அப்படியே நாட்கள் நகர்ந்து நான்காவது விசாரணைக்கான நாளும் வந்தது...
நீதிமன்ற அறையில் அமைதி நிலவியது. முன்பு இருந்த மூன்று விசாரணைகளின் பதற்றம் இன்னும் அனைவரின் முகத்திலும் தெரிந்தது.
நீதிபதி சில நொடிகள் கோப்புகளைப் பார்த்துவிட்டு தலைநிமிர்ந்தார்.
"இரு தரப்பினரின் வாதங்கள், தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் குழந்தையுடன் நீதிமன்றம் நடத்திய உரையாடல் ஆகிய அனைத்தையும் நீதிமன்றம் கவனமாகப் பரிசீலித்துள்ளது.
இந்த வழக்கில் முதன்மையாகக் கருதப்பட வேண்டியது குழந்தையின் நலனும், மனநிலையும், பாதுகாப்பும்தான்."
நீதிமன்றம் முழுவதும் அமைதியாக இருந்தது.
"குழந்தை கடந்த நான்கு ஆண்டுகளாக பிரியாவின் பராமரிப்பில்தான் வளர்ந்து வருகிறது.தற்போது குழந்தை அவருடன் ஆழமான உணர்வுப்பூர்வமான பிணைப்பில் இருப்பதும் நீதிமன்றத்திற்கு தெளிவாகியுள்ளது.எனவே குழந்தையின் நிரந்தர பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உரிமை பிரியாவிடமே தொடரும்."என்றார்..
பிரியாவின் கண்கள் கலங்கின.
பரத்தும் சசியும் நிம்மதியாக மூச்சுவிட்டனர்.
ஆனால் நீதிபதி தொடர்ந்தார்.
"அதே நேரத்தில், குழந்தையின் தாய்வழி உறவினர்களுடனான உறவை முற்றிலும் துண்டிப்பது குழந்தையின் எதிர்கால நலனுக்கு ஏற்றதாக இருக்காது.
மிஸ்டர் விக்ரம் குழந்தையின் தாய்மாமன் என்பதால், குழந்தையுடன் உறவை வளர்த்துக் கொள்ள அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது."
விக்ரம் நிமிர்ந்து பார்த்தான்.
"எனவே ஆரம்ப கட்டமாக மாதம் இருமுறை குழந்தையை நேரில் சந்திக்கும் உரிமை மிஸ்டர் விக்ரமுக்கு வழங்கப்படுகிறது.
இந்தச் சந்திப்புகள் குழந்தைக்கு பழக்கமான மற்றும் பாதுகாப்பான சூழலில் நடைபெற வேண்டும்.
குழந்தையின் விருப்பத்திற்கு எதிராக எந்தவிதமான கட்டாயமும் இருக்கக் கூடாது."
சில நொடிகள் நிறுத்திய நீதிபதி மீண்டும் கூறினார்.
"குழந்தை விருப்பம் தெரிவித்தால், பிரியாவின் சம்மதத்துடன் சில மணி நேரங்களுக்கு விக்ரமின் வீட்டிற்குச் சென்று வரலாம். ஆனால் குழந்தை விருப்பம் தெரிவிக்காத பட்சத்தில், மிஸ்டர் விக்ரம்தான் குழந்தையைச் சந்திக்க வர வேண்டும். குழந்தையை அழைத்துச் செல்லும் உரிமை உடனடியாக வழங்கப்படவில்லை."என்றார்..
விக்ரமின் முகம் சற்று இறுகினாலும், எதுவும் பேசவில்லை.
"மேலும், குழந்தை விக்ரமுடன் இயல்பாகப் பழகத் தொடங்கிய பிறகு, தேவைப்பட்டால் இரு தரப்பினரும் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம்.
அதுவரை இந்த ஏற்பாடே நடைமுறையில் இருக்கும்." என்றவர்..
"ஒரு குழந்தையின் வாழ்க்கையில் இரத்த உறவுகள் முக்கியம் தான். ஆனால் அந்தக் குழந்தை யாரிடம் பாதுகாப்பாகவும், அன்பாகவும் உணர்கிறது என்பதே நீதிமன்றத்திற்கு முதன்மையானது.இதனுடன் வழக்கு முடிக்கப்பட்டது."என்று கூறி எழுந்து சென்றுவிட்டார்..
வெளியே வந்த பிரியாவின் முகத்தில் அப்படி ஒரு மனநிறைவு.
இத்தனை நாட்களாக மனதின் ஒரு மூலையில் இருந்த பயம், வேதனை, பதற்றம் அனைத்தும் மெதுவாக விலகிச் சென்றது போல இருந்தது.
ஒருவேளை விக்ரம் தருணை தன்னிடமிருந்து பிரித்துவிடுவானோ என்ற அச்சம் இத்தனை நாட்களாக அவளை வாட்டிக் கொண்டே இருந்தது.
ஆனால் இன்று... தருண் முழுமையாகத் தன்னுடனே இருப்பான் என்ற நிம்மதி அவளது முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.
அவளைத்தான் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பரத்.
அவளது சந்தோஷத்தைத் தனது சந்தோஷமாகவே பார்த்தான்.
தனக்கு கிடைத்த மனநிறைவை விட, அவளுக்குக் கிடைத்த மனநிறைவுதான் அவனுக்கு பெரிதாகத் தோன்றியது.
அப்படியே நின்று கொண்டிருந்தவனின் தோளைத் தட்டி நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தான் சசி.
"என்ன மச்சான்... எல்லாம் சரியாயிடுச்சு இல்ல..."என்று சிரித்தான்.
அதற்கு பரத்தும் லேசாகப் புன்னகைத்தான். அப்போது சதீஷும் வெளியே வர..
சிறிது நேரத்தில் மூவரும் பிரியா மற்றும் அவளது பெற்றோரிடம் சென்றனர்.
அவர்களைப் பார்த்ததும் விநாயகம் உணர்ச்சிவசப்பட்டார்.
"ரொம்ப நன்றி சார்...உங்களுக்கு நாங்க ரொம்ப கடமைப்பட்டிருக்கோம். எங்க விஷயத்தை இவ்வளவு சீக்கிரமா முடிச்சு கொடுத்ததோட இல்லாம, எங்களுக்குச் சாதகமாவும் முடிச்சு கொடுத்துட்டீங்க." என்று கைகூப்பினார்.
உடனே சதீஷ் அவரது கைகளைப் பிடித்து இறக்கினான்.
"ஐயோ... என்னங்க இது?நீங்க எனக்கு நன்றி சொல்லணும்னு நினைச்சா கூட, பரத்துக்குத்தான் சொல்லணும்.
இந்தக் கேஸுக்காக என்னை விட அதிகமா மெனக்கெட்டது அவன்தான்."என்றான்.
அந்த வார்த்தையில் அனைவரது பார்வையும் பரத்தின் மீது திரும்பியது.
சிறிது சங்கடமாகப் புன்னகைத்தான்..
அப்போது சதீஷ்,"சரி... நான் கிளம்பறேன் சார்."என்று விநாயகத்தைப் பார்த்தான்.
பிறகு பிரியாவை நோக்கித் திரும்பி,"இனியாவது சந்தோஷமா இருங்க பிரியா.. நீங்க என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் உங்க கண்ணுல ஒரு எதிர்பார்ப்பும், அதே நேரம் ஒரு வேதனையும் இருக்கும்.இப்போ இனிமே நிம்மதியா இருக்கலாம்.தருண் முழுக்க முழுக்க உங்க பொறுப்பு."என்றான்.
பிரியாவால் எதுவும் பேச முடியவில்லை.மெதுவாகத் தலையசைத்தாள்.
சதீஷ் புன்னகையுடன் தருணின் அருகே சென்றான்.அவனது தலையை மெதுவாகக் கோதி,
"வரேன்டா குட்டி பையா..."
என்றான்.
தருண் அவனைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தான்.
அதைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை.
அந்த ஒரு புன்னகையே சதீஷ்க்கு போதுமானதாக இருந்தது.
மீண்டும் அனைவரையும் ஒரு முறை பார்த்தவன், அமைதியாக அங்கிருந்து நடந்துச் சென்றான்.
சதீஷும் நகர்ந்து சென்ற பிறகு பரத்தும் கிளம்பத் தயாரானான்.
"சரி சார்... நாங்களும் கிளம்பறோம்.இனி எந்தக் கவலையும் இல்லாம நிம்மதியா இருங்க."என்று விநாயகத்திடம் கூறியவன், பிரியாவை நோக்கித் திரும்பினான்."தருணை நல்லா பார்த்துக்கோங்க.இனி முழுக்க முழுக்க அவன் உங்க பொறுப்பு.
ஏதாவது உதவி தேவைப்பட்டா தயங்காம போன் பண்ணுங்க."
என்று கூறினான்.
அவன் கிளம்ப முயன்றவுடன்,
"தம்பி..."என்று அழைத்தார் செல்வி.
அனைவரின் பார்வையும் அவரை நோக்கித் திரும்பியது.
"வீட்டுக்கு வந்துட்டுப் போகலாம்ல?இவ்வளவு தூரம் எங்களுக்கு உதவி செஞ்சிருக்கீங்க.ஒரு முறை கூட வீட்டுக்கு வந்ததில்லை.
எப்போ பார்த்தாலும் கோர்ட்ல பார்த்துட்டு கிளம்புறதோட சரியா போயிடுது.எனக்கே சங்கடமா இருக்கு."என்றார் அன்புடன்.
"கஷ்டமான நேரத்துல உதவி செஞ்சதோட இல்லாம, எங்களுக்கு எல்லா நேரமும் உறுதுணையா இருந்திருக்கீங்க. நீங்களும் சசியும் எனக்கு இன்னொரு பிள்ளைங்க மாதிரிதான்.
வீட்டுக்கு வந்துட்டுப் போங்கப்பா."
அவரது குரலில் இருந்த பாசம் அனைவரையும் நெகிழ வைத்தது.
சசி உடனே புன்னகைத்தான்.
"அதுக்கென்னம்மா? வந்துட்டா போச்சு."என்றான்.
பரத் அவன் காலை மிதித்து இருந்தான்.. "அமைதியா இருடா!" என்பது போல் சைகையில் கூறி,
அடுத்த நொடி பரத்தை நோக்கித் திரும்பி,"டேய்... நீ கம்முன்னு இருடா."என்று மெதுவாகச் சொன்னான்.
பரத் அவனை முறைத்துப் பார்த்தான்.
ஆனால் சசி விடவில்லை.
"உனக்கு என்னடா? அவங்களை அனுப்பி வைக்கிறதுலையே கூறிய இருக்க? வாடா அமைதியா அவங்களே கூப்பிடும்போது உனக்கு என்ன நோவுது..."
என்றும் பற்களை கடித்த படி மெதுவாக,
தன் நண்பனை முறைத்துவிட்டு, "இல்லம்மா... இன்னொரு நாள் வர்றேன்.கொஞ்சம் வேலை இருக்கு."என்று பரத் மரியாதையாக மறுக்க முயன்றான்.
அதைக் கேட்ட சசி சிரித்துவிட்டான்.
"இவன் கிடக்கிறான்.எந்த நேரமும் வேலை, வேலைன்னுதான் சொல்லிக்கிட்டு இருப்பான். கொஞ்ச நேரம் தருண் கூட சிரிச்சுப் பேசி, விளையாடிட்டு போனா எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்.உங்களுக்கும் ஹாப்பியா இருக்கும் தானே?"
என்று பல்லைக் காட்டினான்.
நண்பனைப் பார்த்து பரத் தலையில் அடித்துக் கொண்டு சிரிக்க முயல.
அவனது முகத்தில் இருந்த சங்கடமான புன்னகை, அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது...
அதன் பிறகு அவர்கள் ஆட்டோவிலும், பரத்தும் சசியும் பைக்கிலும் பிரியாவின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சென்றவுடன் செல்வி இருவருக்கும் டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.
சம்பிரதாயமாக மறுக்க முடியாமல் இருவரும் அதை வாங்கிக் கொண்டார்கள்.
