மகுடம் சூட்டும் காதல்
New member
அத்தியாயம் - 11
வந்தது சுபத்ரா தான்.. கையில் ஒரு சிறிய டார்ச் லைட்டுடன் மிகவும் பதற்றமாக இருந்தாள். அர்ஜுன் மரத்தின் மறைவில் இருந்து சட்டென அவளது முன்னால் வந்து நின்றான்.
"சுபா நீங்க என்ன பண்றீங்க இங்க.?" என்று மெதுவான குரலில் கேட்டிட, சுபத்ரா பயத்தில் லேசாக அலறி, தன் கையை வாயில் வைத்து மூடிக் கொண்டாள்.
அர்ஜுனைப் பார்த்ததும் அவளது மூச்சு சீரானது.
"அர்ஜுன் சார்! நீங்க என்ன இந்த நேரத்துல பையோட இங்க சுத்திட்டு இருக்கீங்க.? பகல்ல டிவியில அந்த நியூஸ் பார்த்ததுல இருந்து உங்க முகம் சரியில்லை.. நீங்க ஏதோ ஆபத்தான காரியத்துல இறங்கப் போறீங்கனு எனக்குத் தெரியும்.. அதான் தூங்காம உங்க வீட்டையே பார்த்துட்டு இருந்தேன்.. நீங்க வேற இந்த ஊருக்கு புதுசு தான்..
உங்களைய தனியா விட மனசில்லாம தான் உங்களுக்கே தெரியாம உங்க பின்னாடியே வந்தேன்" என்றவளின் கண்களில் அர்ஜுனின் மீதான அசாத்தியமான பயமும் அக்கறையும் தெரிந்தது.
"சுபா சத்தம் போடாதீங்க.. நான் இங்க வந்ததுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு.." என்றிட, "என்ன காரணம் சார்.? இந்த இருட்டுல உங்களுக்கென்ன இங்க வேலை.?" என்று சுபாவும் வினவினாள்.
இவளுக்கு இன்னும் அந்தத் தொழிற்சாலையின் ரசாயனக் கழிவு மர்மத்தைப் பற்றி எதுவுமே தெரியாது.
"உங்ககிட்ட இனி மறைச்சு என்ன பண்ண போறேன் சுபா.." என்றவன் விஸ்வநாதன் தொழிற்சாலையின் உயரமான காம்பவுண்ட் சுவரை விரல் நீட்டிக் காட்டி "சுபா இங்க வந்ததுல இருந்து எனக்கு இந்த விஸ்வநாதனோட ஃபேக்டரி மேல ஒரு பெரிய சந்தேகம் இருக்கு..
இந்தத் தொழிற்சாலை இங்க வந்ததுல இருந்து தான் இந்த ஊர்ல பல விசித்திரமான மாற்றங்கள் நடக்குதோனு எனக்கு தோணுது.. உங்க அப்பா சொன்னாரே கிணத்துத் தண்ணி ஒரு மாதிரி வாசனை அடிக்குது.. நிலமெல்லாம் பாழாகுதுனு.. அது இயற்கை கோளாறு கிடையாது சுபா..
இந்த ஃபேக்டரியோட நிலத்தடி நீர்ல ஏதோ ஒரு தப்பு நடக்குதுனு எனக்கு அறிவியல் ரீதியா ஒரு பலமான சந்தேகம் வந்துச்சு.. அதை இப்போவே பரிசோதனை பண்ணித் பார்க்கணும்னு நினைச்சேன்.. அதான் யாருக்கும் தெரியாம வந்தேன்.." என்று தன் சந்தேகத்தை மட்டும் அவளிடம் விவரித்தான்.
சுபத்ரா அர்ஜுனையே வியப்போடு பார்த்தாள். ஒரு சாதாரண ஆசிரியராக இருந்து கொண்டு தன் குடும்பத்தின் கவலையையும், இந்த ஊரின் நிலமையையும் மனதில் வைத்துக் கொண்டு நள்ளிரவிலும் அஞ்சாமல் களமிறங்கும் அவனது அந்த உன்னதமான நேர்மையைக் கண்ட போது அவளது இதயத்திற்குள் இருந்த மரியாதை மெல்ல உருகி ஒரு தூய்மையான காதலாக மாறத் தொடங்கியது.
அர்ஜுன் தொழிற்சாலையை நோக்கிக் காட்டிய விரல்களையும், அவனது கண்களில் தெரிந்த தீர்க்கமான தார்மீகக் கோபத்தையும் சுபத்ரா அமைதியாக உற்று நோக்கினாள்.
அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் இந்த மண்ணின் மீதும், தன் தந்தையின் கண்ணீரின் மீதும் இருந்த நிஜமான அக்கறை அவளது நெஞ்சைத் தொட்டது.
அவளுக்கு அந்த ரசாயனக் கழிவுகளால் ஏற்படும் மலட்டுத்தன்மை போன்ற பயங்கரமான மருத்துவ உண்மைகள் இன்னும் முழுமையாகத் தெரியாது என்றாலும், தன் கண் முன்னால் நின்று இவன் சொல்வதில் இருக்கும் நியாயம் அவளுக்கு அப்பட்டமாகப் புரிந்தது.
அவளது முகத்தில் இருந்த பயம் மெல்ல மறைந்து, அவனுக்கு உதவும் உத்வேகம் பிறந்தது.
சுபத்ரா தன் கையில் இருந்த டார்ச் லைட்டை அணைத்து விட்டு, அர்ஜுனின் கைகளைத் தன் இரண்டு கரங்களாலும் இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். அவளது கண்களில் இப்போது அசைக்க முடியாத ஒரு ஆதரவு தெரிந்தது.
"அர்ஜுன் சார்.. நீங்க இவ்வளவு தூரம் இந்த ஊருக்காகவும், எங்க அப்பாவோட கவலைக்காகவும் யோசிக்கும் போது, இந்த மண்ணோட மகளா நான் எப்படிச் சும்மா இருக்க முடியும்.?" என்று மெல்லிய குரலில் கேட்டவள் "நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு நிஜம் தான் சார்.. எனக்கும் கொஞ்ச நாளா இந்த ஃபேக்டரி மேல சந்தேகம் இருந்தது.. குடிக்கற தண்ணீ எப்படி திடீர்னு இப்படி மாறும்.?
இத்தனை வருசமா இந்த தண்ணீல தான் விவசாயமும் நடந்துட்டு இருந்துச்சு.. திடீர்னு எப்படி இப்படியாகும்.? எங்க அண்ணிக்கு அடிக்கடி வர்ற அந்த அடிவயிற்று வலிக்கும், இந்த ஊர்ல இருக்குற மத்த குடும்பங்களோட நிம்மதி கெட்டுப் போறதுக்கும் ஏதோ ஒரு மர்மமான சம்பந்தம் இருக்குனு என் மனசும் சொல்லுது சார்..
ஆனா எனக்கு இதை எப்படி நிரூபிக்கணும்னு தெரியல.. நீங்க சரியான பாதையில தான் போவீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு சார்.. உங்களுக்கு என் ஆதரவு எப்பவும் இருக்கும்.." என்று அவனுக்கு முழு மனதாகத் தன் ஆதரவைத் தந்தாள்.
அர்ஜுன் அவளது முகத்தையே ஆச்சரியத்தோடு பார்த்தான். தனக்குத் துணையாக ஒரு பெரிய பலமாகத் தன் கைகளைப் பற்றி நிற்கும் சுபத்ராவின் அந்தத் தைரியமான குணம் அவனது நெஞ்சை நெகிழ வைத்தது.
"சுபா இது சாதாரண வேலை இல்லை.. அந்த விஸ்வநாதன் எவ்வளவு பெரிய கொடூரமான மனிதர்னு இன்னைக்கு நீங்க டிவில பார்த்துருப்பீங்க.. அவரோட ஆட்கள் இந்த ஊர் முழுக்கக் கண்காணிச்சுட்டு தான் இருப்பாங்க.. இது ரொம்ப ஆபத்தான காரியம்" என்று அர்ஜுன் அவளை எச்சரிக்க முயன்றான்.
"டிவிலயா.? நீங்க சொல்றது எனக்கு புரியல சார்.."
"அது.. அது வந்து.. விஸ்வநாதனோட பையன் தான் கஞ்சா கடத்துனது.. கர்ணனுக்கு யாருமில்லை.. தூக்கி வளர்த்துன நன்றிகடனுக்காக அவன் போய் ஜெயில்ல உட்கார்ந்துருக்கான்.."
"என்ன சார் சொல்றீங்க.?"
"ஆமா சுபா.. இது தான் உண்மை.. வேணும்னாலும் பாரு.. கர்ணன் ஈசியா ஜாமீன்ல வந்துருவான்.."
"எப்படி சார் சொல்றீங்க.?"
"வேணுனாலும் பாரு அவன் நிரபராதினு தெரிய வரும்.. இப்ப அது தேவையில்லாதது.. இது ஆபத்தான வேலை சுபா.. நான் பார்த்துக்கறேன்.."
"ஆபத்துக்காக பயந்து ஓட நாங்க ஒன்னும் கோழைங்க இல்ல சார்.." என்று சுபத்ரா தீர்க்கமாக அவனது பேச்சைத் தடுத்தாள்.
எங்க அப்பாவோட கண்ணீருக்கு காரணமான அந்த உண்மையை வெளிய கொண்டு வர நீங்க உயிரையே பணையம் வச்சு நிக்கும் போது உங்களுக்கு ஒரு நிழலா துணையா நிற்க வேண்டியது என்னோட கடமை சார்.. நீங்க தனியா போக வேண்டாம்.. நானும் உங்க கூடவே வர்றேன்.. சாம்பிள் எடுக்கறதுக்கு உங்களுக்கு நான் என்ன உதவி பண்ணணும்னு சொல்லுங்க சார்.. கண்டிப்பா நான் செய்யறேன்.." என்று கூறினாள்.
கட்சிக்காரர்களின் ஆரவாரமும், சென்னையின் சொகுசு வாழ்க்கையும் தராத ஒரு நிஜமான பலமும், ஆத்மார்த்தமான நிம்மதியும் சுபத்ராவின் இந்த எளிய வார்த்தைகளில் அர்ஜுனுக்குக் கிடைத்தது.
ஒரு சாதாரண ஆசிரியராக வந்து, இந்த நெல்வயல் கிராமத்து மண்ணில் அவனுக்குக் கிடைத்த ஆகப் பெரும் பொக்கிஷம் இந்தச் சுபத்ரா தான் என்பதை அவன் உணர்ந்தான்.
அவளது எளிய, தூய்மையான குணத்தின் மீது அவனுக்கு காதல் மலர்ந்தது. அது காதல் தானா.? என்பதும் அவனுக்கு தெரியவில்லை. ஆனால் அவளை இன்னும் பிடிக்கவே செய்தது.
"ரொம்ப நன்றி சுபா.. உங்க இந்த ஆதரவு தான் எனக்கு இப்போ பெரிய பலம்.. நாம இப்பவே கிணத்துத் தண்ணி சாம்பிளை எடுக்கலாம்.." என்று அர்ஜுன் புன்னகையோடு கூற, இருவருமாகச் சேர்ந்து நிலவின் வெளிச்சத்தில் எளிய கிணற்றடியை நோக்கித் தங்களின் அடுத்த நகர்வைத் தொடங்கினர்.
அர்ஜுனும் சுபத்ராவும் அந்தப் பழைய கிணற்றடியை நோக்கி மெதுவாக நகர்ந்தனர். சுபத்ரா தன் கையில் இருந்த டார்ச் லைட்டை மிகவும் எளிய முறையில், தரையை நோக்கி மட்டுமே அடித்து அர்ஜுனுக்குப் பாதையைக் காட்டினாள்.
அர்ஜுன் தன் தோள் பையிலிருந்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலையும், கயிற்றையும் வெளியே எடுத்தான்.
இருப்பினும் அந்த நள்ளிரவு நேரத்தில், விஸ்வநாதனின் ஃபேக்டரி உச்சியில் இருந்த பிரம்மாண்டமான விளக்குகளின் வெளிச்சம் சுழன்று சுழன்று வந்து அந்தத் தோட்டத்தின் மீது விழுந்து கொண்டிருந்தது.
அந்தச் சுழலும் வெளிச்சம் இவர்களின் மேல் படுவதற்கு சில வினாடிகள் மட்டுமே இருந்தது. அதை விடக் கொடுமையாக, ஃபேக்டரியின் காம்பவுண்ட் சுவருக்கு அப்பால் செக்யூரிட்டிகளின் கனமான பூட்ஸ் காலணிகளின் சத்தமும், அவர்களின் கரகரப்பான குரல்களும் மிகத் தெளிவாகக் கேட்கத் தொடங்கின.
சுபாவின் தந்தை கூறிய கிணறு விஸ்வநாதனின் பேக்டரிக்கு அருகில் தான் இருக்கிறது. மற்ற பக்கம் எல்லாம் காலையில் எடுத்து விடலாம்.. ஆனால் இந்த கிணற்று தண்ணீரை எடுப்பது தான் கடினம். அதனால் தான் அனைவரும் உறங்கிய பின்பு வந்தான் அர்ஜூன்.
"டேய் அந்தப் பக்கம் டார்ச் அடிச்சுப் பாருடா.. ஏதோ சத்தம் கேக்குது.." என்று ஒரு செக்யூரிட்டி கத்தினான்.
அடுத்த நொடி டார்ச் லைட் வெளிச்சம் இவர்கள் இருந்த திசையை நோக்கி வந்து விழுந்தது.
சுபத்ரா பயத்தில் லேசாக நடுங்கி, அர்ஜுனின் சட்டையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு அவனுடன் ஒன்றினாள். அவளது இதயம் வேகமாக துடிப்பதை அர்ஜுன் உணர்ந்தான்.
ஏதோ குருட்டு தைரியத்தில் இவனுடன் வந்து விட்டாள். ஆனால் அவளை பயம் மட்டும் தான் சூழ்ந்திருந்தது. விஸ்வநாதனின் பேக்டரியின் செக்யூரிட்டிக்களை கண்டாலே இவளுக்கு பயமாக தான் இருக்கும். இப்போது மட்டும் இவர்களிடம் மாட்டினால் அவ்வளவு தான் என்று நினைத்து அச்சமடைந்தாள்.
இப்போதே அவசரப்பட்டுச் சாம்பிள் எடுக்கப் போய் மாட்டிக் கொண்டால், விஸ்வநாதனின் ஆட்கள் தங்களை முடக்கி விடுவார்கள் என்பதும், நீதிக்கான தங்களின் ஒட்டுமொத்தப் போராட்டமும் பாதியிலேயே அழிந்துவிடும் என்பதும் அர்ஜுனுக்கு நன்றாகவே புரிந்தது.
அவன் சுபத்ராவின் கைகளைப் பற்றிக் கொண்டு, வேலியின் இருண்ட புதருக்குள் அவளை மெதுவாக இழுத்து அமர வைத்தான். இருவரின் முகங்களும் மிக நெருக்கமாக இருந்தன. அந்த நள்ளிரவு நிசப்தத்தில் அவர்களின் சுவாசக் காற்று ஒன்றோடொன்று கலந்தது.
"சுபத்ரா இப்போதைக்கு நாம இங்க சாம்பிள் எடுக்கறது சரியில்லை.. ஃபேக்டரி செக்யூரிட்டிகளோட ரவுண்ட்ஸ் இப்போ ரொம்பத் தீவிரமா இருக்கு.. நாம மாட்டிக்கிட்டா ஆதாரத்தைத் திரட்டவே முடியாது.. நாளைக்கு பார்த்துக்கலாம்... இப்போதைக்கு நாம இங்கிருந்து கிளம்புறது தான் புத்திசாலித்தனம்" என்று அர்ஜுன் அவளது காதருகே மிக மெதுவான குரலில் கூறினான்.
சுபத்ரா அவனது கண்களை நேராகப் பார்த்து, தன் தலையை மட்டும் அசைத்துச் சம்மதித்தாள். அவளது நெஞ்சுக்குள் இருந்த பயம் மறைந்து அர்ஜுனின் அருகாமையால் ஒரு விசித்திரமான பாதுகாப்பும், நிம்மதியும் அவளுக்குள் ஏற்பட்டது.
"சரி அர்ஜுன்.. நீங்க சொல்றது தான் கரெக்ட்.. இப்போ கிளம்பலாம்.. இவனுக கிட்ட மாட்டிக்கிட்டா அவ்ளோதான்.. " என்றாள் மெல்லிய குரலில்.
இருவரும் மிகவும் எச்சரிக்கையாக, தவழ்ந்தபடியே அந்தப் புதர்க் காட்டைத் தாண்டி ஒற்றையடிப் பாதைக்கு வந்தனர்.
செக்யூரிட்டிகளின் டார்ச் வெளிச்சம் தங்களின் மேல் படாதவாறு தப்பித்து, மெதுவாகச் சுபத்ராவின் வீட்டுத் தெரு முனையை நோக்கி நடந்தனர்.
அங்கே வந்து நின்றதும் சுபத்ரா திரும்பி அர்ஜுனைப் பார்த்தாள்.
"அர்ஜுன் இப்ப நடந்ததை நினைச்சா எனக்கே ஆச்சரியமா இருக்கு.. உங்க கூட சேர்ந்து இந்த ஊருக்காகப் போராடறது எனக்கு ஒரு புதிய தைரியத்தைக் கொடுத்துருக்கு.. நாளைக்கு காலைல ஸ்கூல்ல பார்க்கலாம்.. பத்திரமா போயிட்டு வாங்க.." என்று புன்னகையுடன் விடைபெற்றாள்.
"நீங்களும் பத்திரமா உள்ள போங்க சுபா.. நாளைக்கு ஸ்கூல்ல பேசலாம்.." என்று அர்ஜுனும் ஒரு நெகிழ்ச்சியான புன்னகையோடு அவளுக்குப் பதிலளித்தான்.
சுபத்ரா தன் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்லும் வரை அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்ற அர்ஜுனின் மனதிற்குள் அவளது மாறாத ஆதரவும் அன்பும் ஒரு புதிய பலத்தைக் கொடுத்திருந்தது.
பள்ளிக்கூடத்தில் சுபாவும் அர்ஜூனும் புன்னகையுடன் சந்தித்து கொண்டனர்.
"ஏன் சார் அங்க ஒரு தப்பும் நடக்கலனா எதுக்கு அர்த்த ராத்திரிலயும் காவல் காக்க இத்தனை பேரை போடணும்.?" என்று தனக்கு தோன்றிய சந்தேகத்தை முன்வைத்தாள் பெண்ணவள்.
"நான் தான் முதல்லயே சொல்லிட்டனே.? அங்க ஏதோ தப்பு நடந்துட்டு இருக்குனு.. இதுலயே நீங்க புரிஞ்சுக்கணும் சுபா.."
"புரியுது சார்.. நல்லாவே புரியுது.."
"புரிஞ்சா சரி.. இத்தனை மாசமா ஒருத்தருக்கு கூடவா சந்தேகம் வரல.?"
"வரலயே சார்.. எனக்கு வரல.. மத்தவங்களுக்கு எப்படினு தெரியல சார்.."
"அதான் அவங்க பேசறதுலயே தெரியுதே.? விளைச்சல் வராம போறதுக்கு காரணம் சாமி குத்தம்னு பேசிட்டு இருக்காங்க.. சாமி குத்தம்னா நம் சாப்பிடற சாப்பாட்டுல கை வைக்குமா என்ன.? ரொம்ப அறியாமையா இருக்கீங்க.." என்று தன் ஆதங்கத்தை கொட்டினான்.
இதற்கு சுபாவால் பதிலுரைக்க முடியவில்லை. அமைதியாக சென்று விட்டாள்.
அடுத்த நாள் காலை விருசாலியின் வாழ்க்கையில் பயங்கரமான அரசியல் சூறாவளி வீச காத்திருந்தது.
விருசாலி தனக்கு விட்ட அந்த உன்னதமான கர்ப்ப சவாலை முறியடிக்க, விஸ்வநாதன் தன் கொடூரமான நரித்தந்திரத்தின் இறுதிப் பகடையைக் கையில் எடுத்தார். அவனிடம் அவளின் கர்ப்பத்தை பற்றிய செய்தியை கூறாமல் இருந்திருக்கலாம்..
அவன் ரகசியமாகச் சென்னை மத்திய சிறைச்சாலையின் சிறப்புப் பார்வையாளர் அறைக்குள் நுழைந்தார்..அங்கே இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் சரணடைந்த கர்ணன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
விஸ்வநாதன் தன் முகத்தில் போலியான கண்ணீரையும், பதற்றத்தையும் வரவழைத்துக் கொண்டு கம்பிகளைப் பற்றிக் கொண்டு "கர்ணா உன்னைய இப்படி பார்க்க ரொம்ப கவலையா இருக்குடா.. கண்டிப்பா உன்னைய நான் வெளில எடுத்துருவேன்.." என்றார்.
பின்பு "நம்ம குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துருச்சுடா.. அந்த விருசாலியும் அவளோட பெரியப்பாவும் சேர்ந்து என்னைய கட்சில இருந்து தூக்கிட்டாங்க.. என் அரசியல் வாழ்க்கையே கேள்விகுறியாகிருச்சு.. இருந்தும் உன்னைய எப்படியாவது வெளில கொண்டு வரணும்னு நினைச்சுட்டு இருக்கேன்.." என்று கண்ணீர் வடித்தவர் அதன் பின்பு என்ன சொன்னாரோ.?
"கர்ணா நீ குற்றவாளினு எல்லாரும் நம்பறதுக்கு இதைய நீ பண்ணி தான் ஆகணும்.. என்னைய தப்பா நினைச்சலாம்னு பரவால்ல.. விருசாலி குழந்தையை வெச்சு நீ நிரபராதினு நிரூபிக்க நினைக்கறா.. அதனால.. அதனால அது உன் குழந்தையே இல்லைனு சொல்லிரு.. இப்ப மட்டும்.. ப்ளீஸ் கர்ணா.. இந்த அண்ணனுக்காக இதைய மட்டும் பண்ணு.. உன் காலுல கூட விழுகறேன்.." என்று நாடகத்தை அரங்கேற்றி இருந்தார்.
அதைக் கேட்டு இவன் பேச்சின்றி நின்றான். அவர் கூறியதை வாய்வழியாக இவன் கூற விரும்பவில்லை. அவர் கெஞ்சலிலும் அழுகையிலும் கரைந்தவன் தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.
நீதிமன்றத்திற்கு கர்ணனை அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்தன. அடுத்த ஒரு மணி நேரத்தில், சென்னை எஸ்பி ஆபீஸிற்கு வெளியே மற்றும் நீதிமன்ற வளாகத்தின் முகப்பில் தமிழகத்தின் அத்தனை முன்னணி டிவி மீடியாக்கள்.மற்றும் பத்திரிகையாளர்கள் தங்களின் கேமராக்களுடன் குவிந்து நின்றிருந்தனர்.
விருசாலியின் கணவர் என்ற உறவுக்காகவே அத்தனையும் இவன் பின்னால் சுற்றியது. கர்ணனைப் போலீஸ் வாகனத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்குள் அழைத்து வரப்பட்ட அந்த வினாடி, மைக்ரோபோன்கள் அனைத்தும் அவனது
முகத்திற்கு நேரே நீட்டப்பட்டன.
"கர்ணன் சார்.. நீங்க நிஜமாவே கஞ்சா கடத்துனீங்களா.? உங்க மனைவி விருசாலியோட பெரியப்பா தான் வ்ரற தேர்தல்ல ஜெயிக்க போறாருனு இருக்கற இந்த நேரத்துல உங்க அரெஸ்ட் அரசியல் சதியா.?" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
கர்ணன் ஒரு நொடி தன் நடையை நிறுத்தினான். அவனது முகம் இரும்பைப் போலக் கடினமாக இருந்தது.
கர்ணன் கேமராக்களை நேராகப் பார்த்து
"என் கைதுல எந்த அரசியல் சதியும் இல்லை.. நான் செஞ்ச தப்புக்காகத் தான் சட்டம் என்னைய கைது பண்ணிருக்கு.. அதுல என்ன தப்பு இருக்கு.?" என்று கேட்டான்.
"சார் உங்க மனைவி கர்ப்பமா இருக்கற நேரத்துல நீங்க இப்படி பண்ணிருக்க கூடாது சார்.." என்றவனுக்கு சின்ன புன்னகையை மட்டும் பதிலாக தான் தந்தான்.
இன்னொரு செய்தியாளரோ "சார் அந்த குழந்தை உங்களோடது இல்லைனு ஒரு வதந்தி பரவிட்டு இருக்கே.. உண்மையா சார்.?" என்று விஸ்வநாதன் கேட்க சொன்னதை சரியா கேட்டு வைக்க, மற்ற தொலைக்காட்சி சேனல்களும் தங்களின் டிஆர்பிக்காக இதை பிடித்து கொண்டனர்.
பதில் கூறாமல் அவனால் செல்ல முடியாது.. அண்ணன் கூறிய வார்த்தைகளும் ஞாபகத்தில் எழுந்தன. பதில் கூறாமல் இவன் செல்ல முயன்றாலும் அவர்கள் விடுவதாக தெரியவில்லை.
தொண்டையை செருமி "அது என் குழந்தை... என்று இழுத்து நிறுத்தி "இஇஇ..ல்...ல" என்று பிரித்து பிரித்து கூறியவன் அதன் பின்பு அவர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதிலுரைக்கும் திரணியின்றி நின்றான்.
"சார் என்ன சொல்றீங்க.? அது உங்க குழந்தை இல்லையா.?" என்று மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்பிட, "இஇஇஇ..ல்ல்..ல" என்று கூறியதும் "போதும் மிஸ்டர். கர்ணா.. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன உன்னைய சாவடிச்சுருவேன்.." என்று ஆத்திரத்தின் உச்சியில் கத்தினாள் விருசாலி.
அங்கு அவளை இவன் எதிர்பார்க்கவில்லை.. அவளின் முகத்தை காணவே இவனுக்கு குற்றவுணர்வாக இருக்க, அவளின் புறம் திரும்பவே பயந்தான்.
எதற்கும் அழுகாதவனின் விழிகள்
கலங்கி இருந்தன. கஞ்சா வழக்கில் உள்ளே இயக்கும் வலியை விட தன் குழந்தையை தானே அசிங்கப்படுத்தி விட்டு வந்திருக்கிறோம் என்ற நினைப்பு அவனை உயிரோடு கொன்றது.
தொடரும்...