பானுமதி பிரியாவிடம் பேசிவிட்டு வெளியே வந்தார்.
"எங்களுக்கு உங்க பையனுக்கு எங்க பொண்ணைக் கட்டிக்கொடுக்க விருப்பம் மா "
"அண்ணா அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. கடைசி வரை வாழப் போறது உங்க பொண்ணு தான். அவகிட்ட அவளோட மனசைக் கேளுங்க. வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வச்சிடலாம். ஆனா கடைசி வரை சந்தோஷமா வாழ முடியாது. உயிருள்ள வரை ஏதோ ஒரு மூலையில் அந்த வருத்தம் உறுத்திக்கிட்டே இருக்கும்.
பெத்தவங்களுக்காகத்தானே கல்யாணம் பண்ணி கிட்டோம்னு பின்னாடி நினைச்சாலும், அவங்க ரெண்டு பேரும் மனசு ஒத்து வாழ்ந்தாலும் கூட அந்த உறுத்தல் மறையாது. அதனால உங்க பொண்ணோட சம்மதத்தைக் கேளுங்க. எவ்வளவு நாளானாலும் நான் ஆகட்டும், என் பையன் ஆகட்டும் காத்திருப்போம்," என்றார்.
அதைக் கேட்ட பிரியா வேகமாக அவர் அருகில் வந்து அவரது கையைப் பற்றிக் கொண்டாள்.
"உங்க பையனோட இந்த குணம் எங்கிருந்து வந்ததுன்னு இப்போதான் புரியுது. உங்ககிட்டிருந்துதான் அவருக்கு இந்த நல்ல மனசு வந்திருக்கு.
இப்போ கூட உங்க பையன் விருப்பப்பட்டிருந்தாலும், என்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து என்கிட்ட வந்து பேசினது மட்டும் இல்லாம, என்னோட அப்பா அம்மாகிட்டயும் பேசுறீங்க. அதைப் பார்த்ததும் எனக்கு உங்களையும் சரி, உங்க பையனையும் சரி ரொம்பப் பிடிச்சிருக்கு.
ஆனா இந்த ஒரே காரணத்துக்காக கல்யாணம் நடக்கிறதுன்னு நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமா இருக்கு. அதே சமயம், கடைசி வரை என்னைப் பற்றி யாரும் யோசிக்க மாட்டாங்கன்னு நினைச்ச எனக்கு, என்னோட உணர்வுகளுக்கு நீங்களும் உங்க பையனும் கொடுத்த மதிப்பு ரொம்ப சந்தோஷமா இருக்கு, எனக்கும் சம்மதம் ஆன்டி" என்றாள்.
அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே சசி சந்தோஷமாக,"உண்மையிலேயே உனக்குச் சம்மதமா பிரியா? அவனைக் கல்யாணம் பண்ணிக்க?" என்று கேட்டான்.
லேசாகச் சிரித்த பிரியா,"எனக்கு முழு விருப்பம் அண்ணா" என்றாள்.
அதைக் கேட்டதும் சசியின் முகத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஒன்றாகப் பரவியது. அதற்கு மேல் அவனால் எதுவும் பேச முடியவில்லை.
சூடோடு சூடாக எல்லாவற்றையும் முடித்துவிட வேண்டும் என்று நினைத்த பானுமதி,"அப்போ சரி. வீட்டுல பேசிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து, முறையாக பொண்ணு பார்க்க வர்றோம்" என்று கூற, அந்த இடமே மகிழ்ச்சியால் நிறைந்து போனது.
உடனே சசி,"நாளைக்கே நல்ல நாள் தான் அத்தை" என்று அவரை இடைமறித்தான்.
அவனுடைய அவசரத்தைப் பார்த்து விநாயகமும் செல்வியும் சிரித்தனர்.
"நான் ஏற்கனவே வீட்டுல அப்பா, அம்மாகிட்ட பேசிட்டேன். அதே மாதிரி ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் வச்சுக்கலாம்."
என்றவுடன் விநாயகமும் செல்வியும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.
"ஏன் சசி? என்னப்பா ஆச்சு? ஏன் அப்படி பண்ணணும்?" என்று விநாயகம் கேட்டார்.
"இல்லப்பா. இப்போதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருக்கு. இப்போ பெருசா ஃபங்ஷன் பண்ணணும்னா பிரியாவுக்கும் கொஞ்சம் சங்கடமா இருக்கும்.