டீ குடித்து முடித்தவுடன், சசியின் கையைச் சுரண்டிய பரத்,
"வந்த வேலை முடிஞ்சிடுச்சுல, கிளம்பு," என்றான்.
"இருடா... வரும்போதே கால்ல சுடுதண்ணி ஊத்திட்டு வந்த மாதிரி துள்ளற?" என்றான் கடுப்பாக,
அவனை முறைக்க மட்டுமே முடிந்தது பரத்தால்.
தன் நண்பனைப் பற்றி அறியாதவனா பரத்? ஆகையால் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தான்.
சசி, அங்கிருந்த பொருட்களைப் பார்த்தபடி ஏதேதோ கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான்.
"இது எப்போ எடுத்த போட்டோ?"
"இது எப்போ பண்ணது?"என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவன், அங்கு இருந்த ஸ்வேதா,பாலா புகைப்படத்தின் அருகில் நின்றான். சிறுவயது பிரியாவின் புகைப்படத்தைப் பார்த்து கேள்விகள் கேட்டான். தருணின் சிறுவயது புகைப்படங்களையும் பார்வையிட்டான்.
அங்கு இருந்த பெயிண்டிங்கைப் பார்த்து,"தருண், இதை நீயா வரைஞ்ச?"என்று கேட்டபடி சுவரில் இருந்தவற்றைப் பற்றிக் கேள்வி எழுப்பி அவனுடனும் சிறிது பேச முயற்சி செய்தான்.
இதற்கிடையில், பிரியாவிற்கும் தருணுக்கும் சோர்வாக இருந்தது. மேலும் அங்கு நிற்பதும் ஒருவித சங்கடமாகத் தோன்ற, பிரியா அங்கிருந்து நகர்ந்து வந்து நின்றாள்.
பரத்தின் பார்வை முழுவதும் பிரியாவிடமே இருந்தது. பிரியாவும் அதை கவனித்தாள். ஆனால் என்ன செய்வது என்று அவளுக்குப் புரியவில்லை.
பரத்தின் கண்கள் அவளை நோக்கியபடியே இருந்தன.
அவனையும் மீறி பரத்தின் கால்கள் அவள் இருக்கும் இடம் நோக்கி சென்றது. தொண்டையைச் செருமிக் கொண்டவன்,"இனி நீங்க ஃப்ரீயா இருங்க, பிரியா. வேலைக்கும் நிம்மதியா போயிட்டு வாங்க. தம்பி எப்பவும் போல ஸ்கூலுக்குப் போகட்டும். இனி நீங்க எங்கையும் தம்பியைக் கூட்டிட்டு அலைய வேண்டியதில்லை. உங்களுக்கும் அலைச்சல், அவனுக்கும் அலைச்சல். ரொம்ப நாளா ஸ்கூலுக்குப் போகாம இருக்கான் பாருங்க."என்றான்.
பிரியா மெதுவாகத் தலையசைத்தாள்.
"ரொம்ப தேங்க்ஸ், சார்..."என்று கூறினாள்.
அவன் அவளை ஒரு பார்வை பார்த்தானே தவிர வேறு எதுவும் பேசவில்லை. அவளுக்குமே சிறிது சங்கடமாக இருந்தது.
"சரி பிரியா, நேரம் ஆகுது. எனக்கு உண்மையாவே வேலை இருக்கு. நான் கிளம்புறேன். ஏதாவது தேவையிருந்தா போன் பண்ணுங்க."என்று கூறிவிட்டு நகர்ந்துவிட்டான்.
மேற்கொண்டு பேச்சை வளர்க்கவில்லை. அவனுக்குப் பேசவும் தோன்றவில்லை. அவள் முன் இன்னும் சில நிமிடங்கள் நின்றால், மனதில் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் வார்த்தைகளாக வெளியே வந்துவிடுமோ? என்ற பயமே அவனை அங்கிருந்து விரைவாக நகர வைத்தது.
பிரியாவிடம் பேசிவிட்டு திரும்பிப் பார்த்தால், இன்னும் பேச்சை நிறுத்தாமல் சசி, செல்வி மற்றும் விநாயகம் இருவரிடமும் பேச்சுக் கொடுத்தபடி தருணைத் தன் மடியில் உட்கார வைத்திருந்தான்.
'இன்னைக்கு பொழுதுக்கும் ஆனாலும் இவன் இந்த இடத்தை விட்டு நகர மாட்டான். ஏதோ முடிவோடத்தான் இருக்கான்...'என்று நினைத்தபடி வேகமாக அவன் அருகில் வந்தான் பரத்.
"டேய் மச்சான், ரேகா போன் பண்ணிருந்தா. நேத்து நீ வாங்கிட்டு வரச் சொன்னதை மறந்துட்டியா என்னவோ கேட்டா. திரும்பவும் போன் பண்ணி இருக்கா," என்று கூறினான்.
நண்பனை கேலியாகப் பார்த்துச் சிரித்த சசி,"வாங்கிட்டா போச்சு..." என்றபடி அப்படியே எழுந்துகொண்டான்.
மேற்கொண்டு அவனுக்குக் கோபத்தை விளைவிக்க இவனும் முயற்சி செய்யவில்லை.
"சரி மா... சரிப்பா... நான் வரேன்.. உடம்ப பாத்துக்கோங்க அப்பப்ப கால் பண்ணுங்,க நானும் உங்களுக்கு கால் பண்றேன் "என்றான் சசி.
" அப்பப்ப வந்துட்டு போங்க பா..
நீங்க தான் எங்களுக்கு இவ்வளவு நாள் தெம்பா இருந்தீங்க," என்றார்கள் விநாயகமும் செல்வியும்.
கொஞ்ச நாட்களாகவே பழகியிருந்தாலும், பரத் முழுமையாக பிரியாவிற்குச் சப்போர்ட்டாக நின்றான் என்றால், கோர்ட்டில் அவர்களின் பயத்தைப் போக்கி, அவர்களைத் தன்னுடையவர்களாக நினைத்து உடன் இருந்து பார்த்துக் கொண்டது சசிதான். ஆகையால் அவர்களோடு நன்றாகவே நெருங்கி இருந்தான்.
"இது இனி என் வீடும்மா. பிரியா என் தங்கச்சி. இது என் தங்கச்சி பிள்ளை. வராம இருக்க முடியுமா? அடிக்கடி என்ன தினமும் வந்து பார்த்துட்டுப் போறேன்," என்று புன்னகைத்தான்.
அவன் வார்த்தைகளில் பரத்திற்குத்தான் எரிச்சலாக இருந்தது.'வேணும்னே பண்றான் படுபாவி...' என்று மனதிற்குள் கருவிக்கொண்டவன் அமைதியாக நின்றிருந்தான்.
"சரிப்பா, ஏதோ அவசரம் போல. பரத் அப்போதிலிருந்து போகணும், போகணும்னு சொல்லிட்டு இருக்காரு. நாங்களும் ரொம்ப நாள் உங்களுக்கு தொந்தரவு கொடுத்துட்டோம் இல்ல. ரொம்ப நன்றிப்பா பரத். எங்களுக்கு இவ்வளவு தூரம் உதவி செஞ்சிருக்க. நீயும் அடிக்கடி சசி கூட வந்துட்டுப் போப்பா."என்றார் செல்வி.
பரத் அமைதியாக "சரி" என தலையசைக்க மட்டும் செய்தான்..
"எங்களுக்கும் பெருசா சொந்த பந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லை. பாலாவோட நண்பர்கள் தான் அப்பப்ப வந்துட்டுப் போவாங்க. நீங்களும் வரப்போக இருங்க. அதுவும் தருண் நல்லாவே சசி கிட்ட ஒட்டிக்கிட்டான் பாருங்க..."
என்று விநாயகமும் கூறினார்.
பரத் அதற்குச் சிரித்தானே தவிர வேறு எதுவும் பேசவில்லை.
ஒரு தலையசைப்புடன் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்படும்போது, பிரியாவை ஒரு கணம் ஆழமாகப் பார்த்துவிட்டு, அவளின் பெற்றவர்களிடம் தலைஅசைத்து, தருணிடம் கையை அசைத்து டாட்டா காட்டிவிட்டு கிளம்பினான்.
அவன் பார்வை ஒரு நொடி மட்டுமே இருந்தாலும், சொல்லப்படாத பல உணர்வுகளைத் தன்னுள் சுமந்தபடியே அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.
போகும் வழியெங்கும் அமைதியே நிலவியது. சசியும் அந்த அமைதியைக் கெடுக்க விரும்பவில்லை.
பரத்தின் மனநிலையை நன்றாக அறிந்தவன் அவன். ஆகையால் வழக்கம்போல் வம்பிழுக்கவோ, கேலி செய்யவோ முயற்சிக்கவில்லை. இருவருக்கும் இடையே வார்த்தைகள் எதுவும் பரிமாறப்படவில்லை.
பைக்கை ஓட்டிக் கொண்டிருந்த பரத்தின் கவனம் சாலையில் இருந்தாலும், அவனது எண்ணங்கள் முழுவதும் பிரியாவையும் தருணையும் சுற்றியே இருந்தன. மறுபுறம், சசியும் நண்பனின் அமைதிக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகளைப் புரிந்துகொண்டபடி அமைதியாக அமர்ந்திருந்தான்.
அந்தப் பயணம் முழுவதும், பைக்கின் இயந்திர சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தமும் அவர்களுக்கிடையே எழவில்லை.
இப்படியே நாட்களும் நகர்ந்தன.
இப்போதெல்லாம் பிரியா தினமும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள். ஆனால் பரத் ட்ரெயினில் வரவில்லை. ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பிறகுதான் அவன் தொடர்ந்து வரவில்லை என்பதை உணர்ந்தாள்.
ஆனால் அவனுக்குப் போன் செய்து "ஏன் வரவில்லை?" என்று கேட்கும் அளவிற்கு அவர்களுக்குள் பெரிய உறவு எதுவும் இல்லாததால் அமைதியாக இருந்துவிட்டாள்.
ஆனால் சசி மட்டும் தினமும் பிரியாவிற்குப் போன் செய்து அவளது நலனை விசாரிப்பான். அதேபோல் விநாயகம், செல்வி இருவரிடமும் ஒரு மகனாகவே நடந்துகொள்ள ஆரம்பித்திருந்தான்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டுச் செல்வான். சிறிது நேரம் அவர்களோடு அமர்ந்து பேசிவிட்டு கிளம்பிவிடுவான்.
பெரும்பாலும் அவன் வரும் நேரங்களில் பிரியா வேலை முடித்து வந்திருக்க மாட்டாள். அதனால் அவள் வீட்டிற்கு வருவதற்கு முன்பே வந்து, தருணைப் பார்த்துவிட்டு, விநாயகம் மற்றும் செல்வியுடன் பேசிவிட்டு சென்றுவிடுவான்.
தருணுடனான அவனது இணக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவனும் சசியைப் பார்த்தால் ஓடிவந்து ஒட்டிக்கொள்வான்.
விநாயகமும் செல்வியும் பரத்தைப் பற்றி கேட்டால் மட்டும்,
"வேலையில பிஸியா இருக்கான்... நேரம் கிடைக்கல,"என்று ஒரு வரியில் பதில் கூறிவிடுவான் சசி. அதற்கு மேல் பரத்தைப் பற்றிய எதையும் சொல்ல மாட்டான்.
இவ்வாறாக எந்தவித பெரிய மாற்றங்களும் இல்லாமல், ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையின் அன்றாட ஓட்டத்தில் மூழ்கியபடி நாட்களைக் கடந்து சென்றனர். ஆனால் வெளிப்படையாக அமைதியாக நகர்ந்த அந்த நாட்களுக்குள், சிலர் மனதில் சொல்லப்படாத ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் மெதுவாக வளர்ந்துகொண்டே இருந்தன.
நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு சில நாட்கள் கடந்திருந்தது.
விக்ரம் முதன்முறையாக குழந்தையை பார்க்க பிரியாவின் வீட்டிற்கு வந்தான்.
வாசல் முன்னே நின்றவன் ஒரு நொடி தயங்கினான்.
பிரியா அமைதியாக கதவை திறந்து விட்டாள் வேறு வழி இல்லையே!.
