• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மலர் -தீஞ்சுவை

STN20

Member
Staff member



மலர் -தீஞ்சுவை



நான் முன்பு போல அனாதை இல்லை. எந்த பிரச்சனையாக இருந்தாலும், ஆரிவ் தீபக் வந்து விடுவார்கள் என்ற தைரியம் இருந்தது. அதுவும் இல்லாமல் இது அவர்கள் வீட்டு விழா அதில் செல்வி அசிங்கமாக நடந்துக் கொள்ள அவள் வீட்டில் இருப்பவர்கள் விட்டு விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. இருந்தாலும் என்ன பிரச்சனை வர போகிறதோ என்று பயந்துக் கொண்டே உள்ளே நுழைந்தவளுக்கு அவளின் எண்ணங்களுக்கு மாறாக நல்ல வரவேற்பு கிடைத்தது. குர்தி பலாஸோ தான். ஆனால் அழகிதான்.

"வாங்க மலர் பார்த்து எவ்ளோ நாளாச்சு" அனுவின் அன்னை வரவேற்க உடன் இருந்த மற்றவர்களும் இவளை சூழ்ந்துக் கொண்டார்கள்.

அனுவோ, "எங்க ஆன்ட்டி எவ்ளோ சூப்பரா டான்ஸ் ஆடுவாங்கத் தெரியுமா என்று இவளின் புகழ் பாடிக் கொண்டிருந்தாள். அப்படின்னா உங்க ஆன்டியை ஆடிக் காட்ட சொல்லு என்று ஒரு பெண் கூற, மலர்களே மலர்களே பாடலில் வந்த இசைக்கு மட்டும் இவள் ஆடினாள். உடன் சேர்ந்த மற்ற பிள்ளைகளையும் ஆட வைத்தாள் . மலர் இருக்கும் இடம் முன்பு போலவே இப்போதும் கலகலப்பாக மாறிவிட்டது. அடுத்த சில நேரம் குழந்தைகளின் கும்மாளம்தான். அவர்களிடமிருந்து வந்து தனியே நின்றவளிடம் ,

செல்வியின் மாமனார் இவள் அருகில் வந்து கைப் பிடித்துக் கொண்டு நன்றிக் கூறினார். நீ வயசுல சின்னவளா போய்ட்ட. இல்லன்னா காலில் கூட விழுந்துருப்போம். மாமியாரும் உடன் சேர்ந்துக் கொண்டார்.

"அசோ என்னங்க இது என்ன பெரியவங்க நீங்க "

"உசுருமா. அந்த பிள்ளை இன்னிக்கு இப்படி உசுரோட நின்னு பேசுதுனா நீ தானே காரணம் "

அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு அமைதியாக நின்றாலும் கண்கள் கதிரைத் தான் தேடின . புரிந்துக் கொண்ட செல்வியின் மாமியார் "கதிர் மேல ரூமுல இருகான்மா . வா "என்று அறையைக் காட்டினார். கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றவளுக்கு அதிர்ச்சி. பெரிய தாடியுடன் அமைதியாக கண் மூடி படுத்திருந்தவன் இவளைப் பார்த்துவிட்டு மீண்டும் கண் மூடிக் கொண்டான் . வழக்கம்போல கனவு என்று நினைத்துவிட்டான் போலும் .

அவன் அருகில் சென்று லேசாக நெற்றியில் முத்தமிட்டாள்.

"நாம எல்லாருமே சூப்பர் பெர்பெக்ட் இல்ல. தப்பு செய்யறது மனித இயல்பு. அதை சரிப்படுத்தனுன்னு யாராவது நினைச்சா அவங்களுக்கு நாம சந்தர்ப்பம் குடுக்கணும்" என்று பாட்டி சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது .

" எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடேன். என்னோட காதலில் உன்னை திக்கு முக்காட வைக்கிறேன். "இவள் கைப் பிடித்து கண் பார்த்துக் கேட்டவனுக்கு சான்ஸ் கொடுக்கிறாள் .அவன் என்ன செய்கிறான் பார்க்கலாம்.

அவளின் லேசான இதழ் ஒற்றலில் நினைவுக்கு வந்தவன் அவசரமாக, "வா வா மலர்" என்று அங்கே சிதறிக் கிடந்த துணிகளை எடுத்து வைத்தான்.

இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்தாள் . அவசரமாக உடைகளை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்றவன் ஷேவ் செய்துக் கொண்டு குளித்து விட்டு வந்தான். உடலில் ஆங்காங்கே நீர்த்துளி சொட்ட இடுப்பில் டவலோடு நின்றவனைப் பார்க்க இவளுக்கு கூச்சமாக இருந்தது.

இருந்த உடையில் ஒரு நல்ல உடையை அவனுக்கு அவள் அயர்ன் செய்து வைத்திருந்தாள் . போட்டுக் கொண்டவனைப் பார்த்தவளுக்கு திருப்திகரமாக இருந்தது. ஏற்கனவே அரை வாங்கிய அனுபவம் இருந்தாலும் , அருகில் நின்றவளை இடுப்போடு அணைத்து இரண்டு கன்னங்களிலும் முத்தம் வைத்தான். நான் ரொமான்டிக் என்று அவன் தானே நிரூபிக்க வேண்டும் . அவளுக்கு காதலும் வேண்டும். அவன் மட்டும் கொட்டிக் கொடுக்கும் காமம் வேண்டும் தானே. சன்யாசியாக வாழ்வதற்கு திருமணம் என்ற பந்தம் எதற்கு ?

அவன் முத்தம் கொடுத்த போது அதற்கு எதிர் வினை ஆற்றாதவள் முன் பக்கம் திரும்பி அவன் நெஞ்சில் புதைந்துக் கொண்டாள் . விவகரத்துப் பத்திரம் கதிரின் வீட்டில் எரிந்துப் போய் இருக்க தன்னிடம் இருந்ததை இவள் கிழித்து போடத் தயாராகிவிட்டாள் .

இருவரும் சேர்ந்தே வெளியில் வந்தார்கள் . விழா முடிந்தது. இவள் கிளம்பப் போகும் நேரம் செல்வியும் அவள் கணவனும் இவளை உள்ளே இருந்த வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு நகைப் பெட்டியில் இருந்த நகைகளை இவள் கையில் கொடுத்து "அண்ணி என்னை மன்னிச்சுடுங்க" என்று சொல்லிக் கொண்டே காலில் விழுந்து விட்டாள் செல்வி.

பதறியவள் செல்வியை தூக்கினாள்.

'இது எல்லாம் உங்க நகைத்தாங்க. எங்களுக்கு எதுவும் வேணாம். என் புள்ளையை எங்களுக்கு காப்பாத்தி குடுத்துருக்கீங்க. எங்களுக்கு அது போதும் " என்று மாப்பிளையும் சொல்லவும் ,"இது எல்லாம் உன்னோட கல்யாணத்துக்கு உங்க அண்ணா செய்த சீர். இது உன்னோடதுதான் " என்று அவளிடமே திருப்பிக் கொடுத்தாள் மலர் .

"இல்ல அண்ணி எனக்கு இது எதுவும் வேணாம். நீங்களும் அண்ணாவும் ஒண்ணா இருந்தாலே போதும். அண்ணா ரொம்ப பாவம். நீங்க இல்லாம ரொம்ப கஷ்டப்படுது. உங்களுக்கு டைவர்ஸ் ஆனதுக்கு அப்புறம் நாங்க அண்ணனுக்கு நிறைய பொண்ணு பார்த்தோம். அவருக்கு யாரையுமே பிடிக்கலை. அது ஏன்னு கேட்டபோது, "நான் எல்லார்கிட்டயும் மலரத்தான் தேடறேன்னு" சொன்னாங்க.

அதுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு அன்னிக்குப் புரியலை. இன்னிக்கு அண்ணன் முகத்துல இருக்கற சந்தோஷம் சொல்லிடுச்சு. அவருக்கு நீங்க மட்டும்தான்.

அன்னிக்கு நான் உங்களை அடிச்சதுக்கு அப்புறம் அண்ணா என்னை அடிச்சுட்டாரு. இது வரைக்கும் ஒரு தடவை கூட அவரு என்னை கை நீட்டி அடிச்சதே இல்ல. உங்களையும் அண்ணனையும் ஏற்கனவே பிரிச்சு வைச்ச பாவத்தை சேர்த்து வைச்சிருக்கேன். என்னை மன்னிச்சுடுங்க அண்ணி .ப்ளீஸ் அண்ணி. என்று கைக் கூப்பியவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக கிளம்பிவிட்டாள் . மழலை கொடுத்த முத்தத்தோடு வந்தாலும் கணவனின் முத்தம் தான் மனதை ஆட்டிப் படைத்தது.

"எனக்கு உணர்ச்சிகள் எல்லாம் செத்து விட்டது என்று நான் நினைத்தது தவறா? அவனின் காதலைத் தாங்கமுடியாதவள் பின்னோடு வந்த அவனையேக் கட்டிக் கொண்டாள்.

அடுத்த சில மாதங்களில் .....

"எழுந்துட்டியா? குட் மார்னிங் காபி போடவா?" கட் பனியன், லுங்கி, தோளில் சிறு துண்டு சகிதம் சமையல் அறையில் பிசியாக இருந்தான் கதிர் .

"ம்ம்" என்று கணவனின் தோளில் தூங்கி வழிந்தாள் .

"பிரஷ் பண்ணாலும் இன்னுமா தூக்கம் போகல ?"
'ம்.. "

"இந்தா காபி" பித்தளை டம்பளரில் வைத்து விட்டு ரசத்துக்கு தாளித்தான். பாலாஜி சார் ரசம் கேட்டாருன்னு சொன்னல்ல . இந்தா அவருக்கு ஏத்த மாதிரி பூண்டு இல்லாம செய்துட்டேன். நான் தாம்பரம் வரைக்கும் போகணும். அங்க ஒரு பெரிய அபார்ட்மென்டுக்கு காண்ட்ராக்ட் கிடைக்கும்போல இருக்கு. மத்தவங்க யாரும் நம்மளை விட கம்மியா கோட் பண்ணியிருப்பாங்களான்னு தெரியலை. கூப்பிட்டுருக்காங்க . நான் போய் பார்த்துட்டு உனக்கு கால் பண்ணறேன்."
பாலாஜி என்பவருக்கும் கேன்சர் தான். அவர் மலரிடம் ஆசையாக கேட்டதை இவன் செய்து வைத்தான். கடந்த சில தினங்களாக ஏனோ மலர் காலையில் எழுவதற்க்கே மிகவும் தாமதமாகிறது. ரொம்பவும் தூங்குகிறாளோ அது என் சந்தேகம். ராத்திரி எல்லாம் அவளை தூங்க விடாம பண்ணா? இது அவன் சந்தேகம். இவன் கடுகு போடவும் இவளுக்கு அந்த வாசனை ஏதோ செய்தது. வேகமாக அறைக்குச் சென்று விட்டாள் . ஏதோ தோன்றவும் நாட்கள் தள்ளிப் போய் இருந்தது. யமுனாவுக்கு அழைத்தாள் .

"உன்கிட்ட கிட் இருக்கா?"

"இருக்கே" ராகம் இழுத்தவள் தோழிக்கு உதவ உடனே வந்து விட்டாள் .

விஷயம் அறியாத கதிர்," என்ன யமுனா இவ்ளோ காலைல ?

"ம்! நீங்க தான் ராத்திரி எல்லாம் அவளை ஏதோ செய்துடீங்களாம். வான்னு கூப்பிட்டா அதான் வந்தேன். "

யமுனா சொன்னதன் அர்த்தம் விளங்காதவன் நீங்க பேசிகிட்டு இருங்க என்று மீண்டும் வேலையில் மூழ்கி விட்டான்.

மலர்ந்த மலராக மலர் வரவும் , ரைட் ரைட் என்று நமுட்டு சிரிப்புடன் வயிற்றை தள்ளிக் கொண்டு வாத்து நடையில் சென்றவளை வழி அனுப்பி விட்டு கதவை சாத்தியவள் , கணவனிடம் சென்று காட்டினாள்.

அவள் விஷயம் சொன்னதும் தன்னை தூங்குவான் சுற்றுவான் என்று எல்லாம் எதிர்பார்த்தலும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் . அடுப்பை அணைத்துவிட்டு அவளை அழகாக தூக்கியவன் கட்டிலில் உட்கார வைத்தான். அவளை கட்டிக் கொண்டவன் அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான். வாழ்க்கையை வாழத் தெரியாமல் இருந்தவனுக்கு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவள் இப்போது தனக்காக அடுத்த நிலைக்கு தயாராகி விட்டாள். அன்று மருத்துவமனையில் கூட இப்படித் தானே செய்தான். உணர்ச்சிப் பெருக்கில் இருக்கும்போது வார்த்தைகள் எதுவும் அவனுக்கு வராது. அவன் மொழி இது தான். இன்னும் தன்னுடைய வயிற்றில் அவன் முகத்தை அழுத்திக் கொண்டாள் . சில நிமிடங்களில் நிமிர்ந்தவன் கண்கள் லேசாக குளம் கட்டி இருந்தது. மனைவியின் கன்னங்களில் முத்தம் வைத்தவன் அமைதியாகச் சென்று விட்டான்.

இரவில் கணவன் மனைவி தனித்திருக்க மனைவியின் முகம் ஆராய்ந்தான். இப்போதும் அவள் அவனிடம் பேசுவதில்லை. ரொம்ப தேவை என்றால் மட்டும் வாயிலிருந்து வார்த்தைகள் வரும். அவள் கண் பார்த்து பழகுவது கூட அவனுக்கு சந்தோஷமாகத் தான் இருந்தது.

அவள் முகம் பார்த்துக் கொண்டிருந்தாவன் மார்பில் அவள் கை ஊர்வலம் போகவும் ,

"நோ நோ பிச்சு. இப்ப ஒன்னும் கிடையாது. எதுவா இருந்தாலும் டாக்டர் ஓகே சொன்னாதான் முகம் சுருகியவள் நெற்றி முட்டி முகமெங்கும் முத்தம் வைத்தான் ."

இத்தனை நாள் மலரின் அனுமதிக்காக காத்திருந்தவன் இப்போது மருத்துவரின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறான் ...

அதுவும் ஜாலிதான் ... நாமும் அவங்களுக்கு ஒரு பை சொல்லிடுவோம்..

சுபம்...



யாருமே சூப்பர் பெர்பெக்ட் இல்லங்க. கதிர் மனம் மாறிட்டாரு. செல்விக்கும் தன்னோட தப்புகள் புரிஞ்சுடுச்சு. அப்ப வெற்றி? அவன் மாமனார் வீட்டுல இருக்கான் . சந்தோஷமா இருக்கானான்னு கேட்டா அவனுக்குத் தெரியல. முழுக்க அவங்க வீட்டு ஆளுங்க. தனக்குன்னு யாருமில்லன்னு ரொம்ப ஏங்கி போய் கிடக்கறான். மனைவிக்கு வளைகாப்பு என்று கதிர் போனில் அழைத்தான். கணவன் மனைவி இருவருமே வெற்றியிடம் பேசினார்கள். "தம்பி சாப்டீங்களா" என்ற அண்ணியின் ஒற்றை வார்த்தை அவனை உலுக்கி விட்டது. சிறு பிள்ளை போல தேம்பி தேம்பி அழுதவனை அண்ணியாக மட்டுமில்லை அன்னையாகவும் பார்த்துக் கொள்வாள் .


விஷயத்தை கேட்டதும் மலரின் பெற்றவர்கள் வந்து நின்றார்கள். மனைவி என்ன செய்யப் போகிறாள் என்ற ஆர்வத்துடன் கதிர் அமைதியாக இருக்க பெற்ற மகளிடம் வைராக்கியதை அதற்கு மேல் காட்ட முடியாத அன்னை., மலரு ... என்று கட்டிக் கொள்ளவும் ஒட்டிச் ஸ்ஹ்ன்று அன்னையை காட்டிக் கொண்டாள் .

இவர்களை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவையும் மலர் அழைக்க அவளும்தான் வந்து அன்னையை கட்டிக் கொண்டாள் .

அப்பாவை பயத்தோடு திவ்யா பார்த்தாலும் எனக்கு இந்த கிழவனை பார்த்து பயமில்லை என்ற ரீதியில் தான் நிர்மலாவின் நடவடிக்கைகள் இருந்தன.
சீக்கிரமா அப்பாவின் மனதையும் மாற்றி விடுவாள் நம்

தீஞ்சுவை மலர்.........
என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றிகள் பல...சீக்கிரமா வேறு ஒரு கதைல சந்திக்கலாம்.
 
Last edited:

ஷமீம்

Well-known member
விவாகரத்துக்கு பிறகு இணைவது என்பது அரிது தான்..அதுவும் மலர் அனுபவித்த கொடுமைகள் 😔😔..என்ன தான் கதிர் திருந்தினாலும் மலரின் காதலும் பெருந்தன்மையும் தான் பாராட்டப்பட வேண்டிய விஷயம்..ஆரவ்வின் பாசம், தீபக் -திவி அரவணைப்பு 👍🏻..ஆரவ் யமுனா காதலில் நல்ல புரிதல்.. மொத்தத்தில் அருமை 👍🏻 💐 💐 💐 💐 💐 வாழ்த்துகள்..
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom