அத்தியாயம் 17
அடுத்த நாள் காலையிலேயே வந்து உதயன் குடும்பத்தோடு சேர்த்து அவர்கள் மூவரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு சென்றார் பிரேமா. கேட் தூணில் மொழி இல்லம் என்று எழுதியிருப்பது இன்றும் நாவினியின் கண்ணில் விழுந்தது. அதனாலோ என்னவோ ஆலம் எடுத்து வீட்டுக்குள் அழைக்கப்பட்டதும் அவள் விழிகள் தானாக நிறைமொழி கேசிகனின் புகைப்படங்களை நாடி ஓடிற்று.
அங்கே எதுவுமே இல்லை. கேள்வியுடன் கேசிகனை நோக்கினாள். முதல் நாள் வீட்டையே அலங்கரித்திருந்த எந்தப் புகைப்படங்களும் இப்போது இல்லை என்று கண்டு அவனும் இறுக்கமாக நின்றிருந்தான்.
பிரேமாவைப் பார்த்தாள். இவர்களை உணர்ந்தாற்போல் சமாளித்துச் சிரித்தார் அவர். வேறு என்னதான் செய்வதும்? அவற்றை எல்லாம் எடுத்து வைக்கையில் உள்ளம் பிசையாமல் இல்லை. அருமையான பெண் நிறைமொழி. பெற்ற தாய்க்கு ஒப்பாக அவரைக் கவனித்துக்கொண்டவள்.
ஆனால், மகன் வாழ்க்கை நிம்மதியாக அமைவதற்கு அதைச் செய்யத்தானே வேண்டும். மேனகா வேறு இருக்கிறாரே. நாவினி விரும்பியவன் என்று தெரிந்தபோதுமே ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனோடு இருப்பவனை அவளுக்குக் கட்டிவைக்கத்தான் வேண்டுமா என்று ஆரம்ப நாள்களில் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க அவர் ஒரு வார்த்தை சொல்வதுபோல் எதுவும் இருந்துவிடக் கூடாது என்று எண்ணினார்.
காலை உணவும் மதிய விருந்தும் தடல்புடலாகவே நடந்தேறிற்று. சாரதா குடும்பம், பிரேமாவின் அன்னை, இவள் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் என்று எல்லோருமே வந்திருந்தார்கள். மயூரனும் மனைவி பிள்ளைகளோடு அங்குதான் நின்றான்.
அவன் கேசிகனின் முகத்தை முகத்தைப் பார்ப்பதும், இவன் அது தெரியாததுபோலவே காட்டிக்கொள்வதும் தாராளமாக நடந்தது.
மயூரனின் தந்தைக்கு மயூரன் செய்தவை எதுவும் தெரியாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் மனிதர். இருந்தாலும் சிறு தவறும் பொறுக்காதவர். அதனாலேயே எதையும் யாரும் அவரிடம் கொண்டுபோகவில்லை. மருமகனின் வாழ்க்கை சிறப்பாக அமைந்த நிம்மதியில் இருந்தார் அவர்.
மாலை மேனகா குடும்பம் மொத்தமும் கேசிகன் குடும்பமும் கோயில் சென்று வந்தார்கள். இன்னும் மூன்று நாள்களில் நாவினியோடு சேர்த்து மேனகா குடும்பத்தினர் ஜெர்மன் திரும்ப வேண்டும். அவசர ஏற்பாடு என்பதில் பத்து நாள் விடுமுறையில்தான் வந்திருந்தனர்.
அன்றைய இரவு விருந்து மாதவன் வீட்டில் ஏற்பாடாகியிருந்தது. வாகனம் ஒன்றைப் பிடித்துக்கொண்டு போனார்கள். விருந்தை முடித்துக்கொண்டு வருகையில் மேனகா குடும்பம் அங்கே தங்கிவிட, பிரேமா, கேசிகன், நாவினி, சஜிதன் நால்வரும் ஏழாலை திரும்பினர்.
அன்று இரவு கேசிகனின் அறையில்தான் அவர்களின் தங்கல். “நேரமாகுதம்மா. போய்ப் படுங்கோ.” என்ற பிரேமா சின்னவனைத் தன்னுடன் வைத்துக்கொண்டார்.
“ரெண்டு நாளா உங்களுக்கு ஒரே அலைச்சல். தம்பியத் தந்துபோட்டு நிம்மதியாப் படுத்து எழும்புங்க அம்மா.” என்று மகனை வாங்க வந்தான் கேசிகன்.
“ஐயா போய்யா! இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் இஞ்ச இருக்கப்போறார். அது வரைக்கும் என்னோடயே இருக்கட்டுமன். பிறகு தனியாத்தானே இருக்கப்போறன்.” அன்று மாதவன் வீட்டில் வைத்து கேசிகனும் நாவினியும் இனி என்னவெல்லாம் செய்ய வேண்டும், அப்பாவும் மகனும் ஜெர்மன் வருவதற்கான ஏற்பாடுகள் என்ன என்று மேனகா குடும்பத்தினர் பேசியதாலோ என்னவோ தனக்குள் வைத்து அழுதுகொண்டிருந்தவர் தன்னை மீறியே தன் நிலையைச் சொல்லியிருந்தார்.
