நெஞ்சில் நிறைந்தவள் - 44

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
அத்தியாயம் 44

தேவயானி அவர்கள் பேசியதை கேட்டு பதில் சொல்ல இருவரும் அதிர்ந்து போனார்கள். மெல்ல அதை சமாளிக்க,

" தேவயானி எங்க டா அம்மா இருக்க? "

" என்ன மாமா ஒரு மாதிரி பம்முற என்ன விஷயம்? " அவன் சொல்ல போகிற விஷயம் அவளுக்கும் தெரியும் என்றாலும் கூட அவள் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ள கூடாது தானே,

" அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே நீ என் பிள்ளை டா உன்கிட்ட நா பம்மி என்ன டா செய்ய போறேன்? " சோப்பு போடும் வித்தையை அரசியல்வாதிகளுக்கு சொல்லியா தர வேண்டும்.

" ம்ம்ம்ம் உன் பிள்ளை தான் உன் பிள்ளை தான் மாமா, நா இல்லன்னு சொல்லல ஆனா நீயும் உன் மச்சானும் என்னமோ பேசிட்டு இருந்தீங்களே? "

" அது மச்சான் மாப்ளனா ஆயிரம் பேசுறது தான டா "

" ஆமா ஆமா ஆயிரம் ரெண்டாயிரம் பேச இருக்கும் தான் ஆனா அப்படி பேசும் போது எனக்கு ஏன் கூப்பிட? " அவளும் விடவில்லை

" அது உன்கிட்ட ஒரு சந்தோசமான விஷயம் சொல்லணும் டா அதுக்கு தான் கூப்பிட்டேன் "

" அப்படியா,
ஹ்ம்ம் அப்படி என்ன மாமா சந்தோசமான விஷயம்? "

" அது,
அது வந்து டா உன்னோட வெளிநாட்டு திட்டம் வெற்றியடைஞ்சுட்டு டா " பெரிதாய் சந்தோசம் காட்ட முயற்சி செய்தும் கூட அவள் என்ன சொல்லுவாளோ என்ற யோசனை அவரது சந்தோசத்தை தடை செய்திருந்தது.

" அப்படியா மாமா ஆனா அதுக்கும் எனக்கும் தான் இப்போ எந்த சம்பந்தமும் இல்லையே மாமா, அப்புறம் அதுக்காக நா ஏன் சந்தோசப்பட போறேன்? "

" என்னடா நீயே இப்படி பேசினா எப்படி? அந்த நிறுவனத்துக்காக நீ கொடுத்த உழைப்பு கொஞ்சமா நஞ்சமா?
இந்த வெளிநாட்டு திட்டத்துக்காக நீயும் அந்த குமரனும் சேர்ந்து எவ்வளவு உழைச்சு இருக்கீங்க எத்தனை இரவுகளை தூக்கம் இல்லாம கடந்திருப்பீங்க அதெல்லாம் கொஞ்சம் நினைச்சு பாரு.
அப்பா ஏதோ கோபத்துல பேசுறதெல்லாம் கணக்குல எடுக்காத. உங்க ரெண்டு பேர் உழைப்பை பத்தி அன்னைக்கு நீ சொன்னதுக்கு அப்புறம் தானடா எனக்கே தெரியும் அப்படி இருக்கும்போது சொல்லாத உங்க அப்பனுக்கு எப்படி தெரியும்? உங்க அப்பன் தான் பேசினான்னா அவன பத்தி தெரிஞ்சுக்கிட்டு நீயும் அப்படி இருக்கலாமா வாடா திரும்பவும் வந்து உன்னோட கனவு திட்டத்தை செயல்படுத்து. " என்று ஒரு கோர்வையாக தண்டம் பேச,

" நல்லா பேசுற மாமா அதனால தான் இவ்வளவு பெரிய அரசியல்வாதியா இருக்க, மாநிலத்தில் இருந்து மத்தி வரைக்கும் இவ்வளவு அதிகாரத்தோட.
ஆனா அதே பேச்சு திறமையை உன் மருமககிட்டயும் காட்டுற பாத்தியா?

"அப்படி இல்ல டா அன்னைக்கு என்கிட்ட நீ சொன்னத இன்னைக்கு நான் உன்கிட்ட சொல்லுறேன் அவ்வளவுதான். இத கூட உங்க அப்பன் என்கூட இருக்கறதுனால தான் சொல்றேன் அவர் இல்லன்னா இதையும் நான் சொல்லி இருக்க மாட்டேன். ஏன்னா நீ என்னைக்கு நிறுவன பொறுப்பை எடுத்துக்கிட்டயோ அன்னைக்கு இருந்து உங்க அப்பன் இந்த பக்கம் வர்றதே இல்லை அத்தனையும் நீ தான் பாத்துக்குற, நிலைமை இப்படி இருக்கும்போது உங்க ரெண்டு பேரோட உழைப்பு பற்றி அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்ல தானடா. அது மட்டும் இல்லாம அவர் ஏற்கனவே முன் கோபி " என்று பரிவாய் மருமகளிடம் பேச,

" சரி சரி ரொம்ப கெஞ்சாத இப்ப எதுக்காக கூப்பிட்ட? உன் எதிர்பார்ப்பு என்ன? இப்போ நான் என்ன செய்யணும்? "

" உன்னோட வெளிநாட்டு திட்டம் வெற்றி அடைஞ்சிருக்கு. அதுக்கான அதிகார பூர்வ அறிவிப்பு நாளைக்கு வந்துரும். இது மிக பெரிய ஒரு சாதனை ஆனா அத முழுமையா முடிக்கணும்னா நீ இருந்தால் தான் முடியும்.
அதனால மறுபடியும் நீ அலுவலகம் வா "

" நான் மட்டுமா மாமா? "

" குமரன் இல்லாம நீ எப்படிடா வருவ அவரையும் சேர்த்துக் கூட்டிட்டு வா,
இந்த திட்டத்தோட அடிப்படை மூளையே அவரோடது தானே " குமரனனையும் கொஞ்சமாக புகழ்ந்து தள்ள,

" சரி மாமா நானும் குமரனும் கோவிலுக்கு வந்து இருக்கோம் அப்படியே நீ சொன்ன விஷயத்தை எல்லாம் சிவா கிட்ட சொல்லிட்டு இன்னும் ஒரு மணி நேரத்துல அலுவலகம் வந்துடுறேன் " என்று சொல்லிய தேவயானி அழைப்பை துண்டித்து விட்டு குமரனை பார்க்க,
குமரன் அமைதியாக நின்றான்.

" குமரா நமக்கு கிடைச்ச மிகப்பெரிய வெற்றி நம்மளோட வெளிநாட்டு திட்டம் வெற்றியடைஞ்சிருக்கு நாளைக்கு அது சம்பந்தமான அதிகாரப்பூர்வ தகவல் நமக்கு கிடைக்கும் அதுக்கு அப்புறம் நாம மறுபடியும் இன்னொரு முறை டெல்லி பயணம் போகணும் போன முறை போகாத இடத்தை எல்லாம் இந்த முறை சந்தோசமா பாத்துட்டு வரணும் " என்று தேவயானி மகிழ்ச்சியாய் கூற அப்போதும் குமரன் அமைதியாய் நின்றான்

" என்ன குமரா அமைதியா நிக்கிற? "

" இல்ல தேவா உன்ன வேண்டாம்னு சொன்ன இடத்தில மறுபடியும் எப்படி போய் நிக்க என் மனசு அதுக்கு இடம் கொடுக்க மறுக்குது " அமைதியாய் அவன் கூற,

" என்னை வேணும்னு சொன்ன இடமோ வேண்டாம்னு சொன்ன இடமோ அது முக்கியம் இல்ல குமரா என் குமரன் ஆசைப்பட்ட விஷயம் நடக்க போகுது எனக்கு என் குமரனோட எண்ணம் நிறைவேறனும் அதுதான் முக்கியம் அதனால மத்ததெல்லாம் இரண்டாவது தான், நா செல்வி.தேவயானியா சாதிக்க முடியாத விஷயத்தை திருமதி.தேவயானி குமரனா இருந்து சாதிக்க போறேன்.
அதுக்கு என் குமரன் எனக்கு எப்பவும் பக்கபலமா வேணும் " என்று மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு சொல்லி தனது கையை அவனிடம் நீட்ட,
அவளது கையை பற்றிக் கொண்டான் அவனும் நிறைவாய்.

இருவரும் பற்றிய கரங்களோடு ஆதியும் அந்தமும் நிறைந்த அந்த ஆதி சிவனை பார்க்க ஆலயத்தில் உள்ளே நுழைந்தார்கள்



நெஞ்சில் நிறைவாள்.....
 

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 44
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.