மழை - 20
கீதாவும், வள்ளியும் சேர்ந்து அவர்களுக்கு ஆரத்தி சுற்றவும். சிலையென நின்றவருக்கு அப்பொழுது தான் சுயம் வந்தது.
'இதெல்லாம் எப்படி சாத்தியம்' என்று ஒன்றும் விளங்காமல் நின்றுவருக்கு எப்படியோ நடந்தது உண்மை தானே, என்ன காரணமாக இருந்தாலும் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
கோபம், ஆத்திரம் என பத்ரகாளியாகவே மாறிவிட்டார். கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. அதிலும், தன் பேத்திக்காக என ஆசையாக பார்த்த பேரன், இப்பொழுது அவளின் பேத்தியின் அருகில் அதுவே அவரின் நெஞ்சை அறுத்தது.
ஆரத்தி சுற்றி முடியவும், "வலது கால வச்சு ரெண்டு பேரும் உள்ள வாங்க" என்று கீதா உரைத்தது தான் தாமதம்.
"அடியாத்தே! இது எங்கிட்டு அடுக்கும்! இங்கன என்ன நடக்குது? இவ பாட்டி கொல்லப்புறத்தால எங்குடும்பத்துக்குள்ள வந்தா, நீங்க எல்லாருமா ஒன்னா சேர்ந்து மகாராணிக்கு ஆரத்தி எடுத்து வாசல் வழியா உள்ள விடுறீயளோ" என்று உச்ச ஸ்வரத்தில் கத்தினார்.
அவரின் திடீர் கத்தலில் ஒரு நொடி திடுக்கிட்ட செந்நிலாவிற்கு அடுத்து அவர் கூறிய வார்த்தைகளில் அங்கு நிற்க கூட முடியாமல் பாதங்கள் கூசியது.
இதற்காக தானே இந்த குடும்பத்திடமிருந்து அவள் எவ்வளவு விலகி நிற்க முடியுமோ அத்தனை தூரம் விலகி நிற்க முயன்றாள்.
இவரின் விஷம் தடவிய வார்த்தைகளை கேட்க முடியாமல் தானே எத்தனை இன்னல்கள் வந்தாலும், இவர்களிடம் உதவி என்று வந்து நின்று விடக்கூடாது என்ற வைராக்கியத்தோடு இத்தனை வருடங்கள் வாழ்ந்தாள்.
இப்படி அனைத்தும் வேண்டாம் என்று நினைத்து மீண்டும் இவர்களின் வீட்டின் வாயிலில் வந்து நிற்கும்படி ஆகிவிட்டதே என்று கூனிக்குறுகிப் போய்விட்டாள்.
அவருக்கு சற்றும் சளைத்தவன் நான் இல்லை என்பது போல், "அம்மா என்ன பேசுறீங்க நீங்க பார்த்து பேசுங்க!" என்று அதட்டலாக கூறினார் தேவராஜ்.
இதுவரை தான் என்ன பேசினாலும் தன்னை எதிர்த்துப் பேசாத தன் மகனே இப்படி அனைவரின் முன்னிலையிலும் அதட்டிப் பேச, இது மற்றொரு அதிர்ச்சியாகிப் போனது பாட்டிக்கு.
வேகமாக தன் தாயின் அருகில் விரைந்த காமராஜ், "அம்மா எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம். வாசல்ல நிக்க வச்சு பேசுனா அக்கம் பக்கத்துல இருக்கவங்க எல்லாம் வேடிக்கைப் பார்ப்பாங்க. உள்ள வாங்கம்மா" என்று அழுத்தமாக நின்றிருந்தவரின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.
ஏனோ, செந்நிலாவிற்கு இந்த சூழல் சற்றும் பிடிக்கவில்லை. தான் இங்கே ஒன்றிப் போக முடியும் என்றும் தோன்றவில்லை. இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான். ஆனாலும், அதனை கடக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது.
யாரின் முன்பு கௌரவமாக தன்மானத்தோடு வாழ்ந்து காட்ட வேண்டும் என்று எண்ணினாளோ, இப்பொழுது அவரின் முன்பே தலை குனிந்து நிற்கும்படி ஆகிவிட்டதே என்று உள்ளுக்குள் நொந்து போய் நின்றிருந்தவளுக்கு ஆற்றாமையில் கண்கள் கூட கலங்கிப் போயிருந்தது.
மணவறை வரை வந்து திருமணம் நின்றபொழுது கூட அவளை இப்படி கலங்கிப் போய் பார்த்திடாத பொற்செல்வனுக்கு அவளின் நிலை நன்கு புரிந்தது.
அவளின் விரல்களோடு தன் விரல்களை அழுத்தமாக கோர்த்தான். அதில், சுயம் பெற்றவள் அவனைத் திரும்பிப் பார்க்கவும்.
தன் கண்களை மூடி திறந்தவன் அவளுடன் சேர்ந்தே வீட்டிற்குள் நுழைந்தான். அவளுக்கு தெரிந்து இப்பொழுதுதான் முதல் முறை இவர்களின் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கிறாள்.
நடக்காது என்று எண்ணியவை எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், எதுவும் கூற முடியாமல் செயலற்று நிற்கிறாள்.
"இவ பாட்டியோட வளர்ப்புல வளர்ந்தவ தானே இவ.. பின்ன, இவ மட்டும் வேற எப்பிடி இருப்பாளாம்? அதேன் எப்பிடி ஆம்பளைங்கள கைக்குள்ள போட்டுகிறதுன்ற வித்தைய நல்லா கத்து வச்சிருக்கா" என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் அவளை சாடினார் காமாட்சி.
"அம்மா நீங்க நிலாவ உள்ள கூட்டிட்டு போங்க" என்று செந்நிலாவை அவரோடு அனுப்பி வைத்த பொற்செல்வன்.
"அப்பத்தா என்ன பேசுறீங்க நீங்க?" என்றான் தன் பாட்டியைப் பார்த்து சீற்றமாக.
அறைக்குள் நுழையப்போன நிலாவின் செவிகளை அடைத்திருந்தது பொற்செல்வனின் வார்த்தைகள்.
"என்ன, இப்ப நான் என்னத்த பேசிப்போட்டேன். புது பொண்டாட்டி மோகம் கண்ண மறைக்குதோ.. கொஞ்ச நாளு அப்பிடிதேன் இருக்கும். அப்பிடித்தேனே மயக்கி வச்சிருக்கா அவ உன்னய. என்னையே எதிர்த்து பேசுற அளவுக்கு ஆகிட்டியா நீ" என்று ஆத்திரத்தோடு கூறினார்.
"இங்க பாருங்க அப்பத்தா, இதுவரைக்கும் நீங்க அவள பத்தியும், அவ குடும்பத்த பத்தியும் என்ன வேணும்னாலும் பேசி இருந்திருக்கலாம். ஆனா, இனி ஒரு வார்த்தையும் அவள பத்தி தப்பா பேசக்கூடாது. அவ என்னை நம்பி இந்த வீட்டுக்கு வந்திருக்கா. நான் எப்போ அவ கழுத்துல தாலி கட்டினேனோ, அப்போலருத்து எனக்கு இந்த வீட்ல இருக்க எல்லா உரிமையும் அவளுக்கும் இருக்கு".
"ரோட்ல போற கண்டதையும் கொண்டாந்து வீட்டுக்குள்ள விட்டுட்டு உரிமை இருக்குன்னு வேற சொல்லுதியா நீயி.. இது எம்புருசன் சம்பாத்தியத்துல கட்டுன வீடு. கண்டவளுங்கள எல்லாம் இந்த வீட்டுக்குள்ள அனுமதிக்க முடியாது. முதல்ல ஆரக் கேட்டு அவள நீ கல்யாணம் செஞ்ச? நம்ம குடும்பத்துடைய மரியாதை என்ன, கௌரவம் என்ன, போயும் போயும் உனக்கு கல்யாணம் கட்டிக்க இவதேனா கிடைச்சா?" என்று முகத்தை அருவருப்பாக வைத்துக் கொண்டு கேட்டவரின் முகபாவனையில் அனைவருக்குமே கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"இப்படி ஒரு மரியாதையான குடும்பத்தில் பிறந்த உங்க பேத்தி இந்திராவை விட, எந்தவிதத்திலும் என் பொண்டாட்டி குறைஞ்சிடல. ஒழுக்கத்துல உங்க பேத்திய விட பல மடங்கு கௌரவமா வாழ்ந்துகிட்டு இருக்கா" என்று திருப்பி அவருக்கு சூடாக கொடுத்தவன்.
"அப்புறம் என்ன சொன்னீங்க, உங்க புருஷன் சம்பாத்தியத்துல கட்டுன வீடா.. பாட்டி ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். ரெண்டாம் தாரமா இருந்தாலும், அவ பாட்டியும் உங்க புருஷன் தாலி கட்டுன பொண்டாட்டி தானே. அப்படி பார்த்தா அவளும் உங்களுக்கு பேத்தி முறை தான. இந்த வீடு அவளுடைய தாத்தாவோட வீடு. அவளுக்கும் இங்க எல்லா உரிமையும் இருக்கு".
அவன் இத்தனை தூரம் கோபமாக பேசி அனைவரும் இன்று தான் பார்க்கின்றனர். அளவாக தான் பேசுவான். ஆனால், அவனின் வார்த்தைகள் சரியாக இருக்கும். இன்று தான் முதல் முறை தன்னவளுக்காக இவ்வளவு பேசுகின்றான்.
அறைக்குள் சென்ற செந்நிலாவின் செவிகளையும் இவனின் வார்த்தைகள் சென்றடைய. பாட்டியின் வார்த்தையில் அலைக்கழித்துக் கொண்டிருந்தவளின் மனமும் இவனின் வார்த்தையில் சற்று மட்டுபட்டது.
இந்திராவைப் பற்றி பேசியதும் வாயடைத்துப் போன பாட்டி, அவன் அடுத்ததாக பேசியதில் வெகுண்டெழுந்து விட்டார்.
"என்ன செல்வா ரொம்ப பேசுத, யாரக் கொண்டாந்து எங்க வச்சிருக்கன்னு உனக்கு தெரியுதா.. உங்களுக்கெல்லாம் புத்தி மழுங்கி போச்சா என்ன.. வேற ஏதோ மாப்பிள்ளை பார்த்து கட்டி கொடுக்க போறோம்னு சொல்லிட்டு இப்பிடி உன் வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்திருக்கியே தேவா, இதெல்லாம் என்ன.. பழச எல்லாம் மறந்துட்டியா தேவா" என்று ஆத்திரத்தோடு சற்று ஆதங்கமாகவும் கூறினார்.
"அம்மா நாங்க எதையும் மறக்கல. அதுக்காக தப்பு செஞ்சவங்கள விட்டுட்டு தப்பு செய்யாதவங்களுக்கு தண்டனை கொடுத்தா ஆச்சா.. கல்யாண மண்டபத்துல பெரிய பிரச்சன ஆயிடுச்சு" என்று அங்கு நடந்த மொத்தத்தையும் விவரித்தவர்.
"இப்போ இந்த பெண்ணுடைய வாழ்க்கைக்கு யார் பதில் சொல்றது?".
"அதுக்காக அவள நம்ம வீட்டு மருமகளாக்குவியா நீயி".
"அம்மா இன்னும் எத்தன காலத்துக்கு தான் பழசே பேசிக்கிட்டு இருக்க போறீங்க. நீங்க அப்படியே பேசினாலும் தப்பு அப்பா மேல தான். அது உங்களுக்குமே நல்லா தெரியும். அப்பா மேல இருக்க கோவத்த நீங்க இத்தன வருஷம் அவங்க மேல காட்டுனீங்க. உங்களுக்காக நாங்களும் அவங்க குடும்பத்த ஒதுக்கி வச்சிருந்தோம். ஆனா, காலம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. காலத்துக்கு தகுந்த மாதிரி நீங்களும் மாறி தான் ஆகணும்".
"முடியாது. நீங்க என்னதான் சொன்னாலும் என்னால அவளோட பேத்திய இந்த வீட்டு மருமகளா ஏத்துக்கிட முடியாது".
"உங்கள யாரு இப்ப ஏத்துக்கிட சொன்னா? அக்கா போய் நிலாவ கூப்பிட்டு வாங்க விளக்கேத்தனும்ல" என்று கீதா சற்றும் காமாட்சியை சட்டை செய்யாமல் கூறியவர். தானே சென்று செந்நிலாவை அழைத்து வந்தார்.
தன் கணவனின் வார்த்தைகளுக்குப் பிறகு, செந்நிலாவின் மனம் சற்று மட்டுபட்டாலும், ஏனோ அவளுக்கு ஒருவித அழுத்தமாகவே இருந்தது.
அவள் வெளியே வந்ததும் கோபமாக அவளை முறைத்துப் பார்த்த காமாட்சி தன் மகள் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டார்.
யாரும் அவரைத் தடுக்கவில்லை. அவர் அப்படித்தான் என்று தெரிந்தவர்கள் அவரின் போக்கிலேயே அவரை விட்டு விட்டனர்.
அது வேறு அவருக்குத் தலை இடியாய் இருந்தது. தன்னை யாரும் கிஞ்சித்தும் மதிக்கவில்லையே என்ற பொறுமலின் வெளிப்பாடு அவரின் நடையின் வேகத்தில் தெரிந்தது.
"இந்தாத்தா இந்த விளக்க ஏத்து" என்ற வள்ளியின் சொல்படி அவர் கூறிய அனைத்தையும் செய்து முடித்தவள். கரம் கூப்பி அப்படியே நின்றிருந்தாள்.
எந்த ஒரு வேண்டுதலையும் வைக்கவே அவளுக்கு மனமில்லை. இனி இதுதான் தன் வாழ்க்கை என்னும் பொழுது மனமே வெற்றுத்தாளாய் இருந்தது.
ஒரு வகையில் வெற்றுத்தாள் என்பதிலும் நிம்மதியே.. அவளுக்கு பிடித்ததைப் போல் எழுதிக் கொள்ளலாம் அல்லவா..
"இந்த குடும்பத்துக்கு வாக்கப்பட்டு வர பொண்ணுங்க தான் இந்த குடும்பத்தோட மகாலட்சுமிங்க. எனக்கு அடுத்து இந்த குடும்பத்த நீதான் வழிநடத்தப் போற. இப்போ இருக்க போல எப்பயும் இந்த குடும்பம் உடைஞ்சிடாம நீ தான் தாயி பாத்துக்கணும். எங்க அடுத்த தலைமுறையோட ஆணிவேரே நீதான். நல்லபடியா இந்த குடும்பத்த வழிநடத்த துணையா இருக்கணும்னு சாமிகிட்ட வேண்டிக்க" என்றார் வள்ளி.
அவருக்கு சம்மதமாய் தலையசைத்தவளுக்கு அவரின் வார்த்தையில் இதழ்களில் மெல்லிய புன்னகை நெலிய. மனம் நெகிழ்ந்து தான் போனது.
என்னதான் இரு குடும்பங்களுக்கும் இடையே உறவு முறை சரி இல்லாமல் இருந்தாலும், வந்த அன்றே இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்போம் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை.
சந்தர்ப்ப சூழ்நிலையால் நடந்தேறிய திருமணம், இங்கே தான் பொருந்தவும், அவர்களுக்கு தன்னை பிடிபடவும் சற்று காலம் பிடிக்கும் என்று எண்ணினாள். ஆனால், வள்ளியின் வார்த்தை அவளின் அலைப்புறுதலை வெகுவாய் குறைத்திருந்தது.
என்ன இருந்தாலும் பெண்களுக்கு புகுந்த வீடு நல்லவிதமாய் அமைந்து விட்டால் வாழும்போதே அந்த வாழ்க்கை சொர்க்கம் தானே.
பார்த்து, பேசி, பழகி நடந்தேரும் திருமணங்களே தூரத்தில் இருந்து பார்க்க அத்தனை ரம்யமாய் தோன்றினாலும், அருகில் சென்றதும் கசந்துவிடும்.
இங்கோ அப்படி எந்த ஒரு பழக்கமும் கூட கிடையாது. யாரைப் பற்றியும் எதுவுமே தெரியாது. திக்கு தெரியாத காட்டுக்குள் திசை மாறி நுழைந்ததைப் போல் தான் இவளும் திருமண பந்தத்திற்குள் நுழைந்திருக்கிறாள்.
ஆனால், என்னதான் முதல் கோணலை காமாட்சி ஆரம்பித்து வைத்திருந்தாலும், முற்றிலும் அது கோணலாகிவிடாமல் அவளின் திருமண பந்தத்தின் ஆரம்ப பக்கத்தை அத்தனை வண்ணமயமாய் மாற்றியிருந்தார் வள்ளி தன் வார்த்தைகளால்.