MMI 28
தருமன் இளம்பரிதி..!
மன்னவன் எதை நினைத்து பயந்தானோ, அதுவே நடந்துவிட்டதே..!
தனக்குத் தம்பியாகப் பிறந்திருந்தும் அவன் மாறவில்லை என்ற நினைப்பே மனதை வருத்த விழிகளை இறுக்கி மூடித்திறந்தான் மகேந்திரன்..!
"அடப்பாவமே..! இவ்ளோ ஃபீலிங் வேணாம் ப்ரோ..! திரும்ப ரெண்டு பேரும் ஒன்னா சாகும்போது ஃபீல் பண்ணு..!" யுகேன் போலி பரிதாபம் காட்ட,
"டேய் யுகா..! ஒழுங்கா பிரச்சின பண்ணாமப் போயிடு..!" என எச்சரித்தான் அண்ணன்காரன்...
"நீ தான்டா போகணும்..! அதென்ன எப்போதும் நான் ஆசப்பட்டப் பொண்ணு மேலயே உனக்கு காதல் வருது? இங்க நிக்கிற மதி என்னோட பொண்டாட்டி..!
மூனு வருஷமா அவளோட கனவுல நான் வாழ்ந்துட்டு இருந்தா நீ வழக்கம் போல வந்து அபேஸ் பண்ணிட்ட..!" என்றவன் மேலும் ஆபாசமாகப் பேச,
"ம..மகி..!" என்றபடி செவிகளையும் கண்களையும் மூடிக்கொண்டாள் அவள்...
"ச்சீ பொறுக்கி ராஸ்கல்..! அவ உன்னோட அண்ணிடா..!" என்று கர்ஜித்த மகேந்திரன் அவனைத் தாக்குவதற்குள் அவன் கத்தியை எடுத்திருக்க, அவனைத் தடுக்கும் முயற்சியில் இவனின் வலக்கரத்தில் அது ஆழமாக இறங்கியிருந்தது...
எங்கே கத்தினால் மனைவி பயந்துவிடுவாளோ என வலியை வெளிப்படுத்தாது இவன் பல்லைக் கடித்து பொறுத்துக்கொள்ள, அதற்குள் காதை மூடியபடி நின்றிருந்த மதிவதனியைக் கீழே தள்ளிவிட்டிருந்தான் அக்கயவன்...
"ஆஆ..!" என்றவள் தடுமாற,
"வதும்மா..!" எனப் பதறிய மன்னவன் மனைவியிடம் விரைவதற்குள் நிறைமாத வயிறு லேசாகப் பக்கவாட்டில் மோதுண்டு கரும்பாறையில் விழுந்தவளுக்கு கடைசி நொடியில் புலன்கள் விழித்துக்கொள்ள, வயிற்றில் மேலும் அடிபடாமல் தன்னைக் காத்துக்கொண்டாள்...
ஆனால் கீழே விழுந்த அதிர்ச்சியில் பனிக்குடம் உடைந்திருக்க, "ஆஆஆ.. ரொ..ரொம்ப வலி..வலிக்கிது ம..மகி..!" எனக் கதறியவளின் கால் வழியே உதிரம் வழியத் தொடங்கியது...
மனைவியைப் பார்ப்பதா? யுகேனைத் தடுப்பதா? என்பதுப் புரியாமல் மன்னவன் தவித்து நின்றது சில நொடிகளே..!
சட்டென்று உள்ளெழுந்த ஆத்திரத்தில் கீழே கிடந்த மரக்கட்டையால் அவன் தலையில் ஓங்கியடித்துத் தள்ளிவிட்டு தன்னவளை மடியேந்தியவன்,
"ஒ..ஒன்னுல்ல வதும்மா..! டோண்ட் கிவ்அப்..! இப்போ ஹாஸ்பிடல் போயிடலாம்..! யூ வில் பி ஆல்ரைட்..!" என்றதற்கு மறுப்பாகத் தலையசைத்தவள்,
"இல்ல ம..மகி..! ந..நம்ம பை..பையன் ஆஆஆ..!" எனும்போதே அவளின் நிலையை உணர்ந்தவனுக்குத் தலைசுற்றியது...
