மழை - 23
அவரின் சத்தத்தில் வள்ளியும் வெளியே வந்து பார்க்க.
"இல்ல தேவா, அவிங்க உள்ளார இருக்காய்ங்களான்னு பாக்காத்தேன்".
"வாய மூடுங்கம்மா! அதான் கதவு சாத்தி இருக்குல்ல. பொறவு, உள்ள இல்லாம வேற எங்க இருப்பாங்களாம்" என்றார் சிடுசிடுப்பாய்.
"பாவி பயலுகளா! எப்படியாவது சாந்தி முகூர்த்தத்த நடக்க விடாம பண்ணனும்னு வந்து பார்த்தா நான் வாரதுக்கு முன்னாடியே அவிங்கள உள்ளயா அனுப்பி வச்சிருக்கீங்க" என்று மனதுக்குள் நொந்தவர்.
சட்டென தன் நெஞ்சினைப் பிடித்துக் கொண்டு "ஆ" என்று கத்தினார்.
அவரின் தோள்வளைவை சுற்றிப் பிடித்த தேவராஜ், "என்னம்மா என்ன ஆச்சு? என்ன பண்ணுது?" என்றார் பதட்டமாய்.
"தெரியலயேயா, என்ன பண்ணுதுன்னு தெரியலயே.. நான் சாகப் போறேனாட்டும்க்கு. எம்பேரன வெறசா கதவ தட்டி வெளியில கூப்பிடு ஆஸ்பித்திரிக்கு ஒரு எட்டு போயி என்ன ஏதுன்னு பாத்துட்டு வந்துடுவோம்" என்று வலியில் முகம் கசங்குவது போல் சுருக்கிக் கொண்டு கூறவும்.
அனைவரும் உண்மை என்றே நம்பி விட்டனர். அவரின் சத்தத்தில் யமுனாவும் அவளின் கணவரும் கூட வெளியே ஓடி வந்துப் பார்க்க.
"ஐயோ அப்பத்தா! என்ன ஆச்சு உனக்கு?".
அதற்குள் வள்ளி ஓடிச்சென்று காமராஜரையும், கீதாவையும், ரகுவையும் அழைத்து வந்துவிட்டார். நேரம் ஆகிவிட்டதால் அனிதா தூங்கிவிட்டிருந்தாள்.
"நான் என்னத்தடி சொல்லுதது நெஞ்சு வலிக்குதே, என் கொள்ளு பேரப்புள்ளைங்கள பாக்குறதுக்குள்ள போய் சேர்ந்துடுவேன் போலருக்கே. இந்த வீட்ல நடக்குற விஷயத்த எல்லாம் பார்த்து சாவாம கிடந்தாதேன் அதிசயம். செல்வாவ கூப்பிடுடி" என்றார் அவசரமாய்.
"இப்போதான் அண்ணன் உள்ள போச்சு அதுக்குள்ள கூப்பிட சொல்ற, இந்த நேரத்துல போய் எப்படி அப்பத்தா அவங்கள கூப்பிட முடியும்" என்று யமுனா சங்கடமாய் கூறவும்.
"ஏட்டி அப்பத்தா சாவ கிடக்கேன். இப்போ இதுதான் ரொம்ப முக்கியமோ.. இன்னிக்கு இல்லாட்டி பொறவு இன்னொரு நாளிக்கு. உயிர் போனா வருமா டி. செல்வாவ கூப்பிடு" என்றார் அப்பொழுதும்.
அவரின் கூற்றிலும், பார்வை செல்வாவின் அறையையே பார்த்துக் கொண்டிருப்பதையும் வைத்தே அவரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துக் கொண்டனர் அனைவருமே.
"அப்பத்தா எந்த பக்கம் வலிக்குதுன்னு சொன்ன?" என்று ரகு கேட்கவும்.
வலது பக்கம் கையை வைத்திருந்தவர் மறந்து போய் இடது பக்கம் கையை வைத்து காண்பிக்கவும்.
அனைவரும் புருவம் இடுங்க அவரை முறைத்துப் பார்த்தனர்.
"ஓ! அந்த பக்கம் வலிச்சா கொஞ்சம் சீரியஸ் தான் பெரியப்பா. அதான் நானும் யமுனாவோட வீட்டுக்காரரும் இருக்கோமே, நாம இத்தன பேர் இருக்கும் போது செல்வா அண்ணன் வந்தா தான் அப்பத்தாவ காப்பாத்த முடியும்னு ஒன்னும் இல்ல. செல்வா அண்ணன் என்ன டாக்டர்கா படிச்சிருக்கு. இன்னைக்கு சடங்கு ஏற்பாடு பண்ணபடியே நடக்கட்டும். நாம அப்பத்தாவ கூப்பிட்டு ஆஸ்பித்திரிக்கு போவோம்".
"அடேய் கூறுகெட்டவனே, உன்ன ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போக சொல்லி நான் கேட்டேனா.. செல்வா வந்தாதேன் சரியா இருக்கும்" என்று சற்று குரலை உயர்த்தி கூறவும்.
"ஏன் செல்வாண்ணா என்ன டாக்டரா? அவரா உங்களுக்கு வைத்தியம் பார்க்க போறாரு" என்றாள் யமுனா.
"நீ வாய மூடுடி எல்லாம் எனக்கு தெரியும்".
"இப்ப வலி குறைஞ்சுருச்சு போலருக்கே. தெடமா பேசுற" என்றான் ரகு.
"ஆஆ! யாத்தே! ஆஸ்பித்திரிக்கு அழைச்சிட்டு போவாமலே என்னைய உசுர வாங்கிடுவானுங்க போலருக்கே" என்று அவர் புலம்பவும்.
யமுனாவும், ரகுவும் அவரின் சிறுபிள்ளைத்தனமான செயலில் ஒருவரை ஒருவர் பார்த்து நகைத்துக் கொண்டனர். பெரியவர்களுக்கு தான் பொசபொசவென வந்தது.
கீதா கடுப்பான முகத்தோடு தன் மாமியாரை நெருங்கியவர், "அத்த எந்த பக்கம் வலிக்கிதுன்னு சொன்னிங்க?".
"இவ என்னதுக்கு கேக்குதா" என்று சிந்தித்துக் கொண்டே, "இங்கன" என்று மீண்டும் வலது புறம் கை வைத்துக் காட்டினார்.
"ஓ! இங்கன தானா.. நான் கூட என்னமோ ஏதோனு பயந்துட்டேன்" என்ற கீதா வள்ளியைப் பார்த்து, "அக்கா பின்பக்கம் இருக்க உலக்கைய செத்த கொண்டு வாங்க. அத்தய குப்புற படுக்க போட்டு மேல நாலு உருட்டு உருட்டுனா வலி அம்புட்டும் பறந்து போயிடும்".
"எதே!" என்று சட்டென்று தெளிந்து அமர்ந்தார் பாட்டி.
"ஆமாத்த, நேத்திக்கு வனஜாக்கும் இப்படிதேன் ஒரே வலி. இந்த வைத்தியம் தான் பண்ணோம். வலி இருந்த இடம் தெரியாம போயிடுச்சு" என்கவும்.
யமுனாவுக்கும், ரகுவுக்கும் அடக்க மாட்டாமல் சிரிப்பு பீறிட்டது.
"அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல. செல்வா வந்து ஆஸ்பித்திரிக்கு கூப்பிட்டு போனா எல்லாம் சரியா போவும்".
"அம்மா!" என்று அந்த இடமே அதிரும் வண்ணம் கத்திய தேவராஜ், "உன்ன எல்லாம் என்னனு சொல்றது? வயசுக்கு தகுந்த வேலையா பாக்க.. போய் படு போ" என்று திட்டிவிட்டு கோபமாக தன் அறைக்கு சென்று விட்டார்.
காமராஜரும் தன் தாயை முறைத்து விட்டு தங்கள் வீட்டிற்கு செல்ல.
"ச்ச, ஜஸ்ட் மிஸ். இன்னைக்கு உலக்கைய வச்சு ஒரு உருட்டு உருட்டனும்னு நினைச்சேன் தப்பிட்டாங்க" என்று ஆதங்கமாக முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார் கீதா.
சட்டென அனைவரும் நகர்வதைப் பார்த்து பாட்டிக்கு அவரைக் கண்டு கொண்டது கூட தெரியவில்லை.
"நெஞ்சுவலியில சாக கெடக்கேன். ஆளாளுக்கு அவன் பாட்டுக்கு போயிட்டு இருக்காங்க. அப்போ நான் செத்தாலும் இந்த வீட்டுல யாருக்கும் கவலை இல்ல அப்படித்தானே" என்று யமுனாவிடம் சிடுசிடுத்தார்.
"ஏன் அப்பத்தா உன் சாயத்த வெள்ளாவியில வச்சு அந்த வெளு வெளுத்துட்டு போறாய்ங்க. அப்ப கூடவா உனக்கு புரியல. நீ நடிச்சத அம்புட்டு பேரும் கரெக்டா கண்டு பிடிச்சிட்டாய்ங்க. போ, படுத்து தூங்குற வேலைய பாரு. பாடையில போற வயசுல பர்பாமென்ஸ பாத்தியா" என்று முணுமுணுத்துக் கொண்டே தங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டான் ரகு.
யமுனாவும் கணவருடன் தன் அறைக்கு சென்றுவிட.
அறைக்குள் நுழைந்த வள்ளி தாள மாட்டாமல், "என்னங்க இது, அத்த ஏன் இப்படி எல்லாம் செய்றாங்க. அந்த புள்ள இன்னைக்கு தான் நம்ம வீட்டுக்கு வாழ வந்திருக்கு. முதல் நாளே இத்தன கூத்து தேவையா.. நல்லவேளைக்கு, இந்த சத்தத்துக்கு செல்வா எழுந்திருச்சு வராம போனான். வந்திருந்தா அந்த புள்ள நம்ம குடும்பத்த பத்தி என்ன நினைச்சிருக்கும். மாப்பிள்ளை வேற வீட்ல இருக்காரு, அவர் வேற என்ன நினைச்சாரோ" என்று வருத்தத்தோடு படபடத்தார்.
"வயசாக ஆக கொஞ்சம் கூட கூறே இல்லாம போயிட்டிருக்கு அம்மாவுக்கு. அவங்க பேத்திய கட்டலயேன்ற ஆதங்கம் இருக்க மாதிரி தெரியல. நிலாவ இந்த வீட்டு மருமகள் ஆக்கிட்டோமேன்ற கடுப்புல தான் இப்படி எல்லாம் செஞ்சிட்டு இருக்காங்க. விட்டு தள்ளு, வேற என்ன பண்ணி தொலையுறது. நீதான் பார்த்துக்கணும் வள்ளி, பார்த்தல்ல, அம்மா என்ன வேணாலும் செய்வாங்க. அந்த புள்ளைக்கு நீ தான் ஆதரவா இருக்கணும். தாய் தகப்பன் இல்லாத புள்ள, அது மருகி நிக்கிற மாதிரி எதுவும் ஆயிடாம நீதான் துணையா நிக்கணும் புரிஞ்சுதா"
"இத நீங்க சொல்லனுமாங்க. நம்ம வீட்டுக்கு வாழ வந்த பிள்ளைக்கு நான் துணை இருக்க மாட்டேனா".
*****
அறைக்குள் நுழைந்த பொற்செல்வனின் அரவத்தில் எழுந்து நின்றாள் செந்நிலா.
மெல்லிய புன்னகையை அவளைப் பார்த்து சிந்தியவன் அவளை நோக்கி வந்தான்.
இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஒருவித சங்கடம் கூடிய சூழலாக இருந்தது.
அவளோ தன் கைகளைப் பிசைந்துக் கொண்டே நிற்கவும்.
"என்ன நிலா அப்படியே நின்னுட்ட" என்றான் இலகுவாய்.
அவனின் சாதாரண பேச்சு இவளையும் சற்று இலகுவாக்க, "சும்மாதான்" என்றாள் சற்று ஆசுவாசத்தோடு.
"முதலிரவுல ஆசிர்வாதம் வாங்கணும்னுலாம் உன்கிட்ட யாரும் சொல்லி அனுப்பலையா" என்று மென் சிரிப்புடன் விளையாட்டாய் அவன் கேட்கவும்.
அவளும் எதேர்ச்சையாய் அவனை நோக்கி குனிந்தாள்.
சட்டென்று அவளின் கையைப் பற்றியவன், அவளை குனியவிடாமல் தடுத்து அவளின் தாடையில் தன் ஒற்றை விரலை வைத்து நிமிர்த்தியவாறு "இந்த வீட்டுக்குள்ள நீ வரும்போது என் பாட்டி அவ்வளவு பேச்சு பேசினப்ப கூட நீ எப்படி தலை நிமிர்ந்து நின்னுட்டிருந்த. அவங்க பேசுனது உனக்கு எவ்வளவு வலிச்சாலும் அந்த வருத்தம் உன் முகத்துல தெரிஞ்சதே தவிர, தலை நிமிர்ந்து தானே நின்ன. அதேபோல, இந்த வீட்ல எப்பயுமே நீ இருக்கணும். என்னைக்கும், யாருக்காகவும், எதுக்காகவும் இப்படி தலையை தாழ்த்திடக்கூடாது. தலை நிமிர்ந்து நேரா நடக்கிற செந்நிலாவ தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்".
அவனின் 'பிடிக்கும்' என்ற வார்த்தை சற்று அதிர்வை கொடுத்தாலும், அவனின் கூற்று அத்தனை மகிழ்ச்சியை கொடுத்தது.
அவளின் மனநிலையை ஏதோ அப்படியே படித்து விட்டவன் போல் கூறியவனையே இமை சிமிட்ட மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் கையை மென்மையாய் பற்றியவன் கட்டிலில் அவளை அமரச் செய்து, அவளின் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டான்.
அவனின் இலகுவான அணுகுமுறை இவளுக்கும் அவனுடன் பேச உதவி புரிந்தது. எப்படியும் இதுதான் தன் வாழ்க்கை என்றான பிறகு தயங்கி தயங்கி என்ன செய்ய முடியும், வாழ்ந்து தானே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.
"உங்களுக்கு உங்க அத்த பொண்ணோட தானே நிச்சயத்துக்கு ஏற்பாடு பண்ணாங்க. எப்படி அந்த நிச்சயம் நின்னுச்சு?".
"அவ வேற யாரையோ காதலிக்கிறா போலருக்கு. அதான் சரி வராதுன்னு நிப்பாட்டிட்டோம்" என்று மேலோட்டமாய் மண்டபத்தில் நடந்ததை கூறினான்.
அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்து பார்த்தவள், "நிஜமாவா சொல்றீங்க, ஆனா, அந்த பொண்ணோட தங்கச்சி ரதி எங்க காலேஜ் தான் ரொம்ப நல்ல பொண்ணு. அவ்வளவு ஒழுக்கமா நடந்துபா, அந்த பொண்ணோட அக்காவா இப்படி நடந்துக்கிட்டாங்கன்னு என்னால கொஞ்சம் கூட நம்பவே முடியல".
"தங்கச்சிய பார்த்து அக்காவ எடை போடுறதும், அக்காவ பார்த்து தங்கச்சிய எடை போடுறதும் முடியாதுல்ல. ஒவ்வொருத்தவங்க கேரக்டர் ஒவ்வொரு மாதிரி தான் இருக்கும்" என்பதோடு அப்பேச்சைக் கட்டுப்படுத்தியவன்.
"அது சரி, அன்னைக்கு ஹெல்ப் பண்றதுக்காக உனக்கு என்னுடைய டி-ஷர்ட் கொடுத்தேன். அப்படியே வச்சுக்கிட்டியே திரும்ப தரணும்ன்ற எண்ணமே இல்லையா" என்றான் விளையாட்டாய்.
அந்நாளின் நினைவில் இவளின் விழிகள் தானாய் தரையை நோக்க, "எடுத்து வச்சிருக்கேன். கொடுக்கணும்னு பல தடவ நினைச்சிருக்கேன். ஆனா, கொடுக்க தான் சந்தர்ப்பம் அமையல".
உறவினர்கள் தான். இருவருமே பிடித்தத்திற்கும், பிடித்தமின்மைக்கும் நடுவே ஊசலாடும் உணர்வுகளில் தான் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
இப்பொழுது கணவன் மனைவி என்னும் பந்தம் அவர்களை பாந்தமாய் பொருத்திக் கொண்டது.
"இனி கொடுக்கணும்னு அவசியமில்ல" என்றவனை அவள் புரியாமல் பார்க்கவும்.
"என்ன அப்படி பாக்குற, அதான் எனக்கும் நான் சம்பந்தப்பட்ட எல்லாத்துக்கும் உரிமைப்பட்டவளாகிட்டியே.. அந்த டிஷர்ட்டும் உனக்கு உரிமைப்பட்டது தான நீயே கூட வச்சுக்கலாம்".
அதற்கு பதிலளிக்காமல் மெல்லிய புன்னகையை உதிர்த்தவள். அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
அவன் இலகுவாய் பேசுகிறான் தான். ஆனால், இவளுக்கு தான் அத்தனை சுலபத்தில் பேச வரவில்லை.