மகேந்திரனின் மதிவதனியிவள் - 23
மகேந்திரனின் மார்பில் சாய்ந்து நின்ற மதிவதனியின் செவியில் அவனது இதயத்துடிப்பு ஒரே லயமாய் கேட்க, அவள் சிந்தையில் மீண்டும் ஏதோதோ காட்சிகள் தோன்றியதில் மிரண்டு சட்டென்று அவனிடமிருந்து விலகியவள், அன்று மதியம் செல்ல வேண்டிய தொழில்முறை விருந்தைப் பற்றி ஞாபகப்படுத்த,
"ஹான் இதுக்கு தான் வைஃப் வேணும்னு சொல்றது..! சரி நான் போயிட்டு வந்துர்றேன் வதும்மா..!" என்றபடி அவள் கன்னத்தில் பதிந்தவன், அவளுக்கு நியமித்திருக்கும் உதவியாளரைப் பற்றி சொல்லியதோடு,
"இந்தாடா உன்னோட லேப்டாப் அண்ட் ஹேண்ட்பேக்..!" எந்த ஈகோவுமின்றி அவள் உடைமைகளை எடுத்து தந்துவிட்டுச் சென்றான்...
அதையெண்ணி மனம் நெகிழ, சற்று முன்னர் மகேன் சொன்னதை நினைத்துப் பார்த்தாள்...
"உனக்கு தெரியுமானு தெரியல மதிவதனி..! உங்க கல்யாணம் முடிஞ்சதுமே உன்னையும் நம்ம ஷீன் அண்ட் ஸ்பார்க்கிள்க்கு எம்.டி ஆக்கணும்னு தீரன் சொல்லிட்டான்... ஆனா இங்க ரூல்ஸ்படி மேனேஜ்மென்ட்ல ரெண்டு எம்.டி தான் இருக்கணும்..!
அப்படியே புதுசா எம்.டி அப்பாய்ண்ட் பண்ணாலும் ஷேர்ஸ் டிரான்ஸ்ஃபெர் பண்ணனும்... அவனோடது தாத்தாகிட்ட இருந்து வந்ததால, அத சேஞ்ச் பண்றதுல நிறைய காம்ப்ளிகேஷன்ஸ்..!
யுகேன்ட்ட கேட்டதுக்கு அவன் தர்றதுக்கு ஒத்துக்கல... சோ வேற வழியில்லாம அவனோட எம்.டி போஸ்ட்டயே உனக்காக விட்டுக் கொடுக்க ரெடியாகிட்டான்..!
அண்ட் அட்லாஸ்ட் யுகேன்க்கு செட்டில் பண்ணது உனக்கே தெரியும்... எல்லாம் நல்லபடியா முடியுற வரைக்கும் தீரனுக்கு அவ்ளோ அலைச்சல்...
உங்க மேரேஜ் எப்படி நடந்துருந்தாலும் சரி தான்... என் தோஸ்த் உன் மேல உயிரையே வச்சுருக்கான்ம்மா..! அவனோட நீ சந்தோஷமா வாழணும் அதான் என்னோட ஆசையும்..!" என அப்போது நீளமாகப் பேசியிருந்தான்...
கணவன் தன் உயிர்நேசத்தை வார்த்தைகளில் உரைத்ததோடு செயலிலும் காட்டியிருக்க, தன் காதலைக் காட்ட வழியின்றித் தவிக்கும் நிலை அவளுக்கு..!
இதில் நேற்றிரவு கனவில் இருவரும் ராஜா ராணியாக அமர்ந்திருக்கும் காட்சி ஒன்று வந்திருக்க, இன்று விழித்திருக்கும்போதே இருவரும் மலைக்குகையில் அமர்ந்திருப்பதைக் கண்டதில் தனக்கு மனப்பிறழ்வு நோய் இருக்குமோ என்ற சந்தேகத்தை விதைத்திருக்க அதை யாரிடமும் பகிர்ந்துகொள்ள பயந்தாள்..!
