புனர் ஜென்மம் 29
“நீ என்கிட்ட விளையாண்ட அதே விளையாட்டை உன் பையன்கிட்டயும் விளையாடுற” என்று குற்றம் சாட்டினார் ராஜ்குமார்.
“உங்க பையனும் உங்களைப் போலவே முட்டாளா இருந்தா நான் என்ன பண்றது?” என்று கேட்டு வைத்தார் ஸ்ரீலீலா.
“அடிங்க” என்று அவர் நாக்கைக் கடிக்க,
“இங்க பாருங்க, ஒருவாட்டி காதல் தோல்வி வந்தால், பொண்ணுங்களே வேணாம்னு நின்னுட்டா எப்படி? உங்களை உங்களுக்காகவே காதலிக்கிற பெண்ணை நீங்க தேடிக் கண்டுபிடிக்கணும். நீங்களா கண்டுபிடிக்கலைன்னா, நாங்களா தான் தேடி வந்தாகணும். என்னை போலவே அவளும் வந்து நிற்கிறாள், என்னை என்ன பண்ண சொல்றீங்க? உடனே ஓகேன்னு சொல்லத்தான் தோணுச்சு எனக்கு”.
“ஆமா, நீ என்னை மாற்றின மாதிரி, கண்டிப்பா மருமகள் நம்ம பையனை மாத்திடுவாள். அதுல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு” என்று கூறினார் ராஜ்குமார்.
கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். அதே பேச்சுதான் ஆராதனா – ராகேஷின் வீட்டிலும் சென்று கொண்டிருந்தது.
இங்கு தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாகப் பன்னிரண்டு மணி வரை அலைந்து கொண்டிருந்தான் அர்ஜுன்.
எவ்வளவு யோசித்தாலும் அவனுக்குத் தோன்றியது ஒன்றே ஒன்றுதான். அது, அனன்யாவிடம் நேரில் பேசிவிட வேண்டும் என்பது.
அவ்வளவு நேரம் யோசித்துக் கொண்டிருந்தவன், சட்டென்று அவளுக்கு அழைப்பு விடுத்துவிட்டான். அவள் குரலைத் தாழ்த்திச் பேசினாள், “சொல்லுங்க அர்ஜுன் சார். இத்தனை மணிக்குப்போய் கால் பண்றீங்க? எங்க அம்மாவுக்குத் தெரிஞ்சா தொலச்சிடுவாங்க” என்றாள்.
“நான் உன்னை நாளைக்கு மீட் பண்ணனும். உன்னோட பொக்கே ஷாப்புக்கு வரேன்” என்றான்.
“ஓகே ஓகே, எனி டைம் ஐ அம் அவைலபிள் ஃபார் யூ” என்றாள்.
அவன் பற்களைக் கடித்தான்.
‘இதே மாதிரி பேசிப் பேசியேதான் என் உயிரை வாங்குறாள்’ என்று மனதிற்குள் அவளைக் கடிந்து கொண்டவன், “நாளைக்கு மீட் பண்ணலாம், எயிட் ஓ’ கிளாக்” என்றான்.
“ஐயோ, ஷாப்பே பத்து மணிக்குத்தானே திறக்கும்?” என்று சிறு குரலில் பேசினாள்.
“பரவாயில்லை, ஷாப் திறக்கறதுக்கு முன்னாடி மீட் பண்ணலாம். லேட்டா வந்து திறக்காத, நான் வெயிட் பண்ணுவேன்” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
…..
மறுநாள் காலை எட்டு மணியாக பத்து நிமிடங்கள் இருந்தது, அந்த மாலுக்குள்ளும் நுழைந்துவிட்டான்.
அந்தக் கடையை நெருங்கினான். அது திறந்திருந்தது. குரல் கொடுத்தான்.
“உள்ளதான் இருக்கேன், கதவைச் சாத்திட்டு வாங்க” என்று குரல் கொடுத்தவள் வெளியில் வரவில்லை.
அவள் அறைக்குள் சென்றான். வண்ணமயமாகப் பூக்களால் அலங்கரித்து இருந்தது.
“இன்னைக்கு ஏதாவது ஸ்பெஷல் டேவா?”.
“ஆமா, ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் டே” என்று அதே மலரை அவன் முன்பு நீட்டியபடி கூறினாள்.
“வேற யாராவது இங்க வரப் போறாங்களா?” என்று தயக்கத்தோடு கேட்டான்.
“ச்சேச்சே, உங்களுக்காக தான் காத்துட்டு இருக்கேன்” அவள் பேச்சில் அதே துள்ளல்.
“அப்புறம், நேத்து பொண்ணு பார்த்துட்டுப் போனவங்களை உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.
“அதுதான் நேத்தே சொன்னேனே சார்? ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குன்னு”.
“அரேன்ஞ்டு மேரேஜ்தானே?”.
“அப்படிச் சொல்ல முடியாது சார், லவ் கம் அரேன்ஞ்டு மேரேஜ்னு வச்சுக்கலாம்” என்றாள்.
“ஓ!” நீ லவ் பண்றேன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே?” என்று கேட்டான்.
“நாம அந்த அளவுக்குக் குளோஸா பேசிக்கலையே?”.
“ஓ, ஓகே, அப்ப நான் கிளம்புறேன்” என்று எழுந்துவிட்டான்.
“என்ன சார், பேச வந்துட்டுப் பேசாம கிளம்புறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?” அவளும் எழுந்துவிட்டாள்.
“பேச வந்ததுக்கு அர்த்தம் இல்லைன்னு அர்த்தம்”. அவனைத் தாண்டிக் கொண்டு அந்த அறை வாசலை மறைத்தது போல நின்றாள்.
“ஏன் இவ்ளோ கோபப்படுறீங்க? என்ன பேச வந்தீங்கன்னு சொல்லுங்க” என்றாள்.
அவன் கண்களை மூடித்திறந்தான். “இங்க பாரு அனன்யா, நான் பேச வந்த விஷயத்துக்கு இப்ப அர்த்தம் இல்லாம போயிடுச்சு. சொன்னா புரிஞ்சுக்கோ, பிடிவாதம் பிடிக்காத! நான் உன்னை ஹர்ட் பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறேன். சோ ப்ளீஸ், வழிவிடு” என்றான்.
அவள் அமைதியாக அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே வழிவிட்டாள். அவனும் ஆழ்ந்த பெருமூச்சுடன் நடக்க ஆரம்பித்தான்.
அவள் குரல் கேட்டுத் தேங்கி நின்றான். திரும்பிப் பார்த்தான். “என்ன சொன்ன? திரும்பச் சொல்லு?” என்று கேட்டான்.
“உங்க அப்பா அனுப்புன டீடைல்ஸையும் போட்டோவையும் பார்க்கலாமில்ல? இங்கிருந்து போறதா வேணாமான்னு, பார்த்துட்டு முடிவு பண்ணலாமில்ல?” என்றாள்.
புருவம் சுருங்க, யோசனையாக அவளை நோக்கித் திரும்பி நடந்து வந்தான்.
“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான்.
“உங்க அப்பா அனுப்புனதைப் பார்த்தா தெரியப்போகுது?” முகத்தைச் சுருக்கிப் பாவம் போலக் கூறினாள்.
தன் அலைபேசியை எடுத்தவன் வாட்ஸப்பிற்குசள் சென்று பார்த்தான்.
‘அனன்யா – டாட்டர் ஆஃப் கோவிந்தராஜன் – மாதவி,
வயது – இருபத்தி மூன்று,
படிப்பு – பி.எஸ்.சி பிளான்ட் பயாலஜி,
தொழில் – பிசினஸ் (பொக்கே ஷாப்).
ஒரு அண்ணன் மட்டும்தான், அவனுக்குத் திருமணம் ஆகவில்லை’ என்று இருந்தது.
புகைப்படத்தைத் டவுன்லோடு செய்தான்.
அனன்யா சிரித்துக் கொண்டிருந்தாள். அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. கண்களைத் தேய்த்துக் கொண்டு மீண்டும் அந்தப் புகைப்படத்தையும் பயோடேட்டாவையும் பார்த்தான். இது கனவு இல்லை, நிஜம் தான் என்று உணர்த்திக் கொண்டிருந்தது அந்த புகைப்படம்.
நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவள் மெல்லப் புன்னகைக்க முயன்றாள். அவள் முகத்தில் கலவரம் தெரிந்தது, அவன் என்ன பதில் சொல்வானோ என்று!
“நேத்து என்னோட ஃபேமிலி மெம்பர்ஸ் பொண்ணு பார்க்க வந்தது உன்னையா?” இன்னமுமே சந்தேகம் தீராமல் கேட்டான்.
“ஆமா”.
“என் வீட்டுல இருந்து உன்னைத் தான் பெண் பார்க்க வராங்கன்னு தெரியுமா??” அவன் தயக்கத்தோடு கேட்டான்.
“தெரியுமாவா?? உங்க அட்ரஸ் கொடுத்து, எங்கப்பாவை, உங்க அப்பா கிட்ட பேச வச்சதே நான் தானே?? விஷயத்தைச் சொல்லி பொண்ணு கேட்க வரச் சொன்னதும் நானே?,” கண்களைச் சிமிட்டி, தோள்களைக் குலுக்கிக் கூறினாள் அனன்யா.
“வாட்?? எனக்குப் புரியல?” என்றான்.
“ஒரு நிமிஷம்,” என்று கூறியவள், அங்கே இதய வடிவில் இருந்த அந்தப் பூங்கொத்தை எடுத்து அவன் முன்பாக நீட்டியபடி முழங்காலிட்டாள்.
அவன் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி.
“எனக்கு உங்களை விட ஒரு பெஸ்ட் ஆன்மகனா யாரையுமே தோணல. நானும் நிறைய ஆண்களைக் கடந்து வந்துட்டேன். நிறைய காதல் புரபோஸல்களைக் கடந்து வந்துட்டேன். ஆனா எனக்கு என்னமோ உங்களைத்தான் பிடிச்சிருக்கு. அப்போ அதுக்குப் பேர் தெரியல. எங்க அக்காவுக்குக் கல்யாணமான பிறகு, கொஞ்சம் நிம்மதியா ஃபீல் பண்ணேன். அது ஏன்னு ஆராய்ச்சி பண்ணித் தெரிஞ்சுக்கிட்டேன். யாரைப் பார்த்தாலும் உங்க நினைப்பு. யார் புரபோஸ் பண்ணாலும் உங்க ஞாபகம்தான். அப்புறம் யாரு என்னன்னு ஆராய்ஞ்சு எடுத்தேன். அட நம்ம ஊரு பக்கத்துல தான்னு ஒரே சந்தோஷமா போச்சு. அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால, அவங்களுக்கே தெரியாம அப்பா மூலமாதான் எல்லாக் காயும் நகர்த்தினேன். உங்களைப் பத்தி டீடைல் எடுக்க ஹெல்ப் பண்ணது என் அண்ணன்தான். மொத்தத்துல எங்க குடும்பமே தீயா உழைச்சிருக்கு. நியாயமா நீங்க எனக்குன்னு இல்லை, என் குடும்பத்துக்கே நன்றி சொல்லணும். ஆனா அதை நானே சொல்லிக்கிறேன். இப்போ ஓகேவா, இல்லையான்னு மட்டும் சொல்லுங்க?” என்று மூக்கைச் சுருக்கிக் கேட்டாள்.
அவள் நீட்டிக் கொண்டிருந்த இதய வடிவப் பூவை அவன் பெற்றுக் கொண்டான். கைகளை நீட்டி அவளை எழுந்து நிற்கச் செய்தான். “நீ.. நீ.. என்னை விரும்புறியா?” என்று தயங்கியபடி கேட்டான்.
“என்ன சார் இத்தனை வேலை பண்ணி இருக்கேன்னு சொல்றேன், விரும்புறியான்னு சிம்பிளா கேக்குறீங்க. உங்ககிட்ட வந்து லவ்வை சொன்னா கண்டிப்பா அக்காவை அடிச்ச மாதிரி அடிப்பீங்க. அதனால பொறுமையா படிப்பை முடிச்சுட்டு, இதெல்லாம் நானே எனக்குள்ள ஆராய்ச்சி பண்ணி, அதுக்கப்புறமா ஆமான்னு தெரிஞ்சதுக்கப்புறம், எங்க அப்பா கிட்ட சொல்லி, உங்களுடைய டீடைல் எடுத்து, உங்களை அனலைஸ் பண்ணி, அவரும் விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு, மாப்பிள்ளை நல்லவர்தான்னு பச்சைக்கொடி காட்டினதுக்கப்புறம், உங்க வீட்ல மூவ் பண்ணி, பொண்ணு கேட்டு வந்திருக்காங்க. நீங்க என்னன்னா இப்படிச் சில்லியா கேட்டுட்டீங்க??” என்று மூச்சு வாங்கினாள். அவன் வாயைப் பிளந்து நின்றான்.
“ஆனா நானே எதிர்பார்க்காம, அன்னைக்கு நீங்க என்னோட பொக்கே ஷாப்புக்கு வந்தது எனக்கு சர்ப்ரைஸ்தான். நீங்க முதல் முதல்ல என்னைப்பொண்ணு பார்க்க வரும்போதுதான் என்னைப் பார்த்து சர்ப்ரைஸ் ஆவீங்கன்னு நினைச்சேன். பட், நீங்க எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்துட்டீங்க,” அவள் மீண்டும் படபடத்தாள். அவன் வார்த்தைகள் அற்று மௌனியாகினான்.
“உங்க வீட்ல முதல்ல சொல்ல வேணாம்னு சொன்னேன். அப்புறம் லாஸ்ட் மினிட்ல சொல்லிக்கோங்கன்னு சொன்னேன். நீங்களா என்கிட்ட வந்து பேச மாட்டீங்கன்னு நினைச்சேன். அதனால நானுமே உங்ககிட்ட லாஸ்ட் மினிட்ல சொன்னேன். நீங்க போட்டோ அனுப்புனதுக்கப்புறமா எனக்குக் கால் பண்ணுவீங்க, பேசுவீங்க, மீட் பண்ணலாம்னு சொல்லுவீங்கன்னு நினைச்சேன். உங்க காலுக்கு வெயிட் பண்ணிட்டேயிருந்தேன், ஆனா நீங்க பண்ணவே இல்லை,” முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டாள்.
“ஆறு மணியிலிருந்து உங்களுக்காகத்தான் இந்த டெக்கரேஷன். உங்களுக்காகத்தான் இந்த ப்ரொபோசல். பொக்கே ஷாப் வச்சிருக்கோம், கொஞ்சமே கொஞ்சம் ப்ரொபோஸ் பண்ணும் போது டெக்கரேட் பண்ணலனா எப்படி? பிடிச்சிருக்கா??” எல்லாவற்றையும் துள்ளலோடு கூறியவள், கடைசி வார்த்தையில் மட்டும் முகத்தைச் சுருக்கிப் பாவம் போலக் கேட்டாள்.
அவள் டெக்கரேஷனைக் கேட்கிறாளா, அல்லது ப்ரொபோசலைக் கேட்கிறாளா, அல்லது திருமணத்திற்குக் கேட்கிறாளா என்று புரியவில்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒன்றாகக் கேட்கிறாள் என்று அவன் உள்ளம் அவனுக்கு எடுத்துக்கூறியது.
விளையாடிப் பார்க்க நினைத்தான். “பிடிக்கலைன்னு சொன்னா என்ன பண்ணுவ??” என்றான்.
“உங்களுக்குப் பிடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணுவேன். உங்களுக்கு என்ன பிடிக்கும்னு ஆராய்ச்சி பண்ணுவேன். அதுக்குத்தான் உங்களுக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்னு கேட்டேன், உங்களுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்கலாம்னு”.
“எனக்கு பொண்ணுங்களையே பிடிக்கலைன்னா?”.
“அவனா மாறிட்டீங்களா என்ன?? நான் ஆராயும் போது அப்படி எதுவும் தெரிய வரலையே?” அவள் கண்களை விரித்துக் கேட்டாள்.
“ச்சீ” என்றவன் கக்கடை போட்டு சிரித்தான்.
“சான்ஸே இல்லை. உன்னை மாதிரி பொண்ணெல்லாம் மியூசியத்தில்தான் வைக்கணும்” என்றான்.
“ஐயோ மியூசியத்தில் எல்லாம் இல்லை, வீட்ல கூட வைக்கலாம். உங்க வீட்லதான் வச்சுக்கோங்களேன்?”.
“நேரா உங்க ஆபீஸ்க்கே போயிட்டேன். எனக்கு உங்க மகனை ரொம்பப் பிடிச்சிருக்கு. வீட்ல மாப்பிள்ளை பார்க்கிற எல்லார்கிட்டயும் நான் உங்க பையனைத் தேடுறேன். நீங்க காஸ்ட் பார்க்காம தயவு செஞ்சு உங்க பையனை எனக்குக் கட்டி வைக்கிறீங்களான்னு கேட்டுட்டேன்?” என்றாள்.
“இப்படியே கேட்டியா?” என்று சந்தேகமாகக் கேட்டான்.
“ஆமா, இப்படித்தான் கேட்டேன். வேணும்னா உங்க அம்மாகிட்ட கேட்டுப் பாருங்க. அப்புறம்தான் அவங்க பொறுமையா அவங்களோட காதல் கல்யாணத்தைச் சொன்னாங்க. கிட்டத்தட்ட நீங்களும் உங்க அப்பாவும் ஒரே மாதிரிதான். லவ் ஃபெயிலியர் வேற, அதனால கோபப்பட்டுக்கிட்டு கல்யாணமே வேணாம்னு மீசையை முறுக்கிக்கிட்டு நிக்கிறீங்க. இவங்களை விட்டா இப்படித்தான் நிப்பாங்க, நாமளாத்தான் இறங்கணும்னு எனக்கு ஐடியா கொடுத்ததே உங்க அம்மாதான்,” என்றாளே பார்க்கலாம்.
அவன் உச்சக்கட்ட அதிர்ச்சி நிலைக்குச் சென்றுவிட்டான்.
“எங்க அப்பாதான் ஏற்கனவே எனக்கு ஓகே சொல்லிட்டாரே?? அதுக்கப்புறம் எங்க அப்பா உங்க அப்பாகிட்ட பேசினார். அதனால எல்லாம் சுமுகமா முடிஞ்சிருச்சு”.
அமர்ந்திருந்த சேரில் முன்னோக்கி வந்தான். “உனக்கு என்னை உண்மையிலேயே இவ்வளவு பிடிச்சிருக்கா?? ஆனா ஏன்??” ஆராய்ச்சியாகக் கேட்டான்.
தன்னை ஒருத்தி இத்தனை காதலித்து, தனக்காக இத்தனை போராட்டங்களைச் செய்திருக்கிறாள், கிட்டத்தட்ட திருமணத்தில் அவள் காதலை முடித்திருக்கிறாள். காதலிப்பதை விட, காதலிக்கப்படுவது ஒரு சுகமான உணர்வு என்பதை அவனை உணர வைத்துக் கொண்டிருந்தாள்.
“பிகாஸ் நீங்க ஜென்யுயினா இருந்தீங்க. உங்க பார்வையில கண்ணியம் தெரிஞ்சுது. என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவர் எனக்கு உண்மையா இருக்கணும் எதிர்பார்த்தேன். ஏனோ அப்பா பார்க்கிற வரன் எல்லாத்துலயும் நான் உங்களைத் தேடினேன். எனக்கு உங்க முகம் ஞாபகம் வந்துட்டே இருந்துச்சு. கட்டினா உங்களைப் போல ஆணைத் கட்டணும்னு தோணுச்சு.. உங்களைப் போல ஒரு ஆணை நான் எங்க போய் தேடுறது?? உங்களைப் போல ஒருத்தர் எதுக்கு, உங்களையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். காதலிக்க ஆரம்பிச்சேன். இதுக்கு நடுவுல உங்க லைஃப்ல வேற யாராவது பொண்ணு வந்துட்டுப் போயிருக்காளான்னு ஆராய்ச்சிப்பண்ணேன். அப்பறம் உங்க அம்மாவைப் பார்க்கிறது, அப்புறம் மேரேஜ்க்கு அரேஞ்ச் பண்றது எல்லாத்துலயும் செய்தேன் செய்தேன்...”
இவள் தனக்காக இவ்வளவு செய்திருக்கிறாள், ஆனால் தனக்கு எதுவுமே தெரியவில்லை. “எங்க அக்காவுக்கு இந்த விஷயம் தெரியுமா??” என்று கேட்டான்.
“இல்லல்ல, உங்க அக்காவும் நீங்களும் ரொம்ப குளோஸாமே, அதனால உங்க அம்மா அவங்ககிட்ட சொல்லலை. உங்க அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும். நேத்துதான் சொல்லியிருப்பாங்க. நேத்து என்கிட்ட வந்து அவங்க நல்லாப் பேசினாங்க” என்று படபடத்தாள்.
“ அவங்க சம்மதிக்கலனா??”.
“அதெல்லாம் கப்பலை நிறுத்தறதுக்கு நங்கூரத்தை நாங்க ஸ்ட்ராங்கா போட்டுட்டோம் சார். உங்க அம்மா அப்பாவுக்கும் முதல்ல போட்டுட்டு, நேத்து வீட்டுக்கு வந்த உங்க அக்காவுக்கும் பெரிய ஐஸ்கட்டி மலையைத் தூக்கித் தலையில வச்சுட்டேன். இப்ப நீங்களே வேணாம்னு சொன்னாலும் அவங்க உங்களைக் காம்ப்ரமைஸ் பண்ணுவாங்க. அதெல்லாம் பக்காவா பார்த்துப் பண்ணிட்டோமில்ல??”.
அவனுக்கு என்ன சொல்வதுதென்றே தெரியவில்லை. அவன் என்ன மாதிரி மனநிலையில் இருந்தான் என்று அவனால் வரையறுக்க முடியவில்லை. அவள் பேச்சு, செயல், பாவனை எல்லாமே அவனைச் சுற்றி இருந்தது. அவனுக்காக மட்டுமே இருந்தது.
‘தனக்கு வெறும் இந்த இரண்டு வாரங்களில் தோன்றிய உணர்வுகள், அவளுக்குக் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகத் தோன்றியிருக்கிறது. அதையும் கடந்து என்று சொல்லலாம். ஆனால் அவள் திடமாக முடிவு செய்தது இந்த மூன்று வருடங்களில்தான் இருக்கும்,’ என்று மனதிற்குள் தான் நினைத்துக் கொண்டான்.
“எல்லா பிளானையும் நீயே பண்ணிட்ட, எனக்கு எந்த பிளானையும் விட்டு வைக்கல. இப்ப அடுத்து என்ன பண்ணலாம்னு நீயே சொல்லிடு?” என்றான் அர்ஜுன்.
“வீட்டுக்குப் போங்க, கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லுங்க. ரெண்டு பேரும் ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிக்கலாம். அப்புறம் நிறைய குழந்தை குட்டிங்க பெத்துக்கலாம். எனக்கு ஃபர்ஸ்ட் லவ் நீங்கதான். அதனால நான் யார் பேரையும் என் பையனுக்கு வைக்க மாட்டேன், பயப்படாதீங்க. அதே சமயத்துல உங்க காதலி பெயரையும் வைக்க விட மாட்டேன்,” என்று கூறி புன்னகைத்தாள்.
“உங்க அக்கா, அவங்களை எப்படி ஃபேஸ் பண்றது?” என்று அவன் தயக்கத்தோடு கேட்டான்.
“அட நீங்க வேற?? அவங்ககிட்டதானே என் காதல் விஷயத்தை முதல்ல சொன்னது. அவங்க ரொம்பச் சந்தோஷப்பட்டாங்க. நல்ல சாய்ஸ்னு பாராட்டினாங்க. அவங்களுக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும்,” அவளிடம் மீண்டும் அதே புன்னகை.
இவள் தன் வாழ்க்கையை இலகுவாக்க வந்திருக்கிறாள் என்று தோன்றியது அர்ஜுன் பிரசாத்திற்கு. அவளோடு இருக்கும் இந்தத் தருணங்கள் மனதை எவ்வளவு இதமாக வைத்திருக்கிறது?? எல்லாவற்றையும் விட தன்னைத் தனக்காகவே காதலித்த பெண், தனக்காக போராடிய பெண், அவளைக் கட்டிக் கொள்ள அவனுக்குக் கசக்குமா என்ன??
அவளைப் பார்த்தபோது தோன்றிய அந்த உணர்வு இப்பொழுது இன்னும் அதிகமாக மனதில் படர்ந்தது. தனக்கு வேலையே வைக்காமல் திருமணம் வரை கொண்டு வந்திருக்கும் அவளை நினைத்துப் பிரமிப்பாக இருந்தது. மொத்தத்தில் அவளை அவளுக்காகவே பிடித்தது.
அவன் முகத்தில் புன்னகை படர, அது அவன் சம்மதத்தை அவளுக்கு உணர்த்தியது.