அது மட்டும் இல்லாம தருணும் ஒரு அளவுக்கு எல்லாத்தையும் புரிஞ்சுக்கிற வயசுக்கு வந்துட்டான். ரொம்ப பெருசா எதுவும் பண்ண வேண்டாம்.
இனி தருணுக்கு அப்பா, அம்மானா அது பரத்தும் பிரியாவும் தான். அவனுக்கு எதுவும் வித்தியாசமா தோணக்கூடாது. நம்ம கல்யாணத்தை கிராண்டா பண்ணுறதால அவனுக்கே ஒரு சங்கடம் வரக் கூடாது."என்றான்.
"இருந்தாலும் எங்களுக்கு இருப்பது ஒரே பொண்ணு தானப்பா...அதே போல " என்று செல்வி தயக்கமாகக் கூற,
அமைதியாக இருந்த சசி,
"அத்தை எதுவும் சொல்ல மாட்டாங்க. அத்தைக்கு பரத்தோட கல்யாணம் நடந்தாலே போதும்.
அதனால அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க.ரிஜிஸ்டர் ஆபீஸ்லயே கல்யாணத்தை வச்சுக்கலாம்.நீங்க என்ன சொல்றீங்கன்னு சொல்லுங்க..." என்றான்.
அதைக் கூறிவிட்டு தனது அத்தையைப் பார்த்தான்.
பானுமதி சசியை முறைத்தாலும், விநாயகத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே,"அதான் என் மருமகனே சொல்லிட்டானே. நான் அப்புறம் என்ன சொல்லப் போறேன்? அவன் சொன்ன மாதிரி ரிஜிஸ்டர் ஆபீஸ்ல சிம்பிளாவே கல்யாணத்தை வச்சுக்கலாம்.
தருணுக்கும் இந்தச் சங்கடத்தைக் கொடுக்கக் கூடாது. முக்கியமா பிரியாவுக்கும் அந்தச் சங்கடம் வரக் கூடாது."என்றார்.
பிரியாவைப் பார்த்தபடியே விநாயகமும் செல்வியும் சம்மதமாகத் தலையசைத்தனர்.
அனைவரிடமும் கூறிவிட்டு பானுமதியை அழைத்துக்கொண்டு சசி வெளியே வந்தான்.
போகும் வழியிலேயே பானுமதி அவன் காதைத் திருகினார்.
"அத்தை... அத்தை... காதை விடுங்க! என்ன ஆச்சு? என்னை ஏன் பிடிச்சு திருக்குறீங்க?" என்று கத்தினான்.
"அப்போ உன் பிரண்டு போகும்போதே எல்லாத்தையும் சொல்லித்தான் அனுப்பி இருக்கான். அப்படித்தானடா?"
என்று கண்களைச் சுருக்கினார்.
"ஆமா அத்தை. அவனுக்கு உங்களைப் பற்றி தெரியாதா?
நேத்து என்னதான் இங்க பட்டுன்னு பொண்ணு கேட்டிருந்தாலும், நீங்க எப்படியும் அந்தப் பொண்ணு வீட்டுக்கு வந்து பேசுவீங்கன்னு அவனே முடிவு பண்ணிட்டான்.
அதுக்கு ஒத்து ஊதுற மாறி உங்க, பெரிய மகளும் என்கிட்ட குதிக்க ஆரம்பிச்சுட்டா. கோபப்பட்டது மட்டும் இல்லாம, அவங்க அண்ணனுக்கும் போன் பண்ணி, யாரைக் கேட்டு நீங்க போய் வேகமா பொண்ணு கேட்டீங்க?ன்னு சண்டைக்கு போயிட்டா"
என்றான்.
"அப்புறம்?"என்று பானுமதி கேட்டார்.
"அவன் நேத்தே முடிவு பண்ணிட்டான்.சிம்பிளா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு. அதான் நமக்கும் வசதியா இருக்கும்.அதே சமயம் சட்ட ரீதியா எந்தச் சிக்கலும் இருக்காது.
பின்னால விக்ரம் வந்து பிரச்சனை பண்ணவும் முடியாது.கோவில்ல கல்யாணம் வச்சாலும் அங்க வந்து நிற்பான்.
இங்க வந்தா அவனால் எந்தப் பிரச்சனையும் பண்ண முடியாது.
அதே சமயம் குழந்தையும் நம்மகிட்டதான் இருக்கும். கோர்ட்டுல கூட பெருசா எதுவும் சொல்ல முடியாது."என்றான்.
பானுமதி ஒரு பெருமூச்சு விட்டார்.
"எல்லா முடிவும் பண்ணிட்டு தான்டா என்கிட்ட வந்து பேசுறீங்க.
அவ்ளோ வேண்டாதவளா போயிட்டேனா நான்?" என்று வருத்தமாகக் கேட்டார்.
உடனே சசி நின்றுவிட்டான். "அத்தை... விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு வார்த்தை சொல்லாதீங்க. நீங்க வருத்தப்படுறது தெரிஞ்சாலே அவன் ரொம்ப வருத்தப்படுவான்.
ஏற்கனவே நேத்துல இருந்து ஒரு மாதிரியாத்தான் இருக்கான்."
என்றான்.
அதை கேட்ட பானுமதி மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டார்.
"என்னமோ பண்ணுங்கடா..."
என்றவர் அமைதியாகிவிட்டார்.
அவரது குரலில் கோபம் இல்லை.
மகனின் சந்தோஷத்துக்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளத் தயாரான ஒரு தாயின் அன்பும், வருத்தமும் மட்டுமே இருந்தது.
அதன்பிறகு நேராக அவனை அவனது வீட்டிற்கு வண்டியை விடுமாறு கூறினார்.
வீட்டிற்கு வந்ததும், சுந்தரம் தெய்வா இருவரையும் பார்த்து விஷயத்தைக் கூறினார்.
"உங்க மருமகன் பண்ணி வச்சிருக்கிற காரியத்தைப் பார்த்தீங்களா?" என்று ஆரம்பித்தவர், ரேகாவிடம் போனில் திட்டியது பத்தாது என்பதுபோல் நேரிலும் புலம்பினார்.
உடனே சுந்தரம்,"என் மருமகன் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சந்தோஷப்படுறதை விட்டுட்டு, என் மருமகனைக் குறை சொல்லிட்டு இருக்காத.
சட்டுப்புட்டுன்னு பேசி, முடிக்கிற வேலையைப் பாரு. நாளைக்கே போய்ப் பொண்ணு கேட்டுட்டு, அடுத்த முகூர்த்தத்தில கல்யாணத்தை முடிச்சிடலாம்," என்றார்.
"நீங்க இப்படி உங்க மருமகனைத் தூக்கி வச்சிட்டு கொஞ்சி ஆட்டம் போடுங்க," என்று பானுமதி முறைக்க,
"என் மருமகன் ஏதாவது தப்பா செஞ்சுட்டானா?" என்று திருப்பிக் கேட்டார் சுந்தரம்.
அப்போது தெய்வா வந்து பானுமதியின் அருகில் அமர்ந்தார்.
"அண்ணி, உங்களுக்கு வருத்தமா? நம்மகிட்ட சொல்லாம போய் அந்தப் பொண்ணு வீட்டுல பேசிட்டானேன்னு வருத்தமா இருக்கா?" என்று மெதுவாகக் கேட்டார்.
அதைக் கேட்ட பானுமதி சிரித்துவிட்டார்."அப்படி எல்லாம் இல்ல அண்ணி. உங்க மருமகனைப் பற்றி நான் அப்படி எல்லாம் பேசப் போறேனா? என் பையனோட வாழ்க்கைதானே எனக்கு முக்கியம்.
இம்புட்டு நாளா தங்கச்சிக்காக இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருந்தவன்.
இப்போ அந்தப் பொண்ணு இக்கட்டான சூழ்நிலையில இருக்கும்போது, ஒரு வேலை அவளுக்கு கல்யாணமே பண்ண முடியாம போயிடுமோ, அவளுக்கும் அவளோட பையனுக்கும் கடைசி வரைக்கும் ஒரு துணை இருக்கணும்னு நினைச்சுதானே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருக்கான்.
இப்ப இருக்கிற காலகட்டத்துல ஒரு ஆம்பள, கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணுக்கு வெளியில இருந்து எந்த அளவுக்கு சப்போர்ட்டா இருந்திட முடியும்?
இருந்தாலும் அந்தப் பொண்ணோட இடத்துல இருந்து யோசிக்கணும்னுதான் நான் நினைச்சேன்.
அவளுக்கும் ஒரு மனசு இருக்கு.
அவளுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு.அதனாலதான் அவசரப்படக்கூடாதுன்னு தோணிச்சு."என்றவர் ஒரு பெருமூச்சு விட்டார்.
"ஆனா இப்போதான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.
அவங்க பெத்தவங்ககிட்டயும், அந்தப் பொண்ணுகிட்டயும் பேசின பிறகுதான்.
பிரியா பேசின விதம் பார்த்தா, அவ என்ன நினைக்கிறாளோ அதைத் தெளிவா யோசிச்சு முடிவு எடுப்பா.யாருக்காகவும் அவளை அவளே பலி கொடுக்க மாட்டா.
அதே நேரம், தன்னோட வாழ்க்கையைப் பற்றியும் யோசிப்பா.அதுதான் எனக்கு நிம்மதி."என்றார்.
அவரது முகத்தில் இருந்த கவலை முழுவதுமாக மறையவில்லை என்றாலும், முன்பிருந்த பதற்றம் மட்டும் குறைந்து இருந்தது.
ஏனென்றால் இப்போது முடிவு எடுப்பது சூழ்நிலை இல்லை...
பிரியாவின் மனம்தான்.
அதன் பிறகு சசியுடன் வீட்டிற்குச் சென்று மகளிடமும் பேசினார் பானுமதி.
மறுநாளே பிரியா வீட்டிற்கு சென்று, இன்னும் ஒரு வாரத்தில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று பேசி முடித்துவிட்டு வந்தார்கள்.
அதன்பிறகு நாட்கள் வேகமாகக் கடந்தன.
ரிஜிஸ்டர் ஆபீஸிற்குத் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்து, எளிமையாகவே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
எல்லாமே நல்ல முறையில் நடந்தது.
தாலி, புடவை, நகை என அனைத்தையும் பரத் தனக்குப் பிடித்தவாறே தேர்வு செய்து இருந்தான்.
என்னதான் அவசரகதியில் திருமணத்தை முடிவு செய்திருந்தாலும், பிரியாவுக்காக பார்த்துப் பார்த்துத்தான் ஒவ்வொன்றையும் வாங்கியிருந்தான்.
திருமணம் முடிந்து வீட்டிற்கு அழைத்து வரும்போது, ரேகாவை நீ வீட்டிற்கு போ பாப்பா காலையில இருந்து அழுதுட்டு இருக்கா பாரு என கூறி அனுப்பி வைத்தான்..அவளும் அவனை முறைத்தபடியே கிளம்பிவிட்டாள்.
இங்கே வினிதாதான் மணமக்களை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கு ஏற்ற வைத்தனர்.
அதன்பிறகு வீட்டிற்குள் இருக்கவே பிரியாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.
பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, தருணையும் அழைத்துக்கொண்டு வினிதா அவளை அழைத்துச் சென்றாள்.
"இதுதான் அண்ணனோட..."
என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டவள், "சாரி... உங்களோட ரூம்..." என்றாள் கண்களைச் சுருக்கிக்கொண்டு.
அவள் கூறியதில் பிரியாவிற்கும் சிறிது நாணம் வந்தது.
"இது அம்மா ரூம்..நானும் இதே ரூம்லதான் இருப்பேன். மேக்சிமம் படிக்கும்போது மட்டும் தனியா வந்து படுப்பேன். மத்தபடி அம்மா கூடத்தான் தூங்குவேன்.
அதான் சாமி ரூம் பார்த்துட்டோம்ல... வாங்க மேல."
என்று அழைத்துச் சென்றாள்.
மேலேயும் ஒரு அறை இருப்பதைப் போல, ஒவ்வொரு அறையையும் காட்டிக்கொண்டே,
"இங்க ஏதாவது வேணும்னா இருக்குது... அங்க புத்தகங்கள்... இங்க பால்கனி..."என்று சுற்றிக்காட்டினாள்.
அதனால் பிரியாவும் கொஞ்சம் சகஜமானாள்.
ரிஜிஸ்டர் ஆபீஸிலிருந்து வீட்டிற்கு வரும்போது மதியத்தைக் கடந்திருந்தது.அவ்வளவு நேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை.
