நிருஷிகா தினமும் வேலை முடித்து ரிஷியின் அபார்ட்மென்ட்டிற்கு செல்ல ஆரம்பித்தாள். ரிஷி அடிப்படை விஷயங்களை அவளுக்கு சொல்லி கொடுத்தான்.
“நிரு, ஒரே டயலாக்க, வேற மாடுலேஷன்ல சொல்லி பழகு. மூச்சு கட்டுப்பாடு ரொம்ப முக்கியம், அப்புறம் டிவில சத்தத்தை மட்டும் நிறுத்திட்டு அதுல வர படத்தோட சீனுக்கு நீயே பேசி பழகலாம். முதல்ல கொஞ்சமா ரெக்கார்ட் பண்ணி பேசி பழகு” என்று ரிஷி மிகவும் சீரியசாக அவளுக்கு பயிற்சி முறைகளை பற்றி விளக்க, நிருஷிகாவோ கன்னத்தில் கையை வைத்தபடி ரிஷியையே பார்த்திருந்தாள். அவன் சொன்னது எதுவும் காதில் வாங்கியிருக்கவில்லை.
அவளிடம் எந்த பதிலும் இல்லாததால் “நிரு சொன்னது காதுல விழுந்துச்சா?” என்றான் சத்தமாக
“என்ன சொன்னீங்க?” என்றாள் கனவு கலைந்தவளாக
“ஆர் யூ ஜோக்கிங்? உனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கா இல்லையா? இல்ல சும்மா வெட்டியா வந்துட்டு இருக்கியா?”
“ரிஷி, தப்பா எடுத்துக்காதீங்க. ஆபீஸ்ல வேலை செஞ்சுட்டு வந்தது ரொம்ப டயர்டா இருக்கு. எனக்கு உங்க கையால காபி கிடைக்குமா?” என்றாள்
“உனக்கு காபி போட்டு தர்றது என் வேலையில்ல” என்றான் எரிச்சலாக
“அப்போ நானே போட்டு கொடுக்கட்டுமா?”
“என்னவோ பண்ணு” சலிப்பாய் சொல்லிவிட்டு கதிர்மாறனுக்கு போன் செய்தான்.
“கதிர் உடனே கிளம்பி வாடா”
“ஏன்டா”
“இந்த நிருஷிகாவ துரத்தவும் முடியல, உட்கார வச்சு பேசவும் முடியல. படுத்தி எடுக்கறாடா. தினம் அவ வந்து போற வரைக்கும் நீயும் என் கூடவே இருக்கணும்”
“சரிடா வரேன்” என்றவன் நிருஷிகா காபி வைத்து முடிக்கும் முன் வந்திருந்தான்.
இருவருக்கும் காபியை கலந்து கொண்டு வந்து கொடுக்கும் போது ஹாலில் இருந்த ப்ரெய்ல் செஸ் போர்ட் நிருஷிகாவின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திருந்தது. அதைப்பற்றி கதிரிடம் விசாரித்தாள்.
“ரொம்ப போர் அடிச்சா, நானும் ரிஷியும் செஸ் விளையாடுவோம். எப்பவும் அவன் தான் ஜெயிப்பான், அவனை யாராலும் அடிச்சுக்கவே முடியாது தெரியுமா?” என்றான் கதிர்
“அதெல்லாமில்ல நிரு, எனக்கென்னவோ நான் ஜெயிக்கறதுக்காக வேணும்னே மொக்கையா ஆடுறானோனு சந்தேகம் இருக்கு. வேற யார்கூடவாவது ஆடுனா தான் தெரியும்”
“அப்போ என்கூட விளையாடுங்க, என்னை ஜெயிக்கறீங்களானு பாப்போம்” என்றாள் நிருஷிகா உடனடியாக
“அதெல்லாம் வேணாம் நீ கிளம்பு”
“நான் உங்கள ஜெயிச்சிடுவேனோனு உங்களுக்கு பயமா இருக்கா ரிஷி?”
“நெவர்”
“அப்போ என் கூட ஆடுங்க”
ஏனோ நிருஷிகாவின் பேச்சு ரிஷியினை தூண்டிவிட, “சரி உட்காரு அதையும் பார்த்துடலாம்” என்றான்
இரண்டு பேரும் எதிரெதிரே அமர்ந்து கொள்ள, கதிர் செஸ் போர்டை எடுத்து வந்து அடுக்கி வைத்தான். ரிஷி எப்படி விளையாட போகிறான் என்பதை காண நிருஷிகா ஆவலாக இருந்தாள். ப்ரெய்ல் செஸ் போர்டை ரிஷி தன் விரல்களால் கருப்பு கட்டங்களையும் வெள்ளை கட்டங்களையும் தடவி பார்ப்பதை கவனித்தவளுக்கு அப்போது தான் கருப்பு கட்டங்களுக்கு மட்டும் கூடுதல் உயரம் இருப்பதை கவனித்தாள். வெள்ளை கட்டங்கள் எப்போதும் போல இருந்தது. கருப்பு காய்கள் சற்று உயரமாகவும், வெள்ளை காய்கள் சற்று உயரம் குறைவாக இருப்பதையும் கவனித்தாள்.
அவள் தன்னுடைய நகர்வை அறிவித்ததும், அவள் சொன்னபடி நகர்த்தப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்து விட்டே ரிஷி, தனது அடுத்த மூவை அறிவித்தான்.
நிருஷிகா ரிஷியின் புத்திசாலித்தனத்தில் அசந்து விட்டாள். பார்த்து காய்களை நகர்த்தினாலே எதாவது ஒன்றில் கோட்டை விட்டு விடுவோம். ஆனால் ரிஷி தன் மனக்கண்ணில் காய்ன்கள் இருக்கும் இடத்தை கணக்கிட்டு தன்னுடைய அடுத்த மூவை கூறினான். அவனுடன் போட்டி போட்டு அவனை வெல்வது கடினமாக இருந்தாலும் தன்னால் முடிந்தவரை அவனுக்கு அடிக்கடி செக் வைத்தாள். அதை உணர்ந்த ரிஷி, “பிரில்லியண்ட் மூவ் நிருஷி, என்னமோனு நினைச்சேன், கதிர விட நல்லாவே டஃப் கொடுக்கறே. வெல்டன்” என்று தொடர்ந்து அவளுடன் ஆடினான்.
ஒரு கட்டத்தில் இருவரும் சுவாரசியமாக ஆட தொடங்கிவிட, கதிர்மாறன் இருவரையும் மகிழ்ச்சியுடன் பார்த்தபடி இருந்தான். அலைபேசியில் அழைப்பு வரவே அங்கிருந்து நகர்ந்தான். இறுதியில் ரிஷி ஜெயித்துவிட “ரிஷி யு ஆர் சோ பிரில்லியண்ட்” என்று நிருஷிகா சட்டென்று அவனின் கையை பற்றி குலுக்கினாள்.
தன் வலியகரத்தில் பஞ்சுமெத்தையாய் படிந்திருந்த உள்ளங்கைகளின் மென்மையை உணர்ந்தவன் அவளிடமிருந்து தன் கரத்தை வேகமாக இழுத்துக் கொண்டான்.
“ரிஷி, நான் விளையாடி ரொம்ப நாளாச்சு. அதான் தோத்துட்டேன். இன்னொரு முறை ஆடலாமா?”
“நேரமாச்சு, கிளம்பு மொதல்ல” என்றான் அழுத்தமான குரலில்
“சரி, நாளைக்கு உங்களை ஜெயிச்சு காட்றேன்”
“நீ எதுக்கு இங்கே வந்தேனே ஞாபகமிருக்கா நிரு?”
“எதுக்கு?”
“டப்பிங் கத்துக்கறேன், வாய்ஸ் ஓவரிங் பண்ண போறேன், மிமிக்ரி கத்துக்கறேன்னு வந்தே. அத தவிர மத்த எல்லாத்தையும் பண்றே” என்றான்
‘அச்சோ சரியா கண்டுபிடிச்சிட்டாரே’
“ஒன்லி சிக்ஸ் டேஸ் மோர்” என்று அவளுக்கு நினைவு படுத்தினான்.
அவள் கையை உயர்த்தி அவன் தலையில் குட்டுவது போல பாவனை செய்த சமயம் கதிர் உள்ளே நுழைந்தவன் அந்த காட்சியை கண்டு, “நிருஷிகா! ஹவ் டேர் யூ? என்ன பண்ணிட்டு இருக்க?” என்றபடி வேகமாக வந்தான்
ரிஷிக்கு எதுவும் புரியவில்லை, “என்னாச்சு கதிர்?”
அவனுக்கு பதில் சொல்லாமல் “அவுட், எவ்ளோ தைரியமிருந்தா ரிஷிய அடிக்க கை ஓங்கியிருப்ப?”
“இல்ல கதிர், நான் சும்மா அவரை செல்லமா குட்ற மாதிரி செஞ்சேன். அவர் எத்தனை நாள் மீட் பண்ண ஒத்துக்கிட்டாருங்கறத நொடிக்கொருமுறை சொல்லி காட்டிட்டு இருந்தாரு, அதனால”
“அதனால? நீ அவனை கை ஓங்கிடுவியா? கிளம்பு முதல்ல? இனி இந்த பக்கம் வரக்கூடாது” கதிர் சரமாரியாக திட்ட தொடங்கிவிட்டான்.
நிருஷிகா கதிருக்கு சமாதானம் செய்ய முடியாமல் கண்கலங்கி விட்டாள்.
“ஸ்டாப் இட் கதிர்” நண்பனை அடக்கினான் ரிஷி
கதிர் திகைப்புடன் ரிஷியை பார்க்க, “அவ விளையாட்டுக்கு அப்படி செஞ்சிருப்பாடா, அதுக்கு ஏன் ஓவரா ரியாக்ட் பண்றே? நிரு நீ கிளம்பு”
“ரிஷி, நான் விளையாட்டுக்கு தான் அப்படி பண்ணேன். கதிர் இத இவ்ளோ சீரியசா எடுத்துட்டு திட்றாரு. நீங்க என்னை தப்பா நினைக்கல இல்ல” என்றாள் தேம்பிக் கொண்டே
“நெவர், நீ கிளம்பு”
நண்பர்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. சிறிது நேர மெளனத்திற்கு பிறகு, “கதிர் அவ போய்ட்டாளா?”
“ம்”
“நிருஷிகா என்னை நார்மலா டிரிட் பண்றது எனக்கு பிடிச்சிருக்குடா. விளையாட்டுல எனக்கு விட்டு கொடுக்கணும்னு நினைக்கல, மொக்கையா தான் விளையாடப் போறானு நினைச்சேன். ஆனா நிஜமாவே டஃப் கொடுத்தா. நமக்கு தான் அவ புதுசு. ஆனா அவள பொருத்தவரைக்கும் நான் ஏதோ பல வருஷமா அவ கூடவே பேசிட்டு, டிராவல் பண்ணிட்டு இருந்ததா நினைக்கறா. அதனால என்கிட்ட கொஞ்சம் ஓவரா உரிமை எடுத்துட்டு பழகறா. எனக்கு அது நல்லாவே புரியுது. எனக்கு தெரியாம என் தலையில குட்டணும்ங்கிறது அவ நோக்கமில்ல.
நான் அடிக்கடி அவளுக்கு இந்த சந்திப்பு நிரந்தரமில்லனு ஞாபகப்படுத்திட்டே இருக்கறதால கடுப்பாகி விளையாட்டா பண்ணியிருக்கா. அவள தப்பா எடுத்துக்காதடா”
“ஓஹோ, நான் சொல்ல வேண்டிய டயலாக்க நீ சொல்லிட்டு இருக்கே, என் வேலை சுலபமாயிடுச்சு. உனக்கு அவள பிடிச்சிருக்கில்ல, அவகிட்ட உன்னோட காதல எப்போ சொல்ல போறே ரிஷி?” என்றான் கதிர் ஆர்வத்துடன்
“லூசு மாதிரி பேசாத கதிர். ஒரு பிரெண்டா அவள ஏத்துக்கலாம். மத்தபடி எதுவும் சரிவராது. நான் இப்போ பேசினது கூட அவளுக்கு தெரியக்கூடாது. இல்லனா இன்னும் அட்வான்டேஜ் எடுத்துட்டு என்னை விடாம துரத்துவா. அவ வந்து போக போற இந்த ஒரு வாரம் சந்திப்பு என் வாழ்நாள் முழுசும் நினைச்சு சந்தோஷப் படறமாதிரியான இனிய நினைவுகளா இருந்தா போதும். இது நிரந்தரமில்ல, திரிசங்கு சொர்க்கம்னு எனக்கு தெரியும். அதனால எனக்கான எல்லை எதுனு எனக்கும், நான் அவளுக்கு எப்பவும் செட்டாக மாட்டேன்னு அவளுக்கும் சொல்லி புரியவச்சுட்டா போதும்”
கதிர்மாறனோ ரிஷியின் மனதில் நிருஷிகா எப்படியோ நுழைந்துவிட்டாள் என்று புரிந்து கொண்டான். இது காதல் என்பதை ரிஷி உணர்ந்து கொண்டால் போதும், நண்பனுக்காக எப்பாடுபட்டாவது இருவரின் திருமணத்தை நடத்திவிடலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
நிருஷிகா வீட்டிற்கு சென்றதும் “ஏன் லேட்?” என்ற மைதிலியின் கேள்விகளுக்கு முகத்தை திருப்பிக் கொண்டாலும் பதில் அளித்து விட்டே அறைக்குள் சென்றாள். இரவு சாப்பாட்டின் போது ராஜ் கேட்கும் வேலை சம்மந்தமான கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தையில் பதில் சொன்னாள். அதுவே அவளிடம் பெரிய மாற்றமாக தோன்றியது.
எப்படி இந்த திடீர் மாற்றம் என்று இருவருக்குள்ளும் கேள்விகள் இருந்தது. பதில் சொன்னாலும் நிருஷிகா முகத்தை பார்த்து பேசாததால் அவர்களால் அவளை நெருங்க முடியவில்லை. ஆனால் புவன், புவனிகா இருவரும் அவளுடைய அறைக்கு உரிமையுடன் சென்று விளையாடினார்கள், அவளுடனே உறங்கவும் தொடங்கியிருந்தார்கள்.
“தம்பி தங்கச்சிய ஏத்துக்கிட்டா, என்னை எப்போ ஏத்துக்குவா மைதிலி?” என்றார் தேவ்ராஜ் ஏக்கத்துடன்
“சீக்கிரம் ஏத்துக்குவா” மைதிலி சமாதானம் செய்தார்.
“அவளுக்கு கல்யாண வயசு வந்திடுச்சு. என்னை புரிஞ்சுக்காமலே கல்யாணமாகி போயிட்டா, கடைசிவரைக்கும் என்னை புரிஞ்சுக்க மாட்டா” என்றார் வேதனையுடன்
“நடந்த உண்மையை சொன்னா புரிஞ்சுக்கற வயசு அவளுக்கு வந்துடுச்சு ராஜ். இப்ப தானே பேச ஆரம்பிச்சிருக்கா, நான் அவகிட்ட பேசறேன். கண்டிப்பா புரிஞ்சுப்பா. நாம வேணும்னா வீட்டோட மாப்பிள்ளையா யாரையாச்சும் பாக்கலாமா?”
“அதுக்கு முன்னாடி அவ மனசுல என்ன இருக்கு? யாரயாச்சும் காதலிக்கிறாளானு தெரிஞ்சுக்கணும் மைதிலி”
“எனக்கு தெரிஞ்சு அந்த மாதிரி எதுவும் இல்ல ராஜ்” சமையலறையை ஒட்டியிருந்த அவர்களின் அறையை கடந்து பிரிஜ்ஜிலிருந்து தண்ணீரை எடுக்க வந்த நிருஷிகாவின் காதில் இது விழ, இருவரின் பேச்சையும் கவனித்தாள்.
“கொஞ்ச நாளா நிருவோட நடையில துள்ளல், முகத்துல எப்பவும் சின்னதா சிரிப்பு, அவளோட நடவடிக்கையில நல்லாவே மாற்றம் தெரியுது. கண்டிப்பா இதுக்கு பின்னாடி யாரோ இருக்காங்க. அது பிரெண்டா? இல்ல லவ்வரானு தெரியல”
“ஒருவேளை அவ யாரையாச்சும் லவ் பண்றதா இருந்தா என்ன பண்ணறது?”
“இதென்ன கேள்வி மைதிலி, நிருவுக்கு பிடிச்சவன் யாரோ அவனையே அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான். அவளோட சந்தோசம் தானே நமக்கு முக்கியம்” என்று தேவ்ராஜ் பேசியது கேட்டதும் நிருஷிகா தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.
‘இந்த சாமியார் ரிஷிய மலையிறக்கிட்டா போதும், கல்யாணத்துக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது’ என்று மனதிற்குள் ரிஷியை செல்லமாக திட்டிக் கொண்டாள்.
மறுநாள் காலை வேலைக்கு செல்லும் போது மைதிலியும் ராஜ்ஜூம் அவளை குறுகுறுவென்று பார்ப்பதை கண்டும் காணாதது போல இருந்தாள். ஒரு வேளை அவள் யாரையாவது காதலிக்கிறாளா என்று கேட்க நினைக்கிறார்களோ என்னவோ? ரிஷியின் காதலை உறுதி செய்யாமல் அவர்களிடம் என்ன சொல்ல முடியும்?
தினந்தோறும் மாலையில் ரிஷியை காண சென்றாள். அவன் கூறும் அறிவுரைகளை கேட்டபடி அவனுடன் செஸ் விளையாடிவிட்டு வருவதை வழக்கமாக்கி கொண்டாள்.
சிலசமயம் கதிர் வந்துவிட்டால் மூவரும் சேர்ந்து செஸ் விளையாடினார்கள். இதனால் மூவருக்குள்ளும் நட்பு வளர்ந்திருந்தது. நிருஷிகா மட்டும் காதலை சொல்லியிருக்கவில்லை என்றால் அவளை வாழ்நாள் நட்பாக்கியிருப்பான் ரிஷி. ஆனால் அவள் விளையாட்டின் போதும் ரிஷியை ஆர்வமாக கவனிப்பதாக கதிர் சொன்னதால் அவளிடம் தன் மனதை மறைத்து ஒதுக்கத்துடனே நடந்துக் கொண்டான்.
(தொடரும்)

Last edited:
Author: STN - 94
Article Title: பாவை 08
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.