அங்கு தான் பிறக்க வேண்டுமென அவர்களின் பிடிவாதக்கார மகன் நினைக்கையில் அதை யாரால் தடுக்க முடியும்?
நல்லவேளையாக மருத்துவரிடம் தவிர்க்க முடியாத நிலை வந்தால் எவ்வாறு சமாளிப்பதெனக் கேட்டுத் தெரிந்ததால் ஆழ மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திவிட்டு,
"ஓகே பேபி ஃபைன்..! நீ பேனிக் ஆகாம ரிலாக்ஸா இரு..! நான் போயிட்டு உடனே வந்துர்றேன்..." என விலக முயன்றவனைத் தடுத்து,
"ப..பயமா இருக்கு மகி..!" மிரண்ட விழிகளால் மயங்கியிருந்த யுகேந்திரனைப் பார்த்தாள்...
"நமக்கு டைம் இல்ல வதும்மா..! அவன் இப்போ எந்திரிக்க மாட்டான்..! ஜஸ்ட் டென் மினிட்ஸ்..!" தன் கரம் பிடித்து தவித்த மனைவியை அவன் சமாதானப்படுத்த,
"மருமகள விட்டுட்டு நீ போ கண்ணா..! நான் இருக்கேன்..!" என்றபடி வந்து நின்ற கோகிலாவிற்கு வேகமாக நடந்து வந்ததால் மூச்சு வாங்கியது...
எதிர்பாராத நேரத்தில் தங்கள் துயர் துடைக்க வந்தவரைக் கண்டதும் ஆசுவாசமடைந்து, "அ..அம்மா..! நீங்க எப்..எப்படி?" என்றான் கேள்வியாக...
"அத அப்புறம் சொல்றேன் தம்பி..! நீ வேகமா போ..!" என்றபடி மயங்கியிருந்த இளையவனை வெறித்தார் கோகிலாவாகப் பிறந்திருக்கும் கவிமொழி...
அதற்காக அவருக்கு முன்ஜென்ம நினைவுகள் மீண்டுவிட்டதா என்றால் அது தான் இல்லை..!
எல்லாருக்கும் அது நடப்பதில்லையே..!
யுகேந்திரனின் அறையில் மாட்டியிருந்த மதிவதனியின் புகைப்படங்களையும், அவளோடு நின்றிருந்த மகேந்திரனின் முகத்தில் சொருகியிருந்த அம்புகளையும் எதேச்சையாகப் பார்த்ததில் அதிர்ந்து மகனைக் கண்காணிக்க, ஏதோ ஒரு முடிவுடன் அவன் கிளம்பிச் சென்றதைக் கண்டவர் மனம் உந்த மகேனை அழைத்து, யுகேன் செய்ததை சொல்லாமல் அவன் உதவியை நாடியிருந்தார்...
அவன் மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் நிலைமையின் தீவிரம் தெரியாதவன், வனத்திற்கு அழைத்து வந்ததுடன் நண்பனின் கார் நிற்பதை அவரிடம் காட்டிவிட்டுத் திரும்பிச் சென்றிருந்தான்...
சற்று மெதுவாக நடந்து குகையை நெருங்கும்போது கடைசியாக மதிவதனியைப் பற்றி யுகேந்திரன் பேசியதைக் கேட்டவருக்கு, தாயாக நினைக்க வேண்டியவளை அவன் பார்த்திருக்கும் பார்வையில் மனம் வெறுத்தே போனது...
மரவீட்டை அடைந்த மகேந்திரன் தன் கரத்திற்கு மருந்திட்டு, மருத்துவர் சொன்னபடி கொதிக்கும் வெந்நீரில் மருத்துவ உபகரணங்களை சுத்தப்படுத்தி எடுத்ததோடு, தேவையான மற்றவைகளையும் எடுத்துக்கொண்டான்...
அங்கு தான் ஓரளவுக்கு நெட்வொர்க் வேலை செய்யுமென்பதால் நிலைமையை விலக்கி அதியனுக்குக் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு வந்த வேகத்தில் திரும்பி ஓடி குகையை அடைந்தவன், கொண்டு வந்ததை தாயிடம் கொடுத்ததோடு யுகேனைத் தூக்கி வெளியே படுக்க வைத்துவிட்டு வந்தான்...
மதிவதனியின் தலைமாட்டில் அமர்ந்து மீண்டும் அவளை மடிதாங்கியபடி தோள்களிலும் இடுப்பிலும் மென்மையாக அவன் அழுத்திவிட, மகன் சென்றுத் திரும்பி வந்த இடைப்பட்ட நேரத்தில் தனக்குத் தெரிந்தளவில் மருமகளை பிரசவத்திற்குப் பக்குவப்படுத்தி இருந்தார் கோகிலா...
ஒவ்வொரு முறையும் பெருவலி வருகையில் தன் விரல்களால் அவன் விரல்களை இறுக்கமாக அழுத்தி, "ம..மகி..!" எனக் கதறியதில் பெண்ணவளின் வலியை உணர்ந்து அவன் விழிகளும் நிரம்பி வழிய, "கொஞ்சம் பொறுத்துக்க வதும்மா..!" என்றபடி தாயை நிமிர்ந்துப் பார்த்தான்...
தன் பேரனை கையில் ஏந்தும் தருணத்திற்காகத் தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருந்தவர் மகனைக் கவனிக்கவில்லை...
ஒன்றரை மணிநேரம் தாயைத் துடிக்க வைத்து, தந்தையைத் தவிக்கவிட்ட அவர்களின் மகன், ஒருவழியாகக் கருவறையை விட்டு வெளியேறி கரும்பாறையின் மேலாக வந்து விழ, பேரனை லாவகமாகக் கையில் ஏந்தியிருந்தார் கோகிலா...
மன்னவன் கரம் நடுங்க தொப்புள்கொடியை வெட்டியதும், "வீல்..!" என பெருங்குரலெடுத்து சின்னக்கண்ணன் அழுகையைத் தொடங்கியதில், இருவரும் சொல்லில் வடிக்க இயலா பரவசத்துடன் தங்கள் காதலின் உன்னதப்பரிசை ரசித்தனர்...
அதிலும் பிரசவ வலியைத் தாங்கியதில் கன்றிச் சிவந்த முகத்துடன் தாய்மை பொங்கும் விழிகளால் மகனை ரசித்தவளுக்கு, கணவனின் பிரதி பிம்பமாய் பிறந்தவனில் இருந்து விழிகளை நகர்த்த முடியாமல் போனது..!
கணவனின் கன்னம் தாங்கியவள், "ம..மகி..! நம்ம விஜூ..!" என்றதில்,
"ம்ம் வதும்மா..! நம்ம விஜேந்திரன்..!" என்றபடிக் குனிந்து அவளின் நெற்றியில் அழுத்தமாக இதழொற்றினான் அவன்...
"சரி நீ கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணு கண்ணா..!" என்ற கோகிலா, மகன் வெளியேறியதும் மிக கவனமாக பேரனை சுத்தப்படுத்தி ஒரு பூந்துவாலையில் பொத்தி வைத்ததோடு, மருமகளுக்கும் தனக்குத் தெரிந்தவரையில் செய்து மாற்றுடை அணிவித்துவிட்டார்...
சற்று நேரத்தில் நால்வரும் குகையில் இருந்து வெளியே வர, "ஓம் நமசிவாய..! எல்லாம் அந்த பரமேஸ்வரனின் செயல்..!" என்றுரைத்தவாறு குழந்தையின் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு நொடியில் மாயமாய் மறைந்திருந்தார் இவர்களுக்கு வழிகாட்டியாய் வந்த அப்பெரியவர்...
யாரென்றுப் புரியாமல் கோகிலா மகனைப் பார்க்க, அவன் மனைவியை உனக்குத் தெரிகிறதா என்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான்...
"ராஜகுரு..!" என முணுமுணுத்தவள் கணவனின் கைவளைவில் சாய்ந்து நின்றாள்...
ஆம்..! அன்று காவல்வீரர்களை வேறு வேலைக்கு அனுப்பி தருமன் தப்பிப்பதற்கு முதற்காரணமாக இருந்தவர், இவர்களுக்காகவேப் பிறப்பெடுத்து தவயோகியாய் வாழ்ந்துக் கொண்டிருந்தார்...
இருவரையும் புரியாமல் பார்த்த கோகிலாவிற்கு அடுத்து யோசிக்க நேரமின்றி அதியன் மருத்துவ உதவியுடன் வந்துவிட, அதன் பின்னர் நடந்ததெல்லாம் மின்னல் வேகம் தான்...
மூவருக்கும் தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள், யுகேந்திரன் மட்டும் கோமாவிற்குச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்க,
"ம்மா நான் அந்தளவுக்கு அவன அடிக்கலையே..! அப்..அப்புறம் எப்படிம்மா?" என்றபடி மகேந்திரன் கோகிலாவைப் பார்க்க,
"நான் தான் தம்பி காரணம்..! நீ அங்கப்போன அஞ்சு நிமிஷத்துல எந்திரிச்சவன் மதிம்மாவக் கொல்ல வந்ததால அவனப் பிடிச்சு பாறையில தள்ளிவிட்டுட்டேன்.. ஆனா இப்படியாகும்னு தெரியாதே கண்ணா..!" எனக் கதறி அழுதவரைத் தேற்றினான் அவன்...
ஆறு நாட்கள் கடந்திருந்தன...
குடும்பமாக நின்ற மூத்த மகனுக்கு திருஷ்டி கழித்து, ஆரத்தியெடுத்து உள்ளே வரவேற்ற கோகிலா, அவர்களுக்காகக் கீழ்த்தளத்தில் தயாராகியிருந்த அறையில் அமர்த்தி மருமகளுக்கும் பேரனுக்கும் வசதி செய்துவிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்கச் சென்றார்...
முதல் பிரசவத்திற்கு மனைவியைத் தாய் வீட்டிற்கு அனுப்ப மறுத்த மகேந்திரன், "விஜூப்பையா..! அப்பா பாருங்க..!" என மகனைக் கொஞ்சிக் கொண்டிருக்க,
"ஏங்க ஏற்கனவே அங்கப் போகவிடாம இங்கக் கூட்டிட்டு வந்துட்டீங்க..! இப்போ பிள்ளையையும் நீங்களே கொஞ்சிட்டு இருந்தா எங்கப்பாம்மா, அதிண்ணா லாம் என்ன பண்ணுவாங்க..! ஒழுங்கா போய் அவங்கட்டக் கொடுத்துட்டு வாங்க..!" எனக் கடிந்தாள் மதிவதனி...
"ஓகே பேபி..!" மகனை அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தான்...
கட்டிலில் தளர்வாக அமர்ந்திருந்த பெண்ணவள் கால்களில் ஸ்பரிசத்தை உணர்ந்து விழி மலர்த்த, பிரசவத்தின் போது கழட்டிய தங்கக்கொலுசுகளை மீண்டும் அணிவித்துக் கொண்டிருந்தான் அவளின் மன்னவன்...
"மகி..!"
"ம்ம்?"
"நம்ம பெயிண்டிங்க நான் சொன்ன மாதிரி அங்கயே வச்சுட்டீங்களா?"
"ஓ யெஸ்..!"
"நான் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல?"
"ஹேய் ஏன் டி?"
"இல்லங்க உங்களவுக்கு நான் லவ் பண்ணலயோனு தோனுது"
மனைவி அவளுக்கு தாமதமாக நினைவு வந்ததைச் சொல்கிறாள் என்பதையுணர்ந்து, "இல்ல பேபி..! தப்பெல்லாம் என் மேல தான்... ஃபர்ஸ்ட் டைம் உன்னோட ஃபோட்டோ பார்த்தப்பவே இங்க என்னமோ பண்ணுச்சு..!" என நெஞ்சைத் தொட்டுக் காட்டியவன்,
"அப்போவே மனசு சொல்றதக் கேட்ருந்தா உன்ன ஹர்ட் பண்ணி நம்ம நேரத்த வேஸ்ட் பண்ணியிருக்க மாட்டேன்ல..!" என்றான் காதலாக...
கணவனின் கரை காணாத காதலில் சுகமாக நனைந்தவள் அவன் தோள் சாய்ந்தபடி, "நம்மளப் பத்தி அத்த மாமாவுக்குத் தெரியுமாங்க?"
"நோ வதும்மா..! அதியனையும் மகேனையும் தவிர யாருக்கும் தெரியாது..!"
"நீங்க சொல்லலையா?"
"அவசியம் சொல்லணுமா பேபி?"
"க்ம்ஹூம்..!"
"அதான் நானும் சொல்லல..!"
"ம்ம்" என்றவள் அவன் கன்னத்தில் பதிந்து, "ஐ லவ் யூ மகி..!" என்றிருந்தாள்...
மனைவி எதிர்பாராமல் உதிர்த்த வார்த்தைகளில் மனம் நெகிழ்ந்தவன், "ஐ லவ் யூ டூ டி வதும்மா..!" என்றபடி அவளின் செவ்விதழ்களில் அழுத்தமாகப் பதிந்து விலகியதில் நாணத்தால் வதனம் மின்ன,
"நம்ம விஜூக்கு த்ரீ மன்த்ஸ் ஆனதும் நம்ம லவ் ஸ்பாட்ல வச்சு ஃபோட்டோஷூட் பண்ணனும் மகி..!" என்க,
"உத்தரவு மகாராணி..!" என்றபடி தன் மதிவதனியை அணைத்து சிரித்தான் மகேந்திரன்...
முற்றும்......
எபிலாக்
மூன்று வருடங்களுக்குப் பிறகு...
மகேந்திரன்-மதிவதனி தம்பதியருக்கு விஜேந்திரன் சர்வஜித்திற்குப் பின்னர் ஒரு வயதில் தேவேந்திரன் யோஜித் என்ற மகனிருக்க, மகேன்-வெண்மதி தம்பதியர் ஜெய்னேஷ் என்ற மகனுடன் நிறுத்திக்கொண்டனர்...
அன்று விடியும்போதே யுகேந்திரன் கண்விழித்த அதிர்ச்சியானத் தகவலோடு தான் விடிந்தது வது-மகியின் காலை...
மூத்த மகன் கண்ணிற்கு நிறைவாக வாழும்போது, இளையவன் மட்டும் இப்படி அசைவற்றிருப்பதை எண்ணி மனம் வருந்திய பெற்றவர்களுக்கு, இப்போது அவனையும் திருத்தி நல்லபடியாக வாழ வைக்க ஒரு வாய்ப்புக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சியே..!
காலையில் அதைக் கேள்விப்பட்டதில் இருந்து இரு மகன்களையும் கைகளைவிட்டு கீழிறக்கவே இல்லை மதிவதனி...
"பசங்கள விடு வதும்மா..! உன் மகி மேல உனக்கு நம்பிக்கை இருக்குல..!" என பலவாறாக சமாதானம் செய்துவிட்டு மகேந்திரன் அலுவலகம் கிளம்பிச் சென்றிருக்க, அவள் தனக்கு தலைவலிப்பதாகச் சொல்லி வீட்டிலிருந்தாள்...
தன் வழக்கமான வேலையில் மூழ்கியிருந்தவனை மதியம் அழைத்த ராமச்சந்திரன் யுகேன் இறந்துவிட்டதாகத் தெரிவிக்க, ஆறு மாதங்களில் எழுந்து நடப்பான் என மருத்துவர்கள் உறுதியாகக் கூறியிருந்ததை மீறி இப்படி நடந்ததை முதலில் அவனால் நம்பவே முடியவில்லை...
தன்னை சமாளித்து வீடு வந்தவன் மகனை இழந்த துக்கத்தில் கதறியழுதப் பெற்றவர்களைத் தேற்றி, உடன்பிறந்தவனின் இறுதிக் காரியங்களை குறையின்றி முடித்துவிட்டு மனைவியிடம் தஞ்சமடைந்தான்...
"எப்..எப்படி மகி?"
"அதான் டி எனக்கும் புரியல..!" என்றவன் ஏதோ ஞாபகம் வந்தவனாக சட்டென்று வெளியேறி, யுகேனுடைய அறையின் சிசிடிவி பதிவுகளைத் தனியாக எடுத்துப் பார்த்தான்...
பார்த்தவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை..!
அவர்களின் மகன்கள் இருவரும் சத்தமின்றி உள்ளே நுழைந்து ஏதோ விளையாடும் பொருள் என நினைத்தார்களோ என்னவோ, யுகேனிற்கு உயிர்க்காற்று வழங்கிக் கொண்டிருந்த உபகரணத்தின் பட்டனைத் திருகி விளையாட சில நிமிடங்களில் அவன் உயிர்மூச்சு அடங்கியிருந்தது...
சிறுவயதிலிருந்து கூட வளர்ந்த தம்பியின் இழப்பு அவனை வருத்தினாலும், ஒரு தகப்பனாக வாழ வேண்டிய தன் இளங்குருத்துகளைக் காக்கவே நினைத்தான் அவன்...
எத்தனை பிறவியெடுத்தாலும் அவர்களை அழிக்க நினைப்பவன் உயிர் பிழைத்தால் மட்டும் நல்லவனாகவா வாழ்வான்?
கண்கள் கலங்கி வியர்த்து வடிந்த முகத்தைத் துடைத்தபடி இனிமேல் இவ்வுண்மையை தன் வதனி தொடங்கி யாருமே அறியத்கூடாதென்ற கவனத்தில் அப்பதிவுகளை முழுமையாக அழித்துவிட்டு அறைக்குத் திரும்பியவன் மனைவியைத் தேட, அவள் பால்கனியில் நிலவை ரசித்தபடி நின்றிருந்தாள்...
சில நிமிடங்கள் நின்று தன்னை சமன்படுத்தியவன் பின்னாலிருந்து அவளை இறுக்கி அணைத்தபடி, "அழகா இருக்க டி வதும்மா..!" என்றதும் அவள் அவன் மார்பில் சாய,
"ஐ நீட் யூ வதும்மா..!" என்றவாறே அவளின் கழுத்து வளைவில் புதைந்துக் காதலாக முத்தமிட்டது தான் தாமதம்,
"ம்மா கத வேணும்..!" என்று விஜூ ஓடிவர, அண்ணன் பின்னால் தத்தி தத்தி நடந்து வந்தான் தேவ்...
"ஸப்பா..! என் பொண்டாட்டிய கொஞ்சுனா போதும், உடனே கழுகுக்கு மூக்கு வேர்த்த மாதிரி வந்துடுவானுங்க..!" என முணுமுணுத்தபடி தன்னைப் பரிதாபமாகப் பார்த்த கணவனை அருகிழுத்து அவனிதழில் அழுத்தமாகப் பதிந்து விலகியவள்,
"பசங்க தூங்கட்டும் மகி..!"
"நிஜமா?"
"ம்ம்..! ஆனா சீக்கிரமா விட்ரணும் ஓகேவா? நாளைக்கு அதிண்ணாவுக்குப் பொண்ணுப் பார்க்கப் போகணும்ல..!" என்றதில் மறுவார்த்தைப் பேசாமல் மகன்கள் இருவரையும் ஆளுக்கு ஒரு கரத்தில் ஏந்தியபடி பின்தொடர்ந்தான் அவன்...
என்றும் குறையாத உயிர்க்காதலால் தன் மதிவதனியை நிறைப்பான் இந்த மகேந்திரன்..!
சுபம்......

Last edited: