மாலை வீட்டின் அழைப்பு மணி அடிக்க கதவை திறந்த சாந்தி கண்டது கையில் பெட்டியும், கண்களில் நீருமாக வந்து நின்ற மகளை தான்..
"நிலாம்மா.. என்னடா இந்த நேரத்துல அதும் கைல பெட்டியோட??"
அன்னையை வாசலிலே கட்டிக்கொண்டு வெண்ணிலா அழுக, பயந்து நின்ற சாந்தியை பார்த்த முரளிதரன் தான் உள்ளே அழைத்து செல்ல சொன்னார்..
"என்னாச்சு டி.. ஒன்னுமே சொல்லாம அழுதுட்டே இருந்தா என்னடி நினைக்கிறது வேலைக்கு போனியா வேலைல ஏதாவது பிரச்சனையா எதுக்குடி பெட்டி எல்லாம் எடுத்துட்டு வந்து இருக்க லீவா இல்ல வேலையே வேணாம்னு எழுதி கொடுத்துட்டியா ஏதாவது சொல்லுடி. உனக்கு ஒண்ணுமில்ல தானே??"
ஒரு அன்னையாக சாந்தி மனம் கண்டதையும் நினைத்து குமுறியது..
"ஏய் வந்த புள்ளைக்கு காபி போட்டு கொண்டு வராம என்ன நச நசன்னு கேள்வி கேட்டுட்டு இருக்க போ. "
முரளிதரன் குரலில் சாந்தி காபி கலக்க உள்ளே செல்ல,
"பாப்பா!! போய் முகம் கழுவிட்டு வாடா.."
ரொம்பவே இயல்பாக இருந்த தந்தையை பற்றி யோசிக்க கூட முடியவில்லை கீ குடுத்த பொம்மை போல தந்தை சொல்ல சொல்ல செய்தாள்..
"ஹலோ மாப்பிள்ள. நிலா வந்துட்டா"... "ஆமாம் மாப்பிள்ள. அழுத்துகிட்டே தான் இருக்கா"... "அட என்ன மாப்பிள்ள நீங்க இதெல்லாம் சொல்லணுமா.. உங்க பொண்டாட்டிய நல்லா பாத்துக்குறோம்.. நீங்க கவலைப்படாதீங்க.."
கைபேசியை அணைத்து வைத்தவர் வந்து நிலா அருகில் அமர்ந்து காபியை பருக சொன்னார்..
"ஏண்டி வானம் மோடம் போட்டுட்டு கருகருன்னு கிளைமேட் நல்லா இருக்குது.. இந்த நேரம் காப்பி போடுன்னு சொன்னா வெறும் காப்பி மட்டும் தான் போடுவியா, ஏன் பஜ்ஜி பக்கோடா ஏதாவது போட்டுட்டு வர்றது.. பிள்ளைக்கு பிடிக்கும்ல எவ்வளவு நாள் ஆகுது இந்த மாதிரி சாயந்திரம் புள்ள நம்மகூட இருந்து.. ஒவ்வொன்னும் சொல்லணுமா??."
என்று சொன்னதுமே கணவனின் பேச்சு புரிய நிலாவை சற்று தொந்தரவு செய்யாமல் இருக்க, அவளுக்கு வேண்டியதை மட்டும் கவனிக்க ஆரம்பித்தார்கள்..
இங்கு நித்திக் அறையின் இருள் தனிமை அவனை பயமூர்த்தியது.. இத்தனை வருடங்களாக தனியாக படுத்து தான் பழக்கம் ஆனால் இன்று இந்த தனிமை அவனை கொன்றது.. கடந்த சில மாதங்களாக தன்னுடன் ஒட்டி உரசி படுத்த வெண்ணிலாவின் கதகதப்பான சூடு அவனுக்கு தேவையாக இருந்தது.. மூச்சைடைக்கும் உணர்வில் காற்று வாங்க மாடி வந்தவனுக்கு இன்னும் வேறு சில நினைவுகள்..
எப்போதும் வெண்ணிலா வேலை கிளம்புமுன் காலையிலேயே துவைத்த துணி காயவைக்க மாடிக்கு வர அங்கே யோகா செய்யும் நித்திகை தன்னிலை மறந்து ரசிப்பது, ஈர துணையை நித்திக் முகத்தின் முன் உதறி நீர் துளிகள் அவன் மேல் பட்டு அவன் யோகவை கலைத்து சிரிப்பது, வடகம் காயவைக்க கொடியிலிருந்த நித்திக் புது லுங்கியை எடுத்து அதில் வடகம் போட்டு வம்பு செய்தது, ஒரு நாள் இவன் நின்று போன் பேசும்போது எதிர்த்த வீட்டில் ஒரு பருவ பெண் படிப்பது போல இவனையே பார்த்துக்கொண்டிருக்க இதை கண்ட வெண்ணிலா அப்பெண்ணிடம் சண்டைக்கு நிற்க இவன் அவசரமாக போனை அணைத்துவிட்டு இவளை அடக்க முடியாமல் அலேக்காக தூக்கிக்கொண்டு கீழே சென்றது எல்லாமே நினைவில் வர வானில் இவனை போல தனியாக பவனி வரும் நிலாவை நித்திக் கண்கள் வெறித்தது..
"தம்பி.."
"அம்ம்மா.." கண்ணில் வழியும் நீரை துடைத்துக்கொண்டு திரும்பினான்..
"என் மேல தான் தப்பு தம்பி.. புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கட்டும் அவ குறை சொன்னால் உன்னை தானே சொல்றான்னு விட்டுப் போயிருந்திருக்கணும் தம்பி நான் வேணா அவ கிட்ட போய் பேசவா??"
"வேண்டாம்மா.."
"அப்போ இதுக்கு என்ன தான் தம்பி தீர்வு அவ போன ரெண்டு மணி நேரம் கூட உன்னால தாங்க முடியல இப்படி தனியாக வந்து நிற்கிறாயே.."
"அம்மா இப்பதான் உங்களுக்கு உடம்பு கொஞ்சம் கொஞ்சமா சரி ஆகிட்டு வருது மறுபடியும் எல்லாத்தையும் போட்டு யோசிச்சு உடம்பு இழுத்து விட்டுக்காதீங்க அதைத்தான் என்னால தாங்க முடியாது இது எங்க பிரச்சனைம்மா நாங்க கண்டிப்பா சரி பண்ணிடுவோம் நீங்க கவலைப்படாம போய் படுத்துக்கோங்க."
என்றவன் அவனும் படுக்க படுக்கயறை போனான்..
"எவ்வளவு நேரம் வெயிட் பண்றது சீக்கிரம் வாங்கப்பா தூக்கம் தூக்கமா வருது.. "
அவர்கள் பெட்டில் நிலா அமர்ந்து அழைப்பது போல் இருக்க அங்கே சென்றான், காற்றில் தன்னவள் உருவத்தை தொட முயல அவள் நிழலாக மறைந்தாள்.. கதவை மூடி அவள் தலையணையில் முகம் புதைத்தான்..
"நீ இல்லாம நான் எப்புடி இருப்பேன்னு யோசிச்சியா டி??" வாய் விட்டு ஏதேதோ முணங்கிய நித்திக் அப்படியே உறங்கிப்போனான்..
இங்கு வெண்ணிலாவிற்கு உறங்கா இரவாக சென்றது.. நித்திக் வீட்டிலிருந்து வரும்போது தன்னவனின் ஒரு சட்டை, புகைப்படம் என்று அவன் ஞாபகமாக இவள் எதையெல்லாம் நினைப்பாளோ அத்தனையும் அள்ளிக் கொண்டுதான் வந்திருக்கிறாள். அதை எல்லாம் தன் அறையில் பரப்பி விட்டு ஆசையாக தொட்டு பார்த்தும் கொண்டாள்.. அவளுக்கு அவனின் வேர்வை வாசம் வேண்டும் என்று தோன்ற அழுக்கு கூடையில் இருந்து எடுத்து வந்த அவனின் சட்டையை அணிந்து கொண்டு புரண்டு புரண்டு படுக்க காதலை மறைக்க, மறுக்க வழி தான் தெரியவில்லை..
விடியலில் தூங்கியவள் மதியம் தான் எழுந்தாள் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வர தனக்காக காத்திருக்கும் அன்னை தந்தையை கண்டதும் தனக்கு கடைசிவரை இவர்கள் போதும் என்றானது..
"பாப்பா வாடா.. சாப்பிடலாம்.."
"அப்பா நீங்களும் இன்னும் சாப்பிடலையா என்ன எழுப்பி இருக்கலாம் இல்லப்பா.. "
"அதனால என்னடா ரொம்ப நாள் கழிச்சு நீயே அசந்து தூங்குற.."
தந்தை பேச்சில் எச்சில் விழுங்கி அவரை பார்க்க, "சாப்புடுடா பிறகு பேசிப்போம்.." என்று மூவரும் சாப்பிட்டு எழுந்து வர மெல்ல சாந்தி தான் பேச்சை ஆரம்பித்தாள்..
"நிலா ஈவினிங் எந்த வேலையும் வச்சுக்காத.. உன்ன பொண்ணு பாக்க வராங்க.."
"அம்மாமா!!" அதிர்ந்து தந்தையை பார்க்க அவர் அப்போதும் அமைதியாக அவளையே பார்த்துக்கொண்டு இருந்தார்..
"என்னடி?? நீ தானே ஆறு மாசம் கழிச்சு பாக்க சொன்ன.. நான் பாத்து வச்சுட்டேன்.. நீ வரணும்னு தான் காத்திருக்கோம்.."
"இப்போ என்ன அவசரம்??"
"ஏன்!! இது கல்யாண வயசு தானே?? நல்ல இடம் அமஞ்சுது அதான் யோசிக்கல.."
"இல்லம்ம்மா எனக்கு கல்யாணம் வேண்டாம்.."
"ஏன்??!" அழுத்தமாக அதே சமயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதுபோல சாந்தி பார்க்க திக்கி திணறிய வெண்ணிலா,
"எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு!!"
"ஹாஹா!! சும்மா ஜோக் அடிக்காத டி.. உங்க அப்பாக்கு தெரியாம ஷாப்பிங் கூட போக மாட்ட இதுல கல்யாணம் பண்ணிட்டியாக்கும்.."
என்று நக்கலாக சிரித்து மீண்டும் அவள் திருமணத்தை பற்றி பேச ஆரம்பிக்க கடுப்பான வெண்ணிலா தன் ஆடையுள்ளே பதுங்கிருக்கும் தாலியை தூக்கி மேலே போட்டாள்.. தயங்கி தயங்கி தந்தையை பார்க்க அவரோ கூறுமையாக அவளையே பார்க்க அன்னையோ அனல் கக்கும் பார்வை பார்த்தவர்களின் பார்வையில் அதிர்ச்சி இல்லை ஏற்கனவே தெரிந்த செய்தியோ என்றே தோன்றியது..
"அம்ம்மா அது.. ஒரு இக்கட்டுல.."
"ம்ம்ம்ம் இக்கட்டுலல..."
அதற்கு மேல் பேச முடியவில்லை.. இப்போது முரளிதரன் பேச ஆரம்பித்தார்..
"நித்திக் தம்பி! எல்லாமே சொல்லிட்டாரு.."
வெண்ணிலா அதிர்வு குறையாமல் தந்தையை பார்க்க,
"ம்ம்ம்ம்!! நீங்க வீட்டுக்கு வந்திங்களே அப்போவே எல்லாமே சொல்லிட்டாரு என்கிட்ட.."
அமைதியாக தலையை குனிந்து அமர்ந்திருந்தாள் வெண்ணிலா..
"என்ன பாப்பா முடிவு பண்ணிருக்க??"
"அவருக்கானா வாழ்க்கை அவர் சாரு லதா தான்பா.." என்றவளுக்கு குரலும் கமுறியது..
"அப்புடின்னு மாப்பிள்ளை உன்கிட்ட சொன்னாரா டி??"
"சிலது சொல்லாமலே புரியும்மா.."
"அப்போ நீ அவர நேசிக்குறதும் அவருக்கு தெரிஞ்சிருக்குமே.."
இல்லை என்னும் விதமாக தலையை ஆட்டியவள் சட்டென்று நிமிர்ந்து அன்னையை பார்க்க,
"என்னடி பாக்குற?? நீ சொல்லாட்டி எங்களுக்கு தெரியாதா??"
அன்னையை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுத்தவள், "அவர் தான் அவள லவ் பண்றாரே!!" விசும்பிக்கொண்டே குறை படிக்க மகள் தலையை கோதிய சாந்தி, "அவர் அப்புடி சொன்னாரா உன்கிட்ட??"
"ஆமா அதுக்கு தானே இந்த கல்யாண நாடகம்??"
" அது எப்படி பாப்பா எல்லா விதத்திலும் அப்பா மாதிரி தெளிவா யோசிக்கிற நீ மனசு, காதல் சம்பந்தப்பட்ட விஷயத்துல மட்டும் அம்மா மாதிரி குழந்தையா மாறிடுற யோசிக்கவே மாட்டியா??" சாந்தி முரளிதரனை முறைக்க அவரோ,
"ஏன் பாப்பா! இது என்ன சினிமாவா இல்லை டிராமாவா இந்த மாதிரி ஒப்பந்தது பேர்ல கல்யாணம் பண்ணி இதெல்லாம் நடக்குற காரியமா?? இதைவிட அவர் அவங்க அம்மாவ கன்வின்ஸ் பண்ண வேற விஷயம் யோசிச்சு இருக்கலாமே அவர் ஏன் உன்ன சொல்லாம கொள்ளாம தாலி கட்டணும் ஒரு வேலை அவருக்கு உன் மேல முன்னாடியே பிரியம் இருந்திருந்தா??"
"ஹ்க்கும்!! அவர் என்ன பாக்க கூட மாட்டாரு.."
" சரிடி!! அவருக்கு தாலி கட்டி நடிக்க வரும்போது அவர் மேல உனக்கு இருந்த ஈர்ப்பு கிரஷ் இப்போ பித்து பிடிக்கிற காதலா மாறின மாதிரி இந்த அஞ்சு மாச கேப்ல அவருக்கு உன் மேல ஆசை வந்து இருந்தா??"
"அது எப்படி வரும்.. இது தான் நாடகம் தானே.."
"அடிங்க!! சொன்னதே சொல்லாத டி.. உன் பேங்க் ஆஃபீஸர் மூளைய கழட்டி வச்சுட்டு வாழ்வியல யோசி.."
"போமா நீ வேற கடுப்ப கிளப்பாத ஏற்கனவே அவர் எனக்கு கிடைக்கவே மாட்டாருங்குற கவலைல வந்து இருக்கேன் நானே.. நீ வேற என் மனசுல இன்னமும் ஆசைய வளர்காத.. "
"சரி அட்லீஸ்ட் நீ விரும்புறதையாவது அவர்கிட்ட சொன்னியா?? "
"லூசாம்மா நீ?! அவரு மனசுல அவங்க மாமா பொண்ணு தான் இருக்கும்போது நான் எப்படி என் விருப்பத்தை சொல்ல முடியும்??"
"பாப்பா! மாப்பிள்ளை இங்க வந்திருந்தபோது உங்க போட்டோ ஆல்பம் பாத்துட்ருந்தோம்.. அப்போ தான் உன்ன முதல் முதல்ல பார்த்தது உன்ன நேசிச்சது தவிர்க்க முடியாம இதுபோல கல்யாணம் பண்ணதுன்னு அன்னைக்கு அவ்வளவு சொன்னவரு அதற்குபிறகு தினமும் எங்களோட பேசுவாரு.. இன்னைக்கு நீ போட்ட சண்ட நாடகம் நீ கிளம்பி இங்க வந்த வரைக்கும் எல்லாமே அவர் சொன்னாரு.."
"எதே!!" என்றவள் அதிர்ந்து தந்தையை பார்க்க அவர் அன்று நடந்த அத்தனையும் ஒன்று விடாமல் ஒப்பிக்க இவளுக்கோ அய்யோ என்று ஆனது.. இதில் கூடவே, "தன் காதலை வெளிப்படுத்தினால் எங்கே வெண்ணிலா தவறாக எடுத்துக் கொள்வாளோ என்ற பயம் வேறு இருப்பதாக நித்திக் சேர்த்து சொல்லி இருக்க இவள்தான் தன்னவன் தலையில் தூக்கி எதையாவது போட்டுவிடலாமா என்று தோன்றியது..
"காதல்ன்னா என்ன டி?? ஒருத்தருக்கு ஒருத்தர் ஒளிவு மறைவு இல்லாம இருக்கிறது தான்.. இதோ மாப்பிள தம்பி அன்னைக்கு அப்பா கிட்ட தான் உங்க காதல் விஷயத்தை சொல்லி இருக்காரு அப்பா நீங்க கிளம்பின கையோடு என்கிட்ட சொல்லிட்டாரு இத்தனைக்கும் உங்க அப்பா வேகமா பேசினா கூட நான் உடனே போன் போட்டு உன்கிட்ட ஒப்பிப்பேன்னு என்ன பத்தி தெரிஞ்சும் இந்த விஷயத்தை அவர் என்கிட்ட நம்பி சொல்லி இருக்காரு உன் கிட்ட அவரா சொல்ற வரைக்கும் நான் வெளிக்காட்ட மாட்டேன்னு.. அது தான் டி காதல்.."
என்ற சாந்தி மகள் கண்ணை துடைத்துவிட, " பாப்பா மாப்ள இன்னைக்கு காலைல கால் பண்ணது, நீ வரப் போறது எதுவுமே நான் உங்க அம்மா கிட்ட சொல்லல ஆனா நான் உனக்கு காபி கொண்டு வான்னு கண்ணால சொன்னதிலேயே அவ எதுவோ நடந்திருக்கு பொறுமையா பேசிக்கலாம் என்பதை புரிஞ்சுகிட்டா இதுக்கு பேரு தான் பாப்பா புரிதல் என்கிறது."
"நீ அவர காதலிக்கிறேன்னு சொல்ற ஆனா அவரு கண்ணுல உனக்கான காதல் வந்தத நீ ஏன் பாப்பா கவனிக்கல?? அதை தாண்டி உனக்குள்ள இப்படி ஒரு உணர்வு அவர் மேல வந்தபோது அதை வெளிப்படையா அவர்கிட்ட சொல்லி இருக்கணும்.. அதற்கு பிறகும் இதை தொடரணுமான்னு ரெண்டு பேரும் யோசிச்சிருக்கணும்.. ஆனா நீ குடுத்த வேலைய செஞ்சு முடிக்குறேன்ற பேர்ல எல்லாரையும் நோக அடிச்சுட்டு வந்துருக்க.. "
என்றதும் அவள் நிப்பாட்டிய அழுகை மீண்டும் உடைபெடுக்க,
"சும்மா சும்மா எதுக்கெடுத்தாலும் கண்ணை கசக்காதடி ரெண்டு நாள்ல மாப்பிள்ளை வரேன்னு சொல்லி இருக்காரு உன்ன இங்க ரெஸ்ட் எடுக்க தான் அனுப்பிச்சு விட்டு இருக்காரு ரெண்டு நாள்ல வந்து பேசி சரி கட்டி கூட்டிட்டு போவாரு அழுது வைக்காத என் பொண்டாட்டியை ஏன் அழுக வச்சீங்கன்னு எங்ககிட்ட சண்டைக்கு வருவதற்காக??"
என்ற சாந்தி வெண்ணிலா தலையில் செல்லமாக குட்ட,
"அம்ம்மா பயமா இருக்கும்மா??"
"எதுக்கு டி??"
"அது என்னதான் நானும் நித்திக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி புரிஞ்சுக்கிட்டாலும் நான் அத்தைய ரொம்பவே நோகடிக்க பேசிட்டேன்மா அவங்க என்னை ஏத்துப்பாங்களான்னு நினைச்சாலே பயமா இருக்கு.. "
அதேநேரம் வாசலில் கதவு தட்டும் சத்தம் கேட்க சாந்தி சென்று கதவை திறக்க அங்கு நின்ற பெண்மணியை சாந்தி புரியாமல் பார்க்க எட்டி பார்த்த வெண்ணிலா,
"அத்தஆஆஆஆ.."
என்று ஓடியவள் கட்டிக்கொண்டாள் யசோதாவை..
"அழாத கண்ணு.."
"அத்த.. சாரித்த நான் தான் தப்பு உங்களை அப்படி பேசி இருக்க கூடாது உங்க முன்னாடியே நான் அப்படி பேசி இருக்க கூடாது எனக்கு என்ன மன்னிச்சிடுங்க அத்த.."
என்றவள் வாசலில் யசோதா காலில் விழுந்துவிட, இவள் பேச்சிலேயே வந்தவர் யார் என்று புரிந்துவிட்டு வழக்கம் போல முரளிதரன் சாந்தியும் தான் யசோதாவை உள்ளே அழைத்து உபசரித்தனர்.. பின்பு அவர்கள் பேச தனிமை குடுத்து இவர்கள் நகர,
"அத்த! அது.. நானு.. எதுக்கு.."
"கண்ணு.. இப்போ சந்தோசமாடா??"
வெண்ணிலா புரியாமல் யசோதாவை பார்க்க,
"என்ன கண்ணு அப்படி பாக்குற நான் ஏதோ ஒரு காரணத்தில் கோபப்பட்டு உன்னை வெளியில போனு சொல்லணும்னு எதிர்பார்த்து தானே கண்ணு இப்படி வேணுன்னு பண்ணிக்கிட்டு இருந்த அதுதான் சொல்லிட்டேன்.. "
வெண்ணிலா திருட்டு முழி முழிக்க,
"ஹாஹா!! உன் புருஷன்கிட்ட எப்படிடா இவகிட்ட மயங்கினன்னு கேட்டா, 'செய்யறதெல்லாம் செஞ்சுப்புட்டு ஒரு திருட்டு முழி முழிப்பா பாருங்கம்மா அவ்ளோ க்யூட்டா இருப்பா' அப்படின்னு சொல்லுவான் இப்பதானே அந்த முழியை நான் பார்க்கிறேன்.."
என்றவர் அவள் மேவாயை பிடித்து கொஞ்ச, 'ஐயோ சிடுவா மானத்தை வாங்கி வச்சிருக்கியே டா.. ஊர் முழுக்க என்மேல இருக்க காதலை டமாரம் அடிச்சிட்டு என்கிட்ட சொல்லாம போயிட்டியே இருடா உன்னை வச்சிக்கிறேன்!' என்றவள் மனதுக்குள் கணவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு சற்று சங்கோஜமாக யசோதாவை பார்த்தாள்..
"இப்ப வரைக்கும் உங்களுக்குள்ள என்ன ஓடுதுன்னு எனக்கு தெரியல கண்ணு?? நீ ஏன் வீணா கோபப்படுற மாதிரி நடிச்சு என்னைய கோபப்படுத்தணும் கூட எனக்கு புரியல ஆனா உன்னோட கோவம் எதுலயும் உண்மையான கோபம் இல்லை என்கிறது உன் முழியே காட்டி கொடுத்துவிடும். அதனாலதான் நானும் சரி சரின்னு நீ பேசுறதுக்கெல்லாம் கோபப்படுற மாதிரி நடிச்சேன் கடைசில இந்த வார்த்தைக்காக தான் இவ்ளோ மூச்சு போடுறியோன்னு தோணுச்சு அதுதான் சரி சொல்லுவோமேன்னு வீட்டை விட்டு வெளியே போன்னு நானும் சொல்லி உன் ஆசையை நிறைவேற்றிட்டேன்!!" என்றவர் கிளுக்கி சிரிக்க அவளோ புரிதல் நிறைந்த தன் மாமியார் மடியில் முகம் புதைத்தாள்..
பிறகு குடும்பமாக பேசிவிட்டு கிளம்பிய யசோதா, " சரி கண்ணு! நான் வந்தது அவனுக்கு தெரியாது உன் கூடயே சுத்துமே ஒரு புள்ள அதுகிட்ட தான் அட்ரஸ் கேட்டு வந்தேன் நான் நம்ம வீட்டுக்கு கிளம்புறேன் நீ ரெண்டு மூணு நாள் அம்மா வீட்ல இருந்துட்டு எப்ப உனக்கு தோணுதோ அப்ப நம்ம வீடு வந்து சேரு, நீ வீட்ல இல்லாம உன் புருஷன் பச்ச தண்ணி பல்லுல படாம பத்தியம் இருந்துகிட்டு இருக்கான்."
என்றவர் மனநிறைவுடன் கிளம்பினார்.. மீண்டும் சில பல விசயத்தை அன்னை தந்தையுடன் பேசியவள் படுக்கையில் வந்து விழ, நேற்று சோகமாக அணைத்த இரவு இன்று சுகமாக கணவன் ஏக்கத்தில் அணைத்தது..
தொடரும்...