ஒரு பக்கமாக அவன் காதலைப் பொழிய, அதற்கு அவள் தகுதியானவள் தானா என நினைக்கும்போதே தலை கிண்ணென்று கனக்க, கணவன் தனக்காக அத்தனை பாடுபட்டு வழங்கிய பதவியைத் தொடங்கிய முதல் நாளே சொதப்ப மனமின்றி அவன் மதிய உணவை உண்டுவிட்டு வரும்வரை தாக்குப்பிடித்தவள், தனக்கு தலைவலிப்பதாகச் சொல்லி வீட்டிற்குச் சென்றுவிட்டாள்...
அவளைப் பொறுத்தவரை முன்ஜென்ம நினைவுகள் எல்லாம் படங்களிலும், கதைகளிலும் மட்டுமே வருவதாக ஒரு எண்ணம் மனதில் ஆழமாகப் பதிந்திருக்க, தங்களுக்குள் அப்படியெதுவும் இருக்குமோ என்ற நினைப்பே இல்லை...
இரவு அவன் அவளை படுத்தியதோடு, இப்போது திடீரென பதவிக் கொடுத்த அதிர்ச்சியும் சேர்ந்ததில் இவ்வாறு நடப்பதாக நினைத்தவன், தன் வேலைகளை முடித்து வீடு திரும்ப ஏழு மணியானது...
அதன் பின்னர் உணவு உண்டு, தோட்டத்தில் நடந்து என இருவருக்கும் வழக்கமாக கடக்க, இரவின் உறவும் இனிமையாக நடந்து முடிந்தது...
சுக அயர்ச்சியில் கணவனின் தோள் சாய்ந்து உறங்கிய மதிவதனிக்கு அதிகாலையில் சட்டென்று அவன் வேங்கையோடு மோதிக்கொள்ளும் காட்சித் தோன்றியதில், "கவனம் தீரனே..!" என சத்தமாகக் கதறியபடி எழுந்தமர, நெஞ்சம் படபடத்தது...
மனைவியின் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவனும், "என்னாச்சு டி?" என்றுப் பதற,
"சு..சும்மா ஏதோ கனவு மகி..!" நீரை அருந்திவிட்டு அவள் மீண்டும் உறங்கிவிட, அவளுக்கும் தங்களைப் பற்றி கோர்வையின்றி கனவுகள் வருவதை சரியாக ஊகித்தான் அவன்...
'உனக்கு நம்ம ஞாபகம் வரணும்னு ஆசையாவும் இருக்கு..! அதே நேரம் அது வராமலேயே நாம இப்படியே வாழ்ந்துடலாம்னு இருக்கு வதும்மா..!' மனதில் புலம்பிக்கொண்டே உறங்கிய மனைவியைப் பார்த்தவனுக்கு திடீரென நான்கு வருடங்களுக்கு முன்பு ராமச்சந்திரன் பகிர்ந்த ரகசியம் நினைவில் எழுந்தது...
ஒரு ஞாயிற்றுக்கிழமை அவன் வீட்டில் ஓய்வாக இருந்தபோது, பூஜையறையில் சுவரோடு சுவராக இருந்த ஒரு அறைக்குள் அவனை அழைத்துச் சென்றவர், தேக்கு மரத்தாலான ஒரு அழகிய பெட்டியைக் காட்டி குடும்பத்தில் முதல் மகனாகப் பிறப்பவர்களுக்கு மட்டுமே அதைக் காக்கும் கடமையிருப்பதாகச் சொல்ல,
"இத நான் ஓபன் பண்ணிப் பார்க்கலாமாப்பா?" என்றபடி அதன் மூடியில் கைவைத்தான்...
உடனே பதறியவராக, "இதத் திறக்குற உரிமை நமக்கு இல்ல தம்பி..! நான் இப்போ பாதுகாக்குற மாதிரியே நீயும் பாதுகாத்து உனக்குப் பொறக்குற முதல் பையன்ட்ட ஒப்படைக்கணும்..!
அதோட நம்ம கடமை முடிஞ்சது..! ஒருவேள மீறித் திறந்தா உயிர் சேதாரம் நடக்கும்னு எங்கப்பா சொல்லிருக்காங்க..!" என எச்சரிக்கவே அப்போதிருந்த மனநிலையில் தோள்களை குலுக்கியபடி வெளியேறியதும் ஞாபகம் வர,
"அப்படி அதுக்குள்ள என்ன இருக்கும்?" என முணுமுணுத்தவனுக்கு அதைத் திறந்துப் பார்க்கும் ஆவல் அதிகரித்ததில் ஒரு நாள் முயன்றுப் பார்க்க வேண்டுமென நினைத்துக்கொண்டான்...
"தூங்கலயா மகி?" என்றபடி உறக்கக் கலக்கத்தில் அவனோடு மேலும் ஒட்டிக்கொண்ட மனைவியை அணைத்து, 'போன ஜென்மத்துல கைவிட்ட மாதிரி இந்த ஜென்மத்துலயும் எங்கள கைவிட்றாத ஈசனே..!' தன்னை மீறி மனதில் அந்த பரமேஸ்வரனை வேண்டியதில் அவன் தேகம் பக்தியில் சிலிர்த்தடங்கியது...
அதில் வேகமாக மனைவியை எதிலிருந்தோ காப்பவனைப் போல் தனக்குள் இறுக்கிக் கொண்டவன், சிறிது நேரத்தில் தன்னை மறந்து உறங்கியிருந்தான் அவன்...
அதன் பின்னர் வந்த இரண்டு மாதங்களும் பகலில் வேலை செய்வதும், இரவில் காதல் செய்வதுமாக மின்னல் வேகத்தில் கடந்திருக்க மகேந்திரனும் மதிவதனியும் ஒருவருக்கொருவர் இன்றியமையாதவர்களாக மாறியிருந்தனர்...
காந்தையின் மீது அன்பைப் பொழியவென்றே பிறவியெடுத்து வந்த ஆணவனின் காதலில் அவள் உருகிக் கரைய, விட்டகுறை தொட்டகுறையாக வாழாமல் விட்ட வாழ்வை இருவரும் ரசித்து வாழ்ந்தனர்...
அதற்காக அவர்களுக்குள் சிறுசிறு சண்டைகளும் வராமல் இல்லை..!
எத்தகைய காதலாக இருப்பினும் கணவன் மனைவிக்குள் சண்டையே வராமல் வாழ முடியுமா என்ன?
அகந்தையைத் துறந்துவிட்ட மன்னவன் தானாகவே இறங்கி வந்து சமாதானம் செய்கையில், தன் கோபத்தை இழுத்துப்பிடிக்க முடியாமல் பெண்ணவள் சரணடைய, அவ்வப்போது வந்த சண்டைகளும் வந்த வேகத்தில் மறைந்தும் போயின...
இந்த இடைப்பட்ட காலத்தில் தன் மனக்குழப்பங்களை மதிவதனி வெளிப்படுத்தாமல் இருந்ததால், அவளுக்கு எதுவும் ஞாபகம் வந்துள்ளதா என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை...
பூஜையறையில் பத்திரமாக வீற்றிருக்கும் அம்மரப்பெட்டியில் தங்கள் காதலின் ஞாபகம் எதுவோ பல ஜென்மங்களாக தங்களுக்காகக் காத்திருப்பதாகத் தோன்றவே அதைத் திறக்கும் முயற்சியில் அவனிருக்க, முன்னால் அவ்வப்போது வந்த நினைவுகள் இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றியதில் வெகுவாக பயந்துபோன பெண்ணவள் நெருங்கிய தோழியின் அக்காவான மனநல மருத்துவரிடம் செல்லும் முடிவை எடுத்திருந்தாள்...