விக்ரம் மெதுவாக உள்ளே வந்தான்.
வீட்டுக்குள் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.விக்ரம் அதை பார்த்தான்.
அவன் முகத்தில் எந்த கோபமும் இல்லை. எந்த உரிமை கோரலும் இல்லை.
பிரியாவுக்கு அவனைப் பார்த்து ஒரு குழப்பமான பார்வை மட்டும்.
விக்ரம் ஒரு நொடி அமைதியாக நின்றான்.பிறகு மெதுவாக தருணின் அருகே சென்றான்."ஹாய்..."
என்று சன்ன குரலில் அழைத்தான் .
தருண் அவனை பார்த்துவிட்டு சில நொடிகள் அமைதியாக இருந்தான்..பிறகு திரும்பி பிரியாவை பார்த்தான்.
விக்ரம் லேசாக சிரிக்க முயன்றான்."என்னை பார்த்தா பயமா இருக்கா?"என்று மெதுவாக கேட்டான்.
தருணோ, பிரியாவின் பின்னால் போய் நின்று கொண்டான்.
அந்த நிமிடம் விக்ரம் பார்வை சற்றே இறங்கியது."சரி..."என்று மெதுவாக தோல்களை குலுக்கிக் கொண்டான்.
அவன் குரலில் உரிமை இல்லை. கோபம் இல்லை.வெறும் தொலைவில் நின்ற ஒரு மனிதனின் உணர்வு மட்டும் இருந்தது.
சிறிது நேரம் அங்கேயே நின்றான்.
குழந்தையை தொடவும் இல்லை.
அணைக்கவும் இல்லை.
பிறகு மெதுவாக,"நான் வாரத்துக்கு ஒருமுறை வருவேன்..." என்று மட்டும் சொல்லி திரும்பினான்.
வாசல் வரை சென்றவன் ஒரு நொடி நின்று பின்னால் பார்த்தான்.
குழந்தை இன்னும் பிரியாவையே பிடித்திருந்தது.
அவன் எதுவும் பேசவில்லை.
மெதுவாக வெளியே சென்றான்.
இதை பார்த்துக் கொண்டு நின்ற அவளின் பெற்றவர்களுக்கு தான் 'இவளுக்கு நிரந்தர பாதுகாப்பு இல்லை' என்ற பயம் அதிகரித்தது..
செல்வி வாய்விட்டுப் புலம்பினார்.
"இப்படி வாரம் வாரம் வந்தா நம்ம பிள்ளை நிம்மதியா இருக்க முடியுமா? இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு வேணும். இவளுக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சாதான் நிம்மதி வரும். சீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து முடிச்சிடணும்..."என்று தன் கணவனைப் பார்த்துக் கூறினார்.
அதைப் பார்த்துக்கொண்டு நின்ற பிரியாவிற்கு இன்னும் வலிதான் கூடியது.
'மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் கதையாக அல்லவா இருக்கிறது பெற்றவர்களின் நிலை? 'என்றுதான் யோசிக்கத் தோன்றியது அவளுக்கு.
தனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாம். தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் தருண்தான் என்று நினைத்துக் கொண்டிருப்பவளுக்கு, திருமணம் என்ற பேச்சே ஒட்டவில்லை..கசந்தது.
அவளுக்கு வேண்டியதெல்லாம் ஒரு நிம்மதியான வாழ்க்கை மட்டும்தான். தன்னுடைய மகனை நல்லபடியாக வளர்த்து, அவனுடன் அமைதியாக வாழ்ந்துவிட வேண்டும் என்பதே அவளின் ஆசை. ஆனால் அவளது பெற்றோர் நினைப்பதோ வேறு. தங்கள் மகள் தனிமையில் வாழக்கூடாது, தங்களுக்குப் பிறகும் அவளுக்குத் துணையாக யாராவது இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கவலை.
இருவரின் எண்ணங்களுமே தவறில்லை. ஆனால் அந்த எண்ணங்கள் ஒன்றோடொன்று பொருந்தாமல் நிற்பதுதான் பிரியாவின் மனதை மேலும் கனக்கச் செய்தது.