• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 35

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 35


உள்துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து இருந்த மாறனும் தேவயானி டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்பி இருந்தார்கள் அவர்களை வழி அனுப்பி வைத்த தண்டாயுதபாணி தனக்கு டெல்லியில் இன்னும் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு அங்கேயே தங்கியிருந்தார்.

அது ஒரு தனியார் கேளிக்கை விடுதி அங்கு மது ஆறாக ஓடி கொண்டிருக்க மாதுக்கள் அழகாய் ஆடி கொண்டிருந்தனர் அந்த ஆடலுக்கு துணை செய்தது அமைதியான மெல்லிசை அதை ரசித்து கொண்டே மது கிண்ணத்தில் ஊற்றி வைத்திருந்த மதுவை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குள் இறக்கி கொண்டிருந்தார் தண்டாயுதபாணி அங்கு அவரை சந்திக்க வந்து சேர்ந்தான் பாண்டி.

குமரன் பாண்டியை தனது நிறுவன தொடர்பிலிருந்து முற்றிலுமாக அகற்றியது பாண்டிக்கு அவனின் மீது தீராத வன்மத்தை வளர்த்திருந்தது ஆதலால் அவனை ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்தான் அந்நேரம் தான் குமரனின் நிறுவனம் மொத்தமாக கடனில் மூழ்கி அவனும் வேலைக்கு சென்று விட்டான் என்ற செய்தி அவன் காதில் விழுந்தது. அதை கேட்டவனுக்கு மகிழ்ச்சியாக இருக்க இத்தோடு அவன் கதை முடிந்து விட்டது இதற்குமேல் எழுந்து வருவது சாத்தியமில்லை என்று நம்பியதால் குமரனை பற்றி அதிகம் சிந்திக்காமல் பாண்டி தனது வழியில் செல்ல ஆரம்பித்தான்.
அவனது குறுக்கு புத்தியும் சாமர்த்திய தனமும் அவனை உள்துறை அமைச்சகம் வரை கொண்டு வந்திருந்தது. அவன் நிலைமை உயர்ந்து இருந்தாலும் கூட இன்று இந்தியாவில் இருக்கக்கூடிய முக்கியமான ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாளராக குமரனை பார்த்த போது தனது மனதில் இருந்த பழைய வன்மம் மீண்டும் முழித்துக் கொண்டது.

முடிஞ்சு போனதா நினைச்சவன் இப்படி முலைச்சு வந்து நிற்ப்பான் என்று நினைக்கவில்லை, இப்படி வந்து நின்றவன் வாழ்ந்து விட்டு போகட்டும் என்ற நல்லெண்ணமும் அவனிடம் வரவில்லை, ஆதலால் குமரனின் மீது இருக்கும் நன்மதிப்பை கெடுத்துவிடும் படியாக இரண்டு மூன்று வார்த்தைகளை சேர்த்து கோர்த்து பேசி விட்டால் அவனின் மீதான நன்மதிப்பு கெட்டுவிடும் அதன் பின்பு அவனுக்கு இத்தனை முக்கியத்துவம் இருக்காது சாதாரண ஒரு வேலைக்காரனாக அந்த நிறுவனத்தில் அவன் தொடர்வான் அல்லது அந்த நிறுவனத்தால் அவன் விரட்டியடிக்கப்படுவான் அதுவே தனக்கு போதும் என்ற எண்ணத்தில் தான் தண்டாயுதபாணியும் தேவயானியும் இருக்கும்பொழுது குமரனின் முன்பாகவே அவனைப் பற்றி பொய்யான குறைகளை அடுக்கினான்.

குமரனை பற்றி ஒரு விடயம் அவனுக்கு நன்றாக தெரியும் யாராவது தன்னை குறைபேசினால் அதை கண்டு கொள்ளாமல் சென்று விடுவது அவனது வழக்கம் தான் இப்படி என்று தன்னை ஒருபோதும் நியாயப்படுத்தி கொண்டதில்லை. காலம் பல கடந்தாலும் அடிப்படை குணம் அநேகமாக மாறுவதில்லை என்பதை நன்கு அறிந்து வைத்திருந்த பாண்டி அதை சரியான நேரத்தில் பயன்படுத்தினான்.
அவனது அந்த சாமர்த்தியத்தனம் ஓரளவு தண்டாயுதபாணியின் மனதை மாற்றி இருந்தது. அது ஒரு காரணம் என்றாலும் குமரனுக்காக தேவயானி வரிந்து கட்டிக் கொண்டு நின்றது தண்டாயுதபாணியை இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வைத்தது ஆதலால் குமரனை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் நோக்கோடு தண்டாயுதபாணி பாண்டியை சந்திக்க முயற்சி செய்திருந்தார் அந்த முயற்சியின் விளைவு தான் இப்பொழுது அவர்களது இந்த சந்திப்பு.

