வீட்டிற்கு வந்தவுடன் அனைவரும் அங்கேயே சாப்பிட்டு விட்டிருந்தனர். அசதியும் இருந்ததால், சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக தங்களது அறைகளுக்குச் சென்று ஓய்வெடுக்க ஆரம்பித்தனர்.
பரத்தும் வினியின் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது பிரியா அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதை கவனித்தவன்,
"என்ன பிரியா? அப்படியே பார்த்துட்டே இருக்க?" என்று கேட்டான்.
அவள் மெதுவாகப் புன்னகைத்தாள்.
"நான் பார்க்குறது இருக்கட்டும். நீங்க ஏன் என்னை சாயங்காலத்துல இருந்து அப்படி பார்த்தீங்க?" என்று கேட்டாள்.
அவ்வளவு நேரம் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்த பரத்திற்கு, அந்தக் கேள்வியைக் கேட்ட நொடியே ஒருவித பதற்றம் ஏற்பட்டது.
'தன்னுடைய காதல் வெளிப்பட்டு விட்டதோ?'என்ற எண்ணம் தோன்றியது.
"அப்படி எல்லாம் இல்லையே..." என்று தடுமாறினான்.
"நான் எப்பவும் போலத்தான் இருந்தேன்."
உடனே பிரியா தலையசைத்தாள்.
"இல்ல பரத். நீங்க எப்பவும் போல இல்லைன்னு எனக்குத் தெரியும்.
இன்னொரு விஷயம்...
நீங்க சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சு போயிடுச்சு.
உங்களுக்கு எப்ப இருந்து என்னைப் பிடிக்கும்?
எப்ப இருந்து என்னை விரும்புறீங்க?
ஏன் இப்ப வரை உங்க மனசை என்கிட்ட வெளிப்படுத்தாம இருந்தீங்க?
எது உங்களைத் தடுக்குது?" என்று நேராகக் கேட்டாள்.
அவள் இவ்வளவு வெளிப்படையாகக் கேட்பாள் என்று எதிர்பார்க்காத பரத் அதிர்ந்து போனான்.
"பிரியா... அது..." என்று வார்த்தைகளைத் தேடினான்.
வேகமாக அவன் அருகில் வந்து அமர்ந்தவள், அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.
"சொல்லுங்க பரத்..." என்றாள்.
அவன் லேசாகச் சிரித்தான்.
அவளது தலையைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டவன் .
சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் அவளது விரல்களை வருடிக் கொண்டிருந்தவன் மெதுவாக,
"பிரியா..." என்றான்.
"ம்ம்..."
"உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு நினைக்கல பிரியா.
இன்னும் சொல்லப்போனா, இப்போ வினி விஷயம் வராம இருந்திருந்தா, நானே உன்கிட்ட சொல்லியிருப்பேன்.
எனக்கும் உன் பார்வை புரிஞ்சுச்சு.
இப்போ வினி விஷயம் முடிஞ்சதும், அடுத்து நம்ம விஷயத்தைப் பேச ஆரம்பிச்சிடுவோம்னு நினைச்சேன்."
அவள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
"டிரெயின்ல பார்த்துதான் பிரியா, எனக்கு உன்னை முதல்ல பிடிச்சது.
உன்னைப் பார்த்த உடனே காதல் வந்துச்சுன்னு சொல்ல முடியாது.
ஆனா ஏதோ ஒரு ஈர்ப்பு வந்துச்சு.
ஒருநாள் நான் எப்பவும் வர்ற டிரெயினை மிஸ் பண்ணிட்டேன்.
அப்போதான் நீ வர்ற டிரெயின்ல வந்தேன்.
அங்கேதான் உன்னை முதன்முதலா பார்த்தேன்.
அதுவும் உன் கழுத்துல இருந்த அந்த டாலர் செயினைப் பார்த்ததுக்கப்புறம், ஏதோ ஒரு காரணமே இல்லாம உன்னை மீண்டும் மீண்டும் பார்க்கணும்னு தோணுச்சு.
அதுக்கப்புறம் உனக்காகவே அந்த டைம்ல வர ஆரம்பிச்சேன்.
அதை சசியும் நோட் பண்ணிட்டான்.
ஆனா அவனுக்கு முழுசா புரியல.
ஏதோ கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்பான்.
