• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியவள் - 22

Vishakini

Moderator
Staff member
மகேந்திரனின் மதிவதனியிவள் - 22


முதலில் அவளுக்கும் தங்களின் முன்ஜென்ம நினைவுகள் வருவதை விரும்பியவனுக்கு, இப்போதிருக்கும் மதிவதனியால் அவற்றைத் தாங்க முடியாதோ என சமீப நாட்களாக ஒரு பயம் வந்திருக்க, அதில் உடன்பாடில்லை..!

இறுதியில் வந்த நினைவுகளால் அவன் ஒருவன் தவிப்பதே இன்னும் பல ஜென்மத்திற்கும் போதுமே..!

தன்னவள் "மகி" என்றழைத்ததில் அவளுக்கும் அந்நினைவுகள் வந்துவிட்டதோ என நினைத்த மகேந்திரனுக்கு ஒரு நொடி நெஞ்சம் உலர்ந்துபோனது..!

தவிப்பாக அவள் முகம் பார்க்க, அது நிர்மலமாக இருந்ததோடு, "என்ன ஞாபகம் மகி? எனக்கு எதுவும் புரியலையே..!" என்றதில் அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிட்டவன்,

"ஒன்னுல்ல டி..! சும்மா தான்..! நீ ம..மகினு கூப்ட்டியே? அது எப்படி?"
அவள் மனதில் இருப்பதை அறியும் நோக்கில் கேட்டான்...

"உங்கள வேற எப்படிக் கூப்பிடவும் எனக்குப் பிடிக்கல மகி..! அ..அதோட நான் மட்டும் கூப்பிட்ற பேர் ஸ்பெஷலா இருக்கணும்னு தோனுச்சு... அதான் மகேந்திரன்ல இருக்க 'மகி' ஏன் உங்களுக்குப் பிடிக்கலையா?" என்க,

'நம்மளப் பத்தி உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் நீ எப்போ அப்படி கூப்பிடுவனு தவம் இருக்கேன் டி..!' மனதில் அவளைக் கொஞ்சிக்கொண்டே ,

"ச்ச ச்ச எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு... இன்னொரு தடவ மகினு கூப்பிடு வதும்மா..!" என்றவாறே அவளை ரசனையாக அளவிட்டான்...

காதலின் ஞாபகங்கள் வராதபோதிலும் தன்னவளின் மனதில் அந்த பெயர் மட்டும் அழியாமல் இருப்பதை எண்ணி மன்னவனின் மனம் நெகிழ்ந்தது...

கணவனின் விழிவீச்சில் மயங்கிய வதனி, "ஏன் இப்..இப்படிப் பார்க்குறீங்க ம..மகி?" எனக் கேட்டுவிட்டு சிவந்த முகத்தை அவன் மார்பில் மறைத்துக்கொள்ள,

"அழகா இருக்கியே வதும்மா..!" அவன் விரல்கள் போர்வையின் மேலாக அவளின் வரிவடிவத்தை அளந்தன...

"ப்..ப்ளீஸ் மகி..." என்றவள் தவிக்க, "சரி டி ஒன்னும் பண்ணல..! நீ இப்போ ஓகேவா? எங்கேயும் வலிச்சா சொல்லிடு..!" அவள் மேனியை மென்மையாக அழுத்திவிட்டான் அவன்...

இப்படி வற்றாத ஜீவநதியாய் அன்பைப் பொழிந்து தன்னை சிற்பமாய் உறைய வைக்கும் கள்வனை என்ன தான் செய்வது?

மறுப்பாக தலையசைத்துவிட்டு அவன் மார்பில் மேலும் ஒன்றிய மதிவதனி, அப்போது தான் ஞாபகம் வந்தவளாக எழுந்து கட்டிலுக்குக் கீழே விழுந்திருந்த ப்ளவுசை எடுத்து சரியாக மடித்து பத்திரப்படுத்தியதைக் கவனித்து,

"இது மட்டும் அப்படி என்ன டி ஸ்பெஷல்? மத்த டிரஸ்லாம் வேணாமா?" என அங்கொன்றும் இங்கொன்றுமாக கீழேக் கிடந்த அவர்களின் உடைகளை சுட்டிக்காட்ட, பெண்ணவளின் மதிவதனம் குப்பென்று செம்பவளமாக சிவந்துபோனது...

