• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 18

Vishakini

Moderator
Staff member
“என்னாச்சு பிரகாஷ் நான் பேசிகிட்டு இருக்கேன் நீ சிரிச்சுக்கிட்டு
இருக்க?”என்று ரஞ்சனா கேட்க,


“இல்ல அங்க என்ன நடந்துச்சுன்னு தெரியாம நீயா எதையோ நினைச்சு உளறிக்கிட்டு இருக்கியே?அதை நெனச்சேன் சிரிச்சேன்” என்று கூறினான் பிரகாஷ்.

“அப்போ நான் நினைச்ச மாதிரி எதுவும் நடக்கலையா? நீங்க இரண்டு பேரும் ஹோட்டலுக்குள்ள வரும்போது உன் முகம் வாட்டமா இருந்துச்சு, அதான் மித்ரா கிட்ட உன் காதல நீ சொல்லி மித்ரா உன்னைய ரிஜெக்ட் பண்ணிட்டா போல, அதான் நீ வருத்தமா இருக்கேன்னு நெனச்சு உன்னை சமாதானப்படுத்த வந்தேன்!” என்று ரஞ்சனா சொல்ல,


“அப்படி எந்த சீனும் அங்க நடக்கல! எப்பவும் போல நான் காதலை சொல்ல போறேன்னு தெரிஞ்சிக்கிட்ட அவ, என்னைய அடுத்த வார்த்தை பேச விடாம பண்றதுக்கு என்ன பண்ணுவாளோ அதைத்தான் இந்த தடவையும் பண்ணினா?”என்று பிரகாஷ் கூறினான்.


“நீ சொல்றது புரியல! தெளிவா சொல்லு,உன் காதல மித்ரா கிட்ட சொன்னியா இல்லையா?”


“அதெல்லாம் எதுவும் சொல்லல?”

“அதான் ஏன்?” என்று ரஞ்சனா கேட்க,

“அவ எங்க சொல்ல விட்டா! நான் சொல்றதுக்கு முன்னாடி உங்க மேல நம்பிக்கை இருக்கு, எனக்கு பிடிக்காத எதையும் நீங்க சொல்ல மாட்டீங்க, செய்ய மாட்டிங்கன்னும் நம்புறேன்னு சொன்னாள்!” என்று பிரகாஷ் கண்ணா கூறினான்.


“அவ அப்படி சொன்னாலும் நீ உன்னோட காதலை சொல்லி இருக்க வேண்டியதுதானே! இந்த மாதிரி இன்னொரு சந்தர்ப்பம் உனக்கு கிடைக்குமா?” என்று ரஞ்சனா கேட்க,

“அது தெரியல! ஆனா மித்ரா வாயால இன்னைக்கு ஒரு வார்த்தை சொன்னா அவ கண்மூடித்தனமா நம்புற ஆளுகள்ல நானும் ஒருத்தன்னு , அவ சொன்ன இந்த வார்த்தையிலேயே என் மனசு நிறைஞ்சு போச்சு! அதுக்கு மேல அடுத்த வார்த்தை என்னால பேச முடியல,


நான் காதலை சொல்லி அவ சம்மதம் சொல்லி இருந்தா கூட எனக்கு இவ்வளவு சந்தோசம் கிடைச்சு இருக்குமானு தெரியல, ஆனா நான் உங்கள கண் மூடித்தனமா நம்புறேன்னு சொன்னப்ப நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? இப்ப கூட அதை நினைச்சு பார்த்தா என் உடம்பெல்லாம் புல்லரிக்குது “ என்று சொல்லி தன் கையை காட்டினான் பிரகாஷ் கண்ணா.


“நீ என்ன சொன்னாலும் எனக்கு நம்பிக்கை வரல, மித்ரா உன்ன காதலிக்கிறான்னு எனக்கு தோணல.”என்று ரஞ்சனா சொல்ல,
சிரித்தான் பிரகாஷ்.

“இவ்வளவு நாளும் அவ என்னைய காதலிக்கிறான்னு தப்பா புரிஞ்சுகிட்டோமோனு ஒரு சின்ன சந்தேகம் இருந்துச்சு, ஆனால் இன்னைக்கு கன்பார்ம் காதலிக்கிறான்னு தெரிஞ்சு போச்சு!” என்று பிரகாஷ் சொல்ல

“எத வச்சு இவ்வளவு உறுதியா சொல்ற?” என்று கேட்டாள் ரஞ்சனா.

“ஒருத்தங்க மேல நம்பிக்கை வைக்குறது சாதாரண விஷயம் கிடையாது ரஞ்சனா. அதுவும் மித்ராவ பத்தி உனக்கே தெரியும். சாதாரணமா கூட யாருகிட்டயும் பேசமாட்டா! யாராயிருந்தாலும் ஓரடி தூரம் வச்சுதான் பழகுவா, அப்படி ஒரு ஆளு உங்க மேல கண்மூடித்தனமான நம்பிக்கை வச்சிருக்கேன்னு சொல்றானா என்ன அர்த்தம்? அவ மனசுல ஒரு முக்கியமான இடத்தை நான் புடிச்சிருக்கேன்னு அர்த்தம்!” என்று கூறினான்.


“சரி நீ சொல்ற மாதிரியே வச்சுப்போம்! நீ சொல்ற இடம் காதலா இருக்கணும்னு அவசியம் இல்ல நட்பா கூட இருக்கலாம்! அதைத்தான் உன்கிட்ட சொல்ல முயற்சி பண்ணி இருக்கான்னு நினைக்கிறேன்!” என்று ரஞ்சனா சொல்ல, புன்னகைத்தான் பிரகாஷ் கண்ணா.

“நான் சொன்னா புரியாது?
நாளைக்கு சைட்டுக்கு வா. அங்க வச்சு அவ மனசுல எனக்கான இடம் நட்பா காதலான்னு நான் நிரூபிக்கிறேன்!”

“ எப்படி நிரூபிக்க போற? “


“அத இங்கேயே சொன்னால் சுவாரசியம் இருக்காது! நாளைக்கு சைட்டுக்கு வந்து நீயே கண்ணால பார்த்து தெரிஞ்சுக்க!” எனக் கூறினான் பிரகாஷ் கண்ணா.


ரஞ்சனா பிரகாஷ் கூறியதை கேட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.

“நீ என்ன என்னமோ சொல்ற? எனக்கு ஒன்னும் புரியல! ஆனால் நீ நெனச்சது நடந்தால் சந்தோசம் தான்!” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

பிரகாஷ் கண்ணாவும் நாளைக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க துவங்கினான்


பிரகாஷ் கண்ணாவின் அறையில் இருந்து வெளியேறி ரெஸ்டாரன்ட் செல்ல அங்கு மாயமித்ரா அவளுக்காக காத்திருந்தாள்.


“எங்க போன ரஞ்சனா உனக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்று மித்ரா கேட்க,

“ஒன்னும் இல்ல பிரகாஷ் சார் கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருந்துச்சு அதான் பேசிட்டு வரேன்” என்று ரஞ்சனா கூறினார்.

“சரி உட்காரு! காபி ஆர்டர் பண்ணி இருக்கேன், கொஞ்ச நேரத்துல வந்துரும் “ என்று மித்ரா சொல்ல, ரஞ்சனாவும் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“சரி சொல்லு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் எப்படி இருந்துச்சு? “

“சூப்பரா இருந்துச்சு! கோயம்புத்தூர்லயே ரொம்ப ஃபேமஸான கோயில், செம கூட்டம்! எப்படியோ சாமிய தரிசனம் பண்ணிட்டு வந்தாச்சு, என்ன ஒரு குறை நீயும் வந்து இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்!” என்று மித்ரா சொல்ல,

“ம்! எனக்கும் ஆசைதான், ஆனா என்ன பண்றது டிராவல் பண்ணிட்டு வந்தது உடம்பு ரொம்ப டயர்டா ஆயிருச்சு! அதான் வரல!” என ரஞ்சனா வருத்தமாக கூறினாள்.

“சரி விடு வருத்தப்படாத! நம்ம இன்னும் கோயம்புத்தூர்ல தான் இருக்கோம். நாளைக்கு சைட்ல வேலை சீக்கிரம் முடிஞ்சால் ரெண்டு பேரும் போயிட்டு வருவோம்!” என்று மாயமித்ரா கூறினாள்.


‘ரெண்டு வருஷமா பிரகாஷ் மாயமித்ரா பின்னாடி சுத்துறான்னு மித்ராவுக்கு தெரியும்! பிரகாஷ் மேல விருப்பம் இல்லாம இருந்தா இந்நேரம் எல்லாத்துக்கும் ஃபுல் ஸ்டாப் வச்சிருக்கலாம். ஆனா இவ ஏன் இதுவரை அப்படி எதுவும் பண்ணல. ஒருவேளை பிரகாஷ் சொல்ற மாதிரி மித்ராவுக்கும் பிரகாஷ் மேல காதல் இருக்குமோ? ஒருவேளை மித்ராவுக்கு பிரகாஷ் மேல காதல் இருந்தா அதை நாம் எப்படி தெரிஞ்சுகிறது’ என்று ரஞ்சனாவின் மனதில் கேள்வி எழும்பியது. தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நினைத்து மாயமித்ராவிடம் பேச தொடங்கினார்.


“மித்ரா, நீ பிரகாஷ் சார் பத்தி என்ன நினைக்கிற?”


“ பிரகாஷ் சார், திறமையானவங்க, நம்ம அவங்க கிட்ட கத்துக்கிற வேண்டியது நிறைய இருக்கு!” என்று மாயமித்ரா கூறினாள்.


“நான் அந்த மாதிரி கேட்கல, இப்ப சாருக்கு நம்ம சொந்தத்துல பொண்ணு கட்டி குடுக்குறோம்னு வச்சுக்க! இப்ப சொல்லு?”


“அவரை நம்பி கட்டாயம் பொண்ணு கொடுக்கலாம்.அவரை கட்டிக்க போற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்! ஏன் இன்னும் சொல்லப்போனால் அவருக்கு பொண்ணு கட்டிக் கொடுக்கப் போற குடும்பமே கொடுத்து வச்சிருக்கணும்!”என்று மாயமித்ரா கூறினாள்.

மித்ரா சொல்லும்போது அவளின் முகத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனா.

“ஏன் திடீர்னு கேக்குற? நீயும் சாரும் ஃபேமிலி பிரண்ட்ஸ் தானே! உங்க ஃபேமிலில யாராவது சாருக்கு பொண்ணு கொடுக்கணும்னு ஆசைப்படறாங்களா?” என்று மாய மித்ரா கேட்க,

“ பிரகாஷ்க்கு பொண்ணு கொடுக்குறதுக்கு எல்லாரும் ஆசைப்படறாங்க தான். ஏன் எங்க வீட்டிலேயே என்னைய பிரகாசுக்கு கட்டி கொடுக்கணும்னு எங்க அம்மாவும் அப்பாவும் பிரயாசப்படுறாங்க!” என ரஞ்சனா சிரிக்க மித்ராவின் முகம் வாடியது. அதை பார்த்த ரஞ்சனா,

“ஆனால், எங்க ரெண்டு பேரை பத்தி தான் உனக்கு தெரியுமே! சின்ன வயசுல இருந்தே நாங்க பெஸ்ட் பிரெண்ட்ஸ், எங்களுக்குள்ள அப்படி ஒரு எண்ணம் வந்ததே கிடையாது! இனிமேலும் அப்படி ஒரு எண்ணம் வரப்போவதும் கிடையாது!” என்று ரஞ்சனா சொல்ல மித்ராவின் முகம் இலகுவாயிருந்தது.

மேலும், மித்ராவின் மனநிலையை இன்னும் ஆராய எண்ணி,


“சார் வீட்ல சாருக்கு கல்யாணம் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காங்க! அதனாலதான் அவரப் பத்தி என்ன நினைக்கிறன்னு கேட்டேன்!”என்று ரஞ்சனா சொல்ல அதிர்ச்சியில் விழியை அகல விரித்தாள் மாயமித்ரா.

ரஞ்சனா மாயமித்ராவின் முகத்தை பார்க்க, தன் அதிர்ச்சியை காட்டாதவாறு “ உனக்கு யார் சொன்னா? “ என்று கேட்டாள் மாயமித்ரா.


“சார் தான் சொன்னாரு?” என்று ரஞ்சனா சொல்ல,

ம்! என்று சொல்லிவிட்டு எழுந்தாள்.


“என்னாச்சு எங்க போற?” என ரஞ்சனா கேட்க


“எனக்குத் தலை வலிக்கிற மாதிரி இருக்கு!” எனக் கூறினாள் மித்ரா.


“தலை வலிக்கிற மாதிரி இருந்தால் காபி குடி, வலி குறையும்!” என்று ரஞ்சனா கூற,


“காபி குடிச்சா வாந்தி வந்துருமோனு பயமா இருக்கு? நீ காபிய குடிச்சிட்டு வா!நான் போறேன்!” என்று சொல்லிவிட்டு அங்கு நிற்காமல் தன் அறைக்கு அவசர அவசரமாக சென்றாள் மாயமித்ரா.


மாயமித்ராவின் இச்செயலில் மித்ராவின் மேல் சந்தேகம் வலுத்தது ரஞ்சனாவிற்கு...!


மித்ரா நடந்துக்கிறத பார்த்தால் மித்ராவுக்கும் பிரகாஷ் கண்ணா மேல காதல் இருக்குற மாதிரி தான் தெரியுது! ஆனால் ஏன் அவ அத ஒத்துக்க மாட்டேங்குறா? ‘ என யோசிக்க தொடங்கினாள் ரஞ்சனா.

தன் அறைக்கு வந்த மாயமித்ரா, கதவை பூட்டிவிட்டு கதறி அழுக ஆரம்பித்தாள்.


இனி என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் பதில் உரை சொல்லடி பகல் நிலவே!
 
Top Bottom