இந்நிலையில் ஒரு நாள் இரவு மதிவதனி தன்னைவிட்டு நீங்கி காட்டுக்குள் மறைவதைப் போல் கனவு கண்டதில் திடுக்கிட்டு விழித்தவ மகேந்திரனுக்கு பயத்தில் வியர்த்துக் கொட்டியதில், தன்னருகே நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான்...
அவளின் அமைதி வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு உணர்வைத் தந்ததில் அவள் உறங்குவதைப் பொருட்படுத்தாமல் கழுத்தடியில் புதைந்து குறுகுறுப்பூட்ட, லேசாக விழி மலர்த்தியவள்,
"ப்ச் தூங்க விடுங்க மகி..!" மெல்லிய குரலில் கடிந்தபடி அவன் அடர்க்கேசத்தை வருடினாள்...
சட்டென்று மென்னிதழில் அழுத்தமாகப் பதிந்து விலகியவன், "ஐ நீட் யூ வதும்மா..!" என்றவாறே அரிவையின் மென்மைகளில் பதிந்ததில் திடுக்கிட்டாலும் அதற்கு மேல் கணவனை விலக்க மனமின்றி அவனின் கைப்பாவையானாள் அவள்...
வைகாசிமாத சூரிய பகவான் அதிகாலை ஐந்தே முக்கால் மணிக்கே கிழக்கு வானில் உதயமாகி தனது செங்கதிர்களால் மிதமாக ஒளி வீசிக் கொண்டிருந்தார்...
அன்று வாரவிடுமுறை என்பதால் மனைவி உறங்கட்டும் என நினைத்தவன் வேகமாக குளித்து உடை மாற்றிக்கொண்டு, "எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு வதும்மா..! பிரேக்ஃபாஸ்ட் சாப்ட வந்துடுவேன்..." எனக் குறுந்தகவல் ஒன்றை அவளுக்கு அனுப்பிவிட்டு நேராக கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்தான்...
அக்காலை வேளையில் அதிகக் கூட்டமில்லாத கோவிலின் தெய்வீக அமைதியை ஆழ்ந்து அனுபவித்தபடியே தனது வலதுக்காலை பதித்து உள்ளே நுழையும்போதே, "வா மகேந்திரா..!" என்று யாரோ அழைக்கும் குரல் காதில் ஒலிக்க பக்திப்பரவசத்தில் மன்னவனின் தேகம் நடுங்கியது...
தன் கூர்விழிகளால் சுற்றிலும் தேடியும் யாரையும் காணாததில் தலையை உலுக்கியபடி விடுவிடுவென உள்ளே நுழைந்து, ஓர் லிங்க வடிவில் நூற்றியெட்டு லிங்கங்களாகக் காட்சி தந்த மகாதேவனை உளமார வணங்கியவன், மற்ற தெய்வங்களையும் வணங்கிவிட்டு அமைதியாக ஒரு தூணில் சாய்ந்தமர்ந்தான்...
சில நிமிடங்கள் கடந்து அவன் கண் விழிக்கையில் அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்தான் மகேன்...
"நீ ஓகேவா மச்சான்? மதிவதனிக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சா?"" எனப் புன்னகையுடன் கேட்க,
"ம்ம் எனக்கு சரியா தெரியல மகேன்..! அவளுக்கு ஏதோ ஞாபகம் வர்ற மாதிரி தோனுது... ஆ..ஆனா என்கிட்ட சொல்லமாட்றா..!" என்க,
"நாம நல்லதாவே நினைப்போம் தீரா..!
"அது சரி, நீ சொல்லு..! உன் லைஃப் எப்படி போகுது? தங்கச்சிக்கு எப்படி இருக்கா?"
"க்ஹூம்..! அவளுக்கென்ன? நல்லா ஜாலியா தான் இருக்கா மச்சி..! எங்கப்பா ஏத்துக்கிட்டாரு, இப்போ ஜூனியர் வேற வரப்போகுது..." என சாதரணமாக அறிவிக்க,
"ஹேய் சொல்லவே இல்ல? எனிவே கங்கிராட்ஸ்டா..!" மகேனின் கரங்களைப் பற்றிக் குலுக்கினான்...
