MMI 25
மனைவி யுகேந்திரனைப் பற்றி சரியாகக் கண்டுபிடித்தது, மன்னவன் வெகு நாட்களாக எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் மனம் வலிக்கவே செய்தது..!
அதைவிட இப்பொழுது தங்களின் முன்ஜென்ம நினைவுகள் மீண்டதே பெரிதாகத் தெரிய, "உ..உனக்கு எப்போடா ஞாபகம் வந்துச்சு? நீ இப்..இப்போ ஓகேவா வதும்மா?" என்றான் அது தான் முக்கியமென்பதைப் போல...
"ம்ம்..!" என்றவள் தன் சோர்ந்த முகத்தை அவனிடம் காட்டாமல் மறைத்தபடி நேற்றிரவு நடந்ததை நினைத்துப் பார்த்தாள்...
சமீபத்திய வழக்கமாக மாமியார் வீட்டில் இரவுணவை உண்பதற்காக அவள் கணவன் அமர்ந்திருக்க, அவளைப் பெற்றவர்களும் உடன்பிறந்தவனும் சேர்ந்து அவன் மறுக்க மறுக்க ராஜ உபசாரம் செய்ததைக் கண்டும் காணாமல் உண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய மதிவதனி படுக்கையில் சுருண்டு படுத்தாள்...
சற்று முன்னர் கைக்கழுவச் சென்றபோது அம்பிகா, "நாளைக்குக் கோவிலுக்குப் போகலாமா மதிம்மா?" என்றதற்கு சம்மதம் சொல்லிவிட்டு வந்தவளுக்கு, மனக்கணக்கில் எதையோ நினைத்து விழிகள் கலங்கியது...
வீட்டிற்குச் செல்வதற்கு முன்பாக மனைவியைத் தேடிவந்தவன் அவள் அப்படிப் படுத்திருந்ததில் துணுக்குற்று, "வதும்மா..! என்னாச்சு டி?" என்றவாறே நெற்றியிலும் கழுத்தடியிலும் கரம் வைத்து சோதிக்க,
"ஒன்னுமில்ல..!" என முணுமுணுத்துவிட்டு அவள் கண்களை மூடிக்கொள்ள,
"எதுவா இருந்தாலும் உனக்கு நான் இருக்கேன் பேபி..! அத மட்டும் மறந்துடாத..!" என்றுவிட்டு அவளை அணைத்து முத்தமிட்டதும் கிளம்பியிருந்தான் அவன்...
மன்னவனின் அணைப்பிலும் முத்தத்திலும் பெண்ணவளின் ஒவ்வொரு அணுவும் இன்று ஏனோ அதிகமாக சிலிர்த்தடங்க, பரவசத்துடன் உறக்கம் தழுவியவளை சற்று நேரத்தில் ஆக்கிரமித்தன அவர்களின் முன்ஜென்ம நினைவுகள்..!
அன்று இராஜசிங்காபுரி அரண்மனையில் தமையனின் மறைவைக் கேள்விப்பட்டு மயங்கியவளை ஆடவர்கள் இருவரும் தாங்கியதில் தொடங்கி, அவளுக்கும் மன்னவனுக்கும் இடையிலான உயிர்நேசமும் அவர்களுக்குள் நடைபெற்ற கந்தர்வ மணமும், அவர்களின் உரையாடல்களும், அதன் பின்னர் அதியனைக் கண்டுவிட்டதாக கவுதமன் இளந்தீரனிடம் தெரிவித்ததில் இருந்து கனவு மேலும் தொடர்ந்தது...
__________
இராஜசிங்காபுரி அரண்மனை...
சிவபூஜையில் ஆழ்ந்திருந்த அந்நாட்டு மன்னனான இளந்தீரனை நெருங்கிய கவுதமன் அதியன் ஒரு இளம் மங்கையுடன் இருப்பதைத் தெரிவிக்க,
விழிகளில் உவகையைத் தேக்கி, "சத்தியமாகவா கவுதமா?" என்று வினவினான் அவன்...
"ஆம் மன்.." எனத் துவங்கியவன் தோழனின் முகம் மாறியதில், "ஆம் தீரனே..! யான் உரைத்தது சத்தியமே..!" என்றான் தீர்மானமாக...
"மிக்க மகிழ்ச்சி..! அவர்களை எங்கே கண்டாய்?"
"நம் தானியக்களஞ்சியத்தைத் தாண்டி அமைந்திருக்கும் ஒரு பாதாள அறையில் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்..! எனினும் இருவரும் நல்ல தேக வலிமையோடு தான் உள்ளார்கள்" என்றான் அவன் அதைப்பற்றி வினவுவதற்கு முன்பாகவே...
"நல்லது கவுதமா..! அவ்வறையை அடையும் வழியை நீ அறிவாயா?"
