அத்தியாயம் 2
கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பார்களே. தொட்டதற்கும் பயந்து, அவளுக்கானவற்றை எல்லாம் இன்னொருவர் செய்து தந்தே பழகி, பாதுகாப்பான ஒரு கூட்டுக்குள் 25 வருடங்களாக வாழ்ந்தவளை கடைசி நான்கு வருடங்கள், சிந்தனையில் மட்டும்தான் மாற்றங்களைக் கொண்டு வர ஆரம்பித்திருந்தது.
அந்த மாற்றங்களை இப்போதுதான் செயல்முறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறாள்.
முதலும் ஸ்கூட்டி ஓட்டுவாள்தான். பழக்கித் தந்ததும் அவன்தான். என்ன, அப்போதெல்லாம் அவள் மட்டுமாகப் பெரிய தூரங்கள் செல்லும் அவசியங்கள் வந்ததில்லை. அவர்கள் வீட்டிலிருந்து அடுத்த தெருவில் இருக்கிற பெட்டிக்கடைதான் அவள் போன அதிகபட்சத் தூரம்.
அதனாலேயே இந்தப் பத்து நாள்களாக இந்த ஒரு நாளுக்காக அவர்களின் ஊரை மகளோடு ஸ்கூட்டியில் சுற்றியிருக்கிறாள்.
ஸ்கூட்டியில் அவள் செய்யும் முதல் பெரிய பயணம். கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர்கள் கொண்ட இந்தப் பயணத்தை அவள் வெற்றிகரமாக முடித்தே ஆக வேண்டும்.
இல்லையானால் இன்னொருமுறை திரும்பத் தனியாக வர விடவே மாட்டார்கள். இதையே சொல்லித் தடுத்துவிடுவார்கள்.
மெதுவாகவே ஓட்டினாள். அவர்கள் ஊருக்குள் இருந்து வெளியேறி, பிரதான வீதியில் ஏற்றி, சற்றுத் தூரம் வரையில் பயணித்தவளின் கையிலும் மனத்திலும் இப்போது ஒரு தடுமாற்றம்.
எதிரில் வருகிற சந்தியில் இடப் பக்கமாகத் திருப்பினால் டவுனுக்குப் போகலாம். வலப் பக்கமாகத் திருப்பினால் அவன் வீடு.
எங்குத் திருப்புவது?
அர்த்தமே இல்லாத தடுமாற்றம். இடப்பக்கம்தான் திருப்ப வேண்டும். சரியான பாதையில் பயணிப்பதுதானே சரியான முடிவாக இருக்கும்? இனியாவது சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்று முடிவு வேறு எடுத்து வைத்திருக்கிறாளே.
ஒரு விதப் பிடிவாதத்துடன் ஸ்கூட்டியை செலுத்திக்கொண்டு வந்தவள் சந்தி வரவும் இடப்பக்கம் சிக்னலை போட்டுவிட்டு வலப்பக்கம் திருப்பியிருந்தாள்.
அந்த நொடியிலிருந்து அவள் இதயத்தின் துடிப்பு இரட்டிப்பாயிற்று. திருப்பு, இது வேண்டாம் என்று அலறிய அதே மனம்தான், எப்படியும் அவன் நிற்கமாட்டான், ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் வாயேன் என்றும் அழுதது.
அதற்குமேல் அவளால் அவளோடு போராட முடியவில்லை. அவளின் இந்தப் போராட்டம் ஒரு நாள் இரண்டு நாள்களாகவா நடக்கிறது? கடந்த நான்கு வருடங்களாக. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் கடந்த ஆறு வருடங்களாக நடக்கிறது.
ஒரு பிடிவாதத்துடன் பார்வையை வீதியில் வைத்துச் செலுத்தினாள். அவன் வீடு நெருங்க நெருங்க அவள் இதயம் ஊமையாக இரத்தக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தது. விட்டுவிட்டேனே. கையில் கிடைத்த சொர்க்கத்தைக் கைநழுவ விட்டுவிட்டேனே. இன்று வந்த புத்தி ஆறு வருடங்களுக்கு முதல் அவளுக்கு வந்திருக்கக் கூடாதா?
கைகள் கிடு கிடு என்று ஆடின. ஸ்கூட்டி ஸிக்ஸாக் வடிவில் வீதியில் நாட்டியம் ஆடியது.
“அம்மா, என்னம்மா?” என்றாள் மிளிர் பயத்தோடு. யாரோ ஒலிப்பானை அழுத்திவிட்டு இவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தபடியே கடந்துபோனார்கள்.
சட்டென்று ஸ்கூட்டியை நிறுத்தினாள். ஆழ்ந்த மூச்சுகளை இழுத்துவிட்டாள். கைப்பையிலிருந்து கைக்குட்டையை எடுத்துக் கண் முகமெல்லாம் துடைத்தாள். கொண்டுவந்த தண்ணீர் போத்தலிலிருந்து தண்ணீரை அண்ணாந்து பார்த்து இரண்டு மிடறு விழுங்கினாள்.
இதயம் தன் படபடப்பின் வேகத்தைச் சற்றே குறைத்தது.
“என்னம்மா?” என்றாள் திரும்பவும் மிளிர்.
“ஒண்டுமில்ல குஞ்சு. அம்மாக்குத் தண்ணி விடாச்சது.” என்றுவிட்டு, அவளுக்கும் வேண்டுமா என்று கேட்டாள்.
சின்னவள் வேண்டாம் என்று சொல்லவும் ஸ்கூட்டியைத் திரும்பவும் எடுத்தாள்.
எதற்கு இந்தப் பயணம்? இதனால் என்ன விளைந்துவிடப் போகிறது? ஆறாமல் கிடக்கும் காயத்தை இன்னுமே கீறிவிட்டு, உயிர்போகும் வலியில் சுகம் காணும் முயற்சியா?
ஏதோ ஒன்று. அந்த வலி அவளுக்கு வேண்டுமாக இருந்தது.
அவன் வீடு வந்ததும் அவள் ஸ்கூட்டி தானாய் வேகத்தைக் குறைத்தது. அந்த வீட்டில் அவள் வந்து வாழ்ந்ததில்லை. நல்லது கெட்டதுகளுக்கு ஒரு சில நாள்கள் தங்கிப் போயிருக்கிறாள். அவ்வளவுதான்.
அதற்குமேல் அங்கே நிற்க குணவதி விடமாட்டார். வசதி வாய்ப்புகள் இல்லாத அந்த வீட்டில் மகளால் சமாளிக்க முடியாது என்பார். அவளுக்குமே ஏனோ அங்குப் பொருந்திப் போக முடிந்ததேயில்லை.
ஆனால் இன்று? அது அவன் வீடு. அவன் அங்கேதான் வாழ்கிறான். இந்த வீதியால்தான் தினமும் போய்வருவான். இன்றுவரையில் அவன் பாதம் பட்டுக்கொண்டிருக்கும் இடம்.
புதிதாக எழுந்து நிற்கும் மதிலும், அகலமான கேட்டும் இன்று நன்றாக வாழ்கிறான் என்று சொல்லின.
அதுசரி! இன்றைக்கு அவன் ஒரு கடையின் முதலாளியாயிற்றே. இனியும் எப்படி நன்றாக வாழாமல் போவான்?
ஆனால், இதையெல்லாம் ஏன் அவன் முதலே செய்யாமல் போனான்? அப்படிச் செய்திருந்தால் அது அவன் வீடாகவும் அவள் யாரோ ஒரு வழிப்போக்கியாக நின்று அதைப் பார்க்கும் ஒருத்தியாகவும் மாறும் நிலை வந்திருக்குமா?
அதற்காக அவனை மட்டுமே பிழை சொல்லிவிட முடியாது. பாதித் தவறு அவள்மீதுதான். அல்லது முழுத்தவறுமே அவள் மீதுதானா? இன்றுவரையில் அந்தக் கேள்விக்கு அவளிடம் தெளிவான விடை இல்லை.
வலிக்க வலிக்க அடி விழுகிறபோதுதானே எழுந்து நிற்க வேண்டும் என்கிற வெறியே பிறக்கிறது.
அவனுக்கும் அடி விழுந்தது. பலமான அடி. அவனின் தன்மானத்தின் மீது. சுயமரியாதையின் மீது. அதனாலேயே அவன் எழுந்துவிட்டான். அவள் மீளவே முடியாமல் பாதாளத்தில் புதையுண்டு கிடக்கிறாள்.
“என்னம்மா ஏன் நிண்டுட்டீங்க?” மிளிருக்கு அது தன் தந்தையின் வீடு என்று தெரியாததால் வினவினாள்.
அப்போதுதான் தான் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டதையே உணர்ந்தாள் வாணி. பாதையை மறைத்த கண்ணீரை வேகமாகத் துடைத்துக்கொண்டு, அதைவிட வேகமாக ஸ்கூட்டியை திருப்பிச் செலுத்தி, அதே பழைய சந்திக்கு வந்து, சரியான பாதையில் திரும்பினாள்.
தவறான பாதையில் நுழைந்துவிட்ட அவள் வாழ்க்கையை மட்டும் அவளால் இதேபோல் மீண்டும் சரியான பாதையில் திருப்ப முடியாமல் போயிற்று. இனித் திருப்பவும் முடியாது.
சட்டென்று விம்மல் வெடிக்கவும் ஸ்கூட்டியை திரும்பவும் ஓரம் கட்டி நிறுத்திவிட்டு, கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு தேம்பினாள்.
சொர்க்கத்தையே தொலைத்துவிட்டாளே! அவள் எவ்வளவு பெரிய அபாக்கியவதி!
மிளிர் பயந்துபோனாள். “அம்மா! என்னம்மா அழுறீங்களாம்மா?” அவள் குரலும் அழுவதற்குத் தயாராகிற்று.
சட்டென்று தன்னைத் தேற்றினாள் வாணி. மகளையும் வைத்துக்கொண்டு என்ன வேலை செய்கிறாள்?
“அது ஒண்டும் இல்ல செல்லம். கண்ணில தூசி விழுந்திட்டம்மா.” என்றபடி கண்களை நன்றாக அழுத்தித் துடைத்துவிட்டு, தண்ணீரைத் திரும்பவும் அருந்தி, நெஞ்சின் அடைப்பைக் கொஞ்சமாகச் சரி செய்துகொண்டு மீண்டும் புறப்பட்டாள்.
அன்றும் சரியான பாதையில் அவள் தன் வாழ்க்கையைத் திருப்பியிருக்கலாம். அவள் கையில்தான் அத்தனை முடிவுகளும் இருந்தன. என்ன, அந்த நேரம் அவளுக்கு அதற்குத் தைரியமோ துணிவோ இருக்கவில்லை. இங்கே முடிவெடுக்க வேண்டியவள் நான்தான் என்பதே புரியாமல் இருந்தவள் முடிவை எப்படி எடுத்திருப்பாள்? அப்போதெல்லாம் அவள் அலையின் மீது விழுந்த சருகு.
அத்தியாயம் 2.2