"ப்ச் நீ வேற ஏன்டா? நேத்து நைட் தான் கன்ஃபார்ம் பண்ணோம்..! எங்கப்பா என்னைய மன்னிக்காம இருக்கப்போ இந்த பேபி நமக்குத் தேவையானு வாய் தவறிக் கேட்டுட்டேன் மச்சி... வச்சு செஞ்சுட்டா..!" என்றதில் பற்றியிருந்த கரத்தை நெறித்தபடி,
"மனுஷசனாடா நீ? அப்பாவான சந்தோஷத்த செலிப்ரேட் பண்ணாம என்ன பேச்சு பேசியிருக்க?" என்று கடிய,
"ஆ..! கைய விடு தெய்வமே..! நான் செஞ்ச மாஸ்டர் ப்ளான் பத்தி மீசைக்குத் தெரிஞ்சதுல என்னைய வச்சு செய்யுறாருனு டென்ஷன்ல மனசுல நினைக்காததப் பேசிட்டேன்டா..." என்றவன் சத்யபாமா தர்மராஜ்ஜிடம் உண்மையை உளறியதைப் பகிர வாய்விட்டு சிரித்தான் இவன்...
"டேய் என் நிலைமைப் புரியாம சிரிக்காதடா தீரா..! கட்டுனா மாமாவ தான் கட்டுவேன்னு அவ அடம்பிடிச்சதா சொன்னதுல சென்டிமென்ட்டா ஃபீலாகி புள்ளப்பூச்சி மாதிரி இருக்காளேனு அவள கல்யாணம் பண்ணிக்கிட்டேன் மச்சி... இப்போ தேளா மாறி அட்டாக பண்றா..! நீ தான் என் பொண்டாட்டியக் கரெக்ட் பண்றதுக்கு ஹெல்ப் பண்ணனும்..." என்றதில்,
"நானா? எதுக்கு?" என்றிவன் நழுவ முயல,
"ஹலோ உன் காதல சேர்த்து வைக்க நாம ப்ளான் பண்ணத மறந்துட்டியா தம்பி?" என்றவன் தாங்கள் மதிவதனிக்கு கரண்ட் ஷாக் கொடுத்தக் கதையில் இருந்து மீண்டும் ஞாபகப்படுத்த, இவர்களைவிட்டு சற்று தள்ளி அமர்ந்திருந்த அதியனின் காதில் அட்சரம் பிசகாமல் தெளிவாக விழுந்திருந்தது...
"அடப்பாவிகளா..! ரெண்டு பேரும் ப்ளான் பண்ணி என் பாப்பாவ ஏமாத்திட்டீங்களா?" என்ற முணுமுணுப்புடன் அரைகுறையாகக் கேட்டுவிட்டு அவசரமாக எழுந்துச் சென்றிருந்தான் அவன்...
அதைப்பற்றி எதுவுமறியாத நண்பர்கள் இருவரும் தங்களுக்குள் வாதித்து சமாதானமடைய, "சரி ஹெல்ப் பண்ணி தொலையிறேன்..!" என்ற தீரன் நண்பனை முறைத்தான்...
"ஹாஹா..! அத அப்புறம் பார்ப்போம் மச்சான்... இப்போ நம்ம வில்லன் சைலண்ட்டா இருக்கானே... எனி ஐடியா?" என விளையாட்டுப்பேச்சைக் கைவிட்டு மகேன் நண்பனை ஆழ்ந்துப்பார்க்க,
"நோ ஐடியா..! ஆனா இனிமேலும் வதனிக்கு அதுவா ஞாபகம் வரட்டும்னு வெயிட் பண்றது வேஸ்ட்னு தோனுது மகேன்... நானே எல்லாத்தையும் சொல்லப் போறேன்...
தென் அந்த சாமியாரத் தேடிப்போனா வில்லனப் பத்தி எதுவும் ஐடியா கிடைக்கலாம்..! அதுக்கும் டிரை பண்றேன்டா..." என்றதும், நண்பர்கள் இருவரும் கோவிலில் இருந்துக் கிளம்பினர்...
காலையிலேயே கிளம்பிச் சென்ற மகன் நெற்றியில் திருநீறுடன் உள்ளே நுழைவதைக் கண்ட ராமச்சந்திரனிற்கும், கோகிலாவிற்கும் அவனின் மாற்றம் பெரும் வியப்பளித்தது...
அதைப்பற்றிக் கேட்டு மகனை மீண்டும் முருங்கைமரம் ஏற்ற விரும்பாதவர்கள் அமைதியாக இருந்துகொள்ள, கணவனின் நெற்றியை சரியாக கவனியாமல் காலை உணவைப் பரிமாறிய மதிவதனி அவனருகில் தானும் அமர்ந்தாள்...
ஆகாய வண்ணப்புடவையில் கண்களை நிறைத்த மனைவியை ஒரு நொடி ரசனையாகப் பார்த்தவன், பெரியவர்களின் கவனம் இங்கில்லாததைக் கவனித்துவிட்டு முதல் வாய் உணவை அவளுக்கு ஊட்டிவிட,
மனம் நெகிழ மறுக்காமல் வாங்கியவள், "ஏங்க அத்த மாமா" எனத் தொடங்கியதில்,
"ப்ச் ஊட்டிவிட்டதுக்கு கிஸ் அடிச்ச மாதிரி பில்டப் பண்ணாத டி..!" குறும்பாகக் கண்சிமிட்டினான்...
அதற்கு மேல் வாயைத் திறப்பாளா?
உணவுவேளை அமைதியாகக் கடந்ததும் இருவரும் அறைக்குத் திரும்ப, அப்போது தான் ஞாபகம் வந்தவனாக கோயிலில் கொடுத்த விபூதி குங்குமத்தை வதனியின் நெற்றியிலும் உச்சி வகிட்டிலும் வைத்துவிட, கணவனை அதிசயமாகப் பார்த்தாள் அவள்...
"ஓய் எதுக்கு டி இவ்ளோ ஷாக்?"
"உ..உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னு சொன்னீங்களே... அப்..அப்புறம் எப்படி?"
"ஆமா முன்னாடி அப்படி தான் இருந்தேன்... ஆனா இப்போ திடீர்னு அதுவா தோனுச்சு வதும்மா..!" என்றபடி தான் சென்றுவந்த கோவிலைப் பற்றி சொன்னதோடு மகேன் தந்தையாகப் போகும் நற்செய்தியையும் பகிர்ந்தவன்,
"அதான் அப்படியே நமக்கும் நல்லபடியா ஒரு ஜூனியர் வேணும்னு வேண்டிட்டு வந்தேன்..!" என்றது தான் தாமதம் சட்டென்று அவனை அணைத்துக் கொண்டவளின் விழிகள் சட்டென்று கலங்கின...
"ஓய் என்னாச்சு பேபி?"
ஒன்றுமில்லை என தலையாட்டிவிட்டு அப்படியே நிற்க,
"நாம இப்படியே நின்னா பேபி வராது வதும்மா..! அதுக்கு நிறைய ப்ராசஸ் இருக்கு..!" என்றவாறே அவன் விரல்கள் அவளிடையை வருடியதில், துக்கம் மறைந்து வெட்கம் முகிழ்க்க மேலும் அவன் மார்போடு ஒன்றியவள் சட்டென்று ஞாபகம் வந்தவளாக,
"மார்னிங்கே ஸ்டார்ட் பண்ணாதீங்க மகி..! எனக்கு சாமி ரூம் சுத்தம் பண்ற வேலை இருக்கு..." என்று சிணுங்கினாள்...
"அப்படியா? சரி வா நானும் வந்து ஹெல்ப் பண்றேன்..." என அடம்பிடித்தவன் அவளுடன் இணைந்துகொள்ள, இருவரும் பூஜையறையில் நின்று சாமிப்படங்களைத் துடைத்தனர்...
மகனின் புதிய அவதாரத்தைக் கண்டு அதிசயித்த பெரியவர்கள் தங்கள் உறவினரின் திருமணத்திற்குக் கிளம்பிச் செல்ல, அவர்களைக் கவனித்துவிட்டு மனைவியைப் பார்த்துக் கண்சிமிட்டினான் மகேந்திரன்...
அவனைச் செல்லமாக முறைத்தவள், "எங்க நின்னுட்டு என்ன வேலப் பார்க்குறீங்க? நீங்க ஹெல்ப் பண்ணது போதும்... வெளிய போங்க..." அவன் முதுகில் கரம் வைத்து வெளியே அனுப்பியிருந்தாள்...
முகம் நிறைந்த புன்னகையுடன் கூடத்து இருக்கையில் அமர்ந்து தொழில் சம்பந்தமான நாளிதழிலைப் புரட்டியவன், சில நிமிடங்களில் மனைவி பூஜையறையைவிட்டு வெளியேறியதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு எழுந்தான்...
இரண்டு மாதங்களாக அவன் காத்திருந்தத் தருணம் வாய்த்த மகிழ்ச்சியில் அங்கேயே நின்று தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு உள்ளே நுழைந்தவன், சுவரோடு ஒட்டியிருந்த அவ்வறையைத் திறந்து அங்கு கமழ்ந்த சாம்பிராணி மணத்தை ஆழ்ந்து சுவாசித்தபடி கருந்தேக்கில் செதுக்கியிருந்த அப்பெட்டியை ஒரு எதிர்பார்ப்புடன் திறந்திருந்தான்...
விரல்கள் நடுங்க அதனுள்ளே பாதுகாப்பாக வைத்திருந்த பொக்கிஷங்களை பிரமிப்புடன் தொட்டுப் பார்த்தவன் சில நொடிகள் திகைப்பூண்டை மிதித்தாற் போல நின்றுவிட்டு, வேகமாக அவற்றைக் கொண்டு போய் தன் அலமாரியில் பத்திரப்படுத்தினான்...
தங்களின் ஞாபகங்களை மீண்டும் ஒருமுறை பார்த்த மகிழ்ச்சியிலும், தன் வதனியிடம் உண்மையை சொல்வதற்கு வலுவான ஆதாரம் கிடைத்ததிலும் அவன் அறையின் நீள அகலத்தை அளந்துக் கொண்டிருக்க, அதியன் சொன்ன உண்மையில் பாரமான மனதுடன் அறைக்குள் நுழைந்தாள் அவள்...
"வ..வதும்மா..! நான் உன்கிட்ட ஒன்னு சொ..சொல்லணும் டி..!" என்றபடி உற்சாகமாக அவளை நெருங்க,
கணவனைப் பார்த்து விரக்தியாக சிரித்தவள், "எது மகி? மகேன் சாரோட சேர்ந்து நீங்க எனக்கு கரண்ட் ஷாக் கொடுத்த உண்மையா?" என்றதில் அதிர்ந்து,
'ப்ச் இப்போ வேல மெனக்கெட்டு அத யாரு இவகிட்ட சொல்லியிருப்பா..!' மனதில் வருந்தியபடி கண்களை அழுத்தமாக மூடித் திறந்தவன்,
"வதும்மா..! நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு டி ப்ளீஸ்..!" என்றுத் தொடங்க,
"இதுக்கு மேல நீங்க சொல்றத நான் எப்படிங்க நம்புவேன்? என்னைய கொஞ்ச நாள் தனியா விடுங்க..!" என்றவள் அவன் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துத் தடுப்பதற்குள் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தாள்...
தொடரும்......