மழை - 34 (இறுதி அத்தியாயம்)
அவன் கூறிய வார்த்தைகளை உள்வாங்கி கொண்டவளுக்கோ அப்படி ஒரு மகிழ்ச்சியாய் இருந்தது. தன் மேல் நம்பிக்கை இருக்கிறது என அவன் கூறியது ஏனோ ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்த. அவனின் கேள்விக்கான பதிலை அவள் அளிக்கவில்லை வேகமாய் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
எந்த ஒரு பதிலும் அளிக்காமல் செல்பவளின் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
சற்று தூரம் சென்றவளோ முதல் முறை தானாய் நின்று அவனை திரும்பிப் பார்த்தாள். இதுநாள் வரை அவள் யாரையுமே இப்படி எல்லாம் பார்த்தது கிடையாது.
இன்று முதல் முறை அவள் அப்படி பார்க்கவுமே, அவளின் சம்மதம் அந்த ஒற்றைப் பார்வையிலேயே அவனுக்கு கிட்டி விட்டது.
திருவிழா நல்ல முறையில் நடந்து முடிய. தன் பாட்டியைக் காண வேண்டி கீதாவின் வீட்டிற்கு சென்றிருந்தாள் செந்நிலா.
"அத்த நம்ம ரதிய பத்தி என்ன நினைக்கிறீங்க?".
"அவள பத்தி நினைக்க என்ன இருக்கு நிலா?".
"நம்ம ரதிய ரகுவுக்கு கட்டலாம்ல".
"சத்தமா சொல்லிடாத. என் மாமியார் காதுல விழுந்துச்சு அப்புறம் இதையே பிடிச்சுப்பாங்க".
"அத்த ரதி இந்திரா போல கிடையாது, ரொம்ப நல்ல புள்ள. எங்க காலேஜ்ல தானே படிச்சா, ரொம்ப ஒழுக்கமா இருப்பா. எந்த ஒரு ஆம்பள பசங்ககிட்டயும் அவ பேசி நான் பார்த்ததில்ல. ரொம்ப நல்ல பழக்கவழக்கம் கூட. ரொம்ப நல்ல பொண்ணு அத்த நம்ம ரகுவுக்கு பேசலாமே".
"ஏன் நிலா நீ வேற, அந்த குடும்ப சங்காத்தமே வேண்டாம் டா சாமி" என்றார் பதறிக்கொண்டு.
"உங்க மகனுக்கு ரதியை பிடிச்சிருந்தாலும் வேண்டாமா?" என்றவளின் கூற்றில் தன் புருவம் சுருக்கி அவளைப் புரியாமல் பார்த்தவர், "என்ன சொல்ற நிலா?".
"ஆமா, நம்ம ரகுவுக்கு ரதிய பிடிச்சிருக்கு. நீங்க சம்மதிச்சா அவள கட்டிக்க அவன் ரெடியா இருக்கான்".
"ரதி நல்ல பொண்ணு தான். நானுமே பாத்திருக்கேன். ஆனா, அந்த குடும்பம் நமக்கு ஒத்துவராதே".
"அத்த நீங்க என்ன பொண்ண கட்டி கொடுக்கவா போறீங்க. பொண்ண எடுக்க தானே போறீங்க. அந்த பொண்ணு தானே இங்க வந்து வாழ போகுது பிறகென்ன?".
"சரிதான். சரி அவங்க அப்பா கிட்ட பேசிட்டு சொல்றேன்"
அதுவே செந்நிலாவிற்கு நம்பிக்கயை கொடுக்க. அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் துரித கதியில் நடந்து அடுத்த மாதமே திருமணமும் முடிந்து திருமதி ரகுவாக மாறியிருந்தாள் ரதி.
நாளுக்கு நாள் அவனின் காதலின் ஆழத்தை அறிந்தவளுக்கு தான் மூச்சு முட்டுவது போல் ஆகிப் போனது அவனின் அன்பின் அளவில்.
அவளைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு அத்துபடி. அவளுக்கென அவன்.. அதுவே அவளுக்கு நெகிழ்ந்து போய்விட்டது.
மற்றவர்களைப் போல் இவளை இழிவாய் பேசவில்லை. நம்பிக்கை இன்றி நடத்தவில்லை. அவள் மேல் அத்தனை அன்பை பொழிந்தான். இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் என்பது போல் அவனிடம் சரணாகதி அடைந்து விட்டாள் ரதி
****
"என்னத்துக்கு இப்படி சுணங்கி உட்கார்ந்து கெடக்க. உன் அத்த கோவிலுக்கு போயிருக்கா போன போட்டு வர சொல்லவா?" என்று அதட்டலாக கேட்டார் காமாட்சி.
"இல்ல வேண்டாம். அவங்க வரும்போது வரட்டும்" என்றவாறு தன் நிறைமாத வயிற்றைத் தூக்கிக்கொண்டு முகம் சுருங்க வேதனையோடு அமர்ந்தாள் செந்நிலா.
"என்னாச்சு என்ன பண்ணுது? ஏதாவது வலிக்குதா" என்றவரின் குரல் அப்போதுமே அதட்டலாய் வர.
"ஆஆ.." என்ற முணங்களுடன் அப்படியே அமர்ந்திருந்த வாக்கில் சரிந்து விட்டாள் செந்நிலா.
பதறியடித்து அவளருகில் ஓடியவர், "ஆத்தே! அப்பவே கேட்டேனே ஏதாவது பண்ணுதா சொல்லுன்னு.. வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருந்த. இப்படித்தேன் வாய மூடிக்கிட்டு இருப்பியா" என்று பதறியடித்து காமராஜர் வீட்டிற்கு ஓடினார்.
வேகமாய் கீதாவை அழைத்துக் கொண்டு வந்தவர். அவர்களுடன் அவளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டில் காவலுக்காய் இருந்து விட்டார்.
சில மணி நேர போராட்டங்கள், அவளுக்கு உயிர்வதையை பரிசளித்துவிட்டே இப்பூவுலகிற்கு அன்றலர்ந்த மொட்டு போல் வந்திருந்தான் அவர்களின் மகன்.
அவர்களின் குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷம். காமாட்சி பாட்டிக்குமே அந்த குழந்தையின் முகத்தைப் பார்க்கும் பொழுது மனம் இறங்கி விட்டது. தங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறையைப் பார்த்துவிட்ட சந்தோஷம் அவரின் கண்களில் மின்னத்தான் செய்தது.
செங்கேணிக்கும் அத்தனை மகிழ்ச்சி. குழந்தையை தன் கையில் வைத்து ஆசைத்தீர உச்சி முகர்ந்தார். இருபாட்டிகளும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அதுவரை செந்நிலாவிற்கு சற்று ஆசுவாசமாய் இருந்தது.
******
அன்று செந்நிலாவின் மகனுக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழா. அதற்காக தான் அனைவருமே குலதெய்வ கோவிலில் ஒன்று கூடி இருந்தனர்.
ரதி அப்பொழுதுதான் கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தியை அறிந்த பிறகு, ரகு அவளை தரையிலேயே நடக்க விடவில்லை. அப்படி தாங்கிக் கொண்டிருந்தான்.
"பாத்துடா உன் பொண்டாட்டிய காக்கா ஏதாவது தூக்கிட்டு போயிட போவுது. கைக்குள்ளவே வச்சு பத்திரமா பொத்தி வச்சு பாத்துக்க" என்று காமாட்சி பாட்டி வேறு அவ்வப்பொழுது அவனை ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்.
"இந்தா" என்றவாறு செந்நிலாவிற்கு அவள் மறுக்க மறுக்க காலை உணவை அவளின் வாயில் திணித்துக் கொண்டிருந்தான் பொற்செல்வன்.
"என்ன பண்றீங்க நீங்க யாராவது பார்க்க போறாங்க. எல்லாரும் இங்க தான் இருக்காங்க" என்றாள் சங்கடத்தோடு நெலிந்து கொண்டே.
"அதுக்கு என்ன பண்றது, ஒழுங்கா வீட்டிலேயே சாப்பிட்டு வந்திருந்தா நான் ஏன் உனக்கு இப்படி ஊட்ட போறேன்".
"அதுக்கு இப்படி தான் எல்லார் முன்னாடியும் நடந்துப்பீங்களா?".
"விடுடி, நல்லது தானே. அன்னைக்கு நான் உனக்கு தோசை ஊத்தி கொடுத்ததும் அப்பாவும், சித்தப்பாவும் அம்மாவுக்கும், சித்திக்கும் தோசை ஊத்தி கொடுத்த மாதிரி, இப்ப எல்லாரும் ஊட்டி விடுவாங்க. அவங்களும் சந்தோஷமா இருப்பாங்கல்ல" என்றான் தன் ஒற்றைக் கண்ணைச் சிமிட்டு சிரித்தவாறு.
"நீங்க இருக்கீங்களே" என்றவள் அவனை முறைக்க முற்பட்டு தோற்று தான் போனாள்.
"நம்ம உறவுக்கு நீ இன்னும் பெயரே கொடுக்கலையே நிலா" என்றவனின் கண்கள் ஒருவித எதிர்பார்ப்பை அப்பட்டமாய் வெளிப்படுத்தியது.
"புரியல".
"நான் உன்னோட புருஷன். அது மட்டும் இல்லாம, உன் மாமா மகன், நீ என்னை மாமானு கூப்பிடலாம்ல" என்றதுமே அவளின் முகம் நொடியில் மாறிப் போனது.
அவளின் அலைப்புறுதலில், "என்னடா?" என்றான் ஆதூரமாய்.
"எனக்கு இந்த தாய் மாமாவோட மகன் பொற்செல்வன்ற உறவு எல்லாம் வேண்டாம். அங்கிருந்து ஆரம்பிக்கணும்னா என்னால அதுக்கு மேல மூவ்ஆன் ஆகவே முடியாது. அப்படியே ஸ்ட்ரக் ஆயிடுவேன். நடந்த கசப்பை எல்லாம் மறந்துட்டு என் புருஷன் பொற்செல்வன்னு நினைச்சதால மட்டும்தான் என்னால இந்த அளவுக்கு உங்களோட வாழ முடிஞ்சது. நம்முடைய உறவு நமக்கு முன்னாடி வாழ்ந்தவங்களோட தொடர்கதையா இருக்க வேண்டாம். நம்மில் இருந்து தொடங்குற கதையா இருந்தா மட்டும் போதும். புருஷனா நெனச்சு மாமான்னு நான் சொல்லனும்னா சொல்லுங்க சொல்றேன். தாய் மாமாவோட மகனா நெனச்சு வேண்டவே வேண்டாம்" என்றாள் கலங்கிப் போய்.
அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் அவளின் உச்சந்தலையில் தன் இதழைப் பதித்தவாறு, "உனக்கு என்னை எப்படி கூப்பிடனுமோ அப்படியே கூப்பிட்டுக்கோ. நீ சொல்ற போல நம்மில் இருந்தே நம்ம உறவ ஆரம்பிப்போம்".
அன்போடும், காதலோடும் அதற்கு சமமான மரியாதையோடும், கௌரவத்தோடும் அவளை நடத்தும் ஒரு கணவன்.
செந்நிலா ஆசைப்பட்டது போன்றே எந்த ஒரு இடத்திலும் அவளை கைவிடாமல் அவளின் கையை பலமாய் பற்றிக் கொண்டே அனைத்து சூழலிலும் அவளுக்கு துணையாய் நிற்பவன்.
யாரும் ஒரு வார்த்தை அவளை தவறாய் பேசிவிடாமல் அவளின் மரியாதையை காக்க துணை நிற்பவன்.
அதுவே அவள் நெகிழ்ந்து போக போதுமானதாய் இருந்தது. அவளின் தேவை என்ன என்று இவனுக்கு தெரியாதா..
என்னதான் பேச்சும், பழக்கமும் இல்லை என்றாலும், அவளைப் பற்றிய செய்திகள் இவனின் காதில் வந்து விழுந்து கொண்டே தானே இருந்தன.
அவளின் மனவலி, அது தந்த போராட்டம் என அனைத்தையுமே அறிந்தவனுக்கு அவளுக்கு என்ன தேவை என்பது மட்டும் தெரியாமல் போய்விடுமா என்ன..
அவளின் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறான் தன்னால் முடிந்த மட்டும்.
"ம்கூம்" என்று அவர்கள் அருகில் வந்து தங்கள் குரலை செறுமி காட்டிய அனிதாவும், யமுனாவும், "போதும் போதும். நாங்களும் இங்க தான் இருக்கோம். இப்படி நடு கூடத்துல நின்னுகிட்டு ரொமான்ஸ் பண்ணுறீங்க. அண்ணா இருந்தாலும் நீங்க ரொம்ப தான் பொண்டாட்டி பக்கம் சாய்ஞ்சுட்டீங்க" என்று விளையாட்டாய் கூறி நகைத்தனர்.
தாய்மாமன் முறையில் அமர ஆள் இல்லாததால் உறவு முறையில் ஒருவரை அமர வைத்து அவரின் மடியில் தான் குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்தும் நிகழ்வு இனிதாய் அரங்கேறியது.
அதே ஊரில் தான் சிறு வயது முதல் வளர்கிறாள் என்றாலுமே, அனைவருடனும் என்ன தான் நட்பு பாராட்டினாலும், காமாட்சியின் வார்த்தைகள் அனைவருக்குமே தெரியும்.
அதில் அவளுக்குள் ஒரு நெருடல் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், இன்றோ அது அனைத்துமே நீங்கி விட்ட உணர்வு. எங்கேயோ திருமணம் செய்து கொண்டு யாரின் கண்களிலும் படாமல் தனித்து சென்று விட்டிருந்தால் கூட இப்படி இவர்களில் மத்தியில் இத்தனை கௌரவமான வாழ்க்கை கிடைத்திருக்குமோ என்னவோ..
இப்பொழுது பொற்செல்வனின் மனைவி என்னும் பெயருக்கு தான் எத்தனை மரியாதை என்று பூரித்துப் போனாள்.
அவள் வாழ்க்கையில் இழந்த மரியாதையை மீட்டெடுக்கும் வழி இங்கிருந்து சென்றால் தான் என்பதை விட, பொற்செல்வனின் மனைவி என்னும் பெயருக்கு தான் எத்தனை மரியாதை என்பதை உணர்ந்தவளுக்கு அப்படி ஒரு ஆத்மார்த்த திருப்தி.
இவர்களின் உறவு காதலாலும், அன்பாலும் ஏற்பட்டதோ பிணைக்கப்பட்டதோ கிடையாது. அதையும் தாண்டி ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் மரியாதை, நம்பிக்கை, நன்றியுணர்வு என பல தரப்பட்ட உணர்வுகளால் பிணைக்கப்பட்டது தான் இவர்களின் உறவு.
அனைவருமே தேவராஜன் வீட்டில் தான் கூடியிருந்தனர். ஆண்கள் ஒருபுறம் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க. பெண்கள் ஒரு புறமிருந்து பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.
ஏனோ, அவர்களிடம் ஒட்டாமல் சற்று தள்ளியே அமர்ந்திருந்த இந்திராவிற்கு தான் செந்நிலாவைப் பார்க்கும் பொழுதும், ரதியைப் பார்க்கும் பொழுதும் தன் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு அவர்களின் வாழ்க்கையை எண்ணி சிறு பொறாமை தலைதூக்கச் செய்தது.
அவளின் பார்வையை உணர்ந்த காமாட்சி பாட்டிக்கு ஏனோ மனம் நெருடலாய் இருக்கவும். வேகமாய் சமையலறைக்குள் நுழைந்தவர் காய்ந்த மிளகாயும், உப்பையும் கொண்டு வந்து, "இந்தாருங்கடி, போயி அவ அவ புருசன் பக்கத்துல நில்லுங்க" என்று அதட்டல் போட்டார்.
தங்கள் மாமியாருடன் இணைந்து கலகலத்துக் கொண்டிருந்த மருமகள்கள் அவரின் திடீர் அதட்டலில் திடுக்கிட்டு விழித்தனர்.
"என்ன அப்பத்தா திரும்ப ஆரம்பிச்சிட்டியா? இப்ப எதுக்கு அவகிட்ட அதட்டுற" என்று தன் வேட்டியை மடித்துக் கொண்டே வந்துவிட்டான் ரகு.
"பொண்டாட்டிய ஒத்த வார்த்த சொன்னா தாங்காது. உடனே வந்துருவான் சண்டைக்கு. செல்வா நீயும் இங்க வா, வந்து உங்க பொண்டாட்டிங்க பக்கத்துல நில்லுங்க" என்றவாறு தன் மகன்கள், மருமகள்கள், பேரன் பேத்திகள் அவர்களின் குழந்தைகள் என அனைவரையுமே ஒன்றாக அமரச் செய்தவர் மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து திருஷ்டி சுத்தினார்.
"என்னக்கா மாமியார் திடீர்னு பேக் அடிக்கிறாங்க. நம்ப முடியலையே" என்றார் கீதா கிசுகிசுப்பாய்.
வள்ளியோ காமாட்சியின் செயலை வாயைப் பிளந்து கொண்டு தான் பார்த்தார்.
இன்னமுமே அவரிடம் அதே அதட்டல், மிரட்டல்கள் எல்லாம் இருந்தாலுமே முன்பை விட சற்று தனித்து தான் போயிருந்தார்.
தன் கொள்ளு பேரப்பிள்ளைகளை கண்டவருக்குள் சிறு மாற்றம் உருவாகி தான் இருந்தது. தன் பேத்தியை இங்கே மணமுடித்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது தான். இல்லை என்று கூற முடியாது.
ஆனால், அது நிறைவேறாமல் போய்விட்டதற்கு முழுக்க முழுக்க தன் பேத்தி தானே காரணம் என்பதை உணர்ந்தவர். இறங்கி போய் அனைவரிடமும் சகஜமாய் பழகாவிட்டாலும், முறுக்கிக்கொண்டே சுற்றிக்கொண்டிருந்தாலும், முன்பை விட அவரின் மன நிலை இப்பொழுது சற்று மாறித்தான் இருந்தது.
"விசேஷத்துக்கு வந்தவங்க கண்ணெல்லாம் நம்ம குடும்பத்து மேல தான். ஏட்டி வீட்டுக்கு பெரியவ இதெல்லாம் உனக்கு தோனி இருக்கணும். வயசானவ நான் செய்ய வேண்டியதா இருக்கு" என்று வள்ளிக்கும் கொட்டு வைத்துவிட்டு சென்றிருந்தார்.
மீண்டும் அனைவரும் கலகலப்பாய் அமர்ந்திருந்தனர்.
பொற்செல்வனின் விழிகளோ அங்கே மனநிறைவோடு மிளிர்ந்த புன்னகையோடு பேசி சிரித்துக் கொண்டிருந்த செந்நிலாவில் படிய.
அவளின் விழிகளுமே குறுகுறுப்பில் அவனைத் தான் எதிர்நோக்கியது.
கனல் மழையாய் மனதிற்குள் அடித்து ஓய்ந்து கொண்டிருந்தவளை பனி இரவென தனக்குள் சுருட்டிக் கொண்டவன், இப்பொழுதும் தன் பார்வையால் அவளை மொத்தமாய் குளிர்வித்து சுருட்டிக் கொண்டான்.
******முற்றும்******