மாலை ஆனதும் மீண்டும் விளக்கேற்றி சாமி கும்பிட்டனர்.
அனைவருடனும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க நேரம் அப்படியே ஓடிவிட்டது.
இரவும் வந்தது.அப்போது விநாயகமும் செல்வியும் கிளம்பத் தயாரானார்கள்.
"இங்கேயே இன்னைக்கு இருந்துட்டுப் போகலாமே மாமா?" என்று பரத் கேட்டான்.
"இல்லப்பா. இனி பொண்ணு வாழப் போற வீடு இது. நீங்க நல்லா இருந்தா போதும். "
"பிரியாவும், தருணும் இல்லாம நீங்க அங்க தனியா தான இருக்கணும்? தருண் இவ்வளவு நாள் உங்க கூட இருந்துட்டு, இப்போ தனியா இருக்கறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்." என்றான்
சிரித்தார் விநாயகம்.
"பழகிடும் தம்பி. அதுக்காக இங்கேயே இருந்திட முடியுமா?" என்று செல்வியும் சிரித்தார்.
பிறகு பிரியாவின் தலையை வருடியவர்,"பாத்துக்கோ பிரியா..." என்று கூறிவிட்டு கண் கலங்க கிளம்பினார்.
போகும் போது தருண்தான் லேசாக அழுதான்.
சசி அவனைத் தூக்கிக்கொண்டு சமாதானப்படுத்தினான்.வினிதாவும் விளையாட்டுக் காட்டி அவனைக் கவனத்தை மாற்றினாள்.அதன்பிறகு அனைவரும் இரவு உணவை முடித்தனர்.
உணவு முடிந்து பிரியா அறைக்குள் செல்ல வேண்டிய நேரம் வர, அவளுக்குள் சொல்ல முடியாத பதற்றம் உருவானது.
அதை வெளியே காட்டாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
அப்போது அவளருகில் வந்த பானுமதி,"நீ நீயாவே இந்த வீட்டுல இருக்கலாம் பிரியா.இது உன்னோட வீடு.நம்ம வீடுன்னு நினைச்சுக்கோ."என்றார் மென்மையாக.
அதன்பிறகு தூக்கக் கலக்கத்தில் இருந்த தருணை அவளது கையில் கொடுத்தவர்,"தூங்கிட்டான் பாரு தம்பி.போயிட்டு தூங்க வை.நீயும் தூங்கு.ஒரு வாரமா கல்யாண வேலைன்னு ஓடிட்டே இருந்த பாரு..."என்று சிரித்தார்.
ஆனால் அந்தச் சிரிப்பின் பின்னால், புதிதாக இந்த வீட்டிற்குள் வந்திருக்கும் பெண்ணின் பதற்றத்தை குறைக்க முயலும் ஒரு தாயின் அன்பு தெளிவாக இருந்தது.
அதற்கு மேல் எதுவும் பேசாமல், அவளை மெதுவாக அறைக்குள் அனுப்பி வைத்தார்.
என்னதான் அறைக்குள் நுழைந்திருந்தாலும், சிறிது பதற்றம் இருந்தது பிரியாவிற்கு.
அறையைச் சுற்றிப் பார்த்தாள்.
அறை மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஒவ்வொரு பொருளும் அதன் இடத்தில் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தது.அனைத்தையும் பார்வையால் அளந்துகொண்டே நின்றிருந்தாள்.
அப்போது அறைக்குள் நுழைந்தான் பரத்.
அவள் அவனைப் பார்க்க, அவனும் சிநேகமாகப் புன்னகைத்தான்.
அமைதியாக உள்ளே வந்தவன், தருண் படுத்திருந்த பக்கத்தில் சென்று அமர்ந்தான்.
"என்ன பிரியா, வசதியா இருக்கா?" என்று கேட்டான்.
ஆனால் அவள் அவனையே கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"பிரியா... உங்ககிட்டதான் கேட்டேன்."என்றான் மீண்டும்.
அதன்பிறகுதான் அவனும் இப்போதுவரை தன்னை வாங்க, போங்க என்று மரியாதையாக அழைப்பது அவளுக்குப் புரிந்தது.
"ஏன் சார், நீங்க என்னை வாங்க, போங்கன்னு கூப்பிட்டு இருக்கீங்க?உங்களோட சின்ன பொண்ணுதானே நான்? பிரியா... வா, போன்னு கூப்பிடலாம்ல?
சாதாரணமா பேசிப் பழகலாம்."
என்றாள்.
கண்களைச் சுருக்கிப் பார்த்தவன்,
"நீங்க என்னை எப்படி கூப்பிட்டு இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்டான்.
அதன்பிறகுதான் அவளும் இன்னும் அவனை சார் என்று அழைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.நாக்கைக் கடித்துக்கொண்டவள்,
"சரி... ஓகே...நான் உங்களை இனிமேல் பரத் என்று கூப்பிடுறேன். இல்ல வாங்க, போங்கன்னு கூப்பிடுறேன்.
நீங்க என்னை நார்மலா கூப்பிடுங்க.ஏதோ ரொம்ப டிஸ்டன்ஸா இருக்கிற மாதிரி இருக்கு."என்றாள்.
லேசாகப் புன்னகைத்தவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
"சரி... எனக்கு டயர்டா இருக்கு. தூங்கலாமா?" என்றான்.
அவனைத்தான் பார்த்தாள்.
"பிரியா... உங்ககிட்டதான் கேட்கிறேன்."
"தூங்கலாம்."
"இல்ல புத்தகம் இருக்கு. கதை ஏதாவது படிக்கிறீங்களா?"
"இல்ல... எனக்கு டயர்டாதான் இருக்கு."என்று அவசரமாக மறுத்தாள்.
அவளைப் பார்த்துச் சிரித்தவன், அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
அமைதியாக விளக்கை அணைத்துவிட்டு படுத்துக் கொண்டான்.
அவளும் தருணின் அருகில் படுத்துக் கொண்டாள்.
பரத்திற்கோ உண்மையிலேயே உடலும் மனமும் களைத்துப் போயிருந்தது.
அதையும் தாண்டி, தான் விரும்பியவள் இன்று தன் மனைவியாக, தன் வீட்டில், தன் அறையில் இருப்பது ஒரு விவரிக்க முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்தது.
தூக்கத்தில் இருந்த தருணை அன்பாகப் பார்த்தவன், அவன் நெற்றியில் மெதுவாக ஒரு முத்தமிட்டு படுத்துக் கொண்டான்.
சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டான்.
பிரியாவிற்குத்தான் தூக்கம் வரவில்லை.ஒரே வாரத்தில் தன் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறிவிட்டது என்று யோசித்தாள்.
விக்ரமின் பிரச்சனை நடந்துகொண்டிருந்தபோதுகூட, எப்படியாவது இதிலிருந்து வெளியே வந்துவிடலாம் என்ற எண்ணம்தான் இருந்தது.
அப்போது அவளுக்குள் ஒரு சிறிய தைரியமும் இருந்தது.அந்தத் தைரியத்திற்கு முக்கியக் காரணம் பரத்.அவன் துணையாக நின்றது அவளது மனதிற்கு ஒரு இதத்தைத் தந்திருந்தது.ஆனால் திருமணத்தைப் பற்றி அவள் யோசித்ததே இல்லை.
கடகடவென்று அனைத்தும் நடந்துவிட்டது.திருமணப் பேச்சு.பரத் முடிவு, திருமணம்... எதுவுமே யோசிக்க நேரம் கொடுக்காமல், ஒரு நொடியில் சுடச்சுட நடந்துவிட்டது போலத் தோன்றியது.
அதை நினைக்கும்போதே அவளுக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.
இடைப்பட்ட காலத்தில் பரத் அவளிடம் பெரிதாக எதுவுமே பேசவில்லை என்பதுதான் உண்மை.
திருமணத்தைப் பற்றி கூட அவன் மீண்டும் ஒரு வார்த்தை பேசவில்லை.அன்று அவள் வீட்டிலிருந்து கிளம்பும்போது,
"நான் உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் சார்..."என்று விநாயகத்திடம் கூறியபோது பார்த்ததுதான்.
அதன்பிறகு இன்று...தன் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்புதான் அவனை மீண்டும் நேராகப் பார்த்தாள்.
அந்த இடைப்பட்ட நாட்களில் அவன் அவளைத் தேடி வரவும் இல்லை. அவளை அழுத்தப்படுத்தும் விதமாக பேசவும் இல்லை.முடிவு முழுவதும் அவளிடமே இருக்கட்டும் என்று விலகி நின்றவன் போலவே இருந்தான்.