ஒருநாள் அவன் கூட தொடர்ந்து வந்தப்போ, என் பார்வைதான் அவனுக்குக் காட்டிக் கொடுத்துச்சு நான் உன்னைப் பார்க்கிறேன்னு.
அதுக்கப்புறம் அடிக்கடி என்னை நோண்ட ஆரம்பிச்சிட்டான்.
'உன்னோட இஷ்ட தெய்வத்தைப் பார்க்கப் போகலையா?'ன்னு கிண்டல் பண்ணுவான்.
ஆனா உண்மையா சொன்னா, முதல்ல அந்த டாலர் மேல இருந்த ஈர்ப்புதான்.அதனால உன் மேல ஈர்ப்பு வந்துச்சு.அதுக்கப்புறம்தான் அது காதலா மாறுச்சு.
ஆனா உண்மையா சொல்றேன்... உன்னை முதல் தடவை பார்த்தப்போ காதல் வரல. ஆனா உன்னைப் பார்க்காம ஒரு நாள் இருந்தா ஏதோ இழந்த மாதிரி இருந்துச்சு.
அதுக்கப்புறம் நீ சிரிச்சா சந்தோஷமா இருந்துச்சு...
நீ அழுதா மனசு கஷ்டப்பட்டுச்சு...
தருண் என்னை தேடினா சந்தோஷமா இருந்துச்சு...
ஒரு நாள் நீங்க ரெண்டு பேரும் என் வாழ்க்கையில இல்லன்னு நினைச்சு பார்த்தேன்.
அன்னைக்குத்தான் புரிஞ்சது...
நான் உங்களை காதலிக்கிறதல்ல...
உங்களை வைத்து தான் நான் வாழ ஆரம்பிச்சுட்டேன்னு." என்றான்.
பிரியாவின் கண்கள் கலங்கின.
"பரத்..."
என்று அழைத்தவளை பார்த்து புன்னகைத்தவன்,
"உண்மையா சொல்லணும்னா...
எனக்கு காதல் சொல்ல தெரியாது.
கவிதை எழுத தெரியாது.
ரோஜா பூ வாங்கிட்டு பின்னாடி சுத்தவும் தெரியாது.
ஆனா...
உனக்கு உடம்பு சரியில்லனா நான் பதறுவேன்.
நீ சந்தோஷமா இருந்தா நான் சிரிப்பேன்.
நீ அழுதா எனக்கு தூக்கம் வராது.
நீ கோபப்பட்டா சமாதானப்படுத்திட்டு தான் விடுவேன்.
என் காதல் அப்படித்தான் பிரியா.
வார்த்தையில இல்ல...
உன்னோட ஒவ்வொரு நாள்லயும் இருக்கும்."
என்றான்.
அவள் கண்ணீரோடு சிரித்தாள்.
"நானும் உங்களை ரொம்ப காதலிக்கிறேன் பரத்."
என்று கூறியவள் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அவளை அணைத்துக் கொண்டவன்,
"இனிமேல் எதுவானாலும் சரி...
நீ தனியா நின்னு சமாளிக்க வேண்டியதில்லை.நான் இருக்கேன்.எப்பவும்."என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
அதை கேட்ட பிரியா சிரித்தாள்.
"சரி, அதை ஏன் என்கிட்ட சொல்லல?" என்று கேட்டாள்.
அந்தக் கேள்வியை அவளும் தடுமாற்றத்தோடுதான் கேட்டாள்.
பரத் ஆழமாக மூச்சை இழுத்துக் கொண்டான்.
"முதல் காரணம் வினி.
அவளுக்குக் கல்யாணம் ஆகுற வரைக்கும் நான் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு ஒரு பொறுப்பா நினைச்சேன்.
அது ஒரு காரணம்.
ஆனா அதையும் தாண்டி ஒரு பயம் இருந்துச்சு.உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும் பிரியா.
உன் மேல உசுரையே வச்சிருந்தேன்.உன்னை எங்கயாவது விட்டுடுவோமோன்னு பயம்.
அதே நேரம், நீ என்னை ஒரு நல்ல நண்பனா, நம்பிக்கையானவனா, துணையா பார்த்திருக்கலாம்.
ஆனா வாழ்க்கைத் துணையா பார்த்திருக்க மாட்டியோன்னு ஒரு சந்தேகம்.
உங்க அப்பா அம்மாவும் உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சுட்டு இருந்தாங்க.
ஒரு சூழ்நிலையில் நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா?
அந்த எண்ணமே என்னை பயமுறுத்துச்சு.
உன்னை வேறொருத்தருக்குக் கொடுக்கிற அளவுக்கு நான் நல்லவன் கிடையாது.
என்னால வேறொரு பெண்ணை வாழ்க்கைத் துணையா ஏத்துக்கவும் முடியாது.
அதே நேரம், தருண் மேலயும் என்னையும் மீறி பாசம் வந்துட்டு இருந்துச்சு.அவனையும் விட்டுக் கொடுக்க மனசு இடம் கொடுக்கல.
மொத்தமா நீயும், தருணும் சேர்ந்து என் வாழ்க்கைக்குள்ள இருக்கணும்னு நினைச்சேன்.
அந்த நேரத்துல சசி, உங்க அப்பா அம்மா எல்லாரும் அந்தச் சூழ்நிலையில இருந்தப்போ, அவங்களையும் காப்பாத்தணும், உங்களையும் காப்பாத்தணும்னு தோணுச்சு.
அதனாலதான் நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன்."
சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் மீண்டும் தொடர்ந்தான்.
"ஆனா அந்த நேரத்துல ஒரு குற்ற உணர்வு இருந்துச்சு பிரியா.
உன்னோட விருப்பத்தைப் பற்றி நான் யோசிக்கவே இல்ல.
அதுதான் என்னைக் கஷ்டப்படுத்துச்சு.
அதைவிட முக்கியமா, நீ இப்போதான் ஒரு பெரிய பிரச்சினையிலிருந்து வெளியே வந்திருந்த.
அதுக்குள்ள இன்னொரு நெருக்கடியில உன்னை நிறுத்த விரும்பல.
என்னை நீயாக விரும்பணும்.
உன் மனசு சொல்லி என்னை ஏத்துக்கணும்.
தருணுக்காக இந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டேன்னு நீ ஒரு நாள்கூட நினைக்கக் கூடாது.
அதனாலதான் காத்திருந்தேன்.
நீ நீயாக இந்த உறவுக்குள் வரணும்.
நானும் உன் மனசுல ஒரு இடம் பிடிக்கணும்.
அதுக்குத்தான் இவ்வளவு நாள் என்னோட காதலைச் சொல்லாம இருந்தேன்..." என்று தனது மனதில் இருந்த அனைத்தையும் அவளிடம் இறக்கி வைத்தான்.
"சரி, ஆனா கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்கூட நீங்க என்கிட்ட உங்க விருப்பத்தை சொல்லலையே?" என்று பிரியா கேட்டாள்.
பரத் மெதுவாகச் சிரித்தான்.
"என் விருப்பத்தை சொல்லி, அதுக்கப்புறம் நீ என்னை விரும்புனா, அதுல காதல் இல்லாம போயிடுமோன்னு ஒரு சிறிய தயக்கம் இருந்துச்சு பிரியா.
அதே சமயம், நான் உன்னை காதலோட பார்த்தோ, பேசினாலோ, நீ ஏதோ ஒரு இடத்துல அவஸ்தைப்படுவியா என்ற பயமும் இருந்தது.
என் காதலை உன் மேல திணிச்ச மாதிரி ஆகக்கூடாதுன்னு யோசிச்சேன்.
நீயா ஏத்துக்கணும்.
நீ நீயா இந்த வீட்டுல இருக்கணும்.
இது உன்னோட வீடு என்ற உணர்வு உனக்குள்ள வரணும்.
இதையெல்லாம் யோசிச்சேன்.
அதுதான் அம்மாவும் யோசிச்சாங்க.
அதனாலதான் கல்யாணத்துக்கு முன்னாடி உன்கிட்ட வந்து பேசினாங்க.
ஆனா இன்னைக்கு உன்னை சுடிதார்ல பார்த்ததிலிருந்து என்னால சத்தியமா கண்ட்ரோல் பண்ண முடியல பிரியா.
அதுதான் உண்மை.
எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
வேற எப்படி சொல்றதுன்னு தெரியல.
நீயும் தருணும் சேர்ந்துதான் இனி என் மொத்த வாழ்க்கை," என்றான்.
அதைச் சொல்லிவிட்டு அவள் நெற்றியில் ஆழமாக முத்தமிட்டான்.
பிரியா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது முடியை ஒதுக்கி விட்டவன்,
"தூங்கு. உனக்கு தேவையான பதில் எல்லாம் கிடைச்சிருச்சு இல்ல?" என்று கேட்டான்.
வேகமாக அவனை அணைத்துக் கொண்டாள்.
"எனக்கும் உங்களைப் பிடிக்கும் பரத்.எப்படி நீங்க எனக்குள்ள வந்தீங்கன்னு தெரியல.
ஆனா உங்களோட சின்னச் சின்ன விஷயங்களைக் கவனிக்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு," என்றாள்.
"ஏன்டி, நான் வாய்விட்டு என் காதலை சொல்லலன்னா, என் செயல்கள் உனக்கு உணர்த்தலையா?
அது எல்லார்கிட்டயும் காட்டுற அன்பு, அக்கறை மாதிரி தானா உனக்கு தோணுச்சா?" என்று குறும்பாகக் கேட்டான்.
"அப்படி இல்ல பரத்... அது..." என்று தடுமாறினாள்.
"பிரியா, முதல்ல நீ நீயா இருக்கணும்னுதான் நினைச்சேன்.
என் காதலை உன்கிட்ட திணிக்கக் கூடாதுன்னு நினைச்சேன்.
ஆனா இனிமேல் குறையாம என் காதலை உன்கிட்ட கொட்டிக் கொடுப்பேன்.
சரியா?
இப்போ நிம்மதியா தூங்கு," என்றான்.
அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தபடி தட்டிக் கொடுத்தான்.
சிறிது நேரத்தில் அவள் உறங்கிவிட்டாள்.
முதல்முறையாக அவளைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தவன், பிறகு மெதுவாக அவளைப் படுக்கையில் வசதியாகப் படுக்க வைத்துவிட்டு, அவளருகிலேயே வந்து படுத்துக் கொண்டான்.
மறுநாளிலிருந்து இருவரின் காதல் பார்வைகள் இன்னும் நீண்டன.
அவ்வப்போது சிறுசிறு சில்மிஷங்கள், விளையாட்டுகள், குறும்புகள் என இருவருக்கும் இடையே தொடர்ந்தன.
தங்களையும் மீறி அவ்வப்போது முத்தப் போர்களும் நடந்தன.
ஆனால் இன்னும் தங்களது தாம்பத்திய வாழ்க்கையை முழுமையாகத் தொடங்குவதற்கான நேரம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
அடுத்த மாதத்தில் வினிக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டது.
பரத்தின் திருமணத்தை பெரிதாக நடத்த முடியாததால், வினியின் திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று அனைவரும் முடிவு செய்திருந்தனர்.
திருமணத்திற்குத் தேவையான வேலைகளில் ஓடி ஓடி செய்வதற்கே நேரம் சரியாக இருந்தது.
நிச்சயதார்த்தமும் நல்ல முறையில் நடந்து முடிந்தது.
அதன்பிறகு வினி படிப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
இரவு நேரங்களில் தன் தாயுடன் வந்து உறங்குவாள்.
அதைப் பார்த்து பானுமதி சிரித்துக் கொள்வார்.
அதே சமயம் மகனும் மருமகளும் பரிமாறிக் கொள்ளும் காதல் பார்வைகளையும் கவனித்தார்.
ஆனாலும் எதுவும் தெரியாதது போல அமைதியாகக் கடந்து செல்வார்.
இப்படியே அழகாக அவர்களது காதல் காவியம் வளர்ந்து கொண்டே இருந்தது.
பார்வையாலும் செயல்களாலும் தங்களது காதலைப் பரிமாறிக் கொண்டனர்.
கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
இறுதியாக வினியின் திருமணமும் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இதற்கிடையில் ஒரு நாள், திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக வினியும் பிரியாவும் கடைத்தெருவுக்குச் சென்றிருந்தனர்.
அப்போது ஒரு ஜூஸ் கடையில் நின்று இருவரும் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் விக்ரம் அங்கு வந்தான்.
பிரியாவைப் பார்த்தவுடன் நேராக அவர்களிடம் வந்து நின்றான்.
"ஏய்... என்னடி?நான் ஊர்ல இல்லாத நேரத்துல அந்த பரத்தை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு கேள்விப்பட்டேன்.ரொம்ப சந்தோஷமா இருக்க போல. முகத்துல அவ்வளவு தேஜஸ் தெரியுது," என்று கூறியபடி அவளைத் தொட முயன்றான்.
உடனே வினி முன்னால் வந்து நின்றாள்.
"ஏய்! யாருடா நீ? எங்க அண்ணியத் தொட்டு பேசுற?" என்று சண்டைக்கு வந்தாள்.
"ஏய் சில்வண்டு, நீ யாரு?" என்று அவன் முறைத்தான்.
"அண்ணின்னு சொல்றியே?"
"அவங்க என் அண்ணனோட பொண்டாட்டி!" என்று வினி பதிலடி கொடுத்தாள்.
"ஓ... அந்த பரத்தோட தங்கச்சியா நீ?நீயும் பார்க்க அழகாத்தான் இருக்க..." என்று மேலிருந்து கீழ்வரை பார்த்தான்.
இதுவரை அமைதியாக இருந்த பிரியா இப்போது பேச ஆரம்பித்தாள்.
"ஏய்! அவகிட்ட உன் வால ஆட்டுற வேலையை வச்சுக்காத. நேரா நின்னு பேசு. இல்ல வால ஒட்ட நருக்கிடுவேன்" என்றாள்.
விக்ரம் சிரித்தான்.
"எனக்கு பயந்துதானடி நான் வெளியூர் போயிருந்த நேரத்துல கல்யாணம் பண்ணிக்கிட்ட?
திரும்பி வந்து கேட்டேன். உன்னைப் பார்க்கணும்னு நினைச்சேன்.நேத்துதான் வந்தேன். ரொம்ப ஜொலிக்கிற போல.இனி எப்படி சந்தோஷமா இருக்கன்னு பார்க்கிறேன்," என்றான்.
உடனே வினி,"ஏன்டா, எங்க அண்ணன் ஏன் உனக்குப் பயந்துட்டு கல்யாணம் பண்ணணும்?
உனக்கு பயந்து இங்க யாரும் வாழலை.எங்க அண்ணனும் அண்ணியும் சந்தோஷமா இருக்காங்க.உனக்கு என்ன வந்துச்சு?
உன் வேலையைப் பார்த்துட்டுப் போடா, பொறுக்கி நாயே!" என்று சத்தமிட்டாள்.
"ஓவரா பேசுறடி!" என்று விக்ரம் முன்னேறினான்.
அவனைத் தடுத்த பிரியா,
"வினி, அவன்கிட்ட பேசவேண்டாம்.நமக்கு தேவையில்லாதவன்.
நம்ம வாழ்க்கையில இனி பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறவங்க கிட்ட பேசுறது வேஸ்ட்.
யார்கிட்ட வாதம் பண்ணணும்னு கூட ஒரு அளவு இருக்கு.
இவன்கிட்ட பேசுறது வீண். வா... நமக்கு நிறைய வேலை இருக்கு," என்றாள்.
அவர்கள் நகர முயன்றபோது விக்ரம் சிரித்தான்.
"என்னடி? பின்னாடி உன் புருஷன் இருக்கான்ற திமிரா?" என்றான்.
அந்த ஒரு நொடி பிரியா திரும்பிப் பார்த்தாள்.
"ஆமாண்டா!என் புருஷன் இருக்கான்னு திமிர்தான்.
இப்போ என்ன?
எனக்கு ஒரு பிரச்சினைன்னா தோள் கொடுக்கவும், தாங்கி நிற்கவும் பரத் இருக்காரு.
இனிமே உன்னால முடிஞ்சதைப் பாரு.
அதுக்கப்புறம் என் மேல கையை வச்சிட்டு நீ நிம்மதியா இருக்கிறதையும் நானும் பார்க்கிறேன்," என்றாள்.
முதல்முறையாக வேறொருவனிடம் "என் புருஷன்" என்று உரிமையோடு சொன்ன அந்த வார்த்தை அவளுக்கே பெருமையாக இருந்தது.
அதைச் சொல்லிவிட்டு கம்பீரமாக நடந்து சென்றாள்.
வினியும் புன்னகையுடன் அவளைப் பின்தொடர்ந்தாள்.
வீட்டிற்குத் திரும்பும் வழியில்,
"வீட்டுல யார்கிட்டயும் இவனைப் பற்றி சொல்ல வேண்டாம்," என்று பிரியா கேட்டுக் கொண்டாள்.
"ஏன் அண்ணி?" என்று வினி கேட்டாள்.
"உன் அண்ணன் இப்போ கல்யாண வேலை டென்ஷன்ல ஓடிட்டு இருக்காரு.
இந்த நேரத்துல இதைச் சொல்லி வேணாமே. அவன் அவ்ளோ, பெரிய ஆளே கிடையாது.
தருணோட தனியா வாழ்ந்தப்பவே இவனைப் பார்த்து நான் பயப்படல.இப்போ எனக்குத் துணையா உங்க அண்ணா இருக்காரு.
அத்தை, நீ, சசி அண்ணா... ஒரு குடும்பமே எனக்காக இருக்கு.
அப்புறம் நான் ஏன் இவனைப் பார்த்து பயப்படணும்?
சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல கண்ட நாயைப் பற்றி யோசிக்க வேண்டாம்," என்றாள்.
வினியை சமாதானப்படுத்தியவள், மீண்டும் பழைய கலகலப்போடு பேச ஆரம்பித்தாள்.
இருவரும் சிரித்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தனர்.
திருமணமும் கோலாகலமாக நடந்து முடிந்தது.
மறுவீட்டு அழைப்பும் முடிந்த பிறகு, இரவு சடங்கிற்காக வினியைத் தயார்படுத்தி அனுப்ப வேண்டியிருந்தது.
அதற்காக பிரியாதான் அவளுடன் இருந்தாள்.
வினியை அழகாக அலங்கரித்து முடித்தவள், அவளது தோளைத் தட்டி,"உனக்கு இனி நான் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை வினி.உனக்கே எல்லாம் தெரியும். பார்த்து நடந்துக்கோ, சரியா?" என்று கூறினாள்.
அப்படிச் சொல்லிவிட்டு அவளது நெற்றியில் அன்பாக முத்தமிட்டாள்.
"அண்ணி..." என்று அழைத்த வினி, வேகமாக அவளைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
பிறகு அவளது கையைப் பிடித்துக் கொண்டவள்,"என்னடா?" என்று பிரியா கேட்டதும்,
"இல்ல... எனக்கு அவர்கிட்ட பேசிப் பழகி, சகஜமா இருக்கறது பிரச்சனை இல்லை.அது எல்லாம் சரி.ஆனா..." என்று தயங்கினாள்.
"அப்புறம் என்ன?" என்று பிரியா கேட்டாள்.
"அம்மா..." என்றாள் வினி.
உடனே பிரியா சிரித்தாள்.
"அத்தையா?ஏன்டா, நான் பார்த்துக்க மாட்டேனா?
என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?" என்று குறும்பாகக் கேட்டாள்.
"அப்படி இல்லை அண்ணி.
நீங்க உங்க மாமியாரை நல்லா பார்த்துப்பீங்கன்னு எனக்கு தெரியும்.
ஆனா அம்மா என்னோடவே தூங்கி பழகிட்டாங்க.
தப்பா எடுத்துக்காதீங்க.
அப்பப்ப தருணை அம்மா கூட தூங்க விடுங்க.தனியா இருக்க விடாதீங்க.
அப்பா இருந்த வரைக்கும் கூட மேக்சிமம் நான் அவங்க ரூம்லதான் இருப்பேன்.
அதுவும் அப்பா போனதுக்கப்புறம் முழுக்க முழுக்க அம்மா கூடத்தான் இருந்துட்டேன்.
பகல் நேரம் எல்லாம் அம்மா சமாளிச்சிடுவாங்க.
தருணும் வேற இருக்கான்.
ஆனா நைட்டு தூங்குற வரைக்கும் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்," என்று கண்கள் கலங்கியபடி கூறினாள்.
அதைப் பார்த்த பிரியாவும் கண்களைச் சுருக்கி புன்னகைத்தாள்.
"சரி. இதுக்குத்தானா இவ்வளவு யோசனை?
அத்தையை நான் பார்த்துக்கறேன்.
நீ அதைப் பற்றி கவலைப்படாம சந்தோஷமா இரு," என்று கூறினாள்.
அதன் பிறகுதான் வினி நிம்மதியாகச் சிரித்தாள்.
அன்று இரவு அவர்கள் வீட்டிற்குத் திரும்பியபோது, தருண் ஏற்கனவே தூங்கி விட்டிருந்தான்.
அதைப் பார்த்த பானுமதி,
"தருண் தூங்கிட்டான் பிரியா.
அவன் இன்னைக்கு என் கூடவே தூங்கட்டும்.நீங்க போயிட்டு ரெஸ்ட் எடுங்க," என்று கூறினார்.
நேற்றிலிருந்து மகனும் மருமகளும் பரிமாறிக் கொள்ளும் பார்வைகளில் ஏற்பட்ட மாற்றத்தை அவர் நன்றாகவே கவனித்திருந்தார்.
வாழ்க்கையை வாழ்ந்து முடித்த அனுபவம் கொண்டவர் அல்லவா?
இருவரின் மனநிலையும், அவர்களுக்குள் மலர்ந்திருந்த காதலையும் தெளிவாக உணர்ந்திருந்தார்.
அதனால்தான் எதுவும் சொல்லாமல், அவர்களுக்கான தனிமையையும் நேரத்தையும் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்.
அதைச் சொல்லிவிட்டு, பேரனையும் தன்னுடன் முதல் முறையாக அழைத்துச் சென்றார்.
அது தருணை பார்த்துக் கொள்வதற்காக மட்டும் அல்ல.
தனது தனிமையையும் கொஞ்சம் போக்கிக் கொள்ளவும்,
அதோடு மகனும் மருமகளும் தங்களுக்குள் மனம் திறந்து பேசவும், ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும் என்ற அன்பான எண்ணத்தினாலும்தான்.
அன்று இரவு, அறைக்குள் நுழைந்தவுடன், புடவையில் நின்றிருந்த பிரியாவை பின்புறத்திலிருந்து கட்டி அணைத்துக் கொண்டான் பரத்.
"பரத்... என்ன பண்றீங்க?" என்று அவள் ஒருவித சிலிர்ப்புடன் கேட்டாள்.
"என்னடி பண்றேன்? நேத்திலிருந்து உன்னை இந்தப் புடவையில் பார்த்து பார்த்து, மொத்தமா உன்னை அள்ளிச் சாப்பிடணும் போல இருக்குடி. சத்தியமா சொல்றேன், என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியல, பிரியா," என்றான்.
அவள் மெதுவாகச் சிரித்தாள்.
"நீங்களும் தான் இந்த ஷர்ட்ல ரொம்ப அழகா இருக்கீங்க," என்று அவனது சட்டைக் காலரைத் திருத்தினாள்.
அவளைத் தன்னருகே திருப்பி நிறுத்தியவன் புன்னகைத்தான்.
குனிந்து நின்றிருந்த அவளது தாடையை நிமிர்த்தினான்.
"பிரியா..."
அவனது குரலில் காதல் வழிந்தது.
அவளும் சிரித்துவிட்டு கண்களை மூடிக் கொண்டாள்.
அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன்,
"உனக்கு விருப்பமா?" என்று கேட்டான்.
அவள் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள்.
"ஒவ்வொரு நேரமும் என்னோட விருப்பத்துக்காகத்தான் காத்திருந்தீங்க. எனக்கு முழு சம்மதம்.
இவ்வளவு நாள் வினி கல்யாணம் ஆகணும், வேலைகள் முடியணும்னு அலைஞ்சிட்டு இருந்தோம்.
உண்மையாவே சொல்லணும்னா..." என்று சொல்லிவிட்டு அவனது தோளில் மெதுவாகக் கடித்தாள்.
"ஏய்!" என்று சிரித்தான் பரத்.
"உண்மையாவே சொல்லணும்னா, நீங்க சொன்ன மாதிரி எனக்குமே உங்களை அப்படியே கடிச்சு சாப்பிடணும் போல இருந்துச்சு," என்று அவனது கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள்.
"அடிப்பாவி!" என்று சிரித்தவன்,
"ஏன்? உங்களுக்கு மட்டும் தான் எல்லா உணர்ச்சியும் இருக்கணுமா? எங்களுக்கு இருக்கக் கூடாதா? அதுக்கு ஏதாவது எழுதப்படாத சட்டம் இருக்கா?" என்று புருவம் உயர்த்திக் கேட்டாள்.
"அப்படின்னு யார் சொன்னா?" என்று சிரித்தவன், அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
அதன்பிறகு இருவரும் தங்களது காதலை முழுமையாக உணர்ந்து, ஒருவருக்கொருவர் மனதைப் பகிர்ந்து கொண்டனர்.
அவர்களது நீண்டநாள் ஏக்கங்களும், காத்திருப்புகளும் அன்றிரவு நிறைவை அடைந்தன.
அந்த அறை முழுவதும் அவர்களது சந்தோஷமும் காதலும் மட்டுமே நிரம்பியிருந்தது.
இரவு கடந்து மறுநாள் காலை வந்தது.
பிரியா இன்னும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
பரத் எழுந்து குளித்துவிட்டு வந்த பிறகும் அவள் தூக்கத்திலேயே இருந்தாள்.
"பிரியா..."என்றான்.
அவள் அசையவில்லை.
"பிரியா... சாரிடி..." என்று அவளது காதருகே குனிந்து சொன்னான்.
"ப்ச்!" என்று கண்களைத் திறந்து அவனை முறைத்தாள்.
"ஏய்... நான் சொல்றதை முழுசா கேளுடி. அப்புறமா தூங்கலாம்.
வெளியே மறுவீட்டு அழைப்புக்கு போகணும் இல்ல?
அது உன் அண்ணன் பார்த்துப்பான், பிரச்சனை இல்லை.
ஆனா இங்கே சமைக்கணும். ஆளுங்க வருவாங்கல்ல," என்று நினைவுபடுத்தினான்.
"அய்யோ!" என்று வேகமாக எழுந்தவள், தலைமுடியை வாரிச் சுருட்டிக்கொண்டு ஓடினாள்.
அதைப் பார்த்து பரத் சிரித்தான்.
அவளும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே சென்றாள்.
திருமணம் ஆகி பல மாதங்கள் கடந்த பிறகுதான் அவர்களது காதல் முழுமையான நிறைவை அடைந்திருந்தது.
ஆனால் அதனால் அவர்களது பொறுப்புகள் குறையவில்லை.
அவ்வப்போது பார்வை பரிமாற்றங்களும், சிறு சீண்டல்களும் தொடர்ந்தாலும், கடமைகளில் இருவரும் கவனமாகவே இருந்தனர்.
வினியின் மறுவீட்டு அழைப்பிற்காக அனைவரும் வந்திருந்தனர்.
அப்போது ரேகாவிடம் கிசுகிசுத்துக் கொண்டிருந்த வினியைப் பார்த்த சசி, இருவரின் தலையிலும் மெதுவாகத் தட்டிவிட்டு,
"இப்போதான் உனக்குக் கல்யாணம் ஆயிருக்கு. அதுக்குள்ள என் பொண்டாட்டிக்கிட்ட வந்து ஒட்டிட்டு இருக்கியா?
"அந்தப் பக்கம் என்ன ஃபர்ஸ்ட் நைட்டுக்கு அனுப்பிவிட்டு, இந்தப் பக்கம் இவங்க ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடின மாதிரி இருக்கு!" என்று கேலி செய்தாள்.
"அடியே..." என்று அவன் முறைக்க,
"அது எல்லாம் அப்புறம் இருக்கட்டும்.நீ உன் ஃபிரண்டைப் பார்த்தியா இல்லையா?" என்றாள்.
"பாத்துட்டுத்தான் இருக்கேன். ஆனா உனக்குத்தான் வேற ஒருத்தரோட பார்வையே தெரியல போல."
"என்ன?" என்று வினி கேள்வியாகப் பார்த்தாள்.
"அங்க குறுகுறுன்னு ரொம்ப நேரமா உன் புருஷன் உன்னைப் பாத்துட்டு இருக்கான்.
அது உன் கண்ணுக்கு தெரியல மேடம்!
இப்போதான் கல்யாணம் ஆச்சுன்னு மறந்துடுவீங்க போல.
போய் உன் புருஷனை கவனி.
உன் அண்ணன் வாழ்க்கையை அவன் பாத்துப்பான்.
என் தங்கச்சியையும் அவன் நல்லா பார்த்துப்பான்," என்று கூறி அவளது தலையில் மீண்டும் மெதுவாகக் கொட்டினான்.
அப்போதுதான் தனது கணவனின் பார்வையை உணர்ந்த வினி, நாக்கைக் கடித்துக் கொண்டு வெட்கமாகச் சிரித்தாள்.
பிறகு சங்கரின் அருகே சென்று அமர்ந்தாள்.
அப்படியே மறுவீட்டு அழைப்பும் இனிதே முடிந்து, அனைவரும் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தனர்.