பயறு வகைகளில் அதிகளவில் ஊட்டச் சத்துக்களும் புரதச் சத்துக்களும் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் சிறிது சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். இதில் பச்சைப் பயிறு மிகுந்த பலன்கள் தர வல்லது.
உடல் பருமனைக் குறைக்கவும் உடலை சீராக்கவும் பச்சை பயறு பெரிதும் உதவுகிறது. நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.
முளைக்கட்டிய தானியங்களைப் பற்றி..
முளைக்கட்டிய தானியங்கள் புரதச்சத்துகள் நிறைந்த உணவுகள். இதிலுள்ள நார்ச்சத்து எடையைக் குறைக்கவும் செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் உதவுகின்றன.
இதனை எந்த வகையிலும் சாப்பிடலாம். பச்சையாகவோ, வறுத்தோ அல்லது சமைத்தோ கூட உணவில் சேர்க்கலாம்.
ஒரு கப் முளைகட்டிய பச்சை பயறை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
முளைகட்டிய பச்சை பயறு ரெசிப்பி
தேவையானவை
• முளைகட்டிய பச்சை பயறு – 1 கப்
• காரட், வெள்ளரி, வெங்காயம் - அனைத்தும் 1/3 கப் (பொடியாக நறுக்கியது)
• துருவிய தேங்காய் – 1 மே.கரண்டி
• எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
• மிளகுத்தூள் - 1 தே.கரண்டி
• உப்பு
செய்முறை
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பயறை போடவும்.
ஒரு ஸ்பூன் தண்ணீரை அதில் சேர்த்து நன்றாக கிளறுங்கள். பின் அடுப்பை அணைத்து, அந்த பாத்திர சூட்டிலே பயறை வையுங்கள்.
அதில் காரட், வெள்ளரி, வெங்காயம், தேங்காய், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
சுவையான சாலட் ரெடி.
குறிப்பு

- இந்த ரெசிப்பி உடல் எடையைக் குறைப்பதோடு நம்மை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது.
- இதனை காலை அல்லது மாலை வேளையில் எடுத்துக் கொள்ளலாம். சுவையாக இருப்பதோடு நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.
Author: ரோசி கஜன்
Article Title: முளைகட்டிய பச்சை பயறு - பயனும் செய்முறையும் - சுருதி
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.