ரஞ்சனாவிடம் பேசி விட்டு வந்த மித்ரா கதவை பூட்டிவிட்டு கதறி அழுக தொடங்கினாள். இவ்வளவு நாள் இறுக்கமாக இருந்தவள் இன்று முதல் முறையாக தன் இறுக்கத்தை தளர்த்தி கதறி அழுதாள்.
திடீரென்று கதவை தட்டும் சத்தம் கேட்டதும் வேகமாக வாஸ்ரூமிற்குச் சென்று, முகத்தை கழுவி விட்டு கதவை திறக்க ரஞ்சனா நின்று கொண்டிருந்தாள்.
ரஞ்சனாவை பார்க்கவும், மெதுவாக சிரித்து விட்டு மெத்தையில் போய் படுத்து விட்டாள்.
கதவை திறந்ததுமே மித்ராவின் முகத்தை பார்த்த ரஞ்சனாவிற்கு
மித்ரா எவ்வளவு வருத்தத்தில் இருக்கிறாள் என்பதை அவளுடைய சிவந்த கண்களே காட்டிக் கொடுத்திருந்தது.
‘ மித்ராவிடம் வெளிப்படையாக பிரகாசை காதலிக்கிறாயா? என்று கேட்போமா வேண்டாமா என்று அவள் மனம் போராட்டம் நிகழ்த்தியது.
ஒருவேளை மித்ராவிடம் தான் கேட்டாலும் கண்டிப்பாக அவள் வாயிலிருந்து உண்மையை வர வைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ரஞ்சனா,
மித்ரா, நீ பிரகாச காதலிக்கிறேன்னு எனக்கு சந்தேகமா இருக்கு! நீ உன் மனச எவ்வளவுதான் மறைச்சு அடக்கி வச்சிருந்தாலும் உன் வாயாலயே பிரகாச நீ காதலிக்கிறேனு நான் சொல்ல வைக்கிறேன்’ என தனக்குள்ளேயே சபதம் எடுத்துக் கொண்டாள்.
சிறிது நேரம் மித்ராவையே பார்த்துக் கொண்டிருந்தவள், எதுவும் சொல்லாமல் அப்படியே அமைதியாக அவளும் படுத்து கொண்டாள்.
இரவு இதமாய் முடிந்து காலை நேர சூரியன் மெல்ல பூமியை வருடிக் கொண்டிருந்தான்.
அனைவரும் சீக்கிரம் எழுந்து முதல் நாள் சைட்டுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக கிளம்பி கொண்டிருந்தனர்.
மித்ரா, ரஞ்சனா, கீர்த்தி, காயத்ரி என நால்வரும் வண்டியில் ஏறி சில நிமிட பயணங்களுக்கு பிறகு சைட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
பல ஏக்கர் பரப்பளவில் விரிந்திருந்த அந்த காலி இடத்தை நால்வரும் பார்த்துக் கொண்டிருக்க
கருப்பு நிற எஸ்யூவி கார் ஒன்று சைட்டிற்குள் நுழைந்தது. அதிலிருந்து முதலில் மேனேஜர் இறங்க இரண்டாவது பிரகாஷ் கண்ணா இறங்கினான்.
காற்று சில்லென்று வீச, சுற்றிலும் அளவீட்டு கம்பிகளும், மார்க்கிங் கயிறுகளும், சில இயந்திரங்களும் கட்டுமான பணியாளர்களால் கொண்டுவரப்பட்டது.
“இந்த காலி இடம் இன்னும் கொஞ்ச நாள்ல பிகே கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியோட கைவண்ணத்தில், என்னோட டிசைன்ல பெரிய பில்டிங்கா நிக்கப் போகுதுன்னு நினைச்சாலே செம ஃபீலிங்கா இருக்கு.” என்றாள் கீர்த்தி. முதல் முறையாக கன்ஸ்டிரக்ஷன் சைட்டில் வேலை செய்வதால் கீர்த்திக்கு இவ்வளவு மகிழ்ச்சி என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர்.
எப்போதும் சாதாரணமாக இருக்கும் மித்ராவின் முகம் இன்று ஏனோ வாட்டமாக இருந்தது. ஊழியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கடமைக்கு என பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் மித்ரா.
மித்ராவின் வருத்தம் ரஞ்சனாவிற்கு புரிந்தாலும், மித்ராவின் மேல் ஒருவித கோபம் வந்தது ரஞ்சனாவிற்கு...!
மனசுல உள்ள காதல வெளிப்படையா சொல்றதுல இவளுக்கு என்ன தயக்கம், எதுவும் சொல்லாம அவளையும் வருத்திகிட்டு, சுத்தி இருக்கிற எல்லாரையும் வருத்தப்பட வைக்கிறா? என நினைத்துக் கொண்டாள் ரஞ்சனா.
அந்த இடத்தை அளந்து அஸ்திவாரம் போடுவதற்காக அங்கிருந்த ஊழியர்கள் சிரத்தையுடன் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
“இந்த இடத்தில் வழக்கமா போடுற அளவ விட இன்னும் கொஞ்சம் ஆழமா அஸ்திவாரம் போடணும்!” என பிரகாஷ், இன்ஜினியரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
மாயமித்ராவோ, கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது ஒரு பெண் ஆர்கிடெக்ட் அங்கு வந்தாள்.
“குட் ஆப்டர்னூன் பிரகாஷ்”
“குட் ஆப்டர்னூன், சந்தியா?”
“சார், நேத்து அனுப்புன டிசைன் பார்த்தீங்களா?”
“பாத்தேன். நல்லா இருக்கு. ஆனாலும் சிலதை ஆல்டர் பண்ண வேண்டியது இருக்கு” என்று பிரகாஷ் சொல்லிக் கொண்டிருந்தான்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை தூரத்திலிருந்து பார்த்த மாயமித்ராவின் விரல்கள் அவள் வைத்திருந்த டாக்குமெண்டை அழுத்தி பிடித்திருந்தது. ஆனாலும் அவள் முகம் எவ்வித உணர்வுகளையும் வெளி காட்டவில்லை.
எப்போதும் மித்ராவிடம் ஏதாவது கேட்டுக்கொண்டு அவளை பார்த்து ரசித்து கொண்டிருப்பவன் இன்று ஏனோ அவளை திரும்பி கூட பார்க்காமல் அவன் வேலையில் சிரத்தையாய் இருந்தது போல் மித்ராவின் கண்களுக்கு தெரிந்தது.
அவ்வபோது பிரகாஷ் கண்ணா யாரிடம் பேசுகிறான் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டே இருந்தாள் மித்ரா.
மித்ரா தன்னை இன்று வெகு நேரமாக வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு கொண்ட பிரகாஷ் மெல்லமாய் புன்னகைத்து விட்டு அவள் பக்கம் திரும்பி
“மித்ரா டாக்குமெண்டை எல்லாம் சரி பாத்துட்டீங்களா?”
“பாத்துட்டேன் சார்! அப்போ ஒன்னு பண்ணுங்க, புதுசா வந்திருக்காங்கல்ல சந்தியா அவங்க கிட்ட இந்த டாக்குமெண்ட்டை எல்லாம் ஒரு முறை காட்டிருங்க!” என பிரகாஷ் சொல்லிக் கொண்டிருக்க, அதே நேரத்தில் சந்தியாவும் அங்கு வந்திருந்தாள்.
“வா சந்தியா உன்ன பத்தி தான் பேசிகிட்டு இருந்தேன் “
“என்னைய பத்தியா? “ என்று சந்தியா சிரித்துக் கொண்டே கேட்க,
“ஆமா சந்தியா இந்த டாக்குமெண்டை எல்லாம் ஒரு தடவை பார்த்துரு !” என்று பிரகாஷ் கூற ஒன்றும் புரியாமல் பார்த்தாள் மித்ரா.
“சாரி மித்ரா, இவங்க யாருனு உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன், இவங்க பேரு சந்தியா, என்னோட சொந்தக்கார பொண்ணு.புதுசா நம்ம கம்பெனில ஆர்க்கிடெக்ட்டா
ஜாயின் பண்ணி இருக்காங்க!” என்று பிரகாஷ் சொல்ல, லேசாக புன்னகைத்தாள் மாயமித்ரா.
“ உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோசம் மாயமித்ரா!” என்ற சந்தியா சொல்ல அவளை அதிர்ந்து பார்த்தாள் மித்ரா.
“ உங்க பேரு எப்படி தெரியும் தானே பாக்குறீங்க? நான் பிரகாஷ் ரஞ்சனா மூணு பேரும் ஃபேமிலி பிரண்ட்ஸ். பள்ளிக்கூடத்தில் இருந்து காலேஜ் வர மூணு பேரும் ஒண்ணா தான் படிச்சோம்! கொஞ்ச நாள் ஹையர் ஸ்டடிஸ்காக ஃபாரின் போயிருந்தேன். இப்பதான் இந்தியா வந்தேன். இப்ப புதுசா பிரகாஷ் ஒரு கவர்மெண்ட் ப்ராஜெக்ட் பண்றான்னு சொன்னான், வீட்ல சும்மா இருக்கிறது போர் அடிச்சுச்சு, சரி கொஞ்ச நாள் நம்மளும் வேலை பார்க்கலாம். பிரண்ட்ஸ்களோட ஒன்னா இருந்த மாதிரியும் ஆச்சு வேலை பார்த்த மாறியும் ஆச்சுன்னு வந்துட்டேன்!” என்று கூறினாள் சந்தியா.
‘ரஞ்சனா நேத்து பிரகாஷுக்கு கல்யாணம் பண்ண போறதா சொன்னாளே? ஒருவேளை அவருக்கு பார்த்து இருக்கிற பொண்ணா இருக்குமோ? ஃபேமிலி பிரண்ட்னு வேற சொல்றாங்க.இவங்க ரெண்டு பேரும் பேசுறத பாத்தால் ஃப்ரெண்ட் மாதிரி இல்லயே ! என்று தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன மித்ரா நான் பேசிகிட்டு இருக்கேன். நீங்க எதையோ யோசிச்சிட்டு இருக்கீங்க.ரொம்ப பேசுறேனோ? சாரி மித்ரா அப்படியே பேசி பழகிருச்சு! நீங்க அதிகம் பேச மாட்டீங்கன்னு பிரகாசும் ரஞ்சனாவும் என்கிட்ட சொல்லி இருக்காங்க. இனிமேல் உங்க கிட்ட பேசும் போது மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கிறேன்!” என்று சிரிக்க,
“அப்படி எல்லாம் இருக்க வேண்டாம். நீங்க என்கிட்டயும் எப்பவும் போல பேசுங்க” என்று கூறினாள் மாயமித்ரா.
ம்! சரி மித்ரா, என்று சொல்லிவிட்டு சந்தியா பிரகாஷிடம் பேச தொடங்கினாள்.
அவர்கள் இருவரும் அவர்கள் நண்பர் கூட்டத்தையும் பழைய நிகழ்வுகளையும் பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
பிரகாஷ் சிரித்து பேசிக் கொண்டிருக்க இப்படி எல்லாம் பிரகாஷ் பேசுவானா என்று ஒரு முறை அவள் கண்கள் வியப்பில் ஆழ்ந்து போனது.
“ஆம் கள்ளம் கபடம் இல்லாமல் கலகலவென்று பேசும் பிரகாஷ், மாயமித்ராவை சந்தித்ததில் இருந்து அவளைப் போலவே அளவாக பேசிக் கொண்டிருக்கிறான். ஆனால் இன்று தன்னுடைய பழைய கால சிநேகிதியை பார்க்கவும் அவன் மனதில் உள்ள அனைத்தும் வெளியே வந்தது.
சந்தியாவும் பிரகாசும் பேசி சிரித்து கொண்டிருக்கும்போது மித்ராவின் முகம் இறுகியது.
இருவரும் அவள் ஒரு பொருட்டே இல்லை என்பது போல் பேசி சிரித்து கொண்டிருக்க அவள் அந்த இடத்திற்கு பொருத்தமில்லாமல் இருப்பது போல் தோன்ற அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து சற்று விலகி நின்றாள் மாயமித்ரா.
ஆனால் மித்ரா விலகி நின்றாலும் அவளுடைய பார்வை அவ்வப்போது இருவரையும் தொட்டு மீண்டும் கொண்டே இருந்தது.
இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தாள் ரஞ்சனா.
“சரி பிரகாஷ்! நீ சொன்ன மாதிரி நானும் பேசிட்டேன். ஆனா உன் ஆள் முகத்தை பார்க்கணுமே அப்படியே வாடி போயிருச்சு! பாவம் புள்ள இன்னும் கொஞ்ச நேரம் பேசினா அழுதுரும் போல! இன்னைக்கு இது போதும்னு நினைக்கிறேன் நாளைக்கு வந்து பெர்ஃபார்மன்ஸ் பண்றேன்!” என்று சொல்ல,
“ தேங்க்ஸ் சந்தியா! எனக்காக இவ்வளவு தூரம் வந்ததுக்கு!”
“ என்னடா தேங்க்ஸ் எல்லாம் சொல்ற? நான் உன் காதலுக்கு ஹெல்ப் பண்ணா நீ என் காதலுக்கு ஹெல்ப் பண்ண மாட்டியா! எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி தானே!” என்று கண்ணடித்தாள் சந்தியா.
“ அது சரி, அப்ப பெரிய திட்டத்தோட தான் நான் கேட்கவும் யோசிக்காம சரின்னு சொல்லி இருக்க!” என்று பிரகாஷ் கேட்க,
“அப்படிலாம் எந்த திட்டமும் இல்லை நமக்கெல்லாம் லவ் மேரேஜ் ஒத்துக்குறாது! நமக்கு அரேஞ்ச் மேரேஜ் தான். ரஞ்சனா ஏற்கனவே உனக்கும் மித்ராவுக்கும் இடையில என்ன நடக்குதுன்னு என்கிட்ட சொல்லியிருக்கா? அவளும் ஒத்துக்கிற மாதிரி தெரியல.இவனும் விட்டு விலகுற மாதிரி தெரியல! மித்ராவாள பிரகாஷ் கஷ்டப்பட்டாலும் பிரகாசால மித்ரா கஷ்டப்பட்டாலும் வருத்தம் எனக்குன்னு ரொம்ப வருத்தப்பட்டு சொன்னா, அப்போ ஒன்னு பண்ணுவோம் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறதுக்கு ஏதாவது பண்ணுவோமான்னு கேட்டேன்! அப்போ அதெல்லாம் வேண்டாம். அவங்களோட காதல அவங்கதான் பாத்துக்கணும்னு சொல்லிட்டா? இப்ப நீ எல்லாத்தையும் சொல்லி உதவி கேட்கவும் உடனே வந்துட்டேன்!” என்று கூறினாள் சந்தியா.
ம்! என்று பிரகாஷ் சொல்ல “சரி நான் போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு பிரகாஷை ஹக் செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் சந்தியா.
இவ்வளவு நேரம் அமைதியாக அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார் மித்ரா இருவரும் கட்டிப் பிடிக்கவும் அந்த இடத்தை விட்டு கண்கலங்கி கொண்டு வேகமாக சென்று விட்டாள்.
போகும்போது கூட அங்கிருந்த காயத்ரியிடம் “எனக்கு தலைவலிக்கு சார் கிட்ட சொல்லிருங்க ஹோட்டலுக்கு போறேன்னு!” என்று கடமை தவறாமல் சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாயமித்ரா சென்று விட்டாள்.
முதல் முறையாக அவள் வேலைக்கு வந்த இரண்டு வருடங்களில் இன்று அவள் வேலையை பார்க்காமல் போவது ரஞ்சனாவிற்கு உறுத்தியது.
ரஞ்சனா அதை யோசித்துக் கொண்டிருக்க,” இப்ப புரியுதா ரஞ்சு, மித்ரா மனசுல இருக்கிற எனக்கான இடம் நட்பா காதலானு? “ என்ற கேட்க என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்தாள் ரஞ்சனா.
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று உங்களுடைய விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் தந்து விட்டு செல்லுங்கள் வாசகப் பெருமக்களே!