புது மங்கல சௌபாக்கியம் - 9

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,513
113
Germany
அத்தியாயம் 9


"ஹலோ எங்க இருக்க??"

"இதோ பக்கத்துல வந்துட்டேன்.."

"சொன்னா சொன்ன நேரத்துக்கு வர தெரியாதா.. உனக்காக எங்க அம்மா காத்துருக்காங்க.."

"ப்ச்!! கொஞ்சம் மேப் கன்பியூஸ் பண்ணிடுச்சு சார்.. வந்துட்டேன்.."

"இதுக்கு தான் நான் வரேன்னு சொன்னேன்.. பெரிய இவளாட்டம் வந்துக்கறேன்னு சொன்ன??"

நித்திக் சரண் புது வீட்டு வாயிலிருந்து கைபேசி மூலம் வெண்ணிலாவை எண்ணெய் இல்லாமல் பொரித்துக்கொண்டிருந்தான்.. பின்னாடி அடித்த ஹாரன் சத்தத்தில் திரும்பி பார்க்க, அங்கே பேபி பிங்க் நிற சேலையில் தலை நிறைய மல்லி பூ வைத்து, நெற்றியில் கல் பொட்டு, கழுத்தில் இவன் கட்டிய தாலி கூடவே கழுத்தை ஒட்டி குட்டியாக செயின் காதில் குடை ஜிமிக்கி, கையில் கண்ணாடி வளையல் என்று சர்வ லட்சணமாக ஸ்கூட்டியில் வந்தவளை எந்தவொரு சாதாரண ஆணும் ரசிக்க தான் செய்வான் ஆனால் இங்கு நிற்பவன் சிடுவன் ஆயிற்றே அவளை முறைத்துக்கொண்டு நின்றான்..

"சாரி சார்!!" ஸ்கூட்டியை விட்டு இறங்கி முத்து முத்தாக வியர்திருந்த முகத்தை இடுப்பில் சொருகிருந்த கைக்குட்டையில் துடைத்தாள்..

"எதுக்கு புடவை கட்டிட்டு வந்த?? தலைல எதுக்கு இவ்ளோ பூ?? உனக்கு என்ன இங்க முதல் இரவா நடக்க போகுது?? இவ்வளவு அலங்காரம் பண்ணிட்டு வந்தா நேரம் ஆக தான் செய்யும்.."

அம்பு போல் பாயிந்த சூடு சொற்கள் கேட்டு வெண்ணிலாவிற்கு சலிப்பாக இருந்தாலும் தன் பெட்டியை இறக்கி அவள் பாட்டுக்கு உள்ளே செல்ல,

"எங்க உன் பாட்டுக்கு உள்ள போற.. இரு!!" என்றவன், "மோவ்!! உன் மருமக வந்துட்டா.. சீக்கிரம் வா.."

"ஏன் சார் உடம்பு முடியாதவங்கள நடக்க வைக்குறீங்க??"

"ஹான் வேண்டுதல்.." என்றவன் ஆரத்தி கரைத்து கொண்டுவரும் அன்னை முகத்திலிருக்கும் மகிழ்ச்சியை பெருமூச்சுடன் பார்த்தவன் தன் தோளுக்கு இருந்த வெண்ணிலா பக்கம் குனிந்து, "அவங்க முன்னாடி சார், மோருன்னு கூப்டு வைக்காத!!" முகத்தை சிரித்த மாதிரி வைத்துக்கொண்டே அவள் காதில் கிசுகிசுத்தான்..

"என்னா அழகு!! என் கண்ணே பட்டுடும் போலடா." உடல் நோய் மறந்து பரபரப்பாக சுற்றும் யசோதாவை பார்க்க அனைவருக்குமே பாவமாக தான் இருந்தது..

வலது கால் எடுத்து வைத்து அந்த வீட்டிற்குள் நித்திக் மனைவியாக அடியெடுத்து வைத்தாள் வெண்ணிலா..

"அம்மாடி வெண்ணிலா!! இங்க வாம்மா.." அடுபடியிலிருந்து சத்தம் வரவும் இவளும், "இதோ வரேன் அத்த!!" என்று ஏதோ பேச வந்த நித்திகை இடித்து தள்ளிவிட்டு ஓடினாள்..

"மெதுவா வாடாமா!! இந்தா பால் காயிச்சுடு.. ஆமா உனக்கு சமைக்க தெரியுமா??"

"சூப்..." என்று ஏதோ சொல்ல வந்தவள் வாசலில் நின்று உள்ளே நித்திகை எட்டி எட்டி பார்த்து கண்ணை துடைக்கும் சாருவை பார்த்தவளுக்கு தான் ஏற்றிய நாடகம் நினைவு வர, "சூடு தண்ணி கூட வைக்க தெரியாது!!" என்று கிளுக்கி சிரிக்க, "அதுல என்ன பெரும??" என்று யசோதா கேட்ட தோரணையில் எச்சில் விழுங்கினாள் புது மருமகள்..

"அதில்ல அத்த!!"

"இங்க பாருடாமா எந்தெந்த விஷயத்துல செல்லம் கொடுக்கணுமா அந்த விஷயத்துல நான் உனக்கு பிரண்டு மாதிரி ஒரு அம்மா மாதிரி ஆனா எந்தெந்த விஷயத்தில் ஸ்ட்ரிக்டா இருக்கணுமோ அதுல உனக்கு நான் மாமியார் தான்.. பொண்ணு தான் சமைக்கணும்கிறது அவசியம் இல்ல தான் அதே சமயத்துல நமக்கு தேவையான அடிப்படை சமையல் நம்ம தெரிஞ்சிருக்கணும் புரியுதா??"

"சரிங்க அத்த!!" என்றவள் நாளா பக்கமும் மண்டையை ஆட்டிவைத்தாள்..

இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நித்திகிற்கு முதல் முறை சிறு நெருடல் வந்தது.. வங்கி முழுவதும் வெண்ணிலாவின் சமையல் பெருமையை பற்றி கேட்டிருக்கிறானே ஏன் பலமுறை, "நீ கட்டிக்க போறவன் ரொம்ப குடுத்து வச்சவன் இப்படி வாய்க்கு வக்கனையா சமைக்கிற." என்று கூறி கூட கேட்டிருக்கிறான் ஆனால் இன்று தன் காதலுக்காக தான் இதெல்லாம் செய்கிறாள் என்று சற்று வருத்தம் வந்தாலும் சாருவே அவன் மதியிலிருக்க, "பரவால்ல எல்லாத்தையும் ஒத்துக்கொண்டு தானே நடிக்க வந்தா!" என்று மனதை மாற்றினான்..

புது வீடு என்பதால் தேவையான பொருள்கள் மட்டும் இருக்க பால் காய்ச்சி, சக்கர பொங்கல் மட்டும் செய்தார்கள்.. சமைத்த பொங்கலை மருமகள் கையால் சாமி கபோர்டில் படையல் போட வைத்தாள்..

"ரொம்ப நிறைவா இருந்துச்சு நித்திக் குட்டி ஒரே ஒரு குறை தான்.."

"என்னம்மா??" குறையா என்னது அது அன்னை எள் என்றால் எண்ணெயாக நிற்கக்கூடிய மகனுக்கு பதறியது..

"இந்தா இந்த குங்குமத்தை வெண்ணிலா நெத்தில வச்சு விடு." என்றவர் தாழம்பூ குங்குமத்தை எடுத்து நீட்ட நித்திக் நடுங்கிய விரலில் எடுத்து நெற்றி அருகே கொண்டு போக அனிச்சன் செயலாளாக வெண்ணிலாவின் கரங்கள் அவள் நெஞ்சுக்குழிக்குள் பதுங்கி இருக்கும் மாங்கல்யத்தை எடுத்து நீட்டியது.. சற்று அதிர்ந்தாலும் அன்னை முன்னே முகத்தை எந்தவித மாறுபாடும் காட்டாமல் மாங்கல்யத்திலும் நெற்றியிலும் வைத்தவன் கைகள் அதுவாகவே வகுட்டிலும் வைத்தது..

கண்கள் நான்கும் ஒன்றைன்று கவ்விக்கொள்ள, "நான் போயி சாருக்கு பொங்கல் குடுத்துட்டு வரேன்.. அவளுக்கு தான் பொங்கல் பிடிக்கும்.." என்ற யசோதா சின்னஞ்சிறுசுகளுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்று வேகமாக வெளியேறினார்..

சாரு என்ற பெயரைக் கேட்டவுடன் தான் என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறோம் என்பவனுக்கு தன்னையும் மீறி கோபம் அவன் மேலேயே வந்தது அதை காட்டிலும் தன் முன்னே தைரியமாக தாலியை நீட்டி உரிமை கொண்டாடிய வெண்ணிலாவின் மீது கொலை வெறியே வந்தது..

"ரூமுக்கு வா!!" என்றவன் உருமல் அவளுக்கு பயத்தை குடுத்தாலும் தைரியமாக அவன் பின்னே சென்றாள்.. ஒரு படிக்கையறை ஒரு ஹால் ஒரு கிச்சன் கொண்ட சாதாரண வீடு தான் அது..

"அம்மா ஒரு பெட்ரூம் தான் இருக்கும் எப்படிம்மா நீங்க இருப்பீங்க?? " என்று கேட்ட மகனுக்கு, "நான் ஏன்டா இங்கே இருக்க போறேன் நீங்க ஒத்துமையா வாழ்வதை கண் குளிர பார்த்துட்டு நான் எப்பயும் போல மாமா கூடவே இருந்துக்குவேன்.." என்று சொன்ன அன்னை பேச்சை மீற முடியாமல் இதோ குடித்தனதுக்கு வந்தாச்சு..

"அறிவு இருக்கா உனக்கு அம்மா முன்னாடி நீ பாட்டுக்கு தாலிய தூக்கி நீட்டுற?? "

"அது அவங்களுக்கு சந்தேகம் வரக்கூடாதுன்னு செஞ்சேன். " பின்னே சொல்லவா முடியும்.. உன் கையால் மாங்கள்யத்தில் குங்குமம் வாங்க ஆசை என்று..

" மேடம் நீங்க எதுக்கு வந்து இருக்கீங்கறது மறந்து போச்சா?? நீ இப்படி தலைய தலைய புடவ கட்டிகிட்டு தாலியோட சுத்துனினா உன்ன விட பெஸ்ட் மருமகள் யாருமே இல்லன்னு எங்க அம்மா சர்டிபிகேட் கொடுத்துடுவாங்க. "

"அப்படி நினைக்கிறவளா இருந்தா நான் எனக்கு தெரிஞ்ச சமையல ஏன் தெரியாதுன்னு முதல் நாளே கெட்ட பேர் வாங்குவேன் சார். "

"அதானே அப்ப கூட நான் உன்னை நினைச்சு பெருமை தான் பட்டேன். நமக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறான்னு அதெல்லாம் நீ தூக்கி காட்டுன தாலில மொத்தமா காணாம போய்டுச்சு. "

"ஹான்!! நான் தாலியை தூக்கி காமிச்சா நீங்க உடனே அதுல குங்குமம் வச்சிருவீங்களா சார்?? நான் தாலிய நீட்டுனது தப்புதான் சார் நீங்க அதுல குங்குமம் வச்சதும் தப்பு இல்ல சார்.. உங்க அம்மா நெத்தில தானே பொட்டு வைக்க சொன்னாங்க ஏன் உங்க கை என் நெற்றி வகுட்டுல வச்சுவிட்டுச்சாம்??.." கையை இடுப்பில் வைத்து புசு புசு மூச்சுடன் நின்றாள் வெண்ணிலா..

"அது... வந்து.."

"ம்ம்ம்ம்!! பதில் சொல்ல முடியலையா?? எனக்கும் அதான்.. உங்களுக்கு இப்போ என்ன சார் வேணும்.. உங்க அம்மா என்னைய வெறுக்கணும்.. சாரு தான் உங்களுக்கு பொறுத்தமுன்னு சொல்லணும் அவ்ளோதானே சார்.. நான் பாத்துக்குறேன்.. போங்க.."

"போங்கன்னா?? இது என் வீடு.."

" ஐயா சாமி வம்புக்கு வராதீங்க போங்கன்னா ஹால்ல வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன் இன்னும் ஒன் ஹவர்ல பர்மிஷன் முடிஞ்சிடும்.. நான் டிரஸ் மாத்தணும்.."

கடைசி வார்த்தை மட்டும் முணுமுணுப்பாக வர, "சாரி.. சாரி!!" என்றவன் வெளியே ஓடி விட்டான்..

"எங்கடா கிளம்பிடீங்க??" சாருவுடன் பேசிவிட்டு வந்த யசோதா கேட்டாள்..

"பேங்க் தான் ம்மா.."

"என்னடா இப்புடி முத நாளே வேலைக்கு போகணுமா?? இன்னும் சாப்பாடு கூட சமைக்கலையேடா.."

"அம்மா பேங்க்ல ஆடிட் போயிட்டு இருக்குமா பர்மிஷன் போட்டு வந்ததே பெரிய விஷயம்.. அது போக நாங்க சாப்பாடு எல்லாம் கடையில பார்த்துக்குறோம்மா.. நீ ஸ்ட்ரைன் பண்ணிக்காத.. நான் பப்பூகிட்ட சொல்லிட்டு போறேன் அவ உனக்கு பிரேக்ஃபாஸ்ட் லஞ்சம் எல்லாம் கொண்டு வந்து கொடுப்பா. "

"இல்ல தம்பிஈஈஈ!!"

"சொல்லுங்கம்மா!!"

"அது நீ சாரு கூட பேசுறது இனிமே அவ்வளவு நல்லதா இருக்காதுப்பா.. உனக்குன்னு பொண்டாட்டி வந்துட்டா அவ ஏதாவது உங்களை தப்பா நினைச்சு குடும்பத்துக்குள்ள பிரச்சனை ஆயிடும். இது நம்ம மாமா வீடு தானே நானே பார்த்துக்கிறேன் நீ சாரு கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்."

என்றவர் பேச்சில் சலிப்பாக பார்க்க யசோதா பின்னாடி கண்ணை கசக்கிக்கொண்டு சாரு நின்றாள்.. யசோதா பேச்சை விட சாருவின் இந்த அடிக்கடி கண் கசக்கல் தான் நித்திகிற்கு இப்பொழுதெல்லாம் ரொம்பவே எரிச்சல் குடுக்கிறது..

"மாமாஆஆ!!" தழுதழுத்த குரலில் சாரு,

"ப்ச்!! சாரு சின்ன புள்ளையா நீ எதுக்கு எடுத்தாலும் கண்ண கசக்கிகிட்டு நிக்கிற மாமா உனக்காக தானே இதெல்லாம் பண்ணிட்டு இருக்கிறேன் சும்மா அப்பப்போ வந்து கண்ணு கசக்கி என்னை இன்னும் நோகடிக்காத சாரு."

என்றவன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.. அடுத்து வந்த வெண்ணிலா வண்டியை எடுக்க வர, " ஏய் எங்க மாமா கையால தாலி வாங்கிக்கிட்டன்னு ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத எங்க மாமா மனசு முழுக்க நான் மட்டும் தான் இருக்கேன் எனக்காக தான் இந்த நாடகமே.. எனக்காக என்ன வேணாலும் செய்வாரு.. அத நினைப்புல வச்சுக்கோ.. "

என்றவள் கழுத்தை திருப்பிக்கொண்டு செல்ல வெண்ணிலாவிற்கு, "லூசு குடும்பத்தில் மாட்டிக்கொண்டோம்!!" என்று தான் இருந்தது..

என்னதான் வங்கியில் புருஷன் மேனேஜராக இருந்தாலும் நமக்கென்று சில கட்டுப்பாடுகள் இருக்கிறது அல்லவா அவள் சொன்ன நேரத்திற்குள் இந்த டிராபிக்கில் வண்டியை உருட்டிக்கொண்டு எப்படித்தான் போகப் போகிறோமோ என்றவள் கண்ணாடியை பார்க்க மறந்தாள்.. அதன் பயன் நெற்றியிலும் வகுட்டிலும் நித்திக் வைத்த குங்குமம் அப்படியே இருந்தது.. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் எப்பொழுதும் போல குர்தாவிற்கு மாறியவள் தலையில் வைத்திருந்த பூவையும் கலட்டவில்லை குர்தா மேலே ஒய்யாரமாக தொங்கும் தாலியையும் உள்ள எடுத்து போட மறந்தாள்..

"ஹே வெண்ணிலா என்ன இது??" கூட வேலையை பார்க்கும் ஒரு திருமணம் ஆன பெண் கத்தி கேட்க அனைவரும் இவளை பார்க்க எல்லார் கண்ணிலும் தென்பட்டது புது பெண் போல ஜொலிக்கும் வெண்ணிலாவை தான்..
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: புது மங்கல சௌபாக்கியம் - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
இந்த சாரு சரியான பச்சோந்தி😏😏😏😏😏
அவன் இருந்தா கண்ணை கண்ணை கசக்குவதும்.....இவ கிட்டனா திமிரா பேசறதும் 😬😬😬😬😬
நிலா சொன்ன மாறி சரியான பைத்தியக்கார குடும்பம் தான்
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online