"நிச்சயமில்லை தீரனே..! களஞ்சியத்தின் கடைக்கோடியில் அமைத்திருக்கும் சாளரத்தின் வழியாக அவர்களைக் கண்டேன்..! அதற்கான வழியை இனி தான் அறிய வேண்டும்..." என்றவன், தருமனைப் பிடிப்பதற்காக அதிகப்படியானப் படைவீரர்களை பணியமர்த்தியுள்ள தகவலையும் தெரிவித்தான்...
"ஆகட்டும் கவுதமா..! நீ சென்று வா..! யான் பின்னால் தொடர்கிறேன்..." என்றுவிட்டு தம் மகாராணியைத் தேடி வந்தவன் நடந்ததை விவரித்து அவளிடம் உபாயம் கேட்க,
"யான் அறிவேன் மகி..!" என்றவள் மன்னவனைக் கருவூலத்தின் வழியாக அழைத்துச் செல்ல, விழிகளைக் கூச செய்த பொன்னொளியைக் கடந்து ஒரு சுரங்கப்பாதை வழியாக இறங்கியவர்கள் அதன் முடிவில் அதியனை சிறை வைத்திருக்கும் அறையைக் கண்டுகொண்டனர்...
இளையளையும் அவளின் மணாளனையும் கண்ட அதியனின் விழிகளில் உவகையுடன் கூடிய நன்றிப்பெருக்கு..!
அன்று தங்கள் விருப்பத்தை மகேந்திரன் உரைத்த பொழுது எதிரிநாட்டு இளவரசன் என்பதைத் தாண்டி மதிவதனியின் விருப்பமே அவ்வன்பனிற்குப் பெரிதாகத் தெரிய, தமது பட்டாபிஷேகம் முடிவுற்றதும் அவர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் முடிவில் இருந்தான் அவன்...
தமையனை அன்புடன் நோக்கிய மதிவதனி அவனருகே தளர்வாக நின்றிருந்த தம் தோழியும், அவனின் காதலியுமான நயனயாழினியையும் அணைத்துக் கொண்டாள்...
நயனயாழினி..!
மகேந்திரராஜனின் இளையள்..!
இரு ஆண்டுகளுக்கு முன்னர் செண்பக மலர்களைப் பறிக்கச் சென்றவள் அக்கயவர்களின் பிடியில் சிக்கியிருக்க, எங்குத் தேடியும் கிடைக்காதவள் எங்கோ தொலைந்துவிட்டதாக எண்ணியிருந்தனர்...
"அதியனே நம் திட்டப்படி உமக்கு சொற்ப நாழிகைக்குள் சிறிது சுயம் திரும்பியிருக்கும் அல்லவா? பிறகு எவ்வாறு தருமனிடம் மாட்டினாய்?" எனக் கேள்வியெழுப்பிய தீரன் அவனைக் கைந்தாங்கலாக அழைத்துச் சென்றான்...
அன்று அரண்மனைக்கு பாத்தியமான இடுகாட்டில் எரியூட்டுவதற்காகப் படுக்க வைக்கப்பட்டிருந்த அதியனை, புகைமூட்டம் உருவாக்கும் மூலிகையைப் பயன்படுத்தி அங்கிருந்தவர்களின் கவனத்தை திசைத்திருப்பியே, தருமன் கடத்தியதை கவுதமன் மூலமாக அவனும் அறிவான்...
"எமக்கு சரியாக நினைவில்லை அத்தான்..! முழுமையாக சுயம் திரும்பிய பொழுது அக்கயவனின் கட்டுப்பாட்டில் இருந்தேன்..!" என்றான் அதியன்...
"நல்லவேளையாக உம்மை மீட்டுவிட்டோம்..!" என்ற தீரன் அவர்களை ராணியாரிடம் அழைத்துச் செல்ல, இருவரையும் ஒருசேர அணைத்துக்கொண்டார் அவர்...
அன்றிரவு தானியக்களஞ்சியத்தின் வழியாக நடந்து வந்த தருமனை காவல்வீரர்கள் பிடித்துச் சிறையில் அடைத்தனர்...
அடுத்த மூன்று தினங்களில் அதியன்-யாழினியின் திருமண வைபவமும், இராஜசிங்காபுரியின் மன்னனாக அதியனிற்கு முடிசூட்டும் நிகழ்வும் நடந்து முடிய, அன்றைய முன்னிரவில் தம் மகாராணியைக் கொஞ்சிவிட்டு வெளியே வந்த தீரன் கீழ்மாடத்தில் நின்றிருந்த அதியனிடம்,
"உம் ராஜ்ஜியத்தை உம்மிடமே ஒப்படைத்துவிட்டேன் அதியனே..! இனி யானும் எம் மகாராணியும் நாடுத் திரும்ப வேண்டும்..!" என்க, அவனும் அதை ஆமோதித்தான்...
"இந்நாட்டின் இளவரசியை அவ்வாறு அனுப்ப இயலாது தீரனே..! மதிவதனியை மணந்து அழைத்துச் செல்வதே முறை..!" என்றான் அங்கு வந்த மகேந்திரராஜன்...
"மகேந்திரன் உரைப்பது சரியாகத் தோன்றுகிறது அத்தான்..! எனினும் அதற்கு முன்பாக தருமனின் மரணதண்டனையை நிறைவேற்றலாம்..!" என்றவனிடம்,
"அல்ல அதியா..! மங்கள நிகழ்வே முதன்மையானது... அக்கயவனின் தண்டனையை பின்னர் நிறைவேற்றலாம்..." என்றான் மகேந்திரராஜன்...
இருவரையும் தம் கூர்விழிகளால் அளந்தவன், "எம் மகாராணியை எவ்வாறு அனுப்பி வைத்தாலும் எமக்கு சம்மதமே..!" என்றதுடன் மீண்டும் தம் தேவியைத் தேடிச் செல்ல, அதற்குள் மங்கையவள் அசந்து உறங்கியிருந்தாள்...
அவளின் பிறைநுதலில் இதழொற்றிவிட்டு அருகில் சரிந்தவனின் சிந்தை முழுவதும் தேவியுடன் தாம் வாழப்போகும் வாழ்வின் இனிய கற்பனைகளே..!
அதற்கடுத்த ஐந்து தினங்களில் இளவரசியின் திருமணம் நிகழுமென்ற அறிவிப்போடு நாட்டு மக்களுக்கு புத்தாடைகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டன...
அடுத்த தினம் இரவு வானில் தோன்றியிருந்த தூமகேது (வால் நட்சத்திரம்) பலரைக் கவலையில் ஆழ்த்தியபோதிலும், தருமனின் மரணதண்டனை நிறைவேறவிருப்பதால் இவ்வாறுத் தோன்றுவதாக தங்களை சமாதானம் செய்தவர்கள் இளவரசியின் மணவிழாவில் பங்கேற்கத் தயாராகினர்...
அதற்கு முன்பாக சபையோரிடம் தம் இளையளின் வீரத்தைப் பற்றித் தெரிவிக்க விரும்பிய அதியன், அவள் கற்றுத் தேர்ந்தப் போர்க்கலைகளையும், அவளின் உதவியால் போர்களில் கிட்டிய வெற்றியையும் கர்வமாகப் பகிர்ந்ததோடு, நாட்டு மக்களிடம் அவற்றை தண்டோரா மூலம் சேர்ப்பிக்கும் பணியை விரைந்து முடிக்குமாறும் பணித்தான்...
இத்தனை ஆண்டுகளாக உணவுப்பிரியையாக மட்டுமே அறியப்பட்ட தங்கள் இளவரசியின் தீரத்தைக் கேள்விப்பட்ட அந்நாட்டு மக்கள், அவளை வானளாவப் புகழ்ந்தனர்...
அழகிய பெண்கள் யானையில் ஊர்வலமாக நாட்டிற்குள் உலா சென்று திருமண விழாவிற்கு மக்களை அழைக்க, அரண்மனையை பூந்தோரணங்களால் அலங்கரிக்கும் பணியும், இனிப்புப் பண்டங்கள் தயாரிக்கும் பணியும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன...
முறையாக மகேந்திரனின் மகாராணியாக மதிவதனி இணையப்போகும் நன்னாளும் மிக அழகாகவேப் புலர்ந்தது..!
அரண்மனையின் மங்கள வாத்தியங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் நிறைவுற்றதும், அந்நாட்டின் மக்களோடு மிக அருகாமையில் வசிக்கும் சிற்றரசர்களும், மகேந்திரன் இளந்தீரனின் பெற்றோர்களும் இந்திரபுரியின் மன்னனையும் மகாராணியையும் வாழ்த்த, இருவரும் தங்கள் உயிர்நேசம் நிறைவேறிய பேருவகையுடன் மாலைமாற்றிக் கொண்டனர்...
ஒருபுறம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற, மறுபுறம் அறுசுவையில் தயாராகியிருந்த விருந்துப் பரிமாற என நாடு விழாக்கோலம் பூண்டிருக்க, எந்த ஆரவாரத்திலும் பங்கேற்காத தம்பதியர் தங்கள் அறையின் மஞ்சத்தில் அமைதியாக வீற்றிருந்தனர்...
தம் கரங்களில் அடங்கியிருந்த இணையளின் வதனத்தை நிமிர்த்திய மன்னவன், "உமக்கு ஓர் பரிசு கொண்டு வந்துள்ளேன் வதும்மா..!" என்றபடி தாம் வரைந்த பெண்ணவளின் ஓவியத்தைப் பரிசளிக்க, விழிகளில் ஆனந்த ஊற்றுடன் அவனை நோக்கி,
"தங்களை மணாளனாக அடைய எப்பிறவியில் புண்ணியம் செய்தேனோ? யான் அறியேன் தீரனே..!" என்ற மதிவதனி, அவ்வோவியனிடம் பெற்று தாம் பாதுகாக்கும் அவனின் ஓவியத்தைக் காட்டினாள்...
அவளின் மதிவதனத்தைக் கரங்களில் அள்ளியவன், "அல்ல தங்கமே..! உம்மைப் போன்ற கற்பரசியை தேவியாக அடைவதற்கு யான் தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..." என்றவாறே அவள் மாம்பழக் கன்னங்களில் பதிய,
"ம..மகி..!" என்றவளின் வதனம் நாணமிகுதியில் செவ்வானமாக சிவந்தது...
அதில் மயங்கிய மன்னவன், "உம் வதனத்தின் யௌவனம் எம்மை வெகுவாக ஈர்க்கின்றது வதும்மா..! எப்பொழுது நம் நாட்டை அடைவோம் என்ற அவாவும் கூடுகின்றது..!" மேலும் ரகசியம் உரைக்க, களிப்புடன் அம்மாவீரனின் கேடய மார்பில் சாய்ந்தாள் அவள்..!
மகேந்திரன் தம் மதிவதனியுடன் இந்திரபுரியை அடைந்ததும் மன்னனாக முடிசூட்டிக் கொள்ளவிருப்பதால் படை பரிவாரங்களுடன் அவர்களை வழியனுப்பும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தன...
கவுதமனோடு இணைந்து அவற்றைக் கண்காணித்துக் கொண்டிருந்த மகேந்திரராஜனின் மனம் திடீரெனக் காரணமின்றி படபடக்க, சுற்றிலும் தம் பார்வையால் அளந்தபடி அவனுடனான உரையாடலைத் தொடர்ந்தான்...
அங்கு வித்தியாசமாக எதுவும் தென்படாதுப் போகவே அடுத்த வேலையைக் கவனிக்கச் செல்ல, அவன் ஐயம் கொண்டதே சரியாக மறைவிடத்திலிருந்து அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான் தருமன்...
சிறையில் காவலுக்கிருந்த அதிகப்படியான வீரர்களை ராஜகுரு வேறு பணிகளுக்கு அழைத்திருக்க, வாயிலில் நின்ற சொற்ப வீரர்களை எளிதாகத் தாக்கிவிட்டு அங்கிருந்துத் தப்பியவன், யார் கண்ணிலும் அகப்படாமல் தம் மறைவிடத்தை அடைந்துத் தக்க ஏற்பாடுகளுடன் காத்திருக்க, அக்கயவன் எதிர்ப்பார்த்த வேளையும் நெருங்கியது...
மதிவதனியின் உற்றாரும் உறவினர்களும் அரண்மனையில் புள்ளிமானாய் வலம் வந்த தங்கள் இளவரசியைப் பிரியும் வருத்தத்தில் இருக்க, ஒவ்வொரிடமும் தனித்தனியாக விடைபெற்றவள் இறுதியாக தமையனிடம் வந்து நின்றாள்...
"மகிழ்வுடன் சென்று வா தங்கையே..!" என தம் இளையளின் விழிநீரை அன்பாகத் துடைத்துவிட்டான் அதியன்...
தாம் பிறந்து வளர்ந்த அரண்மனையை மீண்டும் ஒருமுறை நீளவிழிகளால் வருடிய மதிவதனி, தம்மை இளநகையுடன் கவனித்துக் கொண்டிருந்த மன்னவனைத் திரும்பிப் பார்த்தாள்...
"நாம் விடைபெறும் காலம் நெருங்கியது தேவி..!" என்றவனை ஆமோதித்தவள் தாம் கண்ட காட்சியில் திகைத்து,
"நகருங்கள் தீரனே..!" எனக் கூக்குரலிட்டபடி விரைந்து வந்து அவனுக்கு முன்பாக நிற்பதற்கும், தருமன் வீசிய வாள் அவளின் ஆலிலை வயிற்றில் பாய்வதற்கும் சரியாக இருக்க, அங்கிருந்து செங்குருதிப் பெருகி வழிந்தது..!
"வ..வதும்மா..!" என்ற கதறலுடன் தம் மகாராணியை ஏந்தியபடி மன்னவன் தரையில் சரிந்தமர, அக்கயவனின் வெற்றிநகையால் இராஜசிங்காபுரி அரண்மனையே கிடுகிடுத்தது...
தொடரும்......

Last edited: