• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியவள் - 21

Vishakini

Moderator
Staff member
மகேந்திரனின் மதிவதனியிவள் - 21


அன்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்க, வழக்கத்தைவிட மந்தமாகத் தொடங்கிய நாளின் இனிமையை ஆழ்ந்து அனுபவித்தபடியே பால்கனியில் நின்றாள் மதிவதனி...

'நான் இங்க வந்து தர்ட்டிசெவன் டேய்ஸ் ஆகிடுச்சுல... ப்பா எவ்ளோ வேகமா ஓடுது..!' பெண்ணவளின் மனம் ஆர்ப்பரிக்க, பின்னால் வந்து நின்ற கணவனைக் கவனிக்கவில்லை...

இரவுடை அவளின் தோள் வளைவில் லேசாக விலகியிருக்க, தன் அடர்ந்த கூந்தலை கொண்டையிட்டு ஒரு கேட்ச் கிளிப்பில் அடக்கியிருந்தவளின் பின்னழகு ஆணவனை சுண்டியிழுத்தது...

பின்னிருந்து அவளுக்கு இருபுறமும் பால்கனிக்கம்பியைப் பிடித்தவன், அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் தன்னை ஈர்த்த கழுத்து வளைவில் புதைந்து அழுத்தமாக முத்தமிட, அந்த முரட்டு அதரங்களின் அழுத்தமும், மீசைமுடியின் குறுகுறுப்பும் பூந்தேகத்தை சிலிர்க்க வைக்க, ஆனந்த அதிர்ச்சியில் அவளின் வதனம் சந்தியாவானமாய் சிவந்துபோனது...

மனைவியின் முகத்தைக் கவனிக்காமல், "ப்ச் ஹேய் சாரி டி..! ஏதோ ஞாபகத்துல இப்படி பண்ணிட்டேன்... ரொம்ப சாரி..." அவளின் கரம் பற்றி அழுத்தி மன்னிப்பை வேண்டியவன் வேகமாக உள்ளே சென்றிருந்தான்...

மனைவியைத் தானே முத்தமிட்டான்? எதற்காக இத்தனை பதற்றம்?

அவனைப் புரியாமல் பார்த்தவளுக்கு உடனே புரிந்தும்போனது...

எல்லாம் அவள் செய்த முட்டாள்தனம்..!

அவளும் தவறை உணர்ந்ததில் இருந்து இந்த ஒரு வாரமாக எத்தனையோ முறை அவனை நெருங்க முயற்சித்துவிட்டாள்... க்ஹூம் முடியவில்லை..!

டாம் அண்ட் ஜெர்ரியில் வரும் ஜெர்ரியாய் அவன் ஓடுகையில் அவளால் எப்படி முடியும்?

சரி பேச தான் முடியவில்லை, அவன் வாங்கி தந்த உடைகளை அணிந்தால் அவளின் மனமாற்றம் புரியுமோ என நினைத்தால், அதற்கும் வழியில்லை...

அழகான மனைவியை அருகில் வைத்துக்கொண்டு விரதமிருக்க வேண்டிய கட்டாயத்தில், அவளை ரசிக்கத் தொடங்கினால் நிச்சயமாக அத்துமீறலில் முடிந்துவிடும் என பயந்த மன்னவன், நிமிர்ந்தே பாராமல் சுத்திக் கொண்டிருக்கும்போது அவள் உடுத்தும் உடையை எவ்வாறு அறிவான்?

கடந்து சென்ற ஒரு மாதமும் வீட்டில் மற்றவர்களுடன் இயல்பாகப் பழகியவள் அவனை மட்டும் விலக்கி வைத்திருப்பதாக நினைத்த மகேந்திரனிற்கு, தன் உயிர்க்காதல் அவள் மனதினில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையோ? என்பதே தலையாயக் கவலையாக இருந்தது...

கவலையின்றி ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியாய் வலம் வந்தவனையே ஒரு சுழலில் பிடித்துத் தள்ளியதைப் போல் மாற்றிவிட்டதே இந்த காதல்..!

இடைவிடாமல் பெரும்தூரலாய் மழைப் பொழிய, அன்று வாரநாள் என்பதால் இருவரும் வழக்கம் போல் அலுவலகம் சென்றுக் கொண்டிருந்தனர்...

மிதமான வேகத்தில் கார் ஓட்டியவனை அடிக்கடி திரும்பிப் பார்த்தபடி வந்த மதிவதனி, "உ..உங்களுக்கு என் மேல எதுவும் கோபமாங்க?" காரணத்தை அறிந்தும் அவள் பேச்சுக்கொடுக்க,

"ச்ச ச்ச எனக்கென்ன கோபம்? அதெல்லாம் இல்லடா.." என்றான் அவள்புறம் திரும்பாமலேயே..

பின் எதற்காக இரவுகளில் தரும் முத்தத்தைக் கூட நிறுத்தினாய் என வெட்கத்தைவிட்டுக் கேட்க முடியாமல் அமைதியாக வந்தவளின் மனமும் ஒரு நிலையில் இல்லை..!

"ஓ..!" என்றதோடு அவள் அமைதியானாலும் அவனை அடிக்கடி திரும்பிப் பார்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை...

மனைவி தன்னிடம் ஏதோ கேட்க வருவதும் பின்பு முடியாமல் தவிப்பதும் புரியாமலில்லை மகேந்திரனுக்கு...

அவனுக்கும் அது தானே வேண்டும்..!

"இன்னைக்கு ஈவ்னிங் ஆறு மணிக்கு ஒரு பர்த்டே பார்ட்டிக்குப் போகணும்டா..!" என்றதற்கு சம்மதமாக அவள் தலையசைக்க அதன் பின்னர் அங்கு எந்த சத்தமும் இல்லை...

அன்றைய அலுவல்களை விரைவாக முடித்துவிட்டு இருவரும் வீடு திரும்பியதும் அங்கு செல்வதற்காகக் கிளம்பிக் கொண்டிருக்க, அவன் வாங்கி வந்த ஒரு பர்ப்பிள் நிற டிசைனர் புடவையை அணிந்துக்கொண்டு அவள் வெளியே வர, அப்போதும் அவளை சரியாகக் கவனிக்காமல் அவளுக்கு முன்பே காரில் ஏறியிருந்தான் அவன்...

"க்ம்ஹூம் என்னையக் கண்டுக்காமப் போறதப் பாரு... கடவுளே..! இவர கரெக்ட் பண்றதுக்கு எதாவது ஐடியா கொடுப்பா..." என்ற முணுமுணுப்புடன் அவளும் காரில் ஏறிக்கொள்ள, அது பார்ட்டி நடக்கவிருந்த ஐந்து நட்சத்திர விடுதியை நோக்கி விரைந்தது...

எனினும் இத்தனை தவிப்புகளுக்கு மத்தியில் ஒத்தமனமாக அவளும் அவனும் ஒரே நிறத்தில் உடையணிந்திருப்பது அவள் மனதிற்கு சிறிது இதம் சேர்க்க, இருவரும் அங்கு சென்று இறங்கினர்...

மகேந்திரன்அபர்ஜித்தின் நண்பன் ஜீவனின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழா அது..!

நண்பனை அணைத்து வரவேற்ற ஜீவா, "என்னடா மச்சி, நீயும் தங்கச்சியும் மேட்ச்சிங் காஸ்டியூமா?" என்று கேலி செய்து சிரிக்க,

இதழ்பிரியாத முறுவலோடு, "இல்ல மச்சான்... எதார்த்தமா நடந்தது தான்..!" என்றபடி மனைவியின் கரத்தை அழுந்தப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றவன் பெண்கள் அமர்ந்திருந்த பகுதியில் ஜீவனின் மனைவி நித்யாவோடு அமர்த்தியதோடு நண்பர்களுடன் ஐக்கியமாகி இருந்தான்...

அவ்விழாவிற்கு மகேனும் மனைவியுடன் வந்திருக்க, அவர்களுக்குள் இருந்த அன்னியோன்யத்தைப் பார்த்தபின்பு, அவள் செய்திருக்கும் தவறு பொட்டில் அடித்ததைப் போன்று நன்றாகப் புரிந்தது மதிவதனிக்கு..!

அது போதாதென்று அங்கு வந்திருந்த திருமணமாகாத சில இளம்பெண்களின் பார்வை தன் கணவனை வட்டமிட்டதில் அவள் நெஞ்சம் தீப்பற்றி எரிய, அதில் எண்ணெய் ஊற்றுவதைப் போல் ஒரு நவீன யுவதி மட்டும் அவளின் மகி விலக விலக அவன் மேலேயே விழுந்துப் பழகுவதைக் கண்டவளுக்கு பொறாமையில் தேகம் வெந்து தணிந்தது...

அப்பெண்ணைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்த நித்யா, அவளைப் போன்றே சில பெண்கள் மகேந்திரனை திருமணம் செய்ய விரும்பியதையும் சொல்லிவிட்டு விருந்தினர்களைக் கவனிக்கச் செல்ல, அதற்கு மேல் அமர்ந்திருக்க முடியாமல் விறுவிறுவென அவர்களை நெருங்கினாள் வதனி...

முன்ஜென்மத்தில் அவன் மன்னனாக இருந்தபோதே சண்டையிட்டவளுக்கு இப்போதென்ன தயக்கம்?

கணவனின் திண்ணிய புஜத்தை அழுத்தமாகப் பற்றி, "ஏங்க எனக்குப் பசிக்குது..! சாப்ட்டு வீட்டுக்குப் போகலாமா?" என்றபடி அங்கேயே கன்னம் பதித்துக்கொள்ள,

மனைவியின் அதீத நெருக்கத்தில் தடுமாறியவன் நொடியில் தன்னை சுதாரித்து, 'ஓ என் வதும்மாவுக்குப் பொறாமையா? என நினைக்க, 'ஏன் உனக்குத் தெரியாதா?' என்றவன் மனசாட்சி கேள்விக் கேட்டதில்,

'அதானே எப்படி மறந்தேன்..! போன ஜென்மத்துல அந்த காஞ்சனைய வச்சு தானே என்னோட சண்டப் போட்டா..! நீ இன்னும் மாறவே இல்லயா டி?' மனதில் அவளைக் கொஞ்சியபடியே மறுக்காமல் அவள் சொன்னதை செய்தான்...

அவளுக்கு மறுப்புக் கூறாமல் உண்ண அழைத்து வந்ததோடு அன்று வெள்ளிக்கிழமை அவள் விரதம் என்பதை அறிந்து அவனும் சைவம் உண்டதைக் கண்டபோது பெண்ணவள் இவ்வுலகிலேயே இல்லை...

கணவனின் காதலில் நனைந்து கொண்டே அவனின் கம்பீரத்தை ரசித்தவள், அவன் மீதிருந்து வந்த ஆண்வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தாள்...

திருமணம் நடந்ததில் இருந்தே அவனை நெருங்குவதும் விலகுவதுமாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தவள், சற்று முன்னர் அவன் அந்த கீர்த்தனாவை நடத்திய முறையிலும், இப்போது அவளுக்காக சைவம் உண்பதிலும் முற்றும் முழுதாக விழுந்திருந்தாள்..!

பிறந்தநாள் கொண்டாட்டம் முன்னரே முடிந்திருந்ததால் உண்டு முடித்ததும் ஜீவன் குடும்பத்தினரிடம் விடைபெற்று இருவரும் வெளியே வருவதற்கும் மழை அடித்து ஊற்றுவதற்கும் சரியாக இருக்க, காரை நெருங்குவதற்குள் இருவரும் நன்றாக நனைந்திருந்தனர்...

அங்கு மட்டுமின்றி தங்கள் வீட்டை அடைந்து நடைபாதையில் இறங்கி நடந்தபோதும் நனைந்ததில் மன்னவனின் கண்களுக்கு பனியில் நனைந்த ரோஜாவாகத் தெரிந்தாள் அவள்..!

"இன்னைக்கு அவ பக்கமே போயிடாதடா..!" என தனக்குள் முனங்கியபடி வேகமாக குளியலறைக்குள் நுழைந்தவன் தன் தவிப்பு தீர குளித்து வந்தான்...

கட்டியிருந்த புடவை அரைகுறையாக கலைந்திருக்க, "ப்ச் நல்ல சேரி இப்படி ஆகிடுச்சே..!" அவள் பாவமாக உதட்டைப் பிதுக்க, தடுமாறிய மனதை திசைதிருப்பும் முயற்சியாக அவன் அலமாரியைத் திறந்து மாற்றுடை எடுக்கச் செல்ல, அதற்குள் அவன் மனைவி முந்திக்கொண்டாள்...

"என்ன கலர் டிரஸ் போடலாம்" உடைகளை ஆராய்ந்துக் கொண்டே ஓரக்கண்ணால் பின்னால் நின்ற கணவனைப் பார்க்க, அவனின் சூடான மூச்சுக்காற்று அவளது பின்கழுத்தில் மோதியது..!

அதில் தேகம் சிலிர்க்கத் திரும்பியவள் வேண்டுமென்றே அவன் மார்பில் அழுத்தமாக மோதி நின்றதில், அவன் விழிகளில் தாபத்தீ கொழுந்துவிட்டு எரிந்ததைக் கவனிக்கவில்லை...

"சா..சாரிங்க தெ..தெரியாம" என்று அவனிடம்‌ மன்னிப்பை வேண்டும்போதே வானம் இடிந்து கீழே விழுந்துவிட்டதோ என எண்ணும்படியாக ஒரு இடியோசைக் கேட்க, "ஆ..! என்னங்க..! இடி..!" என்றவாறே அவனை இறுக்கி அணைத்திருந்தாள் வதனி..!

அவ்வோசை அடங்கிய பின்னும் தன் மார்பில் சாய்ந்திருந்தவளை விலக்க முடியாமல் தவித்து, "வ..வதும்மா..! கொஞ்சம் தள்ளி நில்லுடா... நானும் மனுஷன் தானே..." என்றதில் மேலும் அவனோடு ஒட்டிக்கொள்ள முயல, அதற்கு மேல் கட்டுப்பாடுகளைத் தகர்த்து வேகமாக அவளின் முகம் பற்றி நிமிர்த்தி கண்களை ஆழப் பார்த்தவன்,

"ஐ காண்ட் ரெசிஸ்ட் மைசெல்ஃப் பேபி..!" என்றதோடு மனைவியின் மென்னிதழ்களில் பதிந்து தன் தாபத்தைத் தீர்த்துக்கொண்டான்...

பல நிமிடங்கள் கடந்தும் தொடர்ந்த அவர்களின் இதழ்யுத்தம் அலைபேசி இசைத்ததில் தடைபட, அப்போது தான் சுயநினைவை அடைந்தவனாக விலகி நின்றான் அவன்..!

கணவனை நிமிர்ந்தும் பாராமல் அலமாரியில் இருந்த ஒரு பையை எடுத்துக்கொண்டு வேறொரு அறைக்குள் நுழைந்துகொள்ள,

"ப்ச் கோபமா போறாளோ? ச்சை இப்படி பண்ணிட்டனே..!" எனப் புலம்பியவாறே கையிலிருந்த டிஷர்ட்டை கூட அணிய மறந்து அறையின் நீள அகலத்தை அவன் அளந்து கொண்டிருக்க, கால்மணி நேரத்தில் திரும்பி வந்தவள் நேராக அவனிடம் வந்து நிற்க, அவளின் உடையைக் கவனித்தவனின் சுவாசம் தடைபட்டது..!

"இ..இது?" எனத் தவித்தவனின் கழுத்தில் தன் கரங்களை மாலையாகக் கோர்த்தவள், "ஆமா நீங்க வாங்கி தந்த அதே சேரி தான்..! அழகா இருக்கேனா?" என்றுக் கேட்க,

"ம்ம் ரொம்ப ரொம்ப..! ஆனா இதெல்லாம் நீ புரிஞ்சு தான் பண்றியா டி?" பெண்ணவளின் நெற்றியில் இதமாய் முட்ட, வார்த்தைகளற்ற சம்மதமாக மன்னவனை இறுக்கி அணைத்து வெற்றுமார்பில் அவள் முகம் புதைத்ததில் சிலிர்த்தவன்,

"வதும்மா?" என்றான் கேள்வியாக...

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், ஆம் என தலையசைக்க, நம்ப முடியாத அதிர்ச்சியில் சில நொடிகள் உறைந்து நின்றவனுக்கு சட்டென்று ஞாபகம் வர,

"ஓய்‌ இன்னைக்கு ஃப்ரைடே, நீ விரதம்ல, அப்போ இது பரவால்லயா?" எனக் கேட்டான்...

தன் காதலை உணர்த்துபவளாக நுனிக்காலில் எம்பி நின்று அவன் நெற்றியில் முத்தமிட்டவளை அதற்கு மேல் தவிர்க்க முடியாத தவிப்பில், "உனக்கு உண்மையாவே ஓகேவா டி?" என்றதும் சலிப்பாக அவனிடமிருந்து விலகி நின்றவள்,

"ப்ச் நான் தான் டியூப்லைட்னு பார்த்தா என் புருஷனும் என்னவிட பெரிய டியூப்லைட்டா இருந்தா என்ன தான் பண்றது?" என்று முணுமுணுத்ததில் சத்தமாக சிரித்தவன்,

"அடியே யாரு‌ டி டியூப்லைட்டு? நீயா மனசு மாறணும்னு தான் நான் ஜென்டில்மேனா வெயிட் பண்ணது... இல்லைனா கல்யாணம் பண்ண அன்னைக்கே உன்ன ஸ்வாகா பண்ணியிருப்பேன்..." என்றவளை அணைக்க,

"க்ஹூம் அதுல தான் நானும் விழுந்துட்டேன்... சரி நீங்க இப்படி சந்தேகம் கேட்டுட்டே நில்லுங்க நான் தூங்கப்போறேன்..." அவனிடமிருந்து நழுவ முயன்றவளை நொடியில் தன் கரங்களில் ஏந்தியவன்,

"சும்மா இருந்தவன சீண்டி விட்டுட்டு எங்க டி எஸ்கேப்பாகப் பார்க்குற... ம்ம்? இனிமே நீ தப்பிக்கவே முடியாது பேபி..!" மனைவியின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்ததோடு மஞ்சத்தில் விழுந்திருந்தான்...

நேற்று வரை அவள் நெற்றியைத் தாண்டி பயணித்திடாத மன்னவனின் முரட்டு அதரங்கள் அவளின் மென்னிதழோடு உறவாடி அவளை நிலைகுலைய வைத்ததோடு, அவளின் பூந்தேகத்தில் ஆங்காங்கே தன் தடத்தைப் பதிக்க, மதிவதனியின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகளின்‌ படபடப்பு..!

விழிமூடி கிறங்கியிருந்தவளைக் கண்டு மென்மையாக சிரித்தவாறே, "இங்க என்னைய கொஞ்சம் பாரு டி வதும்மா..!" அவள் காதுக்குள் ஏதோ ரகசியம் சொல்லியதில் நாணம் கொண்டு முகம் மூடியவள் மறுப்பாக தலையசைக்க, அவளின் கழுத்துவளைவில் புதைந்து மீசை முடிகளால் குறுகுறுப்பு மூட்டியவன்,

"உனக்கு எதாவது கஷ்டமா இருந்தா சொல்லிடு டி..!" என்றதோடு அவள் மேனியில் தன் தேடலைத் தொடங்கியிருந்தான்...

கிசுகிசுப்பாய் அவள் காதோரம் ஒலித்த அவனது குரல் தன் தவிப்பையும் தேடலையும் பதிவு செய்ய, அதற்கு பதிலாக வந்த அவளின் சிணுங்கல்கள் மேலும் அவனைத் தூண்டிவிட, ஜென்ம ஜென்மமாய் காத்திருந்த உயிர்களின் சங்கமம் தன் இணையைக் கண்டுகொண்டதில் அழகாக நீண்டு ஆத்மார்த்தமாக முடிவுற்றது..!

இருவரின் தேகமும் பற்றிக்கொண்ட நெருப்பாய் தகித்ததில் குளிரூட்டப்பட்ட அறையிலும் வியர்த்து வடிய, நிறைவாக மனைவியின் நெற்றியிலும் இதழிலும் அழுத்தமாக பதிந்துவிட்டு அவளிடமிருந்து விலகிப் படுத்தவனின் மனம் முழுவதும் நிறைவும் பூரிப்பும்..!

கணவனின் மன்மத அவதாரத்தில் பெண்ணவளின் விழிகளிரண்டும் இன்ப மயக்கத்தில் மூடிக்கொண்டதில் உள்ளம் துள்ள மீண்டும் அவளை நெருங்கி கழுத்தடியில் புதைந்தவன்,

"நீ இப்போ ஓகேவா டி..!" வருடும்‌ குரலில் அவளின் நிலையை வினவ,

அவனின் முதுகை மென்மையாக வருடியபடி, "ம்ம் ம..மகி..!" என்றதில் திகைத்து நிமிர்ந்தவன் அவளின் கன்னம் பற்றி,

"வ..வதும்மா..! உ..உனக்கு எல்..எல்லாம் ஞாபகம் வந்துடுச்சா?" என்றான் மிகுந்த தவிப்புடன்...


தொடரும்......
 
Top Bottom