• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 42

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 42


தனது வேலை பறிக்கப்பட்டு விட்டது என்ற செய்தியை படித்த போது தான் தேவயானியும் கூட அப்படி ஒரு நிலையில் தான் இருக்கிறாள் என்பது குமரனுக்கு உரைத்தது

" அப்போ தேவாவுக்கும் இதே நிலைமை தானா? " அவனுள் எழுந்த கேள்வி அவனை வேகப்படுத்தி அவளை தேடி ஓட செய்தது.

அவனும் வருவான் என்பதை முன்பே அறிந்து வாசலில் காத்திருந்தவள் சிரித்து கொண்டே அவனை வரவேற்றாள்,

" என்ன குமரா இவ்வளவு தாமதமா வாறீங்க நா போனதும் பின்னாடியே வந்துருவீங்கன்னு நினைச்சேன், இப்போ தான் கணினிய கவனிசீங்களா? " அவள் சாதாரணமாக கேட்க அவனுக்கு தான் என்னவோ போலிருந்தது,

" குமரா கையில காசு இருக்குல வாங்க சாயங்காலம் நேரம் வடை பஜ்ஜின்னு எதாவது ஒன்னு சாப்பிடுவோம், நீங்களும் சாப்பிடல நானும் சாப்பிடல எனக்கு பசிக்குது உங்களுக்கும் பசிக்கும்ல வாங்க போவோம் " குமரன் நினைக்கும் எந்த விஷயத்தை அவள் சட்டை செய்ததாக தெரியவில்லை. ஆதலால் அவளை பின் தொடர்ந்த குமரனும் அதை கருத்தில் கொள்ளவில்லை, அருகில் இருந்த ஒரு தேநீர் கடையில் தஞ்சம் புகுந்தவர்கள் முதலில் வயிற்றை சமாதானம் செய்தனர். பின் மெல்ல தேவயானி பேச ஆரம்பித்தாள்,

" குமரா புடிச்சிருக்கா? " என்று கேட்க,

" ஹான் என்ன தேவா " அவள் கேட்டது கேட்காமல் மீண்டும் அவன் கேட்க,

" இல்ல இவ்வளவு பிரச்சனை ஆகியிருக்கு இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நாம ஒருத்தர் ஒருத்தர விரும்புறோம்ன்னு என் அப்பாவும் மாமாவும் நினைச்சுட்டு இருக்குறது தான் காரணம் அதான் உங்க கிட்ட கேட்குறேன் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? " சாதாரணமாக அவள் கேட்க குமரன் தான் அதிர்ந்து பார்த்தான்.

" என்ன குமரா இப்படி முழிக்க, உன் நெஞ்சில் நிறைந்தவள் தான கேட்குறேன் என்கிட்ட கூடவா பதில் சொல்ல தயங்குற? " நமட்டு சிரிப்போடு கேட்டவள்,

எதிர்பார்ப்புகள் என்று எதுவுமே இல்லை எனக்கு...
நீயே என் உலகமாய் என்னுள்
நிறைந்து போனதால்....!
உன்னையும் என்னையும் தாண்டி
வேறென்ன வேண்டும் எனக்கு?
எனக்குள் வைத்தே உன்னை நேசிக்கிறேன்...
மூச்சாய் சுவாசிக்கிறேன்....
என் நெஞ்சில் நிறைந்தவளே...!

என்று அவன் அவளுக்காய் வடித்து வைத்த கவிதையை அவள் சொல்ல,
வார்த்தைகளின்றி மலர்ந்தான் குமரன்.
அவன் மலர்ச்சியை கண்டு அகத்தின் மகிழ்வை முகத்தில் காட்டிய தேவயானி கண் புருவத்தை உயர்த்தி உயர்த்தி அவனிடம் பதில் கேட்க,

அதை கண்டவன் கண்டபடியே அவள் கண்ணில் கலக்க அவளும் அப்படியே அவன் கண்ணில் கலந்து காதலின் தேசிய மொழியான மௌனத்தில் தங்களது உணர்வை பரிமாறி கொண்டிருந்தார்கள்.......

அந்த பரிமாற்ற உணர்விற்கு இடை புகுந்து தடை செய்தான் அந்த தேநீர் கடைக்காரன்.

" தம்பி தேநீர் குடிச்சிட்டா கொஞ்சம் எழுந்திரிங்களேன் வியாபார நேரம் " என்று பணிவாய் அவன் கூற

" ஹான் இதோ இதோ அண்ணா " என்று சொன்னவன் தேவயானியை பார்த்து கொண்டே கிளம்பலாமா என்று கேட்க அவளும் ம்ம் என்ற பதிலோடு எழுந்தாள். பணத்தை கொடுத்து விட்டு வெளிய வந்தவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்ற யோசனை மேல் எழும்ப ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.

இதற்கு முன்பெல்லாம் இருவரும் எப்போது பார்த்தாலும் எதாவது ஒன்றை இடைவிடாது பேசி கொண்டே இருப்பார்கள் ஆனால் இந்த நிமிடம் இந்த நொடி ஏனோ அவர்களுக்கு என்ன பேச என்று தெரியவில்லை.

எழுதியவன் மறந்தாலும் கூட படித்தவள் அதை மறக்காமல் கேட்டு அதிலிருந்தே பேச்சை வளர்த்தாள்,

" என்ன பேசணும்ன்னு தெரியாத நேரம் எதையாவது பேசணும்ன்னு சொன்ன எழுத்தாளரே இப்போ என்ன பேசன்னு யோசிச்சு பேசாம இருக்கலாமா? " கேட்டு கொண்டே அவள் சிரிக்க,

" சித்திரம் சிரிக்கும் அழகை என் வார்த்தை சிந்தி தவிர்க்கவா என்ற யோசனை தான் தேவா "

" அடடா கவிதை கவிதை எப்படி குமரா எடுத்த நிமிஷத்தில இப்படி கவி பாடுற? "

" அதான் நம்ம கவிஞர்கள் நிறைய சொல்லுறாங்களே தேவா காதலித்து பார்ன்னு "

" காதலிக்குற எல்லாருக்கும் கவிதை வருவது இல்லையே குமரா "

" முயற்சி இல்லாமல் இருந்து இருக்குமோ என்னவோ? "

" அப்போ முயற்சி இருந்தா? "

" முயற்சித்துதான் பாரேன் "

அவள் முயற்சிக்கும் நேரம் அவளது அலைபேசி ஒலியை கக்கி விட,

" நம்ம கவி படிக்க நினைச்சா இயற்கைக்கே பொறுக்குறது இல்ல போல குமரா " சிரித்து கொண்டே அலைபேசியை பார்த்தாள், மாதுரி தான் தொடர்பில் வந்தாள்,

" யானி எங்க இருக்க? செய்திகள் எல்லாம் தவறா வருதே "

" எப்பவும் போல எல்லாரும் வேலைய பாருங்க மாதுரி எல்லா செய்தியும் நல்ல செய்தியா மாறிடும் "

" இல்ல யானி இங்க நிலைமைய சமாளிக்கணும்ல "

" நா சொன்னேன்னு சொல்லு மாதுரி எல்லாரும் சரியா இருப்பாங்க "

" முயற்சி பண்றேன் யானி, ஆனா நீ எப்போ வருவ? " அவளது குரலில் கவலை நிரம்பி கிடந்தது.

" ரொம்ப சீக்கிரம் " அவளது குரலில் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது என்ற தீர்க்கம் தெரிந்தது.



நெஞ்சில் நிறைவாள்.......
 
Top Bottom