பிரியாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவள் எதுவும் பேசவில்லை. அதே நேரத்தில் குழந்தையை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டாள்.
"வாடா தங்கம்... செல்லம்... மாமா கிட்ட வா..." என்று மீண்டும் அழைத்தான் விக்ரம்.
தருணோ தலையை வேகமாக அசைத்தான்.
"நான் வரமாட்டேன்..."அந்த மழலைக் குரலில் வந்த பதில் விக்ரமின் முகத்தை மேலும் இறுக்கச் செய்தது.
இருந்தாலும் கோர்ட் வளாகத்தில் நின்று எதையும் செய்ய முடியாத நிலை.
உடனே பிரபு அருகில் வந்து,
"சார்... இது கோர்ட் வளாகம். வாங்க, அப்புறம் பார்த்துக்கலாம்," என்று மெதுவாகச் சொல்லி அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
விக்ரமும் எதுவும் பேசாமல் திரும்பி நடந்தான்.
போகும் அவனை அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றாள் பிரியா.அவளது தாய் தந்தையரும் அமைதியாகவே இருந்தனர்.
அந்த நேரத்தில் சசியும் பரத்தும் அங்கு வந்து சேர்ந்தனர்.
இதுவரை சற்று தூரத்தில் நின்றபடியே நடந்த அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
சசி பிரியாவிடம்.,"நீ இனி எதையுமே நினைச்சு கவலைப்படாத தங்கச்சி மா. நமக்கு சாதகமாத்தான் விஷயங்கள் போயிட்டு இருக்கு.
இப்போ வரைக்கும் நடந்ததைப் பார்த்தாலும், தருண் யார்கிட்ட ஒட்டிக்கிட்டு இருக்கான்னு கோர்ட்டுக்கே நல்லா புரிஞ்சிருக்கு.
விக்ரம் தான் கேஸை இழுத்துட்டு போகணும்னு நினைச்சு இதெல்லாம் பண்றான். மேற்கொண்டு பெரிய பிரச்சனை எதுவும் வராது. கொஞ்சம் பொறுமையா இருங்க."என்றான்.
அவன் ஆறுதல் சொல்ல முயன்றாலும், பிரியாவால் எதுவும் பேச முடியவில்லை.
அப்போது செல்வி பெருமூச்சு விட்டார்."எங்க இருந்துதான் வந்தானோ... நிம்மதியா இருக்க விட மாட்டான் போல.திரும்பத் திரும்ப வந்து நிக்கிறான்."
தருணை கூட்டிட்டு போயிட்டா மட்டும் இவன் என்ன புள்ளையை ஒழுங்கா பார்த்துக்கப் போறானா? "என்று ஆதங்கமாகக் கூறினார்.
உடனே அவரது கையைப் பிடித்துக் கொண்ட சசி அமைதியாக,"புரியுது மா...
ஆனா இதையெல்லாம் கோர்ட்ல நம்ம உணர்ச்சிவசப்பட்டு சொல்ல முடியாது இல்லையா?
என்ன நடந்தாலும் சட்டப்படி தான் போகணும்.கொஞ்சம் பொறுத்திருப்போம்."என்றான்.
"அப்படியே தருணை நம்ப கிட்ட கொடுத்தாலும், இவன் வந்து திரும்பப் பார்க்கலாம், பழகலாம் அப்படின்னு ஏதோ சொல்றாங்களேப்பா..."என்று செல்வி மீண்டும் கவலையாகக் கேட்டார்.
சசிக்கும் அதில் முழு உடன்பாடு இல்லை.இருந்தாலும் கோர்ட் என்ன நினைக்கிறது என்பதை அவன் புரிந்திருந்தான்.
"என்ன இருந்தாலும், உங்க மருமகளோட தம்பிதானே மா அவன்.அதை முழுசா மறுக்க முடியாது.ஆனா நீங்க சொல்றதும் சரிதான்."
"இதுவரைக்கும் என் மருமக இருந்த வரைக்கும் சரி...அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்குப் பிறகு சரி...அவ இறந்ததுக்குப் பிறகும் சரி...இத்தனை வருஷம் அவங்க குடும்பத்துல இருந்து யாருமே வந்து குழந்தையைப் பார்க்கல சசி.. இப்போ மட்டும் பாசம் பொத்திக்கிட்டு வந்திருக்காங்க..."என்றார் செல்வி.
சசி மெதுவாகத் தலையசைத்தான்,"அது நமக்கு புரிஞ்சா மட்டும் போதாது மா.நம்ம சொல்றதையெல்லாம் கோர்ட்டு முழுசா ஏத்துக்கணும்னு அவசியமில்லை.
அப்போதைக்கு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு ஒதுக்கி வச்சாங்க. இப்போ மகள் இல்லமா குழந்தை மட்டும் இருக்குன்னு வந்து உரிமை கேக்குறாங்க. அதை கோர்ட்டு உறவுன்னு பார்க்கும்.அதனால்தான் நாம கவனமா இருக்கணும்.ஆனா ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்..."
என்று கூறியவன் தருணை நோக்கிப் பார்த்தான்.
அப்போது தருண் பிரியாவின் கையைப் பிடித்தபடியே நின்றிருந்தான்.
"இந்தக் குழந்தை யார்கிட்ட நிம்மதியா இருக்கான்னு எல்லாருக்கும் தெரியும். அதைத்தான் நாம நம்பணும்."
தருணை ஒரு நொடி பார்த்தவன் தொடர்ந்து,"இப்போதைக்கு நமக்கு தருண் மட்டும்தான் முக்கியம்.அதனால கொஞ்சம் அமைதியா இருப்போம்.
நமக்குச் சாதகமா கேஸ் முடியற வரைக்கும், தெரியாத்தனமா கூட யார்கிட்டயும் ஒரு வார்த்தை அதிகமா பேசக் கூடாது. நம்ம பக்கம் இருந்து எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது." என்றான் சசி.
அவன் கூறியதை விநாயகமும் உடனே ஆமோதித்தார்.
"சசி சொல்றது சரிதான்.இத்தனை நாள் பொறுத்திருந்தோம். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்கலாம்.இப்போ எந்த அவசரமும் வேண்டாம்."என்றார்.
செல்வி தன் முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.பேச வேண்டும் போலத் தோன்றினாலும், எதுவும் பேசவில்லை.
பிரியா அமைதியாக நின்றிருந்தாள்.
சில நொடிகள் அங்கேயே நின்றிருந்தவர்கள், பிறகு கிளம்பத் தயாரானார்கள்.
"வா மா..."என்று கூறியபடி விநாயகம் தனது மனைவியை அழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார்.
பிரியாவும் தருணைத் தூக்கிக் கொண்டு அவர்களுடன் சென்றாள்.
கிளம்பும் முன், ஒரு நொடி திரும்பிப் பார்த்தாள்.சற்று தூரத்தில் நின்றிருந்த பரத் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
எதுவும் பேசவில்லை. ஒரு சிறிய தலையசைப்பை மட்டும் கொடுத்தான்.
பிரியாவும் மெதுவாகத் தலையசைத்துவிட்டு திரும்பினாள்.
அடுத்த நொடி அனைவருடனும் சேர்ந்து அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.
பரத் மட்டும் அவர்கள் செல்லும் திசையை சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தான்.