நேசமுகை - 6
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல்
ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல
பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே
தாயின் மடியைத்தேடி ஓடும்
மலைநதி போல
இளமாலை பொழுதின் இளங்காற்று இதமாக தேகத்தை தழுவ, கல்லூரியைக் கடந்து வரும் பாதையிலிருந்த டீக்கடையில் ஒலித்த இளையராஜாவின் இசையும் இதம் சேர்க்க, இரம்மியமான அச்சூழலை ரசித்துக் கொண்டு பேசிக்கொண்டே வந்தவர்கள் பேருந்து நிலையத்தில் ஒய்யாரமாக நின்றிருந்தவனைக் கண்டதும் 'ஸ்விட்ச்' போட்டது போல நகராமல் நின்றிருந்தனர். அவன் இளநேயன்.
'ஹாய்' என்று அவன் கையசைக்க நன்மதி பதற்றம் மிகுந்தவளாக சுற்றும் முற்றும் பார்க்க, அதற்குள் இளவேனி சினத்துடன் அவனை நெருங்கியிருந்தாள்.
'ஐயோ இவ வேற' என்றவளாக நன்மதி அவள் பின்னே ஓடிச்சென்று
"டி வேணி சொக்காரவ யாரும் பாத்தா சோலி முடிஞ்சி. இவுக எதுக்கு இங்கன வந்தாவ? நீதான் வரச் சொன்னியா? காலேஜூக்கே விடமாட்டாவ தெரியும்லா?"
என்று படபடவென பொரிந்தவளை ஒரு பார்வை பார்த்தவள் அவள் அமைதியானதும்
"இங்கன உமக்கு என்ன சோலி?"
என்று நேரடியாகக் கேட்டிருந்தாள் அவனிடம்.
"போன் பண்ணா ராங் நம்பர்னு சொல்லி கட் பண்ற. அதான் ஏன்னு கேட்டு போலாம்னு வந்தேன்" இளநேயன்
"ஓ அப்படியா? எனக்கு உம்ம கிட்டே பேச விருப்பம் இல்லை. காரணம் போதுமா? இப்ப போறீயா. மறுபடியும் இந்த மாதிரி வந்து நின்னினா நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது" அப்பட்டமான மிரட்டல் தான்.
"உனக்கே தெரிலனா என்ன பண்ணுவ? ஆங் எடு செருப்பனு கத்துவ. சொல்ல முடியாது அடிச்சாலும் அடிச்சிடுவே. ப்பா என்ன ஒரு ஃபயரு பிரேவ்னஸ். ஐ இம்ப்ரஸ்ட்" என்று சொல்லி அரிசி பற்கள் தெரிய சிரித்திருந்தான்.
"காலையில் இருந்து பாலோ பண்றியாடா ராஸ்கல்ஸ்? உன்னை.."
"ஏட்டி வேணி சும்மா இரு நமக்கு தெரிஞ்சவிய யாரும் பாக்கவுள்ள போயிரலாம்டி பிளிஸ் வேணி"
நன்மதியின் கெஞ்சல் கொஞ்சம் வேலை செய்ய அடுத்து வந்த பேருந்திலே இருவரும் ஏறிச் சென்றனர்.
அன்றிரவே மீண்டும் இளவேனிக்கு அழைப்பு விடுத்தான். அவள் 'சைலண்ட்' மோடில் போட்டபடி 'அசைண்மென்ட்' எழுதிக்கொண்டிருந்தாள்.
இளவேனியின் தந்தை ஜெரோம் ஒரு 'சமூக ஆர்வலர்' யாருக்கு என்ன உதவி தேவை என்றாலும், எந்த நேரமாக இருந்தாலும் மனம் சுணங்காமல் செய்துக் கொடுப்பார். ஆனால் வீட்டை மறந்து விடுவார்.
அன்னை கவினி தனியார் மருந்தகத்தில் வேலை செய்கிறார். இளவேனியின் சகோதரன் பெல்வின் ஒரு தனியார் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்து சில மாதங்களே ஆகின்றன. அவன் சிறுவயதிலேயே பள்ளிக்கு செல்லவில்லை.
பெல்வின் பிறக்கும் போது இளவேனியின் தாயார் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவர் அவரை மட்டுமே கவனித்துக் கொண்டு குழந்தையை சரியாக கவனித்துக் கொள்ளாததில் அவனுக்கு பேச்சு சரியாக வராமல், மற்ற குழந்தைகள் போல் சுறுசுறுப்பாக இல்லாமல் கொஞ்சம் மந்ததன்மையுடன் காணப்பட்டான். வளர வளர அனைவரும் அவனை ஒதுக்கி வைக்க பள்ளிக்குச் செல்லாமல் விட்டதில் இன்று எடுபிடியாக வேலைச் செய்கிறான்.
ஜெரோம் ரொம்ப கண்டிப்பானவரும் கூட. அவருக்கு அலைபேசியில் பேசுவது பிடிக்காத ஒன்று. நேயன் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்க கடுப்புடன் அழைப்பை ஏற்றவள்
"ஏண்டா உங்களுக்கு எல்லாம் ஒரு வாட்டி சொன்ன மண்டைல உரைக்காதா? நொய்நொய்னு கால் அடிச்சிட்டே இருந்தேனு வையி உன் காலை அடிச்சு ஒடிச்சிருவேன் சொல்லிட்டேன். எனக்கு லவ்வு கிவ்வுலாம் செட் ஆகாது வேற ஆள பாரு" என்று பொரிந்து தள்ளினாள்.
"நீ லவ்வுக்கு செட் ஆக மாட்டேனு எனக்கும் தெரியும். நான் உன்னை லவ் பண்றேனு எப்போ சொன்னேன்?" நேயன்
"அப்புறம் எதுக்குடா பாலோ பண்ற?"
"எனக்கும் நன்மதி மாதிரி உன்கூட இருக்கனும் ஆசை அவ்வளவு தான்"
"அதுக்கு நீ என் ப்ரெண்ட்டால்ல இருக்கனும்"
"ஆமா என்னையும் உன் ப்ரெண்ட்டா ஏத்துக்க"
"....."
"என்ன?"
"நான் ஏன் உன்னை ப்ரெண்ட்டா ஏத்துக்கனும்?"
"ஏன்னா இதென்னங்க கேள்வி? லவ்வா பண்ண சொன்னேன். ஜஸ்ட் ப்ரெண்ட்ஸிப் தானேங்க"
"என்னால முடியாது இனிமே டிஸ்டர்ப் பண்ணாத. ஓகேவா. பை" என்றவள் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
அவளிடம் பேச நேயனின் மனதோ தவித்தது. தன் நண்பன் ரகுவிற்கு அலைபேசியில் அழைத்தவன்,
"மச்சி கொஞ்சம் கூட கண்டுக்கவே மாட்டேங்குறாடா"
"டேய் அடிகிடி வாங்கிட்டு வந்து நிக்காத. ஒழுங்கா இங்க வந்துடு. உன் வேலையை பாரு. சொன்ன கேளு" ரகு
"டேய் அவ கண்ணுல என்னா ஃபயரு தெரியுமா? காலையிலே பஸ்ல ஒருத்தன் மிஸ்பிகேவ் பண்ண பாத்தான் அத்தனை பேர் இருகாங்க பஸ்ல இவ ஒத்தாளா நின்னு பொளந்து கட்டிட்டாடா. எனக்கு அவ கூட பேசனும்டா"
"உனக்கு காதல் பைத்தியம் முத்திடுச்சிடா. முக்தி அடையாம இந்த வியாதி தீராது. நீ போய் சாவு. என்னை சாவடிக்காத" என்றவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
அவளை நினைத்தபடியே பௌர்ணமி நிலவின் ஒளியில் நனைந்தபடி விழிகளை மூடினான். அவளைப் பார்க்க வேண்டி சென்னையிலிருந்து வந்தவன் அறை எடுத்து தங்கியிருந்தான்.
சில நாட்கள் கழிந்திருக்க அவர்கள் கல்லூரியில் ஆண்டுவிழா-2009 நடக்கவிருப்பதால் அதற்கான வேலைகளில் அலைந்துக் கொண்டிருந்தனர் இளவேனியும் நன்மதியும்.
மூன்று நாள் நடைபெறும் இந்த கலைநிகழ்ச்சிகளில் முதல் நாள் முழுவதும் கல்வி சம்மந்தப்பட்ட போட்டிகள் இடம் பெறும். இரண்டாவது நாள் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி மற்றும் கோலப்போட்டி, ரங்கோலி ஆகியவை இடம்பெறும். மூன்றாவது நாள் கலை நிகழ்ச்சிகள் களைகட்டும்.
நன்மதியின் எழுத்து தட்டச்சு செய்தது போலவே இருக்கும். ஆதலால் எப்பொழுதும் அவள் கட்டுரை போட்டியில் பங்கேற்பாள். இளவேனி எப்போதும் அறிவியல் சம்மந்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துக் கொள்வாள். அத்துடன் கவிதை போட்டியிலும் பங்கேற்பாள். ஆக மூன்று நாட்களுமே தன்னை ஈடுபாடுடன் உற்சாகமாக வைத்துக்கொள்வார்கள்.
கணினி மையத்திற்கு சென்று சில தகவல்களை 'இணைய உலாவல்' மூலமாக பதிவிறக்கம் செய்ய அன்றைய தினம் பேருந்தில் பயணம் செய்யக் காத்து கொண்டிருந்தனர். வழக்கமாக வரும் பேருந்து அன்றும் வழக்கம் போல் மக்களை திணித்துக் கொண்டு அம்பாரம் போல் ஆடி அசைந்து வந்தது. ஏறியவர்கள் பேருந்தின் மையப்பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். அவர்களுக்கு கொஞ்சம் தள்ளி நின்றிருந்த பள்ளி மாணவிகளிடம் ஒரு இளைஞன் அவர்களை இடித்து கொண்டும் அவர்கள் காதருகே வாயைக் குவித்து மூச்சுக்காற்றை ஊதிக் கொண்டும் வர, பார்த்த இளவேனிக்கு சினம் தலைக்கேற அந்த இளைஞனின் அருகே நின்றுக் கொண்டு அந்த மாணவிகளை முன்னே போக வைத்தாள்.
அவனின் பார்வை இவள் மீது விழ அந்நேரம் தடையணை (speed break) வரவும் பேருந்து ஏறி இறங்கிய அந்த ஒரு நொடி வேணி ஒரு காலை பேலன்ஸ்காக பின் வைக்க அந்த இளைஞன் "ஆ… ஆ…ஆ..." என்று அலறியிருந்தான்.
இளவேனியின் கால்களில் இடம் பெற்றிருந்த பென்சில் வகை உயர் குதிகாலனி தன் பணியை செய்த வெற்றி களிப்பில் ஜொலித்தது.
"ஓஹ்... சாரி சாரி ப்ரோ" என்றவள் திரும்பிக் கொண்டாள். மீண்டும் தடையணை வரும் போதெல்லாம் இவ்வாறாக அவள் மிதிக்க அவன் இறங்கியே போயிருந்தான். பின் அந்த மாணவிகளை அழைத்து
"நமக்கு ஒரு பிரச்சனைனா நாமதான் அதை எதிர்கொள்ளனும். இப்படி பயந்து நின்னா இன்னும் முன்னேறிதான் வருவாங்க. இனிமேல் இப்படி பயபடகூடாது தைரியமா ஹேண்டில் பண்ணணும் புரிஞ்சதா?" என்றவள் நன்மதியிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.
நடந்த அனைத்தையும் பார்த்திருந்த இளநேயன் அவளை நெருங்கி பேச முயற்சிக்க, திடீரென்று நின்ற பேருந்தின் நிறுத்தத்தில் எதிர்பாராதவிதமாக அவள் மீது மோதவிருக்க இருந்தவனை தன் கைகளால் அவனது நெஞ்சில் கை வைத்து நிறுத்தியிருந்தாள் இளவேனி.
"டேய் நீ இன்னும் இங்கதான் சுத்திட்டு இருக்கியா? உனக்கு வேலைவெட்டிலாம் இல்லையா?" என்று கேட்டவளிடம் எதுவுமே சொல்லாமல் பின் சென்று நின்றுக் கொண்டான். அவனது முகமே வாடியிருந்தது. அவனது கையில் அவள் தலையில் இருந்த ரோஜா மலரின் இதழ்கள் கேலியாகப் பார்த்து சிரித்திருந்தன.
கணினி மையத்தில் தேவையான தகவல்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்தனர்.
"ஏட்டி நான் ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டியே?" நன்மதி
"மொத சொல்லுட்டி. அப்புறம் கோச்சுக்கவா வேணாவானு பாப்போம்" என்று சிரித்தாள் இளவேனில்
"அந்த பையன் உன் பூவை தான் கொண்டு வந்து தர வந்தான் அதுக்குள்ள நீ அவனை பேசினதும் அவன் முகமே வாடிருச்சிட்டி"
தலையில் தடவிப் பார்த்தவள் காலையில் வைத்த ரோஜா இல்லை என்று உணர்ந்து கொள்ள "சரிட்டி நான் சாரி கேக்கிறேன்" என்றிருந்தாள்.
அதுதான் இளவேனி. தவறு தன் பக்கம் என்றால் மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டாள். தவறு மற்றவர் பக்கம் என்றால் தகுந்த பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டாள்.
இரண்டு நாட்களாக அவனைக் காணாததில் வீட்டிற்கு வந்தபின் இணைய கட்செவி அஞ்சல் (Whatsapp) மூலமாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.
"ஹாய்"
"ஹாய்" உடனடியாக பதில் அனுப்பியிருந்தான்.
"நாளைக்கு 'சுந்தரம் பாஸ்ட்புட்ஸ்'ல மீட் பண்ணலாமா?"
"என்ன திடீர்னு?"
"ஓகே ஜஸ்ட் லிவ் இட்"
"டைம்?"
" 11.30"
"பைஃன்"
அத்துடன் அந்த உரையாடல் முடிந்திருந்தது. மறுநாளுக்காக இரவை நெட்டி தள்ளி காத்திருந்தார்கள் இருவரும் இரு வேறு மனநிலையில்.
மறுநாள் காலையில் உற்சாகமாக கிளம்பியவன் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே சென்றமர்ந்து காத்திருந்தான். குங்கும நிற லினன் சட்டையும், க்ரீம் நிற கூர்க்கா பேண்ட்டும் அவனது மெல்லிய சரீரத்திற்கு பொருத்தமாக பொருந்தியிருந்தது.
அடங்காத அவனது முன் நெற்றி கேசம் காற்றில் அவ்வபோது சிலிர்த்து அவனின் நெற்றியை முத்தமிட்டு பறந்தது. விழிகளிலோ சந்தோஷ ஒளி நிறைந்திருந்தது. ஒரு கையில் அலைபேசியை வைத்திருந்தவன் மறு கையால் அவ்வபோது தலை கேசத்தை கோதிக் கொண்டான்.
நேரம் 11.30 ஆக சரியான நேரத்தில் வந்து நின்றாள் இளவேனில். இளஞ்சிவப்பு நிற புடவை அணிந்து வந்தவளின் கைகளில் கருத்தரங்கில் பேசுவதற்கான 'பேசுபொருள்' அடங்கிய தகவல் கோப்பு அமர்ந்திருந்தது. இடையை மீறி வளர்ந்திருந்த அடர்ந்த கூந்தலை 'ப்ரீ ஹேர்'ராக விரித்து விட்டவள் இருப்பக்கமும் மல்லிகை சரத்தினை வைத்திருந்தாள்.
மெல்லிய சரீரத்தை உடையவளுக்கு இடை உள்ளதா இல்லையா என்று பட்டிமன்றம் நடத்தியது நேயனின் உள்மனம். கழுத்தை தொட்டு விடும் ஆசையில் காதுகளில் தொங்கிய நீள வகை காதணிகள். கழுத்தை அலங்கரித்த புடவைக்கு ஏற்ற ஆரம். அவளை இரசித்திருந்தவன் அவள் அருகே வந்ததும் எழுந்து நிற்க
" ஹாய்.. ம்ம்ம் அன்னைக்கு என் தலையில் இருந்த ரோஜாவைக் கொடுக்க தான் நீங்க வந்தீங்கனு புரிஞ்சிக்காம டக்குன்னு பேசிட்டேன். ஹர்ட் ஆகியிருந்தா எக்ஸ்ட்ரீம்லி சாரி ஓகேவா"
"அதலாம் பராவல பஸ்ட் உக்காரு"
"நோ. எனக்கு பிராக்டீஸ்க்கு டைம் ஆகுது. நான் போகனும். சாரி கேக்க தான் வந்தேன். ஓகே பை"
"ஹேய் ஒரு காபி கூட சாப்பிடாமல் போற?"
"நான் காபியை சாப்பிடறது இல்லைங்க"
"சாப்பிட வேணாம் குடிச்சிட்டு போ"
அவள் அமர்ந்ததும் இருவருக்கும் காபி ஆர்டர் செய்தான்.
"என்ன இன்னைக்கு சாரியெல்லாம் கட்டியிருக்க?"
"உன்கிட்ட சாரி கேக்கதான்"
"வாங்கி தர நான் ரெடி தான்"
"என்கிட்ட பாத்து பேசுங்க மிஸ்டர். அப்புறம் விளைவுக்கு நான் பொறுப்பு இல்லை"
"நீ எப்போதுமே இப்படி படபடனு பட்டாசா தான் இருப்பியா?"
"இல்லைனா நமுத்து போயிருச்சுனு நசுக்கிட மாட்டீங்க. "
"சரி சொல்லு இன்னிக்கு என்ன ஜிகுஜிகுனு வந்திருக்க"
"இன்னைல இருந்து கல்ச்சுரல்ஸ் ஸ்டார்ட் ஆகுது. நான் ஒரு செமினார்ல இருக்கேன் அதுக்கான பிரிபரேஷன் தான் இது" என்றவள் தன் கைகளில் உள்ள கோப்பினைக் காட்டினாள்.
"நானும் வரலாமா?"
"நோ. நீ என்ன காலேஜ் பையனா?"
"எல்லாரும் பிஸியா இருப்பீங்க யார் என்னை கவனிக்க போறா?"
"இல்லை வேண்டாம். ஆமா நீ இங்கு வந்தே டூ வீக்ஸ் ஆகுதே உனக்கு ஒர்க் எதுவும் இல்லை? "
"ஒர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துருக்கேன். ஓகே. ப்ரெண்ட்ஸ்" என்று கைகளை நீட்ட ஒரு வினாடி தாமதித்து தன் கையையும் நீட்டியிருந்தாள். அவளது ஸ்பரிசம் மின்சார உணர்வாய் அவனுள் கடத்தப்பட்டது. காபி வந்ததும் இருவரும் அருந்தி விட்டு வெளியே வந்தனர்.
சிறு தலையசைப்புடன் இளவேனி கல்லூரி வளாகத்தில் நின்ற நன்மதியை தேடிச் சென்றாள்.
"சாரி கேக்கவாட்டி இவ்வளவு நேரம்?"
"காபி குடிச்சிட்டு வந்தேன்"
ஒரு மாதிரியாக ஊடுருவி பார்த்த நன்மதியின் தோளில் இடித்தவள்
"எதுவும் இல்லட்டி. எனக்கும் காபி குடிச்சா கொஞ்சம் தேவலாம் போல இருந்தது. அவ்வளவு தான். என்னை நம்பமாட்டியா?"
"நம்புறேன். சரி வா போலாம்"
என்றவள் கருத்தரங்கம் நடைபெறும் தளத்திற்கு அழைத்துச் சென்றாள். இளநேயனும் அவர்களை அறியாமல் பின்தொடர்ந்திருந்தான்.
வரிசையாக நெகிழி சேர்கள் போடப்பட்டிருக்க ஆண்கள் பக்கம் போய் அமர்ந்துக் கொண்டான் நேயன்.
"ஹாய் இதுக்கு முன்னாடி உங்கள நான் பாத்ததே இல்லையே" என்று அருகிலிருந்த மாணவன் கேட்க, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் நேயன்.
"ஓ உங்க ஆளு கூப்பிட்டதால வந்துருகீங்களா?" என்று மீண்டும் வினவினான். 'ஆம்' என்று தலையசைத்தவன் அவளின் செமினாரை காண ஆவலுடன் இருந்தான். அவளின் சொற்பொழிவினை கேட்க அல்ல அவளைக் காண.
அன்றைய நிகழ்ச்சி நிரல்கள் முடிவடைந்து பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் போது அவளின் அலைபேசிக்கு 'குறுஞ்செய்தி' அனுப்பியிருந்தான்.
"யூ லுக்ஸ் கார்ஜியஸ்"
"என்கிட்ட அடி வாங்காமல் ஊர் போய் சேரமாட்ட போல" என்று பதில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள்.
மறுநாள் அவளுக்கு முன் கல்லூரியில் அமர்ந்திருந்தான். முன்தினம் அருகில் அமர்ந்து இருந்த மாணவனின் அருகிலேயே இன்றும் அமர்ந்துக் கொண்டான்.
இளவேனி கவிதை போட்டியில் வெற்றி பெற்றிருக்க, தேர்ந்தெடுத்தவர்களை பேச அழைத்திருந்தார்கள்.
வாழ்க்கை எனும் நவரசத்தில்..,
தன்னம்பிக்கையின் விடிவெள்ளியாய் இரு...!
பிரகாசிக்கும் ஒளியாய் இரு...!
புதுமைகள் பூக்கும் முத்திரையாய் இரு...!
பூமியில் ஜனிக்கும் சக்தியாய் இரு...!
உன்னை நம்பு...
உன் வலிமையை நம்பு...
வாழ்க்கை வாழ்வதற்கே...!
'பெண்ணெழுச்சி' எனும் தலைப்பில் அவள் பேசியிருக்க மாணவர்கள் தங்கள் கரங்களை தட்டி ஆர்ப்பரித்தனர்.
மூன்றாம் நாள் கலை நிகழ்ச்சியில் முந்தைய இரு தினங்களை விட மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேடைக்கு எதிர்புறம் பெஞ்ச்சுகள் வரிசையாக நெருக்கமாகப் போடப்பட்டிருக்க அதற்கு மேல் மாணவிகள் கூட்டம் நின்றிருந்தனர். அதற்கு பக்கவாட்டில் மாணவர்கள் நின்றிருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பித்ததுமே மாணவ மாணவியரின் ஆர்ப்பாட்டமும் ஆட்டமும் ஆரம்பமாயின.
பென்ஞ்சில் ஏறி நின்ற மாணவியர்களில் இளவேனியும் நின்று இசையின் ரிதத்திற்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தாள். அதனையெல்லாம் இருவிழிகள் கொண்டு இரசித்ததோடு மூன்றாவது விழியின் உதவியோடு காணொளியாக்கிக் கொண்டிருந்தான் ரசனைவிழிகாரன் நேயன்.
அன்று இரவு இளநேயன் தன் அறையில் உறங்காமல் அலைபேசியைப் பார்த்து கொண்டிருந்தான். அதிலிருந்த காணொளிகளை இளவேனிக்கு அனுப்பியிருந்தான். அவள் இன்னும் பார்த்திருக்கவில்லை.
மறுநாள் பேருந்து நிலையத்தில் காத்திருந்தவனை முறைத்தபடியே வந்து நின்றாள் இளவேனி.
"என்ன ஆச்சு?"
"என்னை பாலோ பண்ணி காலேஜ் உள்ளளாம் வந்திருகீங்களா? இது ரொம்ப தப்பு. அதுமட்டும் இல்லாமல் வீடியோ வேறு எடுத்து வச்சிருக்கீங்க" மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பேசியவளை அமைதியாக பார்த்திருந்தவன்
"எனக்கு தப்பா தோணலை. நான் உன்னை ரசிச்சேன் தான் ஆனால் தப்பான எண்ணத்தில் இல்லை. அண்ட் இன்னைக்கு நான் சென்னை கிளம்புறேன்"
"ரொம்ப நல்லது" என்றவள் பேருந்தில் ஏறிச்சென்று விட்டாள். ஏதும் சொல்லாமல் போனதில் வாடிய வதனத்துடன் நேயனும் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
சென்னை வந்து ஒரு மாதம் கடந்திருந்தது. இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு மாதத்திற்கு பின் இளவேனி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். அதுவும் நற்செய்தி என்றுரைத்து.
முகை உதிரும்...