" வா பாண்டி "

" வணக்கம் அய்யா "

" தண்ணி சாப்பிடுறியா? "
அந்த வெளிநாட்டு மதுவை கிண்ணத்தில் ஊற்றி கொண்டே கேட்க, பாண்டியும் சம்மதித்து அமர்ந்தான். இரண்டு மூன்று சுற்றுகள் போன பின்பு,

" ஏன் பாண்டி உனக்கு அந்த குமரன ஆரம்பத்தில இருந்தே தெரியுமா? "

" தெரியும் ய்யா "

" அப்போ அவனை பத்தி எனக்கு முழுசா சொல்லு "

" ஐயா அதான் காலையிலேயே உங்ககிட்ட சொன்னேனே அவன பத்தி. மறுபடியும் அவனை பத்தி சொல்லணும்னா கூட பெருசா சொல்றதுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல சுத்தமான சோம்பேறி பையன் அடுத்தவர்கள் உழைப்புல உட்கார்ந்து திங்கிறதுக்கு ஆசைப்படுவான் "

" அப்படியா, ஆனா இன்னைக்கு இந்த ஒப்பந்தம் இப்படி உருவாக காரணமே அவன் தான்னு என் மருமக சொல்லுறாளே பா "

" நான்தான் சொன்னேனே அய்யா அவன் உழைப்பு எல்லாம் கொஞ்சம் காலம் மட்டும் தான் அப்புறம் உன்னி மாதிரி விடாம இறுக்கி புடிச்சு உட்கார்ந்து ரத்தத்தை உறிஞ்சிட்டு இருப்பான். அவனுக்கு முக புத்தகத்தில கிறுக்கிட்டே இருக்குறது ரொம்ப பிடிக்கும் அதுக்கு புதுசா சேர்ந்து இருக்குற நிறுவனத்தில வாய்ப்பு கிடைக்காது அந்த வாய்ப்பை உருவாக்க அவனுக்கு ஒரு வெற்றி தேவை அது தான் இந்த ஒப்பந்தம். நா சொல்லுறதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லனா கூட அவனோட அலைபேசிய வாங்கி நீங்களே சோதனை செஞ்சு பாருங்க,

ஆன்மன்ன்னு ஒரு பக்கம் முகபுத்தகத்தில வச்சிருக்கான் அதுல என்னத்தையாவது கிறுக்கிட்டே கிடப்பான். ஆனா அதுல என்ன கிறுக்குவான்னு நான் அதிகபட்சம் பார்த்ததில்லை ஆனா சில விஷயங்கள் அவன் என்கிட்ட பகிர்ந்துக்கிட்டது உண்டு.
அரசியல் சம்பந்தமான நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, சமுதாயம் சார்ந்த விஷயங்களாக இருந்தாலும் சரி அதை கண்டித்தும் ஆதரிச்சும் பதிவு போடும் வழக்கம் அவன் கிட்ட உண்டு.
இது சம்பந்தமா நான் கூட அவனை நிறைய முறை சத்தம் போட்டுருக்கேன் ஏன்டா உனக்கு இந்த தேவையில்லாத வேலைன்னு ஆனா அவன் கேட்டதில்லை.
தொழில்ல கவனத்தை வைடானா அதையும் கேட்க மாட்டான் அவனோட கவனம் முழுக்க அந்த முகப்புத்தக பக்கத்தில் தான் இருக்கும்.
நானும் தனியா என்னோட உழைப்பை எவ்வளவோ கொடுத்து பார்த்தேன் ஆனா அவன்கிட்ட இருந்து எனக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவே இல்லை.
ஒரு கட்டத்துல எனக்கே வெறுத்துப் போச்சு என்னோட உழைப்புல அவன் உட்கார்ந்து தின்னுகிட்டு இருந்தான். சில கஷ்டமான சூழ்நிலை வரும்போது எனக்கு அது அதிகமான எரிச்சலை கொடுத்தது இதுக்கு மேல இவன் கிட்ட பேசி பிரயோஜனம் இல்லைன்னு முடிவு பண்ணி தான் அவனோட அந்த நிறுவன ஒப்பந்தத்தை ரத்து பண்ணிட்டு நான் வெளியே வந்தேன்.
என்னோட கடின உழைப்பு என்ன இன்னைக்கு இப்படி ஒரு உயர்ந்த நிலையில கொண்டு வந்து நிறுத்தி இருக்கு அவனோட சோம்பேறித்தனம் முதலாளியா இருந்தா அவனை இன்னொரு நிறுவனத்தில் தொழிலாளியா கொண்டு போய் சேர்த்து இருக்கு.
ஆனா அவனோட அந்த நடிப்பு திறன் அபாரம். என்கிட்ட எப்படி நடிச்சானோ அதே மாதிரி தான் உங்க நிறுவனத்தில் நடிச்சு இத்தனை உயர்வான ஒரு பதவியை வாங்கி இருக்கான். அந்த பதவிக்கு நிச்சயம் தகுதியானவன் கிடையாது கொஞ்ச நாள் அவன் நல்ல மாதிரி வேலை பார்த்த மாதிரி இருப்பான் அதுக்கப்புறம் அவன் பழைய நிலைக்கு திரும்பவும் வருவான் பாருங்க அன்னைக்கி உங்களோட நிறுவனம் இழப்புகளை சந்திக்கும் போது இழப்பு யாருக்கு நீங்களே யோசிச்சுக்கோங்க. " என்று ஒரு குற்றபத்திரிகையே வாசித்து முடித்தான் பாண்டி
அதை கேட்டு நெடிய சிந்தனையின் பால் விழுந்தார் தண்டம். அவர் யோசிப்பதை பார்த்த பாண்டி மெதுவாய் தனது வக்கிரத்தை மற்றொரு வழியில் திணித்தான்.

