விக்ரம் வந்து சென்ற அன்று மாலையே சசியும், பரத்தும் சேர்ந்து வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
அவர்கள் வரும்போது மூவரின் முகமும் வாட்டமாக இருப்பதைப் பார்த்த சசி, இன்னும் கோர்ட்டில் நடந்த விஷயத்தையே நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணி, "இனி சந்தோஷமா இருங்கப்பா. பிரச்சனைதான் முடிஞ்சிருச்சு இல்லையா?" என்றான்.
பரத் அருகில் நின்றபடியே அமைதியாக அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதற்கு செல்வி வேதனையுடன்,
"என்னப்பா முடிஞ்சிருச்சு? இன்னைக்கே அவன் வீடு தேடி வந்துட்டுப் போயிருக்கான்."
என்றார்.
அதைக் கேட்டு சசியும் பரத்தும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
"வீடு தேடி வந்தானா?" என்று சசி புரியாமல் கேட்டான்.
விநாயகம் பெருமூச்சு விட்டபடி,
"ஆமாப்பா. மதியம் வந்திருந்தான். குழந்தையைப் பார்க்க வந்திருக்கேன்னு சொன்னான். தருண்கிட்ட கொஞ்ச நேரம் இருந்தான்."என்றார்.
"அதுக்கப்புறம்?"என்று சசி கேட்டான்.
"அதுக்கப்புறம் என்ன... பெருசா எதுவும் பேசல. ஆனா அவன் பார்வையே எங்களுக்கு நிம்மதி கொடுக்கல. கிளம்புறப்போ..."
என்று சிறிது தயங்கியவர்,
"இனி வாரா வாரம் வருவேன்...
என்று மட்டும் சொல்லிட்டு போயிட்டான்."என்றார்.
செல்வி உடனே , "அவன் என்ன பேசுறான்னு இல்லப்பா... அவன் வர்றதே எங்களுக்கு பயமா இருக்கு. இவ்வளவு நாளா நிம்மதியா இருந்தோம். இப்போ மறுபடியும் அவன் வந்து நிக்கிறதைப் பார்த்தாலே பழசு எல்லாம் ஞாபகம் வருது."
என்று கண்கலங்கினார்.
பரத் அமைதியாகவே நின்றிருந்தான். அவன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டவில்லை. ஆனால் செல்வியின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
சசி தான் அவர்களுக்கு ஆறுதல் கூறும் விதமாக,"அம்மா, நீங்க இவ்வளவு பயப்பட வேண்டாம். கோர்ட் அனுமதி கொடுத்திருக்கிறதால்தான் வந்திருக்கான். அதுக்கு மேல எதுவும் செய்ய முடியாது. அவன் வாரா வாரம் வந்தாலும் குழந்தையைப் பார்த்துட்டு மட்டும் தான் போகத்தான் முடியும்."என்றான்.
ஆனால் செல்வியின் மனம் சமாதானம் அடையவில்லை.
"எங்களுக்கு இன்னும் பயமாத்தான் இருக்கு தம்பி..."
என்று அவர் மீண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டார்." ஒரு பொண்ணைப் பெத்து வச்சிருக்கேன். ஏற்கனவே ஒரு பிள்ளையைத் தூக்கிக் கொடுத்துட்டேன். இப்போ இருக்குற பிள்ளையையும் இந்தச் சண்டாளப் படுபாவி நிம்மதியா இருக்க விடாம, வீடு தேடி வந்து டார்ச்சர் பண்ணிட்டு போறானே. என்ன பண்ணுவோம்?"
என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
"எந்த ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சோமோ தெரியல..."
என்றார் வேதனையாக.
சசிதான்,"அப்படியெல்லாம் சொல்லாதீங்கம்மா .. நீங்க செஞ்ச புண்ணியத்தால்தான் தருண் இன்னும் நம்ம கூட இருக்கான். விக்ரம்கிட்ட இருந்து பிரியாவையும் தருணையும் காப்பாத்தியதே அந்த புண்ணியம்தான். "
"ஆனா , அவன் விடாமல் இன்னும் துரத்துகிட்டே இருக்கானே பா.. எங்களுக்கு அந்த பயம் மட்டும் இன்னும் போகல..."என்று பெருமூச்சு விட்டார்.
"அவனை நினைச்சாலே உள்ளுக்குள்ள பதட்டமா வருது. சீக்கிரமே ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் போல இருக்கு. அப்போதான் நிம்மதியா இருப்போம்."என்றார்.
பிறகு, சசியை பார்த்து, "பிரியாவுக்கு நல்ல மாப்பிள்ளை யாராவது தெரிஞ்சா சொல்லுப்பா."என்று செல்வி மெதுவாகக் கேட்டார்.
சசி ஒரு நொடி அமைதியாக இருந்தான்..அவன் கண்களில் பதற்றமும் குழப்பமும் தெரிந்தது. ஒரு கணம் பரத்தைத் திரும்பிப் பார்த்தவன், மீண்டும் விநாயகத்தை நோக்கினான்.
பிறகு மெதுவாக, "அம்மா... இப்போ அதைப் பத்திப் பேச வேண்டிய நேரம் இல்ல."
என்று மட்டும் சொன்னான்.
பிரியா தலைகுனிந்து அமைதியாக நின்றாள்.
அவளுக்குள் ஏதோ கனமாக இறங்கியது. திருமணம் என்ற வார்த்தை ஒவ்வொரு முறையும் அவள் காதில் விழும்போதும், மனதில் ஆறியிருந்த காயங்கள் மீண்டும் திறக்கப்படுவது போலவே இருந்தது.
அங்கு சில நொடிகள் அமைதி நிலவியது. அந்த அமைதிக்குள், பேசாமல் நின்ற பரத்தின் முகம் மட்டும் மேலும் இறுகியிருந்தது. அவன் பார்வை எங்கோ வெறுமையை நோக்கி இருந்தாலும், அந்தப் பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் அவன் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.
"என்னப்பா சசி, வார்த்தைக்கு வார்த்தை உன் தங்கச்சின்னு சொல்றியே... அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்க வேண்டாமா? எங்க காலத்துக்கு பின்னால அவளுக்குனு ஒரு துணை வேணும் இல்லையா? இப்படியே பெத்தவங்களா வேடிக்கை பார்த்துட்டு நிற்க முடியுமா? உனக்குத் தெரிஞ்ச மாப்பிள்ளை யாராவது இருந்தா சொல்லுப்பா..." என்று மீண்டும் கூறினார்.
நண்பனைப் பற்றி கூறி அவனுக்குப் பெண் கேட்கலாம் என்று யோசித்தான். எப்படியும் தனது நண்பன் அவனது விருப்பத்தை வெளிப்படையாகக் கூற மாட்டான் என்று அறிந்தவன், இதையே முடிவு செய்து வைத்திருந்தான் சசி.
ஆனால் இப்போது அவர்கள் பேசும் விதத்தைப் பார்த்தபோது, "என் நண்பனுக்கே திருமணம் செய்து வையுங்கள்" என்று சட்டென்று கூறுவது எப்படி என்று அவனுக்குப் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சைக் கொண்டு சென்று, பரத்தைப் பற்றியும் பேசிவிட்டு, அதற்குப் பிறகு நண்பனின் விருப்பத்தைப் பற்றி கூறலாம் என்று நினைத்திருந்தான்.
ஆனால் இவர்கள் நேரடியாகக் கேட்டவுடன், என்ன செய்வது என்று தெரியாமல் அவஸ்தையுடன் இருந்தான்.
நண்பனின் அவஸ்தையைப் புரிந்துகொண்ட பரத், ஆழமாக ஒரு மூச்சை இழுத்துவிட்டு பேச ஆரம்பித்தான்.
சில நொடிகள் கழித்து அவன் மெதுவாக,"சார்…" என்று விநாயகத்தைப் பார்த்தான்.
"ஒரு விஷயம் "என்று நிறுத்தினான்.
சசி புருவம் சுருக்கினான்.
பரத் மெதுவாக, "நான் பிரியாவை… கல்யாணம் பண்ணிக்கட்டுமா?"என்று கேட்டான்.
அந்த வார்த்தை அங்கு ஒரு நொடி அமைதியை ஏற்படுத்தியது.
சசி அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான்."டேய் மச்சான்..." என்று அவசரமாக எழுந்த சசி, பரத்தின் அருகில் சென்று நின்று, அவன் என்ன பேசப் போகிறான் என்பதைக் கவலையுடன் பார்த்தான்.
“என்னப்பா பேசுற நீ? எங்களுக்கு இதுவரை நிறைய உதவி பண்ணியிருக்க. நாங்க இல்லைன்னு சொல்லல. ஆனா இது உதவி இல்லப்பா. என் பொண்ணோட வாழ்க்கை. மனிதாபிமானத்திலயோ, அனுதாபத்திலயோ தொடர்ந்து ஆதரவு தர்றதுல எங்களுக்கு விருப்பம் இல்லை.
அதேபோல அவசரமா எங்க புள்ளையோட வாழ்க்கையை நிர்ணயிக்கவும் நாங்க விரும்பல. எங்களுக்கு சூழ்நிலை இருக்கு தான். சீக்கிரம் நல்ல வாழ்க்கை அமையணும்னு பார்த்து கட்டிக்கொடுக்கணும்னு நினைக்கிறோம்தான். ஆனா எங்க மகளை மனசார ஏத்துக்கிற மாப்பிள்ளையா இருக்கணும். அதே சமயம் எங்க பேரனையும் ஏத்துக்கிறவங்களா இருக்கணும். எங்களுக்கு ரெண்டும் சேர்ந்ததா வேணும்.
அப்படி ஏதோ ஒரு சூழ்நிலையில தருணை நாங்க வளக்குற சூழல் வந்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை. அவனை நாங்க வளர்த்துப்போம்"மேற்கொண்டு பேச முடியாமல் நிறுத்தினார்.
அவரது கண்களை நேராக பார்த்தவன்,“நான் உங்க கண்ணை நேரா பார்த்துத்தானே பொண்ணு கேட்டிருக்கேன் சார்? எந்த இடத்திலாவது நீங்க சொல்ற மாதிரி கருணை அடிப்படையிலதான் உங்க பொண்ணை கேக்குற மாதிரி உங்களுக்கு தோணுதா?
விருப்பப்பட்டு, மனசு விரும்பித்தான் உங்க பொண்ணை கேட்டிருக்கேன். யோசிச்சு சொல்லுங்க. ஒன்னும் அவசரம் கிடையாது.
எனக்கு உங்க பொண்ண பிடிச்சிருக்கு. உங்க பொண்ணை மட்டும் கிடையாது, தருணோட சேர்த்துத்தான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன். இது எதுவுமே தருணுக்காக செய்யறதுமில்லை. நீங்க அதையும் நாளைக்கு மனசுல போட்டு குழப்பிக்க வேண்டாம்.
அதுக்காகத்தான் சொல்றேன். எனக்கு உங்க பொண்ண பிடிச்சிருக்கு. உங்க பொண்ணோட சேர்ந்து தருணும் சேர்ந்துதான் என்னோட வாழ்க்கை. நீங்களும் பிரியாவோட அம்மாவும் யோசிச்சு முடிவெடுங்க.”என்றவன் அங்கு தன்னை அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்த பிரியாவிடமே சென்றான்.
“ப்ரியா... அது...” என்றவன் பேச முயல,
அவனை அமைதியாக பார்த்தவள் எதுவும் பேச முடியாமல் நின்றாள்.
“எனக்கு நீங்க எவ்வளவு உதவி செஞ்சிருக்கீங்க சார். ஆனா இது என்னோட வாழ்க்கை. முக்கியமா எனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் கிடையாது. எனக்குன்னு ஒரு வாழ்க்கையை தனியா அமைத்துக்கொள்ள விருப்பம் கூட கிடையாது. என்னோட வாழ்க்கை தருண்தான். நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்.
அப்பா, அம்மாதான் என் கல்யாணத்தைப் பத்தி பேசினாங்க. நீங்களும் என்னைப் பத்தி கொஞ்சம்கூட யோசிக்காம...” மேற்கொண்டு பேச முடியாமல் நின்றவளைப் பார்த்தவன்,
“அவங்க சொல்றதுல எனக்கு எதுவும் தப்பா தெரியல, ப்ரியா.”
“ஏன் சார்? துணை இல்லாம ஒரு பொண்ணால கடைசி வரைக்கும் வாழ்ந்திட முடியாதா?”என்று இறுதியாக கேட்டாள்.
அவள் சிரிப்பில் உயிர்ப்பில்லை. அதே சமயம், தான் பெண் என்பதால் எங்கும் அடிபடுகிறோம் என்ற எண்ணமும் தோன்றியது அவளுக்கு.
அவளை நேராக பார்த்தவன்,
“உங்களுக்கும் சரி, தருணுக்கும் சரி, துணையா உங்களுக்கு நான் வருவேன்னு, நான் எப்பவும் இருப்பேன்னு நம்பிக்கை தர முயற்சி செய்றேன். அது வாய்வார்த்தையா எனக்கு தோணலை.
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, ப்ரியா. உங்க அப்பா, அம்மா கிட்ட சொன்னதுதான். உங்களை உங்களுக்காக விரும்புறேன். தருணுக்காக இல்லை. அதே சமயம், நீங்க மட்டும் கிடையாது, தருணும் சேர்ந்துதான் என்னோட வாழ்க்கை.
நீங்களும் பொறுமையா, நிதானமா யோசிங்க. யோசிச்சுட்டு என்னன்னு சொல்லுங்க.” என்றான்.
அதற்கு மேல் அங்கு இருந்தால் தன் மனம் இன்னும் என்னென்ன வெளிப்படுத்துமோ என்ற பயத்தில், வேகமாக தனது நண்பனையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
சசிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பரத்திடம் இருந்து இப்படி ஒரு விஷயத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. தன் மனதை நண்பன் வெளிப்படுத்த மாட்டான் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் அவன் வேகமாக தன் காதலை வெளிப்படுத்தியதில் அதிர்ச்சியாக இருந்தது.
வெளியே வந்து பைக்கில் அவனுடன் செல்லும்போது, முதுகில் இரண்டு மூன்று அடிகளை கொடுத்துக்கொண்டே சென்றான்.
“இப்போ எதுக்குடா இவ்வளவு அவசரப்படுற? அவசரப்பட்டு வேகமா பொண்ணு கேக்குற? நிதானமா இருக்க மாட்டியா?
இப்போதானே தங்கச்சி அந்த விஷயத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியே வந்துட்டு இருக்கா. அதுக்குள்ள பொண்ணு கேக்குற?
அவங்க அப்பா அம்மாவே கொஞ்சம் நேரம் கொடுக்காம அதுக்குள்ள கல்யாணத்தைப் பற்றி பேசுறாங்கன்னா, நீ ஒரு பக்கம் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்ன்னு நிக்கிற!
என்னடா நினைச்சிட்டு இருக்க? உன் பக்கம் இருந்து மட்டும் தானா யோசிப்ப?”
“இப்போ விட்டா எப்பவுமே இந்த கல்யாணம் நடக்காதோன்னு தோணுது சசி"
“அதுக்காக என்ன வேணாலும் செய்வியா? நான் பொறுமையா அவங்க கிட்ட பேசலாம்தானே இருந்தேன். நான் கொஞ்சம் கொஞ்சமா பேச்சு கொடுக்கும்போது, நீ அமைதியா இருந்துட்டு இப்போ சட்டுனு பொண்ணு கேக்குற.
அவங்க எவ்வளவு கவலைப்படுறாங்க.”
“கவலைப்படாத விடு. உன் கிட்டதானே மாப்பிள்ளை பார்க்க சொன்னாங்க? ஏன், வாய் திறக்க வேண்டியதுதானே?”
“ஏன்? உன்ன மாதிரி அவசர குடுக்கை மாதிரி பேச சொல்றியா?”
"சரி இப்போ என்ன வேண்டாம்னு சொல்லிடலாமா?" என்று கேட்ட பரத்தைப் பார்த்த சசிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அதன்பிறகு அமைதியாகிவிட்டான்.
“ஆனா நீ பண்ணது தப்பு மச்சான்.”
என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான்.
இறுக்கமான சூழலோடு இருவரும் வீட்டை அடைந்தனர்.
வீட்டின் முன் இறக்கிவிட்டவன்,
“போயிட்டு வீட்டுல அத்தை, மாமா, ரேகா கிட்ட பேசிடு மச்சான். நாள் கடத்த வேண்டாம்னு நினைக்கிறேன். நான் இங்கே அம்மாகிட்டயும் வினிகிட்டயும் இதைப் பற்றி பேசுறேன்.” என்றான்.
நண்பனை அதிர்ச்சியாக பார்த்தவன்,“என்னடா?”என்றான்.
“ அங்க பேசிட்டு இங்க வீட்டுல சொல்லாம இருக்க முடியுமா?"
" அவங்க இன்னும் என்ன சொல்றாங்கன்னு கூட தெரியல.”
“ஏன்? வேணாம்னு சொல்லிடுவாங்கன்னு நினைக்கிறியா?”என்று கேட்டான்.
தன் நண்பனை முறைக்க மட்டுமே முடிந்தது. ஆனாலும் அவன் சொல்வது போல் வீட்டில் பேசுவதுதான் சரி என்று யோசித்தவன், வேறெதுவும் பேசாமல் அவன் இறங்கியதும் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
பரத்துக்குத்தான் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.
அவன் வீட்டிற்குள் நுழையும்போது தங்கை வினிதா ஹாலில் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் சென்று அமர்ந்தவன்,“வினி...”
என்று அழைத்தான்.
மெதுவாக தனது அண்ணனின் முகத்தைப் பார்த்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்போதுதான் ஒரு வாரமாக கொஞ்சம் சந்தோஷமாக, இயல்பாக இருந்தான். இப்போது மீண்டும் என்ன பிரச்சனை என்று யோசிக்கத் தொடங்கினாள்.
மீண்டும் தலையை உலுக்கியவன்,
“அம்மா உள்ளதானே இருக்காங்க?”
“ஆமா அண்ணா.”
“சரி, அம்மாவை கூப்பிடு. கொஞ்சம் பேசணும்.”என்றான்.
ஒன்றும் புரியாமல் சில நொடிகள் நின்றவள், வேகமாக தாயை அழைத்துக்கொண்டு வந்தாள்.
“பானுமதியும், ‘என்னடி?’ என்று கேட்டுக்கொண்டே வர,
"அண்ணன் தான் அம்மா கூப்பிட்டுச்சு. என்னன்னு தெரியல, ஏதோ பேசணும்னு சொன்னான்," என்று வினிதா கூறினாள்.
தன் மகன் கொஞ்ச நாட்களாகவே ஒரு மாதிரியாக இருக்கவும், அவன் அருகில் வந்த பானுமதி,
"என்ன பரத்? ஏதாவது குடிக்கிறியா? எடுத்துட்டு வரட்டுமா?"என்று கேட்டார்.
"ஒண்ணும் வேணாம்மா. இங்க வந்து உட்காருங்க,"என்று தன் அருகில் அமர வைத்தவன், தங்கையை ஒரு பக்கமும் தாயை ஒரு பக்கமும் உட்கார வைத்துக்கொண்டு நடுவில் அமர்ந்தான்.
இருவரும் அவனது முகத்தையே பார்க்க,"உங்க கிட்ட சொல்லாம ஒரு முடிவு எடுத்திருக்கேன் ம்மா. அதுக்கு முதல்ல என்னை மன்னிச்சிடுங்க.உங்க கிட்ட சொல்லக் கூடாதுன்னு கிடையாது. ஆனா சூழ்நிலை..." என்று கூறிவிட்டு அமைதியாக நிறுத்தினான்.
இருவருமே ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தார்கள்.
மேற்கொண்டு அவனே தொடர்ந்தான்."அது... நான் ஒரு பொண்ணை விரும்புறேன்மா. அவ பேரு பிரியா"என்றான்.
தாய், மகள் இருவருமே எதிர்பார்க்காத அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார்கள்.
அவர்களின் பார்வையை கவனித்தவன், மெதுவாக அனைத்தையும் கூறத் தொடங்கினான்.
ட்ரெயினில் முதன்முதலாக அவளை பார்த்தபோது தனக்கு விருப்பம் ஏற்பட்டது என்றும், அதன் பிறகு விக்ரமை சந்திக்க நேரிட்டது என்றும் கூறினான்.
அதன் பின்னர் பிரியாவுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், அந்த பிரச்சனையில் இருந்து அவள் வெளிவருவதற்கு தானும் சசியும் செய்த உதவிகள், அவளின் போராட்டம், அவளது மனநிலை என அனைத்தையும் விவரமாக கூறினான்.
இப்போது அவளது பெற்றோர்கள் அவளுக்கு கொடுக்கும் நெருக்கடியையும் எடுத்துச் சொன்னான்.
"பெத்தவங்களோட பயமும் நியாயம்தான். அதனால அவங்களையும் குற்றம் சொல்ல முடியாது.அதே சமயம் என்னால அவளை அப்படியே விட்டுட்டு போகவும் முடியல."என்றவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
பிறகு தாயின் முகத்தை நேராக பார்த்து,"இன்னைக்கு அவங்க வீட்டுக்கு போய், எனக்கு உங்க பொண்ணை கட்டிக்கொடுத்துடுங்கன்னு கேட்டு வந்துட்டேன்ம்மா..."என்றான்.
அவன் கூறிய வார்த்தையில் தாய், தங்கை இருவரும் சில நொடிகள் பேச முடியாமல் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தனர்.
தான் மறைத்து வைத்திருந்த அனைத்தையும் இன்று ஒரே மூச்சில் கூறி முடித்திருந்தான் பரத்.
ஒரு நொடியும் யோசிக்காமல் பானுமதி அவனை அறைந்து இருந்தார்..
“என்னடா பண்ணி வச்சிருக்க?”
என்று கேட்டார்.
அவன் சிரித்தானே தவிர எதுவும் பேசவில்லை.
ஆனால் வினிதா வேகமாக எழுந்து நின்றாள்.
“அம்மா! என்னம்மா பண்ற? அண்ணா ஒருத்தவங்களை விரும்புறது தப்பா? உங்ககிட்ட சொல்லாம அவங்க வீட்டுல போய் பொண்ணு கேட்டது தப்புன்னு சொல்றியா? இல்ல உனக்கு அண்ணன் அவங்களை விரும்புறதே பிடிக்கலையா?
அதுவும் அந்தப் பொண்ணோட நிலைமையைப் பார்த்த பிறகும் இப்படிச் சொல்றீங்களே!” என்று படபடவென பேச ஆரம்பித்தாள்.
“வினி!”என்று வேகமாக தன் மகளை அடக்கினார் பானுமதி.
“என்னடி நினைச்சிட்டு இருக்கீங்க நீயும் உன் அண்ணனும்?இதுவரைக்கும் உங்க அண்ணன் பண்ண எதையுமே நான் தப்புன்னு சொல்லல.
முதல்ல அந்தப் பொண்ணை விரும்பினது எனக்கு தப்பாவே தெரியல. அது அவன் தனிப்பட்ட விருப்பம். அதுல நான் தலையிடவே இல்லை. கல்யாணம் நல்ல விஷயம்.
ஏன், அந்தப் பொண்ணு இக்கட்டான சூழ்நிலையில இருந்தப்போ அவளுக்கு உதவி பண்ணதும் உண்மையாவே நல்ல விஷயம்தான். இவனை பெத்ததுக்கு நான் பெருமைப்படுறேன்.
அதே சமயம்...அந்தப் பொண்ணு இப்படி ஒரு நெருக்கடியில் இருக்கும்போது, பெத்தவங்கதான் அவளை நிக்க வச்சிருக்காங்கன்னா, உன் அண்ணனும் அதே நெருக்கடியில போய், எனக்கு உங்க பொண்ணை கட்டி குடுங்கன்னு கேட்பானா?
அப்புறம் என்னடி உன் அண்ணன் அந்தப் பொண்ணை காதலிச்சான்? எங்கடி இருக்கு காதல்?”என்று கேட்டார்.
பரத் அமைதியாக அவரைப் பார்த்தான்.
அவரிடம் இருந்து இப்படி ஒரு பதிலை அவன் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தான். அதனால் அமைதியாகவே இருந்தான்.
ஆனால் வினிதாதான் மீண்டும் சத்தம் போட ஆரம்பித்தாள்.
“என்னம்மா? என் அண்ணன் காதலிச்சதாலதானே அவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறாரு!"
"அந்தப் பொண்ணு ஒரு பிரச்சனையில இருந்து வெளியே வந்து மூச்சு விடுறதுக்குள்ள எல்லாரும் சேர்ந்து அவளை இறுக்கிப் பிடிக்கிறீங்க.
அவங்க அம்மா, அப்பா கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறது தப்பு இல்லடி. பெத்தவங்களா அவங்க இடத்துல இருந்து பார்த்தா அது சரிதான்."
"ஆனா அதுக்காக கொஞ்சம்கூட நேரம் கொடுக்க மாட்டாங்களா?”
என்று வினிதா எதிர்த்து கேட்டாள்.
“அதை விடுடி.
உன் அண்ணன் அவளை கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறது எப்போ?
அந்தப் பொண்ணுக்கு உதவி பண்ண ஆரம்பிச்சதுக்கு முன்னாடியா? இல்ல அதுக்கப்புறமா?
அவளோட வாழ்க்கையில நடந்த எல்லா பிரச்சனைகளும் தெரிஞ்ச பிறகுதானே?
அப்போ இது காதலா? இல்ல அந்தப் பொண்ணுக்கு உதவி பண்ணணும், அவளை பாதுகாக்கணும்னு வந்த மனநிலையா?”என்று பானுமதி நேரடியாகக் கேட்டார்.
“அம்மா...”என்று வீடே அதிரும் அளவிற்கு கத்தினாள்.

Last edited: