• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புது மங்கள சௌபாக்யம் - 13

STN - 50

New member
Staff member
"மேடமுக்கு அப்புடி என்ன யோசனையோ??"

அள்ளி முடிந்த கொண்டையும், இரவு ஆடையில் கட்டில் மேல் ஒய்யாரமாக ஒரு காலை மடக்கி மற்றொரு காலை ஆட்டிக்கொண்டு பக்தர்களுக்கு அருள் புரியும் அம்மன் தோரணையில், கையில் ரிமோட்டை வைத்து தாடையில் குத்திக்கொண்டே யோசனையில் இருக்கும் வெண்ணிலாவை இடித்துக்கொண்டு அமர்ந்தான் நித்திக்..

ஒரே வீடு, ஒரே அறை, ஒரே வங்கி இவர்களின் தூரத்தை சற்று நெருக்கமாக்கிருந்தது.. சகஜமாக தொட்டு, உணவு பரிமாறி, கேலி கிண்டலில் அடித்துக்கொண்டு பேசும் அளவு முன்னேறி இருந்தார்கள்..

"ப்ச்!! எனக்கென்ன தனியான யோசனை இருக்கப்போது.. எல்லாம் உங்கள பத்தி தான்.." என்றதும் ஆர்வமாக அவளை நெருங்கி அமர்ந்து வெண்ணிலா முகம் பார்க்க,

"உங்களை விட உங்க அம்மா இன்னும் ஸ்வீட்டா இருக்காங்க இவ்வளவு ஸ்வீட்டா இருக்குறவங்கள என்னால ஹர்ட் பண்ணவும் முடியல.. எப்போ நம்ம பிளான் முடிஞ்சி எப்போ நான் இந்த நாடகத்தை விட்டுட்டு என் வீட்டுக்கு கிளம்புறது??"

"ஏன் இந்த வீட்டுக்கு என்ன??"

"இந்த குசும்பு தானே ஆகாது இது உங்க வீடு எனக்குன்னு தனியா வீடு இருக்கு எங்க அப்பா வேற என்ன இப்ப எல்லாம் இங்க வரவே மாட்டேங்குறன்னு போன போட்டு கேட்டுகிட்டே இருக்காரு."

"அதுக்கு என்ன இந்த சண்டே வரேன்னு சொல்ல வேண்டியது தானே??"

"உங்க அம்மா கிட்ட என்ன காரணம் சொல்லுவீங்க புதுசா கல்யாணம் முடிஞ்சவங்க நம்மள ஒரு பிரீயா மொபைல் கூட யூஸ் பண்ண விடமாற்றங்க.. எப்போ பாரு ஒட்டிகிட்டே இருக்க சொல்றாங்க.. இதுல உங்கள விட்டுட்டு நான் எங்கத்த தனியா போறது??"

"நீ எதுக்கு தனியா போகணும் நானும் வரேன் உங்க வீட்டுக்கு?? "

"எதே!! இருக்கிற பிரச்சினை போதாதா உங்களுக்கு என் வீட்ட பத்தி தெரியாது."

"ஏன் பையன் கூட பேசினா தப்புனு உன்ன சத்தம் போடுவாங்களா??"

"ஹாஹா!! அப்படி பண்ணா தான் பரவாயில்லையே.. நானும் நீங்களும் சேர்ந்து போனோம்னா நம்ம ரெண்டு பேருக்கும் வளைகாப்பு வரைக்கும் அவங்களே நடத்தி வைத்துவிடுவாங்க.."

"ஏன் அப்புடி??"

"பின்ன நான் இன்ன வரைக்கும் எந்த ஆம்பள பையனையும் தனியா வீட்டுக்கு கூட்டிட்டு போனதில்லையே?? "

"உன் பிரண்ட் ஒரு அர மண்டையன் இருக்கானே பேர் என்ன அபிராமியா??"

"அபிஷேக்!!" என்று முறைத்தவள், "அபி கூட சரண்யா எல்லாரும் தான் வருவாங்க அதனால அபிய எங்க வீட்ல பையனாவே கான்சிடர் பண்ண மாட்டாங்க..

"பரவால்ல வா!! பிரச்சனை வந்தா நான் பாத்துக்குறேன்.."

"யோவ்!! உனக்கு நான் சொல்றது புரியுதா இல்லையா எங்க வீட்டுல பிரச்சனை பண்ண மாட்டாங்க.. ரொம்ப சங்கட்டமா ஆக்கிவிட்ருவாங்க. உன்னையும் என்னையும் இணைச்சு ஓட்டி ஓட்டியே.."

"பரவால்ல எனக்காக தானே நீ இங்க வந்து இருக்க உனக்காக அது கூட நான் செய்ய மாட்டேன்னா?? அது போக எங்க அம்மாவை விடவா நம்மளை யாரும் சங்கடப்படுத்த முடியும்?? நம்ம இதுவரைக்கும் தனி தனி சோபால கூட எங்க அம்மா நம்மள உட்கார விட்டதில்லை.." என்றவன் குறுநகை புரிய,

"சரி அப்போ அத்தைய கேட்டுட்டு சண்டே வரோம்ன்னு சொல்லிடவா??"

"ஹே மக்கு!! அம்மா கிட்ட என்ன சொல்ல போற?? அம்மா வீட்டுக்கு போய்ட்டு வரேன்னா?? உங்க வீட்ல நம்ம லவ்வுக்கு சம்மதிக்கல இப்படித்தான் நம்ம கதை சொல்லி இருக்கோம் மறந்துறாத எங்கேயாவது வெளியில் போய்ட்டு வரோம்ன்னு சொல்லி பர்மிஷன் கேட்டுக்கலாம்.."

"ஆத்தாடி ஆத்தா!! நல்லவேளை நான் மறந்தே போயிட்டேன் பாருங்க அதுக்கு தான் நீங்க எப்பவும் என் கூடவே இருக்கணுங்கிறது.."

காலை சீக்கிரம் எழுந்து அடுப்படியில் யசோதாவிற்கு உதவி செய்ய ஆரம்பித்திருந்தாள் வெண்ணிலா..

"ஏய் என்ன நீ நம்ம பிளான் மறந்து இப்படி சீக்கிரம் எந்திரிச்சு சமையல்ல அம்மாக்கு ஹெல்ப் எல்லாம் பண்ற??"

"வேற என்ன பண்ண சொல்றீங்க?? உங்க அம்மாகிட்ட நான் சமைக்க மாட்டேன்னு சொன்னா அசருறாங்களா பாத்தீங்களா சண்டை போட்டா தானே சண்டை போட முடியும் அது போக உடம்பு முடியாதவங்கள எல்லா வேலையும் செய்ய சொல்ல எனக்கு மனசாட்சி இடம் கொடுக்கலைங்க.. இது இல்லன்னா என்ன எப்படியும் வேற ஒன்னுல உங்க அம்மா மாட்டுவாங்க அதுல நல்லா தாளிச்சுவிட்டறேன்.. "

என்று சிரித்துக்கொண்டே சொல்லும் வெண்ணிலாவை எங்கணம் கோபித்து கொள்வது??

"அத்த! உக்காருங்க சாப்பிட.."

"நீங்கதான் ஒன்பதரை மணிக்கு பேங்க்ல இருக்கணும், எட்டரை மணிக்கு சாப்பிடுறீங்க எனக்கு என்னடி அவசரம்?? "

"இப்படித்தான் நாங்க போனதுக்கப்புறம் சாப்பிட்டுகிறேன்னு சொல்லி நீங்க ரெண்டு நாளா காலையில மாத்திரை எடுக்கவே இல்ல கேட்டா மத்தியானம் தான் சாப்பிட்டேன்.நீங்க போனதும் படுத்தேன் அப்படியே தூங்கிட்டேன்னு சொல்றீங்க.. இப்ப எங்க கூடவே சாப்பிட்டுட்டு டேப்லட் போட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.."

சரி என்று யசோதா காலை உணவிற்கு அமர,

"ம்மா!! நானும் அவளும் சண்டே அவுட்டிங் போலாம்னு இருக்கோம்மா.."

"நானே சொல்லணும்னு நினைச்சேன் டா.. எங்கயாச்சும் கூட்டிட்டு போயிட்டுவான்னு.. இதெல்லாம் கல்யாணம் ஆனா புதுசுல அனுபவிச்சா தான் உண்டு.. அப்புறம் புள்ள உண்டாகிட்டா மசக்க நோவு இருக்கும் புள்ள பொறந்ததுக்கப்புறம் புள்ளைய பாக்கறதுக்கே நேரம் பாதி சரியா போயிடும்."

"உங்கம்மா எங்க சுத்துனாலும் புள்ளைக்கே வந்து நிக்குறாங்க.."

"ஆமா அதுக்குன்னு நம்ம ரெடியா பண்ண முடியும்??"

முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு அதிரடி பேசும் நித்திகை வாயில் கவ்விய இட்லியுடன் பார்த்தாள்..

இருவரின் குசு குசு பேச்சு யசோதாவிற்கு கிளிகளின் கொஞ்சல் போல் இருக்க சத்தம் வராமல் இடத்தை காலி செய்தார்.. சத்தம் போடாமல் அடுப்படி நோக்கி நடக்கும் அன்னை முதுகை பார்த்து வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டான் நித்திக் சரண்..

வங்கிக்கு வந்ததும் அவரவர் அவரவர் வேலையில் மூழ்க, விடாமல் அடிக்கும் தன் கைபேசியை பார்த்தவள் யோசனையாக ஆன் செய்தாள்..

"ஹலோ அம்மா?? என்ன பேங்க் நேரத்துக்கு கால் பண்ணிருக்க?? அங்க எல்லாம் ஓகே தானே??"

"அட இரு டி.. இங்க எல்லாரும் நல்லாருக்கோம்.. நீ எப்படி இருக்க??"

"எனக்கென்னம்மா நல்லா தான் இருக்கேன்.. நைட் கூட போன் பேசுனோமேம்மா??"

"நான் கிளம்பி வரலாம்ன்னு இருக்கேன் உங்க ரூம்க்கு??"

"எதே?! எதுக்கும்மா??"

"இதென்னடி கேள்வி எப்பயாச்சும் எனக்கு தோணுறப்போ நான் வருவேனே.. நீயும் அது செஞ்சு கொண்டுவா.. இது செஞ்சு கொண்டு வான்னு ஒரு பெரிய லிஸ்டே போடுவ இப்ப ஏன் வரேன்னு கேக்குற??"

" அட அம்மா ஏன் வரேன்னு கேட்கல திடீர்னு வரேன்னு சொல்றியேன்னு தான்.. "

"பின்ன என்னடி தினமும் ஒரு நேரம் வீடியோ கால் பண்ணிடுவ வாரத்துக்கு ஒரு நேரம் என்ன வேலை இருந்தாலும் வீட்டுக்கு வந்துட்டு போவ இப்போ ரெண்டு வாரமா வீடியோ காலும் காணோம், நீயும் வர மாட்டேங்குற எப்போ கேட்டாலும் வேல வேலங்குற, நான் வந்து பார்க்கிறேன் உன்னை.. "

"ம்மா!! கொஞ்சம் வேல அதிகம் அவ்ளோதான்மா.."

"அப்புடிலாம் அங்க ஒரு வேலையும் இல்லன்னு சொன்னாங்க??"

"யார் சொன்னா??"

"நான் வேற யாருக்கு கால் பண்ணுவேன், அபியும் சரண்யாவையும் தவிர வேற யாருகிட்ட கேட்பேன்.. சரணும் ஏதோ மென்னு முழுங்கி பேசினா அதனாலதான் அபிக்கு போன் போட்டா அவன் என்னென்னவோ சொல்றான்."

அய்யயோ பாவி உளறி கொட்டிவிட்டானோ என்றவளுக்கு வியர்வை ஆறாக ஓட,

"எ.. என்ன சொன்னான்??"

" உன் போக்கே சரியில்ல அவங்ககிட்டயும் அதிகமா பேச மாட்டேங்கிறீயாம்.. தனியாவே எப்ப பாரு இருக்க.. நீ பாட்டுக்கு போற வரன்னு சொல்றான்.. அதிகமா ஒரு வேலையும் உனக்கு இல்லை ஆனாலும் யார்டையும் பேச மாட்டேங்குற அப்படின்னு என்னென்னமோ சொல்றான்.. "

"ப்ச்!! உனக்கு நான் பிள்ளையா அவன் புள்ளையா??"

"நீ தான் டி.."

"அப்போ நான் சொல்றத மட்டும் நம்பு இந்த வாரம் சண்டே நான் வருவேன் என்னோட பிரண்ட் கூட சர்ப்ரைஸா இருக்கட்டும் தான் உன்கிட்ட சொல்லல."

"ஹே அப்புடியாடி யார் டி அந்த பிரண்ட்??"

"இது பேங்க் ஃப்ரண்ட்.. உனக்குத் தெரியாது சண்டே மார்னிங் அங்க இருப்போம்."

என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டு நேராக அபியிடம் சென்று நின்றாள்.. தன் முன்னே முறைப்புடன் நிற்கும் வெண்ணிலா யோசனையாக பார்த்த அபி,

"என்னடி?" என்றான்..

"எங்க அம்மாக்கு கால் பண்ணி என்ன சொன்ன??"

"ஆண்ட்டி தான் டி கால் பண்ணாங்க.."

"சரி அதுக்கு நீ என்ன சொன்ன??"

" என்ன இப்போ ஒன்னும் தப்பா எல்லாம் சொல்லியில்லையே, நீ இப்போலாம் அவன் கூட தானே சுத்திக்கிட்டு இருக்க இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு விஷயத்தை உங்க அம்மாகிட்ட இருந்து நான் மறைச்சிருக்கேன் அதுக்கே எங்களுக்கு என்ன திட்டு விழுகுமோ அம்மாவுக்கு தெரிஞ்சா. "

"இது என் பர்சனல் அபி.."

"ஓ அப்படிங்களா மேடம் எப்ப இருந்து உங்களுக்குன்னு தனியான பர்சனல் இருக்க ஆரம்பிச்சது?? " என்றவன் முகம் கருத்து இருக்க,

"ப்ச் டேய்ய்ய்!!"

"சொல்லுங்க மேடம்.."

"அதில்லடா.."

" நேராவே கேட்கிறேன் நிலா.. உனக்கு விருப்பம் இல்லாம தான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டே இது கிட்டத்தட்ட ஒரு காண்ட்ராக்ட் மேரேஜ் தானே அப்புறம் என்னமோ ஒரிஜினல் புருஷன் பொண்டாட்டி கூட இருக்க முடியாத அளவுக்கு பொழுதனைக்கும் ஒன்னாவே சுத்துறீங்க எங்கள கூட மறந்துட்ட??"

" டேய் அப்படி இல்லடா ஒரு ப்ராஜெக்ட் எடுத்தா அதை சீக்கிரம் முடிச்சு கொடுக்கணும் இல்லையா இந்த கல்யாணமும் அந்த மாதிரி ஒரு ப்ராஜெக்ட் தான்டா??"

" யாரு கேட்டுக்கிட்டு இதற்கு ஒத்துக்கிட்ட நீ?? கிட்டத்தட்ட நம்ம பிரண்டாக்கி அஞ்சு வருஷம் இருக்குமா இந்த அஞ்சு வருஷத்துல எங்கள கேட்காமலோ எங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணாமலோ நீ தனியா ஏதாவது முடிவு எடுத்து இருக்கியா?? "

" டேய் அவர் என்கிட்டயே கேட்காம தான்டா முடிவெடுத்து கூட்டிட்டு போனாரு.. "

" இங்க பாரு நிலா அவருக்கு அவர் வாழ்க்கையும் காதலும் பெருசா தெரியலாம்.. உனக்கு அவரோட அவருக்குமான காதல் பெருசா தெரியலாம்.. அவரு முக்கியமா தெரியலாம்.. ஆனா எங்களுக்கு நீயும் உன் வாழ்க்கையும் தான் முக்கியம்." என்ற நண்பனின் தோள் சாய, சாய்வு நாற்காளியில் சுழன்று கொண்டே நித்திக் கண்கள் இதை பார்த்தது கைகளோ கையிலிருக்கும் கோப்பில் பேனாவை வைத்து வேகமாக குத்தி கொண்டே இருந்தது..

"ஹான் போதும் போதும்!! உங்க தளபதி படம்.. டி நம்ம ஹோட்டல்ல சாப்புட்டு ரொம்ப நாளாச்சு டி??"

அபி தோளில் சாயிந்திருக்கும் வெண்ணிலாவை பிரித்துவிட்டு நடுவில் அமர்ந்தாள் சரண்யா..

"அத எங்கள பிரிச்சு விட்டு தான் கேட்பியா டி தின்னி மாடு!!" அபி சரண்யா தலையில் கொட்ட கலகலத்து சிரித்தாள் வெண்ணிலா..

"அப்போ சாட்டர்டே நமக்கு ஹல்ஃப் டே தானே. சோ லஞ்ச் நம்ம வெளியில முடிச்சுட்டு ஈவ்னிங் தான் வீட்டுக்கு போறோம் ஓகே.."

ஒரு வழியாக இந்த பஞ்சாயத்து முடிந்து, "ஹாப்பாடா!!" என்று இன்றைய வேலைக்காக அவள் கணியை தொட மீண்டும் அவள் போன் ஒலித்தது..

"சுத்தம்!! இன்னைக்கு நான் வேல செஞ்ச மாதிரி தான்.." என்று போனை பார்க்க, "சிடுவன் சார்!" என்றது..

"உனக்கென்னடா வேணும்??" என்று படப்பாணியில் அழுத்து கொண்டாலும் ஆன் செய்து காதில் வைத்தாள்..

"ஹலோ சார்??"

" வேல நேரத்துல வேலை பாக்காம அங்க என்ன வெட்டி அரட்டை அடிச்சிட்டு இருக்க?? "

"ப்ச்!! இதைக் கேட்கத்தான் கால் பண்ணீங்களா அதை நான் நின்னு பேசிட்டு இருக்கும் போதே கால் பண்ண வேண்டியதுதானே??"

"மெசேஜ் பண்ணேன்.. ரிப்ளை இல்ல அதான் கால் பண்ணேன்.."

ஆர்வமாக அவள் இவனின் மெசேஜை திறந்து பார்க்க மிக மிக ஃபார்மலாக ஒரு டெக்ஸ்ட் இருந்தது..

"கோ அண்ட் சிட் யுவர் பிளேஸ்.."

"இதான் உங்க மெசேஜாக்கும்??" அழைப்பிலிருந்தவனிடம் கேட்டாள்..

"வேற??"

"ஒன்னுல.."

"ம்ம்ம்ம்."

"ஒரு சந்தேகம்??"

"என்ன??"

"நீங்க சாருவை எப்புடி லவ் பண்ணீங்க??"

"ஏன்??"

"இப்புடி சிடு சிடுன்னு இருக்கீங்க?? ஒரு பொண்ணுக்கு மெசேஜ் இப்புடியா மொக்கையா பண்ணுவீங்க??"

"பாக்குற எல்லா பொண்ணுங்ககிட்டயும் கடல போட முடியுமா??" என்றவன் அழைப்பை துண்டிக்க இவளுக்கு முகம் சோர்ந்து போனது..

'பாக்குற எல்லா பொண்ணும் நானும் ஒன்றா உனக்கு??' என்று மனதுக்குள் கேள்வி கேட்டவளுக்கு, 'ஆமாம் தானே!' என்று தான் பதில் வந்தது..


தொடரும்...
 
Top Bottom