கேசிகன் அப்படியே நின்றுவிட்டான்.
அவர் அருகில் அமர்ந்து, பரிவுடன் அவர் கன்னம் பற்றித் தன்னைப் பார்க்க வைத்த நாவினி, “என்னைச் சுத்தி ஒருத்தரும் இல்லையே எண்டு தினம் தினம் அழுத்தவள் மாமி நான். அப்பிடி உங்களைத் தனியா விட்டுடுவனா? உங்கட மகனும் பேரனும் இல்லாம நீங்க இருக்கப்போற காலம் ஒரு ஆறு மாதம் கூட வராது. உங்களையும் நான் கூப்பிட்டுடுவன். கவலைப்படாதீங்கோ.” என்று அவரைத் தேற்றிவிட்டு கேசிகனோடு அவன் அறைக்கு வந்தாள்.
வந்ததும் அவள் பார்வையில் பட்டது, அவள் பரிசாகக் கொடுத்த அந்த வீட்டின் ஃபிரேம். அவ்வளவு நேரமாகப் பிரேமாவினால் கனிந்திருந்த அவள் உள்ளம் அப்படியே மாறிப்போயிற்று.
அதையே தான் ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்ததும், நீ காத்திருந்த காத்திருப்புக்குப் பொருளே இல்லை என்று அவன் முகத்தில் அறைந்து சொன்னதும் நினைவில் வந்தன.
நிறைமொழியோடு அவனைப் பார்க்கிற வரையில் அவள் உள்ளத்தில் இனம்புரியா ஆனந்தத்தையும் அன்பையும் பரப்பிய வீடு அது. இன்று அவள் காயங்களைக் கிளறி விடுவது போலிருந்தது. ஒன்றுமே சொல்லாமல் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
“இத நீ குடுத்திட்டுப் போனது எனக்குத் தெரியாது.”
தெரிந்திருந்தால் மட்டும்? ஒன்றுமே சொல்லாமல் கொண்டுவந்த பையிலிருந்து மாற்றுடைகளை எடுத்தாள்.
“நவி.”
திரும்பிப் பார்த்தவள் விழிகளில் உணர்வுகள் முற்றிலும் துடைக்கப்பட்டிருந்தன.
“உன்னை விட அவள் பெட்டர் எண்டு நினைச்சோ, நீ இல்லை எண்டதும் அவள் எண்டோ மலர் தாவுற வண்டு மாதிரி நான் போகேல்ல.” அவள் அமைதி அவனைக் குற்றம் சாட்டுவது போலிருக்கவும் சொன்னான்.
“நான் எதுவும் கேக்கேல்லையே.”
“நீ கேக்கேல்லத்தான். ஆனா அண்டைக்குச் சொன்னியே நான் செய்ததுதான் சரி, வாழ்க்கை வாழத்தான் எண்டு. அப்பிடி வாழ நினைச்சுப் போகேல்ல நவி. ஒரு பக்கம் உன்னட்ட இருந்து ஒரு பதிலும் இல்லையே எண்டுற போராட்டம். இன்னொரு பக்கம் அம்மா கலியாணத்துக்குத் தந்த நெருக்கடி எண்டு ஒரு கட்டத்துக்கு மேல என்னால எதையுமே சமாளிக்க ஏலாம போச்சு. எல்லாத்தில இருந்தும் வெளில வரோணும் மாதிரி இருக்கவும்தான்…”
“நான் உங்களைப் பிழை சொல்லவே இல்லையே.”
அமைதியாகச் சொன்னவளிடம் மேலே என்ன பேசுவது என்று தெரியாது பார்த்தான் கேசிகன்.
“எனக்குக் களைப்பா இருக்கு. படுக்கோணும்.”
பொருள் புரிந்து அறையை விட்டு வெளியே வந்தான். அவள் கதவைச் சாற்றிக்கொண்டு உடை மாற்றினாள். அவள் வெளியே வந்தபிறகு அவன் மாற்றிக்கொண்டான்.
இன்று சஜிதன் இல்லாமலும் ஆளுக்கொரு விளிம்பில் படுத்துக்கொண்டனர். ஒற்றைக் கையைத் தூக்கி நெற்றியின் மீது போட்டுப் படுத்திருந்தவன் திரும்பி, “நீ சொன்ன மாதிரி நானும் தம்பியும் அங்க வந்த பிறகு அம்மாவக் கூப்பிட்டுடலாமா? இல்லை அவாவுக்காகச் சும்மா சொன்னனியா?” என்று வினவினான்.
“ஆறு மாதமே கனக்க. ஸ்பொன்சர் போம் எடுத்து அனுப்பினா ரெண்டு மூண்டு மாதத்திலேயே வந்திடுவா.”
“அவா பாவம் நவி. என்னையும் தம்பியையும் தவிர வாழ்க்கைல வேற எந்தத் சந்தோசத்தையும் அனுபவிக்கேல்ல. இப்பவும் நாங்க மூண்டு பேரும் சந்தோசமா இருந்தா காணும் எண்டுதான் இந்தக் கலியாணத்தைச் செய்து வச்சிருக்கிறா.”
“யோசிக்காதீங்க. அவாவைக் கூப்பிடுறது என்ர பொறுப்பு.”
அடுத்த நாள் காலையே சென்று, ஜெர்மன் மொழி படிப்பதற்கான செண்டரில் அவளே அனைத்தையும் பேசி அவனைச் சேர்த்துவிட்டாள்.
அவர்களுக்கு நிறைய நாள்கள் இல்லை என்பதில் அன்று மதிய உணவுக்கே சாரதா வீட்டினர் அழைத்திருந்தனர். பேரன், மருமகன், பிரேமா மூவரும் நாவினியோடு வந்தபோது மகளின் நினைவுகள் வந்து கண்ணீரைத் தோற்றுவித்தாலும் மகிழ்வாகவே அவர்களை வரவேற்று உபசரித்தனர்.
அங்கிருந்த கேசிகன் நிறைமொழி திருமணப் புகைப்படம் கண்டு கேசிகனின் அமைதி குலைந்துபோயிற்று. இந்த வீடு, இங்கே வாழ்ந்த வாழ்க்கை என்று என்னென்னவோ நினைவுகள் எல்லாம் அவன் கட்டுப்பாட்டையும் மீறியே வந்துபோயின.
சின்னவன் வேறு, “அம்மா!” என்று நிறைமொழியைக் காட்டி நாவினியிடம் கதை சொன்னான். உள்ளுக்குள் நடக்கும் போராட்டங்களை வெளியில் காட்டிவிடக் கூடாது என்கிற பிடிவாதத்துடன் அமர்ந்திருந்தான் கேசிகன்.
அவன் முகத்தில் நடக்கும் மாற்றங்களைக் கண்டு கலக்கமும் காரணமறியாப் பயமுமாக நாவினி அடிக்கடி அவனைப் பார்த்தாள். அதைக் கவனித்துவிட்டு, “என்னையே என்னத்துக்குப் பாக்கிறாய்?” என்று சத்தமில்லாமல் சீறினான் அவன். அதன் பிறகு அவன் புறம் அவள் திரும்பவே இலை.
வெளிநாட்டு வாழ்க்கை அமைந்ததும் புழுவைப் போல் தன்னை உதறித் தள்ளிவிட்டுப் போய்விட்டாள் என்கிற கோபம் நாவினியைத் தாண்டி நிறைமொழியோடு வாழ்வதற்குக் கேசிகனுக்கு உதவியது.
ஆனால் இன்று, அந்த மொழியை என்ன சொல்லித் தள்ளி வைத்துவிட்டு நிகழ்கால வாழ்வினுள் நுழைவான்? இனி இதுதான் வாழ்க்கை, அவள் இவ்வுலகில் மட்டுமில்லை என் உலகிலும் இல்லை என்னு எத்தனையோ தடவைகள் சொன்னாலும், ஒரு சிறு செயல் போதுமாயிற்று அவன் முடிவுகள் ஆட்டம் காண்பதற்கு. ஒரு இறுக்கமான மனநிலையுடனேயே விருந்தினை உண்டான்.
நேரம் போதாமையாலும் கேசிகனின் மனநிலையைக் கருதியும் மயூரன் தனியாகத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கவில்லை. மாறாக அவனும் குடும்பத்தோடு இங்கே வந்திருந்தான்.
எல்லோருமாகப் பேசிக்கொண்டு இருக்கையில், “கடைய என்னடா செய்யப் போறாய்?” என்று விசாரித்தான் மயூரன்.
“இப்போதைக்கு எந்தத் பிளானும் இல்ல. ஏதாவது செய்யோணும்.” ஒருவித ஒட்டாத தன்மையுடனேயே பதில் சொன்னான் கேசிகன்.
அதைக் கவனித்துவிட்டு, “தம்பி, மகன் செய்தது பிழைதானப்பு. அதுக்கு மன்னிப்பத் தவிர வேற என்ன கேக்கிறது எண்டு எங்களுக்குத் தெரியேல்ல. ஆனா ஆருக்காக இதையெல்லாம் செய்தானோ இண்டைக்கு அவாவே இல்ல.” என்று கணவர் எங்கோ அகன்ற பொழுதொன்றில் கண்ணீருடன் சொன்னார் சாரதா.

Author: Vishakini
Article Title: மன்னிப்பாயா காதலே - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.