மழை - 22
"அம்மா என்ன பண்றீங்க?" என்ற உமாவை தீயென முறைத்தவர்.
"வாய மூடுடி! கொதிச்சு போய் வந்து நிக்கேன் என் வாய கிண்டுன ஏதாவது பேசிபுடுவேன் பாத்துக்க. உன்னாலயும், இதோ குடிச்சிட்டு நிக்க கூட தாளாம கவுந்து கிடக்கானே இவனாலயும் தான் உம்மக வாழ்க்கை இன்னைக்கு இப்படி சீரழிஞ்சு சிரிப்பா சிரிக்குது".
"அம்மா நாங்க என்ன பண்ணோம்?".
"என்னடி பண்ணல? இன்னும் என்னத்த பண்ணலன்னு கேக்கேன். பெத்தவங்க ஒழுங்கா இருந்திருந்தா அவ ஏன்டி இப்படி கண்டமேனிக்கு அலைய போறா. வயசு பொண்ண கூட ஒழுங்கா பாத்துக்க முடியாம அப்படி என்ன கிழிக்கிற வேலை உனக்கு வீட்ல".
அப்பொழுதுதான் நன்கு உறங்கி எழுந்து வந்த இந்திரா கண்களைக் கசக்கிக் கொண்டே தன் பாட்டியைப் பார்த்தவள், "அப்பத்தா சும்மா அதையே சொல்லாத. நான் தான் அந்த பையனோட பிரேக்கப் பண்ணிட்டேன்னு சொல்றேன்ல. இந்த குழந்தையும் வேணாம்னு சொல்லிட்டேன். அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு, மாமா தானே இப்ப கட்டிக்க மாட்டேங்கிறாரு. ஏதோ நீதான் பெரிய ஆள் மாதிரி பேசிட்டு இருந்த. நீ சொல்றது தான் அங்க எல்லாம் கேப்பாங்கன்னு சொன்ன.. இப்போ என்ன ஆச்சு, எல்லாம் வெறும் வாய் மட்டும் தானா.. மாமா வீட்ல எப்படியாவது பேசி அவங்க மனச மாத்தி எனக்கும் செல்வா மாமாவுக்கும் கல்யாணத்த முடிக்கிற வழிய பாரு. சும்மா கிடந்தவ மனசுல ஆசைய வளர்த்துட்டு, இப்போ இல்லன்னா என்ன அர்த்தம்" என்று தன் அம்மாயியை பிலுபிலுவென பிடித்துக்கொண்டாள்.
அவளின் பேச்சில் காமாட்சி பாட்டிக்கு தலை இடியாய் இருந்தது. இவள் புரிந்து பேசுகிறாளா அல்லது புரியாமல் பேசுகிறாளா என்பது போல், அவளை வெட்டவா குத்தவா என்று பார்த்தவர்.
"அடி கூறுகெட்டவளே, உன் வாழ்க்கையில நீயே மண்ணள்ளி போட்டுட்டு இப்ப வியாக்கியானம் வேற பேசுதியா. பேசுத வாய இழுத்து வச்சு ஒட்டிபுடுவேன் பாத்துக்க. அம்புட்டு கோபத்துல இருக்கேன் நான், என் வாய கிளறுன பேத்தியினு கூட பாக்காம சகட்டுமேனிக்கு பேசிவிட்டுடுவேன்".
"என்னாச்சு அம்மாச்சி அங்க ஏதாவது பிரச்சனையா? ஏன் இவ்வளவு கோவமா இருக்கீங்க?" என்று தன்மையாய் கேட்டாள் ரதி.
"வாடித்தா, வா.. நீ எப்ப நல்ல சேதி சொல்ல போறவ?".
"அம்மாச்சி!" என்று அவர் அதிர்ந்து விழிக்கவும்.
"என்னடி அம்மாச்சி, என்ன அம்மாச்சி, இப்படித்தேன் உன் அக்காகாரியையும் மலை போல நம்புனேன். செருப்ப சாணியில முக்கி அடிக்கிற மாதிரி செஞ்சுபுட்டா இல்ல. அடுத்து நீ என்னத்த செய்ய காத்திருக்கவ. உன் அக்கா செஞ்ச காரியம் ஊரெல்லாம் தெரிஞ்சு சிரிப்பா சிரிக்க போவுது. நீ எந்த மண்ணள்ளி எங்க தலையில கொட்ட காத்து கிடக்க. உன் அம்மாவ பெத்துட்டு நான் படுறது பத்தாதுன்னு, உங்களயும் வச்சுக்கிட்டு அல்லோல பட வேண்டியதா இருக்கு" என்று தன் கோபம் மொத்தத்தையும் ரதியின் தலையில் இறக்கி வைத்து விட்டார்.
அவளுக்கோ அங்கே நிற்கவே உடல் கூசியது. தன் அம்மாச்சியின் வார்த்தைகள் அவளை நெருப்பின் மேல் நிற்க வைத்து விட, அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் அழுகையோடு நகர்ந்துவிட்டாள்.
"இப்போ என்ன ஆயிப்போச்சுன்னு நீ இப்படி கத்திக்கிட்டு கிடக்குற அம்மாச்சி. அப்படி என்ன பெரிய தப்பா நான் பண்ணிட்டேன். நான் என்ன வேணும்னா இப்படி எல்லாம் செஞ்சேன். இப்படி எல்லாம் நடக்கும்னு நானுமே எதிர்பார்க்கல தான். நடந்தது நடந்து போச்சு, இப்போ அதுக்கு என்ன பண்ணனும். நீங்க இப்படி தாம் தூம்னு குதிச்சா நடந்தது இல்லன்னு ஆயிடுமா. நான் தான் செஞ்ச தப்ப ஒத்துக்குறேன்ல மன்னிச்சு ஏத்துக்கிறது தானே பெரிய மனுஷதனம். போய் மாமா கிட்ட பேசு, செஞ்ச தப்ப நான் ஒத்துக்கிட்டேன் உணர்ந்துட்டேன்னு சொல்லி எனக்கும் செல்வா மாமாவுக்கும் நின்னு போன நிச்சயத்த நடத்த... ம்கூம்.. வேண்டாம். நிச்சயம் பண்ணி பொறவு கல்யாணம் பண்ண எல்லாம் லேட் ஆகும். நேரா கல்யாணத்தையே வச்சுக்கலாம்னு கேளுங்க".
"ஒய்யாரம் கொண்டையில தாழம்பூவு, உள்ள இருக்குமா ஈரும் பேனும். அங்க உன் மாமம்மவ இன்னொருத்தி கூட கல்யாணத்தையே முடிச்சிட்டு மாலையும் கழுத்துமா வந்து நிக்கிதான். நீ வயித்த தள்ளிக்கிட்டு அவன கட்டிக்க வேற என்னைய போய் கேக்க சொல்லுதியா.. செவுல்லயே நாலு சாத்து சாத்திப்புடுவேன் பாத்துக்க" என்று தன் கண்களை உருட்டி மிரட்டினார்.
அவரின் வார்த்தையில் தன் நெஞ்சில் கையை வைத்த இந்திரா, "என்ன அம்மாச்சி சொல்றீங்க, மாமா வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா.. என்னை கட்டிக்கிறேன்னு வாக்கு கொடுத்துட்டு எப்படி இன்னொருத்திய கட்டிக்க முடியும். இதெல்லாம் ஏமாத்து வேலை. ஒரு பொண்ண நம்ப வச்சு ஏமாத்துறது துரோகம் இல்லையா.. இதுதான் ஒரு பெரிய மனுஷனுக்கு அழகா. உம்மகன் கிட்ட நல்லா நாக்க புடுங்குற மாதிரி நாலு வார்த்த கேட்க வேண்டியது தான. இங்க வந்துட்டு உங்கைய ஓங்கி காட்டுறீங்களா. அங்க ஒன்னுத்துக்கும் வேலைக்காகலன்னதும் இங்க கிளம்பி வந்துட்டீங்களோ. உங்க ஏச்சிக்கும் பேச்சுக்கும் நாங்க தானே அடங்கி போவோம். இங்க பாருங்க அம்மாச்சி, நீங்க என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. செல்வா மாமாவுக்கும் எனக்கும் கல்யாணம்னு சொன்ன வார்த்தைய நம்பி தான் நான் விரும்புனவன கழட்டிவிட்டேன். செல்வா மாமாவை கட்டிக்க சம்மதிச்சேன். எனக்கு செல்வா மாமாவோட கல்யாணம் நடக்கணும். என்னை எப்படி ஏமாத்தலாம்" என்று ஒருபாடு குதிக்க.
"என்னம்மா என்ன சொல்ற நீ?" என்றார் உமாவும் அதிர்ந்து போய்.
காலையில் நடந்தேறிய சம்பவத்தை இவர் விவரிக்கவும்.
தன் வாயைப் பொத்திக்கொண்ட உமா, "என்னது அந்த குடும்பத்து பேத்திய செல்வாக்கு கட்டி வச்சுட்டாங்களா. என்னம்மா இதெல்லாம்?" என்றார் அடக்க மாட்டாமல்.
"ஏதோ ஊர்ல உலகத்துல யாரும் செய்யாத தப்ப செஞ்சிட்ட போல என் மேல அந்த எகுறு எகுறுனாங்க. இப்ப அவங்க செஞ்சிருக்கிறது மட்டும் நியாயமா.. ரெண்டாம் தாரத்தோட பேத்திய கட்டிக்க அவருக்கு இனிக்குதா. ஏதோ தெரியாம ஒரே ஒரு தடவ தப்பு பண்ணேன். என்னை கட்டிக்க கசக்குதோ.. இதையெல்லாம் நான் சும்மா விட மாட்டேன் அம்மாச்சி. எனக்கு நியாயம் கிடைக்கணும்" என்றவளின் கன்னத்தில் தாளமுடியாமல் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தார் காமாட்சி.
"அம்மா என்ன பண்ற நீ?" என்ற உமாவை கண்கள் சிவக்க முறைத்துப் பார்த்தவர்,
"ச்சீ! உம்மவ என்ன பேச்சு பேசுதா, பார்த்துகிட்டு தானே நிக்கிதவ. ஏதோ போனா போகுதே பேத்தியாச்சேன்றதுக்காக தான் அவளுக்காக என் பேரனுடைய வாழ்க்கைய பத்தி கூட பெருசா யோசிக்காம இவ சீரழிஞ்சு நிக்கக் கூடாது, இவ தலையெழுத்து ஒன்னுமில்லாம போயிடக் கூடாதுன்னு உண்மை தெரிஞ்சும் ஆத்தமாட்டாம மறைச்சேன். ஆனா, தப்பு பண்ணிட்டோம்ன்ற குத்தஉணர்ச்சி கொஞ்சமாவது இவளுக்கு இருக்கான்னு பாரு. என்ன பேச்சு பேசுதா பெரிய கண்ணகி, மாமன் வீட்டை எரிச்சிடுவீயளோ" என்றார் ரௌத்திரம் பொங்க.
"சரி மா நான் ஒத்துக்குறேன். இந்திரா பண்ணது தப்புதான். அதுக்காக அவள கட்டினது சரின்னுவியா நீயி" என்று எகிறிக் கொண்டு வந்தார் உமா.
"போடி கூறுகெட்டவளே, அங்க எல்லாம் என்னைய கேட்டுதேன் நடக்குது பாரு. நான் போய் எது சரி எது தப்புன்னு புளிய வச்சு விளக்க. ஒருத்தரும் என்னைய மதிக்கல. அதுக்கும் மேல அந்த செல்வா, என்னைய எதுத்துக்கிட்டு நின்னு அந்த சிறுக்கிகாக வரிஞ்சு கட்டிக்கிட்டு அம்புட்டு பேச்சு பேசி போட்டான்" என்றவருக்கு செல்வாவின் பேச்சில் மனம் ஆறவில்லை.
"என்னம்மா இப்படி ஆகிப்போச்சு, கொஞ்ச நாள் ஆற போட்டு எப்படியாவது அண்ணன் கையில கால்ல விழுந்து இந்திராவ செல்வாக்கு கட்டிக் கொடுத்திடலாம்னு நெனச்சேனே. கடைசியில இப்படி ஆகிப்போச்சே" என்று தன் தலையில் கையை வைத்துக்கொண்டு மூலையில் அமர்ந்து விட்டார் உமா.
காமாட்சி பாட்டிக்கு மன வருத்தத்திலும், புலம்பலிலும் பொழுது சென்றது தெரியவில்லை. நன்கு இருட்டி விடவும் தான் சுற்றம் உணர்ந்தவர்.
"ஆத்தே! நான் ஒரு கூறுகெட்டவ, இங்க வந்து உட்கார்ந்துட்டேன் பாரு. அவ இந்த வீட்டுக்கு மருமகளா வேணும்னா வந்திருக்கலாம். இதுவும் எத்தன நாளைக்குனு நான் பார்க்கதேனே போறேன். அவ பாட்டிய எப்படி ஓட ஓட விரட்டுனேனோ, அதேபோல இவளயும் இந்த வீட்ட விட்டு துரத்தல எம்பேரு காமாட்சி கிடையாது. என்ன தான் நேரம், காலம் பார்க்காம நடந்த கல்யாணமா இருந்தாலும், சாந்தி முகூர்த்தத்துக்கு ஏதும் ஏற்பாடு செஞ்சுட்டா, குடும்ப வாரிசு அவகிட்ட போயிடும். அது மட்டும் நடக்கவே கூடாது. நான் வாரேன் டி உமா" என்று கூறியவர், தள்ளாடும் நடையுடன் வேகமாய் காதில் தொங்கும் புல்லாக்கு டிங்கு டிங்குவென ஆட வீட்டை நோக்கி புறப்பட்டார்.
இவர் வீட்டை அடையவும் வீடே அத்தனை நிசப்தமாய் இருந்தது. தன் இரண்டு வயது பிள்ளையை இடுப்பில் சுமந்தவாறு யமுனா குழந்தைக்கு பாலைக் கரைத்து எடுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்த காமாட்சி பாட்டி, "ஏன்ட்டி நீ எப்ப வந்த?".
"ம்ம்! எனக்கு ஒரு வார்த்த தாக்கல் கூட சொல்லாம என் அண்ணன் கல்யாணத்தையே முடிச்சுட்டீங்கல்ல. என்கிட்ட பேசாதீங்க அப்பத்தா" என்று தன் தாடையை தோள்பட்டையில் இடித்துக் கொண்டு விறுவிறுவென அங்கிருந்து சென்று விட்டாள் யமுனா.
"ஆமா, நான்தியான் நாள், நட்சத்திரம் பார்த்து ஊர கூட்டி இவ அண்ணனுக்கு கல்யாணம் கட்டி வச்சேன் பாரு. எங்கிட்ட மொவறைய தூக்கி வச்சுட்டு போறா" என்று அவளுக்கு திட்டியவர்.
பொற்செல்வனின் அறையை மெல்லமாய் நோட்டம் விட்டார்.
கதவின் மீது காதை வைத்து இவர் கேட்க முற்படவும், "ம்மா!" என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினார் காமாட்சி.
அவரின் கையைப் பிடித்து சற்று தூரம் தள்ளி இழுத்து வந்த தேவராஜ், "என்ன காரியம் பண்றீங்க நீங்க, வயசுக்கேத்த வெவரமும், கொஞ்சமாவது கூறு இருக்கா" என்று தன் பற்களைக் கடித்துக் கொண்டு கடிந்தார்.