'அய்யோ ஆண்டாவா!! இன்னும் நான் எடுத்த ப்ராஜெக்ட் முடிய ஒரு மாசம் தானே இருக்கு.. இந்த மாமியாரை எப்புடி என்மேல வன்மத்த கக்க வைக்குறது.. அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்களே.. நல்லவங்களுக்கு காலம் இல்லைங்கிறது உண்மைதான் போல அதனால தான் இவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையல.. ஹ்ம்ம்..'
இரவு உணவுக்காக அடுப்படியில் சப்பாத்தி மாவை உருட்டி கொண்டு இருந்த வெண்ணிலா தான் எப்படியாவது இன்னும் ஒரு மாதத்தில் தன்னைவிட சாரு லதா தான் இந்த வீட்டில் இருக்கவும் சரி நித்திகிற்கும் சரி ஏற்றவள் என்பதை யசோதாவை கூற வைத்துவிட வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு கண்ணில் வலியும் மறு கண்ணில் நிறைவும் இருந்தது.. தான் ஆசைப்பட்ட ஒருவனின் ஆசையை தான் நிறைவேற்ற போகிறோம் என்ற நிறைவு தான் அது..
"ச்ச என்ன மருமக இவ?? அப்பாவியா இருக்க மாமியாக்காரியையும், புருஷன் காரன் புள்ள பூச்சி கணக்கா இருக்கான் இவங்கள பத்தி இப்படி பின்னாடி கோலி மூடிகிட்டு தெருவெல்லாம் தப்பு தப்பா சொல்லிக்கிட்டு இருக்காளே இவளாம் ஒரு பொண்ணா??"
ஹாலில் கரண்டியை கையில் வைத்துக்கொண்டு யசோதா பேசிக் கொண்டிருக்க இவர் யாரை திட்டுறாங்க என்று எட்டிப் பார்த்த வெண்ணிலாவிற்கு குபீர் என்று சிரிப்பு வந்தது.. இரவு நேர டிவியில் ஓடும் சீரியலில் வரும் மாமியார் மருமகள் சண்டையை தான் வறுத்து கொண்டிருக்கிறாள் யசோதா.. அவரின் இந்த சீரியஸ் முகபாவனை பார்த்த வெண்ணிலாவிற்கு பல்பாக ஐடியா மண்டையில் உதயமாக அதை அமுல்படுத்த சந்தர்ப்பம் யோசித்தாள்..
'யோசி டி நிலா?! பசி வேற வயித்த கிள்ளுது.. இன்னைக்கு பேசாம சப்பாத்தியும் பன்னீர் குருமாவையும் சாப்பிட்டுட்டு தூங்கிடுவோம் நாளை காலைல ஃப்ரெஷ்ஷா வம்பு பண்ணுவோமா??'
'வேணாண்டி நிலா ஒன்றே செய், அதுவும் இன்றே செய்யின்னு பழமொழியே இருக்கு அதனால இன்னைக்கே செஞ்சிரலாம்!'
'ஏய் அது நல்லது செய்றவங்களுக்கு தானே டி உனக்கு என்ன??'
'ஹான்! இதுவும் ஒரு லவ்வர்ஸ் சேர்த்து வைக்கிற நல்லது தான்.'
என்று தன் மனசாட்சியுடன் பேசி கொண்டிருந்தவள் அடுப்பை சிம் கூட போடாமல் அப்படியே தன் கைபேசியை தூக்கிக்கொண்டு ஓடிட ஒரே பதட்டம், கவலையில் சற்று அதிகமாகவே அவளுக்கு தலை சுற்ற அப்படியே வாசலில் அமர்ந்தாள் சுவற்றை பிடித்துக்கொண்டு..
"நிலா!! அடுப்ப சிம்ல வை மா.."
யசோதா கத்திக்கொண்டு இருக்க, சிறிது நேரத்தில் சப்பாத்தி கருகும் வாடை வர அடித்துப் பிடித்து வேகமாக அடுப்படிக்கு ஓடி வந்தார் யசோதா.. பன்னீர் குருமா கிடாயுடன் சுண்டி கொஞ்சமே கொஞ்சம் மட்டும் இருக்க இந்த பக்கம் கல்லில் சப்பாத்தியும் முழுதாக கருகி ராட்டி போல் இருந்தது.. வேகமாக இரு அடுப்பையும் அணைத்துவிட்டு தோசை கல்லை இறக்கி போட்டவர் குருமாவை முடிந்த மட்டும் கொஞ்சமாக மேலாக வழித்து எடுத்து வைத்துவிட்டு, 'இந்த பொண்ணு எங்க போச்சு?' என்று சற்று எழும்பிய கோபத்துடன் அங்கும் இங்கும் தேட வாசலில் வெண்ணிலா குரல் கேட்டு வாசல் நோக்கி நடந்தார்..
"ஹான் சொல்லுடி! ஏதோ இருக்கேன்.. ஆமாம் என்னத்த பொல்லாத மேரேஜ் லைப் ஆசைப்பட்டவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தான் பேரு ஏன்டா இந்த காதல் கருமத்தை பண்ணனும்னு இப்ப அவதிப்பட்டுக்கிட்டு இருக்கேன்.. "
யசோதா டிவி அனைத்து விட்டு அடுப்படி நோக்கி ஓடும் சத்தம் கேட்ட பிறகுதான் வராத போனை சைலண்டில் போட்டுவிட்டு எடுத்து காதில் வைத்து யாரிடமோ பேசுவது போல பாவலா காட்டினாள் வெண்ணிலா.
"ஹான்!! என்னத்த சொல்றது டி கல்யாணம் ஆகி அஞ்சு மாசம் ஆகுது இத்தனை வருஷமா லவ் பண்ண பொண்ண கல்யாணம் பண்ணி இருக்காரு.. ஆனா இன்னும் நாள் தள்ளி போகலையே.. என் மாமியார் வேற ஒரு பட்டிக்காடு.. இன்னும் ரெண்டு மாசம் பொறுமையா இருக்கும் அடுத்து அவங்க மவன ஒன்னும் சொல்லாது என்கிட்ட தான் வரும்.."
" அதெல்லாம் சந்தோஷமா தாண்டி இருக்கான் நாளைக்கு நாலு முறைங்குற மாதிரி சந்தோஷமாக தான் இருக்கோம். இருந்து என்ன பிரயோஜனம் அவன் கால் ஒச்சமா இருக்குற மாதிரி வேற எதும் குறையோ என்ன கருமமோ??"
"சரிடி என் மாமியாகாரி வர சவுண்ட் கேக்குது நான் வைக்கிறேன் இதுங்கங்கிட்ட நிம்மதியா ஒரு போன் கூட பேச முடியாது போனை பார்த்தா உடம்புக்கு கெடுதல்னு பாட்டு படிக்க ஆரம்பிச்சுருங்க."
என்றவள் பொங்கி வரும் கண்ணீரை யசோதாவிற்கு தெரியாமல் மெலிதாக துடைத்துக்கொண்டே போனை பார்த்துக் கொண்டே எழுவது போல் பின்னாடி அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த யசோதாவை எதிர்பார்க்காமல்,
"அத்த அது பிரண்ட் கால் பண்ணா அதான் பேசிட்டு..."
"சரிம்மா.. சப்பாத்திய நான் போட்டுக்கிறேன் நீ இருக்கிற சப்பாத்திய சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுமா."
என்று அனுப்பவும் அவள் இன்னும் குழம்பி போய் யசோதாவை பார்த்துக்கொண்டே அறைக்கு செல்ல நித்திக் சன்னலை வெறித்துக்கொண்டு நின்றிருந்தான்..
"ஜன்னல்கிட்ட நின்னு என்ன பண்ணிட்ருக்கீங்க??" என்று அவள் ஜன்னல் அருகே வர, அங்கு வெண்ணிலா அமர்ந்து இவ்வளவு நேரம் பேசிய படிக்கட்டு தெரிய,
"நித்திக் அது வந்து.."
"அது எப்படி பொண்ணுங்க நீங்க மட்டும் உங்க காரியம் உங்களுக்கு நடந்தா போதும் யாரு எப்படி போனா என்னனு மத்தவங்கள நோகடிக்குறீங்க??"
நித்திகை கையை கட்டிக்கொண்டு அழுத்தமாக பார்த்த வெண்ணிலா, "சாருவ நேருக்கு நேர் பார்த்து இனிமே லைஃப் லாங் நான் வெண்ணிலா கூட தான் வாழப் போறேன்னு உங்களால சொல்ல முடியுமா??, இல்ல அட்லீஸ்ட் உங்க அம்மா கிட்ட போயி வெண்ணிலாக்கும் எனக்கும் நடந்த கல்யாணம் ஒப்பந்தத்தில் நடந்தது உங்கள சரி கட்றதுக்காக நடந்தது என்னோட காதல் சாரு தான்.. அவளை தான் நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு சொல்ல முடியுமா?? "
நித்திக் அமைதியாக வெண்ணிலாவை பார்க்க, அவளோ நக்கலாக அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வைத்திருந்த நல்ல சப்பாத்தியை மொசுகிவிட்டு படுக்கையில் வந்து சுகமாக உறங்கி விட்டாள்.. தன்னால் இருவர் உறங்காமல் இருக்கிறார்கள் என்பதை அறியாமல்..
அடுத்த நாள் காலை யசோதா தன் மகனிடம்,
"தம்பி!!"
"சொல்லுங்கம்மா.."
"இல்லப்பா!! நீ போயி ஹாஸ்பிடல்ல ஒரு முறை உன் உடம்ப காட்டிட்டு வந்துட்டீன்னா..."
"ஏன்மா என் உடம்புக்கு என்ன நான் நல்லா தானே இருக்கேன்!"
அன்னை எதைப் பற்றி பேச வருகிறார்கள் என்பது புரியாமல் இல்லை இருந்தாலும் அது தனக்கு தெரியாதபடி பார்த்துக் கொள்ள நினைத்தான்..
"அது சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத தம்பி அந்த பிள்ளைக்கும் உனக்கும் கல்யாணம் ஆகி அஞ்சு மாசம் ஆகுது.. அவளுக்கு குழந்தை ஆச இருக்கும்போல.. என்ன இருந்தாலும் கல்யாணம் ஆகி புள்ள உண்டாகலேன்னா இந்த உலகம் இன்னமும் பொம்பள புள்ளைய தான கேள்வி கேக்குது ஆம்பளைங்களை யாரும் எந்த கேள்வியும் கேட்கறது இல்ல.. அதனால ஒரு வாட்டி நீயும் போயி பார்த்துகிட்டினா உன் கால்னால எதுவும் உனக்கு உடம்புக்கு பிரச்சனை இல்லாம... "
ஒரு தாயாக இத்தகைய விஷயத்தை சொல்லவே பெரிதும் கடினப்பட்டார் யசோதா.. ஆனாலும் மகனும் மருமகளும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தவர் தன் மகன்தானே தன்னை தவறாக வா நினைத்து விடப் போகிறான் என்று துணிந்து பேச்சை ஆரம்பித்தது.. நித்திகின் அடிப்பட்ட பார்வையில் வந்த அழுகையை விழுங்கிக்கொள்ள எத்தணிக்க பலத்த கைதட்டலுடன் அங்கு வந்தாள் வெண்ணிலா..
"சபாஷ்!! சபாஷ்!! அடாஅடா என்ன ஒரு தத்ரூப்பமான நடிப்பு.."
"வெண்ணிலாஆ.."
நித்திக் சற்று குரலை உயர்த்தி அவளை கண்டிப்பான குரலில் அழைக்க,
"என்ன குரலை உயர்த்தி பேசுறீங்க குரல் உயர்தினா நான் பயந்து இருப்பேன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா?? இந்த டாபிக் எப்படி வந்தது தெரியுமா நேத்து நான் என் பிரண்டு கிட்ட பேசினத உங்க அம்மா ஒட்டு கேட்டிருக்காங்க.. சத்தம் போடாம பின்னாடி வந்து நிற்கும் போதே நெனச்சேன்.. ஒண்ணுமே பேசாம போறாங்கன்னு எனக்கு டவுட் வந்தது, நல்லவங்களா இருந்தா அப்பவே நேருக்கு நேர் என்கிட்ட கேக்கணும் நான் இல்லாத நேரம் உங்க கிட்ட வத்தி வச்சா அதுக்கு என்ன அர்த்தம்?? "
"அவங்க என்கிட்ட வத்தி வச்சத நீ பார்த்தியா??"
"வத்தி வைக்காம தான் இப்போ என்கிட்ட மல்லுக்கட்டுறீங்களா??"
"நான் எங்கடி மல்லு கட்டுனேன்.."
"வெண்ணிலான்னு குரல் உயர்த்தி பேசுனீங்களே அது.."
"அடியேய்!! அம்மாவ நீ மரியாத இல்லாம பேசுனியேன்னு தான்.."
" பொண்டாட்டிய பத்தி புருஷன் கிட்ட வத்தி வைக்கிறாங்க அதுவும் சம்பந்தப்பட்ட ஆள் அந்த இடத்துல இல்லாத போது அப்ப அவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசுவாங்களா?? "
" வெண்ணி மறுபடி மறுபடி இதையே சொன்னீன்னா ஓங்கி அப்பிடுவேண்டி.. எங்க அம்மா என்னத்தடி வத்தி வச்சாங்க என்னதான போய் ஹாஸ்பிடல்ல பாக்க சொன்னாங்க. "
" அதுதான் வத்தி வைக்கிறது நீங்க ஏன் என்னன்னு ஆராய்ந்து கேட்பீங்க உடனே நான் போன்ல பேசினதை புட்டு புட்டு வெப்பாங்க.."
" அடியே! அவங்க சொல்றதுக்கு நான் ஏதாவது ரியாக்ட் பண்ணுவேனா பண்ண மாட்டேன்னு உனக்கு தெரியாதா டி.. "
" தெரியாது நான் லவ் பண்ண மாதிரி நீங்க இல்லையே இப்போ புதுசா அம்மா பேச்சு கேட்டுள்ள ஆடிட்டு இருக்கீங்க ரெண்டு மாசமா நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் தொட்டதுக்கு எல்லாம் ஏதாவது குற்றம் சொல்றது உங்க அம்மாவ ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேங்கறீங்க?? "
" யாரு யாரு நானா தொட்டதுக்கு எல்லாம் குத்தம் சொல்றது நீதான்டி ஏதாவது ஒன்னு நினைச்சுகிட்டு ஏதாச்சும் ஒரு சண்டை போட்டுட்டு இருக்க.."
"பாத்திங்களா உங்க மனசுல என்ன பத்தி என்ன இருக்குன்னு?? உங்கள போய் நம்பி கழுத்த நீட்டுனேன் பாருங்க என்ன சொல்லணும்.. அம்மா தான் முக்கியமா இருந்தா உங்களுக்கெல்லாம் பொண்டாட்டி எதுக்கு??"
என்றவள் வெடுகென்று வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டாள்..
"அம்ம்மா.. அவ.. தெரியாம.." இவன் எதுவோ பேச வர,
"தம்பி வேல முடிச்சு வரப்போ கொஞ்சம் பாதாம், வால்நட் வாங்கிட்டு வா.. நைட் பால் கலந்து குடி கொஞ்சம் தெம்பா இருக்கும்.."
என்று சொல்லிய யசோதா அடுத்த வேலை பார்க்க செல்ல நித்திகிற்கு ஒரே குழப்பமாக இருந்தது..
'வெண்ணிலா கோபமா பேசுறத பாத்தா நமக்கு தான் சிரிப்பு வந்தது ஏனென்றால் அவ கோபப்படுற மாதிரி நடிக்குறான்னு நமக்கு தெரியும் ஆனால் வெளியில் இருந்து பார்த்த அம்மாவுக்கு அவளோட உண்மையான கோபம் புரிஞ்சிருக்கணுமே இவ்வளவு வார்த்தை பேசியும் ஒண்ணுமே ரியாக்ஷன் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்றால் என்னவோ இடிக்குதே..' என்று யோசித்துக்கொண்டே வண்டியை எடுத்தவனுக்கு வெண்ணிலா குதித்து குதித்து சண்டை போட்டதை நினைத்து உள்ளுக்குள்ளே சாரல் மழையாக இருந்தது..
"பொண்டாட்டிங்க சண்டை போட்டா ஒரு மாதிரி ஜாலியா தான் இருக்கும் போல.. இந்த புருஷங்க ஏன் இதுக்கு இவ்வளவு கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருக்காங்க? " என்றவனுக்கு புரியவில்லை சண்டை போடுவது போல் நடிப்பது வேறு உண்மையாகவே எதற்கெடுத்தாலும் இழுத்து வைத்து வம்பு வளர்த்து சண்டை வளர்ப்பது வேறு என்று..
காலையில் சந்தோஷமான மனநிலையில் வேலைக்கு போனவனுக்கு சற்று நேரத்தில் கைப்பேசியில் சாருவின் அழைப்பு வந்தது அவளிடம் பேசியவனின் இதழ்கள் மகிழ்ச்சியில் துடித்தது.. சந்தோச மிகுதியில் அவன் தன்னை சுற்றி நடப்பதையே மறந்தான்.. அதனால் அவன் மனைவி வெண்ணிலா அரைநாள் விடுப்பு எடுத்து வீட்டிற்கு சென்றதும் தெரியவில்லை..
மாலை அதே சந்தோச மனநிலையில் உள்ளே வந்த நித்திக் முன் நின்ற யசோதா, "இவ உனக்கு வேண்டாம் தம்பி.. வீட்டை விட்டு வெளிய போக சொல்லு!!" என்ற சொல்லில் நித்திக் அதிர்ச்சியில் நிற்க வெண்ணிலா கண்ணில் எதையோ சாதித்த மகிழ்ச்சி..
தொடரும்...