நேசமுகை - 10
அறையில் ஏதோ கீழே விழும் சத்தம் கேட்டு நிலோஃபர் உள்ளே வந்து பார்க்க, கட்டிலின் அருகில் உள்ள டேபிள் மீதிருந்த தம்ளர் கீழே விழுந்திருந்தது. இளவேனி மெத்தையில் மல்லாக்க சரிந்து கிடந்திருந்தாள்.
"ஏ இளா உன் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சுனு தெரில வந்து பாரு சாப்பிடவும் வரல"
என்று அழைத்து பேசியவள் பிறகு அருகே அமர்ந்து போன் நோண்டிக் கொண்டிருந்தாள்.
ஈருருளியில் வேகமாக வந்தவன் வீடு வந்ததும் அவசரமாக அறைக்குள் நுழைந்தான். அவன் வந்ததும் நிலோஃபர் அறையை விட்டு வெளியேறினாள். இளவேனி எழுந்திருக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
உடனே அவளைத் தூக்கி கட்டிலில் சாய்ந்தமர வைத்தவன், உணவுக்கூடம் வந்து எலுமிச்சை பழம் எடுத்து பிழிந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பும், சர்க்கரையும் கலந்து ஒரு தம்ளரில் ஊற்றி இளவேனியிடம் தந்தான். அவன் செயல்களை எல்லாம் ஓரக்கண்ணால் கண்டும் காணாமலும் இருந்த கிளாரின் பொறுமினார்.
'இப்படி கிடந்து ஊழியம் செய்கிறானே என்ன சொக்குபொடி போட்டாளோ' என்று.
"நேயா.. ரொ..ம்ப தலைசுத்துதுடா எனக்கு முடியல"
"சாப்பிட்டியாடி?" அக்கறையுடன் கேட்டான்.
"இல்லைனு சொன்னா ஊட்டி விடுவியா மாம்ஸ்?" சிரிக்க முயன்றாள்.
அவள் கேட்ட விதத்தில் மீண்டும் உணவுக்கூடம் வந்தவன் ஒரு தட்டில் சாப்பாடு வைத்து எடுத்து வந்து ஊட்டி விட்டான். இளவேனியின் விழிகளை மறைக்கும் அளவுக்குக் கண்ணீர் கரைபுரண்டு ஓடத் தயாராக இருந்தது.
"வேனி இந்த நேரத்தில் நீ சந்தோஷமா இருக்கனும்டி எதுக்கு அழுற? நான் இருக்கேன் உனக்கு" என்று ஆதுரமாக அணைத்துக் கொண்டான்.
"நே..யா ஹ்ஹா ஹ்ஹா இ..இது ஆனந்த கண்ணீர். எங்கம்மா எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து வேலைக்கு போய்கிட்டு இருந்தாங்க. அதனாலேயே எனக்கு இந்த மாதிரி சின்ன சின்ன ஆசை எல்லாம் ஏக்கமாவே கடந்து போயிருச்சு. நீ ஊட்டி விடவும் இமோஷனல் ஆகிட்டேன்டா."
அழுதுக்கொண்டே சொன்னவளின் நெற்றியில் இதழொற்றி எடுத்தவன்
"இனி உனக்கு அம்மா, அப்பா, ப்ரெண்ட், பஸ்ட் பேபி எல்லாமே நான் தான் ஓகேவா? எதுனாலும் என்கிட்ட கேளுடி அம்மு"
"என்ன பஸ்ட் பேபியா? நீயா?"
"இப்ப நமக்கு குழந்தை பிறக்க போகுது. ஆனால் உனக்கு எப்போதும் பஸ்ட் பேபி நான் தான். எனக்கும் நீ தான் பஸ்ட் பேபி. நான் விட்டு கொடுக்கவே மாட்டேன்" அழுத்தமாகவேச் சொல்லியிருந்தான்.
அவன் உதிர்த்த வார்த்தைகள் தந்த இதம் இதயத்தை தழுவ மனதிலிருந்து புன்னகைத்தவள் "ஐ லவ் யூ நேயா" என்றாள் உணர்வுபூர்வமாக.
"லவ் யூ டூ மை டியர் பொண்டாட்டி" என்று மீண்டும் நெற்றியில் இதழொற்றினான்.
மறுநாளும் மதிய உணவு நேரத்தில் வீடு வந்து ஊட்டி விட்டான். இரவும் அவன் கூடவே இருப்பதால் அவள் தனிமையை உணரவில்லை.
காலை அவளுக்கு முன் எழுபவன் அவளுக்கு வேண்டியதைச் செய்து வைத்து 'இந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்' 'பழச்சாறு அருந்த வேண்டும்' என்று பட்டியலிட்டு, அதை நினைவுபடுத்த அலைபேசியில் அழைத்து என்று அவளைக் கண்ணுக்குள் வைத்துத் தாங்கினான். வீட்டிற்கு வர முடியாத சமயத்தில் அலைபேசியில் அழைப்பு அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை பேசிக்கொண்டிருந்தான்.
மருத்துவமனைச் சென்று வந்த அன்றே ஜெரோம் கவினிக்கு தகவல் சொல்லி இருந்தனர் தம்பதியர். அவர்கள் தங்கள் பெண்ணிற்காக மணம் முடித்து வைத்திருந்தாலும் சிறு கோவம் இருந்துக் கொண்டு தான் இருந்தது. இந்த நற்செய்தியை அறிந்ததும் அதுவும் கற்பூரமாய் கரைந்து போனது. மாதம் ஒரு முறை வந்து பார்த்து போனார்கள்.
ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்ல எண்ணியிருந்தனர். ஆனால் ஆறாவது மாதமே இளவேனி ரொம்பச் சோர்ந்து போனாள். எனவே கவினி திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றார். கூடவே இருந்து நன்றாக பார்த்துக் கொண்டனர். இளநேயனுக்கு விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்துச் சென்றான்.
பிரசவம் நெருங்கும் சமயத்தில் இளவேனியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டே குழந்தை 'ஜோனீஸ்' பிறந்தான். அவனை முதன் முதலில் கைகளில் ஏந்திய இளநேயனின் கைகள் நடுங்கியது.
ஜெரோம், கவினி இருவருமே மருத்துவமனையில் இருந்து பார்த்துக் கொண்டனர். ஆனால் கிளாரின் நிலோஃபர் இருவரும் பார்க்க கூட வரவே இல்லை.
இரண்டு மாதங்கள் தாய்வீட்டில் கழித்தவள் மூன்றாம் மாதத்தில் நேயன் வீட்டுக்கு வந்திருந்தாள் குழந்தையுடன். அப்பவும் அதிக ஒட்டுதல் இல்லாமலே கிளாரின் ஒதுங்கி இருந்தார்.
கிறித்துமஸ் பண்டிகைக்கான 'ஷாப்பிங்' செய்ய அன்னையும், மகளும் கிளம்பியிருக்க இரவு உணவை இளவேனியை தயார் செய்யும் படி சொல்லி சென்றிருந்தார்கள். ஆனால் 'ஜோனீஸ்' அழுதுக்கொண்டே இருந்ததால் அவளால் சமைக்க முடியவில்லை. ஒருவழியாக சமாதானம் செய்து உணவுகூடத்தின் வாசலில் மெத்தை விரித்து அவனைப் படுக்க வைத்தவள் அவனிடம் பேசிக்கொண்டே தோசைகளை வார்த்து 'ஹாட்பாக்ஸ்'இல் வைத்து மூடினாள். சட்னி அரைக்க தேங்காய் சில்லுகளை எடுத்துக் கொண்டிருக்கும் போதே குழந்தை வீறிட்டு அழத் தொடங்க அவனைத் தூக்கிக் கொண்டு அறைக்கு செல்லும் போது வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.
"அண்ணி ரொம்ப பசிக்குது எடுத்து வச்சிட்டு போறீங்களா?" சொல்லிக் கொண்டே நுழைந்தாள் வீட்டினுள்.
"இன்னும் சட்னி அரைக்கலையேமா. அதுக்குள்ள அழ ஆரம்பிச்சிட்டான். பசி ஆத்திட்டு வரட்டுமா?"
"என்ன அண்ணி இப்படி பண்றீங்க? நாங்க எவ்வளவு அலைஞ்சி திரிஞ்சி ஓய்ஞ்சி போய் வந்திருக்கோம் தெரியுமா? பசி வேறு வயித்த கிள்ளுது" எரிச்சல் தொனியில் நிலோஃபர்.
"என்னனு தெரில இன்னிக்கு ஒரே அழுகை இவன். எனக்கு தனியா என்ன பண்ணணே தெரில நிலோ"
"ஆமா அதிசயமா இவதான் புள்ள பெத்துட்டா. நாங்க எல்லாம் புள்ள பெத்து வளத்து ஆளாக்கலயா?" என்று கிளாரின் அதற்கும் பதில் வைத்திருந்தார்.
"அத்தை.."
"அம்மா.." அலுவல் முடிந்து வந்தவன் நடந்ததை எல்லாம் வெளியே நின்று பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
"உனக்கு பசிக்குதுனா நீயே போய் தோசை சுட்டு சாப்பிடு. அவ என் பொண்டாட்டி. உனக்கு ஊழியம் செய்ய கல்யாணம் பண்ணிட்டு வரல நான். அண்ட் அம்மா நீங்க புள்ள பெக்கும் போது பாட்டி தாத்தா ரெண்டு பேருமே கூடதான் இருந்தாங்க ஆனால் பாருங்க என் பையனுக்கு அந்த குடுப்பினை கூட இல்லை. இருந்தும் இல்லாத நிலைமை" என்று இருவருக்கும் ஒரு குட்டு வைத்தான்.
"சாப்பிட்டியாடி அம்மு" 'இல்லை'என்று இடவலமாக தலையாட்டியவள் அறைக்குள் நுழைந்தாள். இளநேயன் உணவுக்கூடத்திற்குச் சென்று தேங்காய் சில்லுகளை எடுத்தவன், இரண்டு பச்சைமிளகாய், ஒரு பல் பூண்டு, நாலைந்து கறிவேப்பிலை, சின்னத்துண்டு இஞ்சி, கொஞ்சம் மல்லிதழை, பொட்டுக்கடலை கொஞ்சம் உப்பு எடுத்து மிக்ஸியில் அரைத்து தாழிசம் செய்து ஒரு தட்டில் தோசைகளையும், ஒரு கிண்ணத்தில் சட்னியும் வைத்து அறைக்குள் எடுத்துச் சென்றான்.
"பாருடா உன்புள்ள சேட்டையை. இவ்வளவு நேரம் ஒரே அழுகை. இப்ப நான் கிட்டே இருந்ததும் சிரிப்ப பாரு கள்ளபய" என்றவளின் இதழருகே தோசையைப் பிய்த்து சட்னியில் தொட்டு நீட்டினான்.
"அம்மாவும் அப்பாவும் என்னை நல்லா பாத்துகிட்டாங்கடா. இவன் பொறந்ததும் அப்பா கூட மாறிட்டாரு. இங்கு நான் வாஷ்ரூம் போனால் கூட பாத்துக்க ஆள் இல்லை. அப்படி என்ன குழந்தை மேலே கூட வெறுப்பு? ஆனால் நீ இருக்கும் வரைக்கும் நான் எதுக்குமே கவலைப்ட வேண்டாம்டா. ஐ லவ் யூ மாம்ஸ்" என்றவள் தோசையை வாங்கி உண்டாள்.
முதல் புத்தாண்டை தங்கள் புதல்வனோடு கொண்டாட ஆவலுடன் இருந்தனர் இருவரும். ஆலயம் செல்வதற்காக ஆசையாக மல்லிகை பூவை வாங்கி வரச் சொல்லியிருந்தாள் இளவேனி. அலுவல் முடிந்து வரும் வழியில் அலைந்து திரிந்து நான்கு முழம் மல்லிகைப்பூ வாங்கி வந்துக் கொடுத்தான் இளநேயன்.
"என்னடா இது? நான் சொல்லி தானே விட்டேன் மல்லிப்பூ தான் வேணும்னு"
"ஹேய் ஆமாடி வர வழியில் எங்கேயும் கிடைக்கலனு எங்கலாம் போய் அலைஞ்சி வாங்குனேன் தெரியுமா?"
"இது மல்லியே இல்லைடா நெடுமங்காடு. ஸ்மெல் கூட தெரிலயா உனக்கு?"
"யே ஆமாடி நான் வாசனை பிடிச்சு தான் வாங்குனேன். என் கைல கொஞ்சம் பூ கொடுத்தாங்களே"
"இத வாசம் பிடிச்சி தான் வாங்குனியா? ம்ஹூம் முன்ன பின்ன பூ வாங்கி தந்திருந்தா தானே தெரியும்?"
"அப்ப இதுமல்லி இல்லையாடி" சோகமாய் நேயன்.
"அததானே இவ்வளவு நேரம் சொல்லிகிட்டு இருக்கேன் இது காட்டுமல்லி"
"சரிடி சாரி"
"சரி விடுடா"
"சரி மல்லிப்பூ எப்படி இருக்கும்னு தான் சொல்லேன்"
"ம்ம்ம் மல்லி மாதிரி தான் இருக்கும்"
"தங்கபுள்ள என் ராஜாக்குட்டி பாருடா அம்மா திட்டுரா நியூ யேர் அதுவுமா"
"தங்கம் பாருடா வாசனை இல்லாத பூவை என் தலைல கட்டிட்டாரு உங்கப்பா"
"வேனி இதோ பாரு நான் இருக்கும் போது நீ என்னை தான் தங்கம்னு கொஞ்சனும்"
"நீ மட்டும் அவனை ராஜாக்குட்டி தங்கபுள்ள சொல்லலாம் நான் சொல்ல கூடாதா? போடா"
"உன்னை" என்று அவளை இழுத்தவன் அவளது கைகளை பின்னால் மடக்கி கிடுக்கிப்பிடியாக பிடித்தவன்
"நானும் பார்த்துட்டே இருக்கேன் எதுக்கெடுத்தாலும் கோவப்படுற கத்துற இந்த வாய்தானே பேசிச்சி. என்ன சொன்ன நெடுமங்காடா நான் உனக்கு? ரொம்ப நாள் இந்த உதடு தாகத்தால் தவிக்குதாம். என்கிட்ட சொல்லுது இப்ப தாகத்தை தணிக்கலாமா?" என்று நெருங்கி இதழ்களை தழுவதற்குள் வயிற்று பசியால் அவர்கள் மகன் அழுது கூப்பாடு போட்டிருந்தான். அவளை விடுவித்தவன் அவள் குழந்தையை அள்ளி அமுது ஊட்டுவதைக் கண்டு
"டேய் நான் உன் வழியில் வரேனாடா? கொஞ்சம் நேரம் அம்மாவ கொஞ்ச விட மாட்டேங்குற. நீ வந்ததும் அம்மா என்னைக் கவனிக்க மாட்டுறா. பஸ்ட் பேபிஸ் எல்லாம் என்ன பாவம் பண்ணாங்க" என்று வராத கண்ணீரை தள்ளி விட்டவன் அவள் கூப்பிடவும் ஆசையாக அவளிடம் நெருங்கி அமர்ந்தான்.
"நீ வளந்த குழந்தை தானே பச்சகுழந்தை கூட போட்டி போடுவியா?" என்றுச் சொல்லி அவனது காதினை திருகினாள்.
"ஆ..ஆ..ஆ.. ஏய் விடுடி புருஷன இப்படி கொடுமைபடுத்துற"
"அவன் தூங்கிட்டான்டா தொட்டிலில் படுக்க வை"
"நான் அவன் கூட சண்டை தூக்க மாட்டேன்"
"அடடா முத்தம் கொடுக்கலாம்னு நினைச்சேனே"
"கொடுடி நானே படுக்க வைக்கிறேன்" என்றவன் தொட்டிலில் படுக்க வைத்து ஆட்டி விட்டவன்
"எங்கே என் முத்தம்? எங்கே என் முத்தம்?" என்று தலையை இடவல, மேலே கீழே என்று சுழற்ற
"அலையாதடா"
"என் பொண்டாட்டிகிட்டே எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதற்கான லைசென்ஸ் இங்கு இருக்கும் வரையில்" என்று தாலிசரடை தூக்கி காட்டினான். அவள் புன்னகைக்க, இவன் நெருங்க அங்கு முத்தச் சண்டை முடிவிலியாய் தொடர்ந்தது.
ஐந்து வருடங்கள் கழித்து நிலோஃபர்க்கு நல்ல வரன் அமைந்தது. அண்ணனாக தன் கடமையை முழு மனதுடன் செய்தான். தன் தகுதிக்கு மீறியே கடன் வாங்கி செய்திருந்தான். இளவேனியும் தன் பங்கிற்கு அவளது நகைகளை கொஞ்சம் கழட்டி கொடுத்திருந்தாள்.
திருமணத்திற்கு பின் நிலோஃபர் கொஞ்சம் மாறியிருந்தாள் எனலாம். தன் கணவன் மீதான உரிமை, கடமை, ஆசைகள் என்று அவளை போலவே மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதை புரிந்துக் கொண்டாள்.
அறையின் டெலிவிஷனில் 'அல்பன்லீபி ஜஸ்ட் ஜெல்லி' விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.
"மம்மி.. மம்மி.. என்க்கும் இந்த மயம்(மரம்) வீட்டில் வக்கனும்"
"ஜோனீஸ் கண்ணா அதலாம் சும்மாடா விளம்பரத்துக்காக பண்றாங்க தங்கம்"
"அப்ப நான் யாரு பித்தளையா?" என்று அங்கு ஓடி வந்தான் இளநேயன்.
"அவனைக் கொஞ்சிட கூடாதே உடனே மூக்கு வேர்த்து வந்திடுவீங்களே?"
"நீ என்னைக் கொஞ்சுடி அப்பதான் அவனுக்கு ஒரு பாப்பா கிடைக்கும்"
"இய்ய இய்ய என்க்கு பாப்பா ணாணா. தம்பி வானும்"
"ஜோனீக்கு தம்பி வேணுமாடா பட்டு?" நேயன்
"ஆம்மா. மம்மி அப்பாக்கு பாப்பா என்க்கு தம்பி"
"அப்படி சொல்லுடா என் சிங்கக்குட்டி. பாருடி அவனே தம்பி பாப்பா வேணும் சொல்லிட்டான். (குரலை தாழ்த்தி) இனிமே தீயா வேலை செய்யலாம்டி" அவன் முதுகில் ரெண்டு போட்டவள்
"நான் என்ன பேபி மிஷினா? இல்லை அமேசான் ஷாப்பிங் ஆப்பா? ஆளாளுக்கு ஆர்டர் போடுறீங்க? ஒழுங்கா ரெண்டு பேரும் ஓடிருங்க சொல்லிட்டேன். (குரலை தாழ்த்தி) தீயா வேலை செய்யனுமா உனக்கு? கொன்றுவேன் ஓடிரு ஆசையை பாரு" என்று இருவரையும் விரட்டினாள்.
அந்த வாரயிறுதியில் மூவரும் நண்பர்கள் கூடுகையில் இணைந்துக் கொள்ள ஐந்து நட்சத்திர உணவகத்தில் சந்தித்தனர். ரகுவையே ஜோனீஸ் பார்த்து கொண்டிருக்க
"என்னடா மாமாவோட அழகுல மயங்கிட்ட போல. வாடா" என்று ரகு அழைத்தான்.
"ஏன் மாமா கியிஞ்ச(கிழிஞ்ச) பேண்ட் போட்டக்க?" என்று அவன் கேட்டதும் நண்பர்கள் அனைவரும் சிரித்தனர். நவநாகரீக ஆடை வடிவமைப்பில் அங்கு அங்கு கிழித்துத் தொங்கவிட்டு இருப்பது தானே இப்போது 'பேஷன்'. அப்படியான ஒரு பேண்ட் தான் ரகு அணிந்து இருந்தான்.
"உன் புள்ளை என்னை நல்லா செஞ்சிட்டான்டா. பொறக்கும் போதே ட்ரெயினிங் கொடுத்து கூட்டிட்டு வருவீங்களாடா?" என்று கேட்டிருந்தான் ரகு. அதற்கும் சிரித்தனர் நண்பர்கள். நீண்ட நாட்களுக்கு பின்னான சந்திப்பு என்பதால் ஒருவரை ஒருவர் கேலி செய்து, பாசம் காட்டி உணவு சாப்பிட்டு 'ஃபன்' செய்து என்று நேரமே போனது தெரியவில்லை.
இளநேயனுக்கு விடுமுறை கிடைத்திருக்க மூவரும் இளவேனியின் தாய் தந்தையைக் காண ட்ரெயினில் சென்றனர். அவர்கள் அமர்ந்து இருந்த கபார்ட்மெண்டில் இரு வயதானவர்களும் ஒரு பெண்ணும் அமர்ந்து இருந்தனர்.
அந்த பெண் நவநாகரீக மங்கை போலும். ஆண்கள் போலவே கூந்தலைக் கத்தரித்திருந்தவள் உடையையும் ஆண்கள் அணியும் பேண்ட் சட்டை என்று அணிந்து அமர்ந்து இருக்க ஜோனீஸ் அந்த பெண்ணையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தான்.
"ஹாய்டா குட்டி பையா" என்று அந்த பெண் கையசைக்க
"நீ பொண்ணா அண்ணாவா?" என்று அவன் கேட்டு வைக்க அந்த பெண்ணின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே.
"டேய் சும்மா இரேன்டா" என்று இளவேனி சத்தம் போட அந்த பெண் எழுந்து வெளியேச் சென்று விட்டாள். ஒருவழியாக ஊர் வந்து சேர்ந்தனர்.
ஜெரோம், கவினி அன்புடன் வரவேற்று உபசரித்தனர். ஜோனீஸ்க்கு தாத்தா பாட்டியின் அன்பு பரிபூரணமாகக் கிடைக்கும் இடம் இங்கு தான்.
"எப்படி வாழப் போறீயோனு நாங்க பயந்தோம் மருமவனோடு உன்னை இப்படி பார்க்க சந்தோஷமா இருக்கு வேனி" கவினி
"ம்மா பிறந்த வீட்டோட ஞாபகம் வராத அளவுக்கு பாத்துக்கிற கணவன் கிடைப்பது வரம் ம்மா அப்படியான வரம் தான் இவன்" என்று சொல்லவும் கவினி அவளது வாயிலே ஒரு அடி வைத்தார்.
"மரியாதை இல்லாமல் பேசாதனு எத்தனை முறை சொல்றது உனக்கு?"
"அவனுக்கே இதுல பிரச்சினை இல்லாதப்போ உங்களுக்கு என்ன மம்மி பிரச்சினை?"
"அத்தை அவள் ஜோனீஸ் முன்னாடி வாங்க போங்கனு தான் பேசுறா. கேட்டா அவனும் அப்படி பேசி பழகிட கூடாதுனு சொல்லுவா. கூப்பிட்டா கூப்பிடட்டுமே என் புள்ள தானே. அதுக்கும் ஒரு அடி சேத்து வைங்க" இளநேயன்
"உன்னை..." என்று அடிக்கப்பாய்ந்தவளை பிடித்துக் கொண்டான்.
"என்ன மருமவனே நீங்க ? இப்படி பேசிகிட்டு. உங்களால் தான் அவ கெட்டு போய் இருக்கா"
"மறுபடியும் கெட்டு போக வைக்க ஆசைதான் எங்கே கையை பிடிச்சாலே ஓடுராளே" குரலை தாழ்த்தி அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் சொன்னான்.
'நறுக்'கென்று கிள்ளி வைத்தாள் கையில். "ஆஆஆஆ இருடி உன்னை அப்புறம் வச்சிகிறேன்" என்றவன் அவளை இழுத்துக் கொண்டு வெளியே செல்ல
"ப்பா எங்க போயீங்க? பாப்பா வாங்கவா?" ஜோனீஸ்
"ஜோனீ பட்டு பாப்பாவ கடைலலாம் வாங்க முடியாதுடா" கவினி
"இய்ய(இல்ல) பாத்தி(பாட்டி) ம்மா ப்பா எண்டு பேதும் தனியா போயி தம்பி வயிந்துடுவான்னு ப்பா சொல்லி" அவன் சொன்னதும் வெளியே வந்தவர்கள் ஈருருளியில் திரையரங்கம் செல்ல பயணித்தனர்.
"பயபுள்ள எப்படி போட்டுக் கொடுத்து மானத்தை வாங்குது பாரு புள்ளயாடி பெத்துருக்க" இளநேயன் வேனியின் காதைக்கடிக்க,
"ம்ம்ம் ஆமா வானத்துல இருந்து தொபுக்கடீர்னு குதிச்சு பொறந்த குழந்தை பாரு. உனக்கு சம்மந்தமே இல்லாத மாதிரி பேசாதடா. உனக்கும் அவன் புள்ளதானே"
"வேனி ரொம்ப நாள் கழிச்சு வெளியே தனியா போறோம் சிரிச்சி பேசி ஜாலியாக போலாம்டி கோவத்தை குறையேன்டி"
"செலவாகுமே அப்ப"
உடனடியாக ஈருருளியை நிறுத்தியவன் திரும்பி
"எவ்வளவு செலவுனாலும் நான் பாத்துகிறேன் ஆனால் நடுரோட்டில் நின்னு கிஸ் பண்ணணுமா?"
"டேய் வீட்டில் போய் செலவு பண்ணிக்கலாம் வண்டிய எடு மொதல்ல படம் போட முன்னாடி போகனும்"
இருவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்து சந்தோஷமாக வானம்பாடி பறவைகளாகச் சுற்றினர். அந்த பறவைகளின் மீது யார் கண்பட்டுதோ தனித்தீவுகளாக பிரியும் நிலை வரும் சூழல் தேடிவந்தது.
முகை உதிரும்...

Author: Vishakini
Article Title: நேசமுகை உதிரும் இளவேனில் - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.