"இ..இது ரெடிமேடா இருந்தாலும் நல்ல ஃபிட்டா இருந்துச்சு... அதான் நெக்ஸ்ட் டைம் ப்ளவுஸ் ஸ்டிச் பண்றப்போ அளவுக் கொடுக்க வேணும்னு எடுத்து வச்சேன்..!" என்றாள் மெல்லிய குரலில்...

"அச்சோ சோ ஸ்வீட்..! நீ எடுத்து வச்சது ரெடிமேட் ப்ளவுஸ் இல்ல பேபி..! ஸ்டிச் பண்ணது தான்..."

"அ..அப்படியா? ஓ..! என்னோட பழைய ப்ளவுஸ் எடுத்துட்டுப் போய் அளவு கொடுத்தீங்களா மகி? எதுன்னு சொல்லுங்க நெக்ஸ்ட் டைம் நானும் அதையே எடுத்துட்டுப் போறேன்..." என்றதில்,

"அதுவும் இல்ல வதும்மா..! உன்ன கண்ணால ஸ்கேன் பண்ணி நானே தான் அளவு சொன்னேன்..!" மனைவியைப் பார்த்துக் குறும்பாக நகைத்தவனின் விழிகள் அவள் தேகத்திலேயே தங்கிவிட்டிருந்தன...

"அச்சோ போங்க மகி..!" அதற்கு மேல் தவிர்க்க முடியாமல் அவள் மீண்டும் அவன் மார்பில் முகம் புதைக்க,

"அட இதுக்கேவா டி? நம்ம கல்யாணத்துல நீ போட்டிருந்த அந்த ஆரஞ்சு ப்ளவுஸ் ஞாபகம் இருக்கா? அது எப்படி இருந்துச்சு?" என்றவாறே அவளின் நெற்றியில் முட்ட, எதையோ கண்டுகொண்ட அதிர்வில் அவள் விழிகள் விரிந்தன...

"அ..அப்போ அது மகேன் சார் வீட்ல கொண்டு வரலையா?"

"க்ம்ஹூம் என் பொண்டாட்டிக்கு அவங்க எதுக்கு டி கொண்டு வரணும்? சில்க் சேரி எடுத்தோம்ல அங்க தான் ப்ளவுஸ்ம் ரெடி பண்ணி தந்தாங்க... அளவு?" என்று இழுத்தவனின் விழிகள் சில நொடிகள் அவளின் மேடுபள்ளங்களில் தங்கிவிட்டு அவள் முகம் காண,

"நான் வைஃப் ஆகுறதுக்கு முன்னாடியே என்னையத் திருட்டுத்தனமாப் பார்த்துட்டு இப்போ லுக் விட்றதப்பாரு..! பொறுக்கி மாதிரி..!" என்றாள் முணுமுணுப்பாக...

"அடியே உன்கிட்ட நல்லவனா இருந்தா நான் என்ன டி பண்றது? எல்லா ஆம்பளையும் பொண்டாட்டிகிட்ட பொறுக்கியா தான் இருந்தாகணும்..!" அவளைத் திருப்பியவன் நடுமுதுகில் நிலா வடிவிலிருந்த மச்சத்தில் அழுத்தமாக இதழொற்றியதோடு, அவள் காதுக்குள் மேலும் அந்தரங்க ரகசியம் பேசியதில் சிவந்த வதனத்தை தன் கரங்களால் மூடிக்கொண்டு,

"ப்..ப்ளீஸ் போதும் மகி... எனக்குத் தூக்கம் வருது..!" என சிணுங்கியவள் அதற்கு மேல் அவன் பக்கமே திரும்பாமல் தலையணையில் முகம் புதைக்க, மனைவியின் முன்னெச்சரிக்கையில் வாய்விட்டு நகைத்தவன்,

"சரி நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு தூங்கு பேபி..."

"ம்ம்?"

"நீ ஏன் நான் வாங்கிட்டு வந்த டிரஸ்ஸ போடவே இல்ல?"

"அது..! அப்போ ஸ்டார்ட்டிங்ல கொஞ்சம் கோபம் இருந்துச்சு தான்..! ஆனா..." என்றவள் தான் மறந்த கதையை சொல்ல,

"வாட்? வாங்கிட்டு வந்தத மறந்துட்டியா?"

"க்ம்ஹூம் நீங்களா போய் வாங்கிட்டு வந்ததால மறந்துட்டேன் மகி..!"

"அடியே உன்ன வர சொன்னதுக்கு, 'எங்கத்தையோட கோவிலுக்குப் போகணும்' னு நீ தானே டி பில்டப் விட்ட?" என அவளை மாதிரியே பேசிக்காட்ட, படபடவென அவன் தோளில் அடித்துவிட்டு முறைத்தாள் அவள்...

அதில் சத்தமாக சிரித்தபடி அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்த சற்று நேரத்தில் அவள் உறங்கிவிட, உறங்காமல் விழித்திருந்தவனின் மனதில் இருவரும் இணைந்த நிறைவைத் தாண்டிய பாரம் அழுத்தியதில் தன்னையறியாமல் விழிநீர் துளிர்த்தது...

"ஐ ப்ராமிஸ் யூ..! இந்த தடவ அப்படி நடக்க விடமாட்டேன் வதும்மா..!" என்று முணுமுணுக்க, அவன் மனைவியும் தூக்கக்கலக்கத்தில் "ம்ம்‌‌..!" என்றதில் நெகிழ்ந்து அவளை தனக்குள் சிறை வைத்தபடி உறங்கியிருந்தான்...

இரவில் உலா வந்த வெண்ணிலவு தன்னொளி இழந்து விடைபெற்றுச் சென்றதும், ஆதவனின் பொற்கதிர்கள் பூமியைத் தொட்டு முத்தமிட காலை அழகாக விடிந்தது.‌‌.!

முகத்தில் வந்து விழுந்த வெளிச்சத்தில் துயில் கலைந்தெழுந்த மகேந்திரனின் விழிகளுக்கு விருந்தானாள், அவனின் மதிவதனி..!

கண்ணாடி முன்பாக நின்று தன் அலங்காரத்தை சரிப்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு உள்ளுணர்வு உந்தியதில் சட்டென்றுத் திரும்பிப் பார்க்க, அவளைப் பார்த்துக் கண்ணடித்தான் அவன்...

"அச்சோ..!" வெட்கத்தில் முகம் சிவக்க, அவன் எழுந்து வந்துப் பிடிப்பதற்குள் வெளியே ஓடியவளைத் தொடர்ந்தது மன்னவனின் நகையொலி...

சமையலறையில் வேலை செய்பவரிடம் அன்றைக்கு சமைக்க வேண்டிய உணவு வகைகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த கோகிலா தனக்குப் பின்னால் வந்து நின்ற மருமகளைக் கண்டு,

"வாடா‌ மதிம்மா..! இன்னைக்கு காஃபி குடிக்க வேணாம்... இந்தா சத்துமாவு கஞ்சி..!" எனக் கொடுக்க, வழக்கமாக காஃபி தான் வேண்டுமென அடம்பிடிப்பவள் இன்று சமத்தாக வாங்கிக்கொண்டு அமைதியாக அவரருகில் அமர்ந்தாள்...

மருமகளின் புதிதான அமைதியும், மகனைப் பற்றி விசாரிக்கும்போது அவள் கன்னங்களில் மின்னிய பளபளப்பும் புதிதாகத் தெரிய வாழ்ந்துப் பார்த்தவருக்குப் புரிந்துபோனது...

அவள் தான் அப்படியென்றால், காலை உணவிற்காகக் கீழிறங்கி வந்த மகனின் முகமும் ஆயிரம் கதை சொல்ல, அவர்களுக்குத் தனிமைக் கொடுக்காமல் உணவு மேஜையில் அமர்ந்து அவனுடன் பேசிக்கொண்டிருந்தக் கணவரை எண்ணி தலையில் அடித்துக்கொண்டார்...

மகனை அதிருப்தியாகப் பார்த்த ராமச்சந்திரன், "நல்லா யோசிச்சு சொல்லு தம்பி..! ஃப்யூச்சர்ல அந்த காம்ப்ளக்ஸ் இன்னும் பல கோடிக்குப் போகும்... அதுக்கு பதிலா வேற எதாவது எழுதிக் கொடுப்போமே?" என்க,

"இல்லப்பா... யுகேன்க்கு எழுதிக் கொடுத்தது கொடுத்ததாகவே இருக்கட்டும்..! அதுக்கு பதிலா எனக்கு அவன் தந்துருக்கது ரொம்ப ரொம்ப பெருசு..!" என்றவன் அருகில் அமர்ந்திருந்த மனைவியைப் பார்க்க, அவள் நெய்தோசையுடன் ஐக்கியமாகியிருந்தாள்...

"அப்போ சரிப்பா... கம்பெனி அட்மினிஸ்ட்ரேஷன்ல அவனுக்கு எந்த ரைட்ஸ்ம் இல்லனு எழுதி வாங்குனதும் அப்படியே இருக்கட்டும்..." என்றதில் தந்தையை அதிர்ச்சியாகப் பார்த்தவன்,

"ஏன்ப்பா? இவ்ளோ தூரம் கறாரா இருக்கணுமா?"

"தாயும் புள்ளையுமா இருந்தாலும் வாயும் வயிறும் வேறனு சொல்லுவாங்க கண்ணா..! உலகத்துல உன்னதமா சொல்லப்படுற தாய்ப்பாசத்துக்கே இப்படி சொல்லி வச்சுருக்கப்போ நாம எல்லாத்துலயும் தெளிவா இருக்கது நல்லது..!

அவன் கம்பெனி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னப்போ நீ என்கிட்ட கூட கேட்காம உன் பணத்த அள்ளிக் கொடுத்த... இப்போ உன்கிட்டயே இப்படிக் கணக்கா இருக்கான்... நீ என்னோட மூத்தப்புள்ள ராஜா..! உனக்காகவும் நான் பார்க்கணும்ல..." என்றவர் மனைவியின் முறைப்பைக் கண்டு வேகமாக உண்டுவிட்டு எழுந்தார்...

அவர்களுக்குள் இத்தனை நீளமானப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தப்பிறகும், மதிவதனி குனிந்த தலை நிமிராமல் உண்டுக் கொண்டிருக்க,

"ஏன் டி நம்ம குடும்ப விஷயத்தப் பத்திப் பேசுறப்போ இப்படி தோசைக்குள்ள மூழ்கிப் போயிருக்கியே? என்னன்னு உனக்குத் தெரிய வேணாமா?" என்றபடி தோசையைப் பிய்த்து வாயருகே கொண்டுச் சென்றவளின் கரம் பற்றித் தடுத்தான்...

"அப்படி என்னங்க ஆச்சு? நானும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயமா இருந்தா நீங்களே அதப்பத்தி சொல்லுவீங்கனு எனக்குத் தெரியும்..!" என்று சாதாரணமாக சொல்லியவள் உண்ணும் வேலையைத் தொடர, சுற்றிலும் பார்த்துவிட்டு மனைவியை அருகில் இழுத்தவன் அவளது பூவிதழில் லேசாக பதிந்து விலகினான்...

"ப்ச் எங்க வச்சு என்ன பண்றீங்க மகி?" மிரட்சியுடன் பார்த்தவள் அவனுக்கு மட்டும் கேட்கும்படி கடிந்துகொள்ள,

"யாரும் பார்க்கல வதும்மா..! செக் பண்ணிட்டு தான் எனர்ஜி ஏத்திக்கிட்டேன்..." என்றவனின் விழிகள் குறும்பில் பளபளத்தன..!

அதற்கு மேல் தாமதித்தால் கணவன் வேறெதுவும் சில்மிஷம் செய்வானோ என பயந்து தட்டிலிருந்த தோசையை வேகமாக உண்டவள் அலுவலகம் செல்வதற்குத் தயாராக நிறுத்தியிருந்த காரில் ஏறிக்கொண்டாள்...

அவள் பின்னோடு அவனும் வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர, இருவரும் அலுவலகம் விரைந்தனர்..!

தன்னருகே ஆரஞ்சு வண்ண செட்டிநாட்டு காட்டன் புடவையில் பாந்தமாக அமர்ந்திருந்த மனைவியை கண்களில் நிரப்பிக்கொண்டே,

"ப்ச் எவ்ளோ டிராஃபிக் ஜாம் பாரு? நாம பேசாம யூ டர்ன் போட்டு வீட்டுக்குப் போயிடுவோமா டி?" என்றான் கள்ளப்பார்வையுடன்...

"எனக்கு ஆஃபீஸ்ல நிறைய வேலை இருக்கேங்க, வீட்டுக்குப் போய் என்ன பண்றது?" கணவனைக் கவனியாமல் பெண்ணவள் வெகுளியாய் கேட்டுவைக்க,

"நமக்கு அதவிட ரொம்ப முக்கியமான வேலையா, வேஸ்ட் பண்ண ஒரு மாசத்த டேலி பண்ற வேலை இருக்கே வதும்மா..!" என்றதில் அவனின் கள்ளத்தனம் புரிய,

"அப்படியா? ச்சு உங்களப் பார்த்தா எனக்கும் பாவமா தான் இருக்கு... ஆனா எங்க எம்.டி சாருக்கு நான் லீவு எடுத்தாலே பிடிக்காதேங்க..! சோ சேட்..!" அவன் முகம்போன போக்கை ஓரக்கண்ணால் ரசித்தபடியே காலை வாரினாள் அவள்...

காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு அவளின் தோள்வளைவில் சாய்ந்தவன், "அந்த எம்.டி இப்போ உன்னோட புருஷன் டி..! அவனுக்கு இனிமே நீ என்ன பண்ணாலும் பிடிக்கும்..!" எனக் கொஞ்சினான்...

முன்னர் கறார் கந்தசாமியாக இருந்தவனின் தற்போதைய கணவன் அவதாரத்தில் பனியில் நனைந்த சிவப்பு ரோஜாவாக மின்னிய கன்னங்களை தேய்த்துக்கொண்டே,

"இன்னைக்கு லெவன் ஓ கிளாக் உங்களுக்கு போர்டு மீட்டிங் இருக்கு மகி..! ஒழுங்கா கார எடுங்க, நாம ஆஃபீஸ் கிளம்புவோம்..." சமத்தாக மனைவியை ஆமோதித்து சிரித்தவன் நேராக அலுவலகம் வந்திருந்தான்...

அன்றைய நாள் வழக்கமாக நகர, பதினொரு மணிக்கு கணவன் அவளை கலந்தாய்வு கூடத்திற்கு அழைப்பதாகத் தகவல் வந்ததில், "அங்க நான் எதுக்கு" என்ற யோசனையுடன் உள்ளே நுழைந்தவளை வரவேற்கும் விதமாக அவள் மீது மஞ்சள் வண்ண மலர்கள் மழையாய் சொறிய, அங்கிருந்தவர்களைப் புரியாமல் பார்த்துவிட்டு தன்னவனைக் கேள்வியாக ஏறிட்டாள்...

"வெல்கம் மிஸஸ்.மகேந்திரன் அபர்ஜித்..! நம்ம கம்பெனில இனிமே நீங்களும் ஒரு எம்.டி... ஐ மீன் யூ ஆர் ஆல்சோ ஒன் ஆஃப் தி பார்ட்னர் மேடம்..!" என்றவன் மனைவியின் கரங்களில் பூங்கொத்தைக் கொடுக்க, மற்றவர்கள் புன்னகையுடன் கைத்தட்டினர்...

அதில் ஆதியந்தம் புரியாமல் பெண்ணவள் விழிக்க, "எல்லாம் உன் புருஷனோட ஏற்பாடு தான்டா மதி..! ஆல் தி பெஸ்ட்..!" என தன் மருமகளை வாழ்த்தினார் ராமச்சந்திரன்...

அவரைத் தொடர்ந்து தர்மராஜ்ம், நரேந்திரனும் தங்கள் பங்குக்கு அவளை வாழ்த்த, மகேனும் அவளது கரம் பற்றி தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தான்...

அவனை அவள் தயக்கமாக ஏறிட, அவளிடம் சகஜமாகப் பேசியவன் தன் நண்பனைப் பற்றி சில தகவல்களைப் பகிர்ந்துவிட்டுப் புதிதாக நிர்வாகத்தில் நுழையும் நரேனுக்கு வழிக்காட்டும் வேலையில் ஆழ்ந்துவிட்டான்...

தன் உதவியாளர் கவினுடன் பேசிக்கொண்டிருந்த கணவனைத் தவிப்பாகப் பார்த்தவளுக்கு, இத்தனை பேருக்கு முன்னிலையில் தனக்கு இந்த பதவி வேண்டாமென மறுத்து அவனை அவமானப்படுத்த இயலாத நிலை..!

வதனியின் விழிகளில் மறுப்பைக் கண்ட அவளின் மகி, நிர்வாகம் சம்பந்தமான முக்கிய ஆவணங்களில் அவளும், மற்ற நிர்வாக இயக்குனர்களும் முறையாகக் கையெழுத்திட்டு அவன் நினைத்தக் காரியம் வெற்றிக்கரமாக முடியும்வரையில் அவளை நெருங்க அவசரம் காட்டவில்லை...

மன்னவனின் அறைக்கு அருகில் கோப்புகள் வைப்பதற்குப் பயன்படுத்தி வந்த சாதாரண அறையை, அவளுக்கென்று பிரத்யேகமாக நிர்வாக இயக்குனரின் அறையாக மாற்றியிருக்க, அங்கு அவளை அமர்த்தும் பொறுப்பை அவனிடமே ஒப்படைத்துவிட்டு ஒவ்வொருவராக வெளியேற, கடைசியாக எழுந்து தன்னைப் பார்த்துக் குறும்பாக கண்சிமிட்டிவிட்டுச் சென்ற மகேனை முறைத்தான் இவன்...

ஒரு பத்து தினங்களுக்கு முன்பாக நண்பனின் காலில் விழாதக்குறையாகக் கெஞ்சி சமாதானம் செய்திருந்தான் அவன்...

அதற்கு மேல் நல்லதாக நடந்து முடிந்த பழசை நினைத்து தங்களை சேர்த்து வைப்பதற்கென்றே பிறவியெடுத்து வந்தவனை தண்டிக்க மனமில்லை மன்னவனுக்கு..!

ஆம்..! மகேன் அதற்காகவே பிறவியெடுத்தவன்..!

அன்று அந்த பெரியவர் அவனிடம் காதலர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதே அவன் பிறவியின் நோக்கம் என்பதை உரைத்திருக்க, அதை மனதில் வைத்தே அவ்வப்போது நண்பனையும் அவனின் உயிரானவளையும் தூண்டிவிட்டான் அவன்...

முன்ஜென்மத்தில் மதிகெட்டு சவால் விடுக்கிறேன் என்ற பெயரில் அவர்களின் காதல் அனர்த்தத்தில் முடியக் காரணமாக இருந்தவன் இப்பிறவியில் எப்படியோ அவர்களை இணைத்துவிட்டான்...

இனி வில்லனை சமாளிப்பது மட்டுமே மீதமிருக்க, அக்கயவன் இப்போதுவரை அமைதியாக இருப்பதால் நண்பர்களால் எதுவும் செய்ய முடியவில்லை...

ஏதோ ஞாபகத்தில் அமைதியாக நின்ற மனைவியை அழைத்து வந்தவன் அவளுக்கென்று வாங்கியிருந்த புது இருக்கையில் அமர்த்த, சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு எழுந்தவள் அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டு,

"ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க? எனக்கு உங்களோட பணம் வேணாம்..! காதல் மட்டும் போதும் மகி..!" தன் மகாராணியின் காதலில் கர்வமாக மீசையை முறுக்கியவன்,

"அது எனக்கும் தெரியும் வதும்மா..! ஆனா நான் ஆரம்பத்துல உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல... அது இனிமே நம்ம லைஃப்ல எப்பவுமே வரக்கூடாதுனு தான் இப்படி ஒரு முடிவு..! உனக்குப் புரியிதா டி?" எனக் கேட்டதில்,

"ம்ம்..!" எனும்போதே அவளது விழிகள் கலங்க, அங்கு மென்மையாக பதிந்தான் அவன்...

சில கணங்கள் கணவனின் அணைப்பில் அமைதியாக நின்றவள், "எ..எனக்கு இது எதுவுமே வேணாம் மகி..!" என்க,

"ஏன்டா இப்படி?" என்றவனிடம் அன்று கேன்டீனில் நடந்ததைப் பகிர்ந்துவிட்டு, "இனிமே இன்னும் அ..அசிங்கமா பேசுவாங்க... பழைய மாதிரி டிசைனராவே இருக்கனே ப்ளீஸ்..!"

"மத்தவங்களுக்காக நாம வாழல பேபி..! நான் எடுத்த இந்த முடிவுல எந்த மாற்றமும் இல்ல... இனிமே மகேந்திரனோட எல்லாமே அவனோட வதனிக்கும் சொந்தம்..!" என்றதில் சலிப்பாக,

"நான் தான் வேணாம்னு சொல்றேன்ல... ப்ளீஸ்ங்க..!"

"நீ என்னையப் புரிஞ்சுக்க வதும்மா‌‌..! இனிமே நீ சாதாரணமா விலகி நின்னா கூட என்னால தாங்கிக்க முடியாது..!"

"நான் இனிமே உங்கள விட்டு விலக மாட்டேன் மகி..! ஆ..ஆனா இது?"

"ப்ச் என்னோட வதும்மாவும் அவளோட மகியும் ஒன்னு தான்னு எல்லாருக்கும் சொல்லாமலே புரிய வைக்க தான் இந்த ஏற்பாடு..!" என்றவாறே அவள் கன்னங்களை வருட,

"இது இல்லாமலே உங்க காதல் எனக்குப் புரியுமே மகி..! ஒருவேள நான் இத ஏத்துக்கிட்டா உங்க ப..பணத்துக்காக வந்தவனு மத்தவங்க சொன்னது உண்மை ஆகிடும்ல..!" என சொல்லிவிட்டு வெளியேற முயல, அவளின் கரம் பற்றி தன்னருகே இழுத்தவன்,

"உன்னோட மகிய விட யாரோ வேலையில்லாதவங்கப் பேசுறத மதிக்கணுமா வது? இதுக்கு மேல அப்படி யாரும் தப்பாப் பேசுனா, என் புருஷனே என்னோட ப்ராப்பர்டி தான், அப்போ அவரோட ப்ராப்பர்டிய மட்டும் தெருவுல போறவனுக்கா தர முடியும்னு கேளு... எனக்காக அப்படி கேட்பியா டி தங்கமே?" என்றபடியே அவளது கரங்களில் அழுத்தமாக முத்தமிட்டான்...

அவன் சொன்ன கடைசி வார்த்தையில் பெண்ணவளின் பூந்தேகத்தில் இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு ஓடியதில், "தங்கமே" என்ற மகேந்திரன் இளந்தீரனின் வார்த்தைகள் அவளின் செவிகளில் மோத, சட்டென்று மலைக்குகையில் மன்னவனை அணைத்தபடி அவள் அமர்ந்திருக்கும் காட்சி சிந்தையில் எழ நிலையின்றி தள்ளாடினாள் அவள்...

கணவனை அணைத்து தன்னை நிலைப்படுத்தியவள் அவனை நிமிர்ந்துப் பார்க்க, "என்ன டி கேட்ப தானே?" என்றவனின் விழிகள் ஏக்கமுடன் அவளைப் பார்த்தன...

அவன் குரலில் இருந்த ஏதோவொன்று மதிவதனியைத் தாக்கியதில், "நிச்சயமா கேட்பேன் மகி..!" என்றதோடு அவன் மார்பில் சாய்ந்தாள் அவள்...

அவன் மகேனுடன் சேர்ந்து நடத்திய நாடகத்தைப் பற்றித் தெரிய வரும்போதும், மனைவி இதே போல் தன் விளக்கத்தை ஏற்க வேண்டுமென ஆசைக்கொண்டான் மகேந்திரன்..!


தொடரும்......
 
Top Bottom