வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போல வந்தவளை இமைகளை கூட இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பிரகாஷ் கண்ணா.
ரஞ்சனாவும் தோழியை பார்த்து மெய் மறக்க கீர்த்தியோ, மாயமித்ராவை பார்த்து, கோபம் கொண்டாள். மாயமித்ரா கீர்த்தியை பார்க்கவும் லேசான புன்னகையை உதிர்த்தாள்.
“என்னடி போன காரியம் என்ன ஆச்சு உன்னோட டைரி உனக்கு கிடைச்சிட்டா? “ என்று கேட்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பிரகாஷ் கண்ணாவையும் கீர்த்தியையும் பார்த்தாள் மாயமித்ரா.
மாயமித்ரா பார்வையின் போக்கை தொடர்ந்து அருகில் நின்ற பிரகாஷ் கண்ணாவையும் கீர்த்தியையும் ரஞ்சனா பார்க்க சலித்துக் கொண்டாள்.
“இவன் வேற, அவள முழுங்கற மாதிரி பார்த்து கிட்டு இருக்கான்!” என நினைத்துக் கொண்டு “சார்” என்று கூப்பிட சுய நினைவுக்கு வந்தான் பிரகாஷ் கண்ணா.
“சொல்லு ரஞ்சனா என்ன விஷயம்”
“நான் சொன்னேன்ல, எப்படியும் மித்ரா லேட்டா வரமாட்டா. நீங்க சொன்ன நேரத்துக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி ஆஜர் ஆயிடுவானு பார்த்தீங்களா? “என்று கேட்க, “போட்டா குடுக்குற கொடுக்குற!” எனும் விதமாய் ரஞ்சனாவை முறைத்து விட்டு,
“மித்ராவை பத்தி எனக்கு தெரியும்! உன்கிட்ட சும்மா கேட்டேன் ரஞ்சனா” என இளித்தான்.
மாயமித்ராவோ இவர்கள் இருவரும் தன்னை பற்றி ஏதோ பேசி இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
“ மித்ரா நான் ஒன்னும் சொல்லல, உன்னைய பத்தி எனக்கு தெரியாதா? நான் ரஞ்சனா கிட்ட விளையாட்டுக்கு கேட்டேன் அவ உன் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிக்கிட்டு இருக்கா!” என பிரகாஷ் கண்ணா சிரித்துக் கொண்டே கூறினான்.
இவர்கள் மூவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கீர்த்தி கோபப்பட்டு காயத்ரியை பார்க்க சென்றாள்.
“சரி சொல்லு, போன காரியம் என்ன ஆச்சு? டைரி கிடைச்சிட்டா!” என்று ரஞ்சனா மீண்டும் கேட்க, “அதை ஏண்டி கேக்குற?” என்று மாயமித்ராவின் முகம் சுருங்கியது.
“ஏண்டி முகத்தை இப்படி வைக்கிற, என்ன நடந்துச்சு?” என்று ரஞ்சனா கேட்க, பிரகாஷ் கண்ணாவின் அலைபேசி திடீரென்று ஒலித்தது.
பிரகாஷ் கண்ணா அதை எடுத்து யார் என்று பார்க்க அம்புஜம்பாட்டி தான் அழைத்திருந்தார்.
‘பாட்டி ஏன் திடீர்னு போன் பண்ணி இருக்காங்க, ஏதாவது அவசரமா இருக்குமோ?’ என்று மனதில் நினைத்துக் கொண்டு அங்கு நின்று கொண்டிருந்த மித்ராவிடமும் ரஞ்சனாவிடமும் “ஒரு நிமிஷம் கைய்ஸ், நீங்க பேசிக்கிட்டு இருங்க! நான் போயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு சற்று தொலைவு சென்று பேசத் தொடங்கினான்.
“சரி நீ சொல்லுடி என்ன நடந்துச்சு?” என்று ரஞ்சனா கேட்க,
“அவசர அவசரமா கிளம்பி ஜெயிலுக்கு போனேன். அங்க இருந்த ஜெயிலர் கிட்ட இங்கே ஏதாவது பொருள் கடந்துச்சா, நான் நேத்து வந்தப்ப தவற விட்டுவிட்டு போயிட்டேன்னு கேட்க, எனக்கு தெரியல மேடம்னு சொன்னாரு, அப்புறம் ஒரு நிமிஷம் நில்லுங்க யார்கிட்டயாவது கேட்டு சொல்றேன்னு சொல்லி சில காவலர்கள் கிட்ட கேட்டப்ப அவங்க, நேத்து நடந்த கலவரத்தில் கெடச்ச எல்லா பொருளையும் அசிஸ்டன்ட் கமிஷனர் அசோக் சார் கிட்ட தான் கொடுத்தோம்னு , நீங்க வேணும்னால் சார் கிட்ட கேட்டு பாருங்கள்னு சொல்லவும்
சாரை பார்க்கலாம்னு போனேன். ஆனால் சார் அங்க இல்ல, சரி அவருக்கு போன் பண்ணி என்னோட டைரி இங்கே கிடந்ததானு கேக்கலாம்னு பார்த்து அவருக்கு போன் பண்ணுனேன்.
அவரும் போன எடுத்தாரு,
“ஹலோ மித்ரா”
“சார்.. நேத்து நான் சிறைக்கு வந்தப்ப என்னோட டைரிய தவற விட்டுட்டேன். அது உங்ககிட்ட இருக்கா?” என மித்ரா கேட்க,
“மித்ரா, ஸ்பீக் ளவுட் ஐ கென்னாட் ஹியர் எனிதிங்!” என சொல்ல மீண்டும் கூறினாள் மித்ரா,
“சாரி டு சே திஸ் மித்ரா , நீங்க பேசுறது எதுவும் எனக்கு கேட்க மாட்டேங்குது, நான் விஐபி விசிட் பாதுகாப்புல இருக்கேன், இங்க சிக்னல் ஜாமர் இருக்கு, நான் உங்களுக்கு பின்னாடி போன் பண்றேன்னு சொல்லிட்டு போன வச்சுட்டாரு! கோயம்புத்தூர் போறதுக்கு நேரம் ஆகிட்டு. நீங்க எல்லாரும் எனக்காக காத்துகிட்டு இருப்பீங்கன்னு தோணவும் அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன்!” என்று வருத்தமாக கூறினாள் மாயமித்ரா
“சரி விடு டி, அங்கு உள்ள திங்ஸ் எல்லாம் ரெக்கவரி பண்ணி கமிஷனர் சார் கிட்டதான கொடுத்தன்னு அந்த போலீஸ்காரங்க சொன்னாங்கனு சொன்ன, கண்டிப்பா அசோக் சார் தான் உன்னுடைய டைரிய வாங்கி வச்சிருப்பாரு, நம்ம ஊருக்கு போயிட்டு வந்த உடனே அவர் கிட்ட வாங்கிக்கலாம்!” என சொல்ல, ம்! என தலையசைத்தாள் மித்ரா.
இங்கு அம்புஜம் பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தான் பிரகாஷ் கண்ணா,
“பாட்டி சொல்லுங்க, எதுக்கு கால் பண்ணி இருக்கீங்க?”
“ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச” என்று அம்புஜம் பாட்டி சொல்ல அமைதியாக இருந்தான் பிரகாஷ்.
“உன் அத்தை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு பிளைட்ல வந்துட்டு இருக்களாம் “ என அம்புஜம் சொல்ல அதிர்ச்சியான பிரகாஷ்
“இது எப்போ, ஏன் அவங்க வர்றத முன்கூட்டியே என்கிட்ட சொல்லல!”
“எனக்கே தெரியாது, இப்பதான் போன் பண்ணுனா! நான் இந்தியாவுக்கு வந்து கிட்டு இருக்கேன். ஒரு மாசம் அங்க தான் தங்க போறேன், இந்த ஒரு மாசத்துக்குள்ள ஜானுக்கும் பிரகாசுக்கும் கல்யாணத்தை முடிச்சுருவோம்னு சொல்றா?” என அம்புஜம் சொல்ல அதிர்ந்து போனான் பிரகாஷ் கண்ணா.
“பாட்டி, உங்களுக்கு என் மனசுல உள்ளது தெரியாதா? அத அத்தை கிட்ட சொல்ல வேண்டியது தானே!”என பிரகாஷ் சொல்ல
“இங்க பாரு, நீ கோயம்புத்தூரில் இருந்து வர்ற வர நான் அவளை சமாளிப்பேன். அதுக்குள்ள நீ உன் மனசுல உள்ளத மித்ரா கிட்ட சொல்லி அவளை கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வை. ஒருவேளை உன் மனசுல உள்ளதை சொல்லி அவ ஒத்துக்கலைனால் நீ ஜானுவ கல்யாணம் பண்ணி ஆகணும்! அப்புறம் மித்ராவை விட ஜானுவ தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நான் ஆசைப்படுறேன், ஆனால் மித்ராவை நீ விரும்புறதால உனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து இருக்கேன். ஒருவேளை நீ நினைச்சது நடக்கலைன்னால் அடுத்த நிமிஷம் நான் நெனச்சத நடத்துவேன்.அதை சொல்றதுக்கு தான் போன் பண்ணுனேன்! பார்த்து நடந்துக்க!” என சொல்லிவிட்டு அழைப்பை அணைத்து விட்டார் அம்புஜம்பாட்டி.
திடீரென்று பாட்டி இப்படி சொல்லவும் அதிர்ந்து போனான் பிரகாஷ் கண்ணா.
‘இதுக்கு மேல பாட்டிய சமாளிக்க முடியாது. இதுல அத்த வேற இந்தியாவுக்கு வராங்களாம், கட்டாயம் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு போறதுக்குள்ள மாயமித்ரா கிட்ட என் மனசுல உள்ளதை சொல்லி என் காதலியா தான் சென்னை கூட்டிட்டு போனாதான் பாட்டி எங்க கல்யாணத்தை நடத்தி வைப்பாங்க! நான் கொஞ்சம் சொதப்புனாலும் மித்ரா எனக்கு கிடைக்க மாட்டா ‘ அதனால இந்த ட்ரிப்பிலேயே என்னோட காதல அவகிட்ட சொல்லி அவளோட முடிவை தெரிஞ்சுகிட்டே ஆகணும் ‘ என நினைத்துக் கொண்டிருக்க
“சார் நேரம் ஆகிட்டு கிளம்புவோமா? “ என கேட்டார் மேனேஜர்.
“ம்! கிளம்பலாம் எல்லாரையும் வண்டில ஏறி உட்காரச் சொல்லுங்க” என சொல்லிவிட்டு மேனேஜரின் பின்னாடியே வந்தான் பிரகாஷ் கண்ணா.
பிரகாஷ் கண்ணா பக்கத்தில் நின்ற ரஞ்சனாவை பார்த்து கண்ணசைக்க அவளும் பதிலுக்கு கண்ணசைத்தாள். இவர்களுடைய விழி பாசையை பார்த்து விட்டாள் கீர்த்தி.
வண்டியில் ஏறி முன்னால் இரண்டு பேர் உட்காரும் சீட்டில் ரஞ்சனா உட்கார, அவளைப் பின் தொடர்ந்து மாயாவும் அதில் உட்கார எத்தனிக்க,
“சாரி மித்ரா, எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு! இந்த சீட்டில் நான் மட்டும் இருந்தால் கொஞ்சம் கைய கால நீட்டி உட்காரதற்கு வசதியா இருக்கும், நீ வேற சீட்ல உட்காறியா?” என்று கேட்க, ம்! என சொல்லிக்கொண்டு பக்கத்தில் இருந்த சீட்டைப் பார்த்தாள்.
அதில் காயத்ரியும் அவள் பக்கத்தில் கீர்த்தியும் அமர்ந்து கொண்டிருக்க, பிரகாஷ் கண்ணா அமர்ந்திருந்த சீட் மட்டுமே இருந்தது.மேனேஜர் டிரைவரோடு அமர்ந்து கொண்டார்.
வேறு வழி இல்லாமல் மாயமித்ராவும் பிரகாஷ் கண்ணா பக்கத்தில் உட்கார செல்ல, பிரகாஷ் கண்ணாவும் ரஞ்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
இதை பார்த்த கீர்த்தி ‘ஓ!இது தான் நீங்க போட்ட பிளானா? ‘என நினைத்துக் கொண்டு,
“மித்ரா, மேம் நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்! காயத்ரிக்கு டிராவல் பண்ணும் போது வாந்தி வரும். நீங்க அவ கூட உட்காந்தீங்கன்னால் அவளுக்கு கொஞ்சம் சப்போர்ட்டா இருக்கும்!”என கேட்க பிரகாஷ் கண்ணாவும் ரஞ்சனாவும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
மாயமித்ராவும் எதையும் யோசிக்காமல் சரி என்று சொல்ல, “ ஏன் நீ எங்க போற? நீ அவ பக்கத்துல உக்காந்தால், இன்னும் அவளுக்கு சப்போட்டா இருக்கும்ல!’ என்று ரஞ்சனா கேட்க,
“இல்ல மேம், எனக்கு இந்த சீட்டுல உட்கார்ந்தா முதுகு வலிக்கும். அப்புறம் அவளோட சேர்ந்து என்னையையும் நீங்க எல்லாரும் பாத்துக்க வேண்டியது இருக்கும், நான் முன்னால போய் உட்கார்றேன்!” என கீர்த்தி புன்னகைக்க சொல்ல எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாகினாள் ரஞ்சனா.
காயத்ரியின் பக்கத்தில் இருந்த கீர்த்தி எழ மாயமித்ரா காயத்திரியின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
முன்னே சென்ற கீர்த்தி பிரகாஷ் கண்ணாவின் பக்கத்தில், “ இந்த சீட் பெர்பெக்ட்டா இருக்கும், எனக்கு முதுகு வலி எல்லாம் வராது, அதனால சார் உங்க பக்கம் உட்காரலாமா? “ என கேட்க, வேறு வழியில்லாமல் உட்காருங்கள் கீர்த்தி என்று கூறினான் பிரகாஷ் கண்ணா.
பக்கத்தில் மாயமித்ராவை உட்கார செய்து தன் மனதில் உள்ளதை பிரகாஷ் உரைக்கலாம் என்று நினைக்க கீர்த்தியின் சூழ்ச்சியால் அது எதுவும் நடக்காமல் போய்விட்டது.
தன் திட்டம் நல்லபடியாக நடந்தேறிய சந்தோசத்தில் கீர்த்தி புன்னகையுடன் பிரகாஷ் கண்ணாவின் அருகில் அமர்ந்தாள்,
ஆனால் பிரகாஷ் கண்ணா அவ்வப்போது காயத்ரியின் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் மாயமித்ராவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘அவ தூரத்துல இருந்தா கூட இவரு அவளை தான் பார்த்துக்கிட்டு இருக்காரு அவ என்ன அப்படி என்ன விட அழகாவா இருக்கா? “ என்று முதல் முறையாக தன் அழகின் மீது சந்தேகம் கொண்டாள் கீர்த்தி.
‘சீச்சீ நான் எங்க? அவ எங்க?
இங்கிருந்து போறதுக்குள்ள பிரகாஷ் சார் மனசுல இடம் பிடிச்சு அவரோட காதலியாத்தான் போவேன் ‘என தன் மனதுக்குள்ளே சபதம் எடுத்தாள் கீர்த்தி.
அதன் முதல் படியாக பக்கத்தில் இருந்த பிரகாஷ் கண்ணாவிடம் பேச ஆரம்பிக்க, ‘இவளால தான் மாயமித்ரா என் பக்கத்துல உட்கார முடியாம போச்சு’ என நினைத்த பிரகாஷ் கண்ணாவோ அவளிடம் பேச விரும்பாமல்,
“சாரி கீர்த்தி, எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது! நம்ம பின்னாடி பேசுவோம்” என்று சொல்லிவிட்டு கண்களை மூடினான் பிரகாஷ் கண்ணா.
இவ்வளவு திட்டம் செய்தும் பிரகாஷ் கண்ணாவிடம் பேச முடியவில்லையே என்று ஆதங்கத்தில் வண்டியின் தரைத்தளத்தில் தன் கால்களை உதைத்து கோபத்தை வெளிப்படுத்தினாள்.
கோயம்புத்தூரில் என்ன நடக்கும்! பிரகாஷ் கண்ணாவின் எண்ணம் ஈடேறுமா? இல்லை கீர்த்தியின் எண்ணம் ஈடேறுமா? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
அப்படியே படித்துவிட்டு உங்களின் எண்ணங்களை விமர்சனங்களாக பதிவேற்றிச் செல்லுங்கள் வாசகப் பெருமக்களே..!