அதை நினைக்கும்போது, அவன் மீது இருந்த மரியாதையும் நம்பிக்கையும் அவளது மனதில் இன்னும் கொஞ்சம் உயர்ந்தது.
இருட்டில் படுத்தபடி, உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பரத்தையும், அவனருகில் சுருண்டு படுத்திருந்த தருணையும் பார்த்தவளின் உதடுகளில் அறியாமல் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது.
ஆனால் அது காதலின் புன்னகை இல்லை.நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் உருவாகியிருந்த ஒரு பாதுகாப்பு உணர்வின் புன்னகை.
அவளும் எதையெதையோ யோசித்தபடியே இருந்தவள், எப்போது உறக்கத்திற்கு சென்றாள் என்றே தெரியாமல் தூங்கிவிட்டாள்.
மறுநாள் விடியலில் எப்போதும் போலவே சீக்கிரமாக விழித்திருந்தான் பரத்.
கண்களைத் திறந்தவன் அருகே பார்த்தான்.பிரியாவும் விழித்திருந்தாள்.தருணை பார்த்துக்கொண்டே அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அவளது முகத்தில் இன்னும் ஒரு வித தயக்கம் தெரிந்தது.
"என்ன பிரியா? ஏன் இங்கேயே உட்கார்ந்து இருக்கீங்க? வெளியே போகலாம்ல?" என்று மெதுவாகக் கேட்டான்.
"அது... நான்..." என்று தடுமாறினாள்.
அவள் சொல்ல வார்த்தைகள் தேடிக்கொண்டிருக்க, இருவரின் பேச்சுச் சத்தத்தில் தருணும் விழித்துக் கொண்டான்.
விழித்தவுடன் இருவரையும் பார்த்து புன்னகைத்தவன், ஏதோ மழலை மொழியில் பேச ஆரம்பித்தான்.
உடனே இருவரின் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.
தருணிடம் பேசிக்கொண்டே இருந்தனர்.
அப்போதுதான்,"வாங்க பிரியா, வெளியே போகலாம்..." என்று பரத் மீண்டும் கூறிக்கொண்டிருந்த நேரத்தில் அறைக்கதவு தட்டப்பட்டது.
பரத் எழுந்து சென்று கதவைத் திறந்தான்.
வாசலில் வினிதா நின்று கொண்டிருந்தாள்.
"அண்ணா, தருண் எழுந்துட்டானா?" என்று கேட்டவள், பதிலுக்குக் கூட காத்திருக்காமல் அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்துவிட்டாள்.
"என் குட்டி எழுந்துட்டானா?"
என்று தருணைத் தூக்கிக்கொண்டவள்,
"வாங்க வாங்க... பால் குடிக்கலாம்.
பாட்டி உங்களுக்காக பால் எடுத்து வச்சிருக்காங்க."என்று கூறினாள்.
பிறகு பிரியாவைப் பார்த்து,
"உங்களுக்கு பால் வேணுமா? டீ வேணுமா?" என்று லேசாகப் புன்னகையுடன் கேட்டாள்.
அவளது புன்னகையில் எந்தச் சங்கடமும் இல்லை.இயல்பாகவே பழக முயலும் அன்பு மட்டும் இருந்தது.
பிறகு தருணைத் தூக்கிக்கொண்டு, "வாங்க அண்ணி, வெளிய போலாம்..." என்று கூறியவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
உண்மையில், புதிய வீட்டில் முதல் நாள் காலையில் பிரியாவிற்கு வெளியே வருவதற்கே சங்கோஜமாக இருக்கும் என்று அவள் நினைத்திருந்தாள்.
அதனால்தான் அவளாகவே உள்ளே வந்து, தருணை ஒரு காரணமாக்கி, இருவரும் இயல்பாக இருக்க ஒரு வாய்ப்பைக் கொடுத்தாள்.
அதை புரிந்துகொண்ட பரத் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.
பிரியாவிற்கும் வினிதாவின் அந்த அக்கறை மனதை நெகிழ வைத்தது.
புதிய வீட்டில் ஒரு மருமகளாக அல்ல...ஒரு குடும்பத்தின் அங்கத்தினராக தன்னை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்ற உணர்வு மெதுவாக அவள் மனதில் வேரூன்றத் தொடங்கியது.