" அய்யா சொல்லுறேன்னு என்னை தவறா நினைக்க வேண்டாம் என்னோட பார்வையில விழுந்ததை வச்சி சொல்லுறேன் " என்று தயக்கமாய் தனது திட்டமிட்ட கருத்தை திணிக்க முயற்சித்து,

" உங்களோட மருமக அவனுக்கு இவ்வளவு பரிந்துரை பண்றத பாத்தா எனக்கே மலைப்பா தான் இருக்கு எப்படி அவனால் இவ்வளவு தூரத்துக்கு அவங்களோட அன்பை பெற முடிஞ்சதுன்னு தெரியல. ஒருவேளை அதுக்கு காரணம் அவங்க ரெண்டு பேரோட வயசா இருக்கலாமோ? ஏன்னா ரெண்டு பேருக்கு மத்தியில ஒரு இணக்கம் தெரியுது. நீங்க கவனிசீங்களா என்னனு தெரியல நேத்து அமைச்சர பாக்க உள்ள போகும் போது குமரன் கைய பிடிச்சு ஆதரவு கொடுத்தாங்க கூடவே அவனை பேசுறத தன்னை பேசுறதுக்கு சமம்ன்னு சொன்னாங்க, இதெல்லாம் ஒரு சாதாரணமான ஊழியருக்காக யார் செய்வாங்க? இப்படி எல்லாம் அவங்க செய்யுறாங்கன்னா குமரனை அவங்க அந்த நிலையில தான் வச்சிருக்காங்களான்னு கூட கேள்வி வருது " என்று சொன்னவன் அடுத்த நொடியே அவரமாக அய்யா இது நேத்து நா பாத்தது அதன் மூலமா வந்த ஒரு யூகம் தான் இது உண்மையா பொய்யான்னு எனக்கு தெரியாது அதை நீங்க கண்டுபிடிச்சுக்கோங்க என்னவோ எனக்கு சொல்ல தோணிச்சு சொல்லிட்டேன்.
கடைசியா உறுதியா சொல்லுறேன் அந்த குமரனை நம்பாதீங்க அவன் நிச்சயமா உங்களுக்கு எந்த விதத்திலும் உபயோகமா இருக்க மாட்டான் இதை என்னோட அனுபவத்துல இருந்து நான் சொல்றேன் " என்று தனது வன்மத்தை மிக அழகாக திரைக்கதை செய்து தண்டாயுதபாணியிடம் ஒப்பித்து முடித்தான் பாண்டி.

பாண்டியின் யூகம் தான் தண்டத்தின் மனதிலும் ஓடியது அதையே அவனும் சொல்லி விட எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றியது போல எரிய ஆரம்பித்தார் தண்டாயுதபாணி.



நெஞ்சில் நிறைவாள்......
 
Top Bottom