நயகரா நீர்வீழ்ச்சியின் கனடா எல்லை கடந்து, அமெரிக்கா வந்திருந்தார்கள்.
நேரம் ஐந்து மணி கடந்திருந்தது. அன்றைய நாளுக்கான பணி நேரத்தை முடிக்கும் தருவாயில் மஞ்சளொளி பரப்பி நின்றான், ஆதவன். அதோடு, அவ்விடத்துக்கேயுரிய சிலிர்ப்பும் கலக்க இன்னுமொரு சொர்க்கத்தினுள் நுழையும் உணர்வேற்பட்டது.
பொழுது புலர்கையில் புறப்பட்ட பயணம் தந்த களை ஒவ்வொருவரிலும் தெரிந்தாலும் அதை மீறிய ஆர்வமும் துடிதுடிப்புமாக ஓரிடத்தில் கூடி நிற்க, வள்ளத்திற்கான அனுமதிச்சீட்டுக்களை வாங்கி வரச் சென்றிருந்த நாதனும் மாறனும், "போகலாமா?" அனுமதிச் சீட்டுகளோடு வந்தவர்கள், "வேந்தன் இன்னும் வரேல்லையா?" என்றபடி பார்த்தார்கள்.
"நீங்க போங்க, வாறன்." என்றுவிட்டுப் பின்தங்கியவனை இலக்கியாவின் விழிகளும் தேடின. ஒருவேளை, தன் பாரா முகம் தான் அவன் வரவைத் தடுத்திருக்குமோவென்ற எண்ணம் வேறு மனதைக் குடைந்தது.
"அந்தா வேந்தன் அண்ணா வாறார்." சிவா ராஜியின் மகள் சுட்டிக்காட்ட, கைபேசியில் கதைத்தபடி விரைந்து வந்துகொண்டிருந்தானவன்.
'பெரிய துரை! அவர் வருமட்டும் நாங்க பார்த்துக்கொண்டு நிக்க வேணுமோ!' வெடுக்கென்று முகம் திருப்பினாலும் அவள் முகத்தில் முறுவல்.
"வெய்ட் பண்ண வச்சிட்டனா? சொறி சொறி ... வீட்டில இருந்து அம்மா கதைச்சா அதுதான்." சமாளிப்பாகச் சொல்லிக்கொண்டே நெருங்க, "அதுக்கென்ன? இப்பத் தான் டிக்கெட் எடுத்திட்டு வந்தம், போவமா?" நடந்தார், நாதன். கடைசியாக மாறனும் கவினும் வேந்தனுமாக வருவது தெரிந்தும் திரும்பாது விறுவிறுவென்று நடந்தாள், இலக்கியா.
படகில் செல்ல, கீழே, நீரவீழ்ச்சி விழும் இடமட்டத்துக்குச் செல்ல வேண்டும். மின்தூக்கியில் அங்கு சென்றவர்கள், நீர்வீழ்ச்சியருகில் செல்கையில் தெப்பலாக நனைந்துவிடுமாகையால் தரப்படும் பொலித்தின் சட்டையையும் அணிந்துகொண்டு வரிசையில் நின்றார்கள். அதுவரையிருந்த பொறுமை பஞ்செனப் பறந்திருக்க மெல்லத் திரும்பிப் பார்த்தாள், இலக்கியா.
அவன் அவளைப் பார்க்கவில்லை; கவின் அவன் கையில் தொத்தியிருக்க, அச்சுற்றம் பார்த்து வெகு சுவாரசியமாக மாறனோடு அளவளாவிக் கொண்டு நின்றான்.
பார்த்ததும் அவன் விழிவீச்சில் பார்வையை விலக்குபவள் இப்போது நன்றாகப் பார்த்துக்கொண்டு நின்றாள். எங்கே? அவன் பார்வை அவள் புறம் வரவேயில்லை. முகம் தொங்கீற்று இலக்கியாவுக்கு.
அவனைப் பார்க்கவே கூடாதென்று நினைத்தவளும் அவள் தான்; அதைச் சில மணிநேரமாகக் கடைப்பிடித்தவளும் இவளே தான்; ஆனாலும், 'அவன் எப்பிடிப் பார்க்காமல் இருக்கலாம்.' முரண்டியது மனம். கூடவே, அருகில் நின்ற கவியோடும் பல்லைக்காட்டிக்கொண்டு கதைத்தானா? சுறுசுறுவென்று எரிச்சலானது, இவளுக்கு.
சென்றிருந்த படகு வர, இறங்கியவர்கள் ஒரு ஓரமாக வெளியேற இவர்களின் வரிசை நகர்ந்து உள்ளே ஏறியது. அவனைப் பார்ப்பதை விட்டுவிட்டு நகர்ந்தாள், இலக்கியா.
"எல்லாரும் மேல போவம்." ஆரூரன் படிகளில் ஓடியேற எல்லாரும் தொடர்ந்தார்கள்.
அந்த அந்திவேளையிலும் சனத்திரளுக்குக் குறைவிருக்கவில்லை. படகின் கீழ்ப்பகுதி நிறைந்து மேலேயும் சனம் முட்டி மோதி நின்றார்கள். அந்த நெருக்கடியில் இயற்கையழகை இரசிப்பதா இவன் எங்கேயென்று பார்ப்பதா? திரும்பித் தேடிப்பார்த்தால் அவன் கண்ணிலும் தென்படவில்லை.
'ஒருவேளை கீழ்த்தட்டில் நின்றுவிட்டானோ!' மனம் சுணங்கினாலும் அதிலிருந்து கடந்து அக்கணத்தின் மகிழ்வை முழுமையாக அனுபவிக்க முயன்றாளவள்.
நீல நிற மழைச்சட்டையணிந்து, உள்ளமெல்லாம் உவகையை அடக்கிக்கொண்டு நிற்கும் மக்களை ஏற்றிக்கொண்டு வெண்ணுரையில் மிதந்து மெல்ல மெல்ல நகர்ந்தது அப் படகு.
முன்னால், கனடாப்பகுதியிலிருந்து இதேமாதிரியொரு படகு சிவப்பு நிற மழைச்சட்டை அணிந்திருந்த உல்லாசப்பயணிகளோடு சென்றுகொண்டிருந்தது.
முதலில் அமெரிக்கன் ஃபோல்ஸ், பிரைடல் வேல் ஃபோல்ஸ் என்று சென்ற படகிலிருந்து பார்க்கையில் அச்சுற்றமே தனி இரம்மியம் தந்து நின்றது.
கனடாப் பக்கமிருந்து பார்க்கையில் ஒரு அழகு! அமெரிக்காப் பக்கத்திலிருந்து ஒரு அழகு! இப்போ... இது ஒருவித அழகு!
சற்றே தள்ளித் தெரிந்த ஹோர்ஸ் ஷூ போல்ஸில் நீர் விழும் வேகத்துக்குப் புகார் எழுந்து மேலே சாம்பல்நிற மேகமாய்த் தரித்து நிற்க, முன்னே கம்பீரமாக உயர்ந்து நின்ற கனடாப் பகுதியின் நவீன கட்டிடங்கள், கனடாவையும் அமெரிக்காவையும் இணைத்து நிற்கும் ‘ரெயின்போ பிரிஞ்’ என, ஒருவகை கம்பீரமளிக்க எத்தனை தடவைகள் வந்தாலும் புத்தம் புதிதாகத் தோற்றம் தரும் இயற்கை பார்ப்போர் விழிகளை நன்றாகவே வசியம் செய்தது.
காணக் கண்கள் கோடி வேண்டும். எல்லாருமே தம்மை மறந்து இரசித்தார்கள். புகைப்படங்கள், செல்பிக்கள், வீடியோக்கள் களை கட்டின.
அக்கணம் வேந்தனை மறந்தே போனாள், இலக்கியா! ஆனால் அவன்?
இயற்கையால் அவனை முழுமையாக மயக்க முடியவில்லை. எப்போதுமே இங்குவந்துவிட்டால் தன்னை மறந்து இரசித்து நிற்பவன், இப்போதோ, அவளின் ஒவ்வொரு அசைவையும் கண்களில் சிறைபிடிப்பதில் பெரும்பாலும் நேரத்தைச் செலவிடுகின்றானே!
மெல்ல மெல்ல யாருமே அவதானிக்காது நகர்ந்து வந்து அவளருகில் நின்றுகொண்டான். தொப்பியை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டான். இயன்றமட்டும் முகத்தை மறைக்கப் பிரயத்தனமெடுத்தானேயொழிய மனதை மறைத்திட முனையவும் இல்லை, முனையும் நோக்கமும் இல்லையே!
முதல், இப்படியெல்லாம் சந்தர்ப்பங்கள் அமையுமென்று அவன் எதிர்பார்த்தெல்லாம் இருக்கவில்லை. இவர்களோடு இந்த இருகிழமைகளுக்கும் சாரதியாகச் செல்வதென்று மட்டுமே முடிவெடுத்திருந்தான். தன்னுள்ளத்து நேசத்துக்குப் பதில் காணும் ஆவல் அதைச் செய்ய வைத்திருந்தது.
ஆஜானுபாகுவான இரு ஆண்கள் – சித்தப்பாக்கள், நெடுநெடுவென்று நிற்கும் அவள் தம்பி ஆரூரன், தாய், சித்திமார், தமக்கை, தம்பிகள், தங்கை என்று, நண்டும் சிண்டுமாக வாலுகள் சுற்றி நின்றவளை அணுகிடக் கிடைக்கும் சிறுசந்தர்ப்பத்தையும் அவன் விடுவதாகவில்லை.
அவளும் சரி சுற்றி நின்ற உறவுகளுமே அவனைக் கவனிக்கவில்லை. எல்லார் பார்வைகளும் எப்போதாவது கிடைக்கும் பொக்கிசமான தருணத்தை முழுமையாகத் தம்முள் அடக்கிக்கொள்ளும் அவாவோடு அங்கே ஒருமித்துக் கிடந்தன.
அவளின் மறுபுறம் நின்றது அஜி. மற்றவர்கள் அஜிக்கு அப்பால்தான் நின்றிருந்தார்கள். அவள், இவனைத் தேடித்தேடி கடைசியாக நின்றுவிட்டதை இவன் கவனித்தானே!
'இப்ப இவ்வளவு பக்கத்தில வந்து நிக்கிறன் பாக்கிறாளா?' மெல்ல அவளைப் பார்த்தான்.
இலக்கியா, தலைக்குத் தொப்பியைப் போடவில்லை. நீர் முத்துக்கள் அவள் சிகையை முழுமையாக அலங்கரிப்பதில் முனைந்திருந்தன. சிகையென்றில்லை அவள் வதனம் முழுவதும் நீர் முத்துக்கள். இமைக்குடைகளிரண்டும் மென்மையாகத் தாங்கி நின்ற நீர்திவலைகளில் பெரும் வஞ்சம் கொண்டது, இவனுள்ளம். கேசக்கற்றைகள் சிதறிச் சுருண்டு கிடக்க, எப்போதுமிருக்கும் நிமிர்வு கனிந்து, விழிகளில் இயற்கை எழிலின் எதிரொலி பளிச்சிட நின்றவளை விட்டுப் பார்வையை விலக்கிக் கொள்ளமுடியாது திண்டாடிவிட்டான், அவன்.
“தலையை மூடும் இலக்கி!” சொல்லிக்கொண்டே, கணவன் தூக்கி வைத்திருந்த மகனின் தொப்பியைச் சரிசெய்தாள், அஜி. அப்படியே கணவன் தொப்பியையும். மகன் கணவனோடு நெருங்கி நின்றுகொண்டாள்.
“தேவையில்ல சித்தி. நான் எப்பவும் நனைஞ்சிட்டுத்தான் போறனான்.” குழந்தையாகச் சொல்லிவிட்டு, சோவென்று ஆர்ப்பரிப்போடு பாய்ந்த நீர்விழ்ச்சியையே பார்த்து நின்றாள், இலக்கியா.
போட் ‘ஹோர்ஷூ ஃபோல்சை’ நெருங்க நெருங்க புகையாக இவர்களையும் தழுவிக்கொண்டது, புகார். தெப்பலாக நனைத்துவிடும் அது, ஒரு நிமிடத்துக்கும் குறைவான அனுபவமாக இருக்கும். நீர் விழும் இடத்தை மிகவும் அண்மித்துவிட்டுச் சட்டென்று வெளிவரும் படகு. அந்த வினாடிகள் வேந்தனுக்கு அவன் வாழ்வில் மறக்கவியலா அழகிய தருணமாகிற்று! அப்படியாக்கிட முடிவெடுத்துவிட்டான்!
சட்டென்று தன் தோளடி உயரத்தில் நின்றவளின் காதோரம் குனிந்தான். கை மெல்ல அவள் தோளை வளைத்துக்கொள்ள, “இலக்கியா! லவ் யூ டா! லவ் யூ சோ மச்!” முணுமுணுத்த வேகத்தில் அவள் கன்னத்தில் மிருதுவாக பட்டும் படாமலும் ஒற்றிவந்தன, அவன் உதடுகள்!
மறுகணம் நிமிர்ந்து, நீரால் நனைந்த விழிகளில் அன்பு சொட்டச் சொட்ட நின்றிருந்தான், வேந்தன். சுற்றிலும் சொந்தங்கள். இப்படி ஒருவன் வந்து நேசம் சொல்ல என்ன துணிவு வேணும்?
தூக்கிவாரிப்போட திரும்பியிருந்த இலக்கியாவின் விழிகள் அதிர்வில் குத்திட்டு நின்றன.
“நீ திருப்பிச் சொல்ல மாட்டியா?” அவன் விழிகளில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு.
"சொல்லு இலக்கியா! போட் திரும்பப் போகுது." அந்த இடத்தில் வைத்தே அவள் பதிலைப் பெற்றுவிடும் அவசரம்.
அது எங்கே? படகு என்ன மொத்த அண்டமுமே இயக்கம் நிறுத்தியிருக்க, லப் டப் ஒலி காதைப் பிழக்கவல்லோ நின்றிருந்தாள், அவள்! படகு நன்றாகவே வெளியே நகர்ந்திருந்தது.
அவன் முகத்தில் வழிந்த நீரில் அடிபட்ட ஏமாற்றத்தின் சாரல் வழிந்தோடியது. ஒருகணம் அவளில் ஊன்றிப் படிந்த பார்வையோடு வழமைக்குத் திரும்பிவிட்டான்.
“நீங்க கீழ நின்றிட்டீங்க என்று நினைச்சன்.” மாறன்.
“கீழ நின்றுட்டுட்டு இப்பத்தான் மேல வந்தன்.” மிக இயல்பாகப் பதில் சொன்னவன் கண்களிரெண்டும், கணநேரம் இரகசிய மொழியோடு படிந்தது, இன்னமும் அதிர்வு விலகாது நின்றவள் விழிகளோடுதான்.
மேலும் வாசிக்க....
11 - 2

Last edited: