மகுடம் சூட்டும் காதல்
New member
அத்தியாயம் - 9
இன்னும் விஸ்வநாதனுக்கு பதற்றமும் ஆத்திரமும் அடங்கியிருக்கவில்லை. ஆகாஷை கஞ்சா கடத்தல் வழக்கில் அதிரடியாகக் கைது செய்து போலீஸ் கூட்டிச் சென்ற பிறகு விஸ்வநாதன் தன் அறையிலேயே பைத்தியம் பிடித்தவர் போல உலா வந்து கொண்டிருந்தார்.
அடுத்த முதலமைச்சர் நாற்காலியில் தான் அமர வேண்டும் என்ற அவரது பேராசைத் திட்டத்திற்கு அவரது சொந்த மகனின் இந்த கஞ்சா கடத்தல் வழக்கு ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக மாறிவிட்டது.
ஊடகங்களில் இந்தச் செய்தி பரவினால் ஒட்டுமொத்த அரசியல் கௌரவமும் நாராய் கிழிந்துவிடும் என்பதை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். வக்கீல்கள் அனைவரும் கைவிரித்து விட்டனர்.
"ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் போலீஸ் கைல இருக்கு.. ஆகாஷை ஜாமீனில் எடுப்பது இப்போதைக்குச் சாத்தியமே இல்லை" என்று அவர்கள் சொல்லி விட்டனர்.
விஸ்வநாதனின் மூளை மிக வேகமாக வேலை செய்யத் தொடங்கியது. விருசாலி தனக்கு விட்ட அந்த சவால் அவரது காதுகளில் ஒலித்தது.
'என் கர்ணனை நீங்க அநாதைனு சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் உங்க வாரிசு இனிமேல் அணு அணுவா ஜெயில்ல நரகத்தை அனுபவிப்பான்..' என்று அவளது வார்த்தைகள் அவரது நெஞ்சில் ஈட்டியாய் பாய்ந்திருந்தது.
விருசாலிக்கு தெரியாமல் இந்த ஆட்டத்தை எப்படி மாற்றுவது என்று யோசித்தவருக்கு நல்ல யோசனை ஒன்று எழுந்தது.
'ஏய் எனக்கா சவால் விடற.? இருடி இந்த கேஸ்ல உன் புருசனையே மாட்ட விடறேன்..' என்ற சவாலுடன் பங்களாவின் பின் பக்கத்துத் தோட்டத்தில் தனியாக நின்று கொண்டிருந்த கர்ணனை நோக்கி மெதுவாக நடந்தான்.
இந்த விஷயம் எக்காரணத்தைக் கொண்டும் விருசாலிக்குத் தெரியக் கூடாது என்பதில் விஸ்வநாதன் மிக கவனமாக இருந்தார்.
தோட்டத்தில் நின்றிருந்த கர்ணனின் மனதிற்குள் ஒரு பெரிய போர்க்களமே ஓடிக் கொண்டிருந்தது.
வெளியில் நின்று ஏதேச்சையாக விருசாலியும் விஸ்வநாதனும் பேசியதை அவன் கேட்டிருந்தான். விஸ்வநாதன் தன்னை வெறும் அனாதைப் பையன் என்று கூறுவது வலிக்கும் தான்.
அதே சமயம் தன் மீது எந்தப் பாசமும் இல்லாதது போல நடித்த தன் மனைவி விஸ்வநாதனின் அதிகாரத் திமிருக்கு முன்னால் 'என் கர்ணனை அநாதைனு சொன்னதுக்கு தான் இந்த பதிலடி' என்று தனக்காக அவள் செய்த செயலும் அவனது நெஞ்சைக் குடைந்து கொண்டிருந்தது.
கர்ணனின் அருகே வந்த விஸ்வநாதன் சட்டென அவனது கைகளைப் பற்றிக் கொண்டு "கர்ணா ஆகாஷ் உள்ள இருந்தா ஒரு வாரம் கூடத் தாங்க மாட்டான்டா.. கஞ்சா கேஸ்ல அவனுக்கு ஜாமீனே கிடைக்காது.. நம்ம குடும்பப் பேரே சென்னை முழுக்க நாரப் போகுது.. இந்த நேரத்துல இதைய தடுக்க ஒரே ஒரு வழிதான் இருக்குடா... நீ நினைச்சா என் மகனையும், நம்ம குடும்பக் கௌரவத்தையும் காப்பாத்தலாம்.." என்றார் கவலையுடன்.
கர்ணனும் இதை உண்மையென்று நம்பி தன் அண்ணனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து "சொல்லுங்கண்ணே.. நீங்க சொன்னா என் உயிரையே கொடுப்பேன்.." என்றான் உடனே.
"அந்தக் கஞ்சா பிசினஸ் முழுக்க உன்னோடதுனு.. ஆகாஷுக்கு இதுல எதுவுமே தெரியாதுனு நீயே நேரா போய் போலீஸ்ல சரணடைஞ்சுரு கர்ணா..
நீ ரொம்ப நேர்மையானவனு எல்லாருக்கும் தெரியும்.. நீ உள்ள போனா கோர்ட்ல நாமே பெரிய வக்கீலை வச்சு உன்னை உடனே வெளிய எடுத்துடலாம்.. ஆனா ஆகாஷ் உள்ள போனா என் அரசியல் வாழ்க்கையே முடிஞ்சுரும்டா.. என் மகனும் ஜெயில்ல இருந்தா தாங்க மாட்டான்டா..
என் மகனுக்காக உன்கிட்ட பிச்சை கேக்குறேன்டா கர்ணா.. இந்த விஷயம் அந்த விருசாலிக்குத தெரிஞ்சா அவ கண்டிப்பா தடுத்து நிறுத்துவா.. அவளுக்குத் தெரியாம நீயே நேரா எஸ்பி ஆபீஸ்க்குப் போயிருடா" என்று கெஞ்சினார் அவர்.
கர்ணனின் நெஞ்சுக்குள் விசுவாசம் என்ற தீயும், அண்ணன் தன்னை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்துகிறான் என்ற கசப்பான உண்மையும் ஒன்றாக மோதிக்கொண்டன.
தன் அண்ணனுக்காகப் பழியேற்று ஜெயிலுக்குப் போவது தனக்கு அவமானம் இல்லை என்று தான் கருதினான். இத்தனை காலம் தன்னை வளர்த்த நன்றிக் கடனுக்காக தன் வாழ்க்கையையே பலி கொடுக்கத் துணிந்தான் கர்ணன்.
"அண்ணே.. உங்களுக்காக நான் எதைய வேணாலும் செய்வேன்.. ஆகாஷ் தம்பிக்கு ஒன்னும் ஆகாது.. அந்த கஞ்சா பழியை நான் என் தலை மேல ஏத்துக்கறேன்.. இப்பவே எஸ்பி ஆபீஸ்க்கு போனா விருசாலி கண்டுபிடிச்சுருவா.. நாளைக்கு போய் சரண்டர் ஆகிருவேன் அண்ணே.. விருசாலிக்கு இது தெரிய வராது.." என்று அவருக்கு வாக்களித்தான்.
அவன் நகர்ந்ததும் 'இருடி உனக்கு ஆப்புக்கு மேல ஆப்பு வெக்கறேன்.. என்கிட்டயா சவால் விடற.?' என்று விருசாலியை நினைத்து தனக்கு தானே கூறிக் கொண்டார் விஸ்வநாதன்.
அறைக்குள் நிலவிய அந்த கனத்த அமைதி, இருவரின் இதயத்துடிப்புகளால் மட்டுமே நிரம்ப தொடங்கியது. விஸ்வநாதன் வீசி விட்டுச் சென்ற வார்த்தைகளின் ரணங்கள் கர்ணனின் நெஞ்சுக்குள் இன்னும் எரிந்து கொண்டுதான் இருந்தன.
சுவரில் சாய்ந்து, பார்வையை வெறிச்சோடியபடி வைத்திருந்த கர்ணனின் முகத்தில் தவிப்பும் கோபமும் மாறி மாறி வந்து போயின.
கர்ணனும் விருசாலியும் அவரவர் யோசனையில் இருக்க, பெண்ணவள் தான் முதலில் அவனை நெருங்கினாள். கர்ணா என்று அவனின் பனியனை பிடித்தழுத்து தாடியில் முகத்தை புதைத்தவளை கர்ணனும் தனக்குள் இழுத்துக் கொண்டான்.
அந்த ஒற்றைச் சொல்லில் அவளது ஒட்டுமொத்தக் காதலும், துணிச்சலும் கலந்திருந்தது. அவனது பனியனைத் தன் கைகளில் இன்னும் இறுக்கமாகப் பிடித்தழுத்து அவனது கரடுமுரடான தாடியில் தன் மென்மையான முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
அவளது முகத்தின் சூடும், மூச்சுக்காற்றும் அவனது மார்பிலும் கழுத்திலும் பட்டுத் தெறித்தபோது, கர்ணனுக்குள் இருந்த அத்தனை கட்டுப்பாடுகளும் ஒரு நொடியில் தவிடு பொடியாயின.
அண்ணன் சொன்ன வார்த்தைகளின் வடுவும், தனக்குள் இருக்கும் அநாதை என்கிற ஏக்கமும் அவளது இந்த ஒற்றை அணைப்பில் காணாமல் போயின. தன் மீது இத்தனை காதல் கொண்ட ஒருத்தியை இனி அவன் எங்கு காண்பான்..
இரு கைகளையும் உயர்த்தி அவளது மெல்லிய இடுப்பை வளைத்துப் பிடித்த கர்ணன் அவளைத் தனக்குள் இழுத்துக் கொள்ள, அவனது அந்த பலமான பிடியில், விருசாலியின் உடல் அவனோடு இன்னும் இறுக்கமாகப் பிணைந்தது.
"என்கிட்ட மட்டும் ஏன் இவ்வளவு திமிர் காட்டற விருசா.? அன்பை கூட திமிரா தான் காட்டுவீயாடி.?" என்று கர்ணனின் குரல் மெலிதாக வர,
அவனது தாடியிலிருந்து சற்றே முகத்தை விலக்கி "இந்த திமிரும் இந்த உலகத்துக்காகத் தான் கர்ணன்.. ஆனா உங்க முன்னாடி நான் வெறும் விருசாலி மட்டும் தான். உங்களோட இந்த ரோஷமும், உழைப்பும் தான் என்னைய உங்களுக்கு அடிமையாக்குச்சு. உங்களை யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன்.. அதே சமயம் யாரும் உங்களைய காயப்படுத்தவும் விடமாட்டேன்.. உங்க கோவமும் காதலும் எனக்கு மட்டும் தான்.. அது எனக்கானதாக மட்டும் தான் இருக்கணும்.." என்று கூறினாள்.
அவளது இதழ்களின் அசைவும், அதிலிருந்து வெளிவந்த வார்த்தைகளும் கர்ணனை முற்றிலும் நிலைகுலைய வைத்தன. அவளது இடுப்பில் இருந்த அவனது கைகளின் பிடி இன்னும் இறுகியது.
"மிரட்டி தாலி கட்டுனதுக்கு உனக்கு நான் தண்டனை தரணுமா.? இல்ல என் மேல வச்சுருக்க இந்த காதலுக்குப் பரிசு தரணுமா?" என்று கர்ணன் கேள்வி எழுப்பிட, லேசாகப் புன்னகைத்த விருசாலி "பரிசும் தண்டனையும் உங்ககிட்ட இருந்து வர்றதுனா இந்த விருசாலிக்கு ரெண்டுமே ஒன்னுதான் கர்ணன்..
உங்க கோவமும் எனக்குப் பிடிக்கும்.. இந்த அணைப்பும் எனக்குப் பிடிக்கும்.. ஆனா என்ன மிரட்டி தாலி கட்டுனதுக்கு தான் தினமும் எனக்கு தண்டனை தர்றீங்களே.?" என்று கண்சிமிட்டி கூறியவள் அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு இன்னும் நெருக்கமாக அவனை இழுத்தாள்.
இருவரின் மேனியும் மற்றொருவரின் துணையை தேடிட, அங்கு வார்த்தைகளுக்கும் பஞ்சமாகி போயிற்று.
அவனின் விடாத இந்த தேடல் பெண்ணவளுக்குள் சந்தேக விதையை விதைத்திட, "கர்ணா என்ன ஆச்சு.?" என்று அவனை தன்னிடம் இருந்து விலக்கி கேட்டாள்.
அவனோ சாதாரணமாக "என்ன நான் உன் பக்கத்துல வர்றது பிடிக்கலயா.?" என்று எரிச்சலுடன் வினவிட, சப்பென்று அவனை அறைந்தவள் "வாயை மூடு.. பிடிக்காம தான் உன்னைய வம்படியா கல்யாணம் பண்ணிருக்கேனா என்ன.? இப்ப உனக்கு என்னடா பிரச்சனை.? நீ பண்றது எனக்கு சரியா படல.." என்று சீறினாள்.
"எனக்கு என்ன.? நான் நல்லா தான் இருக்கேன்.." என்று தான் கூறினான் கர்ணன்.
உண்மையா நீ பண்றது பார்த்தா எனக்கு பயமா இருக்கு கர்ணா.. இன்னைக்கு உங்க அண்ணன் விஸ்வநாதன் உங்களை அநாதைனு சொன்னப்போ நீங்க அப்படியே உடைஞ்சு போய் நின்னீங்க..
அவர் தன் சுயநலத்துக்காக உங்களைப் பயன்படுத்திக்கிறாருனு தெரிஞ்சும் அவர் எனக்காக என்ன செஞ்சாலும் நான் அவரோட தம்பியாத் தான் நிற்பேனு நிற்கறீங்க.?
இன்னைக்கு உங்க அண்ணன் பேச்சை மீற முடியாம அவரோட பாசத்துக்குக் கட்டுப்பட்டு நீங்க தவிக்கறீங்க.? நாளைக்கு என் வயித்துல வளர்ற குழந்தைக்கு நீங்க அப்பா இல்லைனு அவரு சொல்ல சொன்னாலும் சொல்லிருவீங்களா.? ஏன் கேட்கறனா நம்ம வாழ்றது உங்க அண்ணனுக்கு தெரிய வாய்ப்பில்லை.. காரணமே இல்லாம இந்த யோசனை தான் இப்ப எல்லாம் வந்துட்டு இருக்கு.." என்றாள் கலக்கத்துடன்.
விருசாலி பேசிய அந்த வார்த்தைகள் கர்ணனின் நெஞ்சில் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. அவனது ஒட்டுமொத்த உடலும் ஒரு நொடி ஸ்தம்பித்தது.
உலகத்தையே எதிர்த்து நின்று தன்னைத் தன் புருஷனாக மாற்றிய ஒரு பெண், தனக்குள் இவ்வளவு பெரிய பயத்தை மறைத்து வைத்திருக்கிறாள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை.
அண்ணன் பாசம் என்கிற அவனது பிடிவாதம், அவளது காதலை எந்த அளவுக்குக் காயப்படுத்தியிருக்கிறது என்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான்.
கர்ணன் அவளைப் பேச விடாமல், சட்டென்று இழுத்துத் தன் மார்போடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவனது கண்கள் அவளையும் அறியாமல் கலங்கின.
"விருசாலி என்ன வார்த்தைடி பேசிட்ட?" என்று அவளது கூந்தலை மென்மையாக வருடிட, எனக்கு ஏன் இப்படி தோணுதுனு தெரியல கர்ணா.. ஆனா இந்த யோசனைல தான் என் மூளை சுத்திட்டு இருக்கு.. அதான் உங்ககிட்டயும் கேட்டுட்டான்.. என்றவளிடம் அவன் எந்த பதிலும் உரைக்கவில்லை.
விருசாலியின் பயமும் நிஜமாகவே காத்திருந்தது.
விஸ்வநாதனின் பேச்சுக்கள் கர்ணனின் புத்தியை முழுமையாக மறைத்திருந்தது.
விருசாலிக்குத் துளி கூடத் தெரியாமல், பங்களாவின் பின்வாசல் வழியாக ரகசியமாக வெளியேறிய கர்ணன், தன் காரை எடுத்துக் கொண்டு சென்னை சிட்டி எஸ்பி ஆபீஸை நோக்கி அதிவேகமாகப் பறந்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் சென்னை எஸ்பி ஆபீஸின் பிரம்மாண்டமான இரும்பு வாயிலை கடந்து உள்ளே சென்றவன் ஒரு நிமிடம் அப்படியே நின்று மூச்சு இழுத்து விட்டான். பின்பு கண்ணை மூடி திறந்து மீண்டும் உள்ளே நுழைந்தான்.
அங்கே சோபாவில் அமர்ந்திருந்த ஆகாஷும், அவனிடம் தீவிர விசாரணை நடத்திக் கொண்டிருந்த எஸ்பியும், திடீரென உள்ளே நுழைந்த கர்ணனைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
கர்ணன் தன் முகத்தில் எந்தவொரு பயமும் இல்லாமல், நேராக எஸ்பியின் மேஜை முன்னால் சென்று கம்பீரமாக நின்றான்.
அவனது கண்கள் எஸ்பியை ஊடுருவின. தன் இரண்டு கைகளையும் போலீஸ் விலங்கு மாட்டுவதற்காக முன்னால் நீட்டினான்.
"எஸ்பி சார்.. ஆகாஷை இப்போவே விடுதலை பண்ணுங்க.. அவனுக்கும் இந்த பிசினஸுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.. ஆந்திரா பார்டர்ல பிடிபட்ட அந்தக் கஞ்சா லாரி முழுக்க என்னோடது.. சென்னை முழுக்க இருக்கற பெரிய கஞ்சா கடத்தல் நெட்வொர்க்கோட உண்மையான சூத்திரதாரி நான் தான்..
ஆகாஷ் வெறும் ஒரு பகடைக்காய் தான்.. நான் தான் அசல் குற்றவாளி.. என்னைய அரெஸ்ட் பண்ணுங்க.." என்று இடிமுழக்கமாகக் கூறினான்.
கர்ணனின் இந்த அதிரடி வாக்குமூலத்தைக் கேட்டதும் ஆகாஷின் முகத்தில் ஒரு வக்கிரமான நிம்மதிப் புன்னகை முளைத்தது.
ஆனால் எஸ்பியோ செய்வதறியாது திகைத்து "மிஸ்டர் கர்ணன்... நீங்க எவ்வளவு நேர்மையானவர்னு இந்தச் சென்னைக்கே தெரியும்.. விஸ்வநாதனுக்காக நீங்க பழியேற்குறீங்களா.?" என்று எஸ்பி சந்தேகமாகக் கேட்டார்.
"சட்டம் பேசாதீங்க எஸ்பி.. ஆதாரங்கள் எல்லாமே என்னோடது தான்.. குற்றவாளி உங்க முன்னாடி நிற்கிறேன்.. விலங்கைப் போடுங்க.. தப்பு செஞ்சது நானு.. எனக்காக அடுத்தவன் தண்டனை அனுபவிக்கறது பிடிக்காம தான் நானே வந்துட்டேன்.. இந்த உண்மையை எங்க வேணாலும் வந்து சொல்லுவேன்.." என்று கர்ணன் கர்ஜித்தான்.
வேறு வழியில்லாமல் எஸ்பியும் ஆகாஷை விடுதலை செய்தார். விஸ்வநாதனின் வஞ்சகப் பேச்சுக்காகத் தன் ஒட்டுமொத்த நேர்மையையும், வாழ்க்கையையும் அடகு வைத்து செய்யாத தப்புக்காகக் கர்ணனும் சரணடைந்து இருந்தான்.
அடுத்த சில நிமிடங்களில், தமிழகத்தின் அத்தனை முன்னணிக் காட்சி ஊடகங்களிலும் இந்த அதிர்ச்சியூட்டும் செய்தி அசுர வேகத்தில் பரவத் தொடங்கியது.
ஆகாஷ் கைதான் போது கூட செய்தி ஊடகங்களில் பரவவில்லை. இதுவும் விஸ்வநாதனின் வேலை தான்.. செய்தி ஊடகங்களில் பரவி விட்டால் கர்ணன் தான் குற்றவாளி என்று மக்கள் முழுதாக நம்பி விடுவார்கள் என்ற எண்ணத்தில் இப்படியொரு முடிவை எடுத்து அதை செயல்படுத்தியும் இருந்தார்.
நெல்வயல் கிராமத்தின் அரசுப் பள்ளிக்கூடம் தலைமை ஆசிரியர் அறையில் ஒரு சிறிய தொலைக்காட்சிப் பெட்டி ஓடிக் கொண்டிருந்தது.
மதிய உணவு இடைவேளை முடிந்து அடுத்த வகுப்பிற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த அர்ஜுனும், அவனுக்கு இணையாக நின்றிருந்த சுபத்ராவும் அந்த திரையை அப்பட்டமாக வெறித்துப் பார்த்தபடி அப்படியே உறைந்து போயினர்.
தொலைக்காட்சித் திரையில் கர்ணன் கைகளில் இரும்பு விலங்குடன் போலீஸ் வாகனத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நேரலைக் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன.
கீழே சிவப்பு நிறத் தடிமனான எழுத்துக்களில் பிரேக்கிங் நியூஸ் பிளாஷ் ஆகியது
தமிழக அரசியலில் பெரும் பூகம்பம்.. சென்னை கஞ்சா கடத்தல் நெட்வொர்க்கின் அசல் சூத்திரதாரி விருசாலியின் கணவன் கர்ணன் தான்.. போலீசில் அதிரடி சரணடைவு..
என்று செய்தி வாசிப்பாளர் கூறிக் கொண்டிருந்தார்:
"ஆந்திரா எல்லையில் பிடிபட்ட பல நூறு கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில், விஸ்வநாதனின் மகன் ஆகாஷ் நிரபராதி என்றும், அந்தப் போதைப்பொருள் நெட்வொர்க்கின் உண்மையான தலைவன் நான் தான் என்றும் கூறி விருசாலியின் கணவனான கர்ணன் தற்போது சென்னை சிட்டி எஸ்பியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.. சட்டப்பிரிவின் கீழ் கர்ணன் தற்போது அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.." என்று விடாமல் இந்த செய்தியே ஓடி கொண்டிருந்தது.
அர்ஜுனின் கைகள் கோபத்தில் நடுங்கின. கர்ணனுக்கும் அவனுக்கும் இடையே ஆயிரம் மனஸ்தாபங்கள் இருக்கலாம். ஏன் அவனது முகத்தைப் பார்ப்பதைக் கூட அர்ஜுன் சில நேரங்களில் தவிர்த்திருக்கலாம்.
ஆனால் அதற்காக கர்ணன் ஒரு குற்றவாளி என்பதை அவனது மனம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
விஸ்வநாதன் எப்படிப்பட்ட நரிப்புத்தி உள்ளவன் என்பது இந்த ஊருக்கே தெரியும். பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் எதையும் செய்யத் துணியும் ஆபத்தான மனிதன் அவன்.
அவனது மகன் செய்யும் அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் எல்லையே இல்லை. ஊரில் நடக்கும் அத்தனை சட்டவிரோத செயல்களுக்கு பின்னாலும் அந்த அப்பனும் மகனும் தான் இருக்கிறார்கள் என்பது அர்ஜுனுக்கு அக்குவேறாக ஆணிவேறாகத் தெரியும்.
அப்படிப்பட்ட ராட்சசர்களிடம் மாட்டிக்கொண்டு, கர்ணன் ஏன் இப்படி ஒரு பழியைத் தன் மேல் சுமத்திக். கொள்ள வேண்டும்? கர்ணனைப் பற்றி அர்ஜுனுக்கு நன்றாகத் தெரியும். அவன் நேர்மையின் மறுஉருவம்.
தன் கொள்கைக்காக உயிரையும் விடத் துணியும் ஒருவன், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டான் என்பதை அவனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
யாரோ அவனைப் பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். விஸ்வநாதனின் சதிவலையில் கர்ணன் ஏதோ ஒரு காரணத்திற்காகச் சிக்கியிருக்கிறான். தன் தவறை மறைக்க அந்த நரி கூட்டம், இந்த நேர்மையானவனைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியிருக்கிறது.
'விஸ்வநாதன்.. எல்லாம் அந்த நரியோட வேலை.. தன் மகனைக் காப்பாத்த கர்ணனோட கண்மூடித்தனமான அண்ணன் விசுவாசத்தைப் பயன்படுத்தி அவனைக் கொடூரமாப் பலிகடா ஆக்கியிருக்கான்' என்று நினைத்த அர்ஜுன் கைகள் ஆத்திரத்தில் இறுக்கமாக மூடிக் கொண்டன.
அருகில் நின்றிருந்த சுபத்ராவும் தன் கையில் இருந்த ஆங்கிலப் புத்தகங்களை மேஜை மீது போட்டு "என்ன சார் இது.? சின்ன குழந்தைகளுக்கு எல்லாம் கஞ்சா விற்பனை பண்ணிருக்கான் இவன்.? இவனுக்கு மனசாட்சினு ஒன்னு இருக்குமா.? இவனை எல்லாம் ரோட்டுல விட்டு சுட்டு தள்ளணும் சார்.." என்று கோவத்தில் சினந்தாள்.
சுபத்ரா கோபத்தில் கத்திய வார்த்தைகள் அர்ஜுனின் காதுகளில் விழுந்தாலும், அவனது கவனம் முழுவதும் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த அந்தச் செய்திச் சுருளின் மீதே இருந்தது.
அவளின் முகம் ஆத்திரத்தில் சிவந்திருந்தது.
அர்ஜுன் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவனது பார்வையில் கோவத்தை விட ஒரு தீர்க்கமான அமைதி இருந்தது. மெதுவாக நாற்காலியிலிருந்து எழுந்தவன், சுபத்ராவை நோக்கி நடந்தான்.
"முதல்ல கொஞ்சம் அமைதியா இருங்க சுபத்ரா" என்றான் அர்ஜுன் அவளது பதற்றத்தைக் குறைக்கும் குரலில்.
"என்ன சார் அமைதியா இருக்கறது.? டிவில வர்ற செய்தியை நீங்க பாக்கலயா.? ஸ்கூல் பசங்களுக்கு கஞ்சா வித்திருக்கானு சொல்றாங்க.. சின்ன பசங்க சார்.. அவங்களோட எதிர்காலமே என்னவாகறது.? நாட்டை ஆள்றவன் நேர்மையா இருந்தாலும் அவனுக்கு கீழ இருக்கிறவன் இப்படி பண்ணுனா இந்த பழி எல்லாம் அவன் தலைவனுக்கு தானே சார் போகும்.?" என்று சுபத்ரா மீண்டும் கொதித்தாள்.
அர்ஜுன் லேசாகத் தன் தலையை அசைத்து மறுத்து "சுபா ஊடகங்கள்ல வர்ற எல்லாமும், கண்ணு முன்னாடி காட்டற எல்லாமும் உண்மை கிடையாது.. இந்தச் செய்திக்கு பின்னாடி ஏதோ ஒரு பெரிய சதி இருக்கு..
இந்த கர்ணனை எனக்கு நல்லாவே தெரியும்.. அவன் உயிரே போனாலும் இப்படிப்பட்ட ஒரு கேவலமான வேலையைச் செய்ய மாட்டான்.. இந்த நியூஸ் சேனல்கள் அவங்க டி.ஆர்.பி-க்காகவும், யாரோ ஒருத்தரோட அதிகார பலத்துக்காகவும் இப்படி விடாம செய்தியை போட்டுட்டு இருக்கு.." என்றான் தீர்க்கமாக.
சுபத்ரா குழப்பத்துடன் "அர்ஜூன் என்ன சொல்றீங்க.? இவங்கள தெரியுமா.? சரி அப்படியே இருந்தாலும் இவனே போலீஸ்ல சரணடைஞ்சுருக்கானே.? அதுலயே தெரியலயா.? அதுவுமில்லாம இந்த தேர்தல்ல ஜெயிக்க அதிக வாய்ப்பிருக்கற கட்சி தலைவரோட பொண்ணோட கணவன் இவர்.. கட்சி தலைவர் எப்படி இருக்கார்.? இவன் ஏன் இப்படி பண்ணிருக்கான்.?" என்று தனக்கும் ஓரளவிற்கு அரசியல் தெரியும் என்ற ரீதியில் கேட்டாள்.
'நல்லவேளை என்னைய தெரியல..' என்று பெருமூச்சு விட்டு கொண்டவன் "அதுதான் இங்க இடிக்குது.. என்ன நடக்குதுனு எனக்கும் புரியல சுபா.." என்றான் அர்ஜுன் மேஜையின் மீது கைகளை ஊன்றியபடி.
'ஒன்னு தப்பு செஞ்சவன் பயந்து ஓடப் பார்ப்பான்.. இல்லன்னா அதிகாரத்தை வச்சு மறைக்கப் பார்ப்பான்.. ஆனா, தப்பே செய்யாத கர்ணன் ஏன் சரணடையணும்.? விஸ்வநாதனும் அவன் மகனும் ஆடற ஆட்டத்துக்கு கர்ணனைப் பகடைக்காய் ஆக்கியிருக்காங்க.. டிவில வர்ற இந்த பிரேக்கிங் நியூஸ் எல்லாமே அந்த நரி கூட்டத்தோட திரைக்கதை.. உண்மையை மூடி மறைக்க அவங்க எழுதின பொய் நாடகம் இது.. சீக்கிரமே இந்தச் செய்தியோட போலி முகத்திரையை நான் கிழிப்பேன்..' என்று தனக்குள் முடிவெடுத்தான்.
அவனுக்கு விருசாலியின் நினைவு எழுந்தது. அவள் எப்படி இதை தாங்குவாள்.? என்று நினைத்து கவலையும் கொண்டான். ஆனால் வருந்தவில்லை. எதையும் சமாளிக்கும் திறன் கொண்டவள் தான் அவள்.. என்று நினைத்ததும் அவனின் மனதும் சற்று அமைதியடைந்தது.
வீட்டிற்கு சென்றதும் அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
விருசாலியின் பெரியப்பா சோபாவில் அமர்ந்து இதே செய்தியைக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரது நீண்ட அரசியல் அனுபவக் கண்களுக்கு, விஸ்வநாதன் ஆடியிருக்கும் இந்தக் கொடூரமான சதுரங்க ஆட்டம் அப்பட்டமாகப் புரிந்து விட்டது.
'என்னடா இது.. சாது மிரண்டால் காடு கொள்ளாதுனு சொல்லுவாங்க.. ஆனா இங்க விசுவாசமே ஒரு சாதுவை ஜெயிலுக்கு அனுப்பியிருக்கே.?' என்று நினைத்த அவர் தன் நெற்றியைத் தடவிக் கொண்டார்.
மறுவீட்டு விருந்தின் போது தன் டைனிங் டேபிளில் அமர்ந்து, கனிவோடு சாப்பிட்ட கர்ணனின் முகம் அவரது நினைவுக்கு வந்தது.
'விஸ்வநாதன் முதலமைச்சர் நாற்காலிக்கு ஆசைப்படுவது இவருக்கும் நன்றாக தெரியும்.. ஆனால் இவரை கொல்ல நினைத்தது தெரியாது.. நேற்று கூட விஸ்வநாதனின் மகனை தான் கைது செய்தார்கள் என்று கேள்விப்பட்டார். இப்போது என்னவென்றால் கர்ணனே போய் சரணடைந்து விட்டிருக்கிறான்' என்பதே அவரின் மூளையில் எங்கையோ இடித்தது.
'கர்ணனோட இந்த விசுவாசம் அவனுக்கே எமனாக மாறியிருக்கு.. இதுல என் பொண்ணோட வாழ்க்கையும் இருக்கே.?விருசாலி என்ன பண்றானு பார்ப்போம்..' என்று பெரியப்பா மிகுந்த வேதனையோடு பெருமூச்சு விட்டார். அவரின் மனைவியும் ஒன்றும் புரியாமல் கணவரிடம் புலம்பினார்.
செய்தித் திரையைப் பார்த்த ஒட்டுமொத்தத் தலைவர் குடும்
பமும், நெல்வயலில் அர்ஜுனும் விஸ்வநாதனின் இந்த அக்கிரமத்தைக் கண்டு ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த வேளையில், சென்னை எஸ்பி ஆபீஸிற்குள் புயலென நுழைந்தாள் விருசாலி.
தொடரும்...