MTN 3
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் ஊழியர்களுக்கான பிரத்தியேக ஓய்வறையில் ஏசி குளிரை மீறிய ஒரு வெப்பம் மேகலாவிற்குள் தகித்துக் கொண்டிருந்தது. விமானத்தில் தரிந்துவைச் சந்தித்த அந்த சில மணி நேரப் போராட்டம் அவளை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உருக்குலைத்திருந்தது.
மேகலா அங்கிருந்த ஒரு சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். அவள் மூடிய இமைகளுக்குள் அந்த நீல நிறச் சீருடையும், அதன் தோள்பட்டையில் மின்னிய மூன்று பட்டைகளும், எல்லாவற்றிற்கும் மேலாக அந்தக் கூர்மையான பார்வையும் நிழலாடின.
“மேகலா... இந்தா தேத்தண்ணி.”
அவளது சகதோழி சுபாஷினி தேநீர் கோப்பையோடு அருகில் வந்து அமர்ந்தாள். மேகலா கண்களைத் திறக்காமலேயே கையை நீட்டி வாங்கிக்கொண்டாள்.
“என்ன நடந்ததடி உனக்கு? பிளைட்ல தரிந்துவைப் பார்த்ததுல இருந்தே உன்ட முகம் சரியில்ல. இத்தனை வருஷத்துக்கு பிறகு பார்த்த அதிர்ச்சியா?” சுபாஷினியின் கேள்வியில் கவலை கலந்திருந்தது. அவர்களது காதலுக்கு நடமாடும் ஒரு சாட்சி அல்லவா அவள்.
மேகலா ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தினாள். “அதிர்ச்சி மட்டும் இல்ல சுபா… என்னை நினைத்தே பயம். நான் இத்தனை நாளா கட்டியிருந்த பொய்யான கோட்டையை அவர் ஒரே பார்வையில இடிச்சு போட்டு போயிட்டாரடி.” குரல் தளர்ந்தது.
“அவர் உன்னட்ட ஏதோ சொன்னாரே, அது என்னடி?” சுபா புரியாமல் கேட்டாள்.
மேகலா தேநீரை ஒரு மிடறு பருகினாள். அதன் சுவை அவளது கடந்த காலத்தை நினைவுபடுத்தியது.
“சிங்களத்துல ‘வெள்ளை மேகம்’ என்டு அர்த்தம் சுபா. ஒரு காலத்துல நான் அவரோட வெள்ளை மேகமா இருந்தனான். இப்போ... இப்போ அவர் கண்ணுக்கு நான் ஒரு கறுப்பு மேகம். மழையைத் தராம இடியை மட்டும் சுமந்துட்டு நிக்கிற கறுப்பு மேகம்." அவள் கண்களில் ஈரம் துளிர்த்தது.
"நான் ‘சூன் டு பீ மிஸ்ஸஸ்’ என்டு சொன்னது பொய் என்டு அவருக்குத் தெரியும். ஆனா அந்தப் பொய்யைத் தவிர என்னட்ட வேற கவசம் இல்லயடி. எனக்குத் தெரியும் நான் அவருக்கு செஞ்சது மிகப் பெரிய துரோகம். அவரை அண்டைக்கு உடைச்சுப்போட்டு வந்தனான். அஞ்சு வருஷத்துக்கு முதல் எங்கட வீட்டில நடந்த போராட்டங்கள் எல்லாம் உனக்குத் தெரியும் எல்லா. அது இன்னும் என்ர கண்ணு முன்னுக்கவே நிக்குது. அப்பாவோட கண்ணீரும், அண்ணனோட ஆக்ரோஷமும் என்னை அந்த காதலை விட்டுட்டு ஓட வச்சது. அவங்களை தாண்டி என்னால சுயநலமா யோசிக்க முடியேல்லடி."
"நீ ஒரு மகளா யோசிச்சதுல தப்பே இல்லையேடி. உன்ர குடும்பம் அனுபவிச்ச கொடுமைகள் கொஞ்ச நஞ்சமில்லையே." என்று தேற்றினாள் சுபா.
உதடுகள் நடுங்க ஒரு நொடி அமைதியாக இருந்தாள். "இனிமேல் அவர் என்ர வாழ்க்கையில இல்ல என்டு முடிவு எடுத்தனான். ஆனால் இப்போ திரும்பவும் அவர் கண்ணு முன்னுக்க வந்து நின்டதும் உடைஞ்சு போயிட்டன். அதுவும் அந்த பெட்டையோட நெருக்கமா பார்த்ததும் என்னவோ போல ஆகிட்டன். எனக்குத் தெரியும் என்ன தாண்டி அவர் போக மாட்டார் என்டு, போனாலும் பிழையில்ல. போகாதே என்டு சொல்லுற தகுதியும் உரிமையும் எனக்கு இல்ல. ஆனாலும் இஞ்ச என்னமோ செய்யுதடி." என்று நெஞ்சை தொட்டு காட்டி அழுதாள்.
"ஏய் விசரி. இப்படி அழுறேல்ல. முதல்ல கண்ண துட. இப்படி அழுதா நாளைக்கு உண்ட கண்ணு வீங்கிப் போய் இருக்க போகுது. பிறகு ஜேர்னியில சீனியர் கிட்ட என்னால காரணம் சொல்லேலாது."
நாளை ஜேர்னி என்றதும்,
"அப்ப நாளைக்கும் எங்கட பிளைட்டில தான் அவரும் ரிட்டர்ன் ஆவாரா.?" என்று மேகலா கண்ணில் மின்னும் சிறு ஆர்வத்துடன் கேட்டாள்.
"அடியேய்.. என்னடி நீ. அப்படியும் கதைக்கிறாய். இப்படியும் எதிர்பார்க்கிறாய். என்ர கணிப்புப்படி அவர் எங்கட பிளைட்டில வரமாட்டார். அதுவுமில்லாம மாநாடு எத்தனை நாள்களுக்கு என்டு எங்களுக்கு தெரியாதே. எப்படியும் நாளைக்கு பார்க்கத்தானே போறம்."
என்று கண் சிமிட்டினாள், அவள் கணிப்பு தவறாகாது என்று தெரியாமல்.
அதே சமயம், சிங்கப்பூரின் புகழ்பெற்ற மெரினா பே கடற்கரை ஓரம்.
இரவு நேரத்து சிங்கப்பூர் மின்விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. கடலில் பிரதிபலிக்கும் வண்ண விளக்குகள் ஓர் ஓவியம் போலத் தெரிந்தாலும், தரிந்துவின் கண்களுக்கு அந்த அழகு எதுவும் புலப்படவில்லை. அவன் கைகள் அந்த இரும்புத் தடுப்பை இறுக்கமாகப் பிடித்திருந்தன. கடல் காற்று அவனது தலையை கலைத்தாலும், அவனது கவனம் முழுவதும் அன்று விமானத்தில் சந்தித்த அந்த உருவத்தின் மீதே இருந்தது.
“அய்யே...”
பின்னாலிருந்து அனுஷ்காவின் குரல் கேட்டது. அவள் மெதுவாக அவன் அருகில் வந்து நின்றாள்.
“இன்னும் எதைப்பத்தி யோசிச்சிக்கொண்டு இருக்கிறீங்க? மாநாடு நல்லபடியா முடிஞ்சது. எங்கட டீம் எல்லாரும் நாளைக்கே கொழும்பு திரும்புறாங்க. நீங்க என்னவோ டிக்கெட்டை மாத்திட்டதா கேள்விப்பட்டன்.?”
தரிந்து கடலையே பார்த்தபடி சொன்னான், “ஒவ் அனு. நான் நாளைக்கு வரேல்ல. எனக்கு கொஞ்சம் தனிமை வேணும். நீங்க எல்லாரும் போங்க. நான் நாளண்டைக்கு வாறன்.”
அனுஷ்கா ஒரு நிமிடம் மௌனமாக இருந்தாள். “மேகலாவுக்காகத் தானே நீங்க போஸ்ட்போன் பண்ணியிருக்கிறீங்க? அவங்க நாளைக்கு ரிட்டர்ன் பிளைட்ல டியூட்டில இருக்கிறாங்க என்டு தெரிஞ்சுதான் நீங்க அவொய்ட் பண்ணுறீங்க இல்லையா?”
தரிந்து கசப்பாகச் சிரித்தான்.
"அவளோட அந்தப் பார்வை... அது என்னக் கொல்லுற மாதிரி இருக்கு. அஞ்சு வருஷத்துக்கு முதல் அவள் என்ன விட்டுட்டுப் போகேக்க இருந்த அதே வலி இப்பவும் குறையாம அப்படியே இருக்கு. அவளைப் பார்க்காம இருக்கிறது தான் எனக்கு நல்லது.”
"ஏத் அய்யே.. இன்னொருமுறை நீங்க அவங்களோட கதைச்சு பார்க்கலாம் தானே. இந்த பயணம் கூட ஏன் இறைவன் உங்க ரெண்டுபேரையும் சேர்க்குறதுக்கு போட்ட அடித்தளமா இருக்கக் கூடாது?"
ஒரு விரக்திச் சிரிப்புடன், "நான் சிங்களவன், அவள் தமிழ். அது ரெண்டு இனங்கள் சம்பந்தப்பட்டது மட்டுமில்ல அனு... அதுக்கு பின்னுக்கு இருக்கிறது மூன்று தசாப்தங்களோட வலிகளும் வடுக்களும் . யுத்தம் முடிஞ்சாலும் அது தந்த நினைவுகளும் காயங்களும் ஆறேல்ல. அதுக்கு நடமாடும் சாட்சிகள் அவளோட அப்பாவும் அண்ணாவும்." அவன் குரல் கனம் அடைந்தது. அவன் தலையை சற்றே குனிந்தான்.
"அவள் என்னை காதலிச்சது உண்மை, ஆனா அவள் குடும்பத்தோட ரணங்கள் அதைவிட பெருசு. அவ என்ன விட்டுட்டுப் போனது என்னை பிடிக்காமலோ வெறுத்தோ இல்ல. ஒரு மகளா, ஒரு தங்கையா அந்த வீட்டின் அமைதிக்காக காதலி அவதாரத்தை கடன் கொடுத்திட்டா."
அவன் கண்கள் மென்மையாயின. "ஓம்.. அவள் கடன் தான் கொடுத்தா, விற்கேல்ல." அவன் குரல் மிக மெதுவாயிற்று. கண்முன் அனுஷ்கா மீதான அவளது பொறாமையுணர்வு தோன்றியது மறைந்தது.
"நீ வெளிக்கிடு அனு.. நான் பிறகு வாறன்.”
அனுஷ்கா அவனது தோளில் ஆறுதலாகத் தட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். தரிந்து அந்தப் பெரிய கடல் பரப்பையே வெறித்துப் பார்த்தபடி நின்றான். அவளைப் பார்க்காமல் தப்பித்துவிடலாம் என அவன் தங்கிய அந்த ஒரு நாள், அவனது நினைவுகளிலிருந்து அவளை அப்புறப்படுத்தப் போதுமானதாக இருக்கவில்லை. அன்று இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. அவளது அந்தத் தமிழ் வாசம் கலந்த ஆங்கிலப் பேச்சு அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அடுத்த பத்து நாள்கள் மேகலாவிற்கு இயந்திரத்தனமாக ஓடின. சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வந்து, ஒரே ஒரு நாள் ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் துபாய் செல்லும் விமானத்தில் பணியேற்றாள். உடல் சோர்வு மனச்சோர்வை மறைக்கும் என்று நம்பினாள். துபாய் பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் இலங்கை திரும்பியபோது, அவளுக்குப் பத்து நாள்கள் விடுமுறை கிடைத்தது.
நீண்ட நாள்களுக்குப் பிறகு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தாள் மேகலா.
யாழ்ப்பாணத்தில் உடுவில் பகுதியில் இருந்த அவளது வீட்டின் முன் நின்றபோது, செம்மண் புழுதியும் வேப்பமரத்துக் காற்றும் அவளை வரவேற்றன. ஆனால் வீட்டின் கதவைத் திறந்தபோது, அங்கே வரவேற்க வேண்டியவர்களின் மகிழ்ச்சிக்குத் தட்டுப்பாடு இருந்தது.
அப்பா அரவிந்தன் வராந்தாவில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஒரு கால் இன்றி அவர் அமர்ந்திருந்த தோற்றம் இன்று ஏனோ அவளுக்கு அதிக வலியைக் கொடுத்தது. அம்மா வாசலில் ஒரு ஓரமாய் அமைதியாக நின்றிருந்தார். அவளைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டியணைத்துக் கொள்ளும் அந்த உற்சாகம் இன்று அவரிடம் இல்லை. அந்த வித்தியாசமான சூழலே அவளுக்குள் ஒருவித பயத்தை கொடுத்திருந்தது.
“என்னம்மா... ஒரு மாதிரி இருக்கிறீங்க? அப்பாவும் அமைதியா இருக்கிறார், அண்ணா எங்கே?” மேகலா பதற்றத்துடன் வினவினாள்.
அண்ணன் முரளி உள்ளிருந்து சிவந்த கண்களுடனும் கூரிய பார்வையுடனும் வந்தான். கையில் ஒரு தினசரிப் பத்திரிகை. அது சுருண்டிருந்த விதமும், அவனது சுருங்கிய புருவங்களும், நெற்றியில் ஓடும் பழைய தழும்பும் ஏனோ ஒரு அச்சத்தை கொடுத்தன.
“நீ போன கிழமை சிங்கப்பூருக்குத் தானே போனாய்?” அவனின் குரல் ஒரு விசாரணைக் கைதியைக் கேட்பது போல இருந்தது.
“ஓம் அண்ணா... சிங்கப்பூருக்கு ருட்டீன் என்டு ஏற்கனவே கதைக்கேக்க சொன்னனான் தானே. ஏன் இப்படி கேக்குறீங்க?”
முரளி பதில் சொல்லாமல், கையில் இருந்த பத்திரிகையை மேசையின் மேல் ஓங்கி அடித்தபடி விரித்தான்.
“அப்ப இதையேன் எங்கட்ட இருந்து மறைச்சனீ!”
மேகலாவின் பார்வை அந்தப் பக்கத்தின் மீது விழுந்தது. அங்கே, வான்படைச் சீருடையில் கம்பீரமாகச் சிரித்துக் கொண்டிருந்த தரிந்துவின் புகைப்படம் போடப்பட்டிருந்தது.
'கடந்த வாரம் சிங்கப்பூரில் நடந்த வான்வழிப் பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை வான்படை 'விங் கமாண்டர்' தரிந்து சேனநாயக்கவின் சாதனை உரை - சர்வதேச அளவில் பாராட்டு' என்ற தலைப்பு அவளது இதயத் துடிப்பை ஒரு கணம் நிறுத்தியது.
பத்திரிகையில் இருந்த தரிந்துவின் கண்கள் நேராக அவளைப் பார்ப்பது போலத் தோன்றியது. தன் குடும்பத்திடமிருந்து இரண்டாவது முறையாக மறைக்க நினைத்த ரகசியம் இன்று ஒரு காகித வடிவில் அவளது வீட்டின் நடுவே வெடிகுண்டாக வெடித்திருந்தது. அது ஒரு செய்தி மட்டுமல்ல. மீண்டும் திறக்கப்பட்ட பழைய காயம்.

Author: STN-116
Article Title: மேகம் 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.