நேசமுகை - 14
மறுநாள் காலை எழுந்தவள் மகிழ்ச்சியுடனே சமையலை செய்துக் கொண்டிருந்தாள் இளவேனி. முந்தைய இரவில் இளவேனி உறக்கத்தை தழுவியப் பிறகும் நீண்ட நேரம் உறங்காமல் புரண்டுக் கொண்டிருந்தான் இளநேயன். அதை வேனியும் உணர்ந்தே இருந்தாள். எனவே அவனை எழுப்ப மனதில்லாமல் வேலைகளைத் தொடர்ந்தாள்.
வேலையினூடே ஜோனீஸையும் எழுப்பி விட்டுக் கிளம்ப சொன்னாள். இரவு 12 மணி வரை சன் டீவியின் சீரியல்களை அலைபேசியில் வரிசையாகப் பார்த்து களித்த கிளாரின் மணி 8 ஆகியும் எழும்ப மனதில்லாமல் திரும்பி படுத்துக் கொண்டார்.
8 மணி அலாரத்தை அணைத்த நேயன் எழுந்து வெளியே வந்தான். அவனது விழிகளோ சிவந்திருந்தது. ஏதோ சிந்தனை வயப்பட்டவனாகவே அமர்ந்திருந்தான்.
"சீக்கிரம் கிளம்புடா அல்ரெடி எந்திச்சி வந்ததே லேட்" என்று அவனைப் பார்த்து சிரித்தாள். நேயன் அவள் பேசியது செவிகளில் விழாதது போலவே அமர்ந்திருந்தான். அவள் வந்து அவனது தோளில் கைவைத்துப் பேசிய பிறகே கிளம்ப ஆயத்தமானான்.
இருவருக்கும் மதிய உணவை டப்பாவில் அடைத்து வைத்தவள் தோசை வார்த்துக் கொண்டிருந்தாள். ஜோனீஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்க அடுத்ததாக நேயனுக்கு தோசை வார்த்தாள். அதற்குள் எழுந்து வந்த ஜோவீஸ் பசியில் அழ அவனுக்கு ஹார்லிக்ஸ் கலக்கிக் கொடுத்தாள்.
"தோசை வருமா வராதாடி?" என்று நேயன் சிடுசிடுத்தான்.
"இதோ வந்துட்டேன்டா உம்புள்ள காபி கேட்டு அழுதது உனக்கு காதுல விழலயா?" என்று கேலி போல் பேசினாள். ஏற்கனவே சிடுசிடுப்பில் இருந்த நேயனோ
"டெய்லி ஏதாவது சொல்லுடி. உன்னால தான் லேட் ஆகுது. மணிய பாரு" என்று கத்தினான்.
"என்னால லேட் ஆகுதா? ஓஹோ அப்படிங்களா அப்பாங் சாரு. சின்ன சார்வாழ் எழுந்து வந்து தானா கிளம்ப மாட்டாரு. எல்லாம் ச்சொல்லனும்.. டேய் ப்ரஷ் பண்ணு, காபிய குடி, யூனிபார்ம் போடு, ஜிப்ப போடு, எண்ணெய் தேய்னு. அப்புறம் அப்பாங் சாரு எழுந்து வரதே லேட்டு தான். இதுல குறை மயிரு வேற ச்சைக்" என்று தானும் பொரிந்தவள் ஜோனீஸின் 'ஸ்னாக்ஸ் பாக்ஸில்' வைக்க கேரட்டை வட்ட வட்டமாக வெட்டிக் கொண்டிருந்தாள்.
"உனக்கு பையனை கிளப்பி விடுவதை விட வேறு என்ன வேலை இருக்குடி?"
"நான் ஒன்னும் எங்க அம்மா வீட்டில் இருந்து குழந்தைகளைத் தூக்கிட்டு வரல. ரெண்டு பேருக்குமே பிள்ளை தானே ரெண்டு பேரும் சேந்து தான் வளர்க்கிற பொறுப்பை எடுத்துக்கனும்" என்று பதில் மொழிந்தாள்.
"ஏய் என்னால முடியாதுடி நான் பாக்க மாட்டேன்"
"புரியலை எனக்கு. பார்க்க மாட்டேன்னா என்ன அர்த்தம்? பசங்களை பார்க்கிறதை விட அப்படி என்ன மயிரை புடுங்குற வேலை உங்களுக்கெல்லாம்?" என்று கடுமையான வார்த்தைகளைத் தெறிக்க விட்டாள். கோபமுற்ற நேயன் எழுந்து வந்தவன்
"ஹேய் ஆமாடி என்னால பார்க்க முடியாது அப்படி பாக்கனும்னா நீ வேலைக்கு போ நான் வீட்டில் இருந்து பசங்களை பாத்துகிறேன்"
"ஹோ ரியலி! வாவ்! சீரியஸ்லி ஐ அம் ரெடி டூ கோ டூ ஒர்க். நீ வீட்டில் இருக்கிறது என்ன அவ்வளவு ஈஸினு நினைச்சிட்டியாடா? மை ஃபுட். காய்கறி வாங்குறதுல இருந்து மளிகை, டயாபர் எல்லாம் பர்ச்சேஸ் பண்ணணும். குக் பண்ணணும். வீடு சுத்தமா.. எப்படி? சுத்தமா வச்சுக்கனும். துணி துவைக்கனும். இப்படி நிறைய இருக்கு"
"என்னடி சொல்லி காட்டுரீயா? நீ இல்லனா கூட இந்த வேலை எல்லாம் நடக்கும். இனி நீ எனக்கு சமைக்காத துணி துவைக்காத. ம்மா காலையில் இனி என் துணியை ஊற வச்சிடு நானே துவைச்சிரேன்"
"ஓ அப்படியா? சோ என்ன ஆனாலும் சரி, நாங்க உன் அன்புக்காக ஏங்கிட்டே இருக்கனும் அப்படி தானே? உனக்கு என்ன தான் ஆச்சுனு தெரில. வேலைக்கு போய்ட்டு வந்து போன் தானே பார்க்கிற? கொஞ்சம் நேரம் எங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுனூ சொன்னா இந்த குதி குதிக்கிற? அவங்க உன் பசங்க தானே? அதுல எதுவும் டவுட் இருக்கா என்ன உனக்கு?"
"வேனி..."
"சொல்லுடா உங்கம்மா தான் எங்களை ஒதுக்கி வச்சிருந்தாங்க. இப்ப நீயும் அதை தானே பண்ற? அப்படி என்ன நாங்க பாவம் செய்தோம்?"
"ஏய் என்னடி" என்றவன் வெறி பிடித்தது போல உணவுக் கூடத்தில் நுழைய வேனியும் திரும்ப, இருவரது விழிகளும் சந்திக்க, அவளது கழுத்தைப் பிடித்து நெறித்திருந்தான் இளநேயன். ஓர் நொடி உலகமே ஸ்தம்பித்து நின்றது போல உணர்ந்தாள் இளவேனி.
அவளது விழிகளில் நேயனின் வதனமும், அதில் தெரிந்த சினமும், வெறுப்பும் மிகவும் நெருக்கமாகத் தெரிந்தது. நாகினி சீரியல்களில் நாகினி தன் இரையைச் சுற்றி வளைத்து ஆக்ரோஷமாக இறுக்கி எலும்புகள் நெறிக்கப்பட்டு உடையுமே, அப்படியான ஓர் உணர்வு இளவேனிக்கு. அவளது கழுத்து நெறிக்கப்பட்டு, சுவாசம் பெறத் தடை ஏற்பட்ட போது தான் சுய உணர்வை அடைந்தவள் தன் பலம் கொண்டு அவனைத் தள்ளி விட்டாள்.
ஒரு கையில் கேரட், மறு கையில் கத்தியுடன் நின்றிருந்தவளை மீண்டும் கழுத்தை பிடிக்க வந்த நேயனை, மீண்டும் தள்ளி விட்டு தன்னை தற்காத்துக் கொண்டாள். அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்த கிளாரின் நேயனை தள்ளி விட்டதும்
"ஐய்யோ இளா டேய் வந்திடுடா ஐயோ எம்புள்ளைய அடிக்காளே பாதகத்தி" என்றுக் காட்டு கூப்பாடு போட்டார். இளவேனி நிதானத்தை இழந்திருந்தாள், ஆனால் கத்தியால் தெரிந்தோ தெரியாமலோ அவனை காயப்படுத்திடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தவள் அதை கீழேப் போட எத்தனிக்க, அதே எண்ணத்தில் இருந்த நேயனும் கத்தியால் இருவருக்கும் எந்தப் பாதிப்புகளும் வந்திடக் கூடாது என்றெண்ணியவன் அவளிடம் இருந்து பறிக்கும் நோக்கத்தில் அவளது கைகளை இறுக்கமாகப் பற்றியிருந்தான்.
குழந்தைகள் இருவரும் "அம்மா .. அம்மா .." என்று அழுதுக் கொண்டிருந்தனர் ஒரு ஓரமாக நின்று.
இருவருக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் நேயன் வேனியை சுவற்றில் சாய்த்து கத்தியைப் பறித்து தூக்கி எறிந்தான் உணவு கூடத்தை நோக்கி.
"என்னை விடுடா" என்றவள் அவனது நெஞ்சில் அடிக்க "ஐயோ எம்புள்ள" என்று கிளாரின் கூப்பாடு போட்டதில் மீண்டும் 'ட்ரிகர்' ஆன நேயன் அவளைக் கூடத்தில் இருந்த இரும்புக் கட்டிலில் பிடித்துத் தள்ளினான். அவள் கடினப்பட்டு எழ, பிடித்து இழுத்தவன் அறையின் கதவினில் தள்ளி விட்டு இடிக்க வைத்து, மீண்டும் அவளை அறைக்குள் பிடித்துத் தள்ளினான். அதில் கடுங்கோபமடைந்த இளவேனி,
"என்னடா நினைச்சிட்டு இருக்க நீ? தப்பே பண்ணாத என்னை நீ அடிக்கிறது ரொம்ப பெரிய தப்பு. என் மேல் கை வைக்கிற ரைட்ஸ் உனக்கு கிடையாது நேயா கையை எடு" என்று பலம் கொண்டு தள்ளி விட்டாள்.
அவனோ மீண்டும் அவளை தோள்களில் அடிக்க பிள்ளைகள் இருவரும் "வேண்டாம் அப்பா பிளீஸ் அம்மா வேணும்" என்று அழுததில் இயல்புக்கு திரும்பியவன் "மரியாதையா நடந்துக்கோ அவ்வளவு தான் சொல்வேன்" என்று விரல் நீட்டி எச்சரித்தான்.
பிள்ளைகளோ வேனியை கட்டிக் கொண்டு அழுதனர்.
"நான் ஸ்கூல் போகலை உங்க கூடவே இருக்கேன் எனக்கு பயமா இருக்கு" என்று ஜோனீஸ் கேவினான்.
"தங்கம் இங்க பாரு ஒன்னுமில்லை அம்மா நல்லா இருக்கேன். நீ ஸ்கூல் கிளம்பி போ இல்லைனா உனக்கு போர் அடிக்கும்னு சொல்லுவ. இந்த சண்டை எல்லாம் நினைக்காம ஒழுங்கா பாடத்தை கவனிக்கனும்" என்றவள் அணைத்து முத்தமிட்டு சிரித்தபடியே அனுப்பி வைத்தாள். பொடியனையும் கிளப்பி அங்கன்வாடியில் விட்டு வந்தவள் நேயனுக்காகக் காத்திருந்தாள்.
சிறிது நேரத்தில் பள்ளியில் விட்டு வந்தவன் தனது உணவு பையை எடுத்துக் கொண்டு கிளம்ப " நில்லு நேயா நான் என்ன தப்பு பண்ணேனு நீ இப்படி பிகேவ் பண்ண? சொல்லுடா?"
"அது உனக்கே தெரியும் வழியை விடு" என்று நழுவப் பார்த்தான் நேயன்.
"ஆனாலும் இவளுக்கு இந்த நெஞ்சு திண்ணக்கம் ஆவாதுலே. புருஷனை கை நீட்டி அடிப்பாளா எந்த பொண்டாட்டியாது?" என்று கிளாரின் கொழுத்தி போட்டபடியே வந்தமர்ந்தார்.
"அம்மாடி மகாராணி நான் உங்ககிட்ட பேசவே இல்லையே. இந்த மாதிரி அம்மா இருந்தா பின்ன இவன் இப்படி தான் இருப்பான். காலையில் 9 மணிக்கு எழனும், சாப்பிடனும், கட்டிலில் மல்லாக்க படுத்துகிட்டு கால் மேலே காலையும் போட்டு ஆட்டிகிட்டு வரிசையா எல்லா சீரியலையும் பார்க்க வேண்டியது. இல்லனா வாசல்ல பொழுதுக்கும் உட்கார்ந்து பொறணி பேச வேண்டியது. வேலை தான் செய்ய முடியலை, கால் வலி முட்டி வலி எல்லாம் சொல்றீங்க. பசங்களை பார்க்கவும் கூடவா கால் வலிக்கும்? பொண்ணோட பசங்க வந்தால் வாய் நிறைய தங்கம்னு கொஞ்ச வர்ர வாய்க்கு பெத்த பையனோட பசங்களை கொஞ்ச வாய் வரலயே?"
"வயசு காலத்தில் எம்புள்ள என்னை பாக்கிறான் உனக்கு என்னடி பிரச்சினை? புருஷனுக்கு மரியாதை கொடுக்கிறாளா பாரு அவென் இவென்ட்டு"
"எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் அவென்கிட்ட பேசிக்கிறேன். மரியாதை எப்படிக் கொடுக்கனும்னு எனக்கு தெரியும் " என்றவள்
"நீதானே நேயா கூட்டி வந்த எங்களை? உன்கிட்ட ரெண்டு விஷயம் தான் கேட்டேன். குடிக்கக் கூடாது பசங்களை பாத்துக்கனும்னு அப்ப எல்லாம் தலையாட்டிட்டு..."
அவள் பேசி முடிப்பதற்குள்ளாகவே கிளாரின் பேச்சின் ஊடே வந்தார்.
"அவென் ஆம்பளடி வேலைக்கு போறவன் வெளியே போனால் ஆயிரத்தெட்டு டென்ஷன்ல வருவான். வந்து போன் தான் பாப்பான்டி. பசங்களை பார்க்க மாட்டான். விளையாட மாட்டான். பேசவும் மாட்டான்"
"தேவை இல்லாமல் குறுக்க வராதீங்க" இளவேனி
"எந்த வீட்டில் தான் குடிக்காமல் இருக்காங்க? நானெல்லாம் என் புருஷன் கிட்டே அடியும் மிதியும் வாங்கி தான் என் பசங்களை படிக்க வைச்சு வளர்த்து ஆளாக்குனேன். என்னவோ தாம் தூம்னு குதிக்கிற?"
"நீங்க அடியும் மிதியும் வாங்குனீங்கனா நானும் வாங்கனுமா? வாவ் சூப்பர். இந்த வார்த்தையை உங்கப் பொண்ணைப் பார்த்து சொல்வீங்களா? எந்த காலத்தில் இருக்கீங்க? " என்று பதிலடிக் கொடுத்தாள் இளவேனி.
"என் பொண்ணை எதுக்குடி இழுக்குற? அவ நல்லா வாழ்றது பிடிக்கலயா உனக்கு?" என்று கத்திக் கூச்சல் போட்டார்.
"அவ நல்லா இருக்க கூடாதுனு நான் என்னைக்குமே நினைச்சதில்லை. மிஸ்டர் உத்தம புருஷரே ஏன் அமைதியா இருக்கீங்க? பதில் சொல்லுங்க. உடம்பு சரியில்லைனா கூட நான் தான் சமைக்கனும். நான் தான் காய் வாங்கனும். ஏன் உங்க தங்கச்சி மாப்பிள்ளைலாம் காய்கறி வாங்குறது கடைக்கு போறதுலாம் அவர் தானே செய்ராரு? அவரும் ஆம்பளை தானே? ஆனால் நீங்க செஞ்சா ஆம்பளை இல்லைனு அர்த்தம் ஆய்டும்னு உங்கம்மா சொல்லி சொல்லி வளர்த்தாங்களாமா?"
"என் பையனுக்கு காய் எல்லாம் வாங்க தெரியாது. நான் பழக்கப்படுத்தல. நீதான் போகனும்" கிளாரின்
"என்னதான் பழக்கபடுத்திருக்கீங்க நல்லா ஊத்திட்டு வந்து வீட்டில் டார்ச்சர் பண்றதுக்கா? ஹோலி ஷிட்" குடிப்பது போல கைகளால் பாவனைக் காட்டியவள் வெறுப்பை உமிழ்ந்தாள்.
"அவன் அப்படி தான் குடிப்பான் பொண்டாட்டினு நீ எதுக்கு இருக்க? உன் புருஷன் குடியை திருத்துடி"
"வாரே வாவ் ஏதேது? நான் திருத்தனுமா? நான் ஒன்னும் குடியை திருத்துறதுக்கு கல்யாணம் கட்டிட்டு வரல அத்தையாரே. 27 வருஷமா பெத்து ஆளாக்கி விட்ட உங்களாலயே உங்க பையன் குடியை திருத்த முடிலயாம் இதுல இடைல வந்த நான் எப்படி திருத்துறதாம் மிஸ்டர் ஒழுக்க சீலரே பேசுவீங்களா மாட்டீங்களா?" என்றுக் கேட்டிருந்தாள் இளவேனி.
"வேனி நிறுத்துறீயா? போதும் உள்ள போ" நேயன்.
"என்னை ஏன் ஸ்டாப் பண்ற? நான் ஆரம்பிக்கல உங்கம்மா தான் கேட்டாங்க பதில் சொன்னேன். அவங்கள போய் ஸ்டாப் பண்ணு" என்று பதிலுக்குக் கத்தினாள். அவனோ அமைதியாக இருந்தான்.
"எனக்கு புரியலை நேயா. நீ எனக்கு வாக்கு கொடுத்தது ஒன்று இப்ப நடந்துகிறது ஒன்று. சம்பாதிச்சி போட்டா போதும்னு நினைச்சிட்டியோ என்ன? பேரண்டிங்னா என்னானு தெரியுமா உனக்கு? ஆனால் நான் மட்டுமே குழந்தைகளோட எல்லா பொறுப்பையுமே பார்த்துகிறேன், கூடவே வீட்டையும். எல்லாரும் கல்யாணம் முடிஞ்சி தனிகுடித்தனம் போவாங்க. நாம ஒரே வீட்டில் தனிக்குடித்தனம் இருக்கிற மாதிரி பீலாகுது நேயா. மண்டை புல்லா ஒரே அழுத்தமா இருக்கு. கொஞ்சம் என்னை மூச்சு விட அவகாசம் கொடுனு இதயம் கேக்கிற மாதிரி இருக்கு. கொஞ்சம் எனக்கும் ஓய்வு கொடுனு மூளை கேக்கிற மாதிரி இருக்கு"
"....."
"இந்த வீட்டில் தான் இருக்கிற, ஆனால் நாங்க என்ன செய்ரோம் ? இருக்கோமா? இல்லையா?னு கூட தெரியாது. ஒரு போன் கால் கூட பேச டைம் இல்லை. ஆக்சுவலி நான் போன் பண்றதே கிடையாது. அதுவும் உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. பசங்க தான் அப்பா அப்பானு உயிர விடுரானுங்க. நீ வர நேரத்தில் தூங்கிறதால போன்லயாது பேசலாம்னு கால் பண்ணா கட் பண்ணி விடுற. இல்லைனா பேசுறது யார்னு கூட கேக்காமல் காட்டு கத்து கத்தி கட் பண்ற. நீ என்னை இக்னோர் பண்ண நான் அக்செப்ட் பண்ணிட்டேன். பட் பசங்களையும் ஏன் இக்னோர் பண்ற? பேரண்ட்ஸ் மீட்டீங்க்கு நான் தான் போகனும். அவங்க ரெண்டு பேரையும் நான் நல்லாவே பார்த்துக்கிறேன் தான் ஆனால் அவங்க ஏங்குறது உன்னோட அன்புக்காக"
"....."
பதிலேதும் சொல்லாமல் வெளியேறியிருந்தான் உணவுப் பையை தவிர்த்தவனாய். அறைக்குள் வந்தவள் மனம் கசந்து அமர்ந்தாள். மனதின் ஆழ் குரல்கள் அவளை இருக்க விடாமல் சித்திரவதை செய்தன. குளியலறை சென்றவள் குளிர்ந்த நீரினை முகத்தில் அடித்தாள். அவளது வலது பக்கம் குளிர்ச்சி மிகுந்த லயா நின்றிருந்தது. இடதுபக்கம் நெருப்பாய் தகித்த மியா நின்றிருந்தது.
"கொஞ்சம் பொறுமையா இரு வேனி" லயா
" பொறுமையா? இன்னும் உன்னை சாம்பல் ஆக்கும் வரைக்கும் பொறுமையா இருப்பியா? இந்தளவுக்கு நீ மனதளவில் காயப்பட்டு நிக்கிற, ஆனால் ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல் போய்ட்டானே இன்னும் ஏன் நீ உயிரோடு இருக்க ? உன் வாழ்க்கையை முடிச்சிக்க" மியா
"வாயை மூடு. இது உணர்ச்சிவசப்படுகிற நேரம் இல்லை வேனி. அவனுக்கு கொஞ்சம் அவகாசம் கொடு. நீ தைரியமா இருக்க வேண்டிய நேரம் இது. பிள்ளைகளுக்கு நீ வேண்டும்" லயா
தண்ணீர் டேப்பினை திறந்து விட்டவள் தண்ணீர் மொண்டு இரு உருவங்கள் மீதும் ஊற்றியவள், டேப்பின் கீழேயே அமர்ந்து தண்ணீரில் நனைந்தாள். வாயை பொத்தி அழுதாள். வலது கையின் தோள்பட்டைக்கு கீழே தண்ணீர் பட்டதும் காந்தல் எடுத்தது.
நேரம் ஆக ஆக வலியும் கூடவே எழுந்தவள் குளித்து முடித்து அறைக்குள் வந்து கண்ணாடி முன் நின்றுப் பார்த்தாள். சிவந்து கன்றிப் போய் வீங்கியிருந்தது. மாலை ஜோனீஸ் பள்ளி விட்டு வந்ததும் காட்டினாள். சிறுவன் அவனோ ப்ரிட்ஜில் இருந்து ஐஸ்கட்டி எடுத்து வந்து ஒத்தடம் வைத்தான். ஆறுதலாக இருந்தது.
இரவு நேயன் வந்ததும் "ஏன் இப்படி பண்ண நேயா? இங்க பாரு" என்று காட்டுவதற்குள்
"வீட்டுக்கு வந்ததும் ஆரம்பிக்காத. எனக்கு இப்ப மைண்ட் சரியில்லை போயிடு" என்றவனை விடுவதாக மனதில்லை.
"என் மேலே கை வைக்க உனக்கு யாருடா ரைட்ஸ் கொடுத்தது? பண்றதுலாம் பண்ணிட்டு மைண்ட் சரியில்லை மயிரு சரியில்லைனு வேற சொல்லுவியா நீ?" என்று கடிந்தாள்.
"நீ இங்க வாயேன்டா அவகிட்டயே ஏன் போய் தொங்குற? காலையில் முடிஞ்ச விஷயத்தை மறுபடியும் ஏன் ஆரம்பிக்கிற?" மனசாட்சியற்ற கிளாரின்.
"உங்க பொண்ணுக்கு இப்படி ஒரு விஷயம் நடந்தாலும் இப்படி தான் கேட்பீங்களா?" இளவேனி
"ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா? நிம்மதியா வீட்டில் இருக்க முடியலை" என்றவன் படுக்கையில் விழ
"மரியாதையா வெளியே போய்டு நேயா. என் கண்ணு முன்னுக்கு நிக்காத" என்று கத்தினாள். அந்த இரவு நீங்காத வலியை அவளுக்கு பரிசளித்தது. நேயன் தன் அன்னையின் படுக்கையில் படுத்துக் கொண்டான். கிளாரின் பாய் விரித்து தரையில் படுத்துக் கொண்டார்.
இரவெல்லாம் உறங்க முடியாமல் பெறும் அவதியாக இருந்தது இளவேனிக்கு. பிள்ளைகள் இருவரும் அவளைக் கட்டிக் கொண்டு உறங்க ஜோனீஸ் தான் கனவு கண்டு பயந்து அவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
இளவேனிக்கும் வித்தியாசமான கனவுகளும், மனதின் ஆழ்குரல்களும் அவளை உறங்கவும் விடாமல், முழித்திருக்கவும் விடாமல் அலைக்கழித்தன.
இதன் நீட்சியாக அவள் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் மட்டுமாக சமைத்தாள். துணிகளையும் தங்களோடதை மட்டுமே துவைத்தாள். ஒரே வீட்டில் தனித்து இருந்துக் கொண்டார்கள்.
அந்த வாரயிறுதி நாளில் சிலிண்டர் காலியானதில் புது சிலிண்டர் புக் செய்திருக்க, அதற்கான ஊழியர் சிலிண்டரை கொண்டு வந்துக் கொடுத்தார். அவரிடம்
"கியாஸ் லீக்' ஆகிறது வயர் எக்ஸ்பையர் ஆகிருச்சு மாத்தி தரீங்களா?" என்று கேட்டிருந்தாள் இளவேனி. அந்த ஊழியரோ செக் செய்து பார்த்து விட்டு
"நல்லா தான் இருக்கு மேடம் மாத்த வேண்டிய அவசியம் இல்லை" என்று சொல்லி வெளியேறினான். ஆனால் 'கியாஸ் லீக்' ஆகுவதை அப்படியே விட்டு விட மனதில்லாமல் அலைபேசி வாயிலாக உதவிக் கேட்டிருந்தாள் இளவேனி. கியாஸ் கம்பெனியிலிருந்து இரண்டு, மூன்று முறை வந்து போன ஊழியர்களும் அதே பல்லவியையே பாடினர்.
இதற்கிடையில் தான் மறுபடியும் மாமியார் மருமகள் சண்டை நடந்தது(எபி 3). முழுதாக 14 நாட்கள் ஆகியிருந்தது. மன்னிப்புக் கேட்காமல் தான் இறங்கி